JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Chathurangam 18

Subageetha

Well-known member
ஒருவழியாக ரத்னா திருமணம் முடிந்து திருச்சூர் சென்ற பிறகு, சிவனின் வீடு நடந்தவற்றை ஜீரணம் செய்து கொண்டு வழக்கத்திற்கு மாறியது. திருமணம் நடந்தது பற்றி அவர்கள் வீட்டில் யாருக்கும் வருத்தம் இல்லை. ஆனால் அது நடந்த விதம் சிவனுக்கும் அவரது தங்கை திலகா விற்கும் இடையே பெரிய மன பிளவை ஏற்படுத்தி விட்டது. தன் அண்ணன், சீர் செய்வதற்கு யோசனை கொண்டு தன் மகன் சங்கரனை வளைத்துப் போட்டு இந்த திருமணத்தை நடத்திவிட்டதாகவே எண்ணினாள். சங்கரன் திருமணத்திற்கு முன்பே ரத்னாவின் மீது கொண்டிருந்த காதல் திலகா விற்கு தூபம் போட்டிருந்தது. அவன் தானாகவே வந்து திருச்சி செல்கிறேன், அங்கு கிளை ஆரம்பிக்க போகிறேன் என்றெல்லாம் சொன்னது ரத்னாவின் மீதுள்ள ஈடுபாட்டினால் தான் என்பது திலகத்தை இப்பொழுது புரிந்தது. ஆனால் உமாவின் விஷயத்தைப் பற்றி யாரிடமும் சங்கரன் இதுவரை பகிர்ந்து கொள்ளவில்லை. அதைப்போல் திருமணம் முடிந்து ரத்னா மையம் தனது வீட்டிற்கு நேராக கூட்டிச் செல்லாமல் தான் பார்த்து வைத்திருந்த வீட்டிற்குத்தான் கூட்டிச்சென்றான். இவையெல்லாம் திலகா மற்றும் அவள் குடும்பத்திற்கும் மாறாது எரிச்சலை கிளப்பி விட்டது. போறாத குறைக்கு திலகாவின் கணவர் அவளின் எரிச்சலை கிளப்பும் வகையில் ரத்னா எப்படி சங்கரனை மயக்கி கைக்குள் போட்டுக் கொண்டாள் என்றும் திலகாவின் பிறந்த வீட்டினர் எப்போதுமே இப்படித்தான் என்றெல்லாம் இத்தனை வருடங்களாக மனதிற்குள் வைத்திருந்த வஞ்சனைகளைத் திரட்டி வார்த்தைகளாக மாற்றி கூறாக திலகாவின் மேல் இறங்கினார். இன்னொரு பக்கம் ரத்னாவின் அழகின் மீது கிடந்த பொறாமையால் சங்கரனின் தங்கையும் ரத்னாவை ஆள் மயக்கி என்றும் அவள் எப்படி தனது அண்ணனை தன் அழகை காட்டி கைக்குள் போட்டுக் கொண்டு விட்டாள் என்றும், சங்கரனை குடும்பத்தைவிட்டு எப்படி கூட்டிச் சென்று விட்டாள் என்றும் விஷத்தை கக்கிக்கொண்டிருந்தாள். எல்லாமாக சேர்ந்து திலகத்திற்கு தன் அண்ணன் மகள் ரத்னா நிரந்தர பகையாளி ஆகிப் போனாள்.


அருணாச்சலத்தின் வீட்டில் குருபரனோ தனது அன்னையிடம் இன்னும் இரண்டு மாதங்கள் எல்லாம் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது உடனேயே திருமணம் செய்தாக வேண்டுமென்று ஒரே பிடிவாதம் செய்யலானான்.

அவனுக்கு திருமணத்தின் உமாவின் பிடித்தமின்மை பற்றி தெளிவாக தெரியும். ரத்னாவாவது திருமணம் நிச்சயம் இருந்த பையனை திருமணம் செய்து கொண்டாள். உமா எங்காவது வேறு யாரையாவது கூட்டிச் சென்று விட்டால் என்ன செய்வது என்று அவன் எண்ணம் கேவலமாக ஓடியது. திருமணத்திற்கு இதற்கு மேல் தாமதிக்க முடியாது என்று ஒரே ரகளை. அவனின் மனமும் சில மாதங்களாகவே பெண் சுகம் இன்றி தவித்துக்கொண்டிருந்தது. அவன் உமாவை நிஜமாகவே அவன் உடலும், மனமும் நாடியது. இதற்கு சத்தியமாய் காதல் என்ற பெயர் கொடுக்க முடியாது. காமம்தான்... வெறும் காமம் அல்ல. உமாவை விழுத்த கூடிய கொடும் தீ அது. அந்த தீயிலும் உமா தன்னை கொடுத்து தான் ஆக வேண்டும். அவனது காத்திருப்புக்கு அந்த பேதை பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம்.


அன்னபூரணி எவ்வளவோ எடுத்துச் சொல்லி விட்டாள் இன்னும் இரண்டு மாதங்கள் தான்... பிறகு திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று. ஆனால் கேட்கும் நிலையில் அவன் இல்லை. உயிர் பற்றிய பயம் கொஞ்சம் கொஞ்சமாக அவனிடமிருந்து விலகி கொண்டிருந்தது. அன்னபூரணி ஒரு ஆறுமாதம் உனக்கு நேரம் சரியில்லை என்று சொன்னதிலிருந்து சற்று தன்னை அடக்கி வாசித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனது இயல்பான குணம் அவன் பயத்தை அடக்கி விட்டது. பெண் தன் கையை மீறி விடுமோ என்ற எண்ணம் அவனுக்குள் ஆழமாய். போதாத குறைக்கு சங்கரன் இருந்தபொழுது வேண்டுமென்றே உமா அந்த பொடிப்பயலை வைத்துக் கொண்டு தனக்கு ஆட்டம் காட்டி விட்டதாகவே குரு நம்பினான். சங்கரன் திருச்சியில் தங்கியிருந்த பொழுது அவனது வாட்டசாட்டமான உருவ அமைப்பும் நேர்கொண்ட பார்வையும் உறவுக்கு ஒருவித பயத்தை உண்டு பண்ணி இருந்ததால் சிவன் வீட்டில் பக்கமே அவன் செல்லவில்லை. 3மாதம் உண்மையில் உமா நிம்மதியாக உணர்ந்தாள். சங்கரனுக்கு

உமாவுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கக்கூடும் என்று கூட குருவுக்கு ஒரு சந்தேகம் உண்டு. ஒருவழியாக சங்கரன் கல்யாணம் செய்துகொண்டு சென்றுவிட்டான்.


சிவன் அடுத்த நாள் காலையில் வேலைக்கு வந்த உடன் முதல் காரியமாக அவரை தன் அறைக்குள் அழைத்துச் சென்ற குரு, 'உம்ம பொண்ணுக்கும் எனக்கும் கல்யாணத்தை எப்ப வச்சுக்கலாம்' என்றுதான் கேட்டான். இதை சற்றும் சிவன் எதிர்பார்க்கவில்லை.

ஒரு வழியாக எச்சிலைக் கூட்டிக்கொண்டு இன்னும் இரண்டு மாதங்கள் மீதம் இருக்கிறது தம்பி என்றார் சிவன். அந்த பதிலைக் கேட்ட குருவின் கண்கள் ரத்தம் என சிவந்துவிட்டது. அன்னபூரணி அருணாச்சலம் இந்த திருமணத்திற்கு இன்னும் மாதங்கள் இருக்கிறது என்கிறார்கள். வருங்கால மாப்பிள்ளையிடம் பேசுகிறோம் என்ற மரியாதையும் இல்லாமல் சிவனும் இதுபோன்ற ஒரு பதிலையே சொல்லுகிறான். இந்த குருவை இவர்கள் எல்லாம் என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவனுள் ஆத்திரம் பொங்கியது.

சட்டென்று, ஊர் கூட்டி செய்த கல்யாணத்த பத்தி பேசல சிவன், அதுக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்கு. உமாவை கூட்டிக்கிட்டு வந்து இங்கு வைங்க. முதல்ல குடும்பம் நடத்தி பார்க்கிறேன். அப்புறம் உங்க இஷ்டத்துக்கு கல்யாணத்த வச்சிக்கலாம் என்று ஒரு பெரிய குண்டை இறக்க சிவனின் கண்கள் முதன்முறையாக கலங்கியது. எப்பேர்பட்ட ஒருவனுக்கு தன் மகளை திருமணம் செய்து வைக்கும் முடிவெடுத்து விட்டோம். ஆழம் தெரியாமல் பாழும் கிணற்றில் தன் மகளை இறக்கிவிட்டு விட்டேனே என்று மருகினார். அவரிடமிருந்து பதில் வராமல் போகவே ஒரு கோணம் சிரிப்புடன், இதுல யோசிக்க ஒன்னும் இல்ல சிவன். ஒன்னு உங்களுக்கு வசதின்னா கல்யாணத்தை சீக்கிரம் வையுங்க. இல்ல ஏன் வசதிக்கு அவள் இங்கே கொண்டு வந்து விடுங்கள் என்று சிரித்துக்கொண்டே சொன்னவனை என்ன செய்வது என்று எனக்குப் புரியவில்லை. எந்த பதிலுமே சொல்லமுடியாமல் தலை கவிழ்ந்து கொண்டு கூடத்திற்கு வந்தவரை அன்னபூரணி தான் எதிர்கொண்டாள். குரு சொன்னதை அப்படியே சொன்ன சிவனுக்கு துக்கம் தாங்க முடியவில்லை. இதற்கு மேல் அவன் சொல்வதை கேட்க மாட்டான் என்று புரிந்து அன்னபூரணியும் கல்யாணத்திற்கு சீக்கிரம் ஏற்பாடு பண்ணிடலாம் சிவன் என்று விட்டாள். இந்த குடும்பத்திற்குள் வரப்போகும் பெண் மரியாதையாக நுழைய வேண்டும் என்பது நிச்சயம். குரு பொறுமை இல்லாதவன், ஆத்திரக் காரனும் கூட. யாரும் திருமணத்திற்கு இப்போது ஒப்புக்கொள்ளவில்லை என்று அவளை கடத்தி சென்று விட்டால் பெரிய ஆபத்து என்று யோசித்தவள் குடும்ப ஜோசியரை நாள் கொடுத்த தருமாறு கேட்டுக் கொண்டு சென்றாள்.


ஜோசியரோ இன்னும் 20 நாட்களில் முகூர்த்தம் உள்ளது என்று நாள் குறித்து கொடுக்க அன்னபூரணி நேரே குருவிடம் சென்று இன்னும் கல்யாணத்திற்கு 20 நாட்கள் தான். அது வரை வேறு எதையும் யோசிக்காதே என்று எச்சரித்து விட்டுச் சென்றாள்.


திருமணத்திற்காக திருச்சியில் பெரிய துணிக்கடையில் துணிகளும் முகூர்த்த பட்டும், நகைக்கடையில் எனக்காக நூறு சவரனுக்கு பெண்ணிற்கு நகைகளும் தாலிக்கொடியும் அருணாச்சலமும் அன்னபூரணியும் சென்று வாங்கினார்கள். அவர்களுடன் சென்ற சிவனுக்கும் அவர் மனைவிக்கும் இவர்கள் வாங்கும் வேகத்தைப் பார்த்து தலை சுற்றல் தான். பாறுக்குட்டி தன் மகள் பெரிய இடத்தில் கல்யாணம் ஆகி செல்ல போகிறாள் என்பதை நினைத்து ஆனந்தப் பட்டதுண்டு. இப்பொழுது தன் எண்ணம் சரிதான் என்று அவளுக்கு தோன்றியது.


என்னவானாலும் இந்த திருமணத்தை அன்னபூரணியும் அருணாசலமும் தோற்க விடமாட்டார்கள் என்ற நம்பிக்கை அவளுக்குள் வந்துவிட்டது. தனது அன்பினாலும்,நேசத்தினாலும் குருவை தன் மகள் தன் வழியில் மாற்றிக்கொண்டால் அவள் வாழ்க்கை சந்தோஷமாக அமையும் என்று நினைத்துக் கொண்டாள் அந்த தாய்.


ஆனால் என்றாவது புலிதான் மேல் தோலில் உள்ள வரிகளை மாற்றி கொள்ளுமா, இல்லை பாம்பால் தான் தன் விஷத்தை விட்டுவிட முடியுமா?


குரு மோகத்துடனும் உமா பயத்துடனும் எதிர்பார்த்திருந்த அந்த திருமண நாளும் விடிந்தது. திருச்சியிலேயே பெரிய கல்யாண மண்டபத்தில் ஏற்பாடு ஆகி இருந்தது அவர்களது திருமணம். சென்னையிலிருந்து கட்சித் தலைமை முதற்கொண்டு அடிமட்ட தொண்டன் வரை குருவின் திருமண நிகழ்வில் பங்கேற்றார்கள். இதை தனது அரசியல் செல்வாக்கிற்கு ஒரு பெரிய வாயிலாக அமைத்துக்கொண்டார் அருணாச்சலம். கட்சித் தலைமையே அவரது மகன் திருமணத்திற்கு வர சுற்று வட்டாரத்தில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட திருமண நிகழ்வில் பங்கேற்றார்கள். கூட்டம் அலைமோத எல்லோருக்கும் உணவு பந்தி பந்தியாக பரிமாறப்பட்ட கொண்டே இருந்தது.

வடக்கத்திய முறைப்படி முதல்நாள் மெஹந்தி, ஹால்தி முதலியவைகள் நடக்க அடுத்த நாள் திருமணம் தமிழக முறைப்படிதான் நடக்க வேண்டுமென்று அருணாச்சலம் தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.


ஐயர் மந்திரங்கள் சொல்ல, பாதி மந்திரங்கள் சொல்லியும் மீதியை விட்டும், வந்திருந்த இளம் குமரிகளின் பார்த்து ஜொல்லு விட்டுக் கொண்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டும் அமர்ந்திருந்த குருவுக்கு சிவனுக்கு மனைவி

பாறுகுட்டி கண்ணில் பட தன் அன்னை வயதை உடையவர்கள் என்பதையும் மறந்து அளவிட்டு கொண்டிருந்தான் குரு. இவற்றையெல்லாம் பார்க்கும் நிலையில் நல்லவேளை பாறு இல்லை.


உமா ஏற்கனவே சொல்லி விட்டதால் சங்கரனும் ரத்னாவும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. திலகா வீட்டினர் கோவம் நிறைய இருந்தாலும் கூட அண்ணன் வீட்டு திருமணத்தை எப்படி நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக திலகா மட்டும் வந்திருந்தாள். அவளுக்கு பொறாமையில் அடிவயிறு எரிந்தது.


அரக்கு நிற பட்டு உடுத்தி அதே நேரத்தில் கையில் மருதாணி சிவந்து, புதுப் பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு அன்னபூரணி வாங்கிக்கொடுத்து இருந்த நகைகள் மொத்தத்தையும் அணிந்துகொண்டு அழகு சிலை என மெல்ல தன் பஞ்சு வண்ண பாதங்களால் நடந்து வந்த உமாவை விட்டு குருவின் கண்கள் அப்படி இப்படி நகர வில்லை. அவளை அவன் பார்த்த விதம் அவள் மனதினுள் நாணத்தை ஏற்படுத்துவதற்கு பதில் அச்சத்தையும் அருவருப்பையும் உண்டுபண்ணியது. உடல் முழுவதும் கம்பளிப்பூச்சி ஏறுவது போல் உணர்ந்தாள் பெண். இவனுடன் என் காலம் முழுவதுமா என்று உள்மனம் கதறியது.

'இறைவா எனது திருமண வாழ்க்கை சீக்கிரம் முடித்து விடு என்று உள்ளூர பிரார்த்தனைகள் செய்து கொண்டிருந்தாள் உமா'.


குருவுக்கு அவளது மெல்லிடையில் இருக்கும் ஒட்டியாணம் மீது கோபம் வந்தது அது மட்டும் அவளது இடையை ஒட்டி உறவாடுவது பார்த்து . கூடவே அவளது இடை அளவு என்ன என்றும் யோசித்துக்கொண்டிருந்தான்.


ஐயர் மந்திரங்களை சொல்லிக் கொண்டே இருப்பதில் பொறுமை இழந்தவனாக,' போதும் ஐரே! தாலி கட்டுற மந்திரத்தை மட்டும் சொல்லு ' என்று சத்தம் போட்டு அசட்டு சிரிப்புடன் சொல்ல அவன் தோழர்களும் பெரிய ஹாசியத்தை சிரிக்க, அருணாச்சலம் அன்னபூரணி இருவருக்கும் எரிச்சல் என்றால் சிவனுக்கும் அவரது மனைவிக்கும் தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது. உமாவுக்கு அவன் அருகில் அமர்ந்து இருப்பதே குமட்டிக் கொண்டு வர சிரிக்க முடியாமல் சிரிப்பது போல் பாவனையில் அவன் அருகில் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.


மங்கலநாண் பூட்டும் நிகழ்வு வர, உமாவின் காதுகளில், குருவோ, ஃபர்ஸ்ட் நைட் எதுக்கு டி, ஃபர்ஸ்ட் டே கொண்டாடலாமா... சும்மா கும்முனு கொல்ற டி என்று அவன் அவள் காதுகளில் பிறருக்கு கேட்காமல் அவளுக்கு மட்டும் கேட்கும்படி கேட்டுக்கொண்டே மூன்று முடிச்சு களிட வெறுப்புடன் அவன் கருவிழிகளில் தனது விழிகளை கலக்க விட்டாள் பெண்.

அவள் வெறுப்புப் பார்வையை


அவனுக்குள் பிராந்தி போல் இறங்கியது. உள்ளே இறங்கும் போது எரிச்சலை கொடுத்தாலும், அதன் போதையே தனிதான் என்று எண்ணிக்கொண்டான் குரு.


அவனைப் பொறுத்தவரை எவ்வளவு தூரம் பெண் மறுக்கிறாளோ,

பிடித்த மின்மையை அவளது விருப்பமின்றி அவளை அனுபவிக்கும் போது கிடைக்கும் சுகமே தனிதான்!

பெண்களின் சிரிப்பை விட வெறுப்பும் கோபமும் அதிகம் போது போதையூட்டும் என்று தீர்மானமாக நம்பிக்கொண்டிருக்கிறான் குரு. இதுவரை அவன் சீரழித்த பெண்களின் கணக்கு வெளியே தெரியாவிட்டாலும் அதிகம்தான். இவற்றையெல்லாம் பெருமையாக தன் மனதில் என்னை கொண்டான் அவன். அவனது இதழ் கோடியில் புன்னகை.


அவள் கண்கள் கலங்கி சிவந்தன. ஹோமப்புகையிலா, இல்லை அவனது சொற்கலிலா?


இவை அனைத்தையும் திருமணத்திற்கு தனது மகளுடன் வந்திருந்த ராக்காயியும் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். குரு திருந்தும் நாள் வரவே வராதா என்ற அவள் மனம் கேள்வி கேட்டது.


இதே கேள்விதான் என் மனதில் ஓடுகிறது.
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top