JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அன்பே உ(எ)ன்னை உனக்காக ....அத்தியாயம் -9

saaral

Well-known member
அத்தியாயம் - 9

இதோ இதோ என்று பூனாவில் ஏ ஜே குழுமத்தின் கட்டிட தொடக்க விழா நாளும் வந்தது . அன்று காலை விடிவதற்கு முன்பே நிஸ்வந்த் அங்கு வந்துவிட்டான் . நிஷுவின் இம்சை தாங்காமல் யாஷும் அவனோடு வந்துவிட்டான் .

சரியான நேரத்திற்கு இரண்டு வாகனங்கள் உள்ளே நுழைந்தது . அதில் ஒரு வாகனத்தில் அபி , லீலாவதி மற்றும் ரஞ்சி குட்டி மூவரும் வந்து இறங்கினர் .

மற்றுமொரு வாகனத்தில் ஜெயதி ஓட்ட ஷில்பா அருகினில் அமர்ந்து வந்தடைந்தாள் . அனைவரும் ஒன்றாக நடந்து வந்து இரட்டையர்கள் முன் நின்றனர் . யஸ்வந்த்தும் நிஸ்வந்தும் லீலாவதியின் காலில் விழுந்து வணங்கினர் .

அதை ஒரு எள்ளலான புன்னகையுடன் பார்த்தாள் ஜெயதி . அபியோ தன் மகள் மட்டுமே கண்ணுக்கு தெரிவது போல் அவளுடன் பேசிக்கொண்டு இருந்தாள் .

ஷில்பா சட்டென்று முன்னே வந்து "அச்சச்சோ அம்மா ...!! " என்று அலறினாள் .

அனைவரின் கவனமும் அவளின் பக்கம் திரும்பியது லீலாவதியோ இருவரையும் ஆசிர்வதித்து திரும்பி "என்ன ஆச்சு ஷில்பா எதுக்கு கத்துற " என்று புன்முறுவலுடன் வினவினார் .

"அது வந்து அம்மா உங்களுக்கு ஜலதோசம் பிடிச்சிருக்கு ...இதுல வேற நீங்க மருந்தும் சாப்பிடவில்லை இங்க இருக்க பனி மழைல உங்களுக்கு மேலும் ஜலதோஷம் பிடிச்சுடுமோ என்று பயந்தேன் கத்திட்டேன் ...ஹி ஹி ஹி " என்று இளித்து வைத்தாள் .

அதை கேட்ட ஜெயதி சட்டென்று சிரித்துவிட்டாள் . யஸ்வந்த் அவளை முறைப்பதை கண்டு தோலைக்குலுக்கி முன்னே நகர்ந்தாள் .

நிஷு இந்த உலகிலே இல்லை அபியையும் அவன் மகளையும் ரசித்துக்கொண்டு இருந்தான். தூக்கி போட்ட குதிரை வால், வெள்ளை நிற முழுக்கை சட்டை ,கரு நிற கால் சராய் சற்றே உயர்ந்த செருப்பு என்று தோரணையுடன் இருந்த அபியின் பக்கம் இருந்து பார்வையை திருப்புவது நிஷுக்கு சவாலாகவே இருந்தது .

மீண்டும் ஷில்பா "எதுக்கும் சேலையை தூக்கியே நடங்க " என்றாள் .

லீலாவதியோ புரியாமல் பார்த்தார் . யஸ்வந்த் நிஷுவின் பார்வை உணர்ந்து அவனின் கவனத்தை திருப்பினான் .

அப்பொழுது ஷில்பா மீண்டும் தொடர்ந்தாள் "அது ஒன்னும் இல்லை அம்மா இங்க ஒரே ஊற்றா இருக்கா அதான் சேலை நனைந்து போய்டுமே அதான் சொன்னேன் " ஓரக்கண்ணால் நிஸ்வந்தை பார்த்துக்கொண்டே கூறினாள் .

அவளின் குறும்பில் நிஷுக்கே சிரிப்பு வந்தது . "ஹே வாயாடி பேசாம வா " என்று கூறி லீலாவதி அபியை கூட்டிக்கொண்டு முன்னே நடந்தார் .

சட்டென்று முன்னே செல்ல எத்தனித்த ஷில்பாவின் முன் வந்த யஸ்வந்த் "இங்க கொசு தொல்லை எல்லாம் ஜாஸ்தியா இருக்குல்ல " என்றான் .

"அச்சச்சோ அதுவேறா நல்ல வேளை சொன்னிங்க " என்று கூறி பின் திரும்பி வாயிலில் நின்ற அவர்களின் ஆட்களில் ஒருவனை அழைத்து "ராய் இங்க கொசு தொல்லை இருக்காம் தேவை இல்லாத கொசுவை கவனிச்சு அனுப்பிருங்க " என்று நக்கலாக கூறினாள் .

ராய் மலங்க மலங்க முழித்தான் பாவம் ஹிந்தி காரனிடம் தமிழில் கூறினால் அவனும் என்னதான் பண்ணுவான் . எதிர்த்து ஏதும் கூறினால் ....ஐயோ எதற்கு வம்பு என்று ராய் அமைதியாக நின்றான் .

அப்பொழுதுதான் வாயிலை எட்டி பார்த்த யஸ்வந்த் "ஒஹ் உங்க மேடம் எங்க போனாலும் அடி ஆட்கள் இல்லாமல் போக மாட்டாங்களா ? " என்று கேட்டு புருவத்தை உயர்த்தினான் . அதில் தெரிந்த கிண்டலை கண்டு கொதித்து விட்டாள் ஷில்பா .

"சில நரி கூட்டம் தந்திரத்துடன் நேரில் மோத பயந்து கொண்டு முதுகில் குத்துகிறார்கள் ...பட்ட அனுபவம் அதான் முன்ஜாக்கிரதை ஏற்பாடு " என்று கூறி லீலாவதியின் அருகில் சென்று நின்று கொண்டாள் .

அதன் பிறகு வேலைகள் ஜரூராக நடந்தது . இதில் நடுவில் பசி வந்து ரஞ்சினி ஜெயா அம்மா தான் ஊட்டணும் என்று ஊரை கூட்டி ஆர்ப்பாட்டம் செய்து விட்டாள் .

ஜெயாவும் புன்னகையுடன் அவள் சமைத்த உணவை காரில் இருந்து எடுத்து வந்து மகளுக்கு பாசமாக ஊட்டினாள் அதை பார்த்த யஸ்வந்த் யோசனைக்கு சென்றான் . காரணம் இங்கே சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதும் உயர்தர உணவகத்தில் இருந்து வருவிக்கப்பட்டது .

அதை எடுத்து முன் வந்த நிஸ்வந்திடம் வேண்டாம் ஜெயா அம்மா கைல தான் வேணும் என்று அவள் செய்த ஆர்ப்பாட்டம் யாஷ் நிஷு இருவரையும் யோசிக்க வைத்தது .

இவர்களும் பெரியம்மா மேல் அளவில்லா அன்பு கொண்டவர்கள் தான் ஆயினும் தங்களின் தாய் உணவு ஊட்டுவது என்று வந்தால் தாயிடம் ஓடிவிடுவார்கள் . எந்த குழந்தையும் முதலில் தாயிடம் உண்ணவே விருப்பப்படும் ஆனால் ரஞ்சினி ஜெயா தவிர்த்து எவர் முன் வந்தாலும் அந்த இடத்தையே ரெண்டாகினாள் . அபி ஓரமாக கண்களில் வலியுடன் நின்றிருந்தாள் இதை இருவருமே கவனித்தனர் .

அனைத்தும் நல்லபடியாக முடிந்து அனைவரும் கிளம்பினர் அப்பொழுது வழி அனுப்பும் விதமாக முன் வந்த இரட்டையர்களை அக்கா தங்கை இருவருமே தவிர்த்தனர் . நிஸ்வந்த் கண்களில் ஏக்கத்துடன் அபியையே பார்த்துக்கொண்டு இருந்தான் . அப்பொழுது ஜெயதி "மிஸ்டர் நிஸ்வந்த் ஆஸ் அபி டிஸ்க்ஸ்ஸ்ட் இந்த கட்டிட வேலை நேரத்திற்குள் முடிந்திருக்க வேண்டும் ...அண்ட் இது எங்களுக்கு மிகவும் முக்கியமான ப்ராஜெக்ட் ஏ ஜே குழுமத்தின் புதிய பெரிய அலுவலகம் இந்தியாவிலும் கால் பதிக்கிறது என்று சொல்லப்போவது ...இதில் எந்த வித கப்ரோமிஸும் இருக்கக்கூடாது ஆன் டைம் முடிஞ்சிருக்கணும் " என்று திமிராக கூறினாள் .

கண்களில் குறும்புடன் நிஸ்வந்த் "சூர் ஆஸ் மிஸ் ரக்ஷிதா செட் எல்லாமே சரியாய் நடக்கும் " என்றான் .

அங்கு இரு நபர்களுடைய பற்கள் உடையும் அளவுக்கு கடிக்க பட்டது . ஒன்று யஸ்வந்த் ஜெயதியின் தோரணை அதும் தனது சகோதரனிடம் .....அவளை கொள்ளும் ஆத்திரம் வந்தது அவனுக்கு .

மற்றொன்று அபி நிஷு பதில் கூறுகையில் மிஸ் ரக்ஷிதாவில் அழுத்தத்தை கூட்டி அவளை ஓரக்கண்ணில் பார்த்துக்கொண்டே குறும்பு புன்னகையுடன் கூறியது 'உன்னை நான் கண்டுகொண்டேனடி ' என்று கூறும் விதமாக இருந்தது .

ரஞ்சினி நிஷு யாஷுவுடன் நன்றாக பழகினாள் அதை எவரும் தடுக்கவில்லை அதுவே நிஸ்வந்த்திற்கு ஆறுதலாக இருந்தது .

.........................................................................................

ஆகிற்று இன்றோடு ஏ ஜே குழுமத்தின் கட்டிட வேலை ஆரம்பித்து மூன்று மாதம் ஓடிவிட்டது . அதில் இது வரை ஆர் ஆர் நிறுவனம் சந்திக்காத பிரச்சனைகள் என்று வரிசை கட்டிக்கொண்டு வந்தது .

ஒரு பொருளை ஆர்டர் செய்தால் தரமில்லாத பொருள் வந்து இறங்கியது . சம்பள உயர்வுக்கு ஊழியர்கள் போராடினர் . இவர்களின் வரைபடம் ஒன்றாக இருந்தால் கட்டிடம் வேறு விதமாக கட்டப்பட்டு இருந்தது . இடித்து இடித்து கட்டினர் .

யஸ்வந்த் இதில் எதோ சூழ்ச்சி இருப்பதாக எண்ணினான் . நிஸ்வந்தும் ஏதும் செய்ய முடியாத நிலையில் ஊழியர்களை மாற்றிக்கொண்டே இருந்தான் .

தவறு ஒருவர் செய்தால் அது அவர்களின் கவனக்குறைவு இல்லை சதி என்று எண்ணலாம் . இது அணைத்து பக்கத்தில் இருந்தும் வரும் குடைச்சல் எவ்வாறு சரி செய்வது என்று முழி பிதுங்கி நின்றனர் .

அப்பொழுது அவர்களின் நிறுவனத்தில் ஆடிட்டிங் நடைபெற்றது அப்பொழுது அதிர்ச்சிகரமான விஷயம் யஸ்வந்த் நிஸ்வந்த்தின் காதிற்கு வந்ததில் அதிர்ந்தனர் .

இவை அனைத்தும் தன்னால் என்று நிஸ்வந்த் கண்ணீர் விட்டான் . நிஷுவின் நிலைமை காண சகிக்காத யஸ்வந்த் அவ்விடம் விட்டு வேகமாக புறப்பட்டான் .

................................................................................................

ஏ ஜே குழுமத்தின் அருகில் இருக்கும் பார்க்கில் தனது மகளுடன் விளையாடிக்கொண்டு இருந்தாள் ஜெயதி . அவளின் பார்வைக்கு சற்றே தொலைவில் அவர்களின் ஆட்கள் பாதுகாப்பிற்காக நின்று இருந்தனர் .

அப்பொழுது ரஞ்சினி ஓரமாக செவரை ஒட்டிய புதரின் பின் ஒளிந்தாள் . அதை கண்டும் காணாமல் கண்ணை திறந்த ஜெயதி சிரிப்புடன் தனது மகளின் அருகில் சென்று "ரஞ்சி குட்டி மாட்டிக்கிட்டா " என்று ரஞ்சினியை தூக்கினாள் .

அப்பொழுது அவர்களின் பின் யாரோ குதிக்கும் சத்தம் கேட்டது . யாரென்று இருவரும் திரும்பி பார்த்தனர் "ஐ நிஷு அப்பா " என்று கைதட்டி குதூகலித்தாள் சிறுமி .

"அச்சோ குட்டிமா நான் யஸ்வந்த் மா " என்றான் யஸ்வந்த் .

குதித்தது நிஷு இல்லை என்பது ஜெயதிக்கு தெரிந்து அவனை முறைத்தாள் . அவளின் முறைப்பை கண்டுகொள்ளாமல் யஸ்வந்த் முன்னே வந்து ஜெயதியின் தோலில் இருந்த ரஞ்சினியை கொஞ்சினான் . அவளோ அவனின் நெருக்கம் எதோ தணலில் நிற்பதை போல் உணர்ந்தாள் . உடனே அவ்விடம் விட்டு நகர முற்பட்டாள் .

அவளால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை என்னமோ இருக்குவதை போல் உணர்ந்தாள் குனிந்து அவளின் சிற்றிடையை பார்த்தாள் யஸ்வந்த்தின் கை அவளை அனைத்து இருந்தது . ஒரு நொடி திகைத்தாள் . அவனோ கண்களில் குறும்புடன் ரஞ்சியிடமே கவனம் இருப்பது போல் பார்த்துக்கொண்டு இருந்தான் .

அவனின் குரும்பை புரிந்து கடுப்பில் இருந்த ஜெயதி திரும்பி ராயை ஒரு பார்வை பார்த்தாள் . அதில் என்ன உணர்தானோ ராய் .

இரண்டு நிமிடத்தில் யஸ்வந்த்தின் போனிற்கு அழைப்பு வந்துகொண்டே இருந்தது . அலைபேசி விடாமல் அடிப்பதை உணர்ந்து அதை எடுத்து காதில் வைத்த அவனின் கை தானாக தளர்ந்தது .

இப்பொழுது ஜெயதியின் கண்ணில் குறும்பு பார்வை . மீண்டும் ராயை பார்த்தாள் . அவன் சம்மதமாக தலை அசைத்து முன்னே வந்து குழந்தையை வாங்க கை நீட்டினான் .

போக மறுத்த ரஞ்சியிடம் "அம்மு இப்ப நீ அபி அம்மா கிட்ட போ நான் வரேன் " என்று பதமாக கூறி அனுப்பி வைத்தாள் .

குழந்தையும் சென்றது . இவை அனைத்தையும் அலைபேசியை காதில் வைத்துக்கொண்டே கவனித்த யாஷு அவளை முறைத்தான் . அவளும் பதில் பார்வை நிமிர்வாக பார்த்தாள் .

யஸ்வந்த் ஏதும் பேசாமல் திரும்பி நடந்தான் . அவனின் நடை அவளின் கை சொடக்கின் ஒளியில் நின்றது "என்னை தொட்டதுக்கே உன்னோட கோடௌன் பூஊஊ " என்று கையை தட்டி ஊதினாள்.

அவளின் வார்த்தையில் சீற்றம் அடைந்த யஸ்வந்த் திரும்பி வந்து "தயிரியம் இருந்தால் முன்னே மோதி பார் இப்படி ஒரு பத்திரம் போட்டு அதில் நிஷு அறியாமல் கையெழுத்து வாங்கி பின்னாடி குத்துவது உனக்கே அசிங்கமாக இல்லை " வார்த்தைகளை அவளை நோக்கி கடித்து துப்பினான் .

"முதுகில் குத்துவதை பத்தி நீங்கள் பேசுவது ஏதோ சிரிப்பு மூட்டுவதை போல் இருக்கிறது .... அண்ட் லிசன் காண்ட்ராக்ட் போடறப்பவே எல்லாமே சரியாக பதிவு பண்ணிதான் கையெழுத்து வாங்கினோம் படித்துவிட்டு போடாதது எங்களின் தவறு இல்லை போ போய் இப்ப இருக்க கோடௌன் அதையாவது காப்பாத்து " என்று கூறி முன்னே நடந்து அவளின் அலுவலகம் நோக்கி சென்றாள் .

'அடக்கிறேண்டி உன் திமிரை' என்று மனதில் கருவிக்கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான் யஸ்வந்த் .

அவர்களின் இந்த சந்திப்பிற்கான காரணம் ஆர் ஆர் கட்டிட நிறுவனம் சரியான நேரத்தில் கட்டிடத்தை கட்டி முடிக்காவிட்டால் நஷ்ட ஈடாக கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டிருக்கும் தொகை அவர்களின் அனைத்து சொத்தின் மதிப்பு . நிஸ்வந்த் உணராமல், படிக்காமல் கையெழுத்து போட்டு கொடுத்தாகிற்று அதை சாத்தியப்படுத்த ஜெயதி கட்டிட வேலை நடைபெறுவதில் காலதாமதம் செய்வதர்கு செய்த ஏற்பாடுகளை கேட்டவுடன் கொதித்துவிட்டான். அவளை ஒருவழி பண்ணவேண்டும் என்ற வெறியுடன் வந்தான் . எதோ உந்த தங்களின் வீட்டின் வாரிசுடன் விளையாடும் அவளை அணைக்கும் ஆவல் வந்து அவனை அறியாமலே அதை செய்தும் விட்டான் .

அதற்கு அவள் கொடுத்த பதில் அடி .. !!!
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top