JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Chathurangam 19

Subageetha

Well-known member
திருமணம் முடிந்த பிறகு,திருமணத்துக்கு வந்தவர்களையெல்லாம் இரண்டு குடும்பத்தினரும் ஒன்றாக நின்று நன்றி சொல்லி வழியனுப்பி வைத்தார்கள். திருமண மண்டபத்தின் வாயிலில் தாம்பூலம் கொடுக்க தனியாக கல்யாண காண்ட்ராக்டரின் ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். இன்னும் பதிநைந்து நாட்களில் தேர்தல் பற்றிய அறிவிப்புகள் கட்சித் தலைமையிடம் இருந்து வரவிருப்பதால் அந்த அறிவிப்பு வந்த பிறகு இன்னும் பிரமாண்டமாய் வரவேற்பு நிகழ்ச்சி வைத்துக்கொள்ளலாம் என்று அருணாச்சலம் முடிவு செய்துவிட்டார். அதனால் திருமணம் முடிந்த அன்று மாலையே எல்லோரும் அவரவர் வீட்டுக்கு கிளம்ப வேண்டியதுதான்.

மணமக்கள் பால்பழம் எடுத்துக்கொள்ள
-வெல்லாம் சிவனின் வீட்டிற்கு வர முடியாது என்று தீர்மானமாக மறுத்து கொண்டிருந்தான் குருபரன். அவன் மணமகன் அறையில் பேசிக் கொண்டிருப்பது அதற்கு எதிரில் இருந்த மணமகள் அறையில் அமர்ந்து கொண்டிருந்த சிவனின் காதுகளிலும் விழுந்தது. அவர் பக்கத்தில்தான் உமாவும் உட்கார்ந்து கொண்டிருந்தாள். சிவனின் முகம் விழுந்துவிட்டது. அவர்கள் வீட்டில் அவனது அலட்சியம் தெரிந்ததுதான். இன்றும் இப்படியா என்பதுதான்.
மண்டபத்தில் அதிகம் யாரும் வெளி ஆட்கள் இல்லாததால் பிரச்சனை ஒன்றும் பெரிதாக இல்லை. அருணாச்சலம் பதிலுக்கு அவனிடம் கத்திக் கொண்டிருந்தார். இனி, நீ ஒத்துக்கொண்டாலும் இல்லாட்டாலும் சிவன் தான் உன் மாமனார். அந்த மனுஷனுக்கு அதற்கான மரியாதையை கொடுத்துதான் ஆகணும். உமாவை கூட்டிக்கிட்டு இன்னும் அரை மணி நேரத்துல கிளம்ப வேண்டும் என்று.
கல்யாணத்திற்காய் சமையல் செய்து மீந்துபோன சாப்பாட்டையெல்லாம் சிவனின் வீட்டிற்கு கொஞ்சம் எடுத்து பாறுவிடம் கொடுத்துவிட்டு, தங்களுக்குத் தேவையான வற்றையும் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு, மீதி இருந்தவற்றை , தங்கள் வீட்டிலும் பண்ணையிலும் வேலை செய்பவர்களுக்கும் கொடுத்து அனுப்பி விட்டு அன்னபூரணி மணமகன் அறைப்பக்கம் வருவதற்கும், பாறுக்குட்டி அதே சமயம் மணமகள் அறைப் பக்கம் வருவதற்கும் சரியாக இருக்க,குருபரன் பேசிக்கொண்டிருந்த வார்த்தைகள் கேட்டு இருவரும் திகைப்பூண்டு மிதித்தார் போல அங்கே வாயிலிலேயே நின்று விட்டார்கள்.அவன் வார்த்தைகள் அவ்வளவு ஏளனம் செய்தது சிவன் குடும்பத்தை.உமாவின் அம்மாவின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரிய இடம்... மிகப் பெரிய இடம் என்று ஆசைப்பட்டு திருமணம் செய்து கொடுத்தது எவ்வளவு பெரிய பிழை என்றே இந்தக் கணம் அவள் புரிந்து கொண்டாள். குருவிடம் தன் மகள் இன்னும் எவ்வளவு சித்திரவதைகளை அனுபவிக்க வேண்டியது வருமோ... என்று அந்த தாய்க்கு பயம் வேறு வந்துவிட்டது.கைகால்கள் நடுங்க சுவற்றை பற்றிக்கொண்டு நின்று கொண்டாள்.
அவளது நிலையை புரிந்து கொண்ட அன்னபூரணி ஆதரவாக அவளது தோள்களைப் பற்றி, 'கவலைப்படாதீங்க சம்பந்தி அம்மா, நான் இனிமே உங்க மகளை என்னோட சொந்த பொண்ணாவே பாத்துக்குறேன். இன்னைக்கு கண்டிப்பா குரு வருவான் உங்க பொண்ண கூட்டிக்கிட்டு. அப்படியே மறுத்தாலும் ஓரிரு நாள்களில் அவனை சரி பண்ணி மறுவீடு சடங்குக்கு நிச்சயம் அனுப்பி வைக்கிறோம் ' என்று ஆறுதல்படுத்த முனைய,பாறுவின் மனது சமன படுவதாக இல்லை.

பாறுவும் மகள் அறைக்குள் நுழைய, அங்க உமாவோ தன் அப்பாவிடம்,' இந்த இடம் நீங்க பார்த்து முடித்து வைத்ததுதான் அச்சா... ஒரு வார்த்தையும் மறுபேச்சு பேசாமல் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன், எனக்கு இஷ்டம் இல்லாட்டியும்.அவரைப் பற்றி ஏற்கனவே தெரிந்து தானே இப்படி, இவரோட கல்யாணம்னு எனக்கு முடிவு செஞ்சிங்க?
இப்போ அதுக்கான விலை கொடுப்போம். இனி நான் அந்த வீட்டு... ம்ஹும்... உங்க முதலாளியோட மருமகள்தானே தவிர, உங்க பொண்ணுங்கற அதிகாரம் முடிஞ்சுது. எந்த காரணத்தை கொண்டும் வேலைய மட்டும் விட்டுடாதீங்க. நாளை பின்னைக்கு எனக்கு ஏதாவது ஆனாலும் உங்களுக்கு தெரியணும்... என்றவளின் கண்களில் வலி. முகம் உணர்ச்சிகளை துடைத்து... மடியில் கோர்திருந்த விரல்களை வெறித்து கொண்டிருந்தவளின் மனம் அவள் கைகளில் போட்டிருக்குற மருதாணி சிவப்பிற்கு குறைந்தாதில்லை.அவள் மனம் எதையோ மனகண்ணில் கண்டது.மகள் சொல்லிய ஒவ்வொரு வார்த்தைகளும், அவளது வெறித்த பார்வையும் பெற்ற வயிற்றில் தீயை மூட்டியது. கலியாண வீட்டின் அந்த அறை துக்கம் நிறைந்து. சாந்தாவுக்கு அவர்கள் பேசுவது புரியாவிட்டாலும், இந்த கலியாணம் அக்காவின் சந்தோஷத்திற்கு இல்லை என்று புரிந்து கொண்டவள் இனி, இந்த ஜென்மம் முழுவதும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். படித்து வெளிநாடு சென்று விடுவேன் என்று முடிவெடுத்தாள். இந்த யோசனையில் இருக்கும் பெண்ணின் வயசு வெறும் பதிநான்கு.

குருவை மேலும் கத்த விட்டு மிச்ச சொச்ச மானத்தை இழக்க அருணாச்சலம் விரும்பவில்லை. எல்லோரும் சத்திரம் விட்டு கிளம்ப உமா உணர்வுகளை வெளிப்படுத்தாமல் கவனமாய் நடந்துகொண்டாள். அவள் முகத்தில் ஏதேனும் வலி தென்படுகிறதா என்று கவனித்துக் கொண்டிருந்த குருவுக்கு பெருத்த ஏமாற்றம்! இதை அவன் அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

மெலிதாக அவள் காதுகளில், பிறருக்கு கேட்காமல், உனக்கு உங்க வீட்டுக்கு போகணும்னு தோணலையா,என்றவனுக்கு நிச்சயம் அவளின் உணர்வுகளின் மேல் ஆதிக்கம் செலுத்தும் ஈடுபாடு புலபட, அவனிடம் அடி மன உணர்வுகளை காண்பிக்காமல் 'இனி, நீங்க இருக்கும் வீடு தான் என் வீடு 'என்றவளை வியப்பு மீற பார்த்து கொண்டு நின்றான் குரு. அவள் வார்த்தைகளில் ஏதோ அர்த்தம் ஒளிந்திருப்பதாகவே அவனுக்கு தோன்றியது.இவர்கள் இருவரின் உரையாடல் யாருக்கும் கேட்கவில்லை. இதையெல்லாம் அருகே நின்று கவனித்துக் கொண்டிருந்த அருணாசலத்திற்கு சற்றே மன நிறைவு. வந்திருக்கும் பெண்ணாவது குடும்ப மானத்தை கட்டி காப்பாற்ற முயற்சி செய்வாள், நாசுக்கு தெரிந்து நடக்கிறாள் என்பது அவருக்கு சந்தோஷமாய் இருந்தது.

சிவன் குடும்பம் முழுவதும் வருத்தம் மிக கிளம்பினார்கள். சிவன் ஆட்டோ கூட்டி வந்தார். அவர்கள் உடைகள் கொண்ட பெட்டியும், சாப்பாடு கூடையும் மட்டுமே அவர்களுடன்... வெறும் மூன்று பேர். திருமணத்திற்கு வந்த சிவனின் உறவுகள் சொற்பம். அவர்களும் கிளம்பியாயிற்று. மணமக்கள் வரப் போவதில்லை என மதியம் அவர்களை வேறு சொல்லி அனுப்பிவிட்டார் சிவம் . பெரும்பாலும் அவர் சொந்தங்கள் அவரின் சொந்த மண்ணில். ரத்னா வேறு வராதது அவர்களுக்கு மனதில் வருத்தம். சாந்தா கண்ணீரில் கரைய, உமாவின் கண்களில் கலக்கம். ஆனால், தங்கையை தாங்க அவள் முனையவில்லை. அன்ன பூரணிதான் சாந்தாவை சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று. குரு முகத்தில் உமா பற்றிய ஆராய்ச்சி அப்பட்டமாய் தெரிந்தது. அதற்கெல்லாம் உமா அசையவில்லை.

அன்று இரவே முதலிரவு வைத்தாக வேண்டும் என குரு ரகளை செய்துவிட்டான். அன்று சாந்தி முஹூர்த்தம் செய்ய நேரம் ஏற்றதல்ல என ஜோசியர் சொல்ல கேட்பேனா என்றான் குரு. அருணாச்சலம் தம்பதி செய்வதரியாது நிற்க, உமா மெல்ல குருவிடம் 'மாமா, எனக்கு அந்த மூன்று நாட்கள் நெருங்குது என்று மெல்ல அவனிடம் கூறினாள் அவர்கள் தனியறையில் . ஸோ ஒரு வாரம் கழிச்சு இதெல்லாம்... என்று மெல்ல கொஞ்சி கொஞ்சி அவனிடம் பேச, சந்தேகமாய் அவளை பார்த்தவனுக்கு பாதியில் ஏதாவது ஆகிதொலைந்தால் என்று எண்ணம் எழ சரி அடுத்த வாரமும் ஏதாவது சாக்கு சொல்லாத என்று கடுப்புடன் வெளியே சென்று விட்டான். அவள் சொல்வது உண்மையா இல்லை தன்னை தவிற்கும் வழியா... பொறுத்திருந்து பார்ப்போம் என்று யோசித்தான் குரு.உமாவின் மாமா எனும் அழைப்பு உள்ளே தேனை வார்க்க மௌனமாய் தோப்பு வீட்டுக்கு சென்று படுத்துவிட்டான், அதிசயமாக தனியாளாய்.
இன்னும் பதிநைந்து நாட்கள் கழித்துதான் முஹூர்த்தம் இருக்காம் என்றாள் அன்னபூரணி. எனக்கும் இன்னும் ஒரு வாரம் கழிச்சு தான் நாள் அத்தை என்றாள் உமா. இருவரும் சிரித்துகொண்டனர்.

குரு தன் புது மனைவியை அதிகம் கண்டுகொள்ளவில்லை. அவளை ஆழம் பார்த்தான். அவளாக அவனிடம் வந்து பேசினாள். திருமண நிகழ்வுக்கு முன்னர் இருந்த தயக்கம் அவளிடம் இல்லை. நாடகம் செய்கிறாளா என யோசித்தால், அப்படியும் தெரியவில்லை. சிவன் அடுத்த நாளே வேலைக்கு வந்து விட்டார். அவருடன் அப்பா என்று நிற்கவில்லை பெண். மறுவீடு செல்ல கேட்கவும் இல்லை.குருவுக்கு அவளை புரிந்துகொள்ள முடியவில்லை. பிறந்தகம் போகணும் என்று அவள் கேட்கவில்லை, அந்த ஆசை இருப்பதாகவே தெரியவில்லையே!அவள் மனதில் என்ன என்று தெரியாமல் குழம்பினான் குரு. சரியாக ஒரு வாரம் கழித்து மாத விடாய் என்று ஒதுங்கினாள் உமா. குரு மனதில் மீண்டும் எதிர்பார்ப்பு. ஐந்து நாட்கள் ஒன்றும் சரிவராது என்றுவிட்டாள் உமா.. மேலும் மூன்று நாட்கள் தள்ள, முதலில் குல தெய்வ கோயில் செல்ல வேண்டும். பிறகு எல்லாம் பார்க்கலாம், தலைமை முடிவு சொல்லும் நாளில் கோயில் செல்ல முடிவெடுத்தார் அருணாச்சலம். குருவுக்கு எரிச்சல் தாங்க முடியவில்லை. மீண்டும் ரகளை. ஆனால் பயனில்லை. எப்படியோ நாட்கள் நகர ஜோசியர் சொன்ன அந்த நாள் வந்தது.

அருணாச்சலத்துக்கு எம் எல் ஏ சீட் தர மேலிடம் ஒப்பு கொண்டது. வென்றால் அமைச்சர் பதவி எனும் நிலை. அவருக்கு நிலை கொள்ளவில்லை. முதல் முறையாக சட்ட சபை தேர்தலில் நிற்கிறார்.

முதல் இரவு நாளுக்கென குரு உமாவுக்கு தங்க கொலுசு பரிசளித்தான். உமா எந்த மறுப்பும் இன்றி தன்னையே அவனுக்கு பரிசாக அளித்தாள். அவள் வேண்டுமென்றே இந்த சடங்கு நிகழாமல் தள்ளி போடுகிறாள் என்று நினைத்திருந்தவனுக்கு அவளின் ஒத்துழைப்பு போதை கூட்டியது. முதலில் வன்மையாக கையாண்டவன் பிறகு என்ன நினைத்தானோ, அவளை ராணி போல் நடத்த அவளுக்கு ஆச்சர்யம். அவளின் கூசி குழைந்த தந்த நிற தேகம் அவனுக்குள் மோகம் எனும் நெருப்பை கொழுந்து விட்டு எரிய செய்தது.

இது வரை அவன் மற்ற பெண்களிடம் காணாத ஏதோ ஒன்று மனைவியிடம் கண்டவனுக்கு கொண்டாடி தீர்க்க அந்த இரவு போதவில்லை. முதலில் கஷ்ட பட்டவளுக்கு வலியில் கண்ணீர் வர, இவனுக்கு தன் கண்ணீரை காட்ட கூடாது எனும் அவளின் தீர்மானம் நினைவு வர தன்னை
நிதானித்து கொண்டாள். அவனின் மோகம் நிறைவதாய் தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் உமா அவனுக்கு புதியதாய் தெரிய பித்து பிடித்தவன் போல் ஆனான்.
சொத்து நிர்வாகம் பார்க்க உமா அவனை கட்டாயபடுத்தி அனுப்பி வைத்தாள். வேலை
முடிந்தவுடன் நல்ல கணவனாய் மாலை வீடு வரும் அவனைப்பார்த்து அருணாசலத்துக்கும், அன்னபூரணிக்கும் வியப்பு தாங்க முடியவில்லை.
ஆனால், அவனது பலவீனம் உமாவுக்கு நன்றாக புரிந்தது. அவன் தன்னை விட்டு வேறு பெண்களிடம்
செல்லக்கூடாது. வேறு ஒருத்தியின் நியாபகம் கணவனுக்கு எந்த காலத்திலும் ம்ஹும்... கூடாது என்று யோசித்தவள் மனதிற்குள் அந்த முடிவை இறுக்கி பதிய வைத்தாள்.
தினமும் உடல் பயிற்சி செய்ய ஜிம் செல்ல ஆரம்பித்தாள். உணவு கட்டுபாடும் சேர்ந்து இன்னும் அவளின் அழகு கூடியது. அவள் உடை அலங்காரம் என்று முழுவதும் மாறினாள்.
அந்தரங்கத்தில் கணவனுடன் ஒன்றி அவனை சந்தோஷம் கொள்ள செய்தாள். அவனால் இரவு அவள் இல்லாமல் இருக்க முடியாது எனும் அளவிற்கு அவளுள் மூழ்கினான். ஆனால், அவளுள் மரித்த அவள் எழவே இல்லை. இயந்திரதனமாய் இருந்தது அவனுடனான அவளது கூடல்.

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று அவனது மோக வலை அறுந்து விழ அவள் எப்போதும் சம்மதிக்க தயாராக இல்லை.
அவளது முயற்சிகளை அன்னபூரணியும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள். ஒரு தாயாக அவளுக்குள்ளும் தன் மகன் திருந்தி நல்ல குடும்ப வாழ்வு வாழவேண்டும் என்ற பிரார்த்தனைகள் உண்டு. அதனாலேயே, உமாவின் வழியிலேயே அவளை விட்டு விட்டாள். மெல்ல மெல்ல, உமாவை வீட்டு நிர்வாகத்திற்கும் பழக்கினாள் அன்னபூரணி. சிவனுக்கு தன் மகள் எடுத்து வைக்கும் அடிகள் மிகுந்த மகிழ்ச்சியை உண்டு பண்ணியது. மருமகன் என்னதான் திமிர் பிடித்தவனாக நடந்துகொண்டாலும் மகளிடமும் தன்மையாக நடந்து கொள்வது மனதிற்கு ஆறுதலாக இருந்தது. பாறுகுட்டியும் சரி, நகல் இங்கே வராவிட்டால் கூட நல்ல வாழ்வு அவளுக்கு அமையப் பெற்றால் போதும் என்ற முடிவுக்கு வந்து விட்டாள். சிவன் தினமும் அங்கே நடப்பவற்றை சொல்லும்போது, விவரிக்க முடியாத எண்ணங்கள் அவளுக்குள் எழும். மகளுக்கு சந்தோஷத்தை கொடு தேவி என்று பிரார்த்தனை செய்வதைத் தவிர அந்த தாய்க்கும் வேறுவழியில்லை.

தேர்தல் முடிவுகள் வந்து அருணாச்சலம் எம்எல்ஏ ஆகிவிட்டார். மருமகள் வந்த நேரம் தன் வாழ்வில் ஏற்றங்கள் என்று அவளை கொண்டாடினார் அருணாச்சலம். குருவும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். அருணாசலத்திற்கு அமைச்சர் பதவியும் கிடைக்க, காவல்துறையும், சுகாதார துறையும் அவரின் நிர்வாகத்தில் இயங்கத் தொடங்கியது. குருவுக்கு தந்தைக்கு கிடைத்த பதவி இன்னும் கொஞ்சம் திமிரை அதிகப்படுத்தியது. மறைமுக தொழிலில் தைரியமாக இறங்கி விட்டான். அவனது தொழில் ரகசியங்கள் பற்றி உமா, அன்னபூரணி, அருணாச்சலம் யாருக்குமே தெரியாது.
சிவனுக்கு மட்டும் தன் மருமகன் ஏதோ தவறான செயல்களில் ஈடுபடுகிறான் என்ற அச்சம் மனதில் இருந்தாலும் வாய்விட்டு இன்னும் அவர் எதையும் கூறவில்லை.
அருணாச்சலம் அமைச்சரானவுடன் அவரது குடும்பம் சென்னைக்கு இடம் பெயர சிவனும் தனது குடும்பத்துடன் சென்னை செல்லலானார். சிவனை இப்பொழுதும் தன்னுடனேயே வைத்துக் கொண்டிருக்கிறார்
அருணாச்சலம் . சம்பந்தி என்ற மரியாதை சிவனுக்கு என்றும் கிடையாது. ஆனால் உண்மையான விசுவாசியை எங்கே வைத்திருக்க வேண்டும் என்பது அறிவார் அருணாச்சலம். சிவனுக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை.
அருணாச்சலதுடன் சென்னைக்கு வந்துவிட்டமற்றொரு நபர் வீரன். அருணாசலத்திற்கு தன் உயிரைக் காப்பதற்கு மட்டும் காவலுக்கு தன்னுடன் ஆள் தேவைப்படவில்லை. தேவைப்படும் பொழுது தன் உயிரைத் தரவும் விசுவாசி தேவைப்படுகிறது. அதற்கு வீரன் சரியான ஆள் தான். அவருக்கு உயிர் பயம் இப்போது அதிகமாகி விட்டது. பதவி வந்தவுடன் அவர் ஆளும் அதிகம் மாறிப்போனார்.

ரத்னா திருச்சூரில் கல்லூரி சேர்ந்தாயிற்று. சங்கரனும் திருச்சியில் கிளை திறந்து நிர்வகிக்க ஆள் நியமனம் செய்துவிட்டான். அவர்கள் வாழ்வு காதலின் முதல் படியில். இன்னும் அவர்கள் திருமண வாழ்வுக்குள் புகவில்லை. அவள் படிக்க வேண்டிய சிறு பெண். சம்சார பாரம் இப்போது வேண்டாம் என யோசிக்கிறான் சங்கரன். ஆனால், அந்த சிறு பெண்ணுக்குள் திருமண சம்மந்தமான ஆசைகள் எழும்ப தொடங்கிவிட்டது.
**********************************************************

சாதுர்யா தன் ஆசைப்பட்டபடி அரசியல் அறிவியலில் சேர்ந்து கொண்டாள். வீட்டிலுள்ளவர்கள் எவ்வளவு சொன்னாலும் கேட்கும் அளவில் அவள் இல்லை. தான் பிடித்தால் பிடித்தது தான் எனும் முரட்டு பிடிவாதம்!

ரங்கன் நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்றுவிட்டான். இன்னும் ஒரு மாதத்தில் அவன் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்கிறான். சாதுர்யா மனதில் எப்படியாவது ரங்கனிடம் தன் மனதை விரைவில் பதியவைக்க வேண்டும் என்ற துடிப்பு அதிகமாக இருந்தது. அவளுக்கு நிச்சயமாய் தெரிந்துவிட்டது ரங்கன் மீது தனக்கு இருப்பது காதல் தான் என்று. அது அத்தானுக்கும் தெரிந்திருக்கும். ஆனாலும் ஏன் தன்னை தவிர்க்கிறார் என்றது அவளுக்கு புரியவில்லை. தன்னை புரிய வைத்துவிடும் வேகம் அவளுக்கு அதிகமாகிவிட்டது.

ரங்கனை சனிக்கிழமை மாலையில், கல்லணைக்கு போய் வரலாம் என்று கூப்பிட்டு கொண்டு சென்றாள்.அவள் ஏதோ பேச விரும்புகிறாள் என அவனுக்கு புரிந்து போனது.
'நான் திருமணமே செய்து கொள்ளாமல் இருப்பேன்' என்று அவள் சொன்னது ரங்கனை அன்றே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. அவளிடம் அதுபற்றி கேட்டுவிட வேண்டும் என்று பல நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறான்.
இன்று இருவரும் ஒருவர் மனதில் இருக்கும்
அந்தரகங்கத்தை இன்னொருவர் அறிய பகிர்ந்து கொள்வதற்கு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முதலில் ரங்கனே பேச்சை நேரடியாக தொடங்கிவிட்டான். படிப்பு முடிந்த பிறகு நீ கட்டாயம் கல்யாணத்துக்கு ஒத்துக்கணும், வேற காரணங்கள் சொல்லி கல்யாணத்தை தள்ளி போடக்கூடாது சாதுர்யா என்றவனை தீர்க்கமாக பார்த்தபின் பெண் சொன்னது, 'அத்தான் மணமகன் நீங்கன்னா கண்டிப்பாக நான் உங்கள கல்யாணம் செஞ்சுக்குவேன்' என்று. சட்டென்று அவள் அவ்வாறு சொல்வாள் என்று ரங்கன் எதிர்பார்க்கவில்லை. இதற்கு மேல் காலதாமதம் செய்ய கூடாது என்று அவள் முடிவு செய்து கொண்டுதான் வந்திருந்தாள். வெகு காலமாய் மனதில் பூட்டி வைத்த ரகசியம், இன்று எப்படியோ தைரியத்தை கூட்டி கொண்ட சொல்லி விட்டாள்.
இருவரும் திரும்பி வரும்போது மௌனம் மட்டுமே இருவருக்கும் நடுவில். ரங்கன் தனது பதிலை இன்னும் எதுவும் சொல்லவில்லை. அவள் வார்த்தைகள் அவனுக்கு ஒரு ஆயிரம் குழப்பங்களை விதைத்திருக்கிறது. அவன் முடிவு என்ன என்பது காத்திருந்த தான் தெரிந்து கொள்ள வேண்டும். அவன் மனதில் அவள் சிரித்தாள். அவனால் அவளது சிரிப்புக்கு பதில் சொல்ல முடியவில்லை.ஆனால், யார் அவள், அவனுக்குள் சிரித்து, சில சமயம் அழுது அவனை பல வருஷங்களாய் தூக்கம் கெடுக்கும் பெண்?
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top