JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Chathurangam 12

Subageetha

Well-known member
ரங்கன் சொன்ன விஷயம் கேட்டு, முதலில் அதிர்ச்சி அடைந்த லட்சுமி அம்மாள் பிறகு தன்னை சுதாரித்தவராக, முதலில் ரங்கனை பெண்ணை கூட்டிக்கொண்டு ஸ்ரீரங்கம் வரச்சொல்லி, தானே அனைத்தையும் பார்க்கலாம் என்று நினைத்தவர், பின்னர் இந்த நிலையில் துணைக்கு வேறு பெரியவர்களும் யாருமில்லா சமயத்தில் பூப்பெய்தியிருக்கும் சாதுர்யாவை கூட்டிக் கொண்டு வருவது சாத்தியப்படாது என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவர், ரங்கனிடம் பெண்ணவள் என்ன சாப்பிட்டாள், அவள் உடல்நிலை எப்படி இருக்கிறது என்றெல்லாம் கேட்டு அறிந்து கொண்டார்.
ரங்கனின் பதில்களில் சற்றே அமைதியுற்றவர், மேலும் சில விஷயங்களை அரங்கனிடம் சொல்லிவிட்டு, எப்படியும் இங்கு ஏற்பாடுகளை பண்ணிவிட்டு மாலைக்குள் வயலூர் வந்துவிடுகிறோம் என்று சொல்லி அழைப்பை துண்டித்து விட்டார்.
வயலுக்கு சென்றிருந்த தாமோதரன் வீட்டிற்குள் அப்பொழுதுதான் நுழைய கையில் இனிப்பை வைத்துக்கொண்டு தாமுவிடம் வேக வேகமாய் ஓடி வரும் அந்த எழுபது வயது பாட்டி அங்கு நின்று வேலை செய்துகொண்டிருந்த எல்லோருக்குமே புதியவர் தான். பாட்டியின் நடையில் கூட இன்று ஒரு துள்ளல்.
இனிப்பை கணவரிடம் கொடுத்துவிட்டு, கணவர் உண்ணுவதை பார்த்து சந்தோஷப்பட்டவளாக மெல்ல தாமுவிடம் சாதுர்யாவின் விஷயத்தைச் சொல்ல கிழவருக்கும் மனைவிடம் இருந்து சந்தோசம் தொற்றிக்கொண்டது.
லட்சுமி பாட்டி தனது மருமகள் மாலதிக்கும் அழைத்து தகவலை சொல்ல மாலதிகோ கண்களில் இருந்து நீர் கோர்த்துக் கொண்டது.
வெகு காலமாய் மாலதி கவலைப்பட்டுக் கொண்டிருந்த விஷயம் இது. தன் வீட்டில் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நல்ல விஷயம், இன்றோ தன் பெற்றோர்கள் வீட்டில் நடக்காமல், தன் புகுந்த வீட்டிலும் நடக்காமல், நாத்தனார் வீட்டிற்கு சென்று இருக்கும்பொழுது அதுவும் பெரியவர்கள் கூட யாரும் இல்லாத நிலையில் நடந்திருக்கிறது என்றால் அந்த அம்மாவின் உணர்வுகள் எப்படி இருக்கும்?
இன்னொரு பக்கம் இத்தனையையும் தனியாய் சமாளித்துக் கொண்டிருக்கும் ரங்கனை
நினைத்தால் மிகவும் சந்தோஷமாக இருந்தது மாலதிக்கு.
கணவர் வெங்கடேசன் அடிக்கடி ரங்கனை பற்றிய உயர்ந்து புகழ்ந்து பேசும்போது சற்று மாலதிக்கு பொறாமை ஏறும். தன் நாத்தனார் மகனைப் போல தன் மகளும் தேர்ந்தவளாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளூர மாலதிக்கு உண்டு.
அதனால் தான் ரங்கனை தூர நிறுத்தும் நோக்கில் அவனிடமே சாதுர்யாவின் வருங்கால முன்னேற்றம் பற்றி பேசியது. ஆனால் ரங்கன் எவ்வளவு பொறுப்பானவன் என்பது இந்த நிமிடம் மாலதிக்கு புரிந்து போயிற்று. அலுவலகத்தில் இருக்கும்
தன் கணவருக்கு அலைபேசியில் அழைத்து விஷயத்தை சொன்னவளுக்கு, இந்த நொடி ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும் என்று பரபரத்தது. லட்சுமி அம்மாள் மாலதியின் பெற்றவர்களுக்கும் சொல்ல அவர்கள் திருநெல்வேலியிலிருந்து தலைக்கு தண்ணீர் ஊற்றும் போது சீருடன் வருவதாக சொல்லிவிட்டார்கள்.

இங்கு வயலூரில் தன் அம்மா ரேணுவுக்கு மேலும் இரண்டு முறை முயற்சி செய்து பார்த்து விட்டு, அழைப்பை எடுக்காத காரணத்தால் குறுஞ்செய்தியை அனுப்பிவைத்தான் ரங்கன். அவன் மனம் முழுவதும் சொல்ல முடியாத பரவசம்.
தன் கைகளில் தூக்கி விளையாடிய சாதுர்யா இன்றோ தன் கைகளில் கீழே விழாமல் தாங்கும் பொழுது பெரியவள் ஆகிவிட்டது அவனுக்கு ஆச்சரியமும் சந்தோஷமும் ஆக உணர்வை பகிர்ந்து கொடுத்தது.
வலியில் சிறிது நேரம் அழுது கொண்டிருந்த சாதுர்யா, ரங்கன் தயாரித்துக் கொடுத்த வெள்ளை வெங்காயச் சாரின் உபயத்தால் வலி மட்டும் பட்டு தூங்கிவிட்டாள். முதலில் தரையில் படுக்கிறேன் என்றவளை பிடிவாதமாக 'இந்த மாதிரி நேரத்துல தான் உடம்ப பூ மாதிரி பார்த்துக்கணும். நீ தரையில் படுக்க வேண்டாம் மரியாதையா கட்டி மேல படு ' என்று நிர்பந்தப்படுத்தி கட்டிலில் படுக்க செய்திருந்தான் ரங்கன்.

புதியதாக கன்று போட்டிருந்த மகாலட்சுமியை விழுந்து ந்து வணங்கிவிட்டு கொட்டிலுள்ள மற்ற பசுக்களுக்கும், வீட்டுக்கும் தகுந்த ஏற்பாடுகளை செய்துவிட்டு ஸ்ரீரங்கத்திலிருந்து வயலூர் கிளம்புவதற்கு லட்சுமி தாமுவுக்கு மாலை ஆகி விட்டது.
இருவருக்கும் ரங்கன் எவ்வாறுதான் சமாளிக்கிறானோ என்ற தவிப்பு. தாமு டிரைவரை அழைக்க மறந்தவராக தானே காரை எடுத்து விட்டார்.

மாலதி வெங்கடேசன் இருவரும் வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகிவிடும் என்று வெங்கடேசன் தன் அப்பாவிற்கு போன் செய்து சொல்லி விட்டார்.
சென்னையில் மருத்துவமனையின் சில வழக்கமான சோதனைகள் முடிந்த பின்னர் தனது அலைபேசியை எடுத்து பார்த்த ரேணுகாவிற்கு இந்த க்ஷணம் தனது வீட்டிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றியது. தனது மாமனார் மாமியார் இடமும் விஷயத்தைப் பகிர்ந்து கொண்டவளிடம்,
' அத்தை சார்பாக சீருக்கு தேவையான துணி மணிகளை இவர் சென்னையில் உள்ள பிரபல கடைகளில் வாங்கிடலாம். அதையும் இங்கே இருந்து எடுத்துட்டு போய் விடலாம் ' என்ற மாமியாரின் கூற்று சரியாக பட மருத்துவமனையில் வேலை முடிந்தவுடன் மூவரும் தியாகராயநகரில் உள்ள கடைகளுக்கு செல்வதாக ஏற்பாடாகியது.

மாலை நேரத்தில் பல சேர்ந்த தனது தாத்தா பாட்டியிடம், ரங்கன் சாதுர்யாவை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, தானே நேராக திருச்சி சென்று சாதுவுக்கு தேவையான மூன்று செட் பாவாடை தாவணிகளும், இரண்டு பட்டு புடவைகளும், மெல்லியதாக கழுத்துக்கு செயினும், காதுக்கு ஜிமிக்கியும், கால்களுக்கு பொன்னிற முலாம் பூசப்பட்ட வெள்ளி கொலுசுகளும் வாங்கினான். ரங்கனின் கற்பனை முழுவதும் இவற்றை அணிந்து கொள்ளும்போது சது எப்படி இருப்பாள் என்று ஓடிக் கொண்டிருந்தது.

நேரே வயலூரில் வீட்டிற்கு வந்தவன் லக்ஷ்மியிடம் ' 'பாட்டி இது எல்லாம் நான் பார்ட் டைமா நம்ம ஆபீஸ்ல வேலை பார்த்து சம்பாதித்த பணத்தில் வாங்கினது. நீங்க எப்ப புது உடுப்பு அவளுக்கு போட்டு விடுவீங்களோ அப்போ இதெல்லாம் கட்டாயம் அவளுக்கு போட்டு விடுங்கள் ' என்று கொடுத்து விட்டுச் சென்று விட்டான்.

தாமு லட்சுமி இருவருக்கும் என்ன சொல்வது என்றே புரியவில்லை. இவ்வளவு விரைவாக ரங்கன் இத்தனை விஷயங்களையும் செய்துவிடுவான் என்பது அவர்களுக்கு வியப்பாக இருந்தது. அதேசமயம் ரங்கன் சாதுரியாவிடம் காண்பிக்கும் அக்கறை அவர்களை வேறு ஒரு முடிவிற்கு வர தூண்டியது.
அது சாதுர்யா - ரங்கன் இருவருக்குமான முடிச்சு. பெண் படித்து முடித்தவுடன் வெளியில் மாப்பிள்ளை தேடுவதை காட்டிலும் இவனே மாப்பிள்ளை ஆகிவிட்டால் பெண்ணைப் பற்றிய கவலைகள் குறையும் யோசித்தார்கள் அந்த முதிய தம்பதியினர்.
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பது ரங்கனுக்கு வேண்டுமானாலும் தெரியாது. ஆனால் தன் அறையில் படுத்துக் கொண்டிருக்கும் சாதுர்யா காதுகளில் அவர்களின் பேச்சு தெளிவாக கேட்டது.
ரங்கன் தனக்காக பாவாடை தாவணிகளும் நகைகளும் எடுத்து வந்திருக்கிறான் என்பது தெரிந்த உடனேயே அவள் மனதுக்குள் பட்டாம் பூச்சி பறக்கத் தொடங்கிவிட்டது.
தன் நண்பனை நினைத்து அவள் கர்வம் கொண்டாள்.
பெரியோர்களின் பேச்சு காதில் விழும்போது அவளால் தன் உணர்வுகளை பகுத்தறிய முடியவில்லை. ஆனால், திருமணம் என்று ஒன்று செய்துகொண்டால் மணமகன் கண்டிப்பாக ரங்கன்தான் என்று முடிவு எடுத்துக் கொண்டாள் பேதை.

எல்லோர் வாழ்விலும் திருமண உறவு முக்கிய அங்கம். மறுப்பதர்கில்லை. வாழ்க்கை துணை நன்றாக அமைந்து விட்டால் எல்லோரும் சாதனையாளர்களே.
அந்த வயதில் அவளின் மனதில் ஒரு வகையில் மெல்ல தன் தடத்தைப் பதித்தான் ரங்கன்.
இது சரியா தவறா என்பதற்கெல்லாம் என்னிடம் விடை இல்லை. ஆனால் மிக சிறிய வயதில் பிள்ளைகளின் காதுபட சில விஷயங்கள் பேசாது இருப்பது நன்று. அவை எந்தவிதமான எண்ணஅலைகளை விதைக்க கூடும் என்பது யாருக்கும் தெரியாது.

மாலதி வெங்கடேசன் ரங்கனின் பெற்றோர் ரங்கனின் பாட்டி தாத்தா சாதுவின் தாய்வழி உறவினர், அக்கம்பக்கம், வீட்டில் வேலை செய்பவர்கள்,என்று வெகு காலம் கழித்து வயலூர் வீடு வைபவம் காணுகிறது.
ரங்கனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்து இப்போது சாதுர்யாவின் பூபெய்தல் விழா.
ரேணுவுக்கு கண்கள் லேசாக கலங்கிவிட்டது.

விழாவுக்கு முதல் நாள் வயலூருக்கு வந்து சேர்ந்த மாலதியின் பெற்றோரும் அண்ணனும் அவர்கள் கொண்டுவந்த சீர்வரிசைகளை மாலதியிடம் கொடுக்க விழா நாளன்று நீர் ஊற்றிய பிறகு, தன் அண்ணன் வாங்கி வந்த பட்டுப்புடவையை தன் மகள் உடுத்த வேண்டும் என்று தனியாக எடுத்து வைத்தாள் மாலதி.
ரேணுவுக்கு தான் வாங்கி வந்தது இல்லையென்றால் தன் மகன் வாங்கி கொடுத்தது இதில் எதையாவது பெண் உடுத்தினால் நன்றாக இருக்குமென்று தோன்றியது தான். ஆனால் அண்ணியிடம் எதுவும் சொல்ல இயலாது என தன் வார்த்தைகளை விழுங்கி கொண்டாள்.
ஏற்கனவே மாலதியின் பிறந்த வீட்டில், விழாவை வயலூரில் ஏன் வைக்க வேண்டும் ஸ்ரீரங்கம் வீட்டில் வைக்கலாமே என்று கேட்டதற்கு சாதுர்யாவை இந்த சமயத்தில் அலைக்கழிக்க வேண்டாம் என்ற யோசனையில் விழாவை இங்கேயே வைத்து விட்டோம் என்று தாமு பதில் சொல்லிவிட்டார்.
இன்னும் நிலைமையை சிக்கலாக்குவதில் ரேணுவுகும் ரேணுவின் கணவருக்கும் விருப்பமில்லை. ஏற்கனவே ரேணுவின் மாமனார் மாமியாருக்கு விழா இங்கு நடப்பது பற்றி யோசனைதான்.

தான் கொடுத்த புடவையை சாத்துர்யா கட்டிக் கொள்ளப் போவதில்லை என்றவுடன் ரங்கனின் முகமே விழுந்துவிட்டது. அவளின் நிறத்திற்கு ஏற்றவாறு வெகு ஆசையாய்
ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து வாங்கி இருந்தான் ரங்கன்.
சாதுர்யாவுக்கு பிடிக்க வேண்டுமே என்று ஆயிரம் முறை கடவுளிடம் வேண்டி இருப்பான். ஆனால் இப்பொழுதோ... நிலைமை அப்படியே வேறு ஆகிவிட்டது. அவள் என்று தான் வாங்கி கொடுத்ததை உடுத்துவாளோ... அதை நான் அருகிலிருந்த பார்ப்பேனோ மாட்டேனோ என்ற கவலை ரங்கனிடம் வந்துவிட்டது. ஆனால் எதையும் முகத்தில் காண்பித்துக் கொள்ளாமல் சாதாரணமாக தான் சுற்றிக் கொண்டு இருந்தான் ரங்கன். அவன் வீட்டில் விழா என்பதால் அவனுக்கு வேலையும் அதிகம் இருந்தது.

காலை விழாவிற்கு முன்னாடி சாதுர்யாவுக்கு மாலதி அவள் அறையில் டிபன் வைத்துவிட்டு, டேபிளில் அவள் அணிந்து கொள்ள வேண்டிய புடவையையும் வைத்துவிட்டு ' நீ சாப்பிடு சாது. நான் பத்து நிமிஷத்துல வரேன். பிறகு புடவையை கட்டிக்கலாம் என்றுவிட்டு சென்று விட்டாள் மாலதி.

ஆனால் எதிர்பாராதவிதமாக, டேபிளின் மீது சாதுர்யாவின் அலைபேசி அழைக்க, தட்டிலுள்ள சாம்பார் முழுவதும் புடவையில் கொட்டிவிட அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் சாதுரியா.

சிறிது நேரத்தில் அங்கு வந்த மாலதிக்கு சாதுவின் மேல் சொல்லோணா கோபம். தன்னை கட்டுப்படுத்திக்கொண்டவள் மாமியாரை அழைத்து திரு புது புடவையை எடுத்து தருமாறு கேட்க, லட்சுமி அம்மாள் நூறு மீட்டர்கள் இடைவெளி இருக்கலாம். ஆனாலும் அவன் பார்வை மாற்றத்தை உணர்ந்து கொண்டவள், அதுவரை பார்த்திருந்த பல்வேறு திரைப்படங்களில் உபயத்தால் அதற்கான அர்த்தத்தையும் தன் மனதிற்குள் வைத்துக் கொண்டாள்.
அவள் பூசியிருந்த சந்தனத்தையும் மீறி அவள் முகம் செம்மையை தத்து எடுத்துக் கொண்டது. அன்றுவரை வெட்கம் என்ற உணர்வை அறியாத சிறுமி முதன்முறையாக அதை அனுபவித்தாள்.
ரங்கனுக்கு தானும் அங்கு சென்று அவளுக்கு சந்தனம் பூச ஆசைதான். ஆனால், ஒரு ஆண் பிள்ளையாக அங்கே செல்வதற்கு கூச்சபட்டுகொண்டு அவன் அங்கே நின்ற இடத்திலேயே நின்றிருக்க, அருகில் வாயேன் என்று கண் ஜாடையில் அழைத்தாள் சாதுர்யா. அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தாலும் அங்கு செல்வது சரியில்லை என்று யோசித்தவனாக நின்று இருக்கையில், அவர்கள் ஆர்டர் செய்திருந்த ரோசாப்பூ மாலை சற்றே தாமதமாக வர, வாயிலில் அருகே நின்று கொண்டிருந்த ரங்கன் அத மாலை வாங்கிக்கொண்டு உள்ளே சென்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அந்தப் பூ மாலையை சாதுர்யாவின் கழுத்தில் போட போக, அந்த நேரத்தில் சற்றே சுதாரித்த மாலதி அவன் கைகளில் இருந்த மாலையை வாங்கி தன் அண்ணனிடம் கொடுத்தாள்.சாதுர்யா மனம் முழுவதும் ரங்கனை நோக்கி செல்ல மீண்டும் வந்து ஒரு மவுன நாடகம்.
மாலதியின் அண்ணன் பெண்ணின் மாமனாக மாலை போட அவர் கண்களும் நனைந்தது, தான் தூக்கி வளர்த்த குழந்தை என்று பெரிய பெண்ணாகிவிட்டதை பார்த்து.

விழா முடிந்த பிறகு வந்திருந்த உறவினர்கள் எல்லோரும் ஒன்றாக நின்று குரூப் போட்டோ எடுத்துக் கொள்ள ரங்கனும் சாதுர்யாவும் அருகே நின்று கொள்ள தாமு -லட்சுமி அம்மாள் இருவருக்கும் இளைஞர்களின் திருமணதை பார்த்த சந்தோஷம்.
சாது ரங்கன் திருமண உறவு சரிவருமா என்று தெரிந்து கொள்ள நானும் காத்திருக்கிறேன்.
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top