JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம் -2

saaral

Well-known member
அத்தியாயம் -2

சஹானா அன்று மாலை கல்லூரியில் இருந்து கிளம்பினாள் ...இன்று மிருது விடுமுறை எடுத்திருந்தாள் . செல்லும் வழியில் சஹானாவின் ஸ்கூட்டி டயர் பஞ்சர் ஆனதால் தனித்து நின்று இருந்தாள் .அப்பொழுது அவளின் அருகே ஒரு கார் வந்து நின்றது ....

அதில் இருந்து இறங்கியவனை பார்த்து "ஹாய் " முகமலர்ச்சியுடன் ஆர்பாட்டமாய் கூறினாள் .

அவளின் அருகில் வந்த பிரவீன் "ஹாய் என்னாச்சு , பஞ்சர் ஹா ?" என்றான் .

"ஹ்ம்ம் ஆமாம் மெக்கானிக்கு கால் பண்ணிருக்கேன் வரேன் சொன்னார் " சலிப்புடன் கூறினாள் .

"என்ன இவ்ளோ லேட் காலேஜ் எப்பயோ முடிஞ்சிருக்குமே , மிருதுவும் இன்னைக்கு அம்மாவோட வெளிய போயிருக்காள் காலேஜ் வரலை தானே ...." யோசனையுடன் அவளை பார்த்துக்கொண்டே கேட்டான் .

"ஆமா இன்னைக்கு ஒரு கல்சுரல் ப்ராக்டீஸ் அதான் லேட் " அவளின் அசதி அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது .

"சரி வா மெக்கானிக் வந்தொடனே சாவி கொடுத்துரு நான் உன்னை ட்ரோப் பண்றேன் " என்றான் , அவளின் அயர்வை உணர்ந்து இதற்குமேலும் ரோட்டில் பெண்பிள்ளை தனித்து நிற்கவேண்டாம் என்று எண்ணி சொன்னான் .

எந்த மறுப்பும் சொல்லாமல் வெகு இயல்பாக "ஹப்பா தேங்க்ஸ் ....அம்மா அங்க தவிச்சு போயிருப்பாங்க ...நான் எப்படி சீக்கிரம் போறதுன்னு யோசிச்சுட்டே இருந்தேன் மொபைல் சார்ஜ் போய்டுச்சு "பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கூறினாள் . அதற்குள் மெக்கானிக் வரவும் இருவரும் பிரவீனின் காரில் கிளம்பினர் .

"நாளைக்கு எப்படி காலேஜ்க்கு போவ ? உன் ஸ்கூட்டி இல்லையே " மனதினுள் ஒரு கணக்கு போட்டு கேட்டான் .

"பஸ்ல தான் போகணும் ...இல்லன்னா ஆட்டோ " என்றாள் .

"ஏன் உன் அப்பா ?" பேச்சை வளர்க்க அவன் விரும்பினான் .

இத்தனை நேரம் இருந்த இலகு தன்மை இப்பொழுது அவளிடம் இல்லை . மிகவும் இறுக்கமாக மாறினாள் . அவளின் முகத்தை காண அந்த ஆறடி ஆண்மகனுக்கே உள்ளுக்குள் பதறியது ....

"ஹே ஏதாச்சும் தப்பா கேட்டுடேனா " பதட்டத்துடன் கேட்டான் .

"இல்லை அப்பா இப்ப உயிரோட இல்லை "இருக்கத்துடனேயே கூறினாள் .

"ஓஹ் சாரி என்னாச்சு உடம்புக்கு ஏதாச்சும் " பாவம் என்று எண்ணினான் பிரவீன் .

"அவர் உடம்புக்கு என்ன ரொம்ப சூப்பரா இருந்தார் ...அவர் ஒரு ஜெர்னலிஸ்ட் நிறைய எதிரிகள் ...அதன் பலன் இப்போ எங்களோட இல்லை " கோபமாக கூறினாள் .

"ஓஹ் " என்ன சொல்வதென்று பிரவீனிற்கு தெரியவில்லை . அவனும் வருத்தத்துடன் தான் காரை செலுத்தினான் .

சஹானா சொன்ன வழியில் சென்றவன் அந்த கேட்டட் கம்யூனிட்டி என்று சொல்ல கூடிய ஒன்று போல் வரிசையாக இருக்கும் பல வீடுகளின் நடுவில் ஒரு வீட்டின் முன் சென்று நின்றான் .

"உள்ள வாங்க " என்றாள் சஹானா .

"இல்லை பரவாலை இன்னோரு நாள் பார்க்கலாம் , ஆமா உன் கூட பொறந்தவங்க ....?" அவளை பற்றி அவளின் வாயிலாக தெரிந்துக்கொல்லும் ஆவல் அவனிடம் .

"ஒரு சிஸ்டர் பட் அவளை தொலைச்சு ரொம்ப வருஷம் ஆச்சு , தேடிட்டு இருக்கோம் ...சின்ன வயசுல கோயில் கும்பாபிஷேகத்துல காணாம போய்ட்டா " வருத்தத்துடன் மிகுந்த வலியுடன் வந்தது அவளின் சொற்கள் .

"ஓஹ் வீட்ல யார்லாம் இருக்கீங்க ?"

"நானும் அம்மா மட்டும் தான் , அப்பாவோட வீடு இதே சென்னைல வாடகைக்கு விட்ருக்கோம் அந்த வருமானம் கொஞ்சம் பேக்கப் டெபாசிட் சோ ஸ்மூத்தா போகுது " என்று கூறிக்கொண்டே இறங்கினாள் .

"தேங்க்ஸ் ட்ரோப் பண்ணதுக்கு " என்று திரும்பி வீட்டினுள் நுழையப்போனவள் அவனின் குரலில் நின்றாள் .

"நாளைக்கு நான் மிருதுவோட வந்து பிக்கப் பண்றேன் " என்றான் .

உடனே பதறி "இல்லை வேண்டாம் நானே பார்த்துகிறேன் ...தேங்க்ஸ் "என்று கூறி உள்ளே சென்றுவிட்டாள் .

அவளின் பதட்டத்தை ஏன் என்று யோசித்தவன் 'ஓகே மிடில் கிளாஸ் பீப்பிள் இருக்க ஏரியா சோ அடிக்கடி வரது நல்லதுக்கு இல்லை அதான் பயப்படறா ' என்று தனக்குள்ளாக எண்ணிக்கொண்டான் .

உள்ளே வந்த சஹானாவை தாவி வந்து கட்டிக்கொண்டு கதறினார் கீர்த்தனா "அம்மு அம்மு வந்துட்டயா ....உன்னை எவ்ளோ தேடினேன் தெரியுமா ...பயந்தே போய்ட்டேன் ஏன் லேட் "அவள் முழுதாக நன்றாக இருக்கிறாளா என்று தடவிப்பார்த்து மனதை தேற்றினார் .

"ம்மா ...இங்க பாருங்க எனக்கு ஓன்னும் இல்லை சரியா ....நீங்க ரிலாக்ஸ் ஆகுங்க " அவரை சில பல அதட்டல்களுடன் சுயநினைவிற்கு கொண்டுவந்தாள் சஹானா .

"லீலா " என்று சஹானா உரக்க கூப்பிட்டாள் .

பயந்துகொண்டே அவள் முன் வந்து நின்ற லீலா "மேடம் " நடுக்கத்துடன் வந்தது வார்த்தைகள் .

"உங்களை இங்க எதுக்கு வேலைக்கு வச்சிருக்கு " கோபம் சஹானாவின் கண்களில் வார்த்தைகளில் அத்தனை கோபம் .

"மேடம் "

"சொல்லுங்க "

"அம்மாவை பார்த்துக்க "

"ஹ்ம்ம் நான் வர கொஞ்சம் லேட் ஆகும்னு உங்களுக்கு கால் பன்னிட்டு தான சுவிட்ச் ஆப் பண்ணேன் ...அம்மாக்கு எடுத்து சொல்லி சமாதானம் செய்ய மாடீங்களா ?" கடுமையாக வந்தது வார்த்தைகள் .

"மேடம் நான் எவ்ளோவோ எடுத்து சொன்னேன் உங்க கிட்ட பேசாம சமாதானம் ஆகமாட்டேனு அடம் பிடிச்சாங்க ....என்னால முடியலை ரூமை ஒரு வழி செஞ்சுட்டாங்க " பாவமாக வந்தது லீலாவின் குரல்.

அப்பொழுதுதான் லீலாவை கவனித்தாள் சஹானா ...'ச்ச எங்கயோ இருக்க கோவத்தை இவங்க மேலகாட்டிட்டேனே ' "லீலா உங்க கைல என்ன அடி பட்டிருக்கு " .

"அது மேடம் அம்மா ரூம்ல கைல கிடைச்சதை தூக்கி வீசினாங்க அதான் " இழுத்துவைத்தாள் லீலா .

"ப்ச் சாரி லீலா ...இப்ப குரு வருவார் அவர் கூட போய் டிரீட்மென்ட் பார்த்துட்டு வீட்டுக்கு போங்க " இது தான் சஹானா எவ்வளவுக்கு எவ்ளோ கோவம் இருக்கிறதோ அதே அளவு நல்ல குணங்களும் இருக்கும் . தான் செய்தது தவறு என்று தெரிந்தாள் உடனே மன்னிப்பு கோருவாள் .

"மேடம் அம்மாவை ..."

"லீலா முதல உங்களை கவனிங்க ஒரு நாள் தானே அம்மாவை நான் பார்த்துகிறேன் " அவ்ளோதான் பேச்சு என்பதை போல் தனது அலைபேசியை எடுத்த சஹானா யாருக்கோ அழைத்தாள் .

அந்த பக்கம் அழைப்பை ஏற்றவுடன் "குரு கொஞ்சம் வீட்டுக்கு வாங்க , லீலாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ட்டு வீட்ல விட்ருங்க " அதன் பிறகு அவளின் நேரம் மொத்தமும் அம்மாவை சமாதானம் செய்து , உண்ணவைத்து , உறங்கவைப்பதிலே சென்றது .

அங்கு வீட்டிற்கு சென்ற பிரவீன் மனதில் முழுதும் சஹானா ....முன்பு இருமுறை அவளை தூரத்தில் நின்று பார்த்திருக்கிறான் .அவளின் துறுதுறுப்பும் ,உதவும் குணமும் அவனை ஈர்த்தது . அப்பொழுது அவள் பதினாறு வயது ,பள்ளியில் படிக்கும் பெண் . அவளின் வயது தன்னுடைய நிலை அனைத்தையும் யோசித்து அந்த சிறு பெண்ணை தொடராமல் இருந்தான் .

ஓராண்டு களித்து மீண்டும் அவளை பார்த்தான் ஒரு புகைப்படத்தில் . அப்பொழுதுதான் அவளின் பெயர் சஹானா என்பதை பிரவீன் அறிவான் . பிறகு மீண்டும் தனது வேலையில் கவனத்தை திருப்பினான் .

மீண்டும் பல மாதங்கள் களித்து சஹானா ...முன்பு இருமுறையும் அவளின் முகத்தை நேராக பார்த்தது இல்லை இப்பொழுது அவன் அருகினில் அவள் ...."இனி உன்னை விட மாட்டேன் சஹானா நீ என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ற ....படிச்சு முடி உனக்காக நான் இருக்கேன் " கணினியில் இருந்த புகைப்படத்தை பார்த்து வலது கையின் விரல்களில் பேனாவை சுலட்டிக்கொண்டே உரையாடினான் .

..............................

அங்கு சஹானா தனது அறையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தாள் . அப்பொழுது அவளின் அலைபேசி தனது இருப்பை உணர்த்தியது .

"ஹலோ சொல்லுங்க " என்றாள் சஹானா .

"மேம் உங்களுக்கு ரிப்போர்ட் மெயில் பண்ணிருக்கேன் "

"லைன்ல இருங்க பாக்கறேன் "

"எஸ் வந்திருக்கு எல்லாமே க்ளீயரா இருக்கு பட் எப்படி ?" குழப்பத்துடன் கேட்டாள் சஹானா .

"மேம் எனக்கும் அதே டவுட் இருக்கு , அவரை இப்ப வரைக்கும் ஷடோவ் பண்ணதுல ரிப்போர்ட் கிளீயர் ...பட் ஒரு விஷயம் மட்டும் கிளாஷ் ஆகுது மேம் " அந்த பக்கத்தில் இருந்து வந்த குரல் தயக்கத்தை காட்டியது .

"என்னனு சொல்லுங்க "

"மேம் அந்த டேட் அவர் கோத்தகிரி போலீஸ் ஸ்டேஷன் போயிருக்கார் ....மிஸ்டர் விஸ்வம் அண்ட் மிஸ்டர் பிரவீன் அப்பறம் அவரின் தம்பி சதீஷ் எல்லாருமே ஸ்டேஷன் போயிருக்காங்க ...."

"ப்ச் ...இப்ப என்னபண்றது "

"மேம் சாருக்கும் மெயில் பண்டேன் அவர் உங்க கிட்ட பேசுறேன்னு சொன்னார் "

"சரி நீங்க வைங்க நான் பார்த்துட்டு சொல்றேன் " இணைப்பை துண்டித்து சஹானா அந்த மெயிலை கவனமாக பார்கலானாள் .

அதற்குள் அவளின் அலைபேசி மீண்டும் ஒளி எழுப்பியது . யாரென்று பார்க்காமல் கணினியை பார்த்துக்கொண்டே அழைப்பை ஏற்றாள் "ஹெலோ "

"சஹானா " அந்த பக்கத்தில் நாற்பதுகளின் இறுதியில் இருக்கும் ஒரு நபரின் குரில் .

சந்தோசத்துடன் "அப்பா "என்று கூப்பிட்டாள் சஹானா .

"எப்படி மா இருக்க "

"அப்பா நல்லா இருக்கேன் நீங்கல்லாம் எப்படி இருக்கீங்க " சஹானா கண்கள் கலங்க கேட்டாள் .

"உன்னை ரொம்ப மிஸ் பண்றோம் சஹானா " என்றவரின் கையில் இருந்த அலைபேசி பிடுங்கப்பட்டது "ஏண்டி இதெல்லாம் தேவையா ....பதினெட்டு வயசு சின்ன பொண்ணு உன்னைய ரிஸ்க்ல மாட்டி வைப்பார் போல உன் அப்பா " சஹானாவை போலே ஒரு பெண்மணி பட்டாசாக பொரிந்தார் .

"மை ஸ்வீட் லட்டு மம்மி நான் யார் வளர்ப்பு அப்படிலாம் ரிஸ்க்ல மாட்ட மாட்டேன் ...அண்ட் அப்பா 24 * 7 பின்னாடியே போலோவ் பண்ண ஆள் வச்சிருக்கார் ...." கேலியாக கூறினாள் சஹானா .

"சஹானா எப்படிம்மா கண்டுபிடிச்ச "

"நான் உங்க பொண்ணு அப்பா ....!" கூறி சற்று நேரம் அவர்கள் இருவருடனும் கலகலத்தவள் மிகத்தீவிரமாக பேசத் தொடங்கினாள் .

"அப்பா ரிப்போர்ட் பார்த்தீங்களா "

"பார்த்தேன் சஹானா எனக்கென்னமோ சதீஷயும் ஷடோவ் பண்ணனும் தோணுது , பிரவீன் ரிப்போர்ட் கிளீயர் பட் இடிக்கிற விஷயம் அந்த நைட் எதுக்காக மூணு பேரும் கோத்தகிரி போகணும் ....அவங்க பப்ளிக் ஆர் ஏர் டிரான்ஸ்போர்ட் யூஸ் பண்ணல ....கார்ல தான் போயிருக்கனும் சம்திங் பிஷி" என்றார் யோசனையாக .

"அதே தான் நானும் நினச்சேன் அப்பா பார்ப்போம் நமக்கு இன்னும் டைம் இருக்கு ... பிரவீனை நான் பார்த்துகிறேன் , சதீஷ் இப்ப சிங்கப்பூர்ல தான் ப்ராஜெக்ட் பன்னிட்டு இருக்கான் ...அவனை விடாம போல்லோவ் பண்ண சொல்லுங்க ...இங்க வந்தப்பறம் பார்த்துக்கலாம் " யோசனையுடன் வந்த மகளின் குரல் அந்த தந்தைக்கு என்ன உணர்த்தியதோ ...

"அம்மாடி சஹானா ....கஷ்டமா இருந்தா வந்திரு மா அப்பா நான் எல்லாத்தையும் பார்த்துகிறேன் " வருத்தத்துடன் கூறினார் .

"அப்பா ப்ளீஸ் கீர்த்தனா அம்மாவை பத்தி யோசிங்க இப்ப நான் இங்க தான் இருக்கனும் ....யாராச்சும் பிரச்சனைன்னு வந்தா அந்த வீட்டு ஆண்மகன் மட்டும் தான் கேள்வி கேட்கணுமா ..நாங்களும் கேக்கலாம் அப்பா " என்றாள் சஹானா ..

"விடுங்க சஹானா இப்ப அங்க தான் இருக்கனும் நாம பார்த்துக்கலாம் " ஒரு அம்மாவாக இன்னொரு அன்னையின் உணர்வை புரிந்து கொண்டு அவர் தனது கணவருக்கு எடுத்து கூறினார் .

"ம்மா ..." என்று நிறுத்தினாள் சஹானா .

"சொல்லுடாமா ..."

"அவ அவ எப்படி இருக்கா ..." எங்கே உடைந்து விடுவோமோ என்று பயந்தாள் சஹானா .

"இருக்கா உசுரோட வயர் , ட்யூப்க்கு நடுல ஜடமாட்டம் இருக்கா ....இருக்கானு சந்தோச படறதா இல்லை இதுக்கு நம்ம கண்லயும் கருத்துலயும் படாமல் இருந்திருக்கலாம்னு நினைக்கிறதான்னு சொல்லத்தெரியாம இருக்கேன் " கண்ணீருடன் கூறினார் .

தனது உணர்வுகளை கட்டுப்படுத்திய சஹானா "ம்மா என்ன பேச்சு ...அவ சீக்ரம் சரி ஆகிவந்துடுவா ...நாம எல்லாம் எதுக்கு இருக்கோம் .... நமக்காக ,கீர்த்தனா அம்மாவுக்காக கண்டிப்பா திரும்ப வருவா " திடமாக பேசினாள் .


"ஓகே அப்பா எனக்கு படிக்கணும் நான் போன் வைக்கிறேன் , பை ம்மா ...மிஸ் யூ குட் நைட் " என்று கூறி இணைப்பை துண்டித்தாள் .

மனதில் காலத்துக்கும் அளிக்க முடியாத ரணங்கள் பல , கண்ணீர் சிந்தினால் தன்னை சுற்றி இருக்கும் பலர் வருந்துவர் , முக்கியமாக கீர்த்தனா அம்மா துடித்து விடுவார் என்று எண்ணி தனது கவனத்தை படிப்பின் பக்கம் செலுத்தினாள் .
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top