JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

தெவிட்டா தீஞ்சுவை நீ-26

Janani Naveen

Well-known member
அத்தியாயம்-26

“மன மன மன மெண்டல் மனதில்

லக லக லக பொல்லா வயதில்”

என்று பாடி ஸ்டியரிங் வீலில் தாளம் போட்டு கொண்டு வந்தவன்

“நல்ல படம் தான்? கல்யாணத்துக்கு முன்னாடியே லிவிங் டூகெதர். நாடு செம வேகமா முன்னேறிட்டு இருக்கு” என்றான் சிரித்து கொண்டே.

அப்போது தான் மாலைகாட்சி அவளுடன் பார்த்து விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தான்.

அவன் சொன்னதை கேட்டு சட்டென்று சிரிப்பு வர ஜன்னல் பக்கம் திரும்பி சிரித்து விட்டாள்.

“ஓய் என்ன? நான் இங்க சிரிப்பு வர மாதிரி என்ன சொன்னேன்?” என்றான் அப்பாவியாக.

அவனை பார்த்து கண்கள் மின்ன “பின்ன உன்னை மாதிரி ஒரு பிள்ளை பெத்ததுக்கு அப்புறம் கூட கன்னிப்பையனா சுத்திட்டு இருப்பாங்களா?” என்று கேட்டு அடக்க முயன்றும் முடியாது முத்துப்பற்கள் மின்ன சிரித்து விட்டாள். மடியில் அமர்ந்து இருந்த ருத்ரனும் எதற்கு என்று தெரியாமல் தாய் சிரிப்பதை பார்த்து தானும் சிரித்தான்.

தாயும் மகனும் சிரித்ததை பார்த்து முகம் மலர்ந்தாலும் அவள் சொன்னதில் கடுப்பாகி அவளை பார்த்து முறைத்தான்.

அவளுக்கு அந்த விபத்து நடந்து ஆறு மாதங்கள் கடந்திருந்தது. இத்தனை நாளும் நெருங்கவும் அஞ்சி, விலகவும் முடியாது அவன் படும் அவஸ்த்தையை நக்கல் செய்பவளை பார்த்து

“வேண்டாம்டி ஓவரா கிண்டல் பண்ற. அப்புறம் பின் விளைவுகள் அதிகமா இருக்கும். சேதாரத்துக்கு நான் பொறுப்பு இல்லை” என்றான் எச்சரித்து.

“இப்போ தான் மீசையில் ஒரு முடி நரைச்சு இருக்கு. முழுசா நரைக்கும் முன்னாடி அந்த பின் விளைவு நடந்திடுமா?” என்று மேலும் பொங்கி சிரித்தவளை திரும்பி பார்த்தவனின் பார்வை மாறியது. அதை அறியாது மகனுடன் சிரித்து விளையாடி கொண்டு வந்தாள்.

வீடு வந்ததும் பேச்சியம்மாள் குழந்தையை வாங்கி கொண்டு சென்றார்.

இப்போது எல்லாம் முக்கால் வாசி நாட்கள் இங்கேயே தான் தங்கி இருக்கின்றனர். பேரனை விட்டு அவர்களால் இருக்க முடியாமல் போக, ஆத்ரேயனும் அவர்களை தங்களுடனே இருக்கும் படி கூறி விட்டான். இருந்தும் மதுரையில் நிலங்களை தெரிந்த நபரிடம் குத்தகைக்கு விட்டாலும் அரிசி மற்றும் சர்க்கரை ஆலைகளை அவ்வப்போது சென்று பார்த்து விட்டு வந்தனர். சில சமயம் ருத்ரனை ஊருக்கு அழைத்து சென்று ஒரு வாரம் தங்கி வருவதும் உண்டு.

அன்று ருத்ரனை பேச்சியம்மாள் எடுத்து செல்ல அவர்களில் அறைக்கு சென்றவள் வெளியே செல்ல அணிந்திருந்த மற்ற நகைகளை கழட்டும் பொருட்டு கண்ணாடி முன் நின்றவளை அணைத்தது இரு வலிய கரங்கள். மலைப்பாம்பு போல இரு வலிய கைகளுக்குள் சிக்கிக் கொண்ட பெண்ணவள் திகைத்து திரும்பி பார்க்க,
அவளவனின் கண்களின் பாவத்தில் மூச்சுக்கு தத்தளித்தவளை அவனது கேள்வி மூர்சையாக செய்தது.

“மீசை நரைக்கும் முன்னாடியே விரதத்தை முடிச்சு வச்சிடலாமா யது?” என்று கேட்டவன் கண்களில் இதுவரை அவள் கண்ட காதலை கடந்தும் வேறு பல உணர்வுகள்.

அத்தனை நாளும் அவனை வித விதமாக வம்புக்கு இழுத்து, சீண்டி அவனது உண்ர்சிகளுக்கு சோதனை வைத்தவள்,அந்த கட்டத்திற்கு வந்து நின்றபோது அவளுமே உணர்ச்சி குவியலாக மாறி நின்றாள்.

“ரொம்ப பேசின, இப்போ என்ன பேச்சு மறந்து போச்சா? பின் விளைவுகளுக்கு நீதான் பொறுப்புன்னு சொன்னேன் தானேடி” என்று பேச்சு பேச்சாக இருக்க கைகள் நொடியில் அதன் இறுக்கத்தை கூட்டியது.
அந்த இறுகிய அணைப்பு, அந்த வலி இன்னும் வேண்டும் என்று தோன்ற அவனது இறுகிய அணைப்பில் லயித்து நின்றிருந்தாள்.
அவனது காதலை உணர்ந்த நொடியே அது கைகளில் சேராது தள்ளிப் போக, அவனை முழுதாக தொலைத்து விட்டதாக ஒவ்வொரு இரவும் தலையணையை கண்ணீரால் நனைத்த நாட்கள் கண் முன் வந்து போனது, முற்றும் துறக்க அவள் யோகினி அல்லவே. ரத்தமும் சதையும் கொண்டு செய்த சாதாரண மனிதப் பிறவி.
அப்படி இருக்க அவளது உணர்வுகள் அவளவனை தேடும் போது அவனோ கைக்கு எட்டாத தூரத்தில். அவனது கை அணைப்பு இந்த பிறவியில் இல்லை என்று எண்ணி எண்ணி ஏங்கி, அழுது, துடித்து இனி இது தான் வாழ்வு என்று மரத்து போன உணர்வுகள் மடியவில்லை. வேரில் உயிர் மிச்சம் இருக்கிறது என்பது போல அவனை பார்த்த மாத்திரத்தில் விழித்து கொண்டது உணர்வுகள். ஆனால் அவனோ வேறு ஒருத்தியின் கணவனாக இருக்க வேரில் துளிர்த்த உயிரில் அமிலம் கலந்தது போலானது. உயிரை வேரோடு பிடுங்கி பாலைவனத்தில் எரிந்தது போல துடித்த நிமிடங்களும் கடந்து, அவனது அவளுக்கான இத்தனை வருட விரதம் துறக்க அவளிடமே வந்து கேட்கும் நிலை கையில் தானாக வந்து விழுந்த வரம் தான்.

இத்தனை வருடங்கள் அனுபவித்த துக்கம் மனதில் வலம் வந்தது. மூச்சு முட்டிப் போகும் உணர்வை தாங்க இயலாது அவனிடம் இருந்து விலகி பக்கவாட்டு கதவு வழியே பால்கனியில் நுழைந்து அங்கிருந்த தூணில் முகம் புதைத்து கொண்டாள்.

வேக மூச்சுக்கு வெப்பமாக வெளிவர கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
அவளது முகத்தையே பார்த்து கொண்டு இருந்தவனுக்கு தெரியாதா அவளது உள்ளத்து உணர்வுகள். கனமழையில் பெருவெள்ளம் தளும்பி கரை உடைத்து ஆவேசமாக ஆக்ரமிக்க காத்திருப்பது போல இத்தனை வருட பிரிவு உண்ர்வுகளின் சங்கமத்திற்கு காத்திருந்தது. அதில் நிதானத்திற்கு வாய்ப்புகள் குறைவு என்ற காரணத்தினால் தான் இத்தனை நாட்கள் தவிர்த்து ஒதுங்கி இருந்தான். இனியும் இயலாது என்ற நிலையில் இருவருமே நின்றிருந்தனர்.

வேகமாக அவளை தொடர்ந்து வந்தவனுக்கு அவள் நின்றிருந்த கோலம் அருகே கொழுக்கொம்பில் படர்ந்திருந்த முல்லைக் கொடியை போல இருந்தது. அவனது மலர்கொடியின் கொழுக்கொம்பாக மாற வேட்கை கொண்டு அவளை பின்புறம் இருந்து அணைக்க அவன் மீதே சாய்ந்து கொண்டாள் பெண்.
“அத்தூ” என்ற அவளது ஒற்றை அழைப்பு அவள் உணர்வு பிழம்பாக மாறி நிற்பதை கூறியது.
சட்டென்று அவளை திருப்பி முற்றிய நெற்கதிராக கவிழ்ந்து இருக்கும் முகம் நிமிர்த்த, சிப்பி இமை மூடிக் கொண்டு விழி எடுத்து பார்க்க மறுத்து வழக்கம் போல அவனை தவிப்பில் தள்ளியது.

கூர் நாசி, மாம்பழ கன்னங்களை, துடிக்கும் அதரங்கள் என்று பார்வை அவளது முகத்தில் வலம் வர, விழி மூடி இருந்தாலும் அவனது விழுங்கும் பார்வையை உணர்ந்து கொண்டவள் கண்கள் பட்டென்று திறந்து கொண்டது.

நாணத்தை விரக தாபம் வென்றிருக்க அவளது மையல் பார்வையில் அவனது முதுகுத் தண்டில் மின்னல் வெட்டி மறைந்தது.

இருந்தும் அவள் வாய் மொழி கேட்க விருப்பம் கொண்டு

“கேட்டதுக்கு பதில் சொல்லு யது” என்றவனின் குரல் அவனது தானா என்று வியக்கும் அளவுக்கு மென்மையிலும் மென்மையாக ஒலித்தது.

அதற்கு வாய் மொழி பதில் சொல்லாது அவளது முகத்துக்கு நேர் எதிர் இருந்த அவனது பரந்த மார்பில் அழுத்தமாக இதழ் பதித்து கூடலுக்கு முதல் அச்சாரம் இட்டாள்.

என்றுமே அவள் மட்டுமே கட்டி ஆளக்கூடிய அவனது உணர்வுகளை, அவளது சித்தம் போல அடக்கி ஆண்டு கொண்டு இருந்தாள் பெண்ணவள். அதிலும் மென்மையை கைவிட்டு வன்முறையில் இறங்க தயாராகி ஒரு வீராங்கனையின் ஆவேசத்துடன். இதுவும் போர் தான்.
அவனை மஞ்சத்தில் வீழ்த்த துடிக்கும் போர். அவனிடமே வீழ்ந்து போக துடிக்கும் போர்.

அதன் பின் செயலை தனதாக்கி கொண்டவன் அவளை கையில் ஏந்தி பால்கனியில் இருந்த மஞ்சத்தை நாட, அவளோ வெட்கி சிவந்த முகத்துடன் “இங்க இல்லை உள்ளே” என்றாள் நாணம் மேலிட.

புன்னகையுடன் திரும்பியவன் பார்வையில் வெகு அருகே பௌர்ணமி நிலவு தொட்டு விடும் தூரத்தில் பட்டது. அதன் ஒளிக்கீற்று இரவை பகலாக மாற்றி கொண்டு இருக்க, இடவலமாக தலை அசைத்து அவளது கோரிக்கையை மறுத்தான். நிலா முற்றத்தில் அவனது முழுமதியுடன் ஒன்றென கூட அபிலாஷை கொண்டு மஞ்சத்திலு சரிந்தான். அங்கே பூக்களின் சுகந்தத்தில், முல்லை பந்தலின் ஊடாக வெளிப்பட்ட முழுமதி ஒளியில் அவனது முதல் அச்சாரம் அவளது பிறை நூதலில் தொடங்கியது.

எப்போதோ நாணம் விடை பெற்று சென்றிருக்க, பல வருடங்களாக கட்டி வைத்த உணர்வுகள் கட்டவிழ, ஆவேச தழுவல்களும், மூர்ச்சையாகும் இதழணைப்பும் அடுத்த கட்டத்திற்கு இழுத்து சென்றது.

நடந்தேறும் நிகழ்வு கனவோ என்று கூட அச்சம் வந்து போனது இருவருக்கும். பல இரவுகள் கனவில் கூடி விடிந்ததும் தொலைத்த கனவை தேடும் அவலம் தொடர்கிறதோ என்று சந்தேகம் எழும் போது எல்லாம் நகக்குறி ஆழ்ந்து பதிந்தது இருவரின் மீதும். கனவல்ல அழகிய நிஜம் என்று உணரும் நேரம் கண்களில் வழிந்தோடும் கண்ணீர் இருவருக்குமே பொதுவானது. யார் சொன்னது பெண்ணுக்கு மட்டுமே கண்ணீர் சொந்தமென்று.

இத்தனை வருடம் அவளை தேடி வராது போனானே என்ற கோபம் எழும்போது அவளது பல் தடமும் நகக்குறியும் ஆழ பதிந்து அவனுக்கு வலியை கொடுக்க, அதை புரிந்து கொண்ட அவளவன் பொறுத்து கொண்டான். அவளுக்காகவே பிரம்மச்சர்யம் காத்து தனித்து இருந்தது நினைவில் எழும் போது அவள் செய்த காயத்திற்கு அவளே மருத்தாகி போனாள். நோயும் அவனே மருந்தும் அவனே என்று அவனை கொள்ளையடித்தாள் அவனின் காதல் அரக்கி. ஆக மொத்தம் சுனாமியாக சுழற்றி அடித்து அவனை தன்னுள்ளே சுடுட்டி கொண்டாள்.

பெண்ணவள் யாழாக மாற, அதை மேவும் விரல் அவனாக மாறி ராகங்களில் ஆலாபனையின் முடிவில் அவளுக்காக கட்டிக் காத்த பிரம்மச்சர்யத்தை அவளிடமே தொலைத்திருந்தான்.

அந்த அழகிய தோல்வி அவனுக்கு நிறைவை கொடுத்தது. அவளது நெற்றி முட்டி மூச்சு வாங்கும் நேரம் அவனது கண்களின் கண்ணீர் அவளது கண்களின் ஓரம் கசிந்த கண்ணீரோடு கலந்தது.

ஆணவன் தன்னிலை மீள, பெண்ணவள் பொங்கி வரும் கண்ணீரோடு விசும்பலும் வெளிப்பட அதை அடக்கும் வழி தெரியாது அவனது தோளில் பல் பதிய கடித்து அழுகையை அடக்கினாள்.

அவனின் குழந்தையின் தாய் ஆயினும் இது அவளுக்கும் முதல் உறவு. அதுவும் கானலாக போனது கை சேர்ந்து நிகழும் முதல் சங்கமம். அத்தனை நேரம் சூராவளியாக சுழன்றவளின் உணர்வுகள் முடிவுக்கு வரும் நொடி அது கண்ணீராக வெளிவருவதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
அவளை அள்ளி எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டு அவளது கூந்தல் வருடி சமாதானம் செய்து கொண்டு இருந்தான்.

வேறு எதுவும் பேசி கொள்ள தோன்றவில்லை. வார்த்தைகளுக்கு அங்கு தேவையும் எழ வில்லை. கடந்து வந்த கடினமான பாதை தூரத்தில் புள்ளியாக தெரிய வசந்தத்தின் வாசல் ஆயிரம் கதவுகள் கொண்டு திறந்து கொண்ட உணர்வு.
அவனுள் வாகாக பொறுந்தி கொண்டவள் நிமிர்ந்து அவன் முகம் பார்க்க அவனது கண்களும் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தது. அவனோ ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி சங்கேத மொழி பேச, அதை புரிந்து கொண்டவளுக்கு விடுபட்ட வெட்கம் மீண்டும் ஒட்டிக் கொண்டது. அவனது பரந்த மார்பில் முகம் புதைத்து கொள்ள இப்போது அவளை அடித்து வீழ்த்தி வெற்றி கொள்வது அவன் முறையானது. முழுமதி விடை பெரும் நேரம் களியாட்டங்கள் முடிவுக்கு வந்தது.
புலர்ந்தும் புலராத அந்த அதிகாலை நேரம் ஜன்னல் அருகே நின்று தன் அடர்ந்த கூந்தலை இடது தோள் வழி வழிய விட்டு அதில் சிந்தும் நீர் திவலைகளை துண்டில் துடைத்து கொண்டு இருந்தவளின் இதழ்கள் ரகசிய புன்னகையில் மலர்ந்து இருந்தது.

ஏதோ பாட்டை முணு முணுத்த படி சாட்டையாக கைகளில் அடங்காது திமிரிய ஈர கூந்தலை பின்னால் விசிற அது அவள் பின்னால் நின்று அவளையே ரசித்து கொண்டிருந்த ஆத்ரேயனின் முகத்தில் மோதி சென்றது.

அந்த ஈரக்கூந்தலின் ஸ்பரிசமும் வாசமும் அவனை கிறங்க வைக்க தன்னை கண்டு திகைத்து, மலர்ந்து , சிரித்து கடைசியாக நாணத்தை பிரதிபலித்த பெண்ணவளின் இடையூடு கையிட்டு இழுத்து அவளை அணைத்து கொண்டான்.

"அச்சோ குழந்தை தேடுவான். விடுங்க ......" என்றவளின் பதட்டம் ரசிக்க வைக்க மென்புன்னகை சிந்தி கொண்டே

"அவனை என் மாமனார் மாமியார் பார்த்துப்பாங்க. நீ முதல்ல மாமனை கவனி" என்றதோடு சற்று முன் அவன் முகத்தில் மோதிய ஈரக்கூந்தலில் கைகள் அலைய பெண்ணவள் இதழ் தீண்டினான்.

அரிச்சுவடி தெரியாத வரை தள்ளி இருக்க முடிந்தவனால் பாடங்கள் படித்து கற்பிக்க தொடங்கிய பின் ஒவ்வொரு நாளும் புதுப்புது பாடங்கள் படிக்க வைத்து கறாரான ஆசானாக மாறிப்போனான். பொய்யாக முரண்டு பிடித்த மானவியை சில நேரங்களில் கெஞ்சியும் பல நேரங்களில் கொஞ்சியம் காரியம் சாதிக்கும் கள்வன் ஆனான். இத்தனை வருடம் வீணான தருணங்களை எட்டிப் பிடிப்பது போல பாடங்களின் எண்ணிக்கையும் நேரமும் கூட அவனுக்கு இணையான வேகமும் மோகமும் கொண்ட மெல்லிடையாள் அவனை ஆகர்ஷித்தாள்.

நாளும் பொழுதும் இதுவரை அவர்களிடம் இருந்து பறித்த சந்தோஷங்களை எல்லாம் கணக்கின்றி வாரி வழங்க மாதங்கள் உருண்டோடியது.

இது வரை இல்லாத மாற்றம் ஆத்ரேயனிடமும் யசோவிடமும் பார்த்த மாத்திரத்தில் தெரிந்தது. இதுவரை வாழ்க்கையை தொடங்காமல் இருந்தவர்கள் தாம்பத்தியத்தின் தாள் திறந்து உள்ளே நுழைந்ததை மலரின் பொற்றோர் இவர்களின் பார்வை பரிமாற்றங்கள் மூலம் கண்டு கொண்டனர்.

ஆத்ரேயன் கண்களில் வழிந்த காதல் இதுவரை தங்கள் மகளிடம் வெளிப்பட்டு அவர்கள் கண்டது இல்லை என்ற நிதர்சனம் அவர்களின் முகத்தில் அரைந்தது. ‘அப்போ இவரு மலரை காதலிக்கவே இல்லையா? இல்லை மலரை விடவும் இந்த புள்ளை மேல ஆசை வச்சு இருக்காறா? அது எப்படி சாத்தியம்? ஏழு வருசம் கூட வாழ்ந்து ஒரு பிள்ளையும் பெத்து கொடுத்த மகராசி மேல காதல் இல்லாமல் போகலாம்?’ என்று கட்டுக்கடங்காத கோபம் வந்த போதும் அதை காட்டும் வழி தான் இல்லாது போனது.

அதனால் ஜாடையாக யசோ பல பேச்சுகளுக்கு ஆளானாள்.

“ஹும் வேலைக்கு வரதுகள் எல்லாம் தளுக்கி குலுக்கி வீட்டுக்காரி ஆய்டுதுங்க. ஆண்டவன் கொட்டி கொடுத்த அழகை சரியா பயன் படுத்த தெரிஞ்ச சென்மங்க. எல்லாம் காலக்கொடுமை” என்று ஜாடை பேசுவார்.

முத்துக்கருப்பன் மதுரைக்கு மில் வேலையாக செல்ல வேண்டும் என்று கூறினால் “நீங்க போய்ட்டு வாங்க. புள்ளையை விட்டுட்டு நான் வரமாட்டேய்ன். புள்ளைக்காக வேண்டி கலியாணம் கட்டின மாதிரி இல்லை இங்க நடக்கறதை பார்த்தா” என்று அவளை ஓரக்கண்ணால் பார்த்து பதில் கூறிவார்.

இது எதையுமே ஆதியின் செவிக்கு அவள் எடுத்து சென்றது இல்லை.

பல வருடங்களுக்கு பின் அவனை அத்தனை மகிழ்ச்சியாக பார்க்கிறாள். அதில் பானக துரும்பாக எதுவும் அவனை சிறிதளவு கூட உறுத்தி விட கூடாது என்று மிக கவனமாக இருந்தாள்.

ஏற்கனவே அவளிடம் பித்தாகி இருந்தவனுக்கு இப்போது எல்லாம் எங்கும் யது மயம். கணவனின் காதல் முற்றும் முழுதாக அவளுக்கே அவளுக்கு என்று ஆராதிக்கும் கணவனின் செயல்கள் பெண்ணவளை எப்போதும் நாணம் சுமந்த முகத்துடனே இருக்க வைத்தது. அது ஏற்கனவே அழகியானவளை மேலும் அழகாக காட்டியது.

முத்துக்கருப்பனுக்கு அது அறுவடை நேரம் ஊரில் பொங்கல் வர இருப்பதால் மதுரையில் பத்து நாட்கள் வேலை இருப்பதாக கூறி விட்டு செல்ல பேச்சியம்மாளும் பேரனை அழைத்து கொண்டு அவருடன் சென்றார்.

யசோவுக்கு குழந்தையை பிரிந்து பத்து நாட்களா என்று துக்கமாக இருந்தது. ஆனாலும் அடிக்கடி நடப்பது தான் என்று பொறுத்து கொண்டாள்.

வள்ளியம்மையையும் உடன் அழைத்து சென்று இருந்தனர். அதனால் அவ்வப்போது யசோவுக்கு அழைத்து குழந்தையை பற்றி கூறிவாள் என்று நிம்மதி கொண்டாள்.

வீட்டில் யாரும் இல்லை என்று அன்று விரைவில் வந்தவன் அவளிடம் ஒரு புடவை பெட்டியை கொடுத்து உடுத்தி வர சொன்னான்.

வெண்பட்டில் முழுதும் தங்க நிற சரிகையால் நெய்யப்பட்ட புடவை.

அழகாக மடிப்பு வைத்து உடுத்தி கொண்டவள் தளர பின்னிய கூந்தலில் சரம் சரமாக மொட்டாக இருந்து மலர தொடங்கிய மல்லிகை சூடி கிளம்பி வந்தாள்.

அவனும் வெள்ளை வேட்டி சட்டையில் கிளம்பி வந்திருந்தான். ஆண்மையின் இலக்கணம் இவனோ என்று எண்ணும் வகையில் இருந்தவனை கள்ளத்தனமாக ரசித்தது அவள் விழிகள்.

அவனோ கள்ளத்தனத்திற்கு இடம் இன்றி அவளை பார்த்த நொடி கண்களில் வழமை போல அப்பட்டமாக கிறக்க பார்வை பார்த்து வைக்க, முழங்கை கொண்டு அவனது விலாவில் இடித்தவள் “எங்கே போறோம்?” என்றாள் அவனது பார்வையின் தாக்கம் தந்த மெல்லி மின்சார அலைகளை மறைத்தபடி.

“போனதும் நீயே தெரிஞ்சுக்கோ” என்று அவளை அவன் அழைத்து சென்றது கடலுக்குள்.

ஆம் அவனது சற்று உயர்தர யாட் என்று அழைக்கப்படும் சொகுசு படகில் கடலுக்குள் அழைத்து சென்றான்.

இது வரை மீன் பிடி படகு பல நூறும், சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்து கப்பல்கள் இருந்தாலும் இப்படி குடும்பத்துக்காக தனிப்பட்ட சொகுசு படகு வாங்கியது இதுவே முதல் முறை. அவளுக்காக பிரத்தியேகமாக வாங்கிய படகு.

“அழகா இருக்கு அத்து” என்றாள் படகின் ஒவ்வொரு இடமாக வருடியபடி.

மென்னகையுடன் அவளது ரசனையை ரதித்து கொண்டிருந்தான்.

இரண்டு தளங்கள் கொண்ட குட்டி படகு அது.
முதல் தளத்தில் நின்று அமைதியான கடலை ரசித்து கொண்டு இருந்தாள். தூரத்தில் ஆதவன் புள்ளியாக மறைய நிலாமகள் மேலே எழுந்து இரவை ஆட்சி செய்ய துவங்கி இருந்து முன் இரவு நேரம்.

சுற்றி கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல். பல வருடங்களாக மனதில் இருக்கும் பாரத்தை மடி தாங்கும் அன்னையாக அவனை ஏந்தி கொண்ட கடல் அன்னையவள், இப்போது அவனது முற்றும் முழு மகிழ்ச்சியை தனது ஆர்பாட்டம் இல்லாத அமைதியான தாலாட்டும் அலையாய் நின்று ரசித்து இருந்தாள்.
வானம் எங்கும் நட்சத்திர பொட்டுகள் பளிச்சிட, பாதி தேய்ந்த நிலா கூட முழுமதிக்கு ஒத்த அழகாக காட்சி அளித்தது அவனது முழுமதி அவனின் கைகளுக்குள்ளே இருக்கையில்.

படபடத்த புடவையை இழுத்து பிடிக்க முயன்று தோற்று கொண்டு இருக்க இடையில் அழுந்த பதிந்தது அவனது கரங்கள்.

மௌனம் சில நேரங்களில் அழகு. சில வேளைகளில் அழகிய அவஸ்த்தை. அப்படி ஒரு அழகிய அவஸ்த்தை ரசாயன மாற்றங்களை அழகாக நிகழ்த்தி கொண்டு இருந்தது அந்த அடர்ந்த மௌனம்.

ஏதோ பேச வேண்டுமே என்பதற்காக "இங்க அடிக்கடி வருவிங்களா அத்து?" என்றாள் அவனது கைகளின் ஜாலம் கொடுத்த நடுக்கத்துடன்.

தோள் வழி வழிந்திருந்த மல்லிகை சரத்தை விலக்கி தோள் வளைவில் ஆழ இதழ் பதித்து "ஹம்ம் அடிக்கடி. உன்னை மறக்க முடியாமல் சரக்கடிக்க. நிறைய தடவை அப்படியே கல்லை கட்டி கடல்ல இறங்கிட்டா என்னன்னு எல்லாம் தோன்றி இருக்கு" என்று தொடர் முத்தங்களுக்கு நடுவே கூறி முடிக்க,அத்தனை நேரம் அவனது கையின் ஊர்வலத்தை தனது கைகள் கொண்டு தடுக்க முயன்று நெளிந்து கொண்டு இருந்தவள் அசைவின்றி நின்றாள்.

அப்போது தான் உதிர்த்த வார்த்தைகள் நினைவு வந்து மானசீகமாக தலையில் அடித்து கொண்டு சட்டென்று அவளை திருப்பி அதே வேகத்தில் அவளது செந்தாமரை வதனத்தை கைகளில் ஏந்தி இருந்தான். முற்றும் முழுதாக அவன் மீது சரிந்திருந்தாள்.

“நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன் தானே அத்து? இப்போ கூட நான் பேசின பேச்சை எப்படி மறந்து என்னை இந்த அளவுக்கு காதலிக்க முடியுது? நான் அப்போ சொன்ன மாதிரி பணம் தான் எனக்கு முக்கியம், அது உங்க கிட்ட அதிகம் இருக்கறதால இப்போ உங்களை காதலிக்கறேனோன்னு சந்தேகம் வரலையா?” என்று விம்மினாள்.

அவளது நெற்றியில் தட்டி “லூசாடி நீ? அப்படி இருந்தா நீ உன்னை தேடி வந்த நல்ல வாழ்க்கை எல்லாம் வேண்டாம்ன்னு ஏன் ஒதுக்கின? அவங்க ரெண்டு பேரும் கூட பணக்காரங்க தான். இருந்தும் வேணாம்ன்னு ஒதுக்க காரணம் என் மேல இருந்த காதல் டி. என்னை விட என் பத்தினி பெண்ணோட காதல் காணக்கிடைக்காதது செல்லக்குட்டி” என்றான் கர்வமாக. தொடர்ந்து
“ மலரும் நானும் கணவன் மனைவியா தான்
வாழ்ந்துட்டு இருந்தோம்ன்னு தானே நீ நினைச்ச? அந்த நினைப்பு உன்னை எவ்வளவு துடிக்க வெச்சு இருக்கும்? இருந்தும் குழந்தை பெத்து கொடுத்துட்டு போக தானே வந்த நீ? எத்தனை வலியை தாங்கி இருந்திருப்ப? எல்லாத்தையும் தாங்கினது எனக்காக தானே?” என்றான் உணர்ந்து.

“மலர் இறந்த அந்த ஒரு வருஷம் எனக்கு உன் மேல கோபம் இருந்தது தான். சொல்லப் போனால் அது உன்னிடம் மட்டும் இல்லை நம்ம ரெண்டு பேரிடமும் இருந்த கோபத்தின் வெளிப்பாடு தான் டி. நான் நிச்சயம்ன்னு தெரிஞ்சு அந்த உண்மையை ஏத்துக்க முடியாமல் அது நடந்ததா இல்லைன்னு தெரிஞ்சுக்காமல் இருந்தது என்னோட தப்பு. அந்த கிழவி பேசுன பேச்சுக்கு அதை நாலு அப்பு அப்பாமல் என்னை வந்து திட்டினது கூட பரவாயில்லை ஆனால் என்னோட தன்மானத்தை சீண்டும் விதமா பேசினது உன்னோட தப்பு. காதல்ல ஏது தன்மானம்? அதை தூர போட்டுட்டு உன் கிட்ட வந்து கால்ல விழுந்து இருக்கனும் நான். அதை செய்யாமல் விட்டது என்னோட தப்பு. என்னோட டைரியை படிச்சும் என்னை விட்டு விலகினது உன்னோட தப்பு. ஆமாம் அப்போ இருந்த சூழ்நிலையில் நான் உன்னை மோசமா பேசி இருந்திருப்பேன் தான். ஆனால் நீயும் அதே அளவு என்னை நான் தவறே செய்யாமல் பேசின தானே? அதே மாதிரி நான் பேசி இருந்தா தாங்கி இருக்க மாட்டியா? கூடவே இருந்து என்னோட கோபத்தை தாங்கி, இல்லைடா மடையா, உன்னோட அம்மாச்சி பேசின பேச்சு தான் காரணம். எனக்கும் உன் மேல காதல் தான்னு புரிய வெச்சு இருந்திருக்கனும். அதை விட்டுட்டு பணத்துக்காக தான் நீ வந்தன்னு நான் பேசிடுவேனோன்னு பயந்து என்னை விட்டுட்டு போனது தப்பு. இப்படி மாத்தி மாத்தி தப்பு பண்ணி நம்ம இழந்தது எவ்வளவு?” என்று அவன் கேட்கும் போது தான் அவனது கோபத்தில் இருந்த நியாயம் புரிந்தது.

அவன் தொடர்ந்து “இதில் நடந்து ஒரே நல்ல விஷயம் மலர். அந்த தேவதையோட அறிமுகம். என்னை பக்குவப் பட்ட மனுஷனா மாத்திச்சு. காரணங்கள் இன்றி காரியங்கள் இல்லைன்னு சொல்லுவாங்க. நம்ம பிரிவு மலரோட அறிமுகத்துக்காகவும் அவளோட ஆசைகளை நம் மூலம் நிறைவேற்றவும் தான்” என்று கூறி ஒரு நெடு மூச்சை ஆழ்ந்து வெளியேற்றினான்.
சற்று நேரம் மௌனமாக இருந்தவன் உள்ளுக்குள் மலர் மனதளவில் அனுபவித்த துக்கங்களை நினைத்து பார்த்தான்.

“பெண்கள் எல்லாம் பாவம் டி. சமுதாயத்தில் எத்தனை தளைகள், எத்தனை ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக வேண்டிய நிலை? அவளோட வலி பெரிசு யதும்மா. எனக்கு பிள்ளைதாய்ச்சி மாதிரி பெரிய வயிறு வேணும். நானும் குழந்தையை சுமக்கறேன்னு ஊருக்கு காட்டனும்ன்னு ஆசையா இருக்கு மாமான்னு அவ சொன்னப்போ நான் நிஜமாவே துடிச்சு போய்ட்டேன் டி. அவளோட தவிப்பை போக்க என்ன வேணும்னா செய்யலாம்ன்னு தான் வாடகை தாய் மூலம் பிள்ளை பெத்துக்க சம்மதம் சொன்னேன். அதுவும் சிங்கப்பூரில் இருந்து சினிமாவில் பயன்படுத்தும் சிலிக்கானில் செஞ்ச வயிறு போன்ற குஷன் வரவழைச்சு, அவங்க அப்பா,அம்மா ஊர் உலகம்ன்னு அவ மாசமா இருக்கறதா நம்ப வச்சு. அவ ரத்த சோகைக்கு சாப்பிடும் மாத்திரையை கர்ப்பகால மாத்திரைன்னு அவங்க கிட்ட பொய் சொல்லி இன்னும் நிறைய செய்ய காரணம் அவளோட வலி தான். அவ என்னோட வாழ்க்கையின் முக்கிய அங்கம் யது. அவளோட அன்பு என்னுள் இரண்டர கலந்த ஒன்று. என்றைக்குமே மலர் நம்மோட முதல் குழந்தை தான். அவள் இல்லைன்னு நான் நினைக்கவே இல்லை. இங்க தான் என் கூடவே இருக்கா.
நம்ம பிரிவு அவளோட கொஞ்ச வருஷ சந்தோஷத்துக்காக. அதனால் இனி அதை பற்றி பேச வேண்டாம் டா.நீயும் இப்படி லூசுத்தனமா பேசக்கூடாது” என்று கட்டளையிட்டான்.

“சரி பேசலை அப்பே வேற என்ன செய்ய?” என்றாள் அவனது சட்டை பொத்தான்களை திருகி கொஞ்சும் குரலில்.

“என்ன பண்ணனும்ன்னு என் கிட்ட கேட்கற? அப்போவும் சரி இப்போவும் சரி நீ கணக்கு பண்றதில் மக்கு தான் டி” என்று சிரித்தவனை தள்ளி விட்டு திரும்பி நின்று கொண்டாள்.
அவளது கோபத்தை கொஞ்சி கெஞ்சி போக்கும் பொறுமை இன்றி அவனது
வேட்டியை மடித்து கட்டி ஊடல் கொண்டு திரும்பி நிற்பவளை அள்ளி தோளில் துண்டு போல இட்டு தூக்கி கொள்ள “ஏய் அத்து.. விடு விடு என்னை” என்ற அவளது ஆரவாரம் கடல் அலையின் ஓசையில் அடங்கியது.
படகின் மேல் தளத்திற்கு வந்தவன் அங்கிருந்த மஞ்சத்தில் அவளை இறக்கி விட்டான். வெண் பட்டு மெத்தை விரிப்புடன் சுற்றியும் வலை துணியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது அந்த மலர்மஞ்சம்.
அலைகடல் தாலாட்ட வெண்பட்டு மஞ்சத்தில் மங்கையவள் உடனிருக்க புதுப்புது கவிதைகள் தோன்றியது அந்த கவிஞனுக்கு.
அந்த கவிகள் யாவும் வார்த்தையாக வடிவம் பெறாது அவனது செயல் வழி அவள் தேகத்தில் எழுதி கொண்டு இருந்தான். மஞ்சள் நிறம் கொண்ட மேணியாளை செங்காந்தள் மலராக உறு மாற்றி அவளுக்கு ஆடையாக மாறிப் போனான்.

கொலுசொலி, வளை ஒலி ராகமாக அரங்கேறிய ஆனந்தலகரியை கண்டு கார்மேக வானமும், ஆர்பரிக்கும் ஆழியும், தூரத்தே தெரிந்த நட்சத்திர புள்ளிகளும் கூட வெட்கம் கொண்டு கண் மூடி கொண்டது. நிலவு மகள் நாணி விடை பெரும் நேரம், உதயனின் கதிர்கள் பூக்கும் வேளை, வெள்ளியின் வரவு அந்த கூடலில் உறுதி செய்யப்பட்டது.

நாட்கள் அமைதியாக அதே நேரம் மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர்களை நிறுத்தி வைத்து அழகு பார்த்தது.

மகிழ்ச்சியை கூட்டும் விதமாக அடுத்த புதுவரவு உதயமாகி அவளை மேலும் மேலும் மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது.

அன்று உடற்பயிற்சி முடித்து வந்தவனுக்கு குடிக்க சத்துமாவு கொடுத்து விட்டு நிமர்ந்தவள் தலை சுற்றி அவன் மடிமீதே அமர்ந்து கொண்டாள்.

அவளின் உடல் நிலை பற்றி அறியாது அணைத்து கொண்டவன் “என்ன மேடம் அதிசயமா காலங்கார்த்தால மாம்ஸ் மேல இம்புட்டு கரிசனம்.” என்று அவளது கன்னம் கிள்ளியவனின் மீதே மயங்கி சரிந்தாள்.

பதறி அவளை தாங்கியவன் “ஏய் யது, விளையாடாத டி. எழுந்திரு ப்ளீஸ். ஏய் யது” என்று அவளது கன்னத்தை தட்டி எழுப்ப முயன்றான். மயக்கம் தெளியாது தொய்ந்தவளை அள்ளி வந்து படுக்கையில் கிடத்தி மயக்கம் தெளிவிக்க முயல, முகத்தில் பட்ட குளிர்ந்த நீரில் அவளது மயக்கம் தெளிந்தது. அவள் கண் முன்னே தெரிந்த அவனது கலவரமான முகத்தை கண்டு தடுமாறி எழுந்து அமர்ந்தாள்.

“டாக்டர் கிட்ட போகலாமா? காலையில சாப்டியா? இன்னிக்கு விரதம் அது இதுன்னு எதுவும் இருக்கியா? சொல்ற பேச்சே கேட்கறது இல்லை. நேத்து நைட் கூட ரொம்ப சோர்ந்து இருந்த. கிளம்பு டாக்டர் கிட்ட போகலாம். சுஜி இருக்காங்களான்னு கேட்கறேன்” என்று படபடத்தவனை நிதானமாக பார்த்தவள்

“சுஜி அக்காவை கட்டாயம் பார்க்கனும்? உள்ளுக் குள்ள உங்க ரெண்டாவது ஜூனியர் எப்படி இருக்காங்க ன்னு கேட்டுட்டு வரலாம்.” என்று அவள் கூறியதும் அவள் சொல்ல வருவதை புரிந்து கொள்ள அவனுக்கு முழுதாக ஒரு நிமிடம் எடுத்தது.

புரிந்த பின் முதலில் திகைப்பு, பின் மகிழ்ச்சி அளவுக்கு அதிகமான மகிழ்ச்சி பின் அவளது உடல் நிலையை நினைத்து அச்சம் என்று பல உணர்வுகள் மாறி மாறி வந்து போனது. சட்டென்று அவளை இழுத்து அணைத்து கொண்டவன் அவளது உச்சியில் கன்னம் பதித்து “எப்படி டி? இ..இது கவனமா தானே” என்று திகைத்தவனின் மார்பில் கை வைத்து தள்ளி விட்டு அவனை கண்டு முறைத்தவள்
“ ஏன் கேட்க மாட்ட நீ? கடலுக்குள்ள கூட்டிட்டு போய் தாலாட்டுதே வானம், தள்ளாடுதே மேகம்ன்னு ரெண்டு நாள் விடாமல் கதை பேசிட்டு இப்போ வந்து கேள்வி கேளு” என்று சடைத்து கொண்டாலும் முகம் முழுதும் நாணம் பூத்திருந்தது.

அதில் வாய் விட்டு சிரித்து கொண்டே அவளை மீண்டும் கைக்குள் இழுத்துக் கொண்டவன்
“உன்னோட ஹெல்த் எப்படி இருக்குன்னு தெரியலை. பயமா இருக்கு. நான் தான் கொஞ்சம் கவனமா இருந்திருக்கனும் ” என்று பயத்தில் வந்து விழுந்தது வார்த்தைகள்.

“அந்த விபத்து நடந்து ரெண்டு வருஷம் ஆச்சு. ரெண்டு மாசம் முன்னாடி போய் செக் பண்ணின போது கூட அக்கா நார்மல் ன்னு தான் சொன்னாங்க. அடுத்த குழந்தை பற்றி முடிவு செய்யலாம்ன்னு சொன்னாங்க. அப்புறமும் ஏன் பயம் அத்து?” என்று சமாதானம் செய்ய தொடங்கினாள்.

சுஜியை பார்த்து கர்ப்பத்தை உறுதி செய்ததோடு அவளது உடல் நலனை பற்றி கேட்டு அறிந்து கொண்டதும் தான் புதுவரவு பற்றிய செய்தியை அவனால் முழுமனதுடன் உள்வாங்கி பூரிக்க முடிந்தது.

“அவ நல்லா தான் இருக்கா. கவலைப்பட ஒன்னும் இல்லை. வெய்ட் தூக்க வேண்டாம். அதோட மற்ற விஷயத்திலும் கவனம் தேவை.” என்று கூறி அனுப்பி வைத்தாள்.

அவர்கள் வெளியே சென்றதும் தோழியை நினைத்து ஒரு நொடி கண்கள் கரித்தாலும் அவள் ஆத்மா இப்போது மகிழ்ந்திருக்கும் என்று திடமாக நம்பினாள்.
அதே மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்து விஷையத்தை கூற வள்ளியம்மை மட்டுமே உண்மையான மகிழ்ச்சயை வெளிப்படுத்தினார். மலரின் பெற்றோரின் முகம் சற்று சுருங்கி தான் போனது.

ஆனால் ஆத்ரேயன் அதை எல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை. முந்தைய பிரசவத்தில் அவள் பட்ட துன்பங்கள் அனைத்துக்கும் சேர்த்து வைத்து இந்த முறை அவளை கையில் ஏந்தி பார்த்து கொள்ள வேண்டும், பிள்ளை வயிற்றில் உருவானது தெரிந்த நொடி முதல் அதன் வளர்ச்சியில் ஒவ்வொரு நொடியும் தொட்டு தடவி அதனுடன் பேசி மகிழ வேண்டும் என்று தரையில் கால் பாவாமல் திளைத்து கொண்டு இருந்தான்.

மூன்று வயது ருத்ரன் யசோவிடம் தாவி வந்து தூக்க சொல்ல ஆத்ரேயன் அவனை தூக்கி கொண்டு “ருத்து குட்டி சமத்தாச்சே. அம்மா வயித்துல பாப்பா இருக்கு. இப்படி இனிமே ஓடி வந்து எல்லாம் தூக்க சொல்ல கூடாது” என்று கூற அந்த மூன்று வயது பாலகனின் முகம் சுருங்கியது. அதை அந்த நேரம் அவன் கவனிக்க தவறினாலும் தாயின் பார்வையில் இருந்து தப்பாது. மருத்துவர் எச்சரிக்கையும் மீறி ருத்ரனுக்காக கை நீட்டினாள்.

அவளிடம் போக ஆர்வம் காட்டிய குழந்தையை அணைத்து கொண்டு “உன் உடம்பு ஆரோக்கியம் இப்போ ரொம்ப முக்கியம் டி. ருத்து சமத்து பையன். சொன்னா கேட்டுப்பான்” என்று அப்போது சமாதானம் செய்து வைத்தான்.

இது மலரின் பெற்றோர் கவனத்திலும் பட்டு ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

அடுத்த ஒரு மாதம் முழுதும் வாந்தி, மயக்கம் என்று மசக்கை பாடாக படுத்தி எடுத்தது யசோதாவை. தேவை என்று வரும் வேளை தொழிலை கவனிக்க சென்றவன் மீதி நேரங்களில் அவளுடனே இருந்து பார்த்து கொண்டான்.

ஒரு நாள் நள்ளிரவு தாண்டியும் உறக்கம் வராது அவனது கை வளைவில் தலை சாய்த்திருத்து, அவனது விரல் பிடித்து வாய் ஓயாமல் கதை பேசி கொண்டு இருந்தாள். விரிந்திருந்த கூந்தலை வருடி கொண்டு அவளது பேச்சுக்கு செவிகளை மட்டும் கொடுத்து சிந்தனையை எங்கோ பதித்து இருந்தவனது கண்கள் சிவந்து கலங்கி கண்ணீர் சிந்த தயாராக இருந்தது.

அவனிடம் இருந்து பதில் வராது போகவும் அவன் மார்பில் தாடையை அழுத்தி அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் அவனது கலங்கிய கண்களை பார்த்து பதறி எழுந்து அமர்ந்து “எ..என்ன ஆச்சு அத்து?” என்று கேட்டது தான் தாமதம் அவளை இழுத்து அணைத்து கொண்டான். அவளது பின் கழுத்தில் சூடாக அவனது கண்ணீர் இறங்கியது.

“அச்சோ என்ன ஆச்சு?” என்று அவனது முகம் பார்க்க முயல அவனோ அவளை இறுக்கமாக அணைத்திருந்தவன் அவளை விலக மறுத்தான்.
“என்னன்னு சொல்லு அத்து எனக்கு பயமா இருக்கு” என்றவளின் கண்ணீர் குரலில் தான் தன்னிலை அடைந்தவன் கண்களை துடைத்து கொண்டு

“ருத்துவை சுமக்கும் போதும் இப்படி கஷ்டப்பட்டியா யதும்மா? அக்காவும் நினைவு இல்லாத நிலையில் அஸ்பத்திரியில் இருந்து இருப்பாங்க. நீ எப்படி டி தனியா? அந்த நிலமையில் நானும் நிறைய கஷ்டப்படுத்தி இருக்கேன் டி. நா..நான் எல்லாம் மனுஷனே இல்லை.” என்று புலம்பும் கணவனை தீர்க்கமான பார்வை பார்த்து

“நம்ம இதை ஏற்கனவே பேசி முடிச்சாச்சு. தப்பு ரெண்டு பேர் பக்கமும் இருக்கு. உங்க இடத்தில் வேற எவனும் இருந்தா ‘சர்தான் போடி, இப்போ என் கிட்ட கோடி கோடியா சொத்து வந்தாச்சு. அழகா படிச்சவளா என் தகுதிக்கு ஏற்றவளா கல்யாணம் செஞ்சு வாழ்ந்து காட்டறேன்னு’ சொல்லி சந்தோஷமா இருந்து இருப்பாங்க. இப்படி இத்தனை வருஷம் விரதம் காத்துட்டு இருந்திருக்க மாட்டாங்க. இனி இதை பத்தி பேச்சு வரக்கூடாது.” என்று விரல் நீட்டி மனைவி மிரட்டினாள்.
அவள் மடியில் படுத்து கொண்டு வயிற்றில் இருந்த பிள்ளைக்கு முத்தம் வைத்து “பாரு டா குட்டி அம்மா என்னை மிரட்டிட்டு இருக்கா. நீங்க சீக்கிரம் வெளிய வாங்க அம்மாவை நான் நீ அண்ணா மூனு பேரும் ஒரு கை பார்ப்போம்.” என்று கூறி கணக்கில் அடங்கா முத்தம் குழந்தைக்கு வைப்பதாக சொல்லி கொண்டு அவளை சிவக்க வைத்து கொண்டு இருந்தான்.

மூன்றாம் மாத தொடக்கத்தில் ஸ்கேன் செய்ய வேண்டும் என்று சுஜி சொன்ன காரணத்தினால் அன்று மருத்துவமனைக்கு கிளம்பி கொண்டு இருந்தனர்.

இரண்டு நாட்களாகவே யசோவின் முகம் சற்று களையிழந்து காணப்பட்டது. சோர்வுடன் இருந்தவள் அவனிடமும் தொட்டதற்கு எல்லாம் கோபம் கொண்டாள்.

மசக்கையின் பாதிப்பு என்று மிக மிக மென்மையாகவே பெண்ணவளை கையாண்டான்.

சுஜியின் அறைக்கு சென்றதுமே மனைவியின் சோர்ந்த நிலையை பற்றி சொன்னவன் “என்னன்னு பாருங்க சுஜி. எனக்கு பயமா இருக்கு” என்றதும் அவனை பொறுமையாக இருக்க சொல்லி விட்டு யசோவை முழுதாக சோதித்து பார்த்த சுஜியின் முகத்தில் மலர்ச்சி. அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள நினைக்கும் போதே அவளை முந்திக் கொண்டு

“எனக்கு எந்த குழந்தை வேண்டாம் சுஜிக்கா. இது..இதை கலைச்சுடலாம்.” என்றாள் கண்ணீர் குரலில்.

அதுவரை மனைவியின் நலனை நினைத்து அச்சத்தில் இருந்தவனின் முகம் வெளிறி இறுகியது.

தொடரும்

AIbEiAIAAABECN7zudnPqqeIgQEiC3ZjYXJkX3Bob3RvKig0NDFlMTY3OTY3NDE5YmE1M2U1MmUzMDk1ZTRlNDU1MjcyYTIzNjQ1MAHTqD2yYiPKVqCPmse-9hONv7K_Sw
ReplyForward
 
Suji

New member
kandippa malar amma than yethavathu thappa pesiruppanga.....yaso vayithula twins ah?malar parentsku unmaiya sollrathu nallathu......oor ulagathukku theriya vendam, ana veetla irukkaravangalukku sollalame.. .waiting for next update.....
 
Baladurga

New member
Dear Jannu,

Story line is good nala concept but enaku malar kalyanam panni avanga bonding vera level than but enaku konjam accept pana mudiyala. malar ammaku thonuthula malar mela kadhal evaluvu illanu athumathiri than mathavangalukum thonnum. unga concept nan kurai ondrum solla villai. Ethu mathiri irukravanga adopt panni valakalam( I feel story would change at this point). malar love panni irukalam aathu endru enaku oru ennam. starting la irunthu enaku 2 heroine accept pana mudiyala. I fixed in mind malar and aathu. Entha epila kooda ruthhu kutty kitta athu solurathu malar ammaku kastam yen enakae kastam than. evan thokka vendiyathuthan. kutty mugam udanane dull ayeduchu. malar ammakita ruthhu va vitutu ethunga romance pannitu next baby vandhathuku pauram still rutthu avangaloda than irukura mathiri iruntha avan alone ah feel panuvan. so antha reason vachu malar amma etho solli irukanga. yaso entha kulanthai venam endru sollurathuku reason athu than irukkanum. twins irukku pola. malar parents kasta apduvanga endru than malar evalavu drama seyathal . unmai theriya varikkum avanga apidi than irupanaga athula thapu illa. therinthalum atha accept panura manasu and health avangaluku irukka. lets wait and see last epi.
 
Devi15

New member
நீங்கள் ஆதி மற்றும் யசோக்கு நியாயம் செய்திங்க ஆனால் மலருக்கு செய்ய வில்லா. கதை நல்லா இல்லை. சொல்ல ஒன்றும் இல்லை ஆனா பிடிக்கவில்லை. ஆதி செய்தது தப்பு.sorry but what ever you think I don't care sis. In your stories this is not good.
 
அது உங்களோட கருத்து. எல்வாருக்கும் எல்லா கதையும் பிடிக்கனும்னு அவசியம் இல்லை. எனக்கு சரின்னு பட்டது நான் எழுதினேன். பிடிக்கலல படிக்க மாட்டேன் மாட்டேன்னு சொல்லிட்டே தொடர்ந்து படிச்சதுக்கு நன்றி🙏
 
Janani Naveen

Well-known member
Dear Jannu,

Story line is good nala concept but enaku malar kalyanam panni avanga bonding vera level than but enaku konjam accept pana mudiyala. malar ammaku thonuthula malar mela kadhal evaluvu illanu athumathiri than mathavangalukum thonnum. unga concept nan kurai ondrum solla villai. Ethu mathiri irukravanga adopt panni valakalam( I feel story would change at this point). malar love panni irukalam aathu endru enaku oru ennam. starting la irunthu enaku 2 heroine accept pana mudiyala. I fixed in mind malar and aathu. Entha epila kooda ruthhu kutty kitta athu solurathu malar ammaku kastam yen enakae kastam than. evan thokka vendiyathuthan. kutty mugam udanane dull ayeduchu. malar ammakita ruthhu va vitutu ethunga romance pannitu next baby vandhathuku pauram still rutthu avangaloda than irukura mathiri iruntha avan alone ah feel panuvan. so antha reason vachu malar amma etho solli irukanga. yaso entha kulanthai venam endru sollurathuku reason athu than irukkanum. twins irukku pola. malar parents kasta apduvanga endru than malar evalavu drama seyathal . unmai theriya varikkum avanga apidi than irupanaga athula thapu illa. therinthalum atha accept panura manasu and health avangaluku irukka. lets wait and see last epi.
Thanks for ur honest opinion da. Hummm ava health issues love hormones dosent work for her and she hates that feeling nu thaan solli irukken. Silarukku accept panrathu kashtama thaan irukku i totally understand. Thanks dear
 
Janani Naveen

Well-known member
Thanks
kandippa malar amma than yethavathu thappa pesiruppanga.....yaso vayithula twins ah?malar parentsku unmaiya sollrathu nallathu......oor ulagathukku theriya vendam, ana veetla irukkaravangalukku sollalame.. .waiting for next update.....
Thanks alot dear
 
Jauts

New member
அத்தியாயம்-26

“மன மன மன மெண்டல் மனதில்

லக லக லக பொல்லா வயதில்”

என்று பாடி ஸ்டியரிங் வீலில் தாளம் போட்டு கொண்டு வந்தவன்

“நல்ல படம் தான்? கல்யாணத்துக்கு முன்னாடியே லிவிங் டூகெதர். நாடு செம வேகமா முன்னேறிட்டு இருக்கு” என்றான் சிரித்து கொண்டே.

அப்போது தான் மாலைகாட்சி அவளுடன் பார்த்து விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தான்.

அவன் சொன்னதை கேட்டு சட்டென்று சிரிப்பு வர ஜன்னல் பக்கம் திரும்பி சிரித்து விட்டாள்.

“ஓய் என்ன? நான் இங்க சிரிப்பு வர மாதிரி என்ன சொன்னேன்?” என்றான் அப்பாவியாக.

அவனை பார்த்து கண்கள் மின்ன “பின்ன உன்னை மாதிரி ஒரு பிள்ளை பெத்ததுக்கு அப்புறம் கூட கன்னிப்பையனா சுத்திட்டு இருப்பாங்களா?” என்று கேட்டு அடக்க முயன்றும் முடியாது முத்துப்பற்கள் மின்ன சிரித்து விட்டாள். மடியில் அமர்ந்து இருந்த ருத்ரனும் எதற்கு என்று தெரியாமல் தாய் சிரிப்பதை பார்த்து தானும் சிரித்தான்.

தாயும் மகனும் சிரித்ததை பார்த்து முகம் மலர்ந்தாலும் அவள் சொன்னதில் கடுப்பாகி அவளை பார்த்து முறைத்தான்.

அவளுக்கு அந்த விபத்து நடந்து ஆறு மாதங்கள் கடந்திருந்தது. இத்தனை நாளும் நெருங்கவும் அஞ்சி, விலகவும் முடியாது அவன் படும் அவஸ்த்தையை நக்கல் செய்பவளை பார்த்து

“வேண்டாம்டி ஓவரா கிண்டல் பண்ற. அப்புறம் பின் விளைவுகள் அதிகமா இருக்கும். சேதாரத்துக்கு நான் பொறுப்பு இல்லை” என்றான் எச்சரித்து.

“இப்போ தான் மீசையில் ஒரு முடி நரைச்சு இருக்கு. முழுசா நரைக்கும் முன்னாடி அந்த பின் விளைவு நடந்திடுமா?” என்று மேலும் பொங்கி சிரித்தவளை திரும்பி பார்த்தவனின் பார்வை மாறியது. அதை அறியாது மகனுடன் சிரித்து விளையாடி கொண்டு வந்தாள்.

வீடு வந்ததும் பேச்சியம்மாள் குழந்தையை வாங்கி கொண்டு சென்றார்.

இப்போது எல்லாம் முக்கால் வாசி நாட்கள் இங்கேயே தான் தங்கி இருக்கின்றனர். பேரனை விட்டு அவர்களால் இருக்க முடியாமல் போக, ஆத்ரேயனும் அவர்களை தங்களுடனே இருக்கும் படி கூறி விட்டான். இருந்தும் மதுரையில் நிலங்களை தெரிந்த நபரிடம் குத்தகைக்கு விட்டாலும் அரிசி மற்றும் சர்க்கரை ஆலைகளை அவ்வப்போது சென்று பார்த்து விட்டு வந்தனர். சில சமயம் ருத்ரனை ஊருக்கு அழைத்து சென்று ஒரு வாரம் தங்கி வருவதும் உண்டு.

அன்று ருத்ரனை பேச்சியம்மாள் எடுத்து செல்ல அவர்களில் அறைக்கு சென்றவள் வெளியே செல்ல அணிந்திருந்த மற்ற நகைகளை கழட்டும் பொருட்டு கண்ணாடி முன் நின்றவளை அணைத்தது இரு வலிய கரங்கள். மலைப்பாம்பு போல இரு வலிய கைகளுக்குள் சிக்கிக் கொண்ட பெண்ணவள் திகைத்து திரும்பி பார்க்க,
அவளவனின் கண்களின் பாவத்தில் மூச்சுக்கு தத்தளித்தவளை அவனது கேள்வி மூர்சையாக செய்தது.

“மீசை நரைக்கும் முன்னாடியே விரதத்தை முடிச்சு வச்சிடலாமா யது?” என்று கேட்டவன் கண்களில் இதுவரை அவள் கண்ட காதலை கடந்தும் வேறு பல உணர்வுகள்.

அத்தனை நாளும் அவனை வித விதமாக வம்புக்கு இழுத்து, சீண்டி அவனது உண்ர்சிகளுக்கு சோதனை வைத்தவள்,அந்த கட்டத்திற்கு வந்து நின்றபோது அவளுமே உணர்ச்சி குவியலாக மாறி நின்றாள்.

“ரொம்ப பேசின, இப்போ என்ன பேச்சு மறந்து போச்சா? பின் விளைவுகளுக்கு நீதான் பொறுப்புன்னு சொன்னேன் தானேடி” என்று பேச்சு பேச்சாக இருக்க கைகள் நொடியில் அதன் இறுக்கத்தை கூட்டியது.
அந்த இறுகிய அணைப்பு, அந்த வலி இன்னும் வேண்டும் என்று தோன்ற அவனது இறுகிய அணைப்பில் லயித்து நின்றிருந்தாள்.
அவனது காதலை உணர்ந்த நொடியே அது கைகளில் சேராது தள்ளிப் போக, அவனை முழுதாக தொலைத்து விட்டதாக ஒவ்வொரு இரவும் தலையணையை கண்ணீரால் நனைத்த நாட்கள் கண் முன் வந்து போனது, முற்றும் துறக்க அவள் யோகினி அல்லவே. ரத்தமும் சதையும் கொண்டு செய்த சாதாரண மனிதப் பிறவி.
அப்படி இருக்க அவளது உணர்வுகள் அவளவனை தேடும் போது அவனோ கைக்கு எட்டாத தூரத்தில். அவனது கை அணைப்பு இந்த பிறவியில் இல்லை என்று எண்ணி எண்ணி ஏங்கி, அழுது, துடித்து இனி இது தான் வாழ்வு என்று மரத்து போன உணர்வுகள் மடியவில்லை. வேரில் உயிர் மிச்சம் இருக்கிறது என்பது போல அவனை பார்த்த மாத்திரத்தில் விழித்து கொண்டது உணர்வுகள். ஆனால் அவனோ வேறு ஒருத்தியின் கணவனாக இருக்க வேரில் துளிர்த்த உயிரில் அமிலம் கலந்தது போலானது. உயிரை வேரோடு பிடுங்கி பாலைவனத்தில் எரிந்தது போல துடித்த நிமிடங்களும் கடந்து, அவனது அவளுக்கான இத்தனை வருட விரதம் துறக்க அவளிடமே வந்து கேட்கும் நிலை கையில் தானாக வந்து விழுந்த வரம் தான்.

இத்தனை வருடங்கள் அனுபவித்த துக்கம் மனதில் வலம் வந்தது. மூச்சு முட்டிப் போகும் உணர்வை தாங்க இயலாது அவனிடம் இருந்து விலகி பக்கவாட்டு கதவு வழியே பால்கனியில் நுழைந்து அங்கிருந்த தூணில் முகம் புதைத்து கொண்டாள்.

வேக மூச்சுக்கு வெப்பமாக வெளிவர கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
அவளது முகத்தையே பார்த்து கொண்டு இருந்தவனுக்கு தெரியாதா அவளது உள்ளத்து உணர்வுகள். கனமழையில் பெருவெள்ளம் தளும்பி கரை உடைத்து ஆவேசமாக ஆக்ரமிக்க காத்திருப்பது போல இத்தனை வருட பிரிவு உண்ர்வுகளின் சங்கமத்திற்கு காத்திருந்தது. அதில் நிதானத்திற்கு வாய்ப்புகள் குறைவு என்ற காரணத்தினால் தான் இத்தனை நாட்கள் தவிர்த்து ஒதுங்கி இருந்தான். இனியும் இயலாது என்ற நிலையில் இருவருமே நின்றிருந்தனர்.

வேகமாக அவளை தொடர்ந்து வந்தவனுக்கு அவள் நின்றிருந்த கோலம் அருகே கொழுக்கொம்பில் படர்ந்திருந்த முல்லைக் கொடியை போல இருந்தது. அவனது மலர்கொடியின் கொழுக்கொம்பாக மாற வேட்கை கொண்டு அவளை பின்புறம் இருந்து அணைக்க அவன் மீதே சாய்ந்து கொண்டாள் பெண்.
“அத்தூ” என்ற அவளது ஒற்றை அழைப்பு அவள் உணர்வு பிழம்பாக மாறி நிற்பதை கூறியது.
சட்டென்று அவளை திருப்பி முற்றிய நெற்கதிராக கவிழ்ந்து இருக்கும் முகம் நிமிர்த்த, சிப்பி இமை மூடிக் கொண்டு விழி எடுத்து பார்க்க மறுத்து வழக்கம் போல அவனை தவிப்பில் தள்ளியது.

கூர் நாசி, மாம்பழ கன்னங்களை, துடிக்கும் அதரங்கள் என்று பார்வை அவளது முகத்தில் வலம் வர, விழி மூடி இருந்தாலும் அவனது விழுங்கும் பார்வையை உணர்ந்து கொண்டவள் கண்கள் பட்டென்று திறந்து கொண்டது.

நாணத்தை விரக தாபம் வென்றிருக்க அவளது மையல் பார்வையில் அவனது முதுகுத் தண்டில் மின்னல் வெட்டி மறைந்தது.

இருந்தும் அவள் வாய் மொழி கேட்க விருப்பம் கொண்டு

“கேட்டதுக்கு பதில் சொல்லு யது” என்றவனின் குரல் அவனது தானா என்று வியக்கும் அளவுக்கு மென்மையிலும் மென்மையாக ஒலித்தது.

அதற்கு வாய் மொழி பதில் சொல்லாது அவளது முகத்துக்கு நேர் எதிர் இருந்த அவனது பரந்த மார்பில் அழுத்தமாக இதழ் பதித்து கூடலுக்கு முதல் அச்சாரம் இட்டாள்.

என்றுமே அவள் மட்டுமே கட்டி ஆளக்கூடிய அவனது உணர்வுகளை, அவளது சித்தம் போல அடக்கி ஆண்டு கொண்டு இருந்தாள் பெண்ணவள். அதிலும் மென்மையை கைவிட்டு வன்முறையில் இறங்க தயாராகி ஒரு வீராங்கனையின் ஆவேசத்துடன். இதுவும் போர் தான்.
அவனை மஞ்சத்தில் வீழ்த்த துடிக்கும் போர். அவனிடமே வீழ்ந்து போக துடிக்கும் போர்.

அதன் பின் செயலை தனதாக்கி கொண்டவன் அவளை கையில் ஏந்தி பால்கனியில் இருந்த மஞ்சத்தை நாட, அவளோ வெட்கி சிவந்த முகத்துடன் “இங்க இல்லை உள்ளே” என்றாள் நாணம் மேலிட.

புன்னகையுடன் திரும்பியவன் பார்வையில் வெகு அருகே பௌர்ணமி நிலவு தொட்டு விடும் தூரத்தில் பட்டது. அதன் ஒளிக்கீற்று இரவை பகலாக மாற்றி கொண்டு இருக்க, இடவலமாக தலை அசைத்து அவளது கோரிக்கையை மறுத்தான். நிலா முற்றத்தில் அவனது முழுமதியுடன் ஒன்றென கூட அபிலாஷை கொண்டு மஞ்சத்திலு சரிந்தான். அங்கே பூக்களின் சுகந்தத்தில், முல்லை பந்தலின் ஊடாக வெளிப்பட்ட முழுமதி ஒளியில் அவனது முதல் அச்சாரம் அவளது பிறை நூதலில் தொடங்கியது.

எப்போதோ நாணம் விடை பெற்று சென்றிருக்க, பல வருடங்களாக கட்டி வைத்த உணர்வுகள் கட்டவிழ, ஆவேச தழுவல்களும், மூர்ச்சையாகும் இதழணைப்பும் அடுத்த கட்டத்திற்கு இழுத்து சென்றது.

நடந்தேறும் நிகழ்வு கனவோ என்று கூட அச்சம் வந்து போனது இருவருக்கும். பல இரவுகள் கனவில் கூடி விடிந்ததும் தொலைத்த கனவை தேடும் அவலம் தொடர்கிறதோ என்று சந்தேகம் எழும் போது எல்லாம் நகக்குறி ஆழ்ந்து பதிந்தது இருவரின் மீதும். கனவல்ல அழகிய நிஜம் என்று உணரும் நேரம் கண்களில் வழிந்தோடும் கண்ணீர் இருவருக்குமே பொதுவானது. யார் சொன்னது பெண்ணுக்கு மட்டுமே கண்ணீர் சொந்தமென்று.

இத்தனை வருடம் அவளை தேடி வராது போனானே என்ற கோபம் எழும்போது அவளது பல் தடமும் நகக்குறியும் ஆழ பதிந்து அவனுக்கு வலியை கொடுக்க, அதை புரிந்து கொண்ட அவளவன் பொறுத்து கொண்டான். அவளுக்காகவே பிரம்மச்சர்யம் காத்து தனித்து இருந்தது நினைவில் எழும் போது அவள் செய்த காயத்திற்கு அவளே மருத்தாகி போனாள். நோயும் அவனே மருந்தும் அவனே என்று அவனை கொள்ளையடித்தாள் அவனின் காதல் அரக்கி. ஆக மொத்தம் சுனாமியாக சுழற்றி அடித்து அவனை தன்னுள்ளே சுடுட்டி கொண்டாள்.

பெண்ணவள் யாழாக மாற, அதை மேவும் விரல் அவனாக மாறி ராகங்களில் ஆலாபனையின் முடிவில் அவளுக்காக கட்டிக் காத்த பிரம்மச்சர்யத்தை அவளிடமே தொலைத்திருந்தான்.

அந்த அழகிய தோல்வி அவனுக்கு நிறைவை கொடுத்தது. அவளது நெற்றி முட்டி மூச்சு வாங்கும் நேரம் அவனது கண்களின் கண்ணீர் அவளது கண்களின் ஓரம் கசிந்த கண்ணீரோடு கலந்தது.

ஆணவன் தன்னிலை மீள, பெண்ணவள் பொங்கி வரும் கண்ணீரோடு விசும்பலும் வெளிப்பட அதை அடக்கும் வழி தெரியாது அவனது தோளில் பல் பதிய கடித்து அழுகையை அடக்கினாள்.

அவனின் குழந்தையின் தாய் ஆயினும் இது அவளுக்கும் முதல் உறவு. அதுவும் கானலாக போனது கை சேர்ந்து நிகழும் முதல் சங்கமம். அத்தனை நேரம் சூராவளியாக சுழன்றவளின் உணர்வுகள் முடிவுக்கு வரும் நொடி அது கண்ணீராக வெளிவருவதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
அவளை அள்ளி எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டு அவளது கூந்தல் வருடி சமாதானம் செய்து கொண்டு இருந்தான்.

வேறு எதுவும் பேசி கொள்ள தோன்றவில்லை. வார்த்தைகளுக்கு அங்கு தேவையும் எழ வில்லை. கடந்து வந்த கடினமான பாதை தூரத்தில் புள்ளியாக தெரிய வசந்தத்தின் வாசல் ஆயிரம் கதவுகள் கொண்டு திறந்து கொண்ட உணர்வு.
அவனுள் வாகாக பொறுந்தி கொண்டவள் நிமிர்ந்து அவன் முகம் பார்க்க அவனது கண்களும் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தது. அவனோ ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி சங்கேத மொழி பேச, அதை புரிந்து கொண்டவளுக்கு விடுபட்ட வெட்கம் மீண்டும் ஒட்டிக் கொண்டது. அவனது பரந்த மார்பில் முகம் புதைத்து கொள்ள இப்போது அவளை அடித்து வீழ்த்தி வெற்றி கொள்வது அவன் முறையானது. முழுமதி விடை பெரும் நேரம் களியாட்டங்கள் முடிவுக்கு வந்தது.
புலர்ந்தும் புலராத அந்த அதிகாலை நேரம் ஜன்னல் அருகே நின்று தன் அடர்ந்த கூந்தலை இடது தோள் வழி வழிய விட்டு அதில் சிந்தும் நீர் திவலைகளை துண்டில் துடைத்து கொண்டு இருந்தவளின் இதழ்கள் ரகசிய புன்னகையில் மலர்ந்து இருந்தது.

ஏதோ பாட்டை முணு முணுத்த படி சாட்டையாக கைகளில் அடங்காது திமிரிய ஈர கூந்தலை பின்னால் விசிற அது அவள் பின்னால் நின்று அவளையே ரசித்து கொண்டிருந்த ஆத்ரேயனின் முகத்தில் மோதி சென்றது.

அந்த ஈரக்கூந்தலின் ஸ்பரிசமும் வாசமும் அவனை கிறங்க வைக்க தன்னை கண்டு திகைத்து, மலர்ந்து , சிரித்து கடைசியாக நாணத்தை பிரதிபலித்த பெண்ணவளின் இடையூடு கையிட்டு இழுத்து அவளை அணைத்து கொண்டான்.

"அச்சோ குழந்தை தேடுவான். விடுங்க ......" என்றவளின் பதட்டம் ரசிக்க வைக்க மென்புன்னகை சிந்தி கொண்டே

"அவனை என் மாமனார் மாமியார் பார்த்துப்பாங்க. நீ முதல்ல மாமனை கவனி" என்றதோடு சற்று முன் அவன் முகத்தில் மோதிய ஈரக்கூந்தலில் கைகள் அலைய பெண்ணவள் இதழ் தீண்டினான்.

அரிச்சுவடி தெரியாத வரை தள்ளி இருக்க முடிந்தவனால் பாடங்கள் படித்து கற்பிக்க தொடங்கிய பின் ஒவ்வொரு நாளும் புதுப்புது பாடங்கள் படிக்க வைத்து கறாரான ஆசானாக மாறிப்போனான். பொய்யாக முரண்டு பிடித்த மானவியை சில நேரங்களில் கெஞ்சியும் பல நேரங்களில் கொஞ்சியம் காரியம் சாதிக்கும் கள்வன் ஆனான். இத்தனை வருடம் வீணான தருணங்களை எட்டிப் பிடிப்பது போல பாடங்களின் எண்ணிக்கையும் நேரமும் கூட அவனுக்கு இணையான வேகமும் மோகமும் கொண்ட மெல்லிடையாள் அவனை ஆகர்ஷித்தாள்.

நாளும் பொழுதும் இதுவரை அவர்களிடம் இருந்து பறித்த சந்தோஷங்களை எல்லாம் கணக்கின்றி வாரி வழங்க மாதங்கள் உருண்டோடியது.

இது வரை இல்லாத மாற்றம் ஆத்ரேயனிடமும் யசோவிடமும் பார்த்த மாத்திரத்தில் தெரிந்தது. இதுவரை வாழ்க்கையை தொடங்காமல் இருந்தவர்கள் தாம்பத்தியத்தின் தாள் திறந்து உள்ளே நுழைந்ததை மலரின் பொற்றோர் இவர்களின் பார்வை பரிமாற்றங்கள் மூலம் கண்டு கொண்டனர்.

ஆத்ரேயன் கண்களில் வழிந்த காதல் இதுவரை தங்கள் மகளிடம் வெளிப்பட்டு அவர்கள் கண்டது இல்லை என்ற நிதர்சனம் அவர்களின் முகத்தில் அரைந்தது. ‘அப்போ இவரு மலரை காதலிக்கவே இல்லையா? இல்லை மலரை விடவும் இந்த புள்ளை மேல ஆசை வச்சு இருக்காறா? அது எப்படி சாத்தியம்? ஏழு வருசம் கூட வாழ்ந்து ஒரு பிள்ளையும் பெத்து கொடுத்த மகராசி மேல காதல் இல்லாமல் போகலாம்?’ என்று கட்டுக்கடங்காத கோபம் வந்த போதும் அதை காட்டும் வழி தான் இல்லாது போனது.

அதனால் ஜாடையாக யசோ பல பேச்சுகளுக்கு ஆளானாள்.

“ஹும் வேலைக்கு வரதுகள் எல்லாம் தளுக்கி குலுக்கி வீட்டுக்காரி ஆய்டுதுங்க. ஆண்டவன் கொட்டி கொடுத்த அழகை சரியா பயன் படுத்த தெரிஞ்ச சென்மங்க. எல்லாம் காலக்கொடுமை” என்று ஜாடை பேசுவார்.

முத்துக்கருப்பன் மதுரைக்கு மில் வேலையாக செல்ல வேண்டும் என்று கூறினால் “நீங்க போய்ட்டு வாங்க. புள்ளையை விட்டுட்டு நான் வரமாட்டேய்ன். புள்ளைக்காக வேண்டி கலியாணம் கட்டின மாதிரி இல்லை இங்க நடக்கறதை பார்த்தா” என்று அவளை ஓரக்கண்ணால் பார்த்து பதில் கூறிவார்.

இது எதையுமே ஆதியின் செவிக்கு அவள் எடுத்து சென்றது இல்லை.

பல வருடங்களுக்கு பின் அவனை அத்தனை மகிழ்ச்சியாக பார்க்கிறாள். அதில் பானக துரும்பாக எதுவும் அவனை சிறிதளவு கூட உறுத்தி விட கூடாது என்று மிக கவனமாக இருந்தாள்.

ஏற்கனவே அவளிடம் பித்தாகி இருந்தவனுக்கு இப்போது எல்லாம் எங்கும் யது மயம். கணவனின் காதல் முற்றும் முழுதாக அவளுக்கே அவளுக்கு என்று ஆராதிக்கும் கணவனின் செயல்கள் பெண்ணவளை எப்போதும் நாணம் சுமந்த முகத்துடனே இருக்க வைத்தது. அது ஏற்கனவே அழகியானவளை மேலும் அழகாக காட்டியது.

முத்துக்கருப்பனுக்கு அது அறுவடை நேரம் ஊரில் பொங்கல் வர இருப்பதால் மதுரையில் பத்து நாட்கள் வேலை இருப்பதாக கூறி விட்டு செல்ல பேச்சியம்மாளும் பேரனை அழைத்து கொண்டு அவருடன் சென்றார்.

யசோவுக்கு குழந்தையை பிரிந்து பத்து நாட்களா என்று துக்கமாக இருந்தது. ஆனாலும் அடிக்கடி நடப்பது தான் என்று பொறுத்து கொண்டாள்.

வள்ளியம்மையையும் உடன் அழைத்து சென்று இருந்தனர். அதனால் அவ்வப்போது யசோவுக்கு அழைத்து குழந்தையை பற்றி கூறிவாள் என்று நிம்மதி கொண்டாள்.

வீட்டில் யாரும் இல்லை என்று அன்று விரைவில் வந்தவன் அவளிடம் ஒரு புடவை பெட்டியை கொடுத்து உடுத்தி வர சொன்னான்.

வெண்பட்டில் முழுதும் தங்க நிற சரிகையால் நெய்யப்பட்ட புடவை.

அழகாக மடிப்பு வைத்து உடுத்தி கொண்டவள் தளர பின்னிய கூந்தலில் சரம் சரமாக மொட்டாக இருந்து மலர தொடங்கிய மல்லிகை சூடி கிளம்பி வந்தாள்.

அவனும் வெள்ளை வேட்டி சட்டையில் கிளம்பி வந்திருந்தான். ஆண்மையின் இலக்கணம் இவனோ என்று எண்ணும் வகையில் இருந்தவனை கள்ளத்தனமாக ரசித்தது அவள் விழிகள்.

அவனோ கள்ளத்தனத்திற்கு இடம் இன்றி அவளை பார்த்த நொடி கண்களில் வழமை போல அப்பட்டமாக கிறக்க பார்வை பார்த்து வைக்க, முழங்கை கொண்டு அவனது விலாவில் இடித்தவள் “எங்கே போறோம்?” என்றாள் அவனது பார்வையின் தாக்கம் தந்த மெல்லி மின்சார அலைகளை மறைத்தபடி.

“போனதும் நீயே தெரிஞ்சுக்கோ” என்று அவளை அவன் அழைத்து சென்றது கடலுக்குள்.

ஆம் அவனது சற்று உயர்தர யாட் என்று அழைக்கப்படும் சொகுசு படகில் கடலுக்குள் அழைத்து சென்றான்.

இது வரை மீன் பிடி படகு பல நூறும், சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்து கப்பல்கள் இருந்தாலும் இப்படி குடும்பத்துக்காக தனிப்பட்ட சொகுசு படகு வாங்கியது இதுவே முதல் முறை. அவளுக்காக பிரத்தியேகமாக வாங்கிய படகு.

“அழகா இருக்கு அத்து” என்றாள் படகின் ஒவ்வொரு இடமாக வருடியபடி.

மென்னகையுடன் அவளது ரசனையை ரதித்து கொண்டிருந்தான்.

இரண்டு தளங்கள் கொண்ட குட்டி படகு அது.
முதல் தளத்தில் நின்று அமைதியான கடலை ரசித்து கொண்டு இருந்தாள். தூரத்தில் ஆதவன் புள்ளியாக மறைய நிலாமகள் மேலே எழுந்து இரவை ஆட்சி செய்ய துவங்கி இருந்து முன் இரவு நேரம்.

சுற்றி கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல். பல வருடங்களாக மனதில் இருக்கும் பாரத்தை மடி தாங்கும் அன்னையாக அவனை ஏந்தி கொண்ட கடல் அன்னையவள், இப்போது அவனது முற்றும் முழு மகிழ்ச்சியை தனது ஆர்பாட்டம் இல்லாத அமைதியான தாலாட்டும் அலையாய் நின்று ரசித்து இருந்தாள்.
வானம் எங்கும் நட்சத்திர பொட்டுகள் பளிச்சிட, பாதி தேய்ந்த நிலா கூட முழுமதிக்கு ஒத்த அழகாக காட்சி அளித்தது அவனது முழுமதி அவனின் கைகளுக்குள்ளே இருக்கையில்.

படபடத்த புடவையை இழுத்து பிடிக்க முயன்று தோற்று கொண்டு இருக்க இடையில் அழுந்த பதிந்தது அவனது கரங்கள்.

மௌனம் சில நேரங்களில் அழகு. சில வேளைகளில் அழகிய அவஸ்த்தை. அப்படி ஒரு அழகிய அவஸ்த்தை ரசாயன மாற்றங்களை அழகாக நிகழ்த்தி கொண்டு இருந்தது அந்த அடர்ந்த மௌனம்.

ஏதோ பேச வேண்டுமே என்பதற்காக "இங்க அடிக்கடி வருவிங்களா அத்து?" என்றாள் அவனது கைகளின் ஜாலம் கொடுத்த நடுக்கத்துடன்.

தோள் வழி வழிந்திருந்த மல்லிகை சரத்தை விலக்கி தோள் வளைவில் ஆழ இதழ் பதித்து "ஹம்ம் அடிக்கடி. உன்னை மறக்க முடியாமல் சரக்கடிக்க. நிறைய தடவை அப்படியே கல்லை கட்டி கடல்ல இறங்கிட்டா என்னன்னு எல்லாம் தோன்றி இருக்கு" என்று தொடர் முத்தங்களுக்கு நடுவே கூறி முடிக்க,அத்தனை நேரம் அவனது கையின் ஊர்வலத்தை தனது கைகள் கொண்டு தடுக்க முயன்று நெளிந்து கொண்டு இருந்தவள் அசைவின்றி நின்றாள்.

அப்போது தான் உதிர்த்த வார்த்தைகள் நினைவு வந்து மானசீகமாக தலையில் அடித்து கொண்டு சட்டென்று அவளை திருப்பி அதே வேகத்தில் அவளது செந்தாமரை வதனத்தை கைகளில் ஏந்தி இருந்தான். முற்றும் முழுதாக அவன் மீது சரிந்திருந்தாள்.

“நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன் தானே அத்து? இப்போ கூட நான் பேசின பேச்சை எப்படி மறந்து என்னை இந்த அளவுக்கு காதலிக்க முடியுது? நான் அப்போ சொன்ன மாதிரி பணம் தான் எனக்கு முக்கியம், அது உங்க கிட்ட அதிகம் இருக்கறதால இப்போ உங்களை காதலிக்கறேனோன்னு சந்தேகம் வரலையா?” என்று விம்மினாள்.

அவளது நெற்றியில் தட்டி “லூசாடி நீ? அப்படி இருந்தா நீ உன்னை தேடி வந்த நல்ல வாழ்க்கை எல்லாம் வேண்டாம்ன்னு ஏன் ஒதுக்கின? அவங்க ரெண்டு பேரும் கூட பணக்காரங்க தான். இருந்தும் வேணாம்ன்னு ஒதுக்க காரணம் என் மேல இருந்த காதல் டி. என்னை விட என் பத்தினி பெண்ணோட காதல் காணக்கிடைக்காதது செல்லக்குட்டி” என்றான் கர்வமாக. தொடர்ந்து
“ மலரும் நானும் கணவன் மனைவியா தான்
வாழ்ந்துட்டு இருந்தோம்ன்னு தானே நீ நினைச்ச? அந்த நினைப்பு உன்னை எவ்வளவு துடிக்க வெச்சு இருக்கும்? இருந்தும் குழந்தை பெத்து கொடுத்துட்டு போக தானே வந்த நீ? எத்தனை வலியை தாங்கி இருந்திருப்ப? எல்லாத்தையும் தாங்கினது எனக்காக தானே?” என்றான் உணர்ந்து.

“மலர் இறந்த அந்த ஒரு வருஷம் எனக்கு உன் மேல கோபம் இருந்தது தான். சொல்லப் போனால் அது உன்னிடம் மட்டும் இல்லை நம்ம ரெண்டு பேரிடமும் இருந்த கோபத்தின் வெளிப்பாடு தான் டி. நான் நிச்சயம்ன்னு தெரிஞ்சு அந்த உண்மையை ஏத்துக்க முடியாமல் அது நடந்ததா இல்லைன்னு தெரிஞ்சுக்காமல் இருந்தது என்னோட தப்பு. அந்த கிழவி பேசுன பேச்சுக்கு அதை நாலு அப்பு அப்பாமல் என்னை வந்து திட்டினது கூட பரவாயில்லை ஆனால் என்னோட தன்மானத்தை சீண்டும் விதமா பேசினது உன்னோட தப்பு. காதல்ல ஏது தன்மானம்? அதை தூர போட்டுட்டு உன் கிட்ட வந்து கால்ல விழுந்து இருக்கனும் நான். அதை செய்யாமல் விட்டது என்னோட தப்பு. என்னோட டைரியை படிச்சும் என்னை விட்டு விலகினது உன்னோட தப்பு. ஆமாம் அப்போ இருந்த சூழ்நிலையில் நான் உன்னை மோசமா பேசி இருந்திருப்பேன் தான். ஆனால் நீயும் அதே அளவு என்னை நான் தவறே செய்யாமல் பேசின தானே? அதே மாதிரி நான் பேசி இருந்தா தாங்கி இருக்க மாட்டியா? கூடவே இருந்து என்னோட கோபத்தை தாங்கி, இல்லைடா மடையா, உன்னோட அம்மாச்சி பேசின பேச்சு தான் காரணம். எனக்கும் உன் மேல காதல் தான்னு புரிய வெச்சு இருந்திருக்கனும். அதை விட்டுட்டு பணத்துக்காக தான் நீ வந்தன்னு நான் பேசிடுவேனோன்னு பயந்து என்னை விட்டுட்டு போனது தப்பு. இப்படி மாத்தி மாத்தி தப்பு பண்ணி நம்ம இழந்தது எவ்வளவு?” என்று அவன் கேட்கும் போது தான் அவனது கோபத்தில் இருந்த நியாயம் புரிந்தது.

அவன் தொடர்ந்து “இதில் நடந்து ஒரே நல்ல விஷயம் மலர். அந்த தேவதையோட அறிமுகம். என்னை பக்குவப் பட்ட மனுஷனா மாத்திச்சு. காரணங்கள் இன்றி காரியங்கள் இல்லைன்னு சொல்லுவாங்க. நம்ம பிரிவு மலரோட அறிமுகத்துக்காகவும் அவளோட ஆசைகளை நம் மூலம் நிறைவேற்றவும் தான்” என்று கூறி ஒரு நெடு மூச்சை ஆழ்ந்து வெளியேற்றினான்.
சற்று நேரம் மௌனமாக இருந்தவன் உள்ளுக்குள் மலர் மனதளவில் அனுபவித்த துக்கங்களை நினைத்து பார்த்தான்.

“பெண்கள் எல்லாம் பாவம் டி. சமுதாயத்தில் எத்தனை தளைகள், எத்தனை ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக வேண்டிய நிலை? அவளோட வலி பெரிசு யதும்மா. எனக்கு பிள்ளைதாய்ச்சி மாதிரி பெரிய வயிறு வேணும். நானும் குழந்தையை சுமக்கறேன்னு ஊருக்கு காட்டனும்ன்னு ஆசையா இருக்கு மாமான்னு அவ சொன்னப்போ நான் நிஜமாவே துடிச்சு போய்ட்டேன் டி. அவளோட தவிப்பை போக்க என்ன வேணும்னா செய்யலாம்ன்னு தான் வாடகை தாய் மூலம் பிள்ளை பெத்துக்க சம்மதம் சொன்னேன். அதுவும் சிங்கப்பூரில் இருந்து சினிமாவில் பயன்படுத்தும் சிலிக்கானில் செஞ்ச வயிறு போன்ற குஷன் வரவழைச்சு, அவங்க அப்பா,அம்மா ஊர் உலகம்ன்னு அவ மாசமா இருக்கறதா நம்ப வச்சு. அவ ரத்த சோகைக்கு சாப்பிடும் மாத்திரையை கர்ப்பகால மாத்திரைன்னு அவங்க கிட்ட பொய் சொல்லி இன்னும் நிறைய செய்ய காரணம் அவளோட வலி தான். அவ என்னோட வாழ்க்கையின் முக்கிய அங்கம் யது. அவளோட அன்பு என்னுள் இரண்டர கலந்த ஒன்று. என்றைக்குமே மலர் நம்மோட முதல் குழந்தை தான். அவள் இல்லைன்னு நான் நினைக்கவே இல்லை. இங்க தான் என் கூடவே இருக்கா.
நம்ம பிரிவு அவளோட கொஞ்ச வருஷ சந்தோஷத்துக்காக. அதனால் இனி அதை பற்றி பேச வேண்டாம் டா.நீயும் இப்படி லூசுத்தனமா பேசக்கூடாது” என்று கட்டளையிட்டான்.

“சரி பேசலை அப்பே வேற என்ன செய்ய?” என்றாள் அவனது சட்டை பொத்தான்களை திருகி கொஞ்சும் குரலில்.

“என்ன பண்ணனும்ன்னு என் கிட்ட கேட்கற? அப்போவும் சரி இப்போவும் சரி நீ கணக்கு பண்றதில் மக்கு தான் டி” என்று சிரித்தவனை தள்ளி விட்டு திரும்பி நின்று கொண்டாள்.
அவளது கோபத்தை கொஞ்சி கெஞ்சி போக்கும் பொறுமை இன்றி அவனது
வேட்டியை மடித்து கட்டி ஊடல் கொண்டு திரும்பி நிற்பவளை அள்ளி தோளில் துண்டு போல இட்டு தூக்கி கொள்ள “ஏய் அத்து.. விடு விடு என்னை” என்ற அவளது ஆரவாரம் கடல் அலையின் ஓசையில் அடங்கியது.
படகின் மேல் தளத்திற்கு வந்தவன் அங்கிருந்த மஞ்சத்தில் அவளை இறக்கி விட்டான். வெண் பட்டு மெத்தை விரிப்புடன் சுற்றியும் வலை துணியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது அந்த மலர்மஞ்சம்.
அலைகடல் தாலாட்ட வெண்பட்டு மஞ்சத்தில் மங்கையவள் உடனிருக்க புதுப்புது கவிதைகள் தோன்றியது அந்த கவிஞனுக்கு.
அந்த கவிகள் யாவும் வார்த்தையாக வடிவம் பெறாது அவனது செயல் வழி அவள் தேகத்தில் எழுதி கொண்டு இருந்தான். மஞ்சள் நிறம் கொண்ட மேணியாளை செங்காந்தள் மலராக உறு மாற்றி அவளுக்கு ஆடையாக மாறிப் போனான்.

கொலுசொலி, வளை ஒலி ராகமாக அரங்கேறிய ஆனந்தலகரியை கண்டு கார்மேக வானமும், ஆர்பரிக்கும் ஆழியும், தூரத்தே தெரிந்த நட்சத்திர புள்ளிகளும் கூட வெட்கம் கொண்டு கண் மூடி கொண்டது. நிலவு மகள் நாணி விடை பெரும் நேரம், உதயனின் கதிர்கள் பூக்கும் வேளை, வெள்ளியின் வரவு அந்த கூடலில் உறுதி செய்யப்பட்டது.

நாட்கள் அமைதியாக அதே நேரம் மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர்களை நிறுத்தி வைத்து அழகு பார்த்தது.

மகிழ்ச்சியை கூட்டும் விதமாக அடுத்த புதுவரவு உதயமாகி அவளை மேலும் மேலும் மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது.

அன்று உடற்பயிற்சி முடித்து வந்தவனுக்கு குடிக்க சத்துமாவு கொடுத்து விட்டு நிமர்ந்தவள் தலை சுற்றி அவன் மடிமீதே அமர்ந்து கொண்டாள்.

அவளின் உடல் நிலை பற்றி அறியாது அணைத்து கொண்டவன் “என்ன மேடம் அதிசயமா காலங்கார்த்தால மாம்ஸ் மேல இம்புட்டு கரிசனம்.” என்று அவளது கன்னம் கிள்ளியவனின் மீதே மயங்கி சரிந்தாள்.

பதறி அவளை தாங்கியவன் “ஏய் யது, விளையாடாத டி. எழுந்திரு ப்ளீஸ். ஏய் யது” என்று அவளது கன்னத்தை தட்டி எழுப்ப முயன்றான். மயக்கம் தெளியாது தொய்ந்தவளை அள்ளி வந்து படுக்கையில் கிடத்தி மயக்கம் தெளிவிக்க முயல, முகத்தில் பட்ட குளிர்ந்த நீரில் அவளது மயக்கம் தெளிந்தது. அவள் கண் முன்னே தெரிந்த அவனது கலவரமான முகத்தை கண்டு தடுமாறி எழுந்து அமர்ந்தாள்.

“டாக்டர் கிட்ட போகலாமா? காலையில சாப்டியா? இன்னிக்கு விரதம் அது இதுன்னு எதுவும் இருக்கியா? சொல்ற பேச்சே கேட்கறது இல்லை. நேத்து நைட் கூட ரொம்ப சோர்ந்து இருந்த. கிளம்பு டாக்டர் கிட்ட போகலாம். சுஜி இருக்காங்களான்னு கேட்கறேன்” என்று படபடத்தவனை நிதானமாக பார்த்தவள்

“சுஜி அக்காவை கட்டாயம் பார்க்கனும்? உள்ளுக் குள்ள உங்க ரெண்டாவது ஜூனியர் எப்படி இருக்காங்க ன்னு கேட்டுட்டு வரலாம்.” என்று அவள் கூறியதும் அவள் சொல்ல வருவதை புரிந்து கொள்ள அவனுக்கு முழுதாக ஒரு நிமிடம் எடுத்தது.

புரிந்த பின் முதலில் திகைப்பு, பின் மகிழ்ச்சி அளவுக்கு அதிகமான மகிழ்ச்சி பின் அவளது உடல் நிலையை நினைத்து அச்சம் என்று பல உணர்வுகள் மாறி மாறி வந்து போனது. சட்டென்று அவளை இழுத்து அணைத்து கொண்டவன் அவளது உச்சியில் கன்னம் பதித்து “எப்படி டி? இ..இது கவனமா தானே” என்று திகைத்தவனின் மார்பில் கை வைத்து தள்ளி விட்டு அவனை கண்டு முறைத்தவள்
“ ஏன் கேட்க மாட்ட நீ? கடலுக்குள்ள கூட்டிட்டு போய் தாலாட்டுதே வானம், தள்ளாடுதே மேகம்ன்னு ரெண்டு நாள் விடாமல் கதை பேசிட்டு இப்போ வந்து கேள்வி கேளு” என்று சடைத்து கொண்டாலும் முகம் முழுதும் நாணம் பூத்திருந்தது.

அதில் வாய் விட்டு சிரித்து கொண்டே அவளை மீண்டும் கைக்குள் இழுத்துக் கொண்டவன்
“உன்னோட ஹெல்த் எப்படி இருக்குன்னு தெரியலை. பயமா இருக்கு. நான் தான் கொஞ்சம் கவனமா இருந்திருக்கனும் ” என்று பயத்தில் வந்து விழுந்தது வார்த்தைகள்.

“அந்த விபத்து நடந்து ரெண்டு வருஷம் ஆச்சு. ரெண்டு மாசம் முன்னாடி போய் செக் பண்ணின போது கூட அக்கா நார்மல் ன்னு தான் சொன்னாங்க. அடுத்த குழந்தை பற்றி முடிவு செய்யலாம்ன்னு சொன்னாங்க. அப்புறமும் ஏன் பயம் அத்து?” என்று சமாதானம் செய்ய தொடங்கினாள்.

சுஜியை பார்த்து கர்ப்பத்தை உறுதி செய்ததோடு அவளது உடல் நலனை பற்றி கேட்டு அறிந்து கொண்டதும் தான் புதுவரவு பற்றிய செய்தியை அவனால் முழுமனதுடன் உள்வாங்கி பூரிக்க முடிந்தது.

“அவ நல்லா தான் இருக்கா. கவலைப்பட ஒன்னும் இல்லை. வெய்ட் தூக்க வேண்டாம். அதோட மற்ற விஷயத்திலும் கவனம் தேவை.” என்று கூறி அனுப்பி வைத்தாள்.

அவர்கள் வெளியே சென்றதும் தோழியை நினைத்து ஒரு நொடி கண்கள் கரித்தாலும் அவள் ஆத்மா இப்போது மகிழ்ந்திருக்கும் என்று திடமாக நம்பினாள்.
அதே மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்து விஷையத்தை கூற வள்ளியம்மை மட்டுமே உண்மையான மகிழ்ச்சயை வெளிப்படுத்தினார். மலரின் பெற்றோரின் முகம் சற்று சுருங்கி தான் போனது.

ஆனால் ஆத்ரேயன் அதை எல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை. முந்தைய பிரசவத்தில் அவள் பட்ட துன்பங்கள் அனைத்துக்கும் சேர்த்து வைத்து இந்த முறை அவளை கையில் ஏந்தி பார்த்து கொள்ள வேண்டும், பிள்ளை வயிற்றில் உருவானது தெரிந்த நொடி முதல் அதன் வளர்ச்சியில் ஒவ்வொரு நொடியும் தொட்டு தடவி அதனுடன் பேசி மகிழ வேண்டும் என்று தரையில் கால் பாவாமல் திளைத்து கொண்டு இருந்தான்.

மூன்று வயது ருத்ரன் யசோவிடம் தாவி வந்து தூக்க சொல்ல ஆத்ரேயன் அவனை தூக்கி கொண்டு “ருத்து குட்டி சமத்தாச்சே. அம்மா வயித்துல பாப்பா இருக்கு. இப்படி இனிமே ஓடி வந்து எல்லாம் தூக்க சொல்ல கூடாது” என்று கூற அந்த மூன்று வயது பாலகனின் முகம் சுருங்கியது. அதை அந்த நேரம் அவன் கவனிக்க தவறினாலும் தாயின் பார்வையில் இருந்து தப்பாது. மருத்துவர் எச்சரிக்கையும் மீறி ருத்ரனுக்காக கை நீட்டினாள்.

அவளிடம் போக ஆர்வம் காட்டிய குழந்தையை அணைத்து கொண்டு “உன் உடம்பு ஆரோக்கியம் இப்போ ரொம்ப முக்கியம் டி. ருத்து சமத்து பையன். சொன்னா கேட்டுப்பான்” என்று அப்போது சமாதானம் செய்து வைத்தான்.

இது மலரின் பெற்றோர் கவனத்திலும் பட்டு ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

அடுத்த ஒரு மாதம் முழுதும் வாந்தி, மயக்கம் என்று மசக்கை பாடாக படுத்தி எடுத்தது யசோதாவை. தேவை என்று வரும் வேளை தொழிலை கவனிக்க சென்றவன் மீதி நேரங்களில் அவளுடனே இருந்து பார்த்து கொண்டான்.

ஒரு நாள் நள்ளிரவு தாண்டியும் உறக்கம் வராது அவனது கை வளைவில் தலை சாய்த்திருத்து, அவனது விரல் பிடித்து வாய் ஓயாமல் கதை பேசி கொண்டு இருந்தாள். விரிந்திருந்த கூந்தலை வருடி கொண்டு அவளது பேச்சுக்கு செவிகளை மட்டும் கொடுத்து சிந்தனையை எங்கோ பதித்து இருந்தவனது கண்கள் சிவந்து கலங்கி கண்ணீர் சிந்த தயாராக இருந்தது.

அவனிடம் இருந்து பதில் வராது போகவும் அவன் மார்பில் தாடையை அழுத்தி அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் அவனது கலங்கிய கண்களை பார்த்து பதறி எழுந்து அமர்ந்து “எ..என்ன ஆச்சு அத்து?” என்று கேட்டது தான் தாமதம் அவளை இழுத்து அணைத்து கொண்டான். அவளது பின் கழுத்தில் சூடாக அவனது கண்ணீர் இறங்கியது.

“அச்சோ என்ன ஆச்சு?” என்று அவனது முகம் பார்க்க முயல அவனோ அவளை இறுக்கமாக அணைத்திருந்தவன் அவளை விலக மறுத்தான்.
“என்னன்னு சொல்லு அத்து எனக்கு பயமா இருக்கு” என்றவளின் கண்ணீர் குரலில் தான் தன்னிலை அடைந்தவன் கண்களை துடைத்து கொண்டு

“ருத்துவை சுமக்கும் போதும் இப்படி கஷ்டப்பட்டியா யதும்மா? அக்காவும் நினைவு இல்லாத நிலையில் அஸ்பத்திரியில் இருந்து இருப்பாங்க. நீ எப்படி டி தனியா? அந்த நிலமையில் நானும் நிறைய கஷ்டப்படுத்தி இருக்கேன் டி. நா..நான் எல்லாம் மனுஷனே இல்லை.” என்று புலம்பும் கணவனை தீர்க்கமான பார்வை பார்த்து

“நம்ம இதை ஏற்கனவே பேசி முடிச்சாச்சு. தப்பு ரெண்டு பேர் பக்கமும் இருக்கு. உங்க இடத்தில் வேற எவனும் இருந்தா ‘சர்தான் போடி, இப்போ என் கிட்ட கோடி கோடியா சொத்து வந்தாச்சு. அழகா படிச்சவளா என் தகுதிக்கு ஏற்றவளா கல்யாணம் செஞ்சு வாழ்ந்து காட்டறேன்னு’ சொல்லி சந்தோஷமா இருந்து இருப்பாங்க. இப்படி இத்தனை வருஷம் விரதம் காத்துட்டு இருந்திருக்க மாட்டாங்க. இனி இதை பத்தி பேச்சு வரக்கூடாது.” என்று விரல் நீட்டி மனைவி மிரட்டினாள்.
அவள் மடியில் படுத்து கொண்டு வயிற்றில் இருந்த பிள்ளைக்கு முத்தம் வைத்து “பாரு டா குட்டி அம்மா என்னை மிரட்டிட்டு இருக்கா. நீங்க சீக்கிரம் வெளிய வாங்க அம்மாவை நான் நீ அண்ணா மூனு பேரும் ஒரு கை பார்ப்போம்.” என்று கூறி கணக்கில் அடங்கா முத்தம் குழந்தைக்கு வைப்பதாக சொல்லி கொண்டு அவளை சிவக்க வைத்து கொண்டு இருந்தான்.

மூன்றாம் மாத தொடக்கத்தில் ஸ்கேன் செய்ய வேண்டும் என்று சுஜி சொன்ன காரணத்தினால் அன்று மருத்துவமனைக்கு கிளம்பி கொண்டு இருந்தனர்.

இரண்டு நாட்களாகவே யசோவின் முகம் சற்று களையிழந்து காணப்பட்டது. சோர்வுடன் இருந்தவள் அவனிடமும் தொட்டதற்கு எல்லாம் கோபம் கொண்டாள்.

மசக்கையின் பாதிப்பு என்று மிக மிக மென்மையாகவே பெண்ணவளை கையாண்டான்.

சுஜியின் அறைக்கு சென்றதுமே மனைவியின் சோர்ந்த நிலையை பற்றி சொன்னவன் “என்னன்னு பாருங்க சுஜி. எனக்கு பயமா இருக்கு” என்றதும் அவனை பொறுமையாக இருக்க சொல்லி விட்டு யசோவை முழுதாக சோதித்து பார்த்த சுஜியின் முகத்தில் மலர்ச்சி. அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள நினைக்கும் போதே அவளை முந்திக் கொண்டு

“எனக்கு எந்த குழந்தை வேண்டாம் சுஜிக்கா. இது..இதை கலைச்சுடலாம்.” என்றாள் கண்ணீர் குரலில்.

அதுவரை மனைவியின் நலனை நினைத்து அச்சத்தில் இருந்தவனின் முகம் வெளிறி இறுகியது.

தொடரும்

AIbEiAIAAABECN7zudnPqqeIgQEiC3ZjYXJkX3Bob3RvKig0NDFlMTY3OTY3NDE5YmE1M2U1MmUzMDk1ZTRlNDU1MjcyYTIzNjQ1MAHTqD2yYiPKVqCPmse-9hONv7K_Sw
ReplyForward
Ja
 
Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top