JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

3-anamikaavagiya naan...!!

saaral

Well-known member
அனாமிகா - 3



சதீஷ் மற்றும் சிவா இருவரும் சேர்ந்து சொந்தங்களில் பலரை பிடித்து விசாரித்ததில் அவர்களுக்கு தெரிய வந்த விஷயம் "அந்த பொண்ணு கல்யாணம் நின்னு போனதுல இருந்து ஊரு பக்கம் வரதே இல்ல , முதல்ல அவ அம்மா தவறிட்டாங்க அடுத்து ஒரு வருசத்துல அவங்க பாட்டியும் தவறிட்டாங்க " இதே தான் அனைவரும் கூறினர் .



கூடுதல் தகவலாக அக்கம் பக்கத்தில் விசாரித்து இவர்களாக தெரிந்து கொண்டவை அவள் பெங்களூரில் ஆதி நடந்தும் பள்ளியில் மழலையர் வகுப்புகளின் தலைமை ஆசிரியராக இருக்கிறாள் . அவளிற்கு துணையாக அங்கு ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு ராஜன் இருக்கிறார் . இங்கு அனாமிகாவின் தமயன் நான் தொழில் தான் செய்வேன் என்று அனைத்தையும் செய்து பார்த்து கொண்டிருக்கிறான் .



இருபது நாட்கள் விடுமுறையில் வந்த மகன் இந்த முறை வீடு தாங்காமல் வெளியிலே சென்றுக்

கொண்டிருப்பது ஜெயாவின் மூளையை குடைந்தது . அவர் சிவாவிடம் கேட்டுவிட்டார் "ரெண்டு பேரும் என்னடா களவாணித்தனம் பண்றீங்க வீடே தங்கறது இல்ல ?" என்று .



"இல்லை பெரியம்மா எங்க கல்லூரி நண்பர்களை பார்த்தோம் அவர்களுடன் சற்று அதிக நேரம் போயிடுது அதான்" என்று சமாளித்து வைத்தான் சிவா .



தன் எதிரில் நின்று கொண்டிருந்த சதீஷை முறைதான் சிவா ..."சதீஷ் என்ன பண்ணப் போற ?"



"தெரியலை சிவா , எனக்கு தெரிஞ்சு அவ அம்மா உடம்பு சரி இல்லைன்னுதான் இருபது வயசுல கல்யாணம் பேசினாங்க .....இப்ப அவங்களே இல்லைனு ஆனப்பவும் இவ ஏன் இன்னும் கல்யாணம் செஞ்சுக்கலைனு புரியல ..." யோசனை நிறைந்த முகத்துடன் கூறினான் .



"நான் உன் கிட்ட ஒன்னு கேக்கவா ?" சிவா மிக தீவிரமாக கேட்டான் .



"கேளு "



"முன்னாடியே கல்யாணம் நின்னது அதிக வரதட்சணை பெரியம்மா அப்பறம் பெரியப்பா கேட்டதால் ...திரும்பவும் நீ அனாமிகா பின்னாடி போய் கல்யாணம் செய்ய நினைச்சாலும் அதே நடக்காதுன்னு என்ன நிச்சயம் "



"....." பதில் இல்லை சதீஷிடம் . சிவா கேட்பதும் சரி தானே என்று தான் அவனிற்கு தோன்றியது .



"ஏற்கனவே இரண்டு மாதம் கல்யாணம் நிச்சயம் வரை போனப்போ நீங்க பேசிட்டு இருந்தீங்க திரும்ப அதே மாதிரி ஆச்சுன்னா அந்த பொண்ணு உடஞ்சுட மாட்டாளா ?? ...ஏன் சதீஷ் அதுக்கப்பறம் பெரியம்மா எவ்வளவோ பொண்ணு பார்த்தாங்க ஏன் நீ சரினு சொல்லலை ?"



"தெரியல சிவா ....என்னால இன்னொரு பொண்ண நேர்ல போய் பாக்றதுல அவ்ளோ இஷ்டம் இல்லை ...சொல்லப்போனா அனாமிகா இடத்துல வேற பொண்ண வச்சு பார்க்க கூட தோணல" தெளிவாகவே கூறினான் சதீஷ் .



சிவா அசந்தே போய்விட்டான் ..இது பெரியவர்கள் பார்த்து ஏற்பாடு செய்யப்பட்ட சம்பந்தம் இருந்தும் இத்துணை பிடித்தம் இவனிடம் , ஒருவேளை அந்த பெண்ணும் அதான் திருமணம் செய்யாமல் இருக்கிறாளோ ? அவனின் மனதினுள் கேள்விகள் பல அணிவகுத்தன .



"சிவா நான் அவளை பெண் பார்த்துட்டு வந்ததுல இருந்து ரெண்டு மாசம் தினமும் பேசினோம் ...நேர்ல பார்க்க வரவே மாட்டா வரம்பு மீரியும் பேசமாட்டா ...ஆனால் அதுல ஒரு உணர்வு இருந்துச்சு டா ...என்னை எவ்ளோ பிடிக்கும்னு அவளோட பேச்சிலேயே புரிய வச்சா ...எனக்கும் அவள் இன்றியமையாதவளா மாறிட்டா ..ஒரு நாள் அவகிட்ட பேசாம இருந்தாலும் அவளை அவ்ளோ மிஸ் பண்ணேன் ..." மேலும் தொடர்ந்தான் அவன் .



"கல்யாணம் நின்னு போன நாளில் இருந்து அவளோட நம்பற்கு ட்ரை பண்ணினா நாட் இன் யூஸ் வருது ....ஒரு நாளை கூட முழுசா தள்ள முடியலை சிங்கப்பூர்ல உக்காந்துட்டு இங்க உடனே வரவும் முடியாம கொடுமை டா " தலை கோதிக்கொண்டு வருத்தத்துடன் வேறு பக்கம் திரும்பினான் .



"என்னோட உணர்வு பூரா அவளோட வாழப்போற வாழ்கை என்ன ஆரம்பிச்சுட்டேன் அந்த இடத்துல வேற பொண்ணு நினச்சு கூட பார்க்க முடிலை ...கண்டிப்பா அவளும் என்னை நினைச்சுட்டு தான் இன்னும் கல்யாணம் பன்னிக்கலைனு நினைக்கிறன் "



"நீ சொல்றது எல்லாம் சரி சதீஷ் ,திரும்பவும் ஒரு ஏமாற்றம் ,வலின்னு அந்த பொண்ணுக்கு கொடுத்திராத ...இன்னும் பத்து நாளுல நீ கிளம்பிடுவ நல்லா யோசிச்சு முடிவு செய் , இனி அனாமிகா தான் வாழ்கை அப்படினா பெரியம்மா பெரியப்பவை எதிர்த்து பேச வேண்டும் அதையும் யோசிச்சு முடிவு செய் " தன் நண்பன் மேலும் சகோதரன் என்ற கடமைக்கு எடுத்துக்கூறினான் சிவா .



...................................................



மேலும் இரண்டு நாட்கள் தனதறையில் அமர்ந்து சிவா சொன்னதை நன்றாக யோசித்தான் அவன் .



'ஒருவேளை அனாமிகா அப்படினு நான் முடிவிற்கு வந்தால் நிறைய எதிர்ப்புகள் வரும் ஏன் அவளே கூட இதை எதிர்த்து பேசலாம் ' எல்லா பக்கமும் யோசித்தான் .



'ஹ்ம்ம் நடப்பது நடக்கட்டும் இந்த முறை யார் வந்தாலும் பார்த்துக்கலாம் எனக்கு அனாமிகா தான் ....அம்மா அப்பாவை எதிர்த்து தான் இந்த கல்யாணம் அப்படினா நடக்கட்டும் ...' ஒரு தீர்மானமான முடிவிற்கு வந்தான் அவன் .



.................................................



"சிவா நான் பெங்களூரு போகனும் இங்க எப்படியாவது சமாளி " வேகமாக கூறி நகர்ந்தான் அவன் .



சிவா தான் மண்டை உடைத்துக்கொண்டான் ......என்னமோ சொல்லி சதீஷை தன்னுடன் பெங்களூரு அழைத்துவந்துவிட்டான் . இதற்கு நடுவில் இலக்கியாவின் மறு வீடு விருந்து கோவில் பூசை என்று ஜெயா அவர் கணவருடன் சென்றுவிட்டார் ஆகையால் சதீஷ் எந்த தடையும் இல்லாமல் கிளம்பினான் .



பெங்களூரு காலை ஏழு மணி ...



"சிவா இன்னைக்கு அந்த ஆதியை போய் பார்க்கலாம்னு இருக்கேன் " தயார் ஆகிக்கொண்டே பேசினான் சதீஷ் .



கட்டிலை விட்டு இன்னும் எழுந்திராத சிவா "ஏண்டா அவனை பார்த்து என்ன பண்ண போற ?" குழப்பமாக கேட்டான் .



"இல்லை சிவா அனாமிகா இப்ப அவனுக்கு தான் ரொம்ப கிளோஸ் ...மே பி அவன்கிட்ட இருந்து ஆரம்பிச்சா சரியாய் வரும்னு ஒரு யோசனை ...ஆதியை பற்றி முன்பே சொல்லிருக்கா அவளோட அண்ணனை விட ஆதி ரொம்ப நல்ல நண்பன் ,வெள் விஷர்னு "



"ஓகே நான் கிளம்பறேன் "



"ஆல் தி பெஸ்ட் டா சீக்ரம் கமிட் ஆகி எனக்கு ரூட் கிளியர் பண்ணு " மென்னகையுடன் கூறி வழி அனுப்பினான் சிவா .



பெங்களூர் காலை பதினோரு மணி ....



அந்த காபீ ஷாப்பினுள் எதிர் எதிர் இருக்கையில் அமர்ந்து இருந்தனர் சதீஷும் ,ஆதியும் .



என்ன வேண்டும் என்று கேக்க வந்த பணியாளரிடம் இரண்டு காபீ சொன்னான் ஆதி .



"எஸ் மிஸ்டர் சதீஷ் சொல்லுங்க , எதுக்காக காலையில் இருந்து என்னை போல்லோவ் பண்றீங்க "

ஆதி நிதானமாக கேட்டான் .



சதீஷ் , சிவாவின் இரு சக்கர வாகனத்தில் ஆதி செல்லும் இடமெல்லாம் பின் தொடர்ந்தான் . எவரோ தன்னை தொடர்வதை கண்டு ஆதி இந்த கடையினுள் நுழைந்தான் . தலை கவசத்தை கழட்டி சதீஷ் உள்ளே வரும் சமயம் அவனை கண்டுகொண்டு நேராக எதிர்கொண்டான் ஆதி .



"எஸ் ஆதி , என் பெயர் வரை நீங்க தெரிஞ்சு வச்சிருக்கதை பார்க்கையில் என்னை முழுதாக தெரியும்னு புரியுது ...வெள் நேர விஷயத்துக்கு வரேன் எனக்கு அனாமிகாவுடன் திருமணம் நடக்கணும் " பொட்டில் அடித்தது போல் நேராக சொன்னான் அவன் .



ஆதி புருவ முடிச்சுடன் சதீஷை நோக்கி "இதுக்கு நான் என்ன பண்ணட்டும் ?" கேள்வியாக பார்த்தான் .



"அனாமிகாவுக்கு நீங்க வெள் விஷர்னு அவளே சொல்லிருக்கா நீங்க சொன்னால் அவள் கேப்பா இல்லைனா அவகிட்ட நெருங்கறது கூட கஷ்டம் "



"எந்த தயிரியத்தில் நான் அவ கிட்ட திரும்ப பேசுவேன்னு நினச்சீங்க ?" ஆதி ஆழ்ந்த .

பார்வையுடன் கேட்டான்



"பிகாஸ் அனாமிகா நல்லா வாழ்ந்தா சந்தோச படுற முதல் ஆள் நீங்க தான் " அவனின் பார்வையை எதிர் கொண்டான் சதீஷ் .



"அப்ப முதல் ஆளா நாந்தான் உங்க விருப்பத்திற்கு எதிரா நிற்கணும் ...மீண்டும் ஒருமுறை அனாமிகா மனது வருத்தப்படறதை பார்க்கும் சக்தி எனக்கில்லை ...அவளோட அப்பா முன்னாடி நடந்த விஷயத்துலயே உடைஞ்சு போய்ட்டார் " ஆதி ஆணித்தரமாக சொன்னான் .



"இந்த முறை அப்படி நடக்காது ஆதி ஐ ப்ரோமிஸ்" சதீஷும் விடுவதாக இல்லை .



"லுக் ஏற்கனவே நடந்த பிரச்சனைல உங்க பங்கு இல்லை தெரியும் அதே நேரம் உங்க எதிர்ப்போ விறுப்போ எதுவும் இல்லை எதை நம்பி நான் மீண்டும் உங்களை நம்பறது ...நான் அப்ப பேரெண்ட்ஸோட ஸ்டேட்ஸ் போயிருந்தேன் இல்லைனா இப்படிலாம் நடக்க விட்ருக்க மாட்டேன் ..."



"ப்ளீஸ் கிவ் எ சான்ஸ் " சதீஷ் தவித்தான் .



"அனாமிகாவே இதுக்கு ஒத்துக்க மாட்டா சதீஷ் ... இருபது வயசு தான் அவளுக்கு அப்ப அவ மனசுல விழுந்த முதல் விருப்பம் நீங்க தான் ஆனால் அதை முழுசா உடைச்சுட்டீங்க .. கல்யாணம் என்ன பிசினெஸ் ஹா பெண்ணையும் குடுத்து நீங்க என்ன கேட்டாலும் பொருளையும் கொடுக்கிறதுக்கு இந்த கல்யாணத்தை கால் ஆப் பண்றதுக்கு முன்னாடி உங்க கிட்ட கேக்காமயா செஞ்சிருப்பாங்க ?" ஆதியின் குரலில் காரம் கூடிக்கொண்டே போனது .



"என்கிட்ட இதை பெரியவங்க விஷயம் சொன்னாங்க சரி வரதட்சணை நார்மல்னு நினச்சேன் பட் இப்படி கல்யாணமே நிக்கும் அளவுக்கு போகும்னு நினைக்கலை ... அம்மா இவ்ளோ அதிகமா வரதட்சணை கேப்பாங்கனு நினைக்கலை " தலை கவிழ்ந்தான் சதீஷ் .



"வரதட்சணை இஸ் இல்லீகல் சதீஷ் . இதை நார்மல்னு அசால்ட்டா சொல்றிங்க , கடைக்கு போனா கூட காசு கொடுத்து பொருள் வாங்கறோம் அதாவது ஒன்னை கொடுத்தா இன்னொன்று உங்களுக்கு கிடைக்கும் ஆனால் உங்கள மாதிரி ஆளுங்களால் பொன்னையும் கொடுத்து பெண்ணையும் கொடுத்து பெண்ணை பெத்தவங்க மனசு ஒடஞ்சு போய் நிக்கிறது நார்மல் ஆய்டுச்சுல ?" சூடு குறையவில்லை ஆதியிடம் .



"இலக்கியாவிற்கும் கொடுத்துதான் கல்யாணம் செஞ்சிருக்கோம் ஆதி " சதீஷ் இப்பொழுது சற்றே சூடு ஏறினான் .



"லிசன் அண்ணிக்கு இது தான் வேணும்னு நாங்க கேக்கலை , அவங்க பொண்ணுக்கு அவங்க செஞ்சாங்க நாங்க அதை தடுக்களை அதே நேரம் அதை நாங்க யாரும் தொட கூட இல்லை .....ஒரு பொண்ணு சீதனம் கொண்டு வரது எதுக்குன்னா புது இடத்தில வந்து எந்த மன சுணக்கமும் இல்லாம இருக்கிறதுக்கு தான் ...நகை நட்டுன்னு போடறது நாளை பின்ன ஏதேனும் தேவை வந்தால் உதவியாக இருக்குமேன்னு தான் ...அண்ணிக்கு நீங்க போட்டதை விட எங்க அம்மா அவ்ளோ செஞ்சு வச்சிருக்காங்க அதே நேரம் இவ்ளோ வேணும்னு எங்க குடும்பத்தில் இருந்து ஒரு வார்த்தை கேட்கலை ....இங்க பிரச்சனை உங்க அம்மா அப்பா பேராசை கொடுக்கிறதுல பாதி அவங்க வச்சுப்பாங்களாம் ...அதுவும் சிங்கப்பூர்ல இருக்க உங்களுக்கு இங்க கார் வாங்கி தரணும் என்ன லாஜிக் சார் இது " ஆதி பொரிந்து தள்ளிவிட்டான் .



"....." சதீஷால் பதில் கூற முடியவில்லை எத்தனை பெரிய தலை இரக்கம் இது .



பல வீடுகளில் கூசாமல் பெண்ணை பெற்றவர்களின் வீட்டில் இருந்து வாரி சுருட்டி எடுத்து கொண்டு மேலும் ஜம்பமாக சுற்றி வரும் மாப்பிள்ளை வீட்டார் உண்மையில் கூனி குறுக வேண்டும் . என்றும் பெறுபவர்கள் பேசும் இடத்தில இருக்க முடியாது ...ஆனால் கல்யாணம் என்ற ஒன்றில் மட்டும் பொன் பெண் அனைத்தையும் கொடுத்து பெண் வீட்டார் அடங்கி போகிறார்கள் , அப்படி என்றால் என்ன அர்த்தம் நம்ம வீட்டு பெண்களை நாமே குறைவாக நினைப்பதாக தானே அர்த்தம் .



"வெள் இதுக்கு மேலயும் இதை ப்ரொஸீட் பண்ணனுமா சதீஷ் ?" அவனின் மௌனம் கண்டு கேட்டான் ஆதி .



"உங்க தோழிக்காக நீங்க பார்க்கலாம் ஆதி , இந்த பிரச்சனை இனி வராது இதற்கு நான் பொறுப்பு " தீர்க்கமாக கூறினான் அவன் .



அவனின் உறுதி கண்டு யோசித்த ஆதி "பட் அனு சம்மதிக்க மாட்டா "என்றான் .



"இத்தனை நாள் நீங்க எந்த வரணும் கொண்டு வராமலா இருந்திருப்பீங்க ஏன் இன்னும் அனாமிகாவுக்கு கல்யாணம் ஆகலை ?" ஆழ்ந்து நோக்குவது இப்பொழுது சதீஷின் முறை ஆனது .



ஆதி சற்றே யோசித்தான் எந்த வரன் கொண்டு வந்தாலும் அனாமிகா வேண்டாம் என்று தட்டி கழிப்பதாக பெரியப்பா கூறியது நியாபகத்திற்கு வந்து அவனை யோசிக்க வைத்தது .



அவனின் யோசனை கண்டு சதீஷ் " உங்க எல்லார் அளவுக்கும் எனக்கு அவளை தெரியுமா தெரில , பட் ஆஸ் எ லைப் பார்ட்னர் என்னை தவிர்த்து வேற யாரையும் அவ யோசிக்க மாட்டான்னு நான் உறுதியா சொல்லுவேன் ...ரெண்டு வருஷம் ஆச்சு ஆதி ரெண்டு மாசத்துல நாங்க பேசியவை இன்றும் அச்சாரம் பிசகாமல் என் நினைவில் இருப்பது போல் தான் அவளிற்கும் ...இன் பாக்ட் என்னை விட அவ என் மேல வச்ச விருப்பம் வார்த்தைல சொல்ல முடியாது ஆதி " நெஞ்சம் நிறைந்த உணர்வுடன் கூறினான் சதீஷ் .



'ஒருவேளை அப்படியும் இருக்குமோ ?' யோசித்தான் ஆதி .
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top