JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம் -9

saaral

Well-known member
அத்தியாயம் -9

அந்த இனிமையான மாலைப்பொழுதில் உணவகத்தின் மாடியில் ,ரம்மியமான சூழ்நிலையின் நடுவில் எதிர் எதிரே இருந்த இரு இருக்கையில் அமர்ந்திருந்தனர் பிரவீன் மற்றும் சஹானா .

சஹானா இதுவரை துணிவுடன் அனைத்தையும் எதிர்கொண்டவள் இன்று புதிதாக முளைத்த படபடப்பில் பிரவீனை நேராக பார்க்காமல் ,கைகள் இரண்டையும் மேஜை மீது வைத்து அதை பார்த்துக்கொண்டே தவிப்புடன் அமர்ந்திருந்தாள் .

பிரவீன் முற்றிலுமாக தனது பார்வையை சஹானாவின் மீதே பதித்திருந்தான் .....அவளின் தவிப்பு அவனின் ரசனையாகிப் போன விந்தையை விளக்குபவர் எவரோ ....

அவளின் படபடப்பும்

அவனின் புன்னகையும் ...!!

பெண்ணவளின் தவிப்பும்

ஆண் அவனின் ரசனையும் ....!!

காதலின் கவிதை ...

வாழ்வின் இனிமை ....!!

"சஹானா " ஒற்றை அழைப்பில் அத்துணை காதலை காட்ட இயலுமா .... இயலுமென்று சொல்லாமல் சொல்கிறான் அவன் .

"ஹ்ம்ம் " அவனின் காதல் பார்வையை நேராக காண இயலாமல் தலை தாழ்த்தினாள் அவள் ...

அவளின் முகத்தில் என்ன அது? , முகப்பூச்சா ?இல்லையே இவள் ஒப்பனைகளுக்கு அப்பாற்பட்டவளாகிற்றே ....'ஒஹ் வெட்கத்தின் சிவப்பு !..இதுவல்லவா வாழ்க்கையின் கவிதை '....ரசனையுடன் காதல் பித்தனாகினான் பிரவீன் .

"சஹானா ஐ லவ் லவ் யூனு சிம்பிள் ஹா சொல்லமாட்டேன் ....என் வாழ்க்கையாக ...வாழ்வின் பக்கங்களில் கவிதையாக ...என்னவளாக ....சரி பாதியாக , என் வாழ்கை முழுவதும் கை கோர்த்து துணையாக வர சம்மதமா ..." நேராக அவள் கண்களை பார்த்து , மேஜை மீது இருக்கும் அவளின் வலக்கரத்தை பற்றி தனது மனதை முழுதாக திறந்தான் அந்த காதல் கள்வன் .

"ஹ்ம்ம் எஸ் " மென்மையாக தலையை ஆட்டி தனது சம்மதத்தை தெரிவித்தாள் .

புன்னகையுடன் பற்றியிருந்த அவளின் கைகளில் அழுத்தத்தை கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிக்காட்டினான் .

இவளின் சம்மதம் கிடைத்தப் பின் தனது இடது கையினால் சொடக்கிட்டான் ....

அந்த இடம் முழுவதும் வெள்ளையும் சிகப்புமாக ஒளிர்ந்தது ....பூக்களினால் எளிமையாக செய்யப்பட்ட அலங்காரம் ....

சஹானாவின் மனம் மகிழ்ச்சியுற்றது , அதன் பிரதிபலிப்பு அவளின் முகத்தினில் விகசித்தது ....

பின்னணி ஒலிபெருக்கியில் "காதலே காதலே " பாடலின் வயலின் இசை ரம்மியமாக இருந்தது .

அவர்களின் மேஜை மீது இரு தட்டுகளில் ரெட் வெல்வெட் கேக் கொணர்ந்து வைக்கப்பட்டது ...

கண்களை விரித்து அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தவள் தனது பார்வையை அவனின் பக்கம் திருப்பினாள் .....

பிரவீன் முற்றிலுமாக சஹானாவின் ரசனையான பார்வையில் மூல்கிப் போயிருந்தான் ..."பிடிச்சிருக்கா .." தன்னவளின் பார்வை தன் பக்கம் திரும்பியவுடன் ஆழ்ந்து ஒலித்த குரலில் கேட்டான் .

"ஹ்ம்ம் " மேலும் செம்மையுற்றாள் அவனின் பார்வையில் .

"சஹானா என்னைப் பார் "

"......"

"ஒய் சரவெடி என்ன புதுசா வெட்கம் ஹா ...."

வார்த்தைகள்
என்னும் வெடியால்
சிதறவிட்டவள்
மௌனமாகினாள் ....

மௌனியாக
இருந்தவன் காதலெனும்
கொண்டாட்டத்தில்
சரவெடியாகினான் ....

காதலின் புத்தகத்தில்
நாம் அறியவேண்டிய
பக்கங்கள்
கடல் அளவு ....!!

"பிரவீன் ப்ளீஸ் " அவனின் கைகளில் இருந்து மனமே இல்லாமல் தனது கைகளை பிரித்தெடுத்து காதலுடன் இறைஞ்சினாள் .

"ஹப்பா பஸ்ட் டைம் !" ஆச்சர்யத்துடன் கூறினான் அவன் .

புரியாமல் பார்த்த அவளிற்கு விளக்கினான் .

"என்னை பெயர் சொல்லி நீ கூப்பிடுவது முதல் முறை " அவனின் கூற்றை கேட்டு , மர்மமாக சிரித்தாள் சஹானா .

புருவங்களை சுருக்கி அவளின் முகத்தை பார்த்தவன் அவள் எதற்காக சிரிக்கிறாள் என்று கண்டுகொண்டான் .

"சஹானா நீ எதுக்கு சிரிக்கிற " கடுப்புடன் கேட்டான் .ஆனால் முகத்தில் வற்றாத புன்னகை .

"நத்திங் " என்று கூறி மேலும் சிரித்தாள் .

"கோட் !! எனக்கு தெரியும் பஸ்ட் டைம், அப்படினு சொன்ன உடனே என்னை ப்ரோ அப்படினு நீ கூப்பிட்டதை நினச்சு தானே சிரிச்ச " அவனின் கடுப்பு உச்சத்தில் இருந்தது .

"ஹாஹாஹா , அப்ப உங்க ரியாக்ஷன் ...இந்த விளக்கெண்ணெய் குடிச்சா முழிக்கிறது சொல்லுவாங்களே அப்படி இருந்துச்சு ...அதை நினச்சேன் சிரிச்சேன் ...." கூறிய நொடி சிட்டாக பறந்தாள் அவள் , அவள் அறிவாள் நகராமல் இருந்தால் சேதாரம் அதிகம் என்று .

சற்று பின் நகர்தவள் அப்படியே கண்களில் தேங்கிய ஆச்சர்யத்துடன் நின்றாள் .அங்கு மோஷன் சென்சார் லைட் என்னும கருவியின் உதவியுடன் தானாக இயங்கும் மின்விளக்கு .

சஹானாவின் அசைவில் ,அங்கு ரம்மியமான ஒளி பரவி அழகான புகைப்படங்கள் அவளுக்கு காட்சி அளித்தன .

அந்த புகைப்படங்களை கண்டு சஹானாவின் கண்கள் மேலும் விரிந்தது . அங்கு இருந்தவை அனைத்தும் அவளின் புகைப்படங்கள் தான் 'எப்போ போட்டோ எடுத்தாங்க? ' என்று எண்ணியே ஆச்சர்யமுற்றாள் .

"உன்னை பார்த்த உடன் வந்த ஸ்பார்க் , இன்னைக்கு வரைக்கும் கொறஞ்ச மாதிரி தெரியல" விஷமப்புன்னகையுடன் சஹானாவின் காதின் அருகில் நெருங்கி காதலுடன் சொன்னான் பிரவீன் .

"இதெல்லாம் எப்ப எடுத்த ஸ்னாப் ?" சஹானா ஆச்சர்யத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள் .

"உன்னை மிருதுவோட காலேஜ் வாசல்ல பார்த்ததில் இருந்து அடிக்கடி தூரத்தில் இருந்து உன்னை பார்க்க வருவேன் அப்ப எடுத்த ஸ்னாப்ஸ் ...." அங்கு இருந்த பல புகைப்படங்களை ஒவ்வொன்றாக சுட்டிக் காட்டி எங்கு , எப்பொழுது எடுத்தது என்று தன்னவளுக்கு சொல்லிக்கொண்டிருந்தான் .

"சஹானா உனக்கு ஒரு சர்ப்ரைஸ்! " சொன்ன நொடி அவளின் கண்களை தனது இரு கரத்தினால் மூடி அழைத்துச்சென்றான் .

அந்தப் புகைப்படங்களில் இருந்து சற்று தள்ளி அதே போன்று தானியங்கி ஒளி வெளிச்சத்தில் ஒற்றை புகைப்படம் . அந்த புகைப்படத்தை நெருங்கியவுடன் அவளின் கண்களை மெதுவாக திறந்தான் .

முதலில் சற்று கருப்பாக தெரிந்த அந்த புகைப்படத்தை ,கண்களை கசக்கிக்கொண்டு மீண்டும் திறந்து பார்த்தாள் சஹானா . பார்த்தவளின் முகத்தினில் இருந்தது என்ன ?....

"என்ன ஷாக் ஆகிட்டயா சஹானா ....?" ஆசையாக அவளின் முகத்தினில் வரும் உணர்வுகளை பார்த்துக்கொண்டே கேட்டான் .

அவன் எதிர்பார்ப்போ ஆனந்த அதிர்ச்சி , சஹானாவின் முகத்திலோ ...?.

"இந்த போட்டோ தான் , இதுல உன்னை பார்த்து தான் விழுந்தேன் ....கொஞ்ச நாள் கனவுல டிஸ்டர்ப் பண்ண உருவம் .....மீண்டும் ரெண்டு வருஷம் கழிச்சு என் முன்னாடி பட்டாசை போல் வெடிச்சு என்னை சிதறவிட்ட உருவம் 'சஹானா ... '"ஆழமான காதலை சொல்லும் குரல் ....

"இது ...இது ...இந்த போட்டோ " வார்த்தைகளற்று தவித்தாள் சஹானா .

"ஷாக் ஆகிட்ட தானே ...இது நீ கோத்தகிரில படிக்கிறப்ப எடுத்த போட்டோ , அப்ப ரோட்டோரமா ஒரு குட்டி குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிட்டு இருந்த , எல்லாரும் எனக்கென்னன்னு கடந்து போனப்ப , உன் சாப்பாடு டப்பா எடுத்து அவளுக்க கொடுத்த ...அந்த வயசுல நீ செஞ்ச இந்த செயல் என்னை ரொம்ப பாதிச்சது ,உனக்கென்ன அப்ப ஒரு பதினஞ்சு ,இல்லை பதினாறு வயசு இருக்கும் .. படிக்கிற பொண்ணுன்னு தாண்டி வர முயற்சி செஞ்சேன் ...பட் முடியலை உன்னை பத்தி விசாரிச்சப்ப பெயர் சஹானா , பத்தாவது படிப்பு இவ்ளோ தான் தெரிஞ்சுக்க முடிஞ்சது ...அப்பறம் பிசினஸ் , படிப்புனு இந்தியா விட்டு போய்ட்டேன் ." தனது காதலின் தொடக்கத்தை ரசனையுடன் சொல்லிக்கொண்டிருந்தான் பிரவீன் .

"ரெண்டு வருஷம் கழிச்சு மிருதுவை பார்க்க வந்தா தேவதை போல நீ ...பஸ்ட் உன்னை கண்டுபிடிக்க முடில ,, நிறைய சேஞ்சஸ் ..இந்த வலது பக்க தோற்றம் மற்றும் அந்த காதின் கீழ் பிறை போன்ற மச்சம் ....நீ என்னவள் என்று சொல்லாமல் சொல்லிக்கொடுத்துச்சு ...." பிரவீன் ,பள்ளி சீருடையில் வலது பக்க முகத்தோற்றத்தை புகைப்படத்திற்கு காட்டி இருக்கும் அந்த சிறு பெண்ணின் புகைப்படத்தை பார்த்துக்கொண்டே பேசினான் .

சஹானா விக்கித்து நின்றாள் ....

தன்னவளிடம் இருந்து எந்த பதிலும் வராமல் இருப்பதை கண்ட பிரவீன் ....அவளின் முகம் நோக்கி , "என்ன சஹானா பேச்சே வரலையா ...? அவ்ளோ ஷாக் ஹா ...எஸ் உன்னை லவ் பண்ணேன் , பண்றேன் ஆனால் எனக்கே என் மேல் தெளிவு தேவைப்பட்டுச்சு , அண்ட் நீ சின்ன பொண்ணு ...சோ அமைதியா இருந்தேன் ...நீயே கண்டுபிடிச்சு கேட்டப்பறம் மறுக்க தோணலை " இலகுவாக கூறினான் .

"நாம கிளம்பலாமா? " சஹானாவின் குரலில் இருந்தது என்ன ....

"வாட் ...?"

"கிளம்பலாமா ப்ளீஸ் ..." கெஞ்சலுடன் கேட்டாள் அவள் .

உணர்வுகளை மறைக்க அவள் படும் பாடு அவனிற்கு வெட்கமாகவும் , மகிழ்ச்சியாகவும் தோன்றியது போல் ....அவளிற்கு தனிமையை கொடுக்க எண்ணி, "ஹே சஹானா எதுக்கு எமோஷன் ...என்னோட லவ் எக்ஸ்பிரஸ் பன்னினேன் ...இதுக்கு இவ்ளோ பெரிய ரியாக்ஷன் ஹா " ..என்றான் .

"இல்லை இந்த போட்டோ பார்த்தவுடன் பழைய நியாபகம் , அப்பா இருந்தாங்க அப்ப ...அதான் ...வீட்டுக்கு போலாமே " சரி என்று சொல்லேன் என்ற கெஞ்சலை பார்வையில் தேக்கி கேட்டாள் .

"அவ்ளோதானே வா ..." என்று அவளை அழைத்துக்கொண்டு சென்றவன் மனதில் 'அப்பா நியாபகத்தில் உலண்டுட்டு இருக்கா போல ...ஹ்ம்ம் ' இவ்வாறு எண்ணிக்கொண்டான் .

செல்லும் வழியெங்கும் கண்களை மூடிக்கொண்டு இருக்கையில் தலை சாய்த்து அமர்ந்து இருந்த சஹானாவை அவன் ஒன்றுமே கேட்கவில்லை , அவளுக்கான தனிமையை கொடுத்தான் .

இறங்கி செல்லும் பொழுதும் எந்த முகமன்னும் இல்லாமல் சென்றவளை நினைத்து 'சஹானா மை பேபி உனக்கு உன் அப்பாவை அவ்ளோ பிடிக்குமா ....? நான் இருக்கேன் உன்னை கலங்க விடுவேனா ' என்று அவனாக ஒரு காரணத்தை கற்பித்துக்கொண்டு அவளுக்காக வருந்தினான் .

.....................................

கீர்த்தனாவை சென்று அவரின் அறையில் பார்த்துவிட்டு வந்த சஹானா , நிலை இல்லாமல் தவித்தாள் . பாரமாக ஏதோ ஒன்று அவளின் மனதை அழுத்தியது .

கண்களை மூடி சாளரத்தில் சாய்ந்து நின்றவளை கலைத்தது அவளின் தொல்லைபேசி ...

"ஹலோ அப்பா " வார்த்தைகளுக்கு வலிக்குமோ என்று மெதுவாக பேசினாள் .

"என்னடா டல் ஹா இருக்க ?" அந்த பக்கம் இருந்த நபரின் குரலில் எவ்ளோ வருத்தம் ?...

"ப்பா எப்படி இருக்கீங்க ...அவ அவ....இப்ப எப்படி இருக்கா ?" பேச்சை மாற்றினாள் .

அவளை புரிந்துகொண்ட அந்த நபர் , "நல்ல முன்னேற்றம் சஹானா ...அப்பறம் " மீண்டும் தனது கேள்வியை மென்மையாக தொடங்க முயற்சித்தார் .

"ப்பா நீங்க கேட்க வரது புரியுது , எஸ் கூட போனேன் ...நிறைய தெரிஞ்சுகிட்டேன் ..." சஹானா பட்டென்று போட்டு உடைத்தாள் .

"சஹானா இது ,நீ எதுக்கு ...அந்த ஆள் மகனோட ?" தயங்கி தான் கேட்டாரோ ?....

"அப்பா நம்பி கெடுப்பது அப்படினா என்னனு பார்த்துட்டோம் ...அதே பாடம் திரும்ப சொல்லிக்கொடுப்போம் ...ரொம்ப குழப்பிக்காதீங்க ..." தெளிவு அவளிடம் மீண்டிருந்ததோ ?....

"ஆனாலும் ..."

"அப்பா நான் உங்க பொண்ணு ஓகே ....நமக்கான நேரம் நெருங்கிடுச்சு "

"அப்ப முன்னாடியே பேசின மாதிரி செஞ்சுடலாமா ....?" அவர் கேள்வியாக நிறுத்தினார் .

"எஸ் அப்பா ....அந்த **** இந்தியா வரணும் பைத்தியம் பிடிச்சு அலையனும் " கண்களில் எத்தனை வன்மம் ...

"அப்படி தெரிலையே சஹானா ...அவன் தெளிவா இருக்கிற மாதிரி தான் இருக்கு ."

"அப்படியா சொல்றிங்க ....ஹ்ம்ம் அப்ப முதல அவனை இந்தியா கிளப்பிற வழியை பாருங்க ...மற்றதை நான் பார்த்துகிறேன் " கட்டளையாக கூறி அழைப்பை துண்டித்தாள் .

........................................

சஹானாவை விட்டுச்சென்ற பிரவீன் தனது வீட்டில் நிலவும் அதீத அமைதியை கண்டு குழம்பினான் .

கூடத்தில் ஆளுக்கு ஒரு பக்கம் என்று அமர்ந்து இருக்கும் தந்தையையும் , அன்னையையும் நோக்கி சென்றவன் குழப்பத்துடன் ஒரு இருக்கையில் அமர்ந்தான் .

அவன் வந்த பின்னும் மௌனம் நீடிப்பதை கண்டு மேலும் குழம்பியவன் "என்னாச்சு உங்க ரெண்டு பேருக்கும் ?" தானே பேச்சை தொடங்கினான் ...

"அது என்னனா ..." என்று ஆரம்பித்த விஸ்வத்தை பார்வையால் அடக்கினார் சாரதா ...

சரியாக அப்பொழுது அன்னையிடம் பேச வீடியோ கால் செய்திருந்த சதீஷும் சேர்ந்து சிக்கினான் அவரிடம் .

அங்கு இருந்த அசாதாரண சூழ்நிலை அவனையும் குழப்பியது .

"ம்மா என்ன ஆச்சு ?" சதீஷ் ஓய்ந்து போய் கேட்டான் . அவனே பல மன குழப்பத்தில் இருந்து மீள அன்னையிடம் பேச எண்ணினான் .

"என்னடா என்ன ஆச்சு ..." எடுத்தவுடன் எறிந்துவிழுந்தார் சாரதா .

விஸ்வம் அவர்கள் வாயை பசை போட்டு மூடிக்கொண்டார் ...வாயை திறந்தால் சேதாரத்தில் சிக்கி யார் முழிப்பது என்பது அவரின் எண்ணம் .

"ம்மா " பிரவீனும் , சதீஷும் ஒரே நேரத்தில் கூப்பிட்டனர் .

"என்னங்கடா வேணும் உங்களுக்கு அம்மா தான் ,உங்க அம்மா தான் ...ஒருதனாச்சும் கல்யாணம் செஞ்சு பிள்ளை குட்டின்னு வாழ்ந்து என்னை சந்தோச படுத்த யோசிசீங்களா ?" ஒரு அன்னையாக அவரின் மனம் தவித்தது .

அவர் செல்லும் லேடீஸ் கிளப்பில் பலர் 'என்ன சாரதா பிள்ளைகளுக்கு கல்யாணம் செஞ்சு பாட்டி ஆகிட்டா வயசு ஏறிடும்னு பயந்து செய்யாம இருக்கியா ?' என்று கேலி செய்தனர் .

அதன் பலனாக ஒரு பெரும் பணக்கார குடும்பத்தின் வரனை மகளிற்காக கொணர்ந்தார் . மகன்கள் இருவரும் தங்கையின் மணம் முடிந்தபின் யோசிக்கிறோம் என்றல்லவா சொல்கிறார்கள் ....

ஆனால் அவரின் மகளோ தாட்சண்யம் இன்றி 'எனக்கு மாப்பிளை பிடிக்கலை ' என்று புகைப்படம் பார்க்காமலே மறுத்தாள் ...அதற்கு விஸ்வமும் துணை ஆகையால் இந்த கோபம் .

"என்னமா நீங்க ? மிருது கல்யாணம் முடியட்டும் " பிரவீன் மெதுவாக சொன்னான் .

"எங்க அவ போட்டோ கூட பார்க்காம நோ சொல்லிட்டாளே " சலித்துக்கொண்டார் சாரதா .

"யாரோட போட்டோ அம்மா காண்பிச்சீங்க ?" புருவத்தில் நடுவில் முடிச்சுடன் என்னிடம் கூறவில்லையே என்ற துவணியில் கேட்டான் பிரவீன் .

சதீஷ் வெறும் பார்வையாளராக இருந்தான் .

"அதான் அந்த பிரியாவோட பையன் மித்ரனுக்கு பார்க்கலாமேன்னு சுலோச்சனா ஆண்ட்டி சொன்னாங்க ..."

"மிருது என்ன சொன்னா ?" பிரவீன் தான் பேசினான் .

"எங்க போட்டோ கூட பார்க்காம நோ சொல்லிட்டா அதுக்கு உன் அப்பாவும் சப்போர்ட் ...நல்ல பையன் , பெரிய இடம் எல்லா வகையிலும் நமக்கு சரியா வரும் இந்த வரன் " பொருளாதார பொருத்தத்தை பார்த்ததை மட்டுமே எடுத்துக் கூறினார் .

"ம்மா , அவளுக்கு யாரை பிடிச்சிருக்குனு கேக்காம நீங்களா ஒரு முடிவை எடுத்தா எப்படி ஓகே சொல்லுவா ?" இத்துணை நேரம் அமைதியாக இருந்த சதீஷ் வாய் திறந்தான் .

"என்ன ?" என்று மூவரும் ஒன்றாக அதிர்ந்தனர் .

சதீஷ், மிருதுளாவின் மனதில் இருக்கும் விருப்பத்தை பொறுமையாக எடுத்து கூறினான் ."ஸ்ரீதர் குடும்பமும் நல்ல ஸ்டேட்டஸ் தான் ...மிருதுவிற்கு பிடிச்சிருக்கு பேசி பாருங்க " என்று கூறினான் .

தன் சின்ன தங்கை காதலில் விழுந்துவிட்டாளா! என்று எண்ணி ஆச்சர்யமுற்றான் பிரவீன் .(பயபுள்ள தங்கச்சி பிரின்ட் கிட்ட கொஞ்ச நேரம் முன்னாடி காதலை சொன்னதை மறந்திடுச்சு போல ....!).
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top