JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம் -5

saaral

Well-known member
அத்தியாயம் -5

திரும்பி பார்த்த சஹானா அங்கு பிரவீனை கண்டு துணுக்குற்றாள் "நீங்க இங்க என்னபண்றிங்க ?" .

"அதை நான் கேக்கணும் சஹானா விடியாமல் இந்த காலை வேளையில தனியா என்ன பண்ற ?" துளைக்கும் பார்வையுடன் கேள்வி கேட்டான் பிரவீன் .

அப்பொழுதுதான் சுற்றியும் பார்வையை சுழற்றினாள் அங்கு ஒரு சிலரே நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனர் . ஆழ மூச்சை இழுத்து வெளியேற்றி தன்னை சமன் செய்ய முயன்றாள் .

"ஏதாச்சும் பிரச்னையா மா ?"தன்னை அறியாமல் அவளின் கரம் பற்றி பாசத்துடன் கேட்டான் பிரவீன் .

சஹானாவும் அவனின் கண்களை ஆழ்ந்து நோக்கினாள் . அவனின் பார்வையில் தெரிந்த காதலை நேர்கொண்டு பார்க்க இயலாமல் வேறு பக்கமாக பார்வையை திருப்பினாள் , ஆனால் அவனின் கைகளில் இருந்து தனது கையை எடுக்க முற்படவில்லை .

"சஹானா என்னைப்பார் என்ன பிரச்சனை சொல்லு " அவள் வாய்திறக்க வேண்டி பொறுமையாக கேட்டான் .

"தூக்கம் வரலை அதான் இங்க வந்து உக்காந்திருக்கேன் " பார்வையை அங்கு இருந்த ஒரு பூவின் மேல் பதித்து பேசிக்கொண்டிருந்தாள் .

"அதான் ஏன் தூக்கம் வரலை ?" விடாப்பிடியாக கேட்டான் பிரவீன் .

"அம்மாவுக்கு கொஞ்சம் முடியலை கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் மறந்துட்டு வராங்க ...." அவள் சொல்வது உண்மைதான் கீர்தனாவிற்கு எதுவும் நியாபகத்தில் இருப்பதில்லை ...சஹானாவை மட்டுமே நியாபக அடுக்கில் பொக்கிஷமாக பார்த்து வந்தவர் நேற்றைய தினம் அவளையும் 'நீ யார் ' என்று கேட்டுவிட்டார் .

"உக்கார்ந்து பேசலாமா இல்லை அப்படியே நடந்துக்கிட்டே பேசலாமா ?" உன்னை இன்று விடுவதாக இல்லை என்பது போல் இருந்தது பிரவீனின் பேச்சு .

"நடந்துட்டே பேசலாம் , அதுக்கு முன்னாடி என் கை " என்றாள் சஹானா .

அப்பொழுதுதான் குனிந்து பார்த்தவன் அவளின் கை தன் கைகளினுள் இருப்பதை உணர்ந்தான் , அதன் மென்மையையும் சேர்த்தே உணர்ந்தான் . உணர்ந்தவன் மனது மிருதுவானது .

"சாரி " புன்னகையுடன் கூறி கையை விட மனமில்லாமல் விட்டான் அவன் .

சற்று நேரம் நடந்துகொண்டிருந்தவர்களின் இடையில் மௌனமும் , அமைதியும் ஆட்சி செய்தது . அதை கலைத்த பிரவீன் "உன் அம்மாக்கு என்னாச்சு ...அவங்களுக்கு ஏதோ உடல் நிலை சரி இல்லைனு தெரியும் ஆனால் என்னனு தெரியாது ..."

"அம்மாக்கு அல்சைமர் " ஆழமான குரலில் வலியை தாங்கிக்கொண்டு சொன்னாள் சஹானா .

"எதுனால ?"

"அவங்களுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு தான் குழந்தை வந்துச்சு , அதுக்குள்ள குழந்தை எப்பன்னு கேட்டு கேட்டு எல்லாரும் மன அழுத்தம் கொடுத்தாங்க அப்ப ஆரம்பிச்ச பிரச்சனை அப்பா இறந்தப்ப அவங்க முழுசா ஒடஞ்சுட்டாங்க ..." இதை சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதுஅவளின் முகத்தில் வலியை விட இறுக்கமே அதிகமாக இருந்தது .

"டிரீட்மென்ட் எங்க பாக்றீங்க ?"

அவள் சொன்ன மருத்துவமனையின் பெயர் பிரபலமானது ...பணமும் அதிகம் செலவாகும் என்று உணர்ந்தே இருந்தான் .

"பணத்துக்கு தனி ஆளா எப்படி மேனேஜ் பண்ற ?"

"அதான் சொன்னேனே அப்பா , அம்மா வழில வந்த சொத்து , இருக்குற பேங்க் டெபாசிட் ...இதுல மேனேஜ் பண்றேன் ...பணத்துக்கு இப்ப வரைக்கும் பிரச்சனை இல்லை "

"இனியும் பிரச்சனை வராது என் சஹானா !" தன்னை அறியாமல் சொல்லிவிட்டான் பிரவீன் .

"வாட் ?"

"இல்லை மிருது உன் வேலைக்கு சொல்லிருந்தா ....அப்டேர் செமஸ்டர் இன்டெர்வியூ அட்டென்ட் பண்ணு ....நல்ல பே கிடைக்கும் ...உனக்கு கோடிங் எல்லாம் நல்லா வருதே ..." என்றான் .

"நான் மிருதுகிட்ட இத பத்தி பேசினதே இல்லை ....எதுக்கு ரெகமெண்ட்டேஷன் ?" முகத்தை சுளித்தாள் சஹானா .

"ஹே சில் எனக்கும் ரெகமெண்ட்டேஷன் பிடிக்காது ....எனக்கு உன் கினோலேட்ஜ் பத்தி தெரியும் நிச்சயம் நீ இன்டெர்வியூல செலக்ட் ஆவ "

"என்னை பத்தி எப்படி தெரியும் ?" அவனை புருவத்தின் நடுவில் முடிச்சுடன் பார்த்து கேட்டாள் .

'சொந்த செலவுல சூனியம் வச்சுகிட்டயே பிரவீன் ' மனத்திற்குள்ளாக பேசிக்கொண்டான் .

"அது மிருதுக்கு உன்னை பத்தி மட்டும் தான் பேச்சு ....எப்பயும் உன் புராணம் தான் , இனபாக்ட் உன் ஜாப் பத்தி போன வருஷமே என்கிட்ட சொல்லி வச்சுட்டா ....பாசம் வச்சா அவளை மிஞ்ச ஆள் இல்லை ,அவ தான் சொன்னா " எப்படியோ சமாளித்தான் பிரவீன் .

அதற்குள் இருவரும் சஹானாவின் வீட்டை அடைந்தனர் . "உள்ள வாங்க சார் " என்றாள் .

மறுப்பேதும் கூறாமல் அவள் பின் சென்றவன் அங்கு கூடத்தில் இருந்த நீள்விரிக்கையில் அமர்ந்தான் .

"காபி குடிப்பீங்களா ?"

"ஹ்ம்ம் ஓகே " என்று வீட்டை சுற்றி பார்வையை செலுத்தினான் .

'நேர்த்தியை அழகா இருக்கு ' எளிமையாக அதே நேரம் அழகாக இருந்தது அந்த வீடு . சுவற்றில் அடித்திருக்கும் நிறம் , திரைசீலை , இருக்கை , நீள்விரிகை அனைத்தும் கண்களுக்கும் மனதிற்கும் குளுமையாக இருந்தது .

காபியுடன் வெளியே வந்தவள் அவனின் பார்வையையும் , உதட்டில் இருக்கும் புன்னகையையும் பார்த்தாள் . மனதில் வேகமாக சில கணக்குகள் போட்டாள் .

காபியின் நறுமணத்தால் அவள் பக்கம் திரும்பியவன் "நைஸ் இன்டீரியர் சஹானா " என்று பாராட்டினான் .

"தேங்க் யு சார் "

அவளின் சார் என்ற அழைப்பு அவனுள் நெருடியது . 'டேய் அமைதியா இரு இல்லை திரும்ப ப்ரோ அண்ணனு எதையாச்சும் சொல்லி வச்சுடுவா ' என்று மூளை விடுத்த எச்சரிக்கையில் அமைதிகாத்தான் .

"நீங்க இந்த பக்கம் எப்படி வந்தீங்க சார் " மீண்டும் தனது கேள்வியால் அவனை துளைத்தாள் .

'பிரவீன் உஷாரா இரு ' அவனே அவனுக்கு சொல்லிக்கொண்டவன் ,"இல்லை பீச்ல ஜாகிங் போலாம்னு கிளம்பினேன், போற வழில உன்னை பார்த்தேனா அதான் தனியா இருக்கிறயேனு வந்தேன் " ஷப்பா என்று இருந்தது பிரவீனிற்கு .

"உங்க வீட்ல இருந்து பீச் போகிற வழி இது இல்லையே " துளைக்கும் பார்வை பார்ப்பது இப்பொழுது அவளின் முறையானது .

'அய்யயோ கேள்வியா கேட்டு படுத்தறாளே ' "என் பிரின்ட் வீடு பக்கத்து ஏரியா அவனும் வரேன்னு சொன்னான் அதான் ....ஆமாம் உன் அம்மா எங்க ?" பேச்சை திசை திருப்ப முயன்றான் .

சஹானா புரிந்துகொண்டாள் , ஆனால் அதை காட்டிக்கொள்ளாமல் "அம்மா மாத்திரை சாப்பிடறதால நல்லா தூங்குவாங்க அதான் நான் சும்மா வாக் போய்ட்டு வந்தேன் " என்றாள் .

"அம்மாவை தனியாவா விட்டுட்டு போன ?"

"இல்லை முன்னாடி லீலா அக்கா பகல் நேரம் மட்டும் வருவாங்க , இப்ப அம்மா நிலைமை மோசமாகறதால இங்கயே தங்க சொல்லிட்டேன் "

"ஒஹ் " என்றான் . அதற்குமேல் என்ன பேச என்று அவனுக்கு தெரியவில்லை .

"நீங்க வந்து ரொம்ப நேரம் ஆச்சே! " இன்னும் கிளம்பாமல் என்ன செய்கிறாய் என்று கேட்பது போல் இருந்தது .

"ஹான் ஆமாம் கிளம்பனும் , ஓகே சஹானா எதை பத்தியும் யோசிக்காத உனக்கு நாங்கள்லாம் இருக்கோம் ....இந்த எக்ஸாம் நல்லா பண்ணு ...பார்த்துக்கலாம் " என்று கூறி எழுந்தான் .

"ஹ்ம்ம் ஓகே சார் " என்றாள் .

"கிளம்பறேன் சஹானா ஏதாச்சும் ஹெல்ப் வேணும்னா கால் பண்ணு " சொல்லி இரண்டடி முன்னே சென்றிருக்க மாட்டான் .

திரும்பி வந்து "உன் போன் நம்பர் சொல்லு ..."

சஹானாவும் சொன்னாள் . தனது அலைபேசியில் அதை பதிவு செய்துகொண்டு அவளிற்கு மிஸ்ட் கால் தந்தான் ."நான் தான் , இது தான் என் நம்பர் ஓகே பை ".

என்று கூறி நடந்து சென்றவன் நின்றான் . கதவை சாத்த கவனமாக அவன் பின் வந்தவளும் நின்றாள் "காபி சூப்பர் ...தேங்க்ஸ் " புன்னகையுடன் ஒருவழியாக சஹானாவின் வீட்டை விட்டு வெளியேறினான் .

அன்றைய பொழுது பிரவீனிற்கு மிகவும் உற்சாகமாக சென்றது , அதே நேரம் சஹானாவின் துயர் துடைக்கை அருகில் இருக்க அவன் உள்ளமும் உடலும் துடித்தது .

சஹானா யோசனையில் சுற்றிக்கொண்டிருந்தாள் .

..............................

ஒரு வாரம் சென்றிருந்த நிலையில் ,சதீஷ் அவன் நண்பன் ஆனந்தின் அழைப்பில் மிகவும் குழம்பிப் போய் இருந்தான் . அவனின் மனம் ஒருநிலையில் இல்லை .

"நான் செஞ்சது எவ்ளோ பெரிய தப்பு ...இதுனால எத்தனை உயிர் ச்ச " தன்னுடைய பிம்பத்தை கண்ணாடியில் பார்த்து தன்னையே திட்டிக்கொண்டான் .

சதீஷ் படிப்பிலும் , தொழிலும் சிறந்து விளங்குபவன் ஆனால் அவனின் குணம் அப்படியே அவனின் பெற்றோரை கொண்டது , காசு பணம் அதற்காக எவ்ளவு வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கலாம் என்றிருந்தான் .

ஆனந்தின் நட்பும் அதன் மூலம் வரும் ஆதாயம் கொண்டே தொடங்கியது . நாட்கள் செல்ல செல்ல ஆனந்தின் நடவடிக்கை சதீஷின் மனதிற்கு ஒப்பவில்லை . விலக நினைக்கையில் ஆனந்துடன் ,சதீஷும் ஒரு பிரச்னையில் மாட்டினான் . அதில் இருந்து வெளி வர அவன் செய்த வேலைகள் அவன் மனதை கூறு போட்டது .

காலம் கடந்துவிட்டது என்று அவன் அறிவான் . இருந்தும் மனமெல்லாம் ரணமாக இருந்தது அதை மறக்க முடியாவிடிலும் , நினைக்காமல் இருக்கவே ஒரு இடத்தில் தாங்காமல் பறந்துகொண்டே இருந்தான் .

இப்பொழுது ஜெர்மனியில் ஒரு நிறுவனத்திற்கு செய்து கொடுக்க வேண்டிய ப்ராஜெக்ட் விஷயமாக வந்திருக்கிறான் . இங்கிருந்து நாடு திரும்ப எப்படியும் ஆறு மாதங்கள் எடுக்கும் என்று அவன் அறிவான் .

சதீஷ் அன்றைய இரவு வாடகைக்கு எடுத்திருக்கும் சிறிய ஹோட்டல் அபார்ட்மெண்டிற்கு வந்தான் . வந்தவன் மிதமான ஒளியில் உள்ளே சென்று முதலில் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டான் .

முகத்தை துவாலையில் துடைத்துக்கொண்டே வந்தவன் அந்த அறையில் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தான் . என்னவென்று அவனால் இனம் கான முடியவில்லை . ஆனால் அவனின் மனம் படபடவென்று அடித்துக்கொண்டது .

சுற்றிலும் பார்த்தவன் அவனின் முதுகுக்கு பின் திரும்பினான் , திடிக்கிடலுடன் தரையில் பின் பக்கமாக சரிந்தான் . கைகளையும் கால்களையும் வேகமாக செலுத்தி பின் சென்றான் .

அவன் முதுகிற்கு பின் தெரிந்த அந்த உருவம் அவனை கூர்மையாக பார்த்தது ....

"நீ ...நீ எப்படி " வார்த்தைகளுக்கு பஞ்சமாகியது .

அந்த உருவம் சத்தமாக சிரித்தது ....ஒருநொடி சதீஷின் உயிர் அவனிடம் இல்லை .

பின் சுதாரித்து மெதுவாக அந்த உருவத்தை நெருங்கியவன் "அம்மு " என்று சொல்லிக்கொண்டே தொட முயன்றான் அந்த உருவம் மாயமாக மறைந்தது . சதீஷ் பித்து பிடித்தவன் போல் தேடினான் ...

அந்த அறையை தலைகீழாக புரட்டிப்போட்டன் ...தான் கண்டது கனவா ...இல்லையே சிரிக்கும் சத்தம் கேட்டதே என்று அவன் மனம் இருவேறு கோணத்தில் வாதிட்டது .

"ஒஹ்ஹ்ஹ்ஹ்ஹ" என்று கத்திகொண்டே தலையை பிடித்து இருக்கையில் சென்று விழுந்தான் .

...................................

பரீட்சை நடந்துகொண்டிருந்தது , இன்னும் ஒரு பரீட்சை மட்டுமே இருந்தது சஹானாவிற்கு . படிப்பதற்காக அன்று விடுமுறை விட்டிருந்தனர் . வீட்டில் தனது அறையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தாள் .

திடீர் என்று "அம்முஉஉஉஉஉஉஉ " என்று வீறிட்டுக்கொண்டே எழுந்த கீர்த்தனா அவர்கள் ,அவரை பிடிக்க வந்த லீலாவை தள்ளிவிட்டு வெளியே செல்ல முயன்றார் .

அதற்குள் அங்கு சத்தம் கேட்டு வந்த சஹானா ...."அம்மா " என்று அழைத்துக்கொண்டே இருந்தாள் .

கீர்த்தனா அவர்களோ சஹானாவின் அழைப்பையும் மீறி "என்ன விடு அம்மு , அம்மு மேல எல்லாம் ரத்தம் ,,,என் அம்மு நான் பார்க்கணும் " என்று சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னார் .

ஒரு கட்டத்திற்கு மேல் அவரை சமாளிக்க இயலாமல் கடுமையாக அவரின் தோல் பற்றி திருப்பி பலமாக உலுக்கிய சஹானா ...

"அம்மா இங்க பாருங்க , நல்லா பாருங்க நான்தான் உங்க அம்மு ...உங்க முன்னாடியே இருக்கேன் பாருங்க " ஒருவழியாக அவரை சமாதானம் செய்தாள் .

"அம்மு அம்முமா உனக்கு ஒன்னும் இல்லையே உன் உடம்பெல்லாம் ரத்தம் ,அம்மா பயந்தே போய்ட்டேன்டா " சிறுகுழந்தை போல் முகத்தை வைத்துக்கொண்டு கூறியவாறு பார்க்கையில் சஹானாவின் நெஞ்சம் விம்மியது .

"அம்மா இங்க பாருங்க உங்க முன்னாடி முழுசா இருக்கேன் ...சரியா எனக்கொண்ணும் இல்லை நீங்க அமைதியா இருங்க "அவரை சமாதானம் செய்துகொண்டே லீலாவிற்கு கண் ஜாடை காட்டினாள் .

அதை புரிந்துகொண்ட லீலா மாத்திரையும் தண்ணீரும் கொண்டு வந்து சஹானா முன் வைத்துவிட்டு நகர்ந்தார் .

"அம்மா நீங்க இப்ப மாத்திரை போடுவீங்களாம் , தூங்கி எழுந்து நாம லீலாவை விட்டுட்டு பார்க்குக்கு போலாமாம் " சிறு குழந்தைக்கு புகட்டுவதுபோல் அவருடன் போராடி மாத்திரை கொடுத்தவள் ,கைத்தாங்கலாக அழைத்துச்சென்று அவர் அறையில் படுக்கவைத்தாள் .

அவர் தூங்கும் வரை கை பிடித்து அமர்ந்திருந்தவள் , அவர் உறங்கிய பின் கையை உருவ முயன்றாள் ,முடியவில்லை . லீலாவிடம் தனது அலைபேசியை எடுத்து வரச்சொன்னவள் கீர்த்தனாவை கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் .

அலைபேசி கைக்கு வந்தவுடன் மருத்துவரை அழைத்து வீட்டுக்கு வரச்சொன்னாள் .

மருத்துவரும் வந்து பார்த்து அவரின் நடவடிக்கை பற்றி கேட்டறிந்தவர் "அவங்க லைப் பைனல் ஸ்டேஜ் நெருங்க ஆரம்பிச்சிருச்சு சஹானா ...கவனமா பார்த்துக்கோங்க ....முக்கியமா பாசமா பார்த்துக்கோங்க " என்று கூறி சில மருந்து மாத்திரைகளை எழுதிக்கொடுத்தார் .

"அம்மா ப்ளீஸ் போய்டாதீங்க நீங்க பார்க்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு ....அதை பார்க்காமல் போனால் உங்களுக்கு என்னால் நியாயம் செய்ய முடியாது அம்மா ப்ளீஸ் " மருத்துவர் சொல்லிச்சென்றவுடன் அவரின் கைப்பற்றியே அமர்ந்து இருந்தாள் .

லீலா இவர்களுக்கு தனிமை கொடுத்து தள்ளி நின்று அந்த சிறு பெண் படும் வேதனையை காண சகியாமல் தவித்தாள் .

...........................

ஆனந்த் ஒரு நிலையில் இல்லை . கனவிலும் நினைவிலும் பல உருவங்கள் அவனை வந்து மிரட்டின . பித்து பிடித்தவன் போல் சுத்திக்கொண்டிருந்தான் .

சத்தியாவிற்கு ஆள் பலமும் அரசியல் பலமும் குறைந்துகொண்டே வந்தது ....ஒருகட்டத்தில் அரசியல் கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார் .இவர் சென்று காரணம் கேட்டதற்கு ...

"நன்னடத்தை தவறியதால் நீக்கப்பட்டார் " என்ற பதில் வந்தது .

சத்யாவிற்கு கான்ஸ்டருக்ஷன் மற்றும் கேளிக்கை விடுதி மட்டுமே தொழில் . விடுதிகள் இப்பொழுது முழுதாக சீல் வைத்து மூடப்பட்டது .

அதன் பின் பலர் வேலை செய்திருக்கின்றனர் என்று மட்டும் அவர் அறிவார் .

கட்டுமானத்தொழில் தற்சமயம் ஆட்டம் கண்டது ....ஆனந்தும் நிலை இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்ததால் அனைத்து வகையிலும் முடக்கப்பட்டார் சத்யா .

"அப்பா அந்த ரிப்போர்ட்டர் திரு , அவன் பொண்ணு அம்மு ரெண்டு பேரும் உயிரோட இருகாங்க ....இங்க இங்க பார்த்தேன் "

"இதோ இங்க இங்கயும் அவங்க நிக்கிறதை பார்த்தேன் " பினாத்துபவனை எங்கனம் சமாளிக்க என்று திணறினார் .

ஒருகட்டத்திற்கு மேல் அவனை கன்னம் கன்னமாக அறைந்தவர் "ஆனந்த் அவங்க இப்ப உயிரோட இல்லை ...அவங்க டெத் செர்டிபிகேட் , ஏன் போஸ்மோர்டேம் ரிப்போர்ட் கூட நாம தான பார்த்து கன்பாம் பண்ணோம் ...ஹோட்டல் பிசினெஸ் மூடினது இருந்து நீ ஒரு நிலைல இல்லை ஆனந்த் " சலித்துக்கொண்டார் .

பயங்கர மன உளைச்சலில் இருந்த ஆனந்த் ,தான் ஆறடி ஆண் மகன் என்பதையும் மறந்து தனது தந்தை அடித்ததை எண்ணி அழைத்துவங்கினான் .

"அப்பா என்னால முடில ப்பா நான் பார்த்தேன் ...எனக்கு என்னப்பா ஆச்சு " கண்களில் நீருடன் அவரை கட்டிக்கொண்டு கதறினான் .
 
Uma raj

Member

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top