கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள
அலங்கார ரூபிணியே...
ஆயிரம் கண்ணுடையாளே..
உதிர்க்கும் சொற்களில்
இனிமையைக் கொண்டு
காமதேனுவாய் அனைவரின்
பசிப்பிணி நீக்குபவளே...
மஞ்சளும் குங்குமமும் பூசி
மங்களமாய் மணப்பவளே...
உன் பாதமடல் ஸ்பரிசிக்கும்
புண்ணியம் வேண்டுமம்மா...
உன் பூமுகம் காணுகையில்
வேறு இன்பம் வேண்டிடுமோ...
உன் இனியகானம் கேட்கும்போது
வேறு இசை தேடிடுமோ...
உன் கூந்தல் மலர்களின் சுகந்தம் தவிர்த்து வேறெதுவும் சுகித்திடுமோ...
உந்தன் அருள் இருக்கையில் பசியும்
தன்னை உணர்த்திடுமோ...
உன் மலர்க்கைகள் அருளும்
இன்பம் வேண்டுமம்மா...
அகிலம் காக்கும் தாயே
நீ அருள்வாயே..