JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம்-7

saaral

Well-known member
அத்தியாயம்-7

சஹானா அங்கு ட்ரைனியாக வேலைக்கு சேர்ந்ததில் இருந்து தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்தாள் . அவள் தனக்கிட்ட வேலையில் காட்டும் நேர்த்தி , கவனம் அனைத்தும் அங்கிருந்த பலரை ஈர்த்தது .

மிருதுளா ஒரு பக்கம் தனது தமயனிடம் கேக்க ஆயிரம் கேவிகளை வைத்திருந்தாலும் , அதையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு தற்சமயம் காதலில் மூழ்கினாள் .

ஆம் மிருதுளா தனது அன்னையுடன் ஒரு விழாவிற்கு சென்றிருந்த சமயம் ஸ்ரீதரை சந்தித்தாள் . அவனின் குணமும் , பண்பும் அவளை ஈர்த்தது . ஸ்ரீதரின் அன்னையான சௌம்யாவும் , சாரதாவும் பேசிக்கொண்டிருந்தனர் ...

அருகே வந்த ஸ்ரீதர் கையில் இருந்த உணவுத் தட்டை சௌம்யாவிடம் நீட்டி "அம்மா மாத்திரை போட்டு அரைமணி நேரம் ஆகியாச்சு சாப்பிடுங்க " என்றுக் கூறி நகர்ந்தான் .

"உங்க பையனா? " சாரதா கேட்டார் .

"ஆமா , அவன் அப்பா கொஞ்ச மாசம் முன்னாடி தான் எங்களை விட்டுப் போனார் ...அன்னைக்கு என்னை கவனிக்க ஆரம்பிச்சவன் , ஒரு வேளை மாத்திரை சாப்பிடலைனாலும் ரொம்ப கோவப்படுவான் " முகத்தில் தெரிந்த பெருமையுடன் கூறினார் சௌம்யா .

"நல்ல குணம் , அம்மாவை நல்லா பாத்துக்கிற பசங்க நம்பி வரவங்களை நல்லாவே பார்த்துப்பாங்க " என்றார் சாரதா .

"நீங்க சொல்றதும் சரி தான் , அவனுக்குனு ஒருத்தி வரணுமாம் , அவன் அழகையோ அல்லது பணத்தையோ பார்த்து வரக்கூடாதாம் ...இப்பவே சொல்லிட்டார் " சௌம்யா மென்மையாக சிரித்தார் .

இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த மிருதுளா ஸ்ரீதரை பார்த்தாள் , தூரத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த ஸ்ரீதரும் தனது அன்னை உணவை எடுத்துக்கொள்கிறாரா என்று பார்க்கத் திரும்பியவன் மிருதுளாவைப் பார்த்தான் ...நான்கு கண்களும் சங்கமித்தன ....

மிருதுளாவின் கண்களில் வந்துச் சென்ற மின்னல் அவனின் புருவங்களின் மத்தியில் சுருக்கங்களை ஏற்படுத்தியது .....

அதன் பிறகு இருவரும் அடிக்கடி பார்ட்டி , விழா என்று பொது இடத்தில் சந்தித்துக்கொள்ள ஆரம்பித்தனர் . ஒவ்வொரு முறையும் அவள் கண்களில் தெரியும் மின்னல் , அந்த ஆர்வம் ஸ்ரீதரையும் அசைத்துப் பார்த்தது ...

அன்று மதியம் சஹானா மிருதுளாவிற்கு அழைப்பு விடுத்திருந்தாள் ...

"ஹாய் மிருது எப்படி இருக்க "

"ஆம் பைன் , நீ எப்படி இருக்க ?, வேலை எல்லாம் எப்படி போகுது ?"

"நல்லாப் போகுது மிருது ....உங்க அண்ணா ஆபீஸ்ல சரியான கஞ்சி போட்டு , இஸ்திரி பண்ண சட்டை மாதிரி விறைப்பா சுத்துறார் ?" சஹானா வேண்டுமென்றே வம்பிழுத்தாள் .

"ஒய் என்ன கிண்டலா ? எங்க அண்ணா ஸ்ட்ரிக்ட் ஆபிசர் அப்படினு சொல்லிருக்கேன்ல "

"இல்லையே என்னால நம்பவே முடியல ...என்கூட பேசுறப்ப நல்லாதான் பேசறார் ...ஆனாலும் மத்தவங்க கிட்ட ஸ்ட்ரிக்ட் ஆபிசர் தான் " யோசனையாக கூறுவது போல் கொழுத்திப் போட்டாள் சஹானா .

"சஹானா அது என் பிரவீன் அண்ணா " மிகவும் தீவிரமாகச் சொன்னாள் மிருது .

"ஹே சும்மா விளையாட்டுக்கு வம்பிழுத்தா நீ வேற " அலுத்துக்கொள்வதை போல் ஒதுக்கினாள் சஹானா .

மிருது தனக்குள் மூழ்கினாள் ...அவளின் சிந்தனைகளை கலைத்தது சஹானாவின் குரல் ...

"மிருது இருக்கியா ?"

"ஹான் சொல்லு சஹா ..."

"காலேஜ் முடிஞ்சு ரிசல்ட் வந்தாச்சு , நானும் ஜோப்ல சேர்த்துட்டேன் ...நீ என்ன பண்றதா ஐடியா ?.."

"ப்ச் நானும் கம்பெனிக்கு போறேன் சொன்னேன் அம்மா வேண்டாம் வரன் பாக்கலாம் சொல்ராங்க ,எதுக்கு இப்பவே கல்யாணம்னு கேட்டா புரிஞ்சுக்கவே மாட்டீங்கிறாங்க ..."

"சொல்லி புரியவைக்க வேண்டியது தானே மிருது "

"இல்ல சஹா ரெண்டு அண்ணாவும் எனக்கு கல்யாணம் ஆன பிறகு கல்யாணம் பண்றோம்னு சொல்லிட்டாங்களாம் ...அதான் அம்மா என்னை போர்ஸ் பன்றாங்க ..."

"இப்பதானே இருபத்தி ஒன்னு வயசாகுது ...கொஞ்சம் சொந்தக் காலில் நிக்கலாமே " சஹானா ஆதங்கமாக கேட்டாள் .

"சொன்னா புரிஞ்சுகிறவங்க கிட்ட பேசலாம் , இதுக்குமேல பேசினா ...என் பரம்பரை பத்தி தெரியுமா ? நம்ம பெருமை தெரியுமான்னு , கதை சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க " அலுத்துக்கொண்டாள் மிருதுளா .

"சரி விடு பார்த்துக்கலாம் " தோழியுடன் சற்று நேரம் பேசிக்கொண்டு கீழே இறங்கி வந்தவள் அப்படியே நின்றாள் .

சஹானா உணவு இடைவெளியின் பொழுது தான் தனது தோழியுடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள் . உணவை உண்டுமுடித்து தனது இருக்கைக்குத் திரும்பியவள் அங்கிருந்த சதீஷைக் கண்டு அப்படியே நின்றாள் .

சதீஷ் சற்றுத் தள்ளி யாருடனோ மிகவும் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தான் .

சரியாக பிரவீனும் அவனின் அறையில் இருந்து வெளியே வந்து சதீஷை அழைத்துக்கொண்டு உள்ளேச் சென்றான் .

சஹானா நொடிப்பொழுதில் தன்னை மீட்டுக்கொண்டவள் வேகமாக இருக்கைக்கு சென்று அறைநாள் விடுப்பு வேண்டி மின்னஞ்சலை டீம் லீடர்க்கும் , ப்ராஜெக்ட் மேனேஜர்க்கும் அனுப்பிவிட்டு உடனே கிளம்பினாள் .

அந்த அறையில் தொழில் சம்மந்தமாக பேசிக்கொண்டிருந்த பிரவீனும் , சதீஷும் தீவிர ஆலோசனையில் இருந்தனர் .

அப்பொழுது திடீர் என்று நியாபகம் வந்தது போல் "பிரவீன் சஹானா , மிருது பிரின்ட் இங்க வேலைக்கு சேர்ந்தாச்சா ? " என்றான் . இருவர் இடையே ஒரு வயது தான் வித்யாசம் ஆகையால் பெயர் சொல்லித்தான் அழைப்பெல்லாம் .

"ஒஹ் எஸ் சொல்ல மறந்துட்டேன் பாரு ..." அருகில் இருந்த கருவியில் ஒளியை எழுப்பினான் பிரவீன் .

அந்த சத்தம் கேட்டு உள்ளே வந்தவரிடம் "சஹானாவை இங்க வரச்சொல்லுங்க கோபால் " என்று அனுப்பிவைத்தான் .

"அந்த ஆள் சத்யா வீட்டில் பிரச்சனை எதுவும் வரலையே ....." சதீஷை நேராக பார்த்துக் கேட்டான் பிரவீன் .

"இல்லை பிரவீன் " மெதுவாகக் கூறினான் .

"சதீஷ் " அழுத்தமான அழைப்பு .

'என்ன ' என்பது போல் பிரவீனை பார்த்தவனிடத்தில் ஒரு பரபரப்பு .

"என்கிட்ட எதையாவது மறைக்கிறீயா " ஒருவித இருக்கத்துடன் கேட்டான் பிரவீன் .

"இல்ல ...இல்லை பிரவீன் " சதீஷின் பதிலை கேட்டு யோசனையுடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தான் பிரவீன் .

இருவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார் கோபால் "சார் சஹானா மேடம் உடம்பு சரி இல்லைனு கிளம்பிட்டாங்க " அவரை அனுப்பிவைத்த பிரவீன் தன்னவளுக்கு என்னவாகிற்று என்ற யோசனையில் ஆளத்தொடங்கினான் .

அப்பொழுது கிளம்ப நினைத்த சதீஷை நிறுத்தி "எப்ப ஜெர்மன் கிளம்புற ...?"

"நாளைக்கு மோர்னிங் பிரவீன் , இப்ப ஒரு வேலை இருக்கு போய்ட்டு வரேன் " எதில் இருந்தோ தப்பிப்பது போல் இருந்தது சதீஷின் ஓட்டம் , பிரவீனின் கழுகு கண்களும் கண்டுகொண்டது .
................................
சஹானா தனது ஸ்கூட்டியை மெதுவாக சாலையில் செலுத்திக்கொண்டிருந்தாள் . அப்பொழுது இரண்டு கார்கள் வேகமாக அவளைத் தாண்டிச் சென்றது .

இரண்டாவதாக சென்ற காரை இனம் கண்டுகொண்டாள் சஹானா .

"இது மிருது கார் தானே அவள் அண்ணா கிப்ட் பண்ணினது ...இப்பதானே நம்ம கிட்ட பேசினா அதுக்குள்ள அவசரமா எங்கப் போறா ?" யோசனையுடன் பின் தொடர்ந்தாள் .

சஹானாவின் முன் சென்ற இரண்டு கார்களும் நட்சத்திர அந்தஸ்துள்ள விடுதியின் முன் நின்றது .

சஹானா வேகமாகச் சென்று வண்டியை ஒரு ஓரத்தில் நிறுத்தி உள்ளே நுழைந்தாள் . மிருதுளா அங்கிருக்கும் உணவருந்தும் அறையினுள் நுழைவதைக் கண்டு சஹானாவும் தொடர்ந்தாள் .

வேலைக்கு செல்வதற்காக எளிய சல்வாருடன் வந்திருந்தவள் அந்தச் சூழ்நிலைக்கு பொருத்தம் இல்லாமல் இருந்தாள் . அவளை அந்த உணவகத்திற்குள் செல்லும் வழியில் தடுத்து நிறுத்திய ஒருவர் ...

"மேம் இது விஐபி ஏரியா நோர்மல் ரெஸ்டாரண்ட் அந்த சைட் இருக்கு " என்றான் .

அந்த ஆள் நல்ல வாட்ட சாட்டமாக அகண்ட தோலுடன் பயில்வான் நவநாகரிக உடை அணிந்திருப்பவன் போல் இருந்தான் .

ஐந்தரை அடி உயரமான சஹானா கழுத்தை நிமிர்த்தி அவனை முறைத்தாள் .

"மேம் சாரி இது ரூல்ஸ் ...எங்களால உங்களை " என்று தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தவனை தடுத்தாள் வரவேற்பில் நிற்கும் பெண் .

அந்தப் பெண்ணின் அருகினில் சென்றவன் ஒரு நிமிடத்தில் ஓடி வந்து பவ்வியமாக சஹானாவின் முன் நின்றான், " மேம் யு மே கோ ..."

"எனக்கு இன்னும் உங்க பெர்மிசன் வேணும்னு நினைக்கிறீங்களா ?" துளைக்கும் பார்வையுடன் கேட்டாள் சஹானா .

"சாரி மேம் " தலைகவிழ்ந்தான் அந்த பயில்வான் .

"டோன்ட் ஜட்ஜ் எ புக் பை இட்ஸ் கவர் " புருவத்தை தூக்கி ஒயிலாக சொன்னாள் சஹானா .

"குரு " என்று சத்தமிட்ட சஹானாவின் குரலை கேட்டு ஆஜானுபாக உடலுடன் கோட் போட்டு ஒருவன் வந்து அவள் முன் நின்றான் .

"எஸ் மேம் " தனது உடலை அவளவுக்கு வளைத்து பவ்வியமாக கேட்டான் .

"ஹீ இஸ் பையர்ட் " என்று கர்ஜித்துவிட்டு உள்ளே நுழைந்தாள் .

சஹானா , குரு என்று சத்தமாக அழைத்தவுடன் அங்கிருக்கும் பெரும்பான்மையான மக்கள் அவளை திரும்பிப் பார்த்தனர் . சரியாக அப்பொழுது உள்ளே தனது நண்பனுடன் நுழைந்த சதீஷும் அவளை பின் பக்கத்தில் இருந்து பார்த்தான் .

'யாரோ ஒரு பெண் ' என்று கடந்து செல்ல எண்ணியவன் அவளின் வலது பக்க முகத்தோற்றத்தை கண்டு உறைந்துப் போனான் .

அவன் உறை நிலையில் இருந்து மீள்வதற்குள் அந்தப் பெண் அவன் கண்களில் இருந்து மாயமாக மறைந்துப்போனாள் .

சதீஷ் வேகமாக தனது பார்வையை சுற்றிலும் சுழலவிட்டான் . வரவேற்பிற்கு சென்று அங்கு நின்றிருந்த பெண்ணிடம் "இப்ப ஒருத்தங்க , ஒரு லேடி கத்தினாங்களே அவங்க யாரு " என்று அவசரமாக விசாரித்தான் .

அந்த வரவேற்பில் நிற்கும் பெண் நடுங்கினாள் 'ஐயோ ஒருத்தன் உள்ள போகாம தடுத்ததுக்கே ரெண்டு நிமிஷத்துல இந்த ஹோட்டலை வாங்கினவங்க இவர் கேக்கற டீடைல்ஸ் சொன்னா என்னை ஒருவழி செஞ்சுடுவாங்க ' "சார் அதெல்லாம் சொல்ல முடியாது சார் ...நீங்க போகலாம் " என்றாள் .

சதீஷோ நகர்வேனா என்று அதே இடத்தில் நின்று தர்க்கம் செய்தான் . சதீஷுடன் வந்த நண்பனோ "சதீஷ் நோ , வேண்டாம் வா போய்டலாம் " என்று அவ்விடம் விட்டு நகர்த்த முயன்றான் .

அதற்குள் அங்கே இருந்த சலசலப்பு கண்ட குரூ அருகில் நெருங்கி "இங்க என்ன பிரச்சனை ?"என்றான் .

"சார் இவர் அந்த மேம் பற்றின டீடைல்ஸ் கேக்கிறார் ...சொன்னா புரிஞ்சுக்காம நிற்கிறார் ." வரவேற்பில் நிற்கும் பெண் பாவமாகச் சொன்னாள் .

இதை எதிர்பார்த்தே வந்திருந்த குரு தனது அலைப்பேசியில் சஹானாவிற்கு 'சதீஷ் இஸ் ஹியர் ' என்ற குறுந்தகவல் அனுப்பினான் .
...........................
உள்ளே சென்ற சஹானா ,மிருது அமர்ந்து இருந்த இருக்கைக்கு சற்றுத் தள்ளி அமர்ந்திருந்தாள் .

'இவ யாரை வச்ச கண் வாங்காம பார்க்கிறா ' என்று யோசித்துக்கொண்டே திரும்பினாள் . அங்கு மிருது பார்வை சென்ற திசையில் ஸ்ரீதர் அமர்ந்திருப்பதை கண்டாள் .

சஹானாவின் முகத்தில் மெல்லியப் புன்னகை ....அலைபேசியை எடுத்தவள் குறுஞ்செய்தி கண்டு துணுக்குற்றாள் 'லெட் ஹிம் கெட் இன் , ஆம் எக்ஸிட்டிங் ' என்று பதில் அனுப்பிக்கொண்டே உணவு தயாரிக்கும் இடம் வழியாக எவர் கண்ணிலும் படாமல் நகர்ந்தாள் .

........

இன்னும் விவரம் கேட்டுக்கொண்டிருந்த சதீஷை தடுத்த குரு "சார் டீடைல்ஸ் சொல்ல முடியாது , உங்களுக்கு தெரிஞ்சவங்க அப்படினா தேடிப் பாருங்க , எங்களை வேலை பார்க்க விடுங்க ப்ளீஸ் "

சதீஷ் அங்கிருக்கும் மூன்று உணவகத்தினுள்ளும் நுழைந்து தேடினான் . எங்கும் சஹானாவை காணமுடியவில்லை .

அங்கு அமர்ந்திருந்த மிருதுளாவை கண்டவன் "மிருது இங்க என்ன பண்ற ?" என்றான் .

சதீஷுடன் வந்த நண்பன் கிளம்பியிருந்தான் . சதீஷும் அவனை அனுப்பிவிட்டே தேடத்துவங்கினான் .

மிருதுளா தடுமாற்றத்துடன் "அது அண்ணா , அண்ணா என் பிரின்ட் சஹானா கூட வந்திருந்தேன் ...அவ இப்ப தான் கிளம்பினா " தடுமாற்றத்துடன் கூறினாள் .

தங்கையின் தடுமாற்றத்தை கண்டு புருவத்தை சுருக்கி அவளின் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தான் சதீஷ் .

"என்ன அண்ணா அப்படி பார்க்கிற ..?."

"இல்லை எப்ப இருந்து எங்க செல்ல தங்கச்சி பொய் சொல்ல ஆரம்பிச்சானு யோசிக்கிறேன் " கூர்ப் பார்வையுடன் அவன் எதிரில் இருப்பவளை கூறுபோட்டான் ...

"அண்ணா ...அண்ணா என்ன பொய் ...ஹான் நான் எதுக்கு பொய் சொல்லனும் "

"ஹ்ம்ம் நான் இப்பதான் ஆபிசில் இருந்து வரேன் ...கொஞ்ச நேரம் முன்னாடி வரை சஹானா அங்க இருந்திருக்காங்க ...உடல் நிலை சரி இல்லைனு கிளம்பி வீட்டுக்கு போயிருக்காங்க " தெளிவாக கூறினான் அண்ணன் அவன் .

அப்பொழுது ஸ்ரீதர் அவர்கள் அருகில் வந்தவன் மிருதுளாவைக் காணாமல் சதீஷை மட்டுமே பார்த்து "ஹாய் சதீஷ் எப்படி இருக்கீங்க ?" என்றான் .

"ஆம் பைன் அண்ட் நீங்க ?" கேள்வியாக இழுத்த சதீஷை பார்த்து ..

"ஆம் ஸ்ரீதர் , எங்க அம்மா பெயர் சௌம்யா ...நாம பார்த்து இப்ப ஒரு செவென் இயர்ஸ் ஆச்சு நினைக்கிறன் " என்று புன்னகைத்தான் .

நாகரிகம் கருதி எழுந்து நின்ற மிருதுவின் கண்களில் எல்லை இல்லா காதல் ...அதிலும் ஸ்ரீதரின் ஆளுமை கலந்தப் புன்னகையில் மதிமயங்கினாள் ...

"ஒஹ் எஸ் ...ஸ்ரீதர் ...அண்ட் இட்ஸ் மிருதுளா என் சிஸ்டர் " என்று கூறி மிருதுவின் பக்கம் திரும்பியவன் அவளின் பார்வையில் துணுக்குற்றான் .

"மிருது " அழுத்தமாக அழைத்தான் .

"ஹான் ஹாய் " என்று மென்மையாக கூறி காதலுடன் அவனைப் பார்த்தாள் .

ஸ்ரீதரின் அதரங்கள் குறும்புப் புன்னகை பூத்தது ...புருவங்கள் மேல் ஏறி "ஹாய் " என்றான் .

சதீஷின் கண்களுக்கு எதுவும் தப்பவில்லை . அங்கு சில நிமிடங்கள் ஸ்ரீதருடன் பேசிமுடித்து மிருதுளாவை கூட்டிக்கொண்டு கிளம்பினான் .

மிருது சதீஷிடம் தயங்கிக்கொண்டே "அண்ணா என்னோட கார் அங்க நிக்குது " என்றாள் .

சதீஷ் எதுவும் பேசாமல் தனது தந்தைக்கு அழைத்து "அப்பா மிருதுவும் நானும் ** ஹோட்டல்க்கு வந்தோம் , இப்ப என் கார்ல ஒண்ணா வந்திருவோம் ...டிரைவர் அனுப்பிச்சு வாலெட் பர்கிங்க்ல இருந்து மிருது காரை எடுத்துக்கோங்க " என்று கூறி முன்னே நடந்தான் .

சதீஷின் பேச்சு மிருதுளாவிற்கான பதிலை தந்துவிட்டது என்பதை அறிந்தவள் அவன் பின்னே சென்றாள் .

காரில் சென்றுகொண்டிருந்தவர்கள் மௌனமாகவே வந்தனர் . சதீஷின் அதீத மௌனத்தைக் கண்டு முதுகுத்தண்டு சில்லிட "அண்ணா " தீனமான குரலில் அழைத்தாள் .

"எத்தனை நாளா ஸ்ரீதரைத் தெரியும் ?"

"இப்ப கொஞ்ச நாளாத் தான் "

"லவ் பண்றீங்களா ?"

"இல்லை இல்லை " அவசரமாக மறுத்தாள் மிருது .

"அப்ப ...?" கேள்வியுடனும் , கோபத்துடனும் அவளைப் பார்த்தான் சதீஷ் .

"ஐயோ அண்ணா நான் மட்டும் தான் லவ் பண்றேன் ...அவருக்கு என்னைத் தெரியுமான்னு கூட தெரியாது "

"ஒஹ் ஒன் சைட் லவ் ....ஹ்ம்ம் " ஆழ்ந்த குரலில் கேட்டான் .

'ஆமாம் ' என்று தலை அசைத்தாள் .

"ஓகே நான் விசாரிச்சுட்டு சொல்றேன் அதுவரை அமைதியா இரு சரியா "

"சரி அண்ணா " என்றாள் .

........................

இரவு படுக்கைக்கு செல்லும்முன் சஹானா , மிருதுளாவை அழைத்தாள் .

"சொல்லு சஹானா "

"யாரோ இவன் யாரோ இவன்
உன் பூக்களின் வேரோ இவன்
உன் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்"

எதுவும் பேசாமல் பாடினாள் அவள் .

"சஹானா ...!" அதிர்ச்சியாக வந்தது மிருதுவுன் சொற்கள் .

"மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு
தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு
உள்ளம் கவர் கள்வனா குறும்புகளில் மன்னனா
மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா அவன் முகவரி சொல்லடி"

அடுத்தப்பாடலை பாடித் தனது தோழியை வெட்கமுறச்செய்தாள் சஹானா .

"ஐயோ சஹானா போதும் ப்ளீஸ் " மிருதுளாவின் குரலில் அத்தனை வெட்கம் .

"மிருதுவின் குரல் மிருதுவாக ஒளிப்பதின் ரகசியம் என்னவோ ?" தோழியை ஒருவழி செய்துவிடும் வேகம் அவளினுள் .

"அம்மா தாயே ....சொல்லிடறேன் ....அவர் பெயர் ஸ்ரீதர் , அம்மாவோட போனப்ப பிசினஸ் பார்ட்டில பார்த்தேன் ...அதுக்கப்பறம் நிறைய இடத்தில பார்த்தேன் அண்ட் போல்லோவ் பண்ணேன் ..ஒன் சைட் லவ் தான் போதுமா " தோழியின் கலாட்டாவில் மொத்தமாக கொட்டினாள் மிருதுளா .

"ஹஹஹஹஹ " என்று சிரித்தாள் சஹானா .

"ஷப்பா இன்னைக்கு வகைதொகை தெரியாம எல்லார்கிட்டயும் மாட்டிகிட்டு முழிக்கிறேனே "

"வேற யார் கிட்ட மாட்டினீங்க மேடம் "

"சதீஷ் அண்ணா பார்த்துட்டான் ..." என்றுத் தொடங்கி அன்று நடந்தவற்றை முழுதாக கூறி முடித்தாள் .

சஹானா யோசனையில் ஆழ்ந்தாள் ...அவளை நினைவிற்கு கொண்டு வந்த மிருது "சரி அதான் எல்லாம் சொல்லிட்டேனே விட்டுடு மீ பாவம் ...இப்ப தூங்குவேனாம் ...நாளைக்கு உன் கிட்ட பேசுவேனாம் சரியா பை " என்று நழுவலான பதிலுடன் இணைப்பைத் துண்டித்தாள் மிருதுளா .

புன்னகையுடன் ஆழ்ந்த யோசனையில் இருந்தாள் சஹானா ....

........................

அடுத்தநாள் காலை ட்ராக் சூட்டில் காதில் தலையணி கேட்பொறி மாட்டிக்கொண்டு அந்த பார்க்கில் ஜாகிங் சென்றுகொண்டிருந்தாள் சஹானா .

அழைப்பு வந்தது , அப்பொழுது அதை ஏற்றவள் "எஸ் குரு " என்றாள் ஓட்டத்தை நிறுத்தி நடந்துக் கொண்டே .

"மேம் பிரவீன் இஸ் ஹியர் "என்றான் அந்த மெய்க்காப்பாளன் .

"மிஸ்டர் பிரவீன் ...."அழுத்தமாகச் சொன்னாள் .

"சாரி மேம் "

"ஹ்ம்ம் நான் பார்த்துகிறேன் " என்று பதில் சொல்லி மீண்டும் தனது ஓட்டத்தை தொடர்ந்தாள் .

பிரவீன் தனக்கு பின் வருவதை கண்டுகொண்டாள் ...இருந்தும் முகம் மாறாமல் அதே வேகத்தில் ஓடினாள் சஹானா .

பிரவீன் வேகமாக ஓடி வந்து "ஹாய் சஹானா ..." என்றான் .

"ஹாய் சார் " இருவரும் ஓட்டத்தை நிறுத்தி நடக்கத்துவங்கினர் .

"என்ன ஜோகிங் ஹா "

"நீங்க என்ன சார் ஜோக்கிங் ஹா " நடையை நிறுத்தி அவனை நேராக பார்த்து கைகளை கட்டிக்கொண்டு கேட்டாள் .

அவனும் அவளைப் பார்த்து அசடு வலிந்து "சாரி மொக்கையா இருக்கோ ?" என்றான் .

பிசினெஸ் புலி , மற்றவர்களுக்கு கடுவன் பூனை தன் முன் அசடு வழிய நிற்பது அவளிற்கு சிரிப்பை வரவழைத்தது .

"மொக்கை கொஞ்சம் இல்ல , ரொம்ப " புருவங்களை தூக்கிச் சொன்னாள் .

அசடுவழிந்துகொண்டே "சாரி அது ,நேத்து நீ உடம்பு சரி இல்லைனு சொல்லி கிளம்பிட்டயா அதான் என்னாச்சுன்னு ?" அவன் புன்னகையுடன் கேட்டான் .

அவள் பதிலேதும் கூறாமல் அவனை ஆழமாக பார்த்தாள் ...

"என்ன சஹானா ?"

"சார் அதே தான் நான் கேக்கறேன் என்னாச்சு உங்களுக்கு ?"

"ஆம் பைன் எனக்கென்ன...!"

"சார் நான் ஜஸ்ட் உங்க ஸ்டாப் எனக்கு உடம்பு சரி இல்லைனு கேக்க இந்த மோர்னிங் வரணுமா ?"

சற்று இடைவேளை விட்டு "அதும் இப்படி பார்க்கிற்கு ?" என்றாள் .

"இல்லை அது ...." சிங்கம் போல் அனைவரையும் மிரளவைக்கும் அந்த ஆண்மகன் அந்த சிறுபெண்ணின் முன் பதில் கூற இயலாமல் தடுமாறினான் .

"சார் டூ யு லவ் மீ " பொட்டில் அறைந்தது போல் நேராக கேட்டாள் சஹானா .

"எஸ் சஹானா ...." எவ்வாறு சொல்வது என்று இத்தனை நாள் தயங்கிக்கொண்டிருந்தவன் அவளே நேராக கேக்கும் பொழுது மறைக்கத் தோன்றாமல் ஒத்துக்கொண்டான் .

அவன் இல்லை என்று சொல்லுவான் , இல்லை மழுப்புவான் என்று எதிர்பார்த்தவள் இந்த நேரடி பதிலில் திக்ப்ரமை பிடித்தது போல் நின்றாள் .
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top