JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Books by JB

mibrulz

New member
Mam eagerly waiting to get a copy of kurukshetram...when can v expect it ?? really miss the 3 A's and ofcourse Arjun and Harsha :love:
 

JLine

Moderator
Staff member
View attachment 162

ஃப்ரெண்ட்ஸ்,

நீங்கள் நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த என்னுடைய நான்காவது நாவலான குருக்ஷேத்திரம் புத்தக வடிவில் வந்துவிட்டது.

அதனைப் பற்றிய அறிவிப்பு தான் இது.. அதற்கு முன் சில விஷயங்கள்.

1. இந்தக் கதையை ஆன்லைனில் படித்திருப்பவர்களுக்குத் தெரியும், இது மிகப்பெரிய கதை என்று.. ஆகையால் 4 பாகங்களாக இந்த நாவலை புத்தகமாகப் போட வேண்டியிருக்கின்றது.. தற்போது முதல் இரண்டு பாகங்களை வெளியிட்டு இருக்கின்றேன்.. அதற்கு முக்கியக் காரணம், நான்கு பாகங்களும் ஒரே நேரத்தில் வந்தால் புத்தகத்தின் விலை அதிகமாகிவிடும்.. அனைவராலும் அவ்வளவு விலைக் கொடுத்து வாங்க முடியாது அல்லவா?

ஆகையால் இப்பொழுது முதல் இரண்டு பாகங்களையும் வாங்கிப் படியுங்கள்... இன்னும் சில மாதங்கள் சென்று அடுத்த இரு பாகங்களையும் புத்தகங்களாக வெளியிடுகின்றோம்

2. அடுத்த விஷயம் ஒரேடியாக நான்கு பாகங்களையும் வாங்கலாம் என்று இருந்தீர்கள் என்றால், நான் அவ்வாறு இருக்க வேண்டாம் என்று தான் கூறுவேன்.. ஏனெனில் Volume 1 & 2 முழுவதுமாக விற்றுவிட்டால், Volume 3 & 4 release ஆகும் பொழுது Volume 1 & 2 -வை என்னால் மறுபதிப்புச் செய்ய இயலுமா என்று தெரியவில்லை.. ஏனெனில் அப்பொழுது உதயேந்திர வர்மன் புத்தக வடிவில் வருவதற்குத் தயாராக இருப்பான்..அது மட்டுமல்ல, கணவனே கண்கண்ட எதிரி புத்தகம் வெளியான அன்றே அனைத்து புத்தகங்களும் விற்றுவிட்டதை வாசகர்கள் நீங்களும் அறிவீர்கள்..

ஆகையால் நீங்கள் Volume 3 & 4 வாங்கும் பொழுது Volume 1 & 2 இல்லாது போக வாய்ப்புகள் நிறைய உள்ளது.. நான் எதனையும் வெளிப்படையாகக் கூறுவேன் என்பது என் அபிமான வாசகர்கள் அனைவருக்குமே தெரியும்...புத்தகங்கள் மார்க்கெட்டில் இருக்கும் பொழுது கேட்காது, அவை அனைத்தும் தீர்ந்ததற்குப் பிறகு கேட்டால், எங்களால் அவ்வாறு ஒரு சில காப்பிகள் மட்டும் போட இயலாது.

3. புத்தகம் வாங்குவதற்கான இணைப்பு கீழே:

4. புத்தகம் அறிமுக வீடியோ:

உங்கள்
ஜேபி (JB)
 

Members online

No members online now.

Latest Updates

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top