JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

இன்று அன்றி(ல்)லை 17

Subageetha

Well-known member
அன்றில் 17

விடிய விடிய யோசித்தும் மனதில் பாரத்தை குறைக்க முடியாமல் நடந்தவற்றை மறுக்க, மறக்க முடியாமல் தவித்தது அந்த புள்ளி மான்.

'பெண் என்பதால் கொஞ்சம் வீட்டில் அப்பா அண்ணனின் கெடுபிடி அதிகம்தான்'. ஒருவனிடம் பிடித்து கொடுக்க வேண்டிய பெண் என்னும் எண்ணம் அவர்களை அவ்வாறு நடக்க வைத்திருக்கும்.

ஆனால், குமார் நடந்து கொண்ட விதம் அவளை வெகுவாக சீண்டி விட்டது. கட்டுப்பட்டி அல்ல அவள். சுய கட்டுப்பாடு? அது அவளுக்குள் ஆழமாக உண்டு.

இன்று இருக்கும் நிலையில் யாரிடமும் முறையிட முடியாது. நித்ரா தேவி அவளை அணைக்க மறுத்தாலும், ராகவி தன் அம்மாவை இழுத்து அணைக்க பிஞ்சு கரங்களில் சேயாய் அடைக்கலம் அடைந்தாள் ரம்யா.

விடியும் சமயம் சமையல் அறையில் பாத்திர சப்தம் கேட்டிட சற்றே சோம்பலுடன் எழுந்தவள், ராகவியின் உச்சியில் முத்தம் வைத்துவிட்டு, முருகா, முருகா, முருகா சரணம் என மூன்று முறை முருகனை நினைத்தவள் முருகனிடம் குழந்தையை காக்க முறை இட்டவளாக விரைந்து பல்விளக்கி, குளித்து தயாராகி வந்தாள்.

இன்று இருக்கும் விடுப்பில் குமாரின் வக்கீலை சந்தித்தாக வேண்டும்.

காபி பில்ட்டரில் மும்முரமாக இருந்த அம்மாவிடம், 'அம்மா, நா காலையிலேயே வெளியே போகணும், வர நேரம் ஆகலாம். ராகவிய பாத்துக்கோங்க,' என்ற மகளை விசித்திர பார்வை பார்த்துக்கொண்டே, ம்ம்ம்...என்றுவிட்டு பாலில் கவனம் செலுத்திய ரம்யாவின் அம்மா மனதில் வார்த்தைகளால் வடிக்க முடியா லட்சம் கவலைகள்.

மருமகளை கடன் கொடுத்த பொறுக்கி பார்த்த பார்வை? அவரை உள்ளூர நொறுங்க செய்திருந்தது. வீட்டு மருமகளை, அசிங்கத்திற்கு உள்ளாக்கி விட்டோம் என்று அவர் மனம் குற்ற உணர்ச்சிக்கு ஆட்பட்டது. அப்படி இருக்க தான் பெற்றபெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமையில் பற்றி அறிந்தால் தாங்குமா அவர் மனம்?

ரம்யா எதையும் சொல்லாதவளாக, அம்மா கொடுத்த காபியை வாங்கி குடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தை கிளப்பினாள் திருவல்லிக்கேணி நோக்கி.

ஏறத்தாழ இரண்டு மணி நேர வாக்குவாதத்தில் பிறகு, விஷயம் முடிவுக்கு வர திருப்தியுற்றவளாக பார்த்தசாரதி கோவிலுக்குள் நுழைந்தாள்.

அந்த பெரிய திருவுரு அவளை இனி துன்பம் இல்லை என்று ஆறுதல் சொல்வது போல் ரம்யாவுக்கு தோன்ற தான் வாங்கி வந்த தாமரையையும் துளசியையும் அர்ச்சகரிடம் தந்தாள்.

'தாயாரிடம் நீயும் ஒரு தாய் தானே, என் குழந்தையை எனக்கு மீட்டுத் தா 'என பிரார்த்தனை செய்ய, அவள் கண்கள் தாமே நீரை கடலாய் கன்னத்தில் வழிய விட்டது.

வெளியே வந்தவள் பெரிய ப்ரதக்ஷிணம் செய்ய நினைக்க, ஒரு கரம் இவளிடம் கையில் வைத்திருந்த குங்குமம், முல்லை பூவை நீட்ட முகம், இயந்திரம் போல் அதை வாங்கிகொண்டவள் குங்குமத்தை நெற்றி உச்சியில் வைத்து பூவை தலையில் வைத்து கொண்டு ஆண்டாள் சன்னதியில் நுழைந்தாள். அந்த நபர் யாரென்று அவள் பார்க்கவில்லை.
ஒரு வேளை பார்த்திருந்தால், அவள் யோசித்திருப்பாள். நடப்பவை திசை மாறி சென்றிருக்கும்.
எழுதிய எழுத்தை மாற்ற முடியாது என உள்ளிருக்கும் பார்த்தசாரதி சிரித்துக் கொண்டார்.

பெங்களூரு நாட்கள், சிவா பாலா இருவரின் வாழ்க்கையில் புது அத்யாயம் எழுதும் நாட்கள்.

பாலா - சிவா நட்பு கொஞ்சம் கொஞ்சமாய் அடுத்த கட்டத்தை நோக்கி பிரயாண பட்டது. மூன்று மாத பயிற்சிக்காக வாணி போலந்து சென்றுவிட, தனியே இருந்த சிவாவுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது. ஜெய் நகர், கமர்ஷியல் ஸ்ட்ரீட் எதுவும் ரசிக்கவில்லை. மால் எல்லாம் ஒளி மங்கியது போல் தோன்ற, அங்கிருந்த பூங்காவில் சென்று அமர்ந்து கொண்டான். ஏதோ குழுவினர் பாடல் பாடிக்கொண்டிருக்க, மனமோ வாணியை தேடியது.அவள் திருமணத் திற்கு பிறகு தான் மிகவும் அவளை மிஸ் செய்ய போகிறேன் என்று பெருமூச்சு விட, அருகில் சுகந்த நறுமணம் கூப்பிட தன்னை அறியாமல் திரும்பி பார்க்க, 'உனக்கு நான் இருக்கிறேன் என்பதை போல் அமர்ந்திருந்தவள் ஜூனியர் பாலா.

முகம் மலர அவளுடன் பேசிக்கொண்டிருந்தவனுக்கு உற்சாகம். வாணியும் சிறிது நேரத்தில் கூப்பிட, நேரம் போவது தெரியாமல் மூவரும் பேசிக்கொண்டு இருந்தனர். மனதுக்கு இதமாய் இருக்க,
'சாப்பிட போலாமா? பசிக்குது என பாலா சொல்ல', இருவரும் இரவு உணவை முடித்து கொள்ள ஒரு உணவகம் நுழைந்தனர். வாணிக்கு வெளியே சாப்பிட அதிகம் பிடிக்காது. வீட்டுல சமைச்சுப்போம். என்றவனை வினோதமாக பார்த்தவள், சாரி, நானும் ரொம்ப நாள் கழிச்சு வெளியே சாப்பிடுறேன். வீட்லதான் சமையல் செஞ்சுப்பேன் என்றாள் பாலா.

அப்போ ஓகே, நாளைக்கு எங்க பிளாட்டுக்கு டின்னருக்கு வந்துரு... என்று சிவா விளையாட்டாக சொல்ல, நிஜமாகவே அடுத்த நாள் மாலை ஐந்து மணிக்கு கைகளில் காய்கனி பையுடன் நின்று கொண்டிருந்தவள் சாட்ஷாத் பாலாவே தான்.

தினமும் இதுவும் வழமை ஆயிற்று. இரவு உணவு முடிந்து அவள் தன் இருப்பிடம் செல்ல இவன் தன் பைக்கில் கொண்டு விடுவான்.

இரவு தனிமையில், யோசித்து அவன் உணர்ந்தது, வாணி என் தங்கை. பாலா, வாணி இங்கில்லா நிலையில் என் மனதை மாற்ற இங்கு வந்தாலும், அவள் என் தங்கை ஆக ஒரு நாளும் முடியாது.

வாணி வருவதற்குள் இவர்கள் உறவு காதல் எனும் நிலையை எட்டியிருந்தது. இருவரும் தெளிவாக புரிந்து கொண்டது ஒருவர் இன்றி ஒருவர் இல்லை என்பதை.

கல்லூரி முடிய இன்னும் சில மாதங்கள் மிச்சம். பயிற்சிக்காக ஏதேனும் ஒரு நிறுவனத்தில் ஆறு மாதங்கள் பணி செய்தாக வேண்டும். இருக்கும் நிலையில் பாலாவை பிரிய சிவாவுக்கு முடியும் என தோன்றவில்லை.

வாணிக்கு இன்னும் இரண்டு மாதங்கள் பயிற்சி நீட்டிக்க பட சிவா கோவத்தில் இருந்தான்.

பாலாவுக்கு சென்னையில் பயிற்சி நிறுவனம் அமைய சிவா எலக்ட்ரானிக் சிட்டியில் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து விட்டான்.

பாலாவின் அத்தை வீடு சென்னையில். அதனால் அவள் சில மாதங்களுக்கு சென்னைவாசியாகி போனாள்.

நடுவில் சிவா சென்னை சென்றான். ஆனால், பாலாவுக்கு சொல்லவில்லை. பாலா திருச்சிக்கு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை செல்வதை வழக்கமாக்கி கொண்டிருந்தாள். சிவாவுக்கு பாலா சென்னை சென்றது கோவம். அதனால் அதிகம் பேசவில்லை.
பிரிவு துன்பம் தாளாமல், பாலா போனில் விசும்ப, இந்த வாரம் சென்னை பயணம் பற்றி சிவா வாயை விட்டான்.
அவ்வார இறுதியில் பாலா சிவாவை பார்க்க அவன் வீட்டுக்கே சென்றாள்.

வீட்டில் தோழி என அறிமுகம் செய்ய நினைத்தவன், அம்மாவின் பார்வையில் வீழ்ந்து, காதலி என்று அறிமுகம் செய்தான். அம்மா அப்பா இருவரும் பதில் சொல்லவில்லை. சிறிது நேரத்தில், படிப்பு முடிஞ்சு ரெண்டு பேரும் வேலையில் சேருங்கள். ஒரு வருஷம் கழிஞ்சும் உங்க காதல் மாறலைனா, பாலா வீட்டுல பேசலாம் என்றார் ராமன்.
அவருக்கு இந்த காதலையாவது சேர்த்து வைக்க ஆசைதான் !

இந்த துணிச்சல், நிதானம் தனக்கில்லையே என்று வருந்தியது ஆனந்தின் மனசு.

சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு கிளம்பிய ஜூனியர் பாலாவுக்கு நெற்றியில் குங்குமம் வைத்து 'ஆல் தி பெஸ்ட் ' என்றாள் சிவாவின் அம்மா. சீனியர் பாலாவுக்கு புரிந்தது தன் கணவரின் எண்ணம்.

சிவாவின் முகம் வெட்கம் காட்ட , வீட்டில் எல்லோரும் கேலி செய்ய தொடங்க ஆனந்தனின் கார் சாவியை கையில் எடுத்து கொண்டு, நா பாலாவை வீட்டுல விட்டு வரேன் என்று, கிளம்பிவிட்டான் சிவா. அவனால் சந்தோஷத்தை அடக்க முடியவில்லை. வீட்டில் சம்மதம் கிடைக்கும், அதுவும் இவ்வளவு எளிதாக என்று பாலா -சிவா இருவரும் நம்பவில்லை. கடற்கரை சாலையில் அவர்கள் வாகனம் காற்றை கிழித்து கொண்டு சென்றது.

சிவாவின் மனதில், அண்ணன் ஆனந்தனுக்கு நல்ல பெண்ணுடன் சீக்கிரம் கல்யாணம் ஆகவேண்டும், வாணிக்கு நல்ல இடம் அமைய வேண்டும்.. இவை எல்லாம் எங்கள் திருமணத்திற்கு முன் நடந்துவிடணும் என்று விரும்பியது.

தீபாவளி வருது... சோ அடுத்த வாரம் திருச்சி போறேன் என்றாள் ஜூனியர் பாலா. அவள் மனதில் வீட்டில் இப்போ சொல்ல முடியுமா என்ற எண்ணம்.

மற்றவை நடக்கும் சரி... இவர்கள் காதல் கைகூடுமோ? பாலா துணிந்து தன் காதலை வீட்டில் சொல்வாளா என தெரியல.

மீண்டும் அடுத்த பதிவுடன் சந்திக்கிறேன்.

தோழி சுகீ.

இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
 
Last edited:

Mariammal ganesan

New member

Nice ud, ஆனந்திற்கு நிம்மதியும் நல்வாழ்க்கையும் அமைய வாழ்த்துக்கள்
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top