JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

தட்பவெட்பம் : அத்தியாயம் 14

அத்தியாயம் 14

தான் யாருடன் தோழமை வைத்துக்கொண்டிருக்கிறோம் என்று தெரியாமல் அவர்களிடம் பழகுவது நமக்கு ஒரு சாபம் என்றேய் கூறலாம். அவர்களின் வஞ்சத்தின் வலையில் வீழ்வது மீளவே முடியாத அளவில் சூழல் வளியில் நாமே போய் சிக்கிக்கொள்வதாகும். சில சமயங்களில் உயிர் பலியும் நேரலாம். உயிர் பிரிந்தால் நாம் சில காலகட்டத்திற்கு மேல் பலர் அதை மறந்து விடுவோம் சமூகமும் மறந்து விடும். ஆனால், உயிரை விட நாம் பெரிதாக நினைக்கும் மானம், அது நம்மை விட்டு போனால் ? நாம் மறந்தாலும் சமுதாயம் நம்மை மறக்காது . நாம் நிரபராதி என்று வாதாடினாலும் நம்மை இந்த சமூகம் அந்த பெண்ணை ஒழுக்கம் கெட்டவள் என்று முத்திரை இட்டுவிடும்.

பெண்டிர்க்கு ஒழுக்கம் என்பது என்ன? நடத்தை என்று ஒரு வார்த்தையில் கூறிவிடலாம் அது எவ்விதமான நடத்தை அதில் தான் எல்லாம் அடங்கி இருக்கின்றது.



"ஹே தேஜு நீ காதலை பற்றி என்ன நினைக்கிற"

"காதல் என்ற ஒன்று இல்லவே இல்லை னு நினைக்கிறேன் "

"என்ன டி இப்படி பொசுக்குன்னு சொல்லிட , உனக்கு இந்த காதல் அனுபவம் தான் இல்ல, சரி இந்த அடிப்படை எதிர்பார்ப்பு அப்பிடியென்று ஏதாச்சும் இருக்கும் ல அது ?"

அவளை ஓரக்கண்ணால் பார்த்து குட்டி சுவற்றின் மேல் ஏறி உட்கார்ந்தவள்

"சரி என்ன சொல்லவேண்டும் ம்ம்ம் ..."

என்று தன் வெண்டை விரலைக்கொண்டு கன்னத்தைத் தட்டிய படி சுனிதாவிற்கு பதில் அளித்துக்கொண்டிருந்தாள்.

"காதல் னு ஒன்று இருக்கா இல்லையா எனக்கு அனுபவம் சாத்தியமா இல்ல ஆனால் ஒன்று மாட்டும் சொல்லுவேன் அது "என்னுடைய கண்ணு வழியா அவங்க கண்ணில் என்னுடனான , அவங்களோட காதலை பாகனும் " இது மாட்டும் தான் நான் சொல்லுவேன் , அதே மாதிரி எதிர்பார்ப்பு னு ஒன்றும் இல்ல டி "

தேஜு தன் கண்ணிற்குத் தெரியாதவன் கண் வழி காதலை நோக்கி அவளின் உலகத்தில் மிதந்திருந்தாள்.

"அப்போ நீ விகாஷ் காதலை பற்றி என்ன நினைக்கிற "

"என்ன டி ரொம்ப தான் அவனுக்கு பரிந்து பேசற, வர வர என்னிடம் இதே கேள்வியை கேட்டு கொண்டிருக்கிறாய், ஏன் உன்னுடைய ஆள் ஹரி உனக்கு இதைப் பற்றி கேட்டு வர சொல்கிறானா ?"

"அப்படி இல்ல டி , விகாஷும் நம்ப செட் தானே அதான் , நீயும் அவனுக்கு பச்சை கொடி காட்டினா நம்ப நான்குபேரும் சும்மா ஜோலி யாக இருக்கலாம் அதான் உன்னுடைய பதில் என்ன என்று கேட்கிறேன் "

"அவனுக்கு சொன்னது தான் உனக்கும், எனக்கு அவனிடம் ஈர்ப்பும் இல்லை ஒன்றும் இல்லை , எனக்கு அவன் நண்பன் மட்டுமே , என்றும் நீ நான் ஹரி விகாஷ் எல்லாரும் இப்படியே இருக்கவேண்டும் அது போதும் எனக்கு ".

அதனை பயன் படுத்திய சுனிதா அவளின் வாய் வழி மொழியில் அவளை வலையில் சிக்க வைக்க தன் கூட நட்புடன் கூடித் திட்டத்தை வகுத்து கொண்டிருந்தாள்.

----------------------------------------------------------------

அதே சமயம் கலிஃபோர்னியா மாகாணத்தில் லாஸ் என்ஜலஸ் ஸில் ( Los Angeles ):

இரு உடல்கள் உரசுகையில் காமத்தின் ஆட்டம் எல்லை மீறும். அதே போல் தான் இங்கு எல்லை மீறி கொண்டிருப்பவர்களின் நிலையம். அவர்களின் வேர்வை ஆறாக ஓட துவங்கியது. மைனஸ் டிகிரி யில் அவர்களின் ஊரே இருந்தாலும், இவர்களின் கூடல் என்னவோ சூரியன் உச்சத்தில் இருக்கும் நிலையில் தான் இருந்தார்கள். உச்ச நிலை அடைந்து முடிந்து அவளை விட்டு விலகியவனிடம்

தேடல் தீர்ந்ததா என்று அவனை கேட்டால் இல்லை என்று தான் சொல்லுவான் , திருப்தி அடைந்தான் என்றால் இல்லை , ஆனாலும் அவன் செய்து கொண்டிருக்கும் செயலை அவனால் நிறுத்த முடியவில்லை . ஏன் என்று அவனைக் கேட்டால் அதற்கு அவன் கொடுக்கும் விளக்கம்.

"im just burning my calories"

என்று அலட்டி கொல்லாமல் கூறுவான்.

அவனுக்கு 'பெண்களிடம் காமம் தேடிய தாகம் என்று சொல்ல மாட்டான் , அவன் மனதிற்கு நிறைவு யாரிடம் கிடைக்கும் என்று தேடுகிறேன் என்று சொல்வான்'.

அவன் யாரையும் தேடி செல்வதோ இல்லை பிடிவாதம் பிடித்து அதட்டி யாரையும் அடைய செய்வதோ அவன் குணம் இல்லை. அவனை தேடி வருவார்கள். அவனும், வரும் பெண்கள் நம்மை அனுசரித்துக் கொள்ளுவாள் என்று இருப்பான். வரும் பெண்கள் இவனின் ஆண் அழகிலும் பண பலத்திலும் மயங்கி இவனை சுற்றி வருவார்கள்.

வெளி நாட்டில் மிகவும் சாதாரண ஒன்றான நடைமுறை வாழ்க்கையில் அது பெரிய விஷயமாக கருத படாத ஒன்று தான் இந்த LIVE-IN RELATION என்று சொல்லப்படும் கல்யாணம் பண்ணிக்கொள்ளாமல் ஆணும் பெண்ணும் தனி வீட்டில் வாழ்ந்து வருவது தான் இந்த கலாச்சாரம்.

பெரியவர்களால் ஆசீர்வாதம் செய்து நல்ல நாள் நட்சத்திரம் பார்த்து ஊர் அறிய திருமணம் செய்துகொள்வதில் தான். கணவன் மனைவி என்னும் பந்தம் உருவாகிறது.

திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் அவர்களுடைய துணையிடம் சில கருத்து வேறுபாடுகள் இருக்கும் பட்சத்தில் பெரியவர்கள் யாரேனும் வந்து அவர்களுக்குள் இருக்கும் பிரச்னை பேசித்தீர்த்துக்கொள்ளும் நிலையில் இருந்தால் அதில் யாரேனும் ஒருவரை அனுசரித்துச் சென்று வாழ்க்கையை நடத்து என்று அவர்களுக்கு புத்திமதி சொல்லி ஒன்று சேர்க்க பார்ப்பார்கள். இது திருமணம் என்னும் பந்தத்தில் இருப்பவர்கள் அதிலும் குடும்ப சூழலில் வளர்ந்தவர்களுக்கு ஏற்கக்கூடிய ஒன்றாகும். அதிலும் தன் துணை சரி இல்லை என்று உறுதியானதுடன், அவர்களை விட்டு பிரிவது வாழ்வதுதான் தான் நமக்கு நல்லது என்று முடிவெடுத்த பின்னர் விவாகரத்து நடந்து விடும். பெரியவர்கள் முன்னின்று நடத்தி வைக்கும் கல்யாணத்தில் சில பல ஜோடிகளின் நிலை இவ்வாறாக இருக்கும்.

இது அனைத்தும் திருமணம் பந்தத்தில் உள்ளவர்களுக்கானவை. இந்த சிக்கல்கல் எதுவும் இந்த LIVE-IN RELATION னில் இல்லை. பிடித்தல் ஒன்றாக இருப்போம். ஒன்றாக இருக்கும் வரையில் ஒருவரிடத்தில் மற்றொருவர் கேள்வி கேட்பதோ, சந்தேகப்பட்டு ஒரு வார்த்தை அதனை பற்றி கேட்பதோ, அல்லது ஒருவரை தன் விருப்பு வெறுப்புக்கு இணைய வைத்து வற்புறுத்துவதோ இவர்களிடம் இல்லை. பிடித்தால் இன்று உன்னுடன் இருப்பேன் இல்லை என்றால் மனதார இருவரும் கைகுலுக்கி விடைபெற்று விடுவார்கள். நேர்மையாக இருப்பவர்களும் இதில் தப்பித்தவறி வந்துவிடுவார்கள். இவர்கள் அடித்துக் கொண்டாலும் பிடிக்காமல் சென்றாலும் இவர்களிடையே யாரும் வந்து பஞ்சாயத்து செய்து வைக்க மாட்டார்கள். இதில் நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்போர்கள் பல. அவர்களுக்கு கல்யாணம் என்னும் பந்தம் வேண்டாம் என்று இருந்து விடுவார்கள் பெற்றவர்களின் சமந்தத்துடன்.

இங்கு ஹ்ருதையை திருமணம் செதுக்கச் சொல்லி தாயும் தந்தையும் வற்புறுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தும் இவன் பிடிகொடுக்காமல் அவனின் தேடலைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறான் . வரும் பெண்களோ இவன் இடத்தில் பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும், இவனின் புகழில் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதிலும் தான் குறியாக இருந்தார்கள். இவனை தங்களின் அழகில் மயங்க செய்துவிடலாம் என்றெய் இவனை சுற்றி வருகிறார்கள். பொறுமையாக பார்ப்பான், இல்லையென்றால் அவர்களிடம் இருந்து ஒதுங்கிவிடுவான் . அமெரிக்கா பிரஜை என்பதாலும் அவன் வளர்ந்த சூழ்நிலை என்பதாலும் அவனுக்கு இந்த கலாச்சாரம் பெரிய தவறாக தெரியவில்லை . ஆனால் இவனுடைய தாய்க்கு இவன் செய்யும் இந்த செயல் கிஞ்சித்தளவும் பிடிக்கவில்லை.

அவனுடைய தொலைப்பேசி சிணுங்கியது அதில் அவன் அவளை விட்டு விலகி சற்று தொலைவில் வந்து செல்பேசியில் யார் என்று பார்த்தான் வந்தது தன் அம்மாவிடம் என்று அறிந்ததும்

"சொல்லுங்கள் மாமி (mommy)"

"இப்படி நீ கூப்பிட்டால் நான் உன்னிடம் பேசமாட்டேன் ஹ்ருதை , போர் சூர் (for sure)"

உச்சப்பட்ட ஆத்திரத்தில் அவனுடைய தாய் காஞ்சனா கத்திக்கொண்டிருந்தார்

"ஓகே ஓகே பீ கூல் , நான் கூப்பிட மாட்டேன் , சொல்லு காஞ்சு என்ன விஷயம் "

"ஏன்டா அம்மா னு அழகா கூப்பிட மாட்டியா ஒன்னு கூப்பிட்டால் மாமி(mommy) வாய்க்கு வந்ததா கூப்பிடுற அப்படி இல்லையா என்னுடைய பெயரை சொல்லி கூப்பிடுகிற என்ன டா நீ "

"இப்போது இதற்கு விளக்கம் சொல்லத்தான் கூப்பிட்டிங்களா "

"சரி சரி ரொம்ப தான் அலட்டிக்காத்த , நீ இந்தியா எப்போது போகலாம் னு இருக்க நானும் உன்னுடன் வரலாம் னு இருக்கிறேன் "

"எது நீங்க என்கூடையா அதெல்லாம் முடியாது, போய் அப்பா கிட்ட சொல்லி அவர் வரச்சொல்லுங்க"

"ஏன்டா உன்ன பெத்த அம்மா வரக்கூடாது அந்த ஈம்மா மட்டும் வரலாமா ?"

"ம்மா அவ என்னுடைய பார்ட்னர் "

"அடி வாயிலே, எனக்கு இது சுத்தமா பிடிக்கல ஹ்ருதை. பார்ட்னர் ஆம் பார்ட்னர் . அவளோடு அப்பா தான் உன் அப்பா பிஸ்னஸ் கு பார்ட்னர் , இவள் இல்லை "
"சரி மா விட்டேன் , நான் இந்தியா கு என்னுடைய பிசினஸ் விஷயமா தான் போகிறேன் போதுமா , அதுக்குதான் ஈம்மா என்னுடன் வரா அவ்வளவுதான் "

"டேய் உனக்கு இந்த இத்து போன ஈம்மா தான் வேண்டுமானால் அவளையே கல்யாணம் பண்ணிக்கோ யெண்டா ."

"அது மட்டும் முடியாது "

"அப்பறம் எதுக்குடா இந்த கருமம் எல்லாம். டேய் ஹ்ருதை, அப்போது இந்தியாவில் நான் சொல்கிற பொண்ண பார்த்து கல்யாணம் செய்துக்கோ "

"அதுவும் முடியாது , இப்போது எனக்கு ரொம்ப தூக்கம் வருகிறது நான் போன் வைக்கிறேன் பை "

என்று தொலைபேசியை துண்டித்து வைத்தான் இவன் "ஹ்ருதை வாட்சன் "

மைக்கேல் வாட்சன் , காஞ்சனா காளிமுத்து தம்பதியருக்கு மகனாக பிறந்தவன்தான் ஹ்ருடை வாட்சன்.

காஞ்சனாவின் தந்தை அமெரிக்காவில் பெரிய பிசினஸ் செய்பவர் அவரின் தொழில் நண்பரின் மகன் தான் மைக்கேல் வாட்சன், காஞ்சனா தமிழ் கலாச்சாரத்தில் வளர்ந்ததனால் என்னவோ அவருக்கு தமிழ் முறை தான் மிகவும் பிடிக்கும்.

மகனுக்கு எப்பாடு பட்டோ தமிழை நன்கு கற்று கொடுத்து விட்டார். தாயின் வழி தாய்மொழி தமிழினை கற்றவனுக்கு தந்தையின் ஊரின் கலாச்சாரம் பிடித்து இருந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஏன் என்றால் அவன் பிறந்ததும் வளர்ந்து வருவதும் அந்த நாட்டில் தான்.

ஹ்ருதை வாட்சன் னின் இந்தியா பயணம் கூடிய சீக்கிரம் கடலையும் மலையையும் தாண்டி இருக்கவுள்ளது.

தட்பவெட்பத்தின் நிலையும் சற்று மாறு பட இருக்கின்றது .

தொடரும்
 

Nuha

Member
அப்பாடி ஒரு வழியா ஹீரோ வ கண்ணில் காமிசிட்டீங்க... But intha கலோரி பர்னிங் தான் கடுப்பா வருது. 😏😐
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top