Priyadharshini.S
Active member
View attachment 111
கதையின் நாயகன் :
"நானிலன்"
காதலின் வலி
இதயத்தில் கூடிப்போக
மருந்திடும் தடமறிந்தும்
மனதில் உறைந்திட்டவளுக்காக
கற்பாறையென இறுகி
விலகி நிற்பவன்...
கதையின் நாயகி :
"சிவரஞ்சனி"
மனதோடு உறைந்து
உயிரில் வேரிட்ட
உயிரானாவனின்
வெற்று பார்வையில் மடிந்து
அவனின் விலகளில் சருகாகி
இதயத்தின் உயிர்வலியை
காரணமின்றி இன்பமாய் ஏற்பவள்...
மற்ற கதாபாத்திங்கள்....
"கபிலன்....." நாயகனின் உறவென்றாலும் அவனின் மன சஞ்சலங்களை அகற்றி... எந்நிலையிலும் துணை நின்றிடும் தோழன்.
"நந்தினி....." அண்ணி என்ற உறவிற்கு அன்னையாகிப் போனவள்.
"பாண்டியம்மாள்....." கௌரவம் என்ற ஒற்றை வார்த்தைக்காக தன் மகளின் மாங்கல்யத்தினை அறுத்திட்ட உன்னத தாய். கடவுள் தோற்றம் கொண்ட அரக்கி.
"மீனலோச்சனி @ ஒமியா...." நானிலன் மற்றும் சிவரஞ்சனியின் வாழ்க்கையினையே தடம் புரள செய்திடும் புயல்.
"அழகேசன்......" நாயகனின் தந்தை,
"பத்மா......" தாய்.
"அமுதரசி....." நாயகியின் தாய், நாயகனுக்கு அனைத்தும் இவரே.
"கண்ணன்..." தந்தை, தனது மாமியாரின் சதியால் மரணத்தை பரிசாக பெற்றவர்.
"அமுதாம்பிகா, நாராயணன்..." கபிலனின் தாய், தந்தை. நாயகிக்கு வஞ்சகம் எண்ணும் நஞ்சு பாம்புகள்.
முன்னோட்டம் 1 :
என்னடா சொல்ற.....
சொன்னதையே எத்தனை முறை தான் சொல்வது... நானி தனது எரிச்சலை அப்பட்டமாக முகத்தில் காண்பித்தான்.
பத்மா தனது மகனின் கைகளை பிடித்துக்கொண்டு கெஞ்சினார். உனக்கு என்னப்பா ஆச்சு.. ஏன் இப்படியெல்லாம் பேசுற, எதுவாயிருந்தாலும் சொல்லுப்பா.. அவரது குரல் அழுகையில் தழுதழுத்தது.
"உன் காலில் வேண்டுமானாலும்...."
பத்மா....
தனது மனைவி செய்யப்போகும் செயலை ஊகித்தவராய் வீடே அதிர தன் மனைவியை அழைத்து தடுத்தார் அழகேசன்.
இது தான் உனது பதிலா....????
இறுதி முடிவு.....!!!
தன்னுடைய தந்தையின் கேள்விக்கு, எவ்வித தடையுமின்றி அழுத்தமாக விடையளித்தான்.
பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்தி நின்றிருந்த தனது மகனை உருத்து விழித்த அழகேசன்.. "எனக்கு மகன் என்று ஒருவன் பிறக்கவில்லையென நினைத்துக் கொள்கிறேன்." இனி என் மருமகளையும் சேர்த்து எனக்கு இரண்டு மகள்கள் எனக் கூறி... அங்கிருந்த அண்டா தண்ணீரை தன் தலையில் கவிழ்த்து... ஈரம் சொட்ட சொட்ட தன்னுடைய அறைக்குள் நுழைந்து படாரென்ற சத்தத்துடன் கதவினை அறைந்து சாற்றினார்.
சேலை தலைப்பினை வாயில் வைத்து அழுகையை அடக்கியவராய் தரையில் மடங்கி அமர்ந்தார் பத்மா.
அவரின் மனம் குமுறிக்கொண்டிருந்தது. சற்று நேரம் வரை எப்படியிருந்த வீடென.. ஒருமுறை தனது பார்வையை சுழற்றியவரின் மனம் கணத்துப்போனது.
வீடெங்கும் தொங்கிய வண்ண மலர்களின் தோரணம்... வாசலில் கட்டியிருந்த குலை வாழை மரங்கள்... அவ்வீட்டில் மிகச் சிறப்பாக, அனைவரும் வியந்து பார்த்த ஒரு திருமணம் நடைபெற்றது என்பதை பறைசாற்றியது. சுழன்ற அவரின் பார்வை ஓரிடத்தில் நிலைக்குத்தி நின்றது.
அங்கு பட்டுச்சேலை சரசரக்க, தலையில் சூடிய மலரின் நறுமணம் கூட மாறாது... கழுத்தில் புத்தம் புதிய தாலி மின்ன... கெண்டை விழிகள் கண்ணீரில் மிதக்க தலை கவிழ்ந்து நின்றிருந்தாள் சிவரஞ்சனி. அவளுக்கு அருகே தனது அண்ணனை கோப முகத்துடன் பார்த்தபடி சிவாவின் கைகளை இறுக்கி பிடித்திருந்தாள் நந்தினி.
நானி மற்றும் சிவா இருந்த கோலம் அவர்களுக்கு அன்று தான் திருமணம் நடந்திருக்கும் என்பதை உணர்த்தியது.
அழகேசன் உள் சென்றதும், நானி அமைதியாக நின்றிருந்தது சில விநாடிகளே..!!!! சில மணி நேரத்திற்கு முன்பு தன் மனைவியாக ஏற்றுக்கொண்டவளின் அருகில் சென்று, தனது வலிய கரத்தினை மெல்ல உயர்த்தி.. அவளின் கழுத்தருகே கொண்டு சென்றவன்.. "யாரும் எதிர்பாராத வண்ணம் தாலியை அறுத்திருந்தான்."
அதிர்ச்சியில் நந்தினியின் கண்களே அகல விரிந்தன என்றால்... "சில மணி நேரங்களே ஆயினும், அத்தாலியை உயிராய் மதித்த சிவாவோ மயங்கி சரிந்தாள்."
"கட்டிய கணவனின் கைகளினால் மாங்கல்யம் பறிபோகும் அவலம் அங்கு நிகழ்ந்தது."
மகளின் நிலையை எண்ணி சிறிதும் கலக்கமடையாமல் கல்லென இறுகி நின்றார் அமுதரசி.
தனது மகனின் செயலில் ஈரக்குலை நடுங்க வெடித்து அழுதார் பத்மா.
மயங்கி சரிந்தவளை தட்டி எழுப்ப முயற்சித்துக்கொண்டிருந்த தனது தங்கை நந்தினியிடம்.... உன் தோழி எழுந்தால் சொல்லிவிடு, அவளுக்கும் எனக்கும் எந்தவொரு சம்மதமும் இல்லையென... நெஞ்சில் ஈரமின்றி வார்த்தைகளை உதிர்த்தவன் அங்கிருந்து அகன்றான்.
**********************************
டியர் பிரண்ட்ஸ் உங்களுடைய கருத்துக்களை கீழே பகிர்ந்து கொள்ளுங்கள்.
நட்புடன் ?
பிரியதர்ஷினி. S