JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம்-8

saaral

Well-known member
அத்தியாயம்-8

அன்று காலை பூங்காவில் பிரவீன் தனது விருப்பத்தை சொன்ன நொடி அதிர்ச்சியடைந்த சஹானா "இது லைப் நான் கொஞ்சம் யோசிக்கனும் ...சோ ப்ளீஸ் " தெளிவான பதிலை சொல்லி நகர்ந்துவிட்டாள் .

பிரவீனும் அதன் பிறகு வந்த நாட்களில் அவளை தொல்லை செய்யவில்லை .

அலுவலகத்தில் சஹானா அவளிற்கு மேல் இருக்கும் டீம் லீடரிடம் மட்டுமே ரிப்போர்ட் கொடுக்க வேண்டும் . ஆகையால் அடிக்கடி அவளை அழைத்து அங்கு சங்கடமான சூழ்நிலை உருவாக்க அவன் தயாராக இல்லை .

சஹானா எந்த குழப்பங்களும் இல்லாமல் தெளிவாக தனது வேலையை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தாள் .

அவளிடம் சிறு சலனம் கூட காண முடியாமல் பிரவீன் தவித்தான் . நிதமும் அவளின் உருவத்தை காணொளியாக கேமராவின் உதவியுடன் திரையில் மட்டுமே கண்டு தனது மனதை சமன் செய்துகொண்டிருந்தான் .


சஹானாவின் அமைதி , மிருதுளாவை பார்க்க தவிர்ப்பது ...இன்னொரு பக்கம் பிரவீனின் அலைப்புறுதல் , இயல்பிற்கு மாறாக பிரவீன் சஹானாவை பற்றி மிருதுளாவிடம் விசாரிப்பது என்று அனைத்தும் மிருதுளாவின் மனதில் கேள்வியை உருவாக்கியது .

ஒரு நாள் மாலை பிரவீன் சீக்கிரம் வீட்டிற்கு வந்தான் . மிருதுளா தனியாக தனது அறையில் அமர்ந்து ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள் .

கதவை தட்டி மிருதுவின் அறைக்குள் நுழைந்த பிரவீன் "சஹானா உன்கிட்ட பேசினாளா மிருது ?" கேள்வியாக நிறுத்தினான் .

"இல்லையே அண்ணா ...அவ பேசி ஒரு மாசம் ஆச்சு அதோட நானே கூப்பிட்டாலும் ...'பிஸி அப்பறம் பேசுறேன் 'சொல்றா " என்று கூறிக்கொண்டிருந்தவள் புருவத்தை சுருக்கினாள் .

மிருதுளா இவ்வாறு கூறியவுடன் மனதளவில் சலிப்பு தட்டியது பிரவீனிற்கு அதை அப்பட்டமாக முகத்தில் காட்டியவன் "ப்ச் " என்று ஓசை எழுப்பினான் .

"அண்ணா , நீங்க ஒரே ஆபீஸ் தான ஏன் அங்க பேசலாமே " யோசனையாக கேட்டாள் .

"இல்லமா சஹானா அவளோட டீம் லீடர் கிட்ட தான் ரிப்போர்ட் பண்ணனும் என்கிட்ட இல்லை , அதான் அவளை பார்க்க கூட முடியல ...." சலித்துக்கொண்டு சொன்னான் .

"அண்ணா நீங்க சஹானாவை லவ் பண்றீங்களா ?" இத்தனை நாள் மனதில் அரித்துக்கொண்டிருந்த கேள்வியை தயக்கத்துடன் ஒரு நொடியில் கேட்டுவிட்டாள் மிருதுளா .

"எஸ் , அவகிட்ட சொல்லி ஒரு மாசம் ஓடிடுச்சு ...டைம் வேணும் சொன்னா அதான் நானும் டிஸ்டர்ப் பண்ணலை ....உனக்கு எப்படி தெரியும் " எந்த மழுப்பலான பதிலும் சொல்லாமல் நேராக பேசினான் பிரவீன் .

"அண்ணா நீங்க அவகிட்ட தனியா பேசினது , போன் பண்ணது எல்லாத்தையும் சொல்லிருக்கா ....இது உங்க டிசைன்லயே இல்ல ...!! எந்தப் பொண்ணு வந்தாலும் பத்து மீட்டர் தள்ளி நின்னு பேசுற நீங்களா சஹானாவை தேடி பார்க் போய் பேசினீங்கன்னு யோசிச்சேன் " குறும்பு கூத்தாட அண்ணனை வாரத் தொடங்கினாள் மிருது .

"ஹே நான் பார்க் போய் ப்ரொபோஸ் பண்ணதையும் சொல்லிட்டாளா ?" முகம் சிவக்க கேட்டான் .

"ஒஹ் இது வேறயா " கண்களை சிமிட்டி அண்ணனின் வெக்கத்தை ரசித்தாள் .

"மிருது !" முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான் .

"அண்ணா நீங்க எங்கயோ போக கிளம்பி பார்க்ல அவளைப் பார்த்து பேசி வீட்டுக்கு போய் காபி குடிச்சுட்டு கிளம்பினதை சொன்னா ,அப்பறம் அவ போன் நம்பர் வாங்கி பேசுனதையும் சொன்னா அப்பவே டவுட் வந்துச்சு ...." கேலியாக நிறுத்தினாள் .

"மிருது போதும் ....எஸ் எனக்கு சஹானாவை பார்த்த உடன் பிடிச்சுது , படிக்கிற பொண்ணுன்னு வெயிட் பண்ணேன் .... " நேராக தங்கையின் கண்களை பார்த்து கூறினான் .

"குட் சாய்ஸ் அண்ணா ....ஷி இஸ் குட் சோல் .... எனக்கு அவ நல்ல பிரின்ட் , என்கூடவே இல்ல ,பக்கத்துலயே இருக்கனும் யோசிச்சு நம்ம கம்பெனில வேலைக்கு சேர சொன்னேன் , ஆனால் அவளே எனக்கு அண்ணியா வருவான்னு நான் எதிர்பார்களை " மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தாள் மிருதுளா .

"ப்ச் எங்க மிருது ....விருப்பத்தை சொல்லியும் இன்னும் சஹானா எந்த பதிலும் சொல்லலை , நேராக பார்ப்பதையும் தவிர்க்கிறா " சலிப்புடன் சொன்னான் பிரவீன் .

"அண்ணா அவ அப்படித்தான் , செம படிப்ஸ் ....சின்ன விஷயத்துக்கும் ஒவரா யோசிப்பா ..." தோழியின் குணம் அறிந்து சொன்னாள் மிருதுளா .

"ஹ்ம்ம் ஓகே ...நான் என் ரூம்க்கு போறேன் " என்று கூறி நகர்ந்தான் பிரவீன் .

பிரவீன் சென்றவுடன் தனது அலைபேசியை எடுத்து சஹானாவிற்கு விடாமல் அழைத்தாள் மிருதுளா .ஆனால் அப்பொழுது சஹானா அந்த அழைப்பை ஏற்கவில்லை .

சில நிமிடம் களித்து தொடர்ந்து பல அழைப்புகள் மிருதுவிடம் இருந்து வந்திருப்பதை கண்டு தானே அழைத்தாள் சஹானா .

"ஹாய் மிருது ..."

"என்ன ஹாய் ...உன்ன அப்படியே நாலு சாத்து சாத்தனும் போல இருக்கு ....எங்கடி போன ? என்கிட்ட பேசி எவ்ளோ நாள் ஆயிடுச்சு ...."

"சாரி மிருது ஜோயின் பண்ணி கொஞ்ச நாள் தானே ஆச்சு ...சோ ஒர்க் பிரஷர் ....இதுக்கு நடுல அம்மாவிற்கு டிரீட்மென்ட் விஷயமா அலைய வேண்டிய சூழ்நிலை " மெதுவாக எடுத்துக்கூறினாள் சஹானா .

"ஒஹ் இப்ப அம்மா எப்படி இருக்காங்க ?"

"ஹ்ம்ம் பைன் ....அப்பறம் நீ சொல்லு எப்படி இருக்க ?"

"எனக்கென்ன நல்லாதான் இருக்கேன் " என்றாள் மிருது .

"என்னமா சலிச்சுக்கிற , உன் ஸ்ரீதர் இன்னும் ஓகே சொல்லலையா உனக்கு ?" குறும்பாக கேட்டாள் .

"ஹே நீ வேற சதீஷ் அண்ணா விசாரிச்சு சொல்ற வரைக்கும் அமைதியா இருக்க சொல்லிருக்கான் ...அவனே பிரவீன் அண்ணாகிட்ட பேசி வீட்ல பேசவைக்கிறேன் சொன்னான் ."

மிருதுவின் கூற்றை கேட்டு யோசனையில் ஆழ்ந்த சஹானா "நீ உன் பிரவீன் அண்ணாகிட்டயே நேரா சொல்லலாமே ?" என்று வினவினாள் .

"எனக்கு பிரவீன் அண்ணாகிட்ட எப்பயும் ஒரு பயம் இருக்கும் , அதான் சொல்ல ஒருமாதிரி இருக்கு "

"நம்ப முடிலையே !!" ஆச்சர்யத்துடன் கேட்டாள் சஹானா .

"நிஜமா ...அண்ணா கிட்ட நல்லா பேசுவேன் , ஜாலியா கலாய்ப்பேன் ...ஸ்டில் எனக்கொண்ணு பிடிச்சிருக்குனு இதுவரைக்கும் பிரவீன் அண்ணா கிட்ட நேரா சொன்னதில்லை , எப்பயும் சதீஷ் அண்ணாகிட்ட தான் சொல்லி வாங்கிப்பேன் ...."

"ஒஹ் ...உன் பிரவீன் அண்ணா அவ்ளோ டெரர் பீஸ் ஹா ?" கேலி சற்று தூக்கலாக இருந்தது சஹானாவிடம் .

"பிச்சிருவேன் என் அண்ணாவையே கலாய்க்கிற ?....இது அண்ணா மேல இருக்கிற மரியாதை சரியா ...நீ ரொம்ப பேசின கல்யாணமாகி நீ இங்க வந்த அப்பறம் நாத்தனார் கொடுமை செய்வேன் பார்த்துக்கோ " பிரவீனுடன் பேசிய மகிழ்ச்சியில் சஹானாவை தங்கள் வீட்டு மருமகளாகவே எண்ணிய மிருதுளா வார்த்தையை விட்டாள் .

"மிருது ! " அதிர்ச்சியுடன் கடிந்தாள் சஹானா . சஹானாவின் குரலை கேட்டப்பின் ,தான் என்ன சொன்னோம் என்று உணர்ந்த மிருதுளா நாக்கை கடித்தாள் .

சற்று நேரம் இருபக்கமும் அமைதி நிலவியது . அதை சஹானாவே கலைத்தாள் ...

"உனக்கு எப்படி தெரியும் ?"

"சொல்லிற்கேனே ...அண்ணா ரொம்ப ஸ்ட்ரிக்ட் அப்படினு ...அண்ணா தேடி வந்து உன்கிட்ட பேசினதை கேட்டவுடன் சந்தேகம் வந்துச்சு , நீ என்கிட்ட ஏதாச்சும் பேசினியான்னு அண்ணா இந்த ஒரு மாசத்துல பல தடவை கேட்டிருக்காங்க , சோ நேரா கேட்டேன் ...அண்ணாவும் ஆமாம் அப்படினு சொன்னாங்க " இவ்வாறு தொடங்கி தனக்கும் , பிரவீனுக்கும் நடந்த உரையாடலை கூறினாள் மிருதுளா .

அனைத்தையும் மௌனமாக கேட்டுக்கொண்ட சஹானா எதுவும் பேசாமல் அமைதி காத்தாள் .

"சஹானா " என்று அழைத்தாள் மிருது .

"சொல்லு மிருது "

"ஏன் அண்ணாவை அவொய்ட் பண்ற ...உனக்கு பிடிக்கலையா? " வருத்தத்துடன் கேட்டாள் மிருதுளா .

"நான் யோசிக்கனும் மிருது " இப்பொழுதும் யோசனையுடனே பேசினாள் சஹானா .

"சஹானா அது நீ ..." என்று மிருது பேசுவதற்குள் இடைபுகுந்தாள் சஹானா .

"மிருது ப்ளீஸ் எதுவும் போர்ஸ் பண்ணி வரக்கூடாது நானே உன் அண்ணாகிட்ட பேசுறேன் " பேச்சை முடித்துக்கொண்டு அழைப்பை துண்டித்தாள் சஹானா .

மிருதுளாவும் எதுவும் வற்புறுத்தலின் பெயரில் நடக்க கூடாது என்று எண்ணி மௌனமாகினாள் .

........................

சஹானா தனது அம்மாவிற்கு மருந்து கொடுத்து தூங்கவைத்து அப்பொழுதுதான் தனதறைக்கு வந்தாள் .

அவளின் வறவிற்காகவே காத்திருந்தது போல் அலைப்பேசி ஒலி எழுப்பியது .அதை எடுத்து காதில் வைத்தாள் சஹானா .

"ஹலோ அப்பா எப்படி இருக்கீங்க? " சந்தோசத்துடன் பேசினாள் சஹானா .

"நல்லா இருக்கேன்டா ...உன் அம்மா ஏதோ உன்கிட்ட பேசனும் சொல்றா " சந்தோசத்துடன் பேசினார் அவர் ..

"கொடுங்கப்பா "

"சஹானா ....சஹானா இங்க இங்க " அலைபேசியை வாங்கிய அந்தப் பெண்மணி வார்த்தைகளற்று வெடித்தழுதார் .

"அம்மா என்ன ஆச்சு ஏன் அழறீங்க ?" பதட்டத்துடன் கேட்டாள் .

அந்தப் பெண்மணி பேசமுடியாமல் மேலும் கதறினார் , அவரிடம் இருந்து அலைபேசியை பறித்து பேசினார் அவரின் கணவர் .

"அப்பா அங்க அவளுக்கு ...அவளுக்கு என்ன ஆச்சு " நெஞ்சடைக்க கேட்டாள் சஹானா ...

"அம்மாடி சஹானா அதெல்லாம் ஒன்னும் இல்லை ...நாங்க மூணு பேரும் நல்லா இருக்கோம் இங்க " என்று ஆரம்பித்து சில விஷயங்களை சொல்லி முடித்தார் அவர் .

யோசனைக்கு சென்ற சஹானா "அப்பா எனக்கு வீடியோ அனுப்புங்க " சந்தோசத்துடன் கண்களில் கண்ணீர் தேங்க கூறினாள் .

"நான் உன் மெயில்க்கு அனுப்பிச்சிருக்கேன் நீ பாருடா " அதன் பிறகு அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அழைப்பை துண்டித்தவள் வேகமாக சென்று கணினியை உயிர்ப்பித்தாள் .

அந்த காணொளியை கண்டு அவளின் மனம் கனத்தது .

மீண்டும் அந்த காணொளியை ஓடவிட்டு பார்த்தவளின் நெற்றியில் முடிச்சுகள் ...

மீண்டும் அலைபேசியை எடுத்தவள் "குரு எனக்கு ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் வேணும் , லிப் ரீடிங் பண்ணதெரிஞ்சவங்க ...." தீவிரமாக சொன்னாள் .

"நாளைக்கு மோர்னிங் நம்ம இடத்துல இருப்பாங்க மேம் " என்று கூறி அழைப்பை துண்டித்தான் குரு .

சஹானா தீவிர யோசைனையில் இருந்தாள் .

.........................

அடுத்தநாள் காலை பிரவீன் தனது அறையில் இருந்து வெளிவந்தவன் தங்கையின் அழைப்பைக்கேட்டு நின்றான் "சொல்லு மிருது "

"அண்ணா சஹானா நேத்து பேசினா " மெதுவாக தொடங்கினாள் மிருதுளா .

பிரவீனின் உடலில் ஒரு பரபரப்பு ....கண்களில் ஆர்வம் "என்ன பேசினா?"

நேற்று நடந்த அனைத்தையும் கூறியவள் "யோசிக்கனும் சொல்றா அண்ணா " என்று முடித்தாள் .

"இன்னும் என்ன யோசிக்கணும் மிருது ...எதாவது பிரச்சனையா ?" பிரவீன் தீவிர முகபாவத்துடன் பேசினான் .

"இல்லை அண்ணா ...பட் என்ன நினைக்கிறா அப்படினு புரியல ...உங்ககிட்ட அவளே பேசுறேன்னு சொல்லிருக்கா " தனது தமையனின் முகத்தினில் தெரிந்த வருத்தம் மிருதுளாவை அசைத்துப் பார்த்தது .

"அண்ணா ரொம்ப யோசிக்காதீங்க நிச்சயம் அவள் நல்ல பதிலை சொல்லுவா " நம்பிக்கையுடன் பேசினாள் மிருதுளா .

சரியாக அப்பொழுது பிரவீனின் அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது .

அதை எடுத்து பார்த்தவனின் முகம் சந்தோசத்தில் மின்னியது .

பிரவீனின் சந்தோசம் கண்டு மகிழ்ச்சியடைந்த மிருது "என்ன அண்ணா ?" என்றாள் .

"சஹானா ஈவினிங் மீட் பண்ணலாமான்னு கேட்ருக்கா " மகிழ்ச்சியுடன் கூறினான் .

"ஆல் தி பெஸ்ட் அண்ணா " வாழ்த்துக் கூறி அனுப்பிவைத்தாள் மிருதுளா .

...........................

சதீஷின் மனம் குழம்பியது அடிக்கடி அவனின் கண் முன் தெரியும் அவளின் உருவம் ....

தூக்கத்தை இழந்து தவித்துக்கொண்டிருந்தான் ...எந்த தவறை மறக்க கடந்த சில ஆண்டுகளாக ஊர் ஊரக சுற்றிக்கொண்டிருந்தானோ அது பூதாகரமாக விஸ்வரூபம் எடுத்து அவன் முன் வந்து மிரட்டிக்கொண்டிருக்கிறது .

சதீஷ் எவ்ளோ முயன்றும் எந்த தகவலையும் அவனால் கண்டுகொள்ள முடியவில்லை .

அன்று சென்னை ஹோட்டலில் பார்த்த அந்தப் பெண்ணை பற்றிய தகவல்களை என்ன முயன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை . ஆனந்த் போல் தீய பழக்கங்களின் பிடியில் சிக்காமல் இருந்தமையால் சதீஷால் அனைத்தையும் கடக்க இயன்றது அந்த உருவத்தையும் தான் ...

இது தன்னைப் பற்றி தெரிந்த எவரோ செய்யும் சதி என்று கண்டுகொள்ள முடிந்தவனால் அது யார் என்று மட்டும் அறிய முடியவில்லை .

தீவிர சிந்தனையில் மூழ்கி இருந்த சதீஷின் கவனத்தை கலைத்தது அந்த அலைபேசி ஒலி ....யார் என்று எடுத்து பார்த்தவன் ஏதோ லோக்கல் கால் என்று எண்ணி பேச மனம் இல்லாமல் அழைப்பை ஏற்காமல் விட்டான் .

மீண்டும் அலைபேசி ஒலி ...அதே எண் ...ஜெர்மன் நாட்டில் தெரியாத எண்ணில் இருந்து யார் அழைப்பது என்று குழம்பியவன் அந்த அழைப்பை ஏற்று காதில் வைத்தான் .

"ஹலோ சதீஷ் ஹியர் " தோரணையுடன் பேசினான் .

"சதீஷ் " ஒற்றைச்சொல்லில் உறைந்து போனான் அந்த ஆறடி ஆண்மகன் .

"......" பதில் சொல்ல இயலவில்லை அவனால் ...

"சதீஷ் " நெஞ்சை உருக்கும் அதே குரல் ...

"அம அம்மு ...." குரல் தழுதழுக்க சொன்னான் .

"சதீஷ் நான் உங்களை நம்பித்தானே வந்தேன் .... ஏன் சதீஷ் இப்படி செஞ்சீங்க " அந்தக்குரல் ஆழமான வலியுடன் வினவியது .

"அம்மு ...அம்மு நான் இப்படி எல்லாம் நடக்கும்னு நினைக்கிலை " கண்ணீருடன் பதில் தந்தான் சதீஷ் .

"நானும் நீங்க இப்படினு நினைக்கலையே சதீஷ் " அந்தக்குரல் உருக்கமாக சொன்னது .

"அம்மு நீ இன்னும் உயிரோட நல்லா இருக்கியா ?..அம்மு எங்க இருக்க ...இங்க ஜெர்மன்லயா ?" அவசரமாக வினவினான் .

"ஹாஹாஹாஹா நான் செத்துட்டேன்னு நினைச்சியா சதீஷ் ! உங்களை எல்லாம் சும்மா விட்டுட்டு போய்டுவேனா ? " இப்பொழுது ஆக்ரோஷமாக கேட்டது அந்தக் குரல் .

"அம்மு !" அதிர்ந்தான் அவன் .

"நான் எங்க இருக்கேன் கேட்டியே ...பார் உன் கண் முன்னாடி நிற்கும் என்னைப் பார் "

அந்த குரலின் தாக்கத்தில் நிமிர்ந்தவன் தன் முன் நிற்கும் அம்முவை கண்டு திகைத்தான் . பள்ளி சீருடையில் தலை எல்லாம் குருதி வழிய ...ஆக்ரோஷமான பார்வையுடன் அவன் முன் நின்றுருந்தாள் அம்மு .

"அம்மு " மிரட்சியுடன் அந்த உருவத்தை தொடச்சென்றான் ....

என்ன மாயம் அந்த உருவம் மறைந்தது .....
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top