JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Chathurangam 14

Subageetha

Well-known member
திருச்சூரில் இருந்து பூங்குவளை வந்ததில் இருந்து ரத்னாவுக்கு கல்யாணம் பற்றிய எண்ணங்களும் குழப்பங்களும் சுற்றி வளைத்தது.
அவளுக்கு சங்கரன் பற்றிய யோசனைகளும் தயக்கங்களும், பயமும் உண்டு.
விழா முடிந்து பத்து நாட்களில் சங்கரன் வந்தான். வந்தவன் ரத்னாவை கிணற்றடிக்கு அழைத்து சென்று, அவளுடன் தனியாக பேச முயற்சி செய்ய, ஐயோ பாவம், அவளுக்கு வார்த்தை தொண்டை குழியில் சிக்கிக்கொண்டது. அவளால் பதட்டமின்றி நிற்கவும் முடியாது தளர்ந்து அருகிருந்த துணி தோய்க்கும் கல்லில் தொய்ந்து அமர்ந்து கொண்டாள்.அவன் உயரத்திற்கு பள்ளிக்கூடம் முடித்திருந்த ரத்னா மிகவும் சிறியவளாக தெரிய, மீண்டும் திகைத்து நின்றான் சங்கரன். 'ச்சை, யோசிக்காமல் வீட்ல சொல்றாங்கன்னு சின்ன பிள்ளையை கல்யாணம் செய்ய ஒத்துகிட்டது தப்போ 'என மீண்டும் அவனுக்குள் அழுத்தம்.
ரத்னா சுரிதார் அணிந்திருந்தாள். ஒரு வேளை அதான் சின்ன பெண்ணா தெரியுறாளோ என்று யோசித்து 'இனி நீ சேலை காட்டுறியா 'என்றவனின் பார்வை கொண்டே புரிந்து கொண்டாள் ரத்னா. அவளுக்கு மனதில் சிரிப்பூ அலையாய் பொங்கியது.
சரி எனும் ஒற்றை வார்த்தை வெளி வர அவளிடம் தவித்து, பின்னர் அப்படியும் இப்படியுமாய் வெறும் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள். அவள் கைகள் சிலிர்த்து சில்லென காணப்பட்டது. லேசாக அவளுக்கு வியர்க்க ஆரம்பித்தது. அவளின் நிலையை புரிந்துகொண்டு, அந்த சிறு பெண்ணின் தளிர் கைகளை தனது பிரம்மாண்ட கைகளுக்குள் பொத்தி தைரியம் ஊட்ட முயற்சித்தான் சங்கரன். ஆனால் அவன் உணர்ந்தது அவனுக்கு அவ்வளவு சந்தோசமாக இல்லை. நிச்சயதார்த்தம் கூட முடிந்து விட்டது இன்னும் இந்த பெண்ணுக்கு என் மேல் என்ன பயம்? என்ற
சிணுங்கியது அவன் மனம்.
ஒரு பக்கம் ரத்னா பற்றிய குழப்பங்கள் இருந்தாலும் இன்னொரு புறம் திருமணம் பற்றிய எதிர்பார்ப்புகளும் உனக்குள்ளே நிறையவே உண்டு. ரத்னாவின் பற்றிய கற்பனைகளும், அந்தரங்க எதிர்பார்ப்புக்களும் கூட இருக்கிறது. திருமணம் நிச்சயம் ஆன பிறகு எல்லா ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் சராசரி எண்ணங்களும் கற்பனைகளும், திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணின் மீது நேசமும், பத்தே நாட்களில் அவனை ஏதோ காரணங்கள் சொல்லி கொண்டு, தானே சரக்கை திருச்சிவரை எடுத்துவந்து இறக்கிவிட்டு ரத்னாவின் வீட்டுக்கும் வந்து விட்டான்.
ஆனால் அவன் எதிர்பார்ப்புகளை புரிந்து கொள்ளும் அளவில் அவை இன்னும் வளரவில்லை. பெரும்பாலும் இது போன்ற விஷயங்கள் நகரத்தில் இருக்கும் பள்ளிகளில் படிக்கும் பெண்கள், ரகசியமாய் சில சமயங்களில் பேசிக் கொள்வது உண்டு. ஆனால் கிராமத்தில் வளரும் இந்த பெண்ணுக்கு இவை பற்றியெல்லாம் இன்னும் விபரம் வளரவில்லை.
கொஞ்ச நேரம் பொறுத்திருந்து அவளையே பார்த்தவன் அவள் தலை நிமிர்ந்து தன்னை பார்க்க போவதில்லை என்பது தெளிவாக புரிய ஆழமாக ஒரு மூச்சு எடுத்துவிட்ட கொண்டு, தன்னை சமன்செய்தவனாக அவளுக்காக இவன் பிரத்தியேகமாக வாங்கி வைத்திருந்த ஆண்ட்ராய்டு போனை ரத்னாவின் கையில் வைத்துவிட்டு கிளம்பிவிட்டான்.
வீட்டினுள் பாறுக்குட்டி மாப்பிள்ளைக்காக வகையாக சமைத்து வைத்திருக்க சங்கரன் அவசரமாக கிளம்ப வேண்டுமென்று சொல்லிவிட்ட கிளம்பிவிட்டான். அவன் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாய் தெரிய அவன் எதிர்பார்ப்புகள் புரிந்தவளாக தனது அரை வாயிலிலிருந்து கூடத்தில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்துக்கொண்டிருந்த உமா நேரே கிணற்றடிக்குப் சென்று, கையில் இருந்த போனையே வெறித்து பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த தனது தங்கையிடம் 'அத்தான் கிளம்புறாரு பாரு, போயி அவரை சாப்பிட்டு போக சொல்லி கூப்பிடு' என்று மறைமுகமாக அவள் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லிக்கொடுக்க தன்னிலை அடைந்தவளாக ரத்னா அவசரமாக எழுந்து வாயிலை நோக்கி ஓடினாள். அவர்கள் சொன்ன வேகத்தைப் பார்த்த உமாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அதேசமயம் அவசரம் அவசரமாக தன்னை நோக்கி ஓடிவரும் பெண்ணை பார்த்து திகைத்து நின்றான் சங்கரன். மெதுவாக தன் குரலை மீட்டெடுத்தவளாக ரத்னா,' இப்ப கிளம்ப அவசரமா அத்தான், சாப்பாடு சாப்பிட்டு போகலாமே ' என்றவளை பார்த்து அவனுக்கு மயக்கம் வராத குறைதான்.
ஆனாலும் தன் கெத்தை குறைக்கமாட்டாதாவனாக 'இல்ல ரத்னா, இன்னொரு நாள் வரேன் 'என்றான். அவன் வயிறோ, இந்த முறுக்கு தேவையா என்று காறித் துப்ப, மனமோ, என்னை எப்படியாவது கெஞ்சி கொஞ்சி கூட்டிட்டு போ பார்க்கலாம் என்று அவளிடம் செல்லம் கொஞ்சியது.
அதற்குள் வெளியில் விளையாடிவிட்டு உள்ளே நுழைந்து கொண்டிருந்த சாந்தாவோ வெகு அசால்டாக, அத்தான் போதும் பிகு பண்ணது... எனக்கும் பசி வயித்த கில்லுது. வாங்க சாப்பிட போகலாம் என்று அவள் கைகளை வைத்துக்கொண்டு உள்ளே சென்று விட்டாள். ரத்னாவுக்கு இப்போதுதான் மூச்சே வெளி வந்தது.
உமா அவளை தனியே அழைத்து 'அத்தானுக்கும் சாந்தாவுக்கும் நீயே போய் பரிமாறு ' என்று சொல்லிக்கொடுக்க, நேரே அடுக்களைக்குள் நுழைந்த ரத்னா அவர்கள் இருவருக்கும் தட்டை எடுத்து வைத்தாள். அதற்குள் பாறுவை அமர சொன்ன உமா தானே நேரே அடுக்களைக்குள் புகுந்து ரத்னாவுக்கு உதவுபவளாக, சாதம் இருக்கும் தட்டை எடுத்துக்கொண்டு சங்கரன் அருகில் செல்லும் போது ரத்னாவுக்கு கைகால்கள் உதறின.
சட்டென்று சாந்தா, நிலைமையை புரிந்து கொண்டு, ரத்னா கீழே போடுவதற்குள் தானே வாங்கி சங்கரனுக்கு போட்டுவிட்டு தனக்கும் போட்டுகொண்டாள். ரத்னாவுக்கு கண்கள் கலங்கி விட்டது. ஒரு வழியாக இருவரும் சாப்பிட்டு முடித்து, சங்கரன் கிளம்பும் பொழுது அவளது கலங்கிய பயந்த முகம் அவள் மனதை கூற, அவளிடம் சொல்லிக்கொள்ள பின் கட்டில் இருந்தவளை தேடிச் சென்று, இனிமேல் தினமும் ராத்திரி போன் பண்ணுவேன். தூங்கிடாதே என்றான். அவளுக்கும் தன்மீது இருக்கும் பய உணர்வை திருமணத்திற்கு முன் நீக்கியாக வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு வந்துவிட்டது. அவன் மீது திருமணத்திற்கு முன் காதல் வளரவில்லை என்றால் கூட பரவாயில்லை. ஆனால் இந்த ஒதுக்கமும் பயமும் ம்ஹும்... நிச்சயம் சரிப்படாது. திருமணம் செய்துகொண்டால் தனது சரிபாதியாக இருப்பவள் தன்னைக் கண்டு அஞ்சுவது அவனுக்கு பிடிக்கவில்லை. மெல்லமெல்ல எப்படியாவது அந்த சிறு பெண்ணின் மனதிற்குள் நுழைந்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டான். நிச்சயதார்த்த நாள் அன்று நிர்மலமான முகத்துடன் அழகு பதுமையாக தன் அருகில் அமர்ந்திருந்த ரத்னாவை அவன் மனம் தேடியது.
ஒருவழியாக ரத்னாவின் வீட்டிலுள்ளோர் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டான் சங்கரன். சங்கரன் ஓடும் நேரம் சிவம் அருணாச்சலத்துடன் முக்கிய வேலைக்காக சென்னை சென்றிருந்தார்.
பாறு அவருடன் இரவில் தொலைபேசியில் பேசும்போது சங்கரன் வரவை தெரிவித்தார். கேட்டுக்கொண்டிருந்த சிவனுக்கும் மனதிற்கு சந்தோஷம் தான். சங்கரனுக்கு இந்த திருமணத்தின் மீதான பிடித்தம் நன்கு புரிகிறது. தன் மகள் அதிர்ஷ்டசாலிதான் என்று நினைத்துக் கொண்டார் சிவன்.ஆனால், மற்ற இரு மக்களுக்காக யோசித்தவர் தங்கள் முதல் மகளை பலியிடத் துணிந்தது பற்றி அவருக்கு அந்த சமயத்தில் எந்த ஞாபகமும் வரவில்லையே! எழுதிய எழுத்தை என்றுமே எவராலும் மாற்ற முடியாது என்பது இதுதானோ?

இரவு சாந்தா தூங்கி விட்டாளா என்று உறுதிப்படுத்திக் கொண்ட உமா, ரத்னாவிடம்,' அவரை கல்யாணம் பண்ணிக்க போறவர்னு நினைக்காதே ரத்னா, முதல்ல அவரை நம்முடைய திலகா அத்தையுடைய பையன். நீ அவரை பார்த்து நடுங்குவதை பார்த்தா எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு மா... இன்னிக்கு நீ சரியா பேசல அவர் சாப்பாடு கூட வேண்டாம்னு கிளம்பிட்டாரு. உன்ன பாக்குறதுக்கு தானே இவ்வளவு தூரம் வந்திருக்காரு. பிறகு எதுக்கு தயங்குற? கல்யாணத்துக்கு முன்னாடி பேசி பழகுறது...இதுல ஒண்ணும் தப்பு இல்ல. நீ சின்ன குழந்தையும் இல்லம்மா. அவர் உன்னை புரிஞ்சுக்கணும் நினைக்கிறாரு. நீயும் அவரோட பேசி பழகி அவரை புரிஞ்சுக்க முயற்சி செய்யு... என்று அறிவுரை கூற, சங்கரன் தன்னிடம் நடந்து கொள்வது , தனக்காக பேனா வாங்கி கொடுத்தது, நிச்சயதார்த்தம் அன்று அவங்கள் இருவரும் நின்றுகொண்டிருந்த தருணங்கள் என்று ஒவ்வொன்றாய் அசை போட்டவாறே தூங்கிவிட, தூங்கும்போதும் சிரித்துக் கொண்டிருக்கும் ரத்னாவின் முகம் உமாவின் மனதில் அழுந்த பதிந்தது.

ஏனோ, குரு பற்றிய நினைவுகள் அவளது இரவுத் தூக்கத்தை தூர எடுத்துச் சென்றுவிட்டது.
அவன் கடைசியாக உமாவை தனியா அழைத்துச் சென்றபோது, வேண்டும் என்றே அவள் தோள்களில் உராய்ந்ததும், அவள் தொடை மீது அழுத்தமாக தனது கைகளில் வைத்திருந்ததும், மறைமுகமாக அவளது ***பிடித்து பார்த்து இளித்த நொடிகளும் அவளுக்கு உள்ளுர அருவருத்தது. இருட்டில், அடித்து புரட்டிக்கொண்டு வரும் அழுகையை நிறுத்த வழிதெரியாமல் நெஞ்சம் முழுதும் வெடித்துச் சிதற உனக்கு ஏன் இப்படிப்பட்ட ஒருவன் கணவனாக வரவேண்டும் என்று எழுதி வைத்தாய் கடவுளே என தெய்வத்திடம் முறையிட்டாள். மனிதன் செய்யும் முளைகட்ட செயல்விளக்க கடவுள் என்ன செய்ய முடியும்?

அருணாச்சலம் அன்னபூரணி இருவரும் திருமணம் பற்றிய சிவனிடம் கேட்கும்போது சிவன் ஒன்று மறுத்திருக்க வேண்டும். இல்லை என்றால் தங்கள் தன்னுடன் தனியே பேசும்பொழுது உமாவாவது மிகத் தெளிவாய் முடியாது என்று சொல்லியிருக்க வேண்டும். இப்பொழுது அழுது புரண்டு என்ன பயன்?
சிவன் நினைத்துக் கொண்டிருக்கிறார் ஒரே திருமணத்தின் மூலம் மூன்று பெண்களுக்கு வாழ்க்கைக்கு வழி செய்துவிட்டதாக... உமா நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் ஒருத்தியின் திருமணம் சரியாக இல்லாவிட்டாலும் கூட மற்ற இருவரின் வாழ்க்கையை நிமிர்த்தி விடலாமென்று.
ஆனால், கரும் அரவு என்று தெரிந்த பிறகும், அத்திடம் கழுத்தை நீட்டினால், அது கொத்தாமல் தான் விடுமா, இல்லை சுற்றி இருப்போரை வளைக்காமல் விடுமா?
எப்பொழுதுமே மனித நினைக்கும் நிறைய விஷயங்களை கடவுள் நடத்திக் கொடுப்பதில்லை. அவரைச் சொல்லி குற்றமில்லை. மனிதன் நினைப்பது சரியானதாக இருக்கவேண்டும். புத்தியை பயன்படுத்துவதற்காக தானே, ஆறாவது அறிவு கொடுத்திருக்கிறார் கடவுள்.
மூன்று பெண்களை பெற்றுவிட்டால், அவர்களின் வாழ்வுக்கு வழி செய்ய வேண்டியது சிவனின் பொறுப்பு. அதை இவ்வாறாக குறுக்குவழியில் நிறைவேற்றுவது எந்த விதத்தில் சரி?

இன்று மட்டுமல்ல, உமா அவள் வாழ்நாளில் இனி தூக்கம் என்பதை யோசிக்க முடியாது.
***************************************************************************************
சாதுர்யா மீண்டும் தில்லி செல்ல, அவள் அப்பாவுக்கு இத்தாலி வேலையில் எம்பசியில் சேர்வதற்க்கு உத்தரவு வந்துவிட்டது. வெகு மாதங்களாகவே அவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது என்பதுதான். வெளிநாட்டில் என்பசியில் வேலை மாற்றல் கிடைத்தால் பரவாயில்லை என்று அவர் யோசித்து வைத்திருந்தார். இதற்காக வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் நெருங்கிய முக்கிய நபர் மூலம் காய் நகர்த்த அவர் நினைத்தபடி மாற்றல் கிடைத்தது. இதற்காக, சிலபல பயிற்சிகளையும் கூட தனிப்பட்ட முறையில் அவர் எடுத்து இருந்தார். அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து இருக்க தகுதியின் அடிப்படையில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமாக இல்லை. அவர் எதிர்பார்த்திருந்த நாடு ஸ்பெயின். ஆனால் கிடைத்தது இத்தாலி. எப்படி இருந்தாலும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றுக்கு சொல்வது அவருக்கு மிகுந்த சந்தோஷமே!

சாதுர்யா பதினொன்றாம் வகுப்பு முடித்துவிட்டு பனிரெண்டாம் வகுப்பில் இப்போதுதான் காலெடுத்து வைத்திருக்கிறாள். இன்னும் சில மாதங்கள் மீதமிருக்கிறது . அதனால் மாலதி டெல்லியிலேயே இருப்பதாக சொல்லிவிட்டாள். தற்போதைக்கு மாற்றல் எடுத்துக்கொண்டு வெங்கடேசன் மட்டும் செல்வதாக ஏற்பாடு. மகளின் படிப்பு முடிந்ததும் அவர்கள் இருவரும் வருவதாக சொல்லிவிட வெங்கடேசன் கிளம்பிவிட்டார்.

சாது மனம் முழுவதும், இந்த வருட படிப்பு முடிந்ததும் இத்தாலி செல்வதா...இல்லை ஸ்ரீரங்கம் சென்றுவிடுவதா என்ற யோசனை தான் ஓடிக்கொண்டு இருந்தது. அவள் யோசனையில் ஸ்ரீ ரங்கம் மட்டுமில்லை, அவளது ரங்கன் அத்தானும் உண்டு. அவன் சி ஏ இன்டர் முடித்து, இளங்கலையில் பட்டம் பெற்று விட்டான். இதற்குமேல், ஒன்றிரண்டு வருஷங்கள் தொழிலையும் பார்த்துக்கொண்டு, மேல் படிப்பு படிப்பதற்காக வெளிநாடு செல்வதற்காக நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்யும்படி ரங்கனின் அப்பா சொல்லிவிட்டார். இப்போது ரங்கன் வயலூரில் தான் இருக்கிறான். அனேகமாக சென்னை செல்ல வாய்ப்பு உண்டு. எப்படியும் அடிக்கடி தொழில் நிமித்தமாக வாவது வயலூர் வருவான் என்றெல்லாம் பாவையின் மனது யோசித்துக் கொண்டிருந்தது. அவன் அவளை விட்டு நகர்ந்து சென்றாலும் கூட அவள் மனம் முழுவதும் அவனைப் பற்றிய சிந்தனைகள் மட்டுமே ஆக்கிரமித்துக் கொள்ள எப்பாடுபட்டாவது, வெளிநாடு செல்வதை தவிர்த்துவிட்டு ஸ்ரீரங்கம் சென்று விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டாள். இவளின் முடிவு அவன் அம்மாவுக்கு உவப்பாக இருக்கப்போவதில்லை. கண்டிப்பாக வீட்டில் பூகம்பம் தான். ஆனால் இவளின் இந்த முடிவினால் ரங்கன் இவளை புரிந்து கொள்வானா என்று எனக்கு தெரியவில்லை. இது உறவின் பாசமா, விடலை பருவ நேசமா?
விடை தெரியாமல் நானும் காத்துக்
கொண்டிருக்கிறேன்.
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top