JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Chathurangam 23

Subageetha

Well-known member
மயங்கி விழுந்தவளை தன் கைகளில் தாங்கி கொண்டான் குருபரன். அவன் மனதிற்குள் இந்த முறை நிச்சயம் மனைவி கரு தரித்து இருக்கலாம் என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. அருணாச்சலம் தனது அலுவலக அறைக்குள்ளேயே தான் இருந்தார். வெளியே வாக்கு பதிவு நடந்து கொண்டிருந்ததால், தன் வீட்டிற்குள் இருந்தவருக்கு நிஜமாலுமே டென்ஷன்தான். புதிதாக கட்சி தொடங்கி தனியாக தேர்தலில் களம் காண்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதுவும் அவர் கட்சி தொடங்கி வெறும் இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. இந்த முறை அவர் பெறும் வாக்குகள் தான் அவரது அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தலையெழுத்து. அது அவருக்கு புரிந்தது,
அதனாளேயே பதட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் மருமகளும் மயங்கி விழுந்தது அவருக்கு ஏதோ ஒரு விதத்தில் பயத்தை உண்டு பண்ணியது. உடனடியாக குருவை அழைத்து,' உன் பொண்டாட்டிய கூட்டிட்டு லேடி டாக்டர்கிட்ட போயிட்டு வந்துடு குரு என்றார்.
அன்னபூரணிக்கு தன் மகனுடன் மருமகளை மருத்துவ மனைக்கு கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆசைதான். ஆனால், கணவர் தனியாக வீட்டில் இருப்பார் என்ற எண்ணத்தினால் குருவை கிளம்ப சொல்ல, அங்கே கூடத்தின் ஒரு ஓரத்தில் தனக்கு தன் மகளுடன் எந்த சொந்தமும் இல்லை என்ற மன வருத்தம் முகத்தில் தெரிய கைகளை பிசைந்துகொண்டு நின்றுகொண்டிருந்தார் சிவம். அன்னபூரணியோ மருமகள் உமா தனது தந்தையிடம் நடந்து கொள்ளும் முறையை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள். இத்தனை வருடங்களில் தனது மருமகளின் இந்த முகம் அவருக்கு வித்தியாசமாக தோன்றியது உண்டு. இத்தனை வருடங்கள் ஒருவராலும் மனதில் உள்ள வெறுப்பையும் ஆதங்கத்தையும் தக்கவைத்துக் கொள்ள முடியுமா...என்ற ஆச்சரியம் எப்போதுமே அன்னபூரணிக்கு உண்டு. அவளைப் பொறுத்தவரை குருபரன் தன் மனைவியுடன் நன்றாகத்தான் நடந்து கொள்கிறான். மனைவியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறான். அவளது கண் பார்த்து நடக்கிறான் என்று கூட சொல்லலாம். அப்படி இருந்தும் இந்த பெண்ணிற்கு இவ்வளவு தந்தை மீதான வெறுப்பு ஏன் என்றுதான் புரியவில்லை. தனது மனதில் இந்தப்பெண் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாள்?அருணாச்சலத்தோடு அன்னபூரணி இதையெல்லாம் பகிர்ந்து கொண்டது கிடையாது. சிவம் இப்பொழுது அருணாச்சலத்தின் கட்சியில் முக்கிய நபர் ஆகிவிட்டார். கட்சியில் தனது அதிகாரத்தை சிவன் காட்டவில்லையே தவிர, அவர் அருணாச்சலத்தின் சம்பந்தி என்பதும், இவரது ஒற்றைச்சொல் அருணாச்சலத்தை ஆட்டுவிக்கும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
உண்மையை சொல்லப்போனால் அருணாசலத்துடானான இந்த நெருக்கம் உமாவின் திருமணத்திற்கு பிறகு வந்ததுதான். அதற்கு முன்பு வரை சிவன் சாதாரண கணக்கப்பிள்ளை. உண்மை விசுவாசி மட்டுமே!
ஆனால், இன்றோ சிவனின் மரியாதை எவ்வளவு கூடிவிட்டது? அற்ப விஷயங்களுக்காக உமாவை சிவன் குரு போன்ற ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்தது
உமாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உள்ளுர அந்தரங்க அறையில் வெறும் சதை சுகம் கொடுக்கும் தாழ் நிலை தானே எனக்கு என்ற எண்ணம் அவளை பெற்றவருடன் இணங்க விடவில்லை. இந்த திருமணத்தினால் தானே அம்மாவுடனும் தங்கைகளுடனும் நான் விலகி இருக்க வேண்டியதாகி விட்டது என்ற கோபம் வேறு அவளுள். பணக்கார வீட்டில் அலங்காரப் பொருட்களுடன் ஒன்றாக பொம்மை போல் சதாசர்வகாலமும் அலங்காரம் செய்துகொண்டு குருபரன் முன்னெப்போதும் நின்றுகொண்டு கணவன் என்ற உரிமையில் நடந்து கொள்ள முடியாமல், அவநம்பிக்கையுடன் காலம் கடத்துவது உமாவின் மனதில் அருவருப்பை கொடுத்தது. இதையெல்லாம் ஒரு பெண்ணான அன்னபூரணி யார் கூட புரிந்துகொள்ள முடியாத பொழுது வேறு யாரால் புரிந்து கொள்ள முடியும்?

நடக்கும் நாடகங்களை பலகாலமாக அன்னபூரணி பார்த்துக் கொண்டிருந்தாலும் சிவனின் மீது அவளுக்கு ஒரு பரிதாப உணர்வு என்றுமே உண்டு. அந்த குடும்பத்தை பொருத்தவரை சிவன் ஒரு நன்றியுள்ள விசுவாசி, இன்று நேற்றல்ல...வெகுகாலமாக.
சட்டென்று முடிவெடுத்தவளாக அன்னபூரணி சிவனிடம்
' நீங்களும் போயிட்டு வாங்களேன் சிவம். ரெண்டுபேருக்கும் பதட்டம் குறையும் 'என்று அவர்களுடன் அனுப்பி வைக்க, சிவன் முன்னிருக்கையில் டிரைவருடன் அமர்ந்துகொள்ள குருபரன் உமாவும் பின்னிருக்கையில். முன்னே இருக்கும் கண்ணாடி வழியாக உமா தன் தந்தையை பார்த்துக்கொண்டுதான் வந்து கொண்டிருந்தாள். அவளது கண்களில் தொக்கி நிற்கும் கேள்விகளுக்கு சிவனிடம் பதில் இல்லை. தலையைத் தொங்கப் போட்டவாறு தான் அவர் பயணம். உமாவின் பார்வையோ உணர்வுகளை தொலைத்து வெறுமையாய் அவரைப் பார்த்துக் கொண்டு வந்தது. குருவின் கண்களில் தெரியும் அலட்சியம் அவள் மனதை சுட்டாலும் சிவனுக்கு இது கண்டிப்பாய் தேவை என்று அவள் மனம் வாதிட்டது. வாய்விட்டு பாசத்துடன் அப்பா என்று அழைக்க அவளுக்கு நா வரவில்லை.

மருத்துவமனைகளில் மருத்துவர் பல்வேறு சோதனைகள் செய்தனர் முடிவு, நேர்மறை தான். உமா நாற்பது நாள் கர்ப்பம் என்று உறுதிப்படுத்தினார் பெண் மருத்துவர் . குருபரனுக்கு தான் ஜெயித்து விட்ட மகிழ்ச்சி. ஊர் முழுவதும் மைக் வைத்து ஒலி பெருக்கி வழியாக 'நான் ஆம்பள தாண்டா, என் பொண்டாட்டிய கர்ப்பமாகிட்டேன் டா 'என கத்தும் வெறி.
முதலில் கொஞ்ச நாட்களுக்கு இரண்டு பேருக்குள் இரவு பேச்சு எதுவும் கூடாது என்று மருத்துவர் சொல்லி விட்டதால் குரு அமைதியாகி விட்டான். ஆனால் மாதங்கள் செல்லச் செல்ல அவளது வயிறு பெரிதாகி கொண்டிருப்பதை பார்த்து அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவள் சொன்னது போல அவளது வடிவழகு எங்கே காணாமல் போனது என்று அவனுக்கு மிகவும் வருத்தம் ஆகிவிட்டது.
சிவன் சொன்ன விஷயத்தைக் கேட்டு இருந்த அவர் மனைவிக்கும் தனது மகளைப் பார்க்கும் ஆவல் மிக தொலைபேசியில் பேசும்போது,' நீங்க யாரும் தயவு செய்து வரவேண்டாம் என்று தீர்மானமாக கூறிவிட்டாள் உமா.' மீண்டும் சென்னையில் சிவனிடம் கொட்டி தீர்த்தாள் பாறு.சிவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. மகளுக்கு தன் மீதான கோபம் என்று தெரியும். ரத்னாவை திருமணம் செய்து அனுப்பு ஆகிவிட்டது. இத்தனை வருடங்கள் கழித்தும் இந்த பெண் பெற்றவர்கள் உறவு வேண்டாம் என்று நிதானமாக இருப்பது ஏன் என்று தான் அவருக்குப் பிடிபடவில்லை. காலமெல்லாம் புண்களையும் ஆற்றும் என்று அவர் நம்பியிருந்தார் சிவம். நிதர்சனத்தில் உமாவுக்கு மனதில் ஏற்பட்டிருக்கும் காயம் ஆறாது போலிருக்கிறதே என்று அவருக்கு மனக் கிலேசம். ரத்னாவும் அம்மா தங்கையுடன் பேசுகிறாளே தவிர தன்னுடன் பேசுவது இல்லை. உமாவின் திருமணத்தின் மூலம் இரு பெண்களை இழந்து விட்டோம் என்ற குற்ற உணர்வு அவருக்குள் வந்து பல காலம் ஆகிவிட்டது. ஆனால் இந்த வித உணர்ச்சிகள் தாமதமாக வந்து பிரயோஜனம்?

தனது மனைவியின் தாய்மையின் அழகையும் தாய்மையின் பூரிப்பையும் ரசிப்பவன் ஆக குருபரன் இல்லை. மாறாக குழந்தை எப்போது பிறக்கும், தன் மனைவி எப்போது மீண்டும் தனக்கு கிடைப்பாள் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டான். அவனை சொல்லி குற்றமில்லை அவன் பிறப்பு அப்படிதான்!

இன்னொரு புறம் அருணாசலத்திற்கு ஒன்னரை மாதங்கள் கழித்து தேர்தல் முடிவுகள் வர, அவருக்கு சராசரி ஓட்டுகள் கிடைத்தது. முதலமைச்சராக முடியாவிட்டாலும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை கிடைத்துவிட்டது. ஏறக்குறைய எழுபது தொகுதிகளில் அருணாச்சலம் அவர் கட்சியினரும் என்று எதிர்க்கட்சி அந்தஸ்தில் அமர, அவர் முன்பு அமைச்சராக இருந்த கட்சி ஆளும் கட்சியாக .

அருணாசலத்திற்கு இந்த அளவுக்கு மக்களிடம் தனக்கு ஆதரவு இருக்கும் என்பதே பெரிய பலமாக தோன்றியது.அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று இப்போதிலிருந்தே திட்டம் தீட்டத் தொடங்கினார்.தன் மருமகள் கர்ப்பமாக இருப்பது கூட நல்ல சகுனமாக அவருக்கு தோன்றியது .
மருமகளுக்கு தேர்தல் முடிந்ததும் வைர அட்டிகையை பரிசாக அளித்தார். குடும்ப வாரிசு சுமப்பவள் மட்டுமல்ல அவள். குருபரனை நம்பி தான் உருவாக்கி வளர்க்கும் கட்சியை நிச்சயம் கொடுக்க முடியாது. எனவே உமாவின் வயிற்றில் பிறக்கும் வாரிசுதான் கட்சிக்கும் வாரிசு என்று முடிவு செய்துகொண்டார் மனதிற்குள்.
ஒருவேளை அவர் போடும் கணக்கீடுகளை பார்த்து தெய்வம் சிரித்திருக்கலாம்.

திருச்சூரில் ரத்னாவுக்கு வேலைக்கு செல்வதும் நேரம் கிடைக்கும் பொழுது களில் சங்கரனின் தொழில் கணக்குகளை பார்ப்பதுமாக நேரம் பறந்தது. யார் என்ன சொன்னாலும், கருத்தரிப்பதும் விதை நெல் விளைவதும் ஈசன் கையில். அவள் மனதில் எந்த பதட்டமும் தயக்கமும் இல்லை. சங்கரன் தன் தங்கைக்கும் திருமணம் செய்து அனுப்பி ஆயிற்று. திருமணத்திற்கு சிவன் தன் மனைவியுடன் வந்திருந்தார். சாந்தா வரவில்லை. ரத்னாவும் சரி சங்கரனும் சரி தனது பாறுவிடம் பேசி அளவிற்கு சிவனிடம் பேசவில்லை. உள்ளூர சிவனுக்கு ஏக்கம் தலைதூக்கியது. திலகாவும், திலகா வின் கணவரும் ஒப்புக்குத்தான் அவர்களை அழைத்திருந்தார்கள். இருவரும் இதுதான் சாக்கென்று மகளை பார்க்க கிளம்பி வருவார்கள் என்று அவர்கள் நினைக்கவில்லை. ரத்னாவிடம் ஏதேனும் விசேஷம் உண்டா என்று அவள் அம்மா கேட்டதற்கு நடக்கும் விஷயங்கள் தானே நடந்தே தீரும். அதைப்பற்றி எல்லாம் யோசிக்க என்னால் முடியாது என்று விட்டு நகர்ந்து விட்டாள். அவளது அந்தரங்கத்தை பற்றி யாராகிலும் பேசுவதற்கு அவளால் அனுமதிக்க முடியாது.
இதே ஒற்றுமையுடன் தான் சங்கரனும் அவளும் இத்தனை வருடங்களாக குடும்பம் நடத்தி வருகிறார்கள். ஒருவருக்கு ஒருவர் எங்கும் யாரிடமும் விட்டுக் கொடுத்ததில்லை.

விதி அவர்களையும் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறது. கால ஓட்டம் அவளை எங்கு எடுத்துச் செல்ல போகிறது என்பது யாருக்கும் தெரியாது. விதியை மதியால் வென்றவர் யாரும் இதுவரை பூமியில் பிறக்கவில்லை. ஏனெனில் வெல்வதற்கு விதி கண்ணுக்கு தெரிவதில்லை. எப்பேர்பட்ட மனிதனுக்கும் போராட்டம் போராட்டம் மட்டுமே கடைசிவரை.
*****************************
@@@@@@@@@@@@@@@@
*****************************
சாதுர்யா தனது விடாமுயற்சியால் ரங்கனின் மனதை தன்னிடம் மட்டுமே லயிக்கும்படி செய்துவிட்டாள். ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று தனது மனதில் உள்ளவற்றையும் இப்போது உள்ள நிலையையும் சொல்லி புரிய வைக்கலாம் என்று தான் அவளை கூட்டிக்கொண்டு சென்றான் ரங்கன். அவளிடம் மனதை மறைத்து கண்ணாமூச்சி ஆட முடியாது என்பது அவனுக்குத் தெளிவாக தெரிந்துவிட்டது. அவளை கோபத்துடனும் சாதாரணமாக கூட அவனால் பார்க்க முடியவில்லை கண்களில் காதல் வழிந்தது. அவளைப் பற்றி பேசும் போது முகம் பிரகாசம் அடைவதையும் சிரிப்பு வாய் கொள்ளாமல் வருவதையும் எப்படி அவன் தவிர்க்க முடியும்? சிரித்துக்கொண்டே கோபத்தை காட்டினால் அந்த பெண் எப்படி நம்புவது? காதல் அவனை பொம்மலாட்டத்தில் இருக்கும் பொம்மை ஆகிவிட்டது.

விலகிச் செல்லலாம் என்று பெண்ணை கூட்டிக் கொண்டு சென்றவன் விளங்கா பொருளோடு அவளிடம் மயங்கி நின்றான். அவளது காதல் அவனை பித்தனாக்கியது.

அவள் கையை பிடித்து கூட்டிக் செல்லும்போதே கைகளில் ஐஸ் கட்டியை வைத்தது போன்ற மெல்லிய குளிர். அவளது தளிர் கரங்கள் இவனது உணர்வுமிக்க வெம்மையை கண்டுகொண்டது.
பேச ஆரம்பிப்பதற்கு முன்னாடியே, அவளது பார்வை இவன் பார்வையில் கலக்க முழுதாகச் சரணாகதி ஆகிவிட்டான். பேசுவதற்கு வார்த்தைகள் வரவில்லை. வரும் வார்த்தைகளும் தந்தியடிக்க, காதலையும் சொல்ல முடியாமல், விலகலையும் விளக்க முடியாது திணறினான் ரங்கன். பல வருடங்களாக சிறு பெண்ணாக தெரிந்தவள் இன்று பாரதியின் கண்ணம்மா வாக தெரிவது காதலின்றி வேறென்ன?

அவனைப் பொருத்தவரை இந்த ஜென்மத்தில் அவளைத் தவிர இன்னொருத்தியை மனதாலும் தீண்ட முடியாது.

மாமன் மகளிடம் பேச வந்தவன், மனைவியிடம் பேசுவது போல் பயந்து பயந்து ஆரம்பிக்க, சாதுர்யாவே ' நீங்க என்ன என்னதான் கன்வின்ஸ் பண்ண நினைச்சாலும், என்னால உங்கள பிரிஞ்சு இருக்க முடியாதுத்தான். நீங்க ரெண்டு வருஷம் படிச்ச முடிச்ச வரவரைக்கும் தான் உங்களுக்கு டைம். பிறகு யாரு சம்மதிச்சாலும் சரி இல்லை என்றாலும் சரி நீங்க என் கழுத்துல தாலி கட்டி ஆகணும். இல்லனா இந்த ஜென்மத்துல நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன் இது உங்க மேல சத்தியம் என்றவளை அடுத்து என்ன சொல்வது என்று புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தான் ரங்கன்.
சொல்வது எல்லாம் சொல்லி விட்டு அவனது அதிர்ச்சியை நீக்குவதற்கு அவனது கன்னத்தில் முதல் முத்தத்தை பதித்து விட்டாள் அவள். அவன் இனி எங்கு பேசுவது... உறைநிலையில் உறைந்திருக்கும் அவளது அத்தானை அவள்தான் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டியதாயிற்று.

அதற்குப் பிறகு அவர்களது ஆற்றங்கரை சந்திப்புகள் தொடர,முத்தங்களும் மூச்சு காற்று பரிமாற்றமும் வெகுவாக நடந்தன. பெண்ணவளுக்கு ரங்கனிடம் எந்த தயக்கமும் பயமும் இல்லை. நாணம் அதை மீறும் அத்தான் மீதான காதல். ரங்கனுக்கு அவளது தன்மீதான நம்பிக்கையே யானை பலம். காதல் எல்லை மீறிய போதும் காமம் எல்லை கடக்காமல் அவன் பார்த்துக் கொள்ள, பெண்ணுக்கு ஆணின் மீது நம்பிக்கை வைக்க வேறென்ன வேண்டும்? அவனது தூய காதலில் தன்னை முழுமையாக இழந்தாள் சாதுர்யா. அவன் வைத்த முத்தங்கள் ஒவ்வொன்றையும் பொக்கிஷமாய் தனது மனதிற்குள் பூட்டி வைத்துக் கொண்டு ரசித்தாள்.
அவனுக்கு அத்தை மகள் வெறும் பொக்கிஷம் அல்ல... அவன் வாழ்க்கை. அவன் நீண்ட நாள் காதல்... தான் மரித்தாலும் மீண்டெழ வைக்கும் சஞ்சீவனி அவனது சாதுர்யா.

திடீரென ஒருநாள் உறையூருக்கு போகலாம் என்று கூட்டிக் கொண்டு சென்றவள் கமலவல்லி நாச்சியார் சன்னதியில் கொடுத்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொள்ளாமல் வெளிப்பிரகாரம் வரும்வரை காத்திருந்து, அவளும் ரங்கனும் உட்கார்ந்திருக்கும்போது அவனிடம் தன் கைகளை நீட்டி குங்குமத்தை வகிட்டில் வைத்து விடுமாறு கண்கள் கலங்க கேட்க, அவளை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் வகுட்டில் இப்போது வேண்டாம் 'சாதுர்யா... உச்சி குங்குமம் ஊரறிய வச்சு விடுவேன்'. இப்போ என்று அவள் நெற்றியில் மட்டும் குங்குமத்தை வைத்து விட்டான். எப்படியும் குங்குமம் நெற்றியில் அத்தான் வைத்து விடுவது கூட திருமணத்திற்கு சமம்தான் என்று மனதை தேற்றிக் கொண்டாள். அவளது கண்கள் கலங்கியிருந்தது.
ஆனால் அன்று வரை தன் மனைவியாக மனதளவில் நினைத்துக்கொண்டிருந்த ரங்கனுக்கு இந்த நிகழ்வு அவளிடம் மனைவிக்கான உரிமையை கொடுத்தது. அவளது இரு கண்களும் கலங்கி இருந்தது. முகத்திலும் குழப்பம். லேசாக கண்களிலிருந்து கண்ணீர் கூட வந்தது . அவளுக்குத் தன் உணர்வுகளை மனதில் இருப்பதை வார்த்தைகளால் வடித்து சொல்ல முடியவில்லை.

ஒரு வழியாக ரங்கன் வெளிநாடு செல்லும் நாளும் வர, தன்னிடமிருந்து உயிரை உருவி விடுவது போல இருவருமே உணர்ந்தார்கள். இது தற்காலிக பிரிவு தான் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாலும் ஒருவருடன் ஒருவர் இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம். பெண்ணிருக்கு படிப்பு முடிய இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறது. அதுவரை அவளை சம்சார சாகரத்தில் தள்ளிப் போடக் கூடாது என்பதில் மட்டும் ரங்கன் தீவிரமாக இருந்தான். அத்துடன் அவளது கொள்கையும், ஐஏஎஸ் அதிகாரி ஆகும் அவள் கனவும் கூட அவனுக்கு தெரியும். ஒரு கணவனாக மனைவியின் முன்னேற்றத்தின் பின்னாடி நிற்பது அவனது கடமை என்றும் நினைத்தான். அதனாலேயே கிளம்பி போனான். சில சமயங்களில் எடுக்கும் முடிவுகள் தவறாகிப் போகக்கூடும்.

சாதுர்யா அவன் கிளம்பிய பிறகு இன்னும் கலங்கிப் போனாள். ஏனோ ரங்கன் தன்னை விட்டு போய்விடுவானோ, தானும் தனது அத்தானும் பிரிந்து விடுவோமோ என்ற அவளது பயத்தின் விளைவுதான் உரையூர் நிகழ்வு.
ஆனால் சில சமயங்களில் நாம் என்னதான் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டாலும் அதற்கும் மீறி நடக்கும் நிகழ்வுகளை யாராலும் மாற்ற முடியாது. அவளது அந்த கலக்கம் அவளது உள்ளுணர்வு தான். அனேகமாக உள்ளுணர்வு பொய்ப்பது கிடையாது.
எனக்கும்கூட ரங்கன் அல்லது இருக்க வேண்டுமா என்று தோன்றுகிறது.
நடக்கப்போவது நடந்தே தீரும்.







 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top