JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Arimakalin Vettai - 12

JLine

Moderator
Staff member
அரிமாக்களின் வேட்டை!

அத்தியாயம் 12

Like a chess board
I have undeniable limitations
I am the King and
She is the Queen!

My kingdom doesn't allow me to meet
Nor her kingdom is ever ready
Yet I have umpteen moves to make
To win her and come closer!

My motives are clear
I do not want any body's head or crown
What I want is the queen!

My moves are no less flamboyant
To plant my love I wore the playful mask
Gliding smoothly in the territory of my
enemy.

Where my love is and there is my victory!


ஒன்று, இரண்டு, மூன்று என்று நாட்கள் கடந்து போய்த் துர்கா கடத்தப்பட்டு ஏறக்குறைய ஒரு மாதம் முடிந்திருந்தது.

சிதாராக் கூறியிருந்த அணைத்து இடங்களையும் சல்லடைப் போட்டுச் சலிப்பது போல் ஷிவ நந்தனும் அவனது நண்பர்களும் காவல்துறையினருடன் இணைந்து தேட, ஆயினும் துர்காவின் இருப்பிடம் மட்டும் தெரிந்தபாடில்லை.

மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஸ்ரீமதியும் ஊண் உறக்கம் மறந்து அழுது கரைந்து கொண்டிருக்க, தாமரைக்குளத்தின் பெரிய வீடே இருளில் மூழ்கியது போல் அடைந்து போயிருந்தது.

"நீங்க நம்ம போலிஸ் டிபார்ட்மென்டுக்கு எவ்வளவோ பெரிய காரியங்களைச் செய்திருக்கீங்க ஷிவா. அதுக்காகத் தான் ஒரு ஷ்பெஷல் போலிஸ் ஃபோர்சையே ஏற்பாடு செய்து துர்காவைத் தேட அனுப்பினேன். ஆனால் எவ்வளவு இடங்கள்! எல்லாத்தையும் தேடிப் பார்த்தாச்சு.

உங்களுக்கு வந்த இரகசிய தகவல் படி நீங்க குறிப்பிட்டு சொன்ன இடங்கள் மட்டும் இல்ல, கடந்த சில வருஷங்களாக வருண் தேஸாய் யாருக்கும் தெரியாமல் மறைமுகமா கூட்டங்கள் நடத்திக் கொண்டிருந்த இடங்களையும் கண்டுப்பிடிச்சு, அங்கேயும் தேடிப் பார்த்துட்டோம். இதுல இந்தக் கடத்தலுக்கு ஒரு வேளை மினிஸ்டர் ஆர்ய விக்னேஷ் உதவி செய்திருக்கவும் வாய்ப்பிருக்குன்னு நீங்க சொன்னதால், மறைமுகமா அவரையும் கண்காணிச்சுப் பார்த்தாச்சு.

ஒரு கேபினட் மினிஸ்டரை இப்படி மறைமுகமா அவருக்குத் தெரியாமல் விசாரணை செய்யறது எவ்வளவு பெரிய பிரச்சனைகளில் நம்ம டிபார்ட்மென்டைக் கொண்டு வந்து விட்டுடும்னு உங்களுக்கும் தெரியும். இருந்தும் நாங்க உதவி செய்தோம். பட், இதற்கு மேல் துர்காவை எங்கப் போய்த் தேடுறதுன்னு தெரியலை. ஐ ஆம் சாரி ஷிவா."

உண்மையான வருத்தத்துடன் மும்பைத் தலைமை காவல் ஆய்வாளர் கூற, அவருக்கு அடுத்து நின்றிருந்த துணைக்காவல் ஆய்வாளர்,

"அதுவும் இல்லாமல் நீங்க ஒருத்தர் மட்டும் தான் அன்னைக்குத் துர்காவைக் கடத்தினது வருண் தேஸாய்ன்னு சொல்றீங்க. உங்கக்கூட இருந்த மற்ற அதிகாரிகள் எவருமே அவரை நேரடியாப் பார்க்கலை. அன்ட் ஆல்ஸோ, அந்த மண்டபத்தில் இருந்த சிசிடிவி கேமராஸ் எல்லாமே ஒரே நேரத்தில் ஃப்ரீஸ் [Freeze] ஆகிருக்கு. அதனில் இருந்தும் எங்களால் எதையும் கண்டுப்பிடிக்க முடியலை. ஸோ, அது வருண் தேஸாயா இல்லாமலும் இருக்கலாம்.

ஏன்னா வருண் தேஸாய் அப்ப வேற ஒரு இடத்தில் இருந்ததற்கான ஆதாரங்களும் இருக்கு [alibi]. அதனால் ஒருத்தருடைய சந்தேகத்தின் பெயரில் இவ்வளவு பெரிய பிஸ்னஸ்மேனை சந்தேகப்படுவது, அதுவும் அவரே நேரில் வந்து மணமகளைக் கடத்திட்டுப் போனாருன்னு சொல்றது பெரிய குற்றம். அவரை இந்த அடிப்படையில் விசாரிக்கிறதும் தவறு ஷிவா." என்றார்.

அவர்களின் வாதங்கள் சரியானவையே.

இதைப் பலமுறை தமிழ்நாட்டைச் சார்ந்த, ஷிவாவிற்கு உறுதுணையாக இருக்கும் பெரிய காவல் அதிகாரிகளும் கூறினர்.

ஆயினும் தான் பார்த்தது பொய்யல்லவே.. அதுவும் இல்லாது மணமண்டபத்தை விட்டு வெளியேறும் முன்னர்ப் பேசியதும், வருண் தேஸாய் டில்லியில் நடைபெற்ற விழாவில் கூறிய அதே சொற்கள் தான்.

முகம் தெரியாவிடினும் அது அவன் தானே. அவனது கண்களும் குரலும் எப்படிப் பொய்யுரைக்கும்? இதனை அவனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த சிதாராவும் உறுதிப்படுத்தி இருந்தாளே!

பல முறைத் தன்னைத்தானே ஷிவ நந்தன் கேட்டுக்கொண்ட கேள்விகளே இவை.

ஆனால் ஷிவ நந்தனால் ஒரு அங்குலம் கூட வருண் தேஸாயை நோக்கி நகர முடியவில்லை. இதைத் தானே DGP நீரவ் பிரகாஷும் தங்களின் முதல் சந்திப்பில் கூறினார். வருண் தேஸாயை என்னால் நெருங்கக்கூட முடியவில்லை என்று.

அப்படி என்றால் தேசம் முழுவதுமே வலைவீசித் தேடியும் அகப்படாத பெண்ணை இதற்கு மேல் எங்குப் போய்த் தேடுவது?

அதிநிச்சயமாய் அவள் வெளிநாட்டிற்கும் கொண்டு செல்லப்படவில்லை.

இறுதியாகக் காவல்துறையினர் எடுத்த முடிவே அது.

ஆனாலும் கடத்தப்பட்டிருக்கும் மாமன் மகளைத் தேடாது இருக்க முடியுமா? தன் கண் முன்னேயே அவளைக் கடத்திய ஒருவனை எங்கனம் விட்டுவிட முடியும்?

நெற்றிச்சுருங்க யோசனையில் ஆழ்ந்தவனாய் நின்றிருந்தவனை விலுக்கென்று நிமிரச் செய்தது அடுத்து அதிகாரி ஒருவர் கூறிய விஷயம்.

"இன்ஃபேக்ட் துர்கா இப்போ உயிரோடு இருக்காங்களான்னு கூடத் தெரியலை. ஸோ, அந்த எண்ணத்தோடு கூடத் தேடிப் பார்த்தாச்சு மிஸ்டர் ஷிவ நந்தன்.."

அவர் கூறியதுமே ஷிவாவின் நெஞ்சுக்குள் நெருஞ்சி முள் குத்தியது போல் இருந்தது.

"சார், எனக்குத் தெரிஞ்சு வருண் தான் துர்காவைக் கடத்தினான். அதே போல் துர்காவும் நிச்சயமா உயிரோடு தான் இருக்காள். அவளை நான் எப்படியும் கண்டுப்பிடிச்சே தீருவேன் சார்."

"அது தான் எங்க விருப்பமும் கூட ஷிவா. ஆனால் இதற்கு மேல் போலீஸ் டிபார்ட்மென்ட் என்ன உதவி உங்களுக்குச் செய்ய முடியும்னு எனக்குத் தெரியலை. எனிவேய்ஸ், ஆல் தி பெஸ்ட்.."

தமிழ்நாடு மற்றும் மும்பையைச் சார்ந்த தலைமை காவல் அதிகாரிகள் துர்காவைத் தேடும் பணியில் இருந்து விலகிக் கொண்டனர். ஆய்வாளர்கள் அமைத்த தனிப்படையையும் விலக்கிக் கொண்டனர்.

காவல் துறையின் உதவியோடு கூடத் துர்காவைக் கண்டுப்பிடிக்க இயலவில்லை என்றால் இப்பொழுது தனி மனிதனாக என்ன செய்வது?

என்ன தான் அஷோக் உட்பட அவனது நண்பர்கள் இன்னமும் அவனுக்குத் தோள் கொடுத்துக் கொண்டிருந்தாலும் பணியின் நிமித்தமும் அவர்களாலும் அவ்வளவு நேரம் ஒதுக்க முடியவில்லை.

கிட்டத்தட்ட ஓய்ந்துப் போன நிலையில் இருந்த ஷிவாவின் அலைபேசிக்கு மீண்டும் அழைத்தாள் சிதாரா.

"ம்ம், சொல்லு.."

"ஏதாவது தகவல் வந்ததா சார்?"

"எத்தனை தடவை சொல்லிருக்கேன். தகவல் வந்தால் நானே உன்னைக் கூப்பிட்டு சொல்றேன்னு. ஒரு நாளைக்கு எத்தனை தடவடி." என்றவன், "ம்ப்ச், எத்தனை தடவ சொல்றது?" என்று முடித்தான்.

அவன் அவனையும் அறியாமல் தன்னை 'டி' போட்டு எப்பொழுதாவது பேசுவது சிதாராவிற்குக் கோபத்தை வரவழைத்தது தான்.

ஆனாலும் ஒரு மாதமாகத் துர்காவைத் தேடி அலைந்துக் கொண்டிருப்பவன்.

இப்பொழுது மறுபடியும் 'டி' போட்டு கூறியதும் பிறகு நிறுத்தியதையும் கேட்டவளுக்கு வழக்கம் போல் கோபம் முதலில் வந்தாலும், அவனது சூழ்நிலையின் விகாரத்தை நன்றாகவே புரிந்திருந்ததில் பெரிதாக அலட்டிக்கொள்ளவும் இல்லை.

"இல்ல, துர்காவைத் தேடுறதுக்காக உருவாக்கப்பட்ட ஷ்பெஷல் போலிஸ் ஃபோர்சை கலைச்சிட்டாங்கன்னு அப்பா சொன்னாங்க."

"அதான் தெரியுதுல்ல, பிறகு என்ன?"

"அப்போ துர்காவை தேடப் போறதில்லையா?"

"சிதாரா, நானே ஏற்கனவே ரொம்பக் கோபத்தில இருக்கேன், நீ வேற மேல மேல என்னை டென்ஷன் பண்ணாதே.."

"அப்ப நான் ஃபோனை வச்சிடட்டுமா?"

"ம்ம், வை.."

பொங்கும் கோபத்துடன் பட்டென்று கூறியவனை என்ன செய்வதென்றே அவளுக்குப் புரியவில்லை.

தற்போது அவனுக்கு உதவுவார் ஒருவரும் இல்லை.

என்ன தான் உயர்ந்த பதவியில் இருந்தாலும் காவல்படையின் உதவி இல்லாது இவன் என்ன செய்வான்?

அந்த இரக்கத்தில் அழைத்தால் என்ன பேச்சுப் பேசுகின்றான் என்று எண்ணியவளாக அலைபேசியை அணைக்க, ஆயினும் விகல்பமில்லாத துர்காவின் முகம் சிதாராவை பாடாய்படுத்தியது.

அதுவும் தான் ஷிவ நந்தனை சந்தித்ததை வருண் தேஸாய் ஒரு வேளை கண்டுப்பிடித்தாலும் பிடித்திருப்பான் என்று அஞ்சி இருந்தவளுக்கு, வருண் அவளை அணுக முயற்சிக்காததும் ஒருவித தெம்பைக் கொடுத்திருந்தது.

அன்றில் இருந்து தன்னால் இயன்றவரை சில நண்பர்களையும், தந்தை மூலம் பழக்கமான அரசியல்வாதிகளின் இளம் வாரிசுகளில் நம்பிக்கைக்குப் பாத்திரமான சிலரையும் இரகசியமாய்த் தன்னுடன் இணைத்துக் கொண்டவள், வருணைப் பற்றி ஆராய ஆரம்பித்தாள்.

ஆனால் துர்காவின் இருப்பிடத்தைப் பற்றி நிச்சயமாகத் தெரியும் வரை ஷிவாவை இனி தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் முடிவெடுத்தாள்.

*****************************************

கிராமங்கள், ஊர்கள், நகரங்கள், மலைப்பகுதிகள், மக்கள் செல்லக்கூடிய கானகங்கள், நீர்நிலைகள் என்று இந்தியாவின் அனைத்துப் பிரதேசங்களில் தேடினாலும் கிடைக்காத துர்காவை நினைத்து மிகப்பெரிய கவலையில் ஆழ்ந்த ஷிவ நந்தனிற்கு நேர் எதிரான மனநிலையில் இருந்தான் வருண் தேஸாய்.

ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பு கடத்தி வரப்பட்ட துர்கா முதல் மூன்று நான்கு நாட்கள் பசியை மறந்து உண்ணாவிரதம் இருந்தாலும், நாட்கள் நகர நகர உடலும் மனமும் சோர்ந்துப் போனதில் தொய்ந்துப் போனாள்.

இத்தகைய பலம் வாய்ந்த ஆண்கள் பத்து பதினைந்துப் பேர் தன்னைச் சுற்றி இருக்கும் வேளையில் இப்படித் தேகத்தில் பலனற்றுக் கிடந்தால், நாளை அவர்கள் என்னை எதுவேனும் செய்ய நேரிடும் சூழ்நிலையில் என்னால் என்னை எப்படித் தற்காத்துக் கொள்ள இயலும்?

உணவின்றிப் பசியால் மாண்டு போகக்கூடும் என்பதெல்லாம் உண்மை தான், ஆனால் அதற்கு முன் இவர்கள் என் மானத்திற்கு ஏதேனும் கேடு விளைவிக்க முயன்றால்?

அந்த உண்மை சுட்டதுமே வேறு வழியின்றி வெறும் உடல் திடத்திற்காக என்று சிறிது உணவருந்த துவங்கினாள்.

அவள் சாப்பிட ஆரம்பித்துவிட்டாள் என்ற செய்தி வருணின் உதடுகளில் சிறு கோடாக வெற்றிப் புன்னகையே கொண்டு வந்தது.

***********************************************

மும்பையின் மேற்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள, 'பாலிவுட்டின் பெவர்லி ஹில்ஸ்' என்று அழைக்கப்படும், ஜுஹு கடற்கரை ஓரத்தில் கட்டப்பட்டிருக்கும் ஆர்ய விக்னேஷின் இல்லம்.

வீட்டில் இருக்கும் தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தவனாய் மேஜையில் வைத்திருக்கும் சிகாரை [Cigar] எடுத்தவன் அதனைப் பற்ற வைத்துக் கொண்டிருக்கும் பொழுது, அவனது அலைபேசியில் தகவல் வந்தது.

"I want to meet you"

எடுத்துப் பார்த்தவன் மெல்லியதாக முறுவலித்தவாறே தகவல் அனுப்பியிருந்தவளை அழைக்க, வழக்கமான போதைத் தரும் கிறக்கமான குரலில் பேசிய சஹானா பாக்ஷியின் வார்த்தைகளுக்கு மேலும் மயங்கினான் அந்த இளம் மினிஸ்டர்.

"இப்பவே உங்களைப் பார்க்கணும் போல இருக்கு ஆர்யன்."

"எதுக்கு?"

"ம்ப்ச், உங்களை நான் பார்க்கணும்னு விரும்பறதுக்குத் தனிக் காரணம் எதுவும் வேணுமா, என்ன?"

எரிந்து கொண்டிருந்த சிகாரை உதடுகளுக்கு இடையில் வைத்து இழுத்தவன் புகையை வெளியேவிட்டுக் கொண்டே புன்னகைக்க, மறுமுனையில் அரண்மனை போன்ற வீட்டின் படுக்கையறையில் கட்டிலில் அமர்ந்திருந்தவளை ஏறக்குறைய மடியில் கிடத்தியது போல் இருந்த கலானி மிர்சாவின் உதடுகளிலும் முறுவல் நெளிந்தது.

அவன் சத்தம் போட்டுவிடப் போகின்றானோ என்று அஞ்சியது போல் வாயில் ஒற்றை விரலை வைத்து மௌனமாய்ச் சைகை செய்தவள், "சிரிச்சா மட்டும் போதாது, எப்ப வர்றீங்கன்னு சொல்லுங்க ஆர்யன்.." என்றாள் கலானி மிர்சாவைப் பார்த்து கண்சிமிட்டிக் கொண்டே.

"இப்படித் திடீர்னு கூப்பிட்டா எப்படிச் சஹானா?"

"எனக்கு என்னவோ இப்பவே உங்களைப் பார்க்கணும் போல இருக்கு."

காதலையும் காமத்தையும் கலந்தது போல் கவர்ச்சிகரமான குரலில் கொஞ்சலாக யாசித்தாள்.

அவளின் விண்ணப்பத்தை மறுக்க மனம் வரவில்லை என்றாலும், இன்று தான் ஆற்ற வேண்டிய முக்கியப் பணியை நினைத்த ஆர்யன், சிறிது நேரத்தில் கூப்பிடுவதாகக் கூறி அழைப்பைத் துண்டிக்கும் வேளை சரியாக உள் நுழைந்தாள் சீதா.

சிகாரின் புகையை வெளியேவிட்டவாறே எதிரே நின்றிருக்கும் மனைவியை ஆராயும் பார்வைப் பார்க்க, எப்பொழுதும் காதலையும் அன்பையும் மட்டுமே தன்னிடம் பரிமாறிக் கொண்டிருக்கும் அவள் விழிகளில் இன்று தென்பட்ட உணர்வுகள் வித்தியாசமாக இருந்தன.

"என்ன சீதா?"

நீண்ட மூச்சினைவிட்டவளாய் பதிலொன்றும் கூறாது அறையை விட்டு வெளியேற எத்தனிக்க, "சீதா, என்னன்னு கேட்டேன்." என்றவனாய் எழுந்து அவளிடம் வந்தான்.

"ஒரு முக்கியமான விஷயம் பேசறதுக்கு வந்தேன். ஆனால் நீங்க அதைவிட முக்கியமான டிஸ்கஷனில் இருப்பது மாதிரி தெரிஞ்சது."

கூறியவளின் முகம் தரைப் பார்த்து இருந்ததில் அவளது விழிகள் கலங்கியிருப்பது ஆர்யனுக்குத் தெரியவில்லை.

ஆனால் அவள் குரலின் தடுமாற்றம் அவள் தனது அலைபேசி சம்பாஷணையைக் கேட்டுவிட்டாள் என்பதை அவனுக்குப் புரிய வைத்தது.

"ம்ப்ச், சீதா, என்னை நிமிர்ந்துப் பாரு."

"இல்லை, நீங்க உங்க வேலையைப் பாருங்க, நான் அப்புறம் வரேன்."

"ஏய், முதல்ல என்னைப் பாருடி.."

சற்று அதட்டலாகவே கூறியவனை நிமிர்ந்துப் பார்த்தவள் அமைதியாக நிற்க, அவளது கலங்கிய கண்களை ஆழ்ந்துப் பார்த்தவாறே, "சொல்லு, என்ன முக்கியமான விஷயம்?" என்றான்.

"ஷிவாவோட அத்தை மகள் துர்கா.."

அவளை முடிக்கவிடவில்லை ஆர்ய விக்னேஷ்.

"அதுக்கு என்ன இப்போ?"

"அவளை வருண் தான் கடத்திட்டுப் போயிட்டதாகத் தாமரைக்குளத்தில் பேசிக்கிறாங்களாம். அதான் அதைப் பத்தி உங்களுக்கு எதுவும் தெரியுமான்னு கேட்க வந்தேன்."

"ஏன் வருணுக்கு வேற வேலையே இல்லையா என்ன?"

"ஷிவாவுக்கும் வருணுக்கும் இடையில இருக்குற விரோதத்தைப் பத்தி உங்களுக்கு நல்லாத் தெரியும். அப்படி இருந்தும் இது என்ன கேள்வி?"

"ஷிவாவை எதிர்க்கணும்னு வருண் முடிவு செய்தால் அதுக்காக ஒரு பொண்ணைக் கடத்துற அளவுக்கு எல்லாம் அவன் போகமாட்டான்."

ஆர்ய விக்னேஷின் கண்களிலோ முகத்திலோ அவன் பொய்யுரைப்பதற்கான எந்தச் சுவடும் இல்லை.

ஆயினும் அரசியலில் ஆழமாய் ஊன்றி, இந்தச் சின்ன வயதிலேயே அரசனாய் கோலோச்சி கொண்டு இருப்பவனுக்குப் புறத்தில் வெளிக்காட்டாமல் பொய் கூறுவது அப்படி என்ன கடினமான காரியமா?

அதிலும் கணவனின் ஒவ்வொரு அசைவிற்கும் அர்த்தத்தை உணர்ந்து அறிந்திருக்கும் அவனது மனையாளுக்கு, அவன் எவ்வளவு அபத்தமான பொய்யைக் கூறுகின்றான் என்பது புரியாமல் இல்லை.

"ஆனால் வருணோட நிச்சயத்தார்த்தம் அன்னைக்குத் தான் ஷிவா அவரை அரெஸ்ட் செய்திருக்கார். அதனால் அவருடைய கல்யாணம் நின்னுப்போயிடுச்சு. அதுக்குப் பழிவாங்குறதுக்காகத் தான் ஷிவாவோட கல்யாணம் அன்னைக்குத் துர்காவை வருண் கடத்திட்டதா பேசிக்கிறாங்களாம்."

"சீதா, அப்படியே இதை வருணே செய்திருந்தாலும் அதைப் பத்தி எனக்கு எப்படித் தெரியும்?"

இதற்கு மேலும் இவனிடம் இதைப் பற்றிப் பேசிப் பயனில்லை என்பதை உணர்ந்தவளாய் வெளியேறப் போனவளின் கையைப் பற்றி நிறுத்தினான்.

"எதுவும் சொல்லாமல் போனா என்ன அர்த்தம்?"

"தெரிஞ்சே பொய் சொல்றவருகிட்ட இதுக்கு மேல என்ன பேசுறது? நான் உள்ள வரும் போது நீங்க யார்கிட்டேயோ ஏதோ முக்கியமான விஷயத்தைப் பத்திப் பேசிட்டு இருந்தீங்களே. அவங்க உங்களுக்காகக் காத்துட்டு இருப்பாங்க, போங்க.. போய் பேசுங்க.."

வெடுக்கென்று கூறிவிட்டு வெளியேற, நிமிடங்கள் நேரம் அமைதியாக அவ்விடத்திலேயே நின்றிருந்தவன், மீண்டும் சிகாரின் புகையை உள்ளிழுத்தவனாக அலைபேசியை உயிர்ப்பித்தான்.

அவனின் “ஹலோ” என்ற குரல் அறைக்குச் சில அடிகள் தொலைவில் நடந்து கொண்டிருந்த சீதாவிற்குக் கேட்டதில் மனம் அடிப்பட்டுப் போனது.

விடுவிடுவென்று சமையல் அறைக்குள் புகுந்துக் கொண்டவள் அறியவில்லை. அவன் அழைத்தது சஹானா பாக்ஷியை அல்ல, மாறாக வருண் தேஸாயை. அதுவும் வீடியோ கால் மூலமாக.

"சொல்லுங்க ஆர்யன்."

"துர்கா விஷயத்தில நீ என்ன முடிவெடுத்திருக்க வருண்?"

"என்ன முடிவெடுத்திருக்கேன்னா?"

"ஷிவாவைப் பழிவாங்குறதுக்குத் தான அவளைக் கடத்துன. ஆனால் இப்போ நீ அவளைத் தூக்கிட்டு வந்து ஒரு மாசத்துக்கும் மேல ஆகிடுச்சு. இன்னும் அவளை வச்சிட்டு என்ன பண்ணப் போற?"

"ஏன் ஆர்யன், அவளை நான் எதுவும் செய்துடுவேன்னு நினைக்கிறீங்களா?"

"என்ன வருண்? நீ பொண்ணுங்க விஷயத்துல எப்படின்னு எனக்குத் தெரியாதா?."

"பிறகு என்ன?"

"உன்னுடைய திட்டம் என்னன்னு தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன் வருண்."

"எனக்குத் தெரிஞ்சவரை ஷிவாவுக்கு உதவிட்டு இருந்த எல்லாப் போலிஸ் ஃபோர்ஸும் வெளியே வந்தாச்சு. அதாவது அவன் நம்பிட்டு இருந்த எல்லாரும் அவனைக் கைவிட்டுட்டாங்க. இப்பத் தனியாளா அவன் ஒத்தையா துர்காவைத் தேடிட்டு இருக்கான். இதுவரை இருந்ததைவிட இப்பத்தான் துர்காவைக் கண்டுப்பிடிப்பதில் அவனுக்குப் பெருங்கஷ்டம் இருக்கு. துர்கா எப்படி இருக்கா, நான் அவளை எதுவும் செய்துட்டேனா? அவள் உயிரோடத்தான் இருக்காளா? இப்படி ஒவ்வொரு நாளும் இதையே நினைச்சு நினைச்சு அவன் பதறித் துடிக்கணும். அது தான் எனக்கு வேணும் ஆர்யன். இதுக்காகத் தான் நான் காத்துட்டு இருந்தேன்."

கூறியவன் உண்மையைக் கூறுகின்றானா என்ற சந்தேகம் ஆர்ய விக்னேஷிற்குத் தோன்றவே செய்தது.

ஏனெனில் ஷிவ நந்தனின் திருமணத்தன்று துர்காவை கடத்தப்போவது பற்றிக் கோடிட்டுக் காட்டியிருந்த வருண் தேஸாய், அதைத் தான் நேரிடையாகச் செய்யப் போவாதாக ஒரு வார்த்தைக் கூடக் கூறவில்லை.

ஷிவா நந்தனை அவமானப்படுத்தவே இதைச் செய்கின்றேன் என்று பிறகு கூறியவன் இவ்வளவு நாள் அவளை அடைத்து வைத்திருக்கப் போவதாகவும் தனக்குத் தெரிவிக்கவில்லை.

ஆக, துர்காவை அவன் விடுவிக்காதது ஏன்?

"உண்மையில் அது தான் காரணமா வருண்?"

"இன்னும் சந்தேகமா ஆர்யன்?"

"சந்தேகம்னு சொல்ல முடியாது. உன்னைச் சந்தேகப்பட்டால் அது என்னை நானே சந்தேகப்படுவது மாதிரி ஆகிடாதா? ஆனாலும் மனசுல ஏதோ உறுத்துது, அதான்."

"என்ன உறுத்துது?"

"Stockholm syndrome.. அதாவது.."

ஆர்ய விக்னேஷை முடிக்க விடவில்லை வருண் தேஸாய்.

"என்ன ஆர்யன்? கடத்தினவனைக் கடத்தப்பட்ட பெண்கள் விரும்ப ஆரம்பிக்கிற சைக்கலாஜிகள் கண்டிஷனை சொல்றீங்க, அப்படின்னா துர்கா என்னை விரும்ப ஆரம்பிச்சிடுவான்னு சொல்றீங்களா?"

முறுவலுடன் கேட்ட வருண் தேஸாயை அலைபேசியின் மூலமாகப் பார்த்துக் கொண்டிருந்த ஆர்ய விக்னேஷ் அவனது கண்களை ஊடுறுவிப் பார்த்தவாறே,

"நான் சொல்ல வந்தது அது இல்லை. அதுக்கு ஆப்போஸிட். அதாவது Stockholm syndrome- க்கு தலைகீழான Lima syndrome.. கடத்தியவனைக் கடத்தப்பட்டவர்கள் காதலிப்பது ஸ்டாக்கோம் சிண்ட்ரோம்னா, கடத்தியவன் தன்னால் கடத்தப்பட்டவளைக் காதலிப்பது லிமா சிண்ட்ரோம்.." என்றான் இதழ்கோடியில் நெளிந்த புன்சிரிப்புடன்.

ஆர்ய விக்னேஷின் கூற்று வருண் தேஸாயிக்குப் பிடிக்கவில்லை என்பது அவன் தன் கழுத்தை அழுந்தத் தேய்த்தது மூலமாய்ப் புரிபட்டது.

"ரொம்பக் கற்பனையை வளரவிடாதீங்க ஆர்யன்."

வருணின் கூற்றில் அமர்ந்திருந்த நாற்காலியின் பின் புறம் மேலும் ஒய்யாரமாகச் சாய்ந்த ஆர்யன், பிடித்திருந்த சிகாரின் நுனியில் மினுமினுக்கும் நெருப்பின் சாம்பலை, மேஜையில் இருந்த ட்ரேயில் [ashtray] தட்டியவாறே கூர்ந்து நோக்கினான்.

"கற்பனையல்ல வருண். அதுவும் இல்லாமல் உனக்கு நிச்சயமான பொண்ணு சிதாரா, இன்னும் அவள் உனக்காகக் காத்துட்டு இருக்கான்னு நினைக்கிறேன். ஐ நோ, உங்க நிச்சயதார்த்தம் நின்னுப் போயிடுச்சு, ஆனால் அதற்குப் பிறகு அதைப் பற்றி நீ பேசவே இல்லை. சிதாராவை நீ கல்யாணம் பண்ணிக்க முடிவெடுத்ததும் எதற்குன்னு எனக்குத் தெரியும். அதே போல் உனக்கும் முகேஷ் சௌஹானுக்கும் இடையிலான நட்புறவும், ஒப்பந்தங்களும் எனக்குத் தெரியும். So, Sithara is your best choice Varun.."

ஏற்கனவே சிதாரா ஷிவ நந்தன் சந்திப்பில் கோபம் கொண்டிருந்தாலும், கட்சிரோலி கானகத்தின் அடர்த்திக்கு நடுவில் துர்கா வைக்கப்பட்டிருப்பது அதிநிச்சயமாய் ஒருவராலும் கண்டுப்பிடிக்க முடியாது என்ற நிதர்சனத்தில் சிதாராவை ஒதுக்கி வைத்திருந்தான்.

ஷிவ நந்தனிற்கு அவள் உதவுவதை அறிந்து, அவர்கள் அனைவரும் சென்று தேடிக் கொண்டிருக்கும் இடங்களையும் கண்டு மனதிற்குள் நகைத்துக் கொண்டிருந்தான் என்றும் கூறலாம்.

ஆனால் இன்று ஆர்யன் பேசியப் பேச்சில் வருணின் புத்தியில் முதன் முறையாக ஆர்யனைப் பற்றிய ஒரு புது வித நெருடலை உருவாக்கியது.

ஆயினும் சலனமற்ற முகத்துடன்,

"யாரை நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு எனக்குத் தெரியும் ஆர்யன். அதுவும் இல்லாமல் இது வரை நான் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டதில்லை. இன்க்ளூடிங் சஹானா பாக்ஷி. அதே போல் நீங்களும் இருப்பீங்கன்னு நம்புறேன்." என்று கூறியவனாய் அலைபேசியை அணைத்தான்.

அவனது பேச்சு ஆர்ய விக்னேஷின் சந்தேகத்திற்கு மேலும் தீணிப்போட்டது.

ஏறக்குறைய ஒரு மாதமாகத் துர்காவை அவன் அடைத்து வைத்திருப்பதன் நோக்கம் என்ன?

ஷிவ நந்தனை ஆட்டிப்படைக்கும் கயிறுகளை என் கைவிரல்களில் கட்டி அவனை அலைக்கழிப்பது மட்டும் அல்ல, அவனை என் வழிக்குக் கொண்டு வரும் பொம்மலாட்டக்காரன் நான் என்று உறுதியளித்திருந்தவனின் இலக்கு மாறிவிட்டதா?

துர்காவை எங்கு வைத்திருக்கின்றேன் என்பதற்கான சிறு மறைமுகக் குறிப்புக் கூடத் தனக்குக் கொடுக்காதது ஏன்?

இதில் தனக்கான பதிலைக் கூடத் தெளிவாகக் கூறாமல் அலைபேசி அழைப்பைத் துண்டித்ததற்கான காரணம் என்ன? சிதாராவுக்கும் இவனுக்கும் முடிவான மண விஷயம் என்ன ஆனது?

ஆர்ய விக்னேஷின் உள்ளத்தை ஆக்கிரமித்திருந்த கேள்விகளே இவை.

ஆனால் எவ்வளவு வற்புறுத்தியும் வருண் தேஸாயின் வாயில் இருந்து வார்த்தைகளைப் பிடுங்க இயலவில்லை.

ஆர்ய விக்னேஷ் மட்டும் இதனில் தோல்வியைக் காணவில்லை. வருண் தேஸாயின் தந்தையும் கூட.

சில நாட்களுக்கு முன் வழக்கத்திற்கு மாறாகத் தன்னிடம் நேரிடையாகப் பேசிய தந்தையைக் கண்டு வருணே வியந்து போனான்.

ஏனெனில் இருவரும் தங்களுக்கு இடையேயான பேச்சுக்களை நிறுத்தி ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியிருந்தன.

"வருண் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.."

வீட்டிற்குள் நுழைந்ததுமே கூறிய தந்தையை விநோதமாக நோக்கிய வருண் பதிலேதும் கூறாது அமைதியாக நிற்க, எதிரில் இருந்த இருக்கையை நோக்கிக் கைக் காட்டியவர், “உட்கார்..” என்றார்.

அவருக்கு எதிராக வந்து அமர்ந்தவனின் புருவங்கள் மேலுயர்ந்து வளைவாக, "அதிசயமா இருக்கு.." என்றான்.

"என்ன அதிசயம்?"

"நீங்க என்கிட்ட இப்படி நேரடியா பேசி ரொம்ப நாளாச்சு."

"இப்ப பேச வேண்டிய சூழல் வந்திருக்கு."

"அப்படி என்ன சூழல்?"

"யார் அந்தப் பொண்ணு வருண்?"

அவர் வினவியதுமே புரிந்து போனது, அவர் யாரைப் பற்றி விசாரிக்கின்றார் என்று.

இருந்தும் அறியாதது போல் கால் மேல் கால் போட்டுச் சாவதானமாக அமர்ந்தவாறே, "எந்தப் பொண்ணு?" என்றான் உணர்வுகளை வெளிக்காட்டாத முகத்துடன்.

"வருண், நான் உன் அப்பா.."

"தெரியுமே. அதில் என்ன சந்தேகம்?"

மனதிற்குள் எழுந்த எரிச்சலை அடக்கப் பெரும்பாடுப்பட்டவராக, கண நேரம் அமைதிக்காத்த சஞ்சீவ் தேஸாய் மகனது முகத்தை ஆராய்ந்தவாறே,

"சின்ன வயசில் இருந்தே நீ நகர்த்துகிற ஒவ்வொரு காய்களையும், அதற்குப் பின்னாடி இருந்த காரணங்களையும் நான் நல்லாவே தெரிஞ்சு வைச்சிருந்தேன் வருண். ஆனால் இடையில் நான் சில விஷயங்களில் கொஞ்சம் சறுக்கிட்டேன். அது உன் மேல் புதுசா எனக்கு வந்த நம்பிக்கையினாலோ என்னவோ உன்னைச் சரியா அளவிடத் தவறிட்டேன். அதன் விளைவு தான் நீ இப்ப நம்ம தேஸாய் க்ரூப் ஆஃப் கம்பெனிஸின் சி.இ.ஒ-வாக இருப்பது.

நீ எப்ப VNDESAI Bank மற்றும் VNDSI Ltd ஆரம்பிச்சியோ, அப்பவே உனக்கும் எனக்குமான தூரம் அதிகமாக ஆரம்பிச்சிடுச்சு. அதே போல் நீ எப்போ நம்ம கம்பெனிஸை உன் கைகளில் எடுத்தியோ அப்பவே நான் உன்னிடம் பேசறதையும் நிறுத்திட்டேன்.

அன்றில் இருந்து இன்று வரை நான் உன் விஷயங்களில் தலையிடறது இல்லைங்கிறதும் உனக்குத் தெரியும். ஆனால் இப்போ நான் கேள்விப்படற விஷயம் அப்படி இல்லை, இதில் தலையிடாம என்னால் இருக்கவும் முடியாது. சொல்லு யாரு அந்தப் பொண்ணு?" என்றார் அவனை அளவிடும் தோரணையில்.

"திரும்பவும் சொல்றேன். நீங்க எந்தப் பொண்ணைக் கேட்குறீங்கன்னு எனக்குத் தெரியலை."

"வருண். இந்தக் கேள்வியை நான் முன்னாடியே கேட்டிருக்கணும். அதாவது ஒரு பொண்ணை வருண் தேஸாய் கடத்திட்டான்னு என் காதுக்கு வந்தப்பவே கேட்டிருக்கணும். ஆனால் என்னவோ நீ இதைச் செய்திருக்க மாட்டன்னு நினைச்சேன். காரணம் இது உன்னுடைய ஸ்டையில் இல்லை. பட், இப்ப கொஞ்ச நாளா இது என் மனசை அரிச்சிட்டே இருக்கு. எனக்கு எஸ்.எஸ்.பி ஷிவ நந்தனைப் பற்றி நல்லாத் தெரியும். அவருக்கு ஒருத்தர் மேலே சந்தேகம்னு ஒண்ணு வந்தால், அது நிச்சயமாக நூறு சதவிகிதம் சரியாத்தான் இருக்கும்னு நான் கேள்விப்பட்டிருக்கேன். அப்படிப்பட்டவர் நீயே நேரா போய் அவருக் கல்யாணம் பண்ணிக்க இருந்தப் பொண்ணைத் தூக்கிட்டு வந்துட்டதா சொல்றாரு அப்படின்னா, நிச்சயம் அது சரியாத்தான் இருக்கும்."

"ஸோ, நீங்க அவனை நம்புவீங்க, உங்க மகனை நம்ப மாட்டீங்க, அப்படித்தானே?"

"உன்னை நம்புறதை நான் நிறுத்தி ரொம்ப நாளாச்சுன்னு உனக்கும் தெரியுமே வருண்."

வெடுக்கென்று கூறியவரின் கூற்றில் நெஞ்சின் ஏதோ ஒரு மூளையில் சுருக்கென்று தைத்ததில் வருணின் முகமும் சுருங்கிவிட, ஆனால் அதைத் தந்தையிடம் காட்ட மறுத்தவனாய் சட்டென இருக்கையில் இருந்து எழுந்தவன் வீட்டின் வாயிலை நோக்கி வேக அடி எடுத்து வைத்தான்.

"நீ இன்னும் எனக்குப் பதில் சொல்லலை வருண். இட்ஸ் ஒகே. எனக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிட்டுப் போயிடு. ஏன் அந்தப் பொண்ணை நீ இன்னும் உன் கூட வைச்சிருக்க?"

அவரது கேள்வியில் நடையை நிறுத்தியவன் அவரை நிதானமாகத் திரும்பி பார்த்து,

"அதான் நான் நகர்த்துகிற ஒவ்வொரு காய்களையும், அதற்குப் பின்னாடி இருந்த காரணங்களையும் நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கேன்னு சொன்னீங்களே. அப்போ இதையும் கண்டுப்பிடிங்க.." என்றவனாய் வீட்டை விட்டு வெளியேற, அவனது பதிலில் சஞ்சீவ் தேஸாயின் நெற்றி யோசனையில் சுருங்கியது.

‘இன்னும் எவ்வளவு நாட்கள் அவளை தன்னுடன் வைத்திருக்கப் போகின்றேன்?’ என்ற கேள்விக்கு வருணுக்கே விடைத் தெரியாத பொழுது எங்கனம் பிறருக்கு அவன் விளக்கமளிப்பான்.

அதனில் இன்று ஆர்ய விக்னேஷும் அதே கேள்வியைக் கேட்க, மனதிற்குள் கசப்பும் வெறுப்பும் படர, கழுத்தை அழுந்த தேய்த்தவாறே உட்கன்னத்தைக் கடித்தவன் வெளியேறினான்.

அவனது செய்கையில் சஞ்சீவ் தேஸாயிக்கு ஏதோ புரிவது போன்று இருந்தது.

*******************************************************

துர்கா கடத்தப்பட்டதற்குப் பிறகு, சரியாக ஒரு மாதம் கழித்து, மீண்டும் ஹெலிகாப்டரின் சப்தம் கட்சிரோலி கானகத்தில் கேட்டது.

ஏற்கனவே பலமாகத் திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்திருந்ததினால் அடியாட்கள் அனைவருக்கும், தனக்குமான உணவுகளைச் சேமித்து வைத்திருந்ததில், இடைப்பட்ட வேளையில் அக்காட்டினை விட்டுச் செல்வதற்கும், அங்கு எவரும் வருவதற்குமான சூழலே அமையவில்லை.

இதனில் கடத்தப்பட்ட மறுநாள் தன்னைச் சந்திக்க வந்த வருண் தேஸாய், அன்று அவனுக்கு வந்த அலைபேசித் தகவலைக் கண்டதும் ஆங்காரமாகச் சென்றது தான்.

அதற்குப் பிறகு அவன் வரவே இல்லை!

புது மனிதர்களின் வாடையே இல்லாத அவ்விடத்தில் தனித்துத் தவித்து இருந்த துர்காவிற்கு இப்பொழுது திடுமெனக் கேட்ட சத்தம் ஒருவிதத்தில் நம்பிக்கையையும், மறுவிதத்தில் உள்ளூற பேரச்சத்தையும் கொணர்ந்தது.

வருவது காவலதிகாரிகளா அல்லது அவனா?

ஏனெனில் இந்த ஒரு மாதமாக ஒவ்வொரு விநாடியும் ஷிவ நந்தனை எதிர்பார்த்து ஏமாந்து தொய்ந்துப் போயிருந்தவளின் உள்ளத்திற்குள் இருந்த ஒரே ஒரு நிம்மதி, வருண் தேஸாயின் ஆட்கள் அவளின் அருகே நெருங்க கூட நினைக்கவில்லை.

துவக்கத்தில் உணவளிக்க மட்டும் அவளது அறைக்குள் வரும் ஜாஃபர் மேஜையில் உணவுத் தட்டினை வைத்துவிட்டு, பழைய தட்டை எடுத்துச் சென்றுவிடுவான்.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல கடத்தப்பட்டிருந்தாலும் அந்த அந்நிய ஆண்களின் நன்னடத்தையான செயல்களில் ஒருவித பாதுகாப்பினையும் உணர்ந்தவள், உண்ட பாத்திரங்களைக் கழுவி சமையல் அறையில் வைத்துவிட, அதனை எடுத்துச் செல்ல வரும் அடியாட்களும், மறந்தும் அவளது அறைக்குள் நுழைய முற்படவில்லை.

இதனில் அவள் இருந்த குடிலில் அவளது அறைக்குள்ளாகவே குளியல் அறையும், மற்றொரு பகுதியில் வெகு நேர்த்தியாய் அவள் உடுத்துவதற்கு என்று ஆடைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, அவள் தேவையற்று வெளியில் வர வேண்டிய நிலைமையும் இல்லை.

ஆக, அவளைத் துன்புறுத்துவதோ அல்லது தீண்டுவதோ அவர்களின் நோக்கமல்ல என்று உணர்ந்துக் கொண்டிருந்தவளுக்கு இப்பொழுது நீண்ட நாட்களுக்குப் பிறகு திடுமெனக் கேட்கும் ஹெலிகாப்டரின் ஒலி, நம்பிக்கையையும் அச்சத்தையும் மாற்றி மாற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தது.

வருவது யார் என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் ஓடி வந்தவளுக்கு, குடிலின் வாயிலில் தரையிரங்கிய ஹெலிகாப்படரில் இருந்து வழக்கமான பாணியில் சுழலிகளின் வேகம் அடங்குவதற்குள் குதித்து இறங்கியவனைப் பார்த்ததும் புரிந்து போனது.

பயத்தில் அடைத்த நெஞ்சை ஒரு கரத்தால் அழுத்திக் கொண்டவளாக ஹெலிகாப்டரில் இருந்து இறங்குபவனை அகல விரிந்தக் கண்களுடன் பார்த்திருந்தவளுக்கு உள்ளூற நடுங்கியது.

அதே சமயம் ஹெலிகாப்டரின் ஓட்டுநரிடம் ஏதோ விஷயத்தைப் பகிர்ந்த வருண் தானும் அவள் புறம் நோக்கினான்.

விநாடிகள் சில அவளை யோசனையுடன் பார்த்தவன் மீண்டும் ஓட்டுநரிடம் திரும்பியவனாய் அவரிடம் இரகசியமாகப் பேச, அவன் நகர்ந்ததும் திரும்பவும் கிளம்பிய ஹெலிகாப்டரைக் கண்டு துர்காவின் இதயம் தாறுமாறாகத் துடிக்க ஆரம்பித்தது.

'ஏன் இவன் போகவில்லை? ஏன் ஹெலிகாப்டரை அனுப்பிட்டான்?’

மனம் அலறியவாறே கேள்விகளை எழுப்ப, அசைய மறுத்த கால்களைச் சபித்தவாறே வேரூன்றியது போல் நின்றவளின் அருகில் வந்து நின்றான் வருண்.

"ஏன் ஹெலிகாப்டரை அனுப்பிட்டேன், ஏன் நான் போகவில்லைன்னு யோசிச்சிட்டு இருக்கியா?"

அவளின் மனதைப் படித்தவன் போல் வெகு சரியாக வினவ, பதில் கூறாது அவனை ஏறிட்டு நிமிர்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் அதிர்ந்த முகம், வருணின் உதட்டோரத்தில் ஒரு இளஞ்சிரிப்பை கொணர்ந்தது.

கடந்த ஒரு மாதமாக அவளை அவன் பார்க்கவில்லை, ஆயினும் அவ்வப்பொழுது வரும் அவளது நினைவுகளையும் அவன் புறந்தள்ளினான் இல்லை.

இக்கணம் ஆர்ய விக்னேஷ் மற்றும் தந்தையின் கேள்விக்கு விடையைத் தானும் அறிந்து கொண்டது போலவே அவனது உள்ளுணர்வு எடுத்துரைத்தது.

"இப்படியே என்னைப் பார்த்துட்டே இருக்கப் போறியா, இல்லை உள்ள வரப் போறியா?"

மெல்ல அவனுக்கு வழிவிட்டு நகர்ந்தவள் அவன் குடிலை நோக்கி நடக்கவும் அசையாது அவனது பரந்த முதுகையே வெறித்துப் பார்த்தவளாய் நின்றவள் ஒரு அடிக்கூட முன்னோக்கி எடுத்து வைக்கவில்லை.

அவள் தன்னைத் தொடர்ந்து வரவில்லை என்பதை உணர்ந்தாலும் குடிலை நோக்கி நடந்தவன் வாயிலை அடைந்ததும் திரும்பிப் பார்த்தவனாய், “வா..” என்று மட்டும் கூறினான்.

முடியாது என்பது போல் தலையை மறுப்பாய் அவள் அசைக்க, “அப்படின்னா மறுபடியும் உன்னைத் தூக்கிட்டு தான் போகனும் போல.. தூக்கட்டுமா?” என்றவனாய் குறும்பாய் சிரிக்கும் கண்களுடன் அவளை நோக்கி அடி எடுத்து வைக்க, அதற்குப் பிறகும் அங்கேயே நிற்பதற்கு அவள் என்ன முட்டாளா?

விடுவிடுவென்று ஓட்டமும் நடையுமாக நடந்தவள் அவனுடன் இணைந்துக் குடிலுக்குள் செல்ல, வெளியே நின்றிருந்த ஜாஃபர் முதற்கொண்டு அனைவருக்குமே ஒரு பெருத்த சந்தேகம் எழுந்தது.

ஏன் ஹெலிகாப்படரை அனுப்பிவிட்டார்?

ஆயினும் அவனைக் கேட்பதற்கு என்றைக்கு எவருக்குத் தைரியம் இருந்திருக்கின்றது, இன்று கேட்பதற்கு??

அவரவர் வேலைகளைச் செய்வதற்கு அவர்கள் கலைந்துவிட, குடிலிற்குள் அவனைப் பின் தொடர்ந்தவாறே, மனதிற்குள் ‘கடவுளே! இவ்வளவு நாள் நான் பயந்து அரண்டு போயிருந்த விஷயம் இன்னைக்கு நடந்துடுமோ? இதுக்கும் மேல நான் உயிரோடு இருக்க முடியுமா? இனி என் மாமா வந்து என்னைக் காப்பாத்தவே மாட்டாரா?’ என்று அரற்றிய துர்காவின் நிலையோ சொல்ல வார்த்தைகளற்று இருந்தது.

உள்ளே நுழைந்த வருண் குடிலின் நடுவில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தவனாய், ஒரு கையை அதன் கைப்பிடியில் ஊன்றி அவளை ஆழ்ந்து பார்த்திருந்தான்.

அவனின் பார்வை அவளது இதயத்தையே ஆட்டிப்படைப்பது போன்று தோன்ற, அமைதியாய் அவனைக் கடந்தவள் தன் அறைக்குள் புகுந்ததுமே விநாடி நேரம் கூடத் தாமதிக்காது கதவை மூடிக் கொண்டாள்.

ஆயினும் நேரம் தான் கடந்ததே ஒழிய அவன் அவளை நாடி வரவில்லை.

நான் பேசாவிட்டால் இவன் பேசப் போவது இல்லையோ என்று அவள் எண்ணும் அளவிற்கு அங்குப் பெருத்த அமைதி சூழ்ந்தது.

வெகு நேரம் கழித்து வேறு வழியின்றி வெளியில் வந்தவளுக்கு அவன் இன்னமும் அதே இருக்கையில், அதே தோரணையில், ஆனால் புருவங்கள் இடுங்க மிகுந்த யோசனையில் இருப்பது போன்ற தோற்றத்துடன் அமர்ந்திருந்தது வித்தியாசமாய்ப் பட்டது.

மெல்ல அவனுக்கு முன் வந்து நின்றவள். மெல்லிய குரலில், "இ.. இ.. ன்னும் எ.. . எத்தனை நாளு என்னை இங்கு வச்சிருக்கப் போறீங்க?" என்றாள் தட்டுதடுமாறி.

"பரவாயில்லை. எங்க இதைப் பத்திக் கேட்கவே மாட்டியோன்னு நினைச்சேன். இப்ப தான ஒரு மாசம் முடிஞ்சிருக்கு, அதுக்குள்ள என்ன அவசரம்?"

அவளது தடுமாற்றத்தை உள்ளுக்குள் இரசித்தவனாய் கூறியவனின் பதிலில் பல லட்சமுறையாகத் திடுக்கிட்டு போனாள் பேதை.

"அம்மா, மாமா எல்லாரும் ஒரு மாசமா என்னை ரொம்பத் தேடிட்டு இருப்பாங்க. நான் உயிரோடு இருக்கேங்கிறதாவது அவங்களுக்குத் தெரியுமான்னு தெரியலை. தயவு செய்து சொல்லுங்க."

"தேடிட்டு தான் இருக்காங்கன்னு நினைக்கிறேன். இல்லை இவ்வளவு நாள் ஆகிடுச்சு, அதனால் போனவ போனவதான்னு விட்டுட்டாங்களோ என்னவோ?"

"அப்படி எல்லாம் என்னை விட்டுட மாட்டாங்க. யார் விட்டாலும் என் மாமா அப்படி இருக்க மாட்டார்."

"யு மீன் ஷிவ நந்தன்."

ஆம் என்பது போல் தலையசைத்தவளைக் கண்டவன் எழுந்தவனாய் அவளருகில் வந்து நின்றவாறே, "உன் மாமா மேல உனக்கு ரொம்ப நம்பிக்கைப் போல இருக்கு." என்றான் நக்கலான தொனியில்.

அக்கேள்வியும், தன் மாமனை அவன் இழிவாகப் பேசியதும் அச்சத்தில் சுருண்டிருந்தவளுக்கு அவளையும் அறியாத துணிவை அதிசயமாய்க் கொண்டு வந்தது.

“ஆமா.. நான் என்னை நம்புறதைவிட அவரைத் தான் ரொம்ப நம்புறேன்.”

“வாவ்..”

"ஏன், இதுவரை உங்களுடைய நம்பிக்கைக்குப் பார்த்திரமா யாருமே இருந்ததில்லையா, என்ன?"

"பார்ரா, கோபம் கூட வருது."

வழக்கமாய்ச் சிரிப்பையே மறந்திருக்கும் அவனிடம் நகைப்பையும் கிண்டலையும் முதன் முறையாகக் கண்டவளுக்கு இனி இவனிடம் பேசிப் பயனில்லை என்பது புரிய, கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவளாய் அறையை நோக்கி அடி எடுத்து வைத்தவளின் கரத்தை சட்டென எட்டிப் பற்றினான்.

Like a chess board

I have undeniable limitations.
I am the King and
She is the Queen!

My kingdom doesn't allow me to meet
Nor her kingdom is ever ready.
Yet I have umpteen moves to make
To win her and come closer!

My motives are clear
I do not want any body's head or crown
What I want is the queen!

My moves are no less flamboyant
To plant my love I wore the playful mask
Gliding smoothly in the territory of my
enemy.

Where my love is and there is my victory!


அரிமாக்களின் வேட்டை!

தொடரும்.

References:

Stockholm syndrome - Stockholm syndrome describes the psychological condition of a victim who identifies with and empathizes with their captor or abuser and their goals. Stockholm syndrome is rare; according to one FBI study, the condition occurs in about 8 percent of hostage victims.

Lima syndrome - Lima syndrome is the exact inverse of Stockholm syndrome. In this case, hostage-takers or victimizers become sympathetic to the wishes and needs of the hostages or victims. The name comes from a 1996 Japanese embassy hostage crisis in Lima, Peru.
[Lima syndrome is the exact inverse of Stockholm syndrome]
 
Last edited:
Aryan 🤮🤮🤮
I hate him to the core…
Today than intha EMA pathi panchayath pochi… ennoda BP ethurathe ivan velai…
Pesama Ashok ku Seetha va katti vechidunga… intha mental kitta irunthu divorce vangittu 😤😤😤

Adei Shivu… ne D ellam pottu koopidra… ippp practice pannuriya? 🤭🤭🤭

Aww… Varun… un manasu unakku purinjitta… Aryan and un dad vandhu sollanum pola 🤭🤭🤭
Again kaiya pudichittan 🤣🤣🤣
Avalukkana dress ellam vangi ready pannittu than payapulla kidnap pannirukkan…

Ivana vitta than undu Durga va… 😢😢😢
 

JLine

Moderator
Staff member
Friends, I probably will not be able to post அரிமாக்களின் வேட்டை this Friday or next Monday. Will try my best though. 🙂 வெளியூருக்குப் போற வேலை இருக்கு. ஒரு வேளை போகவில்லை என்றால் கண்டிப்பாப் போஸ்ட் பண்றேன். Thanks for understanding :)
 

Vidhushini

New member
ஷிவா - சிதாரா விவாதத்திலேயே ஏதோ ஒரு புள்ளியில் இவங்க சேரணும்னு, ஷிவா முடிவெடுப்பான்னு தோணுது.

வருண்-க்கு Lima Syndrome வந்துடுச்சு போலவே...

Will the Queen accept the King from another territory?
inbound8527496713821946661.jpg
Interesting epi @JB sis.
 

Lucky Chittu

New member
Varun theliva plan pottutaan Ava Durga thaan thannoda queen apdinu. Atha puriya vaikka Aryan um Varun oda appavum ketkkavum avanukku theliva purinchidhu Durga partha mathirathil. Sema aprom Shiva Durga va findout panrathukkula sithaara kuda pair ayiduvaan Pola. Aryan sahana kuda relationship vechirukathu seetha ku theriyuma Ava eppadi itha sagichikkiraa? Waiting for the next epi mam.
 

saru

Member
Lovely update dear
Hero Varun tan pola
Siva va dumm akiruka venam..
Sithara tan kandupidipalo😀😀😀
Mudivu eduthu tan vadrukan
Inda kanakthila eh settled ah
Ha ha kadaicila durga kaga ellathaum viduvanu thonudu 🤣🤣🤣🤣
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top