JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Chathurangam 22

Subageetha

Well-known member
திருச்சியில் இருந்து பெங்களூர் செல்லும் வழியில் குருபரனுக்கு சொந்தமாக கஞ்சா தோட்டம் இருக்கிறது. அங்கே செல்லும் போதெல்லாம் நண்பர்களுடன் கூடிக் குலாவும் அந்த நேரம் குருவுக்கு மிகவும் பிடித்தமானது.
ஒருவரோடு ஒருவர் குடிப்போதை பாதி ஏறியும் பாதி சுய புத்தியுமாய் சீட்டு ஆட உட்கார்ந்து கொண்டும் பேசிக் கொண்டும் ஒரு கலவையான நிகழ்வுகள் அங்கே.
அங்கே பேசிக் கொள்வது அவரவருக்கு ஒன்றும் பாதி புரிந்தும் பாதி புரியாமலும் உணர்வுகள் தங்கள் எல்லைகளை மீறி ஒருவித பிரயாணம். மிஞ்சிப்போனால் ஆறு பேர் அங்கு அமர்ந்து இருக்கலாம். சீட்டு மும்முரத்தில், ஒருவன் வென்று விட மற்ற ஐவரும்,அவன் மீது பாய திரும்பவும் அந்த ஆட்டத்தை கலைத்து இன்னொரு ஆட்டம். இந்த அழகில் குருவின் இன்னொரு நண்பன் இரண்டு பெண்களுடன் அங்கு வந்து சேர்ந்தான். குரு முழுதாக என்றுமே திருந்த போவதில்லை. அதில் இந்த கதையை வாசிப்பவர்களுக்கு என்றுமே சந்தேகம் வேண்டாம். அவன் என்றும் அக்மார்க் ****தான். ஆனால் உமாவை திருமணம் செய்தபின்னர் ஒரு சிறு மாற்றம். அங்கு ஊரில் இருக்கும்போது வேறு எந்த பெண்களையும் நாடிச் செல்வதில்லை. அதைப் போல் இங்கு வந்தாலும்கூட எல்லா நேரங்களிலும் பெண்களுடன் சல்லாபம் என்பதை மாற்றிக் கொண்டிருக்கிறான். ஏனோ எல்லா பெண்களிடமும் அவன் மனம் உமாவைதான் தேடுகிறது. அதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
' பெண்களை கூட்டி வந்த நண்பன் முதல் சாய்ஸ் குருவுக்கு தான். குரு எந்த பெண்ணை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று சொல்ல குரு இன்று எனக்கு மூடு இல்லை என்று மறுத்து விட்டான். அவன் சொன்னதைக் கேட்டதும் போதையில் மற்றும் நண்பர்கள் அவனை கலாய்க்க தொடங்க, பெண்களை கூட்டி வந்த நண்பனும் இதில் சேர்ந்துகொண்டு பேச, பேச்சின்போது ஒரு நண்பனின் பேச்சு ,திருமணம் முடிந்து நான்கு வருடங்களாகியும் குருவால் 'ஒரே ஒரு குழந்தையைக் கூட பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பதில் வந்து நின்றது. இன்னொரு நண்பன், குருவுக்கு ஒருவேளை பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதற்குத் தான் தகுதி இருக்கோ?குழந்தை பெற்றுக்கொள்வதற்கு தகுதி இல்லையோ... என்று சிரித்துக்கொண்டே நக்கலடிக்க குருவின் குரங்கு மனம் அவர்கள் பேச்சில் இன்னும் எரிச்சல் அடைந்தது. கோபத்தை அடக்கமுடியாமல் கையிலிருந்த சீட்டுகளை எல்லாம் கிழித்துப் போட்டுவிட்டு, தன் அருகில் இருந்த பாட்டிலிலிருந்து முழுவதுமாக தன் வாய்க்குள் சரித்துக் கொண்டான். வந்திருந்த இரு பெண்களும் அவனுடன் இருக்க தயாராக, அவளில் ஒருத்தியை அணைத்துக்கொண்டு அங்கிருந்த அறைக்குள் நுழைந்து கொண்டான். ஏனோ நண்பர்களுடன் சண்டையிட்டால் தன் பக்கம் இன்னும் கீழ் சாய்ந்து விடும் என்று நினைத்தானோ என்னவோ அவர்களுடன் மேலும் பேச்சை வளர்க்க அவனுக்கு இஷ்டமில்லை. ஆனால் திருமணம் ஆகி நான்கரை வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் ஏன் மனைவி கருதரிக்கவில்லை என்னும் கேள்வி அவனை யோசனையில்
ஆழ்த்தியது.ஒரு வேளை நண்பர்கள் சொல்லுவது போல்... அவனுக்கு குழந்தை பெற தகுதி இல்லையோ எனும் சந்தேகம் அவனுக்கே வந்துவிட்டது.

உடன் வந்த பெண்ணுடன் மனசு லயிக்காமல் அவளுடன் பாதியிலேயே விட்டுவிட்டு தன் சட்டைப்பையில் இருந்த பணத்தை அவள் கையில் திணித்து விட்டான்.
நீ இதுக்கு கூட லாயக்கு இல்லையா என்ற ஒரு பார்வை அவளிடமிருந்து வருவதுபோல் இவனுக்கு ஒரு மாயத்தோற்றம். மறுநாள் விடிகாலையிலேயே நண்பர்கள் ஒருவருடனும் எதுவும் பேசிக் கொள்ளாமல் தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான். போதை இன்னும் முழுதாய் தெளியவில்லை. ஆனாலும் அவன் இங்கு வரும் நேரமெல்லாம் டிரைவரை கூட்டிக்கொண்டு வர மாட்டான். தானே தான் காரை ஓட்டிக்கொண்டு வருவான். அதனால் திரும்பி செல்வதும் அவனே தான் சென்றாக வேண்டும் எனும் நிலை. விடிகாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இல்லாததால் அவன் கைகளில் கார் பறந்தது. நடுவில் இரண்டு முறை போலீசில் மாட்டினான். தன் அப்பாவின் பெயர் சொன்னதும் அவனை போலீஸ்காரர்கள் நீங்க போங்க சார் என்று மரியாதையாய் அனுப்பிவைக்க தன் அப்பா தனியாய் கட்சி ஆரம்பித்ததுமே இவ்வளவு மரியாதை இருக்கிறதே, இன்னும் அவர் முதலமைச்சர் ஆனால் எப்படி இருக்கும் என்று அவனுக்குள் ஒரு சில கணக்குகள். கனவிலேயே அவ்வளவு சந்தோஷம் அவனுக்குள். பணம்- சொத்து- ஆட்சி- அதிகாரம் இவை சேர சேர ஏறும் போதை எத்தனை சரக்கு உள்ளே சென்றாலும் வரப்போவது இல்லை என்று நினைத்துக்கொண்டான் குரூ. ஒருவிதத்தில் அதுவும் நிஜம்தான்!

நேரே பூங்குவளை வீட்டுக்கு வந்தவன் வீட்டில் யாரும் இல்லாததை கண்டு, தங்கள் தனி அறையில் மனைவியை தேடிக்கொண்டு சென்றான். அவளோ, தனக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு இருந்த ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தாள். என்றுமே அவனை நகர விடாமல் செய்யும் அவளது வடிவழகு இன்று ஏனோ வேலை செய்யவில்லை. அவளிடம் இன்றைய குழந்தை பற்றிய பேச்சுக்களை முடித்து விட வேண்டும் என்ற துடிப்பு குருவிடம். கணவனைப் பார்த்து லேசாகப் புன்னகைத்த உமாவுக்கு அவன் தோற்றம் சிறு யோசனையை கொடுத்தது. நீங்க குளிச்சிட்டு வாங்க. நான் காபி டிபன் எடுத்து வைக்கிறேன் என்றுவிட்டு ஜிம்மிலேயே தனியாக இருந்த அவளது பாத்ரூமிற்குள் தன்னை நுழைத்துக் கொண்டாள். அவன் எதை பேச காத்துக் கொண்டிருக்கிறான் என்பது சுத்தமாக தெரியவில்லை. ஆனால் உமாவின் மனமோ படபடவென்று அடித்துக்கொண்டது. ஏதோ மீள முடியாத சூழலில் சிக்கப் போவது போன்ற உணர்வு. மிகவும் தவித்துப் போனாள். அன்னபூரணியோ தன் மகனுக்கு சீக்கிரம் புத்திர பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று கோவிலில் தொட்டில் கட்டி விட்டு வருகிறேன் என்று சென்றிருக்கிறாள்.
இதை எல்லாம் நினைத்து உமாவுக்கு உள்ளூர உதறல் தான். வெளியே காண்பித்து கொள்ள விருப்பம் இல்லை அவளுக்கு. இவள் சொன்னபடிக்கு குருவும் தங்களது அறைக்கு சென்று குளித்துவிட்டு தயாராகி வந்தான். அவனுக்கும் கொஞ்சம் மனதை சமப்படுத்திக் கொள்ள நேரம் தேவைப்பட்டது. நண்பர்கள் எவ்வளவுதான் இழிவாக கிண்டல் பண்ணினாலும் கூட அவற்றையெல்லாம் அப்படியே தூக்கி மனைவி மீது சுமத்த அவனுக்கு இஷ்டமில்லை. அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்பது முதலில் தெரிய வேண்டும். ஒருவேளை அவளுக்கு குழந்தை மீது விருப்பம் என்றால் இருவருமாக முதலில் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இதற்கு மேல் காலத்தை தள்ளிப் போடுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. குருவை பொருத்தவரை பேர் சொல்லும் பிள்ளை என்றெல்லாம் அவனுக்கு பெரிதாக ஈடுபாடு இல்லை. தான் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களை ஆள்வதற்கு வாரிசு வேண்டும் என்ற எண்ணம்.. ம்ஹும் அதுவும் இல்லை. ஆனால் தான் 'ஆண்தான்' என்பதற்கு சாட்சி சொல்ல பிள்ளை வேண்டும். மற்றபடிக்கு அவனுக்கு இந்த நிலையே பிடித்துதான் இருக்கிறது. எந்த தொல்லையும் இல்லை. விருப்ப நேரத்திற்கு மனைவி. அவனைப் பொறுத்தவரை மது எப்படியோ, கஞ்சா எப்படியோ, பிற பெண்கள் எப்படியோ அப்படித்தான் உமாவும். "போதை தரும் பேதை" ஆனால் உமா மட்டுமே அவனுக்கே அவனுக்கானவள்.
இதுநாள்வரை அவன் பிள்ளை பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. வாழ்க்கை அவன் எண்ண போக்கிற்கு தகுந்தபடி சிறு கற்கள் கூட இல்லாமல் பதவிசாகதான் சென்று கொண்டிருக்கிறது. பணம் -காசு ஆடம்பர வாழ்வு எதற்கும் குறைவில்லை. இன்று மற்றவர்கள் கைநீட்டி கேள்வி கேட்கும் வரை குழந்தை இல்லாததின் ஆழத்தைப் பற்றிய சிந்தனை எல்லாம் அவனுக்கு கிடையாது. இப்போது நிலையே வேறு. என்னதான் நண்பர்கள் குடிபோதையில் பேசியிருந்தாலும் மற்றவர்களும் இதே போல் தான் இவனுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதி இல்லை என்று பேசிக்கொண்டிருப்பார்கள்இன்னும் கால தாமதப்படுத்தி தனது ஆண்மையை பற்றி கேள்விகள் எழுவது அவனைப் பொறுத்த வரைக்கும் பெரிய அடி. தட்டில் இட்லியை வைத்துக்கொண்டு இருந்தாள் உமா. அவளை வெறித்து பார்த்துக் கொண்டே குருவின் சிந்தனைகள் இவ்வாறாக சென்று கொண்டிருந்தது. கைகள் தாமாகவே இட்லியை விண்டு வாயில் போட்டுக்கொண்டது. குருவின் ஆழ்ந்த மௌனம் உமாவுக்கு பயத்தை கொடுத்தது . திருமணம் முடிந்து இத்தனை வருடங்களில் மௌனியாய் ஒருநாளும் இருந்ததில்லை. வீட்டின் நடு கூடம் என்றும் கூட பார்க்காமல், கூடத்திலேயே அவளிடம் சீண்டல்களை தொடர்ந்து கொண்டிருப்பான். குரு சாப்பாட்டு கூடத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது அவன் பெற்றோர் கூட கூடத்திற்குள் வரமாட்டார்கள்.அவனது நடவடிக்கைகள்...தானும் லஜ்ஜையற்று நடந்துகொண்டு
உமாவையும் சேர்த்து தரம் இறக்கி காட்டி விடுவான்.ஆனால் இன்று நிலைமை முற்றிலும் வேறாக இருக்கிறது. ஆனால் உமாவால் நிம்மதி அடைய முடியவில்லை.

ஒருவழியாக சாப்பிட்டு முடித்து உமாவை கூட்டிக்கொண்டு தங்களது அறைக்குள் சென்றவன், நேராகவே' நாம குழந்தை பெத்துக்கலாம் உமா என்றான்'. எந்த பீடிகையும் அலங்கார வார்த்தைகளும் , கொஞ்சல்களும் அதில் இல்லை. அதைவிட அவளிடம் அபிப்ராயம் கேட்கும் குரல் தொனியும் இல்லை. அதிர்ச்சி அதிகமாகி உறைநிலை எட்டியிருந்தாள் பெண். கணவனின் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. வீட்டில் உள்ள அன்னபூரணி முதல் அவளை சுற்றியுள்ள தெரிந்தவர்கள் எல்லோரும் கேட்பது தான். எல்லோருக்கும் சிரித்துக் கொண்டே நகர்ந்து விடுவாள். இப்போது கணவனை எவ்வாறு சமாளிப்பது?
அவனையே உற்று நோக்கிக் கொண்டிருந்தாள் உமா. அவளுக்கு வாயில் வார்த்தைகள் வரிசை கட்டிக் கொண்டு காத்திருக்கிறது. ஆனால் சொல்லத்தான் முடியாது. உள்ளூர ஒரு ஆசை உண்டு அவளுக்கு. அது 'உன்னை மாதிரி பொறுக்கிக்கு, ரவுடிக்கு குழந்தை பெத்து தரது ஒரு கேடா 'என்று கேட்க வேண்டுமென. கேட்க முடியாமல் தான் இத்தனை வருஷங்களாக அவள் கருத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொண்டாள்.
நேரடியாக அவன் கேள்வியை மறுக்க இயலாமல் 'நாம நல்லா தானே இருக்கோம் டார்லிங்... இப்போ என்ன அவசரம்? குழந்தை பிறந்தா உடம்பு அழகு குறைஞ்சு போய்டும். ஸோ கொஞ்ச வருஷங்கள் ஆகட்டுமே 'என்று கிள்ளை மொழியில் கொஞ்சி பேச, அவனோ அவளது குரலும் உடல் மொழியும் கூறும் செய்தியில் மயங்கினான். முதல் நாள் அந்த பெண்ணிடம் தேடியதை இங்கே தொடர்ந்தான். கூடலின் முடிவில் அவனுக்கு நிறைவுக்கு பதிலாக நண்பர்களின் கிண்டல் ஞாபகம் வர, ஒரு பிடிவாதத்துடன் 'நாம இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள குழந்தை பெத்துக்கணும் உமா. உன்னால முடியாதுன்னா முதல்ல டாக்டர பாப்போம். இன்னும் தள்ளி போனா நா உன்ன தள்ளி வச்சிட்டு இன்னொரு கல்யாணம் செஞ்சுக்குவேன். ஹாங்... கவலை படாதே, வேற எவ வந்தாலும் கூட உன்கிட்டயும் வந்து போக இருப்பேன் 'என்றவனை கண்டு அவளுக்கு உள்ளே அருவருப்பு. அவன் சொன்ன கடைசி வார்த்தை... கடவுளே!எனக்கு ஏன் இப்படி ஒரு கல்யாண வாழ்க்கை என்று மருகினாள்.

மனைவிக்கு குழந்தை பெறுவதில் விருப்பம் இல்லை என புரிந்துகொண்டான் குரு.

மனதை தேற்றிகொண்டு அடுத்த நாளே பெண் மருத்துவரை அணுகி, குழந்தை பிறக்க தேவையான விஷயங்களை கேட்டாறிந்தாள் உமா . குழந்தை என்ன கத்தரிக்காயா கேட்டவுடன் கிடைக்க?
அடுத்த அவளது மாதந்திர நாட்களில் வெளிப்படையாகவே தனது கோவம் ஆத்திரம் எல்லாவற்றையும் அவள் மீது இறக்க தொடங்கிவிட்டான் குரு. அவனது இந்த முகத்தையும், குழந்தை பெற்றுக் கொள்வதில் இருக்கும் தீவிரத்தையும் கண்டு அதிர்ச்சி அடைந்தாள் உமா. கணவனின் இந்த பரிமாணம் அவளுக்கு புதியது. அவனுக்குள் இருக்கும் வேறு ஒரு நபர் பார்க்கும் குருவை விட கொடூரமானவன் என்று அவளுக்கு புரிந்தது. ஒவ்வொரு மாதமும் இதுவே தொடர்கதையாக குறிப்பிட்ட ஒரு வருடத்திற்குள் குழந்தை இல்லை என்றால் மறுமணம் என்ற முடிவுக்கு வந்துவிட்டான் அவன். தன் மனைவியின் மீது இருந்த மோகத்தை விட தனது சுய கவுரவம் முக்கியம் என்பது போல அவன் நடத்தை.

இன்னொருபுறம் அருணாச்சலம் சென்னையில், மிகத் தீவிரமாக தனது கட்சியை முன்னேற்றுவதில் ஈடுபட்டிருந்தார். தேர்தலில் எப்படியும் முதலமைச்சர் பதவியை பெறுவது அவரது நோக்கமாக இருந்தது. அதற்கு தகுந்தாற் போல அவர் போகும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம் அவருக்கு நம்பிக்கை கொடுத்தது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே என்ற நிலையில் வெகு அபூர்வமாக சிவனையும் கூட்டிக்கொண்டு வீரம் துணையுடன் தன் மனைவியை சந்திக்க பூங்குவளை வந்தார் அருணாச்சலம். மனைவி யை விட்டுவிட்டு தனியாக சென்னையில் இருப்பது அவருக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. என்னதான் வயதாகி விட்டாலும் தனக்கான துணை தனது மனைவி தான் என்று தீர்மானம் என்றுமே ஒரு உண்டு.

குரு கொடுத்த நேரப்படி பன்னிரெண்டு மாதங்களில், இப்போது பதினோராவது மாதம். குரு சொன்னதை செய்து விடுவானோ என்ற பயம் உமாவை ஆட்டிப்படைத்தது. சிவனிடம் அவள் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனாலும் அவளது முகத்தைப் பார்த்து ஜீவன் வெகுவாக கவலை அடைந்தார். சாந்தா இப்பொழுது பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரியில் சேர்ந்து விட்டாள். அந்த தகவல்களை தன் மகளுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்பது சிவனின் விருப்பமாக இருந்தாலும் கூட உண்மை இவற்றைப் பற்றியெல்லாம் கேட்டுக் கொள்ளும் நிலையில் இல்லை. அவளைப் பொருத்தவரை சிவன் எந்த வீட்டில் வேலை செய்யும் கணக்குப்பிள்ளை மட்டுமே. இப்படிப்பட்ட ஒருவனுக்கு தெரிந்தே தண்ணி திருமணம் முடித்து வைத்த தந்தை பற்றி அவளுக்கு மரியாதை விட்டுப் போயிற்று. அதனால் தந்தையையும் தாயையும் தூர நிறுத்திய பழகிக் கொண்டாள்.

ஒருவழியாக, தேர்தல் நாள் வர, அருணாச்சலம் தன் தொகுதியில் மீண்டும் எம் எல் ஏ வாக நிற்க, வீட்டிலோ உமா மயங்கி விழுந்து இருந்தாள்.

உமா மீண்டும் எழுந்து கொள்வாளா?









 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top