JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Chathurangam 21

Subageetha

Well-known member
உமாவின் நாட்கள் கடந்த ஒரு வருடமாக இப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது. ஒரு நாளும் இடை விடா கணவன்.தன்னைப் பெற்றவளை பாதுகாப்பது முதல் கொண்டு செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து தன்னை என்றும் விலக விடாமல் தன் மனதில் மேற்கொண்ட சத்தியத்தை இன்று வரை காப்பாற்றி வருகிறாள் அவள். எத்தனையோ பெண்களை காப்பாற்றுவதற்காக தன்னையே களபலி கொடுத்த பின்னும் அவளுக்கான கடமைகள் ஓய்வதாய் இல்லை.

காலையில் எழுந்தவுடன் உடல் தொய்ந்து விழுந்தாலும் கூட தனது அன்றாட வழக்கங்களை மாற்றிக்கொள்ளவில்லை. கொஞ்சநேரம் உடற்பயிற்சி நடைப்பயிற்சி மாமியாருடன் சேர்ந்து அவர் கற்றுத் தரும் நிர்வாகப்பயிற்சி, இரவு நேரம் முழுவதும் கணவனுக்கு மட்டுமாய். இவளின் அழகும் மிளிர்வும் கூடக்கூட குருபரன் இவளை இவளுக்குள் தேடும் நேரமும் அதிகரித்துக் கொண்டே சென்றது.
இப்போதெல்லாம் தனக்குள் இருக்கும் மொத்த சக்தியும் உறிஞ்சி எடுக்கப்படுவதாக உணர்கிறாள் உமா. தனிமையில் வரும் கண்ணீர் இன்னும் நிற்கவில்லை.
என்னை ஏன் இப்படிப்பட்ட காமுகனுக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறீர்கள் என்று மனதில் தன் பெற்றோரையும் அவள் கேட்காத நாளே இல்லை. ஆனால் விடை தருவார் யார்? அவளுக்குள் ஆயாசமும் சலிப்பும். மற்ற பெண்களின் வாழ்க்கை போல் தன் வாழ்க்கையை தன்னால் அமைத்துக் கொள்ள முடியாது. திருமணத்திற்கு முன் அவளுக்கும் கல்யாணம் குழந்தை குடும்பம் என்று நீண்ட வரிசை கனவுகள் இருந்தது. இப்போதோ இருபதுநான்கு மணி நேரமும் கணவனை எப்படி தன் கட்டுப்பாட்டில் தக்க வைத்துக்கொள்வது என்று யோசனை ஆகிவிட்டது.
திருமணம் அன்று அவன் தன் அன்னையை பார்த்த பார்வையை இன்று நினைத்தால் கூட உமாவின் உடல் கூசுகிறது.அசல் துஷ்சாசனன் பார்வையது.இதிலிருந்து அவனுக்கு வயது வித்தியாசம், உறவு முறை இவை எல்லாம் ஒரு பொருட்டல்ல என்பதை தெள்ளதெளிவாய் தெரிந்து கொண்டாள் உமா.
பேருந்தில் யாராவது இடித்தாலே பொறுக்கி என்ற திட்டும் நாட்கள் போய், அவனுடனேயே குடித்தனம் செய்ய வேண்டிய நிர்பந்தம் வரும் என்று அவள் என்னாளும் நினைத்திருக்கவில்லை.

அன்னபூரணிக்கு தன் மருமகளின் நிலை புரிகிறது தான். ஆனால் அவரைப் பொறுத்தவரை மகன் வெளியில் சென்று இவ்வாறான விஷயங்களில் ஈடுபடாமல் (ஊர் மேயாமல்?) தன் மனைவியுடன் மட்டும் தன் அந்தரங்க விஷயங்களை முடித்துக் கொள்வது வரை அன்னப்பபூரணிக்கு திருப்திதான். அதனாலேயே மருமகளை அவள் ஒரு வார்த்தை சொல்வதில்லை. ஒரு பெண்ணாக தன் மருமகள் மீது அன்னபூரணிக்கு பரிதாபம் உண்டுதான். மறுப்பதற்கில்லை. ஆனால் அருணாச்சலம் -அன்னபுரணி அவர்கள் இருவரின் விருப்பு வெறுப்பு எல்லாமே குருபரனின் வாழ்க்கை சார்ந்தது மட்டுமே!
இன்று கால மாற்றத்தால் குருவின் செயல் குற்றமாக நம் கண்களுக்கு தெரிந்தாலும் இப்போதும் நான்கு குழந்தைகள் பெறும் பெண்கள் உண்டு. ஐம்பது வருஷங்களுக்கு முன்பெல்லாம் பதினாறு குழந்தைகள் பெற்று திண்டாடிய பெண்கள் நிலை? எத்தனை வீடுகளில் மாமியாருக்கு வீட்டு மருமகள் பிரசவம் பார்த்திருப்பாள்?
'கணவனின் ஆசைப்படி, அவர் மனம் கோணாமல் நடந்து கொள்'என்பது மட்டுமே அறிவுரை. எனில் பெண்ணவளின் மனம், மெய் ?
இப்போதும் உமா இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்று வர முடியுமா? பெண்கள் பலரது நிலை அப்படித்தான் இருக்கிறது.

அருணாசலத்திற்கு இவற்றையெல்லாம் கவனிக்க நேரமில்லை. அமைச்சரும் ஆகிவிட்ட பிறகு அவருக்கு இங்கு பூங்குவளையில் இருப்பதை விட சென்னையில் இருக்கும் நேரம்தான் அதிகரித்துவிட்டது. குருவை யோசித்துதான் இன்னும் இங்கேயே. நடுவில் கொஞ்சகாலம் சென்னைக்கு குடும்பத்தை மாற்றியவருக்கு குருவின் செய்கைகள், அத்துமீரல்கள் பிடிக்கவில்லை. திரும்ப இங்கே வந்தாயிற்று.ஆனால் என்றாயினும் சென்னை அவர்களை இழுத்துக்கொள்ளும். சிவன் குடும்பம் சென்னையில் தங்கி விட்டது. சாந்தா படிக்கிறாள்.
சொந்த மண்ணில் இருந்தாலும் கூட அருணாச்சலத்தால் மகனின் அந்தரங்க விஷயங்களில் எல்லாம் தலையிட்டு கருத்து சொல்ல முடியாது. மருமகளுக்கு ஆறுதல் சொல்லும் நிலையிலும் அவர் இல்லை. அருணாச்சலத்தின் மனதளவில் தன் மனைவி சந்தோஷமாக இருப்பது மட்டுமே பிரதானம்.

சிவம் இங்கு வேலை செய்து கொண்டு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். தன் மகளின் கண்களில் காணப்படும் சோர்வு அவருக்கு உள்ளூர குற்றவுணர்ச்சி ஏற்படுகிறது. அதனாலேயே அருணாச்சலத்துடனேயே அவரது பயணம்.
குருபரன் என்ன செய்து கொண்டிருக்கிறான்,தன் மகளுடன் ஒழுங்காக இருக்கிறானா என்று கண்காணிக்கும் வேலை வேறு இப்போது சிவத்திற்கு கூடி விட்டது. சாந்தா இப்பொழுது பத்தாம் வகுப்பு படிக்கிறாள். அவளை மேற்கொண்டு படிக்க வைக்க வேண்டும்.
அதைப்போல உமாவும் வேலையை விட வேண்டாம் என்று சொல்லி இருக்கிறாள். இதுபோன்ற விஷயங்கள் இராமல் இருந்திருந்தால் சிவன் என்றோ வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்திருப்பார். அவரால் தன் மூத்த மகளை கண் கொண்டு பார்க்க முடியவில்லை.

காலம் மிக வேகமாக பயணம் செய்கிறது. இதோ அதோ என்று உமாவுக்கும் சரி ரத்னாவுக்கும் சரி திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டது.
இன்னும் இரண்டு மாதங்களில் ரத்னா தனது இளநிலை பட்டப் படிப்பை முடித்து விடுவாள். இத்தனை வருடங்களில் சங்கரன் மீதான காதல் அவளுக்கு வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. சங்கரன் போன்ற கணவன் கிடைக்கத் 'தான்' நிச்சயம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று அவள் நினைக்காத நாளே இல்லை. அவர்களது உறவு இயற்கையிலேயே அவ்வளவு கச்சிதமாக பொருந்தி விட்டது.
திலகா விற்கு தன் அண்ணன் மகள் மீது கோபம் இருந்தாலும் கூட இப்போதெல்லாம் இவர்கள் வீட்டிற்கு வந்து உறவாடி விட்டு செல்கிறாள். அவள் எப்போது வந்தாலும் அவளுடன் சங்கரனின் தங்கையும் வருகிறாள். அவளுக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்ப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் இதைப் பற்றியெல்லாம் சிந்திக்க ரத்னாவும் சரி சங்கரனும் சரி தயாராக இல்லை. உறவுகள் இன்றி தன்னந்தனியாக இருப்பது அவர்கள் இருவருக்குமே கஷ்டமாகத்தான் இருக்கிறது. என்னதான் திருமணம் முடிந்து விட்டாலும் இருவருமே பக்குவம் போதாத சிறுவயதினர்தான். அதனால் உறவு என்று வருபவர்களை இரு கைகள் நீட்டி அணைத்துக் கொள்ளவே இருவரும் விரும்புகிறார்கள். திலகாவின் வார்த்தைகள் பல சமயங்களில் விஷம் தடவிய கூர் ஆயுதமாக தாக்கினாலும் கூட ஏதோ ஒரு வகையில் அவள் வருவது ஆறுதல் அளிக்க இருவரும் அவளுக்கு பணிந்து செல்ல தொடங்கினார்கள். இதனாலேயே எல்லாம் திலகா தன் கோபத்தை மறப்பதாக இல்லை. தங்கைக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியது சங்கரனின் கடமை. எங்கே தான் இங்கே வந்து செல்லாவிட்டால் தன் கடமையை உதறிவிட்டு விடுவானோ மகன் என்ற யோசனையில் தான் அவள் இங்கு வந்து செல்வதே! திலகாவை பொருத்தவரைக்கும் சங்கரன் தேவைதான். அவன் சம்பாதிக்கும் பணம் அவனை விடப் பெரியது. ஆனால், ரத்னா... அவள்மீது தீராத வன்மம் கொண்டார்கள் திலகாவின் குடும்பத்தினர். ஏதாவது ஒரு சந்தர்ப்பம் வாய்க்குமானால், ரத்னாவின் நிலை சொல்லுவதற்கில்லை.

குழந்தை பேறு பற்றிய பேச்சுகள் இரு இடங்களிலும் தொடங்கி விட்டது. அன்னத்தின் கண்களில் எதிர்பார்ப்பு அப்பட்டமாய் தெரிந்தாலும் அவற்றை எல்லாம் லட்சியம் செய்யும் நிலையிலும் உமா இல்லை.
அவள் மனதில் இரண்டு விஷயங்கள் ஒன்று குழந்தை பிறக்கும் சமயம் குரு கைமீறி போய்விடக்கூடும் என்ற பயம். மற்றொன்று இவனைப் போல ஒரு குழந்தை பிறந்து விட்டால் என்ன செய்வது என்ற தயக்கம். இவனுக்கு அப்பா ஆகும் தகுதி இல்லை என்று அவள் தீர்க்கமாய் நம்பினாள். இதையெல்லாம் வாய் விட்டு சொல்ல அவளால் இயலவில்லை. குழந்தை பிறக்காமல் இருப்பதற்காக மூன்று வருடங்களாய் அவள் மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறாள். இது அவளுக்கு மருத்துவருக்கும் உண்டான ரகசியம். உனக்கு குரு மீது ஒரு சதவிகிதம் கூட நம்பிக்கை வரவில்லை.

இங்கு திருச்சூரில், திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகியும் இன்னும் ஒரு புழு பூச்சி கூட வழி இல்லை என்று ரத்னாவின் மாமியார் அவளை ஏளனம் செய்ய ஆரம்பித்துவிட்டாள். இவ்வாறு திலகா பேசும்போதெல்லாம் ரத்னா அமைதியாகி விடுவாள். குழந்தை போது வேண்டாம் என்பது சங்கரன் எடுத்த முடிவு. அதற்காக முயற்சிகளை எடுத்துக் கொண்டு இருப்பவனும் அவனே. என்று குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஒரு விரும்புகிறானோ அப்பொழுது அவனது தடைகளை தூக்கி எறிந்துவிட போகிறான். இவற்றையெல்லாம் திலகாவின் முன் கடை விரிக்க ரத்னாவுக்கு இஷ்டமில்லை. அவளது படிப்பு முடிந்து விட்டது. இனி சங்கரன் தான் யோசிக்க வேண்டும். குழந்தை பெற்றுக்கொள்வது அவர்கள் இருவரின் தனிப்பட்ட, அந்தரங்க விஷயம் என்று ரத்னா நினைத்தனாலயே இதைப்பற்றி வேறு யாரிடமும் எதுவும் பேசவில்லை.
மாமியாரிடம் இதை பற்றி நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம் என்று ஒரு நொடியில் அவள் கூறி விடுவாள் தான். சங்கரன் இதனால் மனம் சுணங்கு வானோ என்று வாளா இருக்கிறாள். அத்தோடு தன் மகன் முன் இதையெல்லாம் பேசும் தைரியம் திலகத்திற்கு கிடையாது. ஒருவேளை மகன் நேரடியாகவே சொல்லி விடக் கூடும் என்று வராதீர்கள் என்று. திலகத்தின் கணவர் இன்னும் தன் நிலையில் இருந்து இறங்கி வரவில்லை. சிவனுக்கு தன் தங்கையின் மகன் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக மனதில் ஒரு சுணக்கம் அதனால் அவரும் தன் மகளுடனோ தன் மருமகனுடனோ எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை.

நிதானமாக ரத்னா தன் கணவனிடம் குழந்தை பெற்றுக் கொள்வது பற்றி பேச தொடங்கினாள். அதுவும் அவன் இளகி இருக்கும் கூடலின் சமயத்தில்.

'யோசிக்கிறேன் ரத்னா'என்றவனுக்கு யோசிக்க எந்த தயக்கமும் இல்லை போலும்! தடை சாதனத்தை அப்போதே நீக்கிவிட்டான். குழந்தை பெற்றுக் கொள்வதற்கான முயற்சி அந்த நிமிடத்தில் இருந்து அவர்களுக்குள் தொடங்கியது. தடையற்ற முதல் கூடல். என்றும் போல் சந்தோஷமாகவே அவனது ஆசைகளுக்கு இடம் அளித்தாள் பெண். அவளது பிதற்றல்களை சங்கீதம் என ரசித்து அவளை சந்தோஷத்தின் உச்சியில் நிறுத்திகொண்டாடினான் சங்கரன்.

மத்திய அரசு வேலைகளுக்கான தேர்வுகள் எழுத தொடங்கி இருந்தாள் ரத்னா. சங்கரனின் தொழிலிலும் ஏற்றம் தான். மேலும் வருடம் ஒன்று கடந்த பிறகும் கூட ரத்னா கரு தரிக்கவில்லை. இருவரும் மருத்துவரிடம் சென்று காண்பிக்க, குழந்தை பிறப்பில் எந்த பிரச்சனையும் இல்லை தானே நிகழும். அதுவரை காத்திருங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டார் மருத்துவர்.

வயது அதிகம் இல்லை என்பதால் இருவரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ரத்னாவுக்கு அவள் விரும்பியபடி பணி கிடைத்துவிட அவர்களின் வாழ்வு மிகவும் சந்தோஷமாக சென்று கொண்டிருந்தது. ரத்னாவும் பகல் பொழுதுகளில் வேலைக்கு சென்று விடுவதால் அவளை கொம்பு சீவி விடும் வாய்ப்புகள் திலகாவுக்கும் அவள் மகளுக்கும் கிடைக்கவில்லை. சங்கரன் எதிரில் ரத்னாவை பேசும் தைரியம் யாருக்கும் இல்லை.

இங்கு, கட்சியில் மேல் இடத்துடன் ஏற்பட்ட உரசலால் அருணாச்சலம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியிலிருந்தும் தன்னை தனியாக பிரித்து தனிக்கட்சி தொடங்கி விட்டார். கட்சியின் பாதி ஆதரவாளர்கள் இவர்களது கட்சியில் சேர்ந்து கொண்டு விட்டார்கள். வரும் தேர்தலில் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனியாகவே போட்டியிடுவது என்றும் திட்டவட்டமாக முடிவு செய்துவிட்டார் அருணாச்சலம். கட்சியை மேலும் விஸ்தரிப்பது சம்பந்தமாக அருணாசலத்திற்கு வேலை கூடிப்போய் விட்டது. சிவனும் தீரனும் இருபத்தி நான்கு மணி நேரமும் அவருடனேயே தங்கினார்கள். பழைய கட்சியின் விசுவாசி ஒருமுறை அருணாசலத்தை கத்தியால் வயிற்றில் குத்த வர, தீரன் இடையிட்டு அந்த கத்திகுத்தை தனதாக்கிக் கொண்டான்
வீரனை மருத்துவமனையில் சேர்த்து இருப்பதை செய்தி மூலமாக தெரிந்துகொண்ட ராகாயிக்கு அவனுடன் இருந்த அவனுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க மனம் ஏங்கியது. கொள்ளை நோயில் தீரன் தனது மனைவியையும் மகளையும் இழந்து பல வருடங்கள் ஆயிற்று. இன்று அவன் யாருமற்ற அனாதை தான். தான் போனால் அது சரியாக வராது என்று புரிந்த ராக்காயி கண்ணீரில் அவனுக்கு மருந்து இட முற்பட்டாள். பத்து வயது நிரம்பியதான ராகாயியின் மகள் தன் தாய் அழுவதை பார்த்து தானும் அழுதாள். ராக்காயி மனதில் காதல் இன்னும் அழியவில்லை. தொழில் மாறினாலும் பெண்ணின் மனம் மாறுமா?

திருச்சியிலிருந்து பெங்களூரு செல்லும் வழியில் தன் அப்பாவுக்கு தெரியாமல் கஞ்சா தோட்டம் வாங்கி போட்டிருக்கிறான் குரு. அடிக்கடி அங்கே போவது அவன் வழமையே. அப்படி செல்லும் தருணங்களில் அங்குள்ள தனது சகாக்களுடன் மது அருந்திவிட்டு சீட்டு ஆடுவதும், பெண்களை வரச் சொல்லி குத்தாட்டம் போடுவதும் அவர்களின் பொழுது போக்கு. உமாவை கலியாணம் முடித்த பிறகு மங்கையர் சகவாசம் மட்டும் தாற்காலிக விடுமுறை எடுத்து சென்றுள்ளது.
இந்தமுறை தன் தனி தோட்டம் வந்த பொழுது அரை போதையுடன் சீட்டாடிகொண்டிருக்கும் பொழுது....











 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top