JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

சதுரங்கம் 11

Subageetha

Well-known member
ரயில் பயணம் நீள்வது போல் உமாவின் பயமும் நீண்டுகொண்டே போகிறது. அவளுக்கு குருவை திருமண உறவில்
நினைத்து பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் ரத்னா சங்கரனை தவிர வேறொன்றும் நினைவில்லாமல் நிச்சய நாளுக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள். இதில் எதிலும் சிக்காமல் சந்தோஷ சிறகுகள் விரித்து பறப்பது இளைய தங்கை சாந்தா தான்.

சங்கரனின் அருகில் அமர வைக்கப்பட்டு கையில் நிச்சய புடவை கொடுக்கப்பட்டு, மாற்றிக்கொண்டு வர சொல்லப்பட்டதும் தான் நிஜமாகவே பதட்டத்தை உணர்ந்தாள் ரத்னா.
"நான் சிறு பெண் அல்ல...ஹாயாக பள்ளிக்கூடம் சென்று சந்தோஷமாய் துள்ளி குதிக்கும் மாணவி இல்லை இனி நான்.எனக்காக திருமணமும் அதைத் தொடர்ந்து கடமைகளும் காத்துக் கொண்டிருக்கின்றது ஒருவருக்கு மனைவியாக போகிறேன்" என்ற உண்மை புரிய லேசாக கண் கலங்கி ஜீரணித்துக்கொள்ள முயன்றாள். ஏமாற்றம் அவள் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. மிக நெருக்கத்தில் இவற்றையெல்லாம் அமர்ந்துகொண்டு பார்த்துக்கொண்டிருந்த சங்கரனுக்கு அவளை நினைத்து ரொம்பவும் பாவமாக இருந்தது. மிகவும் சிறிய பெண்ணை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டு விட்டோமே என்று கலங்கினான் . ஆனால் இவ்வளவு தூரம் வந்துவிட்டு பின்வாங்க முடியாது. அவர்கள் வீட்டில் திருமணத்திற்கு வேகமாக பார்க்கிறார்கள் எனும்போது நான் இல்லை என்றாலும் வேறு யாராவது அவளைத் திருமணம் செய்து கொண்டு தான் போக போகிறார்கள். இதில் என் தவறு என்ன என்று மனதிற்குள் சமாதானம் செய்து கொண்டான். ஆனாலும் அவள் முகம் காட்டிய வர்ணஜாலங்கள் அவன் மனதை உலுக்கியது.

மனதிற்குள் ஒரு விஷயத்தை இறுக முடிந்து கொண்டான் சங்கரன். திருமணம் முடிந்த பிறகு அவளது மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு ஏதாவது ஒரு கல்லூரியில் மாலை நேரத்திற்காவது படிப்பதற்கு அனுப்ப வேண்டும்.
"தாந்தான் வெறும் பத்தாம் கிளாசுடன் நிறுத்தி விட்டாயிற்று. மனைவியையாவது படிக்க வைக்க வேண்டும் ". அவர்கள் குடும்பத்தில் எல்லாம் இது சாதாரண விஷயமே கிடையாது. இன்னும் கேட்டால் சங்கரனின் அம்மா திலகா மருமகள் எப்போது வீட்டிற்கு வருவாள், குடும்ப பொறுப்புகளை அவளிடம் கொடுத்து விடலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறாள். அம்மாவை சமாளிக்க வேண்டும். சுற்றியுள்ளவர்கள் பேசும் வார்த்தைகளையும்,சுற்றத் தாரின் ஒப்பீடுகள் நிச்சயம் உண்டு, அவற்றை எல்லாம் தூர தள்ளி வைக்க வேண்டும் . அவர்கள் வீட்டிற்கு வந்து வத்தி வைப்பதையும் கடந்து வந்தாக வேணும்.ஆனால் எது எப்படி இருந்தாலும் நினைத்ததை மட்டும் பின்வாங்காமல் செய்தாக வேண்டும். அவள் குடும்பம் நடத்துவதை விட முக்கியம் இந்த வயதில் அவளது கல்வி என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தான்.

நிச்சயம் முடியும் தருவாயில் எவ்வளவு நகை எவ்வளவு தொகை என்றெல்லாம் பேச ஆரம்பித்தனர் திலகா வீட்டினர். அன்னபூரணி சொன்னதின் தைரியத்தில், ரத்னாவுக்கு 50 சவரன் நகையும், சங்கரனுக்கு பத்து
சவரத்தில் கைக்கு மோதிரம் கழுத்துக்கு செயின் மற்றும் பிரேஸ்லெட் என்று யோசித்து வைத்திருந்தார் சிவன். அது என்னவென்றால் , ராஜா ராணி கட்டில் அதற்கான மெத்தை, வீட்டிற்கு புதியதாக பிரிட்ஜ், வாஷிங் மெஷின், இவர்கள் இருவருக்குமான பிரத்தியேக பீரோ, சங்கரனுக்கு இரு சக்கர வாகனம், கையில் தொகையாக இரண்டு லகரங்கள் என்று ஒரு லிஸ்ட் நீண்டு கொண்டே செல்ல, இன்னொரு பக்கம் திருமண செலவு பாதி பாதி என்று இன்னொரு குண்டாய் போட்டார் திலகாவின் கணவர்.
முதல் பெண்ணிற்கு பெரிய இடம் என்றால் குறைவாக செய்ய முடியுமா... நம் பிள்ளை மட்டமா எனும் எண்ணம் தான் அவர்களை பட்டியல் இட்டு சீர் கேட்க தூண்டியது.
சிவம் தனக்குள்ளேயே திகைத்துப் போனார். சொந்த தங்கை இவ்வளவு வரதட்சணை கேட்பாள் என்று அவர் சிறிது கூட நினைத்து பார்க்கவில்லை. இதைத் தவிரவும் பித்தளை பாத்திரங்கள் வெள்ளி சாமான்கள்,என்று வரிசையாய் வரிசைகள்.
சொந்தகாரர்கள் என்று சொல்வதை விட கடன் கொடுத்தவர்கள் வசூல் செய்வதைப் போல இருந்தது அவர்கள் கேட்கும் வரதட்சணயும் சீரும்.
வேறு வழி இல்லை வெளியில் பெண் கொடுப்பதாய் இருந்து யார் கேட்டு இருந்தாலும் கூட இதை எல்லாம் செய்து தான் ஆகவேண்டும் . என்னதான் வரதட்சனை ஒழிப்பு என்ற ஒரு பக்கம் பதாகைகள் தொங்கிக்கொண்டு இருந்தாலும் இன்னொருபுறம் உங்க பொண்ணுக்கு நீங்க பண்ண போறீங்க... என்ற ஒரு வார்த்தையில் இவர்களது எதிர்பார்ப்பும் மொத்தத்தையும் தூக்கி அடைத்து விடுகிறார்கள், ஜாடியில் ஒரு வருடத்திற்கான ஊறுகாய்கள் போல. சிலர் வாய்விட்டு கேட்டு விடுகிறார்கள்.சிலர் வாய்விட்டு கேட்காமலே செய்ய வைக்கிறார்கள். எப்படி இருந்தாலும் ஒரு ரூபாய் கூட செலவழிக்க மாட்டேன் என்ற பெண்ணைக் கட்டிக் கொடுக்க முடியாது.
சில சமயங்களில் என்னதான் பெண்களுக்கு தன் பிறந்த வீட்டு நிலை தெரிந்திருந்தாலும் கூட மற்றவர்களுடன் ஒப்பிட்டோ,இல்லை தான் வருங்காலத்தில் அவர்கள் (புகுந்த)வீட்டில் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று யோசித்தோ பெற்றவர்களை இவர்களே கூட நிறைய செய்ய வேண்டும் என்று வற்புறுத்தும் நிகழ்வுகள் கூட இந்த சமூகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. எதை எப்படிப் பார்த்தாலும் பெண்ணை பெற்றவர்கள் ஏதாவது ஒரு வழியில் முடிகிறதோ முடியவில்லையோ மனநிறைவுடன் அளவுக்கு அதிகமாகவே சீர் செய்ய வேண்டி உள்ளது.

சங்கரனுக்கு இவற்றை பற்றி பெரியதாக ஒன்றும் தெரியாது.ரத்னா உலகம் தெரியா சிறு குழந்தை.
ஆனால் விவரங்கள் புரிந்த உமாவுக்கு உள்ளே விக்கித்து போயிற்று.
என்னதான் குரு வீட்டில் நம்பிக்கை கொடுத்திருந்தாலும் ஏறத்தாழ பத்து லகரங்கள்(1990 களில் என்று யோசித்தால் )... அம்மாடியோவ்!
அப்பாவால் எப்படி முடியும் என்று கலங்கினாள்.
அவளை, முன்னிறுத்தி பெறப்படும் தொகை. அவள் வாழ்நாள் முழுவதும் அங்கு அடிமைதான். மீட்சி பெற வழி இல்லை. பெற்றவர் அவளை விற்றுவிட்டார். அவளால் துக்கம் தாங்க இயலவில்லை.

யோசித்து சொல்வதாக சிவன் சொல்ல, தன் கணவரை தனியே கூட்டி சென்ற பாறு' இதுல யோசிக்க என்ன இருக்கு அதுதான் அன்னபூரணி அம்மா எல்லாத்தையும் தானே பார்த்துக் கொள்வதாக சொல்லி இருக்காங்களே... சரினு ஒத்துக்கோங்க' என்று இதோபதேசம் செய்ய அத்தனை பேரும் வெளியே வந்த சிவன் இவர்கள் சொல்லும் எல்லாவற்றுக்கும் சரிதான் என்று சொல்லிவிட்டார்.
அன்று இரவே அருணாசலத்திற்கு சிவன் போன் செய்ய, என்னய்யா நிச்சயம் எல்லாம் எப்படி நடந்தது ... மூத்த சம்பந்திக்கும் மரியாதை செய்யணுமின்னு தெரியாம போச்சு உமக்கு என்று நக்கல் அடித்தார். இப்படி பேசுபவரிடம் நகை கல்யாண செலவு என்று எவ்வாறு பேச முடியும் என்ற மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்தார் சிவன்.

வேறு வழியே இல்லை இவரிடம் பேசித்தான் ஆகவேண்டும் என்று முடிவு செய்தவராக சங்கரன் வீட்டில் கேட்டவற்றை பட்டியலிட, 'பரவாயில்லைய்யா, உம்ம ஒரு பொண்ணை காட்டி மூணு பொண்ணுகளுக்கும் வழிய பண்ணிட்ட... சரி எப்ப வர்ரியோ வந்து வாங்கிக்கோ எல்லாத்தையும் என்று முடித்துவிட்டார் அருணாச்சலம். கேட்ட சிவனுக்கு பூமிக்குள் புதைந்து விட மாட்டோமா என்று ஒரு கணம் தோன்றியது. பிறகு பெண்ணை பெற்றுவிட்டு மானம் மரியாதை என்று பேசிக்கொண்டு வெட்டியாய் திரிவதில் என்ன பயன் என்று தன்னையே தேற்றிக் கொண்டார்.

அருணாச்சலம் சிவனிடம் தொலைபேசியில் பேசியதை தன் அறையில் இருந்து கொண்டே கேட்டுக் கொண்டிருந்த குருபரன் முகம் சடுதியில் விகாரத்தில் மாறியது. அலட்சிய முறுவல் ஒன்று அவன் இதழ் கோடியில்.
என்னிக்குமே அன்ன காவடி... அன்னகாவடி தாண்டி என்று காற்றில் கூறிக் கொண்டிருந்தான்.
யாரிடம்?

**********************************************************
சாதுர்யா இன்றுடன் திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீரங்கம் வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. அவளின் சந்தோஷம் கரையை உடைத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. அம்மா பக்கத்தில் இல்லை என்பது பெரிய வருத்தமாக இருந்தாலும் கூட கட்டவிழ்த்து விடப்பட்ட கன்றுக்குட்டி தான் அவள்.
யாராலும் அவளை கையில் பிடிக்க முடியவில்லை. முதலில் வந்த பொழுது தோழர்கள் யாரும் இல்லை என்ற வருத்தம் அவளுக்கு இருந்தது.. ஆனால் இப்பொழுது பழைய தோழமைகள் ஒன்றுகூட தன்னை ஒதுக்காமல் சேர்த்துக்கொள்ள ஜோதியில் ஐக்கியமாகி விட்டாள் அவள். சதாசர்வகாலமும் கையில் மட்டையை பிடித்துக்கொண்டு ஓட்டம்தான்.
ரங்கனும் வந்து சேர்ந்துவிட சொல்லவா வேண்டும் நிலையை.

தன் அம்மா மற்றும் பாட்டி தாத்தாவுடன் வயலூரில் விடுப்பின் முதல்வாரத்தில் இருந்துவிட்டு தான் ஸ்ரீரங்கம் கிளம்பி வந்தான் ரங்கன்.முதலில் தன்னைப் பார்க்க வரவில்லை என்று கோபப்பட்ட சாதுர்யா கூட தன் கோபத்தை மறந்துவிட்டு ரங்கனுடன் இணைந்து கொண்டு விட்டாள் .

இரண்டு மூன்று நாட்கள் ஸ்ரீரங்கத்தில் கழித்தவனுக்கு இருப்பு கொள்ளவில்லை.
தாத்தா பாட்டியிடம் சொல்லிவிட்டு
சாதுர்யாவையும் அழைத்துக்கொண்டு வயலூருக்கு பிரயாணம்.
தாமோதரன் இருவர் முகத்திலும் ஏதோ ஒரு அர்த்தம் உடைய புன்னகை.

லட்சுமியின் மனம் முழுவதும் தனது மருமகள் மாலதி, பேத்தி சாதுர்யா பற்றி சொன்னவைகளே ஓடிக்கொண்டிருந்தது. ஏனோ அவற்றை தாமோதரனுடன் பகிர்ந்துகொள்ள லக்ஷ்மிக்கு வாய் வரவில்லை.

சாதுர்யா கிளம்பிப் போய் மூன்று நான்கு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் லக்ஷ்மி தங்கம் இவற்றையெல்லாம் ஓட்டி பார்த்துக் கொண்டிருந்தாள்..
லக்ஷ்மியின் மனம் முழுவதும் ஏதோ சந்தோஷ அலை. மாட்டுக் கொட்டகையில் அமர்ந்துகொண்டு அங்கு சாதுர்யா செய்த குறும்புகள் எல்லாம் ஞாபகம் வந்தது லக்ஷ்மிக்கு.
அன்று மதிய வேளையில் அவர்கள் வீட்டுப் பசு மகாலட்சுமி கன்று ஈன சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள் லக்ஷ்மி அம்மாள். வீட்டின் பசுக்கள் குட்டி ஈனும் பொழுது ஒவ்வொரு சமயமும் தனக்கு குழந்தை பிறந்தது போன்ற குதூகலம். அது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் விடாதே!

வயலூரில்,
தனது மாமியார் மாமனாரை வருடாந்திர பரிசோதனை செய்யவென கூட்டிக்கொண்டு வழக்கமாக செல்லும் சென்னையில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தாள் ரேணு. வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகிவிடும். இருவரும் ஸ்ரீரங்கத்திற்கு செல்வதாக இருந்தால் செல்லுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றிருந்தாள் ரேணு.
ஆனால், இளம்பிராயத்தினர் இருவருக்கும் ஸ்ரீரங்கம் செல்ல மனது இல்லை. ரங்கன் எனக்கு சமைக்க தெரியும் என்று சொல்லிவிட, சமையல் தவிர வேறு ஒன்றும் பெரிய வேலை இல்லை என்று இருவரும் முடிவு செய்து வயலூரிலேயே தங்கி விட்டார்கள்.

மதியம்வரை பம்புசெட்டில் ஆட்டம் போட்டுவிட்டு, வீட்டிற்கு வந்த சாதுர்யா, ரங்கன் வீட்டு மாட்டு கொட்டகை அருகே வரும்போது, கீழே இருக்கும் சாணியை கவனிக்காமல் ஓடிவர, கால் வழுக்கி விட்டது. அந்த சமயம் தனது தலை துவட்டிய துவாலையை பின்கட்டில் உலர்த்தவென அந்த பக்கம் வந்த ரங்கன் அவள் கீழே விழுந்துவிடாமல் இருக்க அவள் இடுப்பை வலுவாக பற்றி இழுக்க, சுரீர் என்று அடிவயிறு கவ்வி பிடிக்க, வலி தாங்கமுடியாமல் முனகிக்கொண்டே தன் அறைக்கு செல்ல எத்தனி த்தவளால் சுத்தமாய் முடியவில்லை. பற்களை கடித்து பொறுத்துக்கொள்ள முயன்றவளால் முடியாமல் போக ரங்கானே அவளை உள்ளே சென்று கொண்டு விட்டான். வலியில் அவள் கண்கள் nerr பொழிய தவித்து போனான் ரங்கன். வலியின் தாக்கத்தில் வாந்தியும் மயக்கமுமாய் அவள் தவிக்க,என்ன செய்வதென்று புரியாமல் தன் அம்மாவுக்கு ரங்கன் போன் செய்தால், அவள் எடுக்கவில்லை.
அதற்குள் சாதுர்யா குளியலறை சென்று வந்தவள் முகம் எங்கும் புரியா உணர்வு குழப்பம்.ரங்கனை வெளியே இருக்க சொல்லிவிட்டு
தன்னிடம் தன் அம்மா கொடுத்து வைத்திருக்கும் நாப்கின் எடுத்துகொண்டு மீண்டும் டாய்லெட் சென்று வந்தவள், பாட்டி சொன்னபடி நேரத்தை தனது டைரியில் எழுதி வைத்துகொண்டு கதவு தாழ்ப்பாளை திறந்தவள் ரன்கனிடம் எப்படி சொல்வது என்று தயங்க, அவனோ 'குட் நியூசா சாது...'நீ வயிறு வலின்னு அழுத உடனே அப்படி இருக்குமோன்னு தோணிச்சு என்றான்.
பிறகு லட்சுமி பாட்டிக்கு அழைத்து விஷயத்தை சொன்னவன், வடித்திருந்த சாதத்தில் கொஞ்சம் எடுத்து பாயசம் செய்து, அம்மா அரைத்து வைத்து சென்ற உளுந்து மாவில் வடை பொரித்து சதுர்யா தட்டில் வைத்து அவள் அறைக்கு கொண்டு சென்றான்.

உணவு வேண்டாம்.. பிடிக்கல என்று அழுதவளை தேற்றி ஊட்டியும் விட்டான்.
வயிறு வலிக்கிறது என்பவளுக்கு எதை கொடுத்தால் வலி குறையும் என்றுதான் அவனுக்கு புரியவில்லை.
வேலை செய்யும் பெண்களை கேட்கலாம் என்றால், வீட்டுக்கு பெரியவர்கள் வராமல் விஷயம் வெளி செல்வது சரி இல்லை என்று யோசித்து தன் தோழிக்கு அழைத்து கேட்டு வெள்ளை வெங்காயம் எடுத்து நீரில் வேக வைத்து சாதுவுக்கு கொடுத்தான் ரங்கன்.
இருவர் மனங்களிலும் பெயர் சொல்ல முடியா விளங்கா உணர்வு.











.
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top