JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Chathurangam 24

Subageetha

Well-known member
இதோ அதோ என்று நாட்கள் ஓட, உமாவிற்கு பேறுகாலம் இன்னும்
பதினைந்து நாட்களில் வந்து நின்றது. மருத்துவ தலை பிரசவம் என்பதால் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் ஒரு வாரம் முன்னதாகவே மருத்துவமனைகளில் வந்து சேருமாறு சொல்லிவிட, குருவுக்கு சொல்ல முடியாத அளவிற்கு மகிழ்ச்சி. குழந்தை வெளி உலகத்திற்கு வரப்போகிறது என்றல்ல. இனியாவது மனைவி எந்தத் தொல்லையும் இல்லாமல் தனக்கு கிடைப்பாள் என்பது தான் அவனுக்கு. குழந்தை பிறந்த பிறகு அதற்கு பாலூட்டுவது பற்றியெல்லாம் அவனுக்கு எந்த யோசனையும் கவலையும் இல்லை. நடுவில் இரண்டு மூன்று முறை மனைவிடம் நெருங்க முயன்று பார்த்தும் கூட அவளால் முடியவில்லை. 'வலிக்குதுங்க 'என்று அவள் தன்னை மறந்து, கணவனின் குணம் மறந்து சொல்லும் பொழுது அவனது உணர்வுகள்
வடிந்து தான் போகும். தனக்கு தேவை என்றால் மற்ற பெண்களிடம் போபவன் தான். ஆனால் சமீபகாலமாக அருணாச்சலத்தின், எதிர்க்கட்சியில் அமர்ந்து இருக்கும் நிலை அருணாச்சலத்தின் மகனை சும்மா இருக்க செய்தது. கொஞ்ச காலத்திற்குத் 'தான்' எந்த பிரச்சனையிலும் மாட்டினால் தன் தந்தைக்கு சட்டசபையில் பிரச்சனை வருமோ, என்ற யோசனையில் அவன் அமைதியாக இருந்தான். அப்பா மீதான பிரியத்தை விட அப்பாவின் பதவி மீதான பிரியமும் கட்சி தனக்குப் பிற்காலத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்ப்பும் அவன் கைகளை கட்டிப் போட்டது. முதலமைச்சராக ஆவது பற்றி அவன் கனவு காணத் தொடங்கிவிட்டான்.
இப்பொழுதெல்லாம் கஞ்சா தோட்டத்திற்கு செல்லும் போது தனது தோழமைகளை கூட கூப்பிட்டு கொள்வதில்லை. வெளியே தெரிந்தால் பிரச்சனை தீவிரம் என்பதாலேயே அவன் தன் போக்கை சிறிது காலத்திற்கு மாற்றி இருக்கிறான். தன் அப்பா முதலமைச்சராக முடியவில்லை என்றாலும் கூட தனக்காவது அந்த பதவி வேண்டும் என்ற எண்ணம் உள்ளே வேரூன்றிவிட்டது. தன் தந்தை தனது மனதில் பேரன் தான் இந்தக் கட்சிக்கான அரசியல் வாரிசு என்று முடிவெடுத்து இருப்பது தெரிந்தால் ஒருவேளை அவன் குழந்தையின் கழுத்தை நெரித்து கூட கொன்று விடக் கூடும். அந்த அளவிற்கு அவனது மனதில் பாசம் அன்பு போன்ற உணர்வுகள் எல்லாம் காணாமல் போய் பல வருடங்கள் ஆகிவிட்டது. ஒருவேளை அவன் அருணாச்சலத்தை கூட இல்லாமல் செய்யக்கூடும். அருணாச்சலம் கட்சி தொடங்கும் பொழுதே, குருவுக்கு நிழல் உலகத் தொடர்புகள் அதிகமாகிவிட்டது. கஞ்சா கடத்தல் மட்டுமல்ல, இன்னும் பல பல வேலைகளை அருணாசலத்தின் அரசியல் பலம் கொண்டு அவருக்கே தெரியாமல் குரு செய்து வருகிறான். இவனால் வாழ்க்கையை தொலைத்த பெண்கள் ஏராளம். வெளிவராத வரை குருவும் நல்லவன்தான்!

குழந்தைப் பேறு கால சமயத்தில் தான் வருவதாக உமாவின் அம்மா எவ்வளவோ கெஞ்சியும் கூட உமா நிச்சயமாக மறுத்துவிட்டாள். அவள் அடி மனதில் பயம்! பயம்! கணவனை பற்றி முழுமையாக தெரிய விட்டாலும் அவள் பெண்கள் விஷயத்தில் திருந்தவில்லை என்பது அவளுக்கு கண்டிப்பாக தெரியும். ஆனால் அவளது அந்த மறுப்பை புரிந்துகொள்ளும் நிலையில் அவளது அம்மா இல்லை என்பது அவளது துர்ப்பாக்கியமே!
பிரசவத்திற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் சமயத்தில், உமா தனது மாமனாரை பார்க்க விரும்பினாள். சாந்தா இப்பொழுது பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டாள். அதனால் இதற்கு மேல் அவளை இங்கு தமிழ்நாட்டில் இருக்க விட உமாவுக்கு மனதில்லை. எப்படியோ ரத்னாவை ஒரு வழியாக திருமணம் செய்து அனுப்பி ஆயிற்று. அடுத்தது சாந்தா. ஆனால் இங்கு சிறு பெண்ணுக்கும் திருமணம் ஒரு வழியாக அமையும் என்று உமா இப்போது நம்பவில்லை.
அப்போது இருந்த மன கலக்கத்தில் அப்படி ஒரு முடிவு எடுத்து இருந்தாள். ஆனால் இந்த நான்கரை வருடங்களில் உமாவுக்கும் நிதானமும் பக்குவமும் வந்துவிட்டது.

தன் மனைவியுடன் மருமகளை காணவந்த அருணாசலத்திடம் உமா, தன் தங்கையை சாந்தாவை யாரும் அறிவதற்கு முன்னதாக ஏதேனும் ஒரு வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டும் என்று பிடிவாதமாக கூற, தன் மகனைப் பற்றி எந்த புகாரும் சொல்லாமலேயே மருமகள் எடுக்கும் இந்த முடிவு அருணாசலத்திற்கு ஒருவிதத்தில் மகிழ்ச்சி தான். குருவை பற்றி அன்னபூரணிக்கு தெரிந்ததை விட அருணாசலத்திற்கு அதிகம் தெரியும். அதையும் விட அதிகம் தெரிந்தவள் உமா. ஆனால் இவர்களையெல்லாம் ஏமாற்றும் அளவிற்கு மோசமானவன் குரு. அவன் எவற்றையெல்லாம் செய்வான் என்பது ஓரளவுக்கு மட்டுமே இவர்களுக்கு தெரியும். ஆனால் எந்த எல்லை வரை செல்வான் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.

உமாவிடம், குழந்தை பிறந்து ஓரிரு மாதங்களுக்குள் சாந்தாவை வெளிநாடு அனுப்பி படிக்க வைப்பதாகவும் அவரது பாதுகாப்புக்கு அருணாச்சலம் பொறுப்பு என்றும் சத்தியம் செய்த பிறகுதான் உமா நிம்மதியாக குழந்தை பிறப்புக்கு தன்னைத் தயார் செய்து கொண்டாள். அருணாசலத்திற்கு உள்ளூர வருத்தம்தான். தன் மகனைப் பற்றி தெரிந்தும் இப்படி ஒரு திருமணத்தை செய்வதற்கு தான் ஒப்புக் கொண்டிருக்க கூடாது. மேலும் இப்பொழுது உமாவின் குடும்பத்தில் உள்ள எல்லா பெண்களையும் தூக்கி சுமக்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்டு விட்டார் அருணாச்சலம். அவரது நியாய புத்தி அவருக்கு நல்லதை எடுத்துச் சொன்னாலும் இத்தனை வருட அரசியல் வாழ்க்கை அவருக்கு மற்ற கெட்ட குணங்களையும் ஏற்றி வைத்திருந்தது. மருமகளின் இந்தநிலையில் அவளை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஒப்புக்கொண்டார். மேலும் அவர் கொடுத்த சத்தியத்தை மீறுவதற்கு அன்னபூரணி என்றுமே ஒப்புக் கொள்ள மாட்டாள். அதனால் குழந்தை பிறந்த பிறகு மாறுவது என்பது முடியாது. எத்தனை உயரத்திற்கு தன் கணவர் வந்துவிட்ட பிறகும் அன்னபூரணி மாறவே இல்லை.

உமாவுக்கு ஆண் குழந்தை பிறக்க, அருணாசலத்திற்கு இந்த குழந்தையையாவது சரியாக வளர்க்க வேண்டும். தன் மகனிடம் நிகழ்ந்த தவறுகள் இந்த குழந்தையிடம் கூடாது என்று நினைத்துக் கொண்டார்.

குழந்தை பிறந்த இரண்டொரு நாட்களில் வீடு வந்து சேர்ந்த உமாவிடம் கூட துடித்தான் குரு. ஆனால் அன்னபூரணியின் கண்காணிப்பின் கீழ் இருந்த உமாவை குருவால் நெருங்க கூட முடியவில்லை. இரண்டு மாதங்கள் கடுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் அன்னபூரணி.குழந்தையை கொஞ்ச அவனுக்கு அவ்வளவு பிரியம் இல்லை.தன் மகனைப் பற்றி தெரிந்ததனாலேயே அதிக எச்சரிக்கையுடன் நடந்து கொண்டார் அன்னம் . அருணாச்சலம் பழையபடி சென்னைக்கும் பூங்குவளைக்குமாக சென்று வந்துகொண்டிருந்தார். சிவனும் எப்போதும் போல் அவருடனே.இதற்கு நடுவே சொன்னபடியே சாந்தா விற்கு கனடாவில் படிப்பதற்கு அருணாச்சலம் ஏற்பாடு செய்து விட, இத்தனை சிறு பெண்ணை தனியாக அனுப்ப வேண்டாம் என்று பாறுவுக்கும் அங்கே செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
ஆனால் எந்த வித காரணத்தைக் கொண்டும் சிவனை அங்கு அனுப்புவதற்கு அவருக்கு மனதில்லை. அரசியல் வாழ்வில் சிவன் கிட்டத்தட்ட அருணாச்சலத்தின் பாதி ஆகிவிட்டார்.

'மகளின் வாழ்வுதான் முக்கியம். அவளுக்கு இவ்வளவு நல்ல படிப்பும் எதிர்காலமும் அமைய இருக்கும் போது அதை தடுக்க கூடாது என்பதற்காக சிவனும் இதற்கெல்லாம் ஒப்புக்கொண்டு விட்டார். கணவரை சொல்லை மீறி பழக்கப்படாத அவர் மனைவி தனது மகளுடன் கனடாவிற்கு பயணம் செய்ய சிவனுக்கு முதன் முதலில் தனிமை என்றால் என்ன என்பது புரிந்தது.
தனிமை தாங்க முடியாமல் கட்சி வேலைகளில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு விட்டார் அவர்.
திருச்சியில் இருக்கும் ராகாயியை இப்பொழுது சென்னைக்கு கூட்டி வந்து, அவளுக்கு தொழிலை இன்னும் கொஞ்சம் விரிவு செய்து கொடுத்து,
அவளது மகளையும் நல்ல பள்ளியில் சேர்த்து விட்டார் சிவன். ஒருவேளை அந்தப் பெண் குழந்தை குருவின் குழந்தையாக இருக்குமோ என்பது அவருக்கு சந்தேகம். ஆனால் அதையெல்லாம் வாய்விட்டு சொல்ல கூடிய தைரியம் அவருக்கு இல்லை.

ராகாயியும் சென்னை வந்த பிறகு கட்சி பணியில் அதிகம் ஈடுபட்டாள். கட்சி சம்மந்தமான விஷயங்களுக்கு உணவு விநியோகம் செய்யும் காண்ட்ராக்ட் அவளது. சிவனின் ஏற்பாடு. அவளுக்கும் நேர்மையாக பிழைக்க வழி கிடைத்த சந்தோஷம். வீரனும் அவளும் அடிக்கடி பார்த்துக்கொள்கிறார்கள். வீரனுக்கு அவள் வாழ்க்கை சீரடைந்த திருப்தி.

பூங்குவலையில் இரண்டு மாதங்கள் எப்படியோ தாக்குபிடித்த குருவால் அதற்குமேல் முடியாது என்று தோன்றிவிட்டது. அன்னபூரணி கோயிலுக்கு சென்றிருக்கும் நேரத்தில் தன் மனைவியை வற்புறுத்த தொடங்கினான். ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாமல் உமாவும் ஒப்புக்கொண்டாள்.

ஆனால் தாய்ப்பால் கொடுக்கும் அவளிடம் வீசும் பால் வாசனையும், இன்னும் முழுமையாக வடிந்து விடாத அவளது அவளது வயிறும், அதிலிருந்த கோடுகளும், அவனுக்கு சந்தோஷத்தை தரவில்லை. அவளைப் பார்க்கும் போது ஒருவித அருவருப்பு அவனுக்கு வந்தது.
அப்படியும் பொறுத்துக்கொண்டு மேலே முயன்றவனுக்கோ குழந்தை பிறப்பதற்கு முன் அவளிடம் கிடைக்கும் சுகம் இதுவல்ல என்று தோன்ற, உன் *****முன்னே மாதிரி இல்லடி என்றுவிட்டு அதற்கு மேல் அவளுடன் கூட விருப்பமில்லாமல், எழுந்து சென்று விட்டான். ஆனால் அவன் அடி வரை அந்த அருவருப்பும் ஏமாற்றமும் தங்கிவிட இதற்கு மேல் இவள் வேலைக்கு ஆக மாட்டாள் என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.
'இப்ப குழந்தை எதுக்கு டார்லிங் என்று உமா கேட்ட வாசகம் திரும்பத் திரும்ப அவன் காதுகளில் எதிரொலித்தது.'

சற்று நேரம் புகை பிடித்தவன் ஏதோ யோசித்தவனாக தோப்பு வீட்டுக்கு சென்றுவிட்டான்.
உமாவுக்கு அவன் மனதை முழுமையாக புரிந்து விட்டதில் ஓய்ந்து போனாள். இதற்காகத்தான் யோசித்து அவள் இத்தனை காலமாக குழந்தை வேண்டாம் என்று இருந்தது. அவளுக்கு தெளிவாக தெரிந்தது இனி தன் எதிர்காலம் முழுமையும் இந்த குழந்தையுடன் மட்டும்தான் என்று. அவளை விட்டுச் சென்ற குரு இனி அவளை நாடி வரப்போவதில்லை. அவனுக்கு தேவை கட்டுடல் விட்டிராத புது மலர்கள்.

உமாவின் கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. இதை உணர்ந்து கொண்டதோ என்னமோ உமாவின் குழந்தை ஸ்கந்தன் வீறிட்டு அழத் தொடங்கிவிட்டான். குழந்தை அழுவதை கவனித்த உமா இனி இந்த வாழ்க்கை இப்படித்தான் செல்ல போகிறது என்பதில் அழுது என்ன பயன்? எப்போதுமே நான் அழ மாட்டேன் என்று தீர்மானித்துக் கொண்டாள்.

ஆம், அருணாச்சலம் எதிர்பார்த்த அரசியல் வாரிசு 'ஸ்கந்தன்'தான். ஆனால்...

**********************************************************

சாதுர்யா ரங்கன் வெளிநாடு சென்றதிலிருந்து கூட்டு பறவையாகி போனாள். அவளுக்கும் இந்த உலகத்தில் எதுவுமே ரசிக்கவில்லை. பசலை நோய் கொண்டாள். நிஜமாகவே உடல் இளைத்து அவளது வளையல்கள் கழன்று வர ஆரம்பித்துவிட்டது. கண்களில் எப்போதும் ஒரு சோகம். முன்பெல்லாம் நிறைய சிரித்துக் கொண்டிருந்த பேத்தி இப்போதெல்லாம் சிரிப்பதை நிறுத்தி விட்டாள். சரியாக சாப்பாட்டில் கவனம் இல்லை. பரீட்சை நேரத்தில் கூட புத்தகங் களை எடுப்பதில்லை. பெண்ணுக்கோ புத்தகங்களை தொட்டாலே ரங்கன் தனக்கு பாடங்கள் சொல்லிக் கொடுத்தது ஞாபகம் வந்து படுத்தியது. அவனது முத்தத்திற்காக அவள் மனம் ஏங்கியது. அவளது மனம் புரிந்தவனாக ரங்கனும் தினமும் வீடியோ காலில் அழைத்து பேசி விடுகிறான். ஆனாலும் பெண்ணும் மனதில் வைக்காமல் அப்படியே குழப்பிக் கொண்டு இருக்கிறாள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த லட்சுமி அம்மாளுக்கும் தாமோதரனுக்கும் பேத்தியை எப்படி தேற்றுவது என்பதே தெரியவில்லை. இன்னும் இவர்கள் இருவரும் நெற்றியில் குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்டதை பற்றி பாட்டி தாத்தாவிற்கு தெரியாது.

ரங்கனும் சாதுர்யாவும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்பது வரைதான் அவர்களுக்கு தெரியும். இதைப்பற்றி ரேணுகாவிடமும் அவள் கணவரிடமும் தாமு மேம்போக்காக சொல்லிவிட அவர்கள் இருவருக்கும் ரங்கன் -சாதுர்யா திருமணம் பற்றி எந்த ஆட்சேபனையும் இல்லை. ரங்கன் படிப்பு முடியட்டும். இந்த பெண்ணும் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு முடித்தாக வேண்டும். அதற்கெல்லாம் காலம் இருப்பதால் இப்பொழுது இதைப் பற்றி மனதை குழப்பிக் கொள்ள வேண்டாம் வெங்கடேசனிடமும் பேச வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தார்கள்.
ஆனால் லட்சுமி அம்மாளுக்கும் ஜோசியர் சொன்ன விஷயங்கள் உள்ளூர ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. இதைப்பற்றி இன்னும் அவர் கணவரிடம் சொல்லவில்லை. சொன்னால் வீணாக அவருக்கும் தனது மன வருத்தம் தொற்றிக்கொள்ளும் என்ற பயம் தான்.

ஆனால் ரங்கன் தான் தனது பேத்தியின் கணவனாக போகிறான் என்பது பற்றி பேச்சு வந்தபிறகு ஓரளவுக்கு லக்ஷ்மி அம்மாளுக்கு மன ஆறுதல்.

படிக்க அமெரிக்கா சென்றிருக்கும் ரங்கனுக்கு, தனக்கு திருமணம் ஆகிவிட்டது.இனி மனைவி தன் பொறுப்பு. அவளை சந்தோஷமாக வைத்துக்கொள்ள தான் அதிகம் மெனக்கெட்டாக வேணும் என்ற எண்ணத்தில் அதிகமாக உழைத்தான். பகல் நேரங்களில் படித்துக்கொண்டு மாலை நேரத்தில் ஏதோ ஒரு இடத்தில் வேலை செய்து தன் மனைவிக்கு அந்த பணத்தை அனுப்பி வைத்தான். மனையாளின் செலவுகள் அவனுடையது என்று அவன் யோசனை.மனைவி என்றுதான் அவன் நம்புகிறான். அவளுக்கு செய்வதற்கு தனக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது என்பது அவன் எண்ணம். இவையெல்லாம் இவர்கள் இருவரும் மட்டுமே அறிந்த ரகசியம். ரங்கனின் இந்த சைகை வேறு பெண்ணின் மனதில் ஆழமாய் புதைந்தது.
அவளைப் பிரிந்து வந்து விட்டோம் என்ற எண்ணம் ரங்கனுக்கு இல்லை. அவளை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது மட்டும் தான் அவனுக்கு.

கணவனுக்குமாக சேர்த்து வருத்தப்பட்டது மனைவியின் மனம்.

இதுபற்றியெல்லாம் வெங்கடேசன் - மாலதி இருவருக்கும் எதுவுமே தெரியாது. தெரிந்தால் என்னவாகுமோ?

_----_-------------------------------------------
உமா குழந்தை பெற்று இதோ இரண்டு வருஷங்கள் நிமிடமாய் ஓடி விட்டது.
திடீரென
ரத்னா தன் அக்காவின் மகவை பார்க்க தமிழ்நாடு செல்வேன் என அடம்பிடிக்க, சங்கரன் மறுத்துவிட்டான். அவளுக்கும் புரிகிறது. ஆனால், பிறந்த வீட்டு தொடர்பே இன்றி வேறு ஊரில் கணவனின் துணை மட்டும் கொண்டு, அவளுக்கு கண்ணீர் வந்தது.
எல்லாவற்றிற்கும் விட்டு கொடுக்கும் கணவனின் கடுமை அவளை வாட்டியது.

நாளும் தள்ளிப்போக இன்னும் ஆகவில்லையே எனும் எரிச்சல் வேறு. ஏற்கனவே அவளுக்கு மாதா மாதம் ஆகாது. இரண்டு மாதம் இல்லை நாற்பத்தைந்து நாட்கள் என படுத்தும். அதனாலேயே அவளால் சரியாக யோசிக்க முடியவில்லை.

முன்பு போல அம்மாவுடனும் தங்கச்சியுடனும் பேசவும் முடிவதில்லை. கனடா போன பிறகு நேர வித்தியாசம். தவித்து போனாள் ரத்னா.
இப்போதெல்லாம் சங்கரனுடன் சண்டை பிடிக்கிறாள்.
தனியாய் உணர்ந்தாள் அவள். நிகழ போவது தெரிந்தால் அவள் நிலை?
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top