JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Facts about flowers! மலர்களை பற்றி விளக்கம்...

JLine

Moderator
Staff member
மலரினும் மெல்லியவளின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் பதிவிடும் பொழுது ஒவ்வொரு விதமான மலர்களை பற்றியும் எழுதியிருந்தேன்.. கதை முடிந்தவுடன் அதன் இணைப்புகளை துண்டித்துவிட்டதால் பலர் எனக்கு தனிப்பட்ட முறையில் அந்த மலர்களை பற்றிய விளக்கங்களை கேட்டிருந்தீர்கள்.. அதற்காகவே உருவாக்கப்பட்ட திரி தான் இது..
 

JLine

Moderator
Staff member
11

Damask Roses – Old Garden Roses (oldest members of the rose family)

Damask roses (Rosa damascena) are the original old fashioned rose, used for attar of roses, dating back thousands of years.

Powerful fragrant and beautiful shaped, the Damask Roses are used to make rose water, essential oil and to flavor food, is said to have been brought from the Middle East to Europe by crusaders returning from the Holy Land, sometime between 1254 and 1276.

There are over 10, 000 varieties of roses spread throughout the world and the Damask rose (rosa damascena) is one of the oldest strains of roses no longer found growing wild.

The plants have medium-green leaves and white or pink flowers clusters on heavily thorned stems.

‘I come to you ... from the tales of the Damascene rose, that depicts the history of all fragrance," wrote famed Syrian poet Nizar Qabbani.

But he was not the first, or the last, writer to be captivated by the bloom. It was a favourite of Shakespeare, who referenced the flower in Twelfth Night, as well as in Sonnet 130 ("I have seen roses damask'd, red and white"), and of English poet Thomas Rivers, whose ode The Damask Rose captures the famously dense and fragrant nature of the bloom. “High, high, above your head, and on every side down to the ground, the thicket is hemmed in and choked up by the interlacing boughs that droop with the weight of roses, and load the slow air with their damask breath,” he wrote.

Mrs. M Grieve’s ‘A Modern Herbal’ tells the story: “It was between 1582 and 1612 that the oil or Otto of Roses was discovered, as recorded in two separate histories of the Grand Moguls. At the wedding feast of the princess Nour-Djihan with the Emperor Djihanguyr, son of Akbar, a canal circling the whole gardens was dug and filled with rose water. The heat of the sun separating the water from the essential oil of the rose, was observed by the bridal pair when rowing on the fragrant water. It was skimmed off and found to be an exquisite perfume. The discovery was immediately turned to account and the manufacture of Otto of Roses was commenced in Persia about 1612 and long before the end of the 17th Century the distilleries of Shiraz were working on a large scale.”

It is said that Romans suspending roses above meeting tables to establish their trust and confidentiality.

In addition to being a symbol of love and beauty, the rose is also the symbol of secrecy and unity.

பன்னீர் ரோஜா: ரோஜா இனங்களிலேயே முதன்மையான (பழமையான) மலர்.

அத்தர் எனப்படும் வாசனைத் தைலத்திற்கு மூலதனமான, ரோஜா மலர்களிலேயே புராதனமான பன்னீர் ரோஜா பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே கண்டுப்பிடிக்கப்பட்டது..

சக்தி வாய்ந்த வாசனைக் கொண்ட அழகிய வடிவத்தில் மலரும் இந்த டமாஸ்க் (பன்னீர்) ரோஜாக்கள் பன்னீர் தயாரிப்பதற்கும், சாரம் மற்றும் ரோஜாவின் சுவைக் கொண்ட உணவுகளைத் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.. புனித பூமியில் இருந்து ஐரோப்பா நாட்டிற்கு வந்த சிலுவைப் போர் நிகழ்த்தியவர்களே மத்திய கிழக்கு நாடான சிரியாவில் இருந்து, 1254 வருடத்திற்கும் 1276 ஆம் வருடத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தப் பன்னீர் ரோஜா மலரினத்தைக் கொணர்ந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகின்றது.

உலகம் முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேலான வகைகளைக் கொண்ட ரோஜா இனங்களில் பழமையான இந்த ரோஜா காடுகளில் இப்பொழுது வளர்வதில்லை..

இந்த ரோஜா மலர்கள் நடுத்தரமான பச்சை நிற இலைகள் கொண்ட, வெள்ளை அல்லது வெளிர் சிகப்பு (ரோஸ்) நிறத்தில் கடினமான முற்களைக் கொண்ட தண்டுகளில் கொத்துக்கொத்தாகப் பூக்கும்.

திருமதி கிரிவ் எழுதிய "ஒரு நவீன மூலிகை" என்ற புத்தகத்தில், இரு வேறு முதன்மையான மொகலாய அரசர்களின் வரலாற்றில் இருந்து அறியப்பட்ட தகவலானது, 1582 க்கும் 1612 க்கும் இடைப்பட்ட காலத்தில் தான் இந்தப் பன்னீர் ரோஜாவின் எண்ணெயும், ரோஜா இதழ்களிலிருந்து பெறப்படும் ஆவியாய்ப் போகும் நறுமணத் தைலத்தையும் கண்டுப்பிடித்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றார்..

அக்பரின் புதல்வனான பேரரசர் ஜஹான்க்கிரின் பன்னிரெண்டாவது மனைவியான இளவரசி நூர்ஜஹானின் திருமண விருந்தின் போது, விருந்து நடக்கும் தோட்டத்தைச் சுற்றிலும் கால்வாய் தோண்டப்பட்டு, கால்வாய் முழுவதும் பன்னீர் நிரப்பப்பட்டிருந்தாம்.. சூரியனின் வெட்பம் நறுமணம் வீசும் நீரில் படர்ந்து வாசனை எண்ணெயில் இருந்து நீரைப் பிரித்ததினால் வெளிப்படும் நறுமணத்தை, அக்கால்வாயில் படகில் சென்று கொண்டிருக்கும் மணமக்கள் அனுபவிக்கும்படி இந்த ஏற்பாட்டை அக்பர் செய்திருக்கின்றார்.

இந்தக் கண்டுப்பிடிப்பு உடனடியாக மக்களால் கவனிக்கப்பட்டத்தில், 1612 ல் பாரசீக நாட்டில் ரோஜாவில் இருந்து பெறப்படும் நறுமணத் தைலத்தின் (அத்தர்) உற்பத்தி துவங்கப்பட்டு, பதினேழாம் நூற்றாண்டின் இறுதிக்குள் ஷிராஸ் வடிசாலைகள் பெரிய அளவில் பிரமாண்டமாய்ப் பெருகியிருந்தன..

"டமஸீன் ரோஜா" என்ற கற்பனை கதைகளில், சிரியாவின் புகழ்பெற்ற கவிஞர் நிசார் குபானி "நான் உன்னிடம் வருகின்றேன்.." என்று துவங்கி இந்தப் பன்னீர் ரோஜாவைப் பற்றித் தொகுத்திருக்கின்றார்..

ஆனால் பன்னீர் ரோஜாவின் அழகில் வயப்பட்டவர்களின் முதலும் கடைசியுமான கவிஞர் அவர் அல்ல. ஷேக்ஸ்பியரின் விருப்பத்துக்கு உகந்த "பன்னிரெண்டாம் இரவில்", மற்றும் "சன்னட் 130" என்ற புத்தகங்களிலும், ஆங்கிலக் கவிஞரான தாமஸ் ரிவர்ஸின் துள்ளற் கலிப்பாடல் வகையிலான கவிதையிலும் இந்தப் பன்னீர் ரோஜா மலரின் அடர்த்தியான நறுமணத்தைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

கவிஞர் தாமஸ் ரிவர்ஸின் கவிதை:

"உயர்ந்த, உயர்ந்த, உன் தலைக்கு மேலேயும்,
நிலத்தின் ஒவ்வொரு பக்கங்களிலும்,
புதர்காட்டினைப் போன்று சூழ்ந்திருக்கும்,
இடையிடையே கோர்த்துப் பின்னியிருப்பது போல் மலர்ந்திருக்கும் இந்த மலர்கள்,
தழைத்துக் கீழ் நோக்கி சாய்ந்து,
காற்றில் தங்களின் மூச்சினை (நறுமணத்தை) கலக்கவிடுகின்றன.."

ரோமர்கள் தங்களின் கூட்டங்களின் போது மேஜையின் மீது, நல்லெண்ணத்தையும் நம்பகத்தன்மையையும் வெளிப்படுத்தவற்கு இந்தப் பன்னீர் மலர்களை அடுக்கி வைத்திருந்தனர் என்றும் கூறுகின்றனர்..

காதலுக்கும் அழகுக்கும் சின்னமாகக் கருத்தப்படும் இந்தப் பன்னீர் ரோஜா, ரகசியத்திற்கும், ஒற்றுமைக்கும் அடையாளமாகவும் கருத்தப்படுகின்றது..



Damask Rose: Dedicating to Arjun and Dhivi - JB
 

JLine

Moderator
Staff member
13

Corpse Flower/Titan arum: The most stinkiest flower in the world.

One of the world's largest and rarest flowering structures, the corpse flower is a pungent plant that blooms rarely and only for a short time. While it is in bloom, the flower emits a strong odor similar to rotting meat or, aptly, a decaying corpse.

There is a good reason for the plant's strong odor. The smell, color and even temperature of corpse flowers are meant to attract pollinators and help ensure the continuation of the species.

Dung beetles, flesh flies and other carnivorous insects are the primary pollinators of this type of flower. These insects typically eat dead flesh. The smell and the dark burgundy color of the corpse flower are meant to imitate a dead animal to attract these insects.Once the flower has bloomed and pollination is complete, the flower collapses.

The corpse flower is what is called an inflorescence — a stalk with many flowers, according to the University of California Botanical Garden. A mixture of tiny male and female flowers grow at the base of the spadix, which is surrounded by the spathe, a pleated skirt-like covering that is bright green on the outside and deep maroon inside when opened.

Once the blooming begins, it occurs in two stages on consecutive nights: essentially a "female" stage and a "male" stage. The female flowers form a ring at the bottom of the spadix (inner tube structure), and the male flowers form a ring around the spadix just above the female flowers.

During the first stage, carrion beetles drawn by the stench of death and human-like body temperatures, creep inside the vase-like structure and unknowingly deposit pollen on the receptive female flowers. During the second stage, the structure begins to collapse, the "fragrance" fades and the insects begin to head out. As they leave, the beetles rub up against the pollen in the male flowers and are now ready to carry the pollen to a nearby female flower.

Because the flower stays open and emits its odor for just a few days, it can be quite an exciting event for scientists and botany enthusiasts. These bloomings garner media coverage and large crowds of visitors. A 2014 blooming at the Denver Botanic Gardens was watched from all around the world due to a live feed posted on the garden's website. In August 2016, some 20,000 people lined up to see a blooming corpse flower at the Chicago Botanic Garden.

பிரேதம் பூ: உலகிலேயே மிகவும் துர்நாற்றம் கொண்ட மலர்.

உலகிலேயே மிகவும் பெரிதான மற்றும் அரியவகையான அமைப்பையும் நெடிமனமும் கொண்ட, குறுகிய நேரம் மட்டுமே மலர்ந்திருக்கும் இந்த மலர், பூக்கும் பொழுது அழுகிய மாமிசத்தைப் போன்று, அதாவது பொருத்தமாகக் கூறுவதென்றால், அழுகிப் போன மனித பிரேதத்தில் இருந்து வரும் துர்நாற்றத்தைப் போன்ற நெடிமனத்தை வெளிக்கொணரும்..

அதன் துர்நாற்றத்திற்கும், நிறத்திற்கும் மலரின் வெட்பநிலைக்கும் காரணம், மகரந்த சேர்க்கைக்கு உயிரனங்களைக் கவர்வதற்காகவே என்று அறிவியல் கூறுகின்றது.

மாமிச உண்ணிகளும், விலங்குகளின் எருவில் காணப்படும் பூச்சிகளும், மற்ற சதைகளை உண்ணுகிற உயிரனங்களும், இந்த மலரின் மகரந்த சேர்கைக்குக் காரணமான முதன்மையான உயிரனங்களாகும்.. இதன் துர்நாற்றத்தினாலும் அடர்ந்த பர்கண்டி நிறத்தினாலும் இறந்துப் போன மிருகத்தைப் போன்று காட்சியளித்து உயிரனங்களைக் கவர்கின்றன.. இந்த மலர் பூத்து, மகரந்த சேர்க்கை முடிந்தவுடன், மலர் வதங்கிவிடும்..

கலிஃபோர்னியாவின் தாவிரவியல் பூங்காவினரின் படி, சின்னஞ்சிறு ஆண் மற்றும் பெண் மலர்களைக் கொண்டு பாளையின் அடிப்பாகத்தில் பல பூக்களை ஒன்றாகக் கொண்ட மலரும் மஞ்சரி வகையைச் சார்ந்த இந்தப் பூ, அடர் பச்சையில் அடுக்கடுக்கான மடிப்புகள் கொண்ட பாவாடைப் போல் மடல்களை வெளிப்புறத்திலும், மலரும் பொழுதும் அதன் உட்புறத்தில் அடர்ந்த அரக்கு நிறத்திலும் கொண்டிருக்கும்.

மலர் விரியத் துவங்கும் பொழுது, அதன் மலர்ச்சி இரண்டு நிலைகளில் அடுத்தடுத்த இரவுகளில் நிகழ்கிறது.. அதாவது பெண் மற்றும் ஆண் நிலைகள் எனலாம்..
பாளையின் (உட்புற குழாய் அமைப்பு) அடிப்பகுதில் பெண் மலர்கள் வளையம் போன்ற அமைப்பில் பூக்கின்றன.. அதனை அடுத்து ஆண் மலர்கள் பாளையின் மேல், அதாவது வளையம் போன்று மலர்ந்திருக்கும் பெண் மலர்களின் மேல் மலர்கின்றன..

அடுக்கடுக்காக, அதாவது, முதலில் பெண் மலர்கள் வட்டவடிவமாக, அதன் மேல் ஆண் மலர்கள் மற்றுமொரு வட்டவடிவமாக மலர்கின்றன..

முதல் நிலையில் மாமிச உண்ணிகள் துர்நாற்றத்தினாலும் இறந்த மனிதனின் உடலின் வெட்பநிலையைப் போன்றும் இந்த மலர் ஒத்திருப்பதால், கோப்பையைப் போன்ற இதன் அமைப்பின் உள்ளே அறியாது மகரந்தத்தைப் பெண் மலர்களுக்குச் சேமித்து வைக்கின்றன.. அடுத்த நிலையில் மலரின் அமைப்பு சுருங்கும் பொழுது, அதன் துர்நாற்றம் மறையத் துவங்கும் நேரம், வண்டுகள் வெளியேறத் துவங்குகின்றன.. அப்பொழுது வண்டுகளின் கால்கள் ஆண்மலர்களின் மகரந்தத்தை உரசி வெளியே செல்வதால், அருகே உள்ள மற்றொரு பெண் மலரிடம் இந்த மகரந்தத் துகள்களைக் கொண்டு செல்கின்றன..

இந்த மலர் ஒரு சில நாட்களே விரிந்திருப்பதால், அது உமிழும் துர்நாற்றமும் சில நாட்களே இருப்பதால், விஞ்ஞானிகளும், தாவரவியல் ஆர்வலர்களும் இந்த மலர் மலர்வதைக் காண்பது ஒரு அற்புதமான நிகழ்வாகக் கருதுகின்றனர்..இந்த மலர் மலர்வதைக் காண்பதற்கு ஊடகங்களும் ஏராளாமான பார்வையாளர்களும் வருகின்றனர்.. 2014 ல் டென்வர் தாவரவியல் பூங்காவில் "கார்ப்ஸ் மலர்" மலர்வதை நேரடியாக வலைத்தளத்தில் ஒளிப்பரப்பியதால், உலகம் முழுவதும் உள்ள மக்கள் கண்டுகளித்தனர்.. 2016 ஆகஸ்ட் மாதம், சிக்காகோ தாவரவியல் பூங்காவில் ஒரு மலர் மலர்வதைக் காண்பதற்கு இருபதாயிரம் பேர் அணிவகுத்து நின்றனர்..
 

JLine

Moderator
Staff member
18

Devil's breath:scopolamine flower

Is devil’s breath the “world’s scariest drug”?

The family of flowering plants responsible for devil’s breath has long gone by many equally colorful names: hell’s bells, devil’s trumpets, angel’s trumpets, moonflowers, jimson weed, and so on. Yet the name that best suits the tree is the one used in Colombia: the borrachero tree, which roughly translates as the “drunken binge” tree.

Reaching anywhere from ten to more than 30 feet in height, these trees possess broad green leaves sprinkled with delicate flowers that bloom either upward like trumpets or downward like bells. These flowers come in elegant shades of white, yellow, pink, and purple — and yes, they’re absolutely deadly.

Unlike the plant’s spiny seed pods — the other part of the plant from which devil’s breath is made, and the one whose appearance actually gives some indication of danger.

These flowers cloak their toxic power in a thoroughly unassuming package.

It is one of those drugs with a rich backstory. It is said to be one of the first “truth serums”.

In the early 20th century, it was administered by some doctors as a pain-relief drug.

In childbirth until one obstetrician noticed how women who had been given it answered candidly to questions; he later wondered if it could be used when questioning people charged with crimes. Based on his advise this drug was used in some trials to inquire the criminals.

Across large swathes of the planet, chiefly in North and South America, these flowers flourish with their sinister uses escaping all but the trained eye.

And in Colombia, a few trained eyes have chemically processed these flowers and seeds into an odorless, tasteless white powder that they’ve put to some very sinister uses indeed.

And some say that in pre-colonial Colombia, incoming leaders used scopolamine to lure the wives and mistresses of newly deposed leaders into mass graves where they would then be buried alive.

The ancient Greeks used these flowers as a recreational downer, as well as a medical sedative.

The only good think about this plant is, scopolamine is used in Alzheimer’s research.

சாத்தானின் சுவாசம் "உலகின் பயங்கரமான மருந்து"?

"சாத்தானின் சுவாசம்" என்றழைக்கப்படும் மருந்திற்கு மூலாதரமாக பயன்படுத்தப்படும் இந்த தாவரத்திற்கு பல வண்ணமயமான பெயர்களும் உண்டு.. நரகத்தின் மணிகள், பிசாசுகளின் எக்காளங்கள், தேவதூதர்களின் எக்காளங்கள், நிலா மலர்கள்,
ஜிம்சனின் களை, மற்றும் பல. ஆயினும் இந்த மரத்திற்கு கொலம்பியாவில் பயன்படுத்தப்படும், "அளவுக்கு மீறிய போதை" என்று பொருள்படும் "போரச்செச்சிரோ மரம்" என்பதே பொருத்தமான பெயராக கருதப்படுகின்றது.

பத்தடிகளில் இருந்து முப்பது அடிகள் வரை வளரக் கூடிய இந்த மரங்கள் பரந்த பசுமையான பச்சை இலைகளையும், ஆங்காங்கு எக்கச்சக்கமாக தூவப்பட்டிருக்கும் மணிகள் போன்று கீழ்நோக்கியோ அல்லது எக்காளத்தைப் போல் மேல்நோக்கியோ தோன்றும் பளபளப்பான மெல்லிய பூக்களையும் கொண்டிருக்கும்.. இந்த மலர்கள் வெள்ளை, மஞ்சள், இளஞ்சிவப்பு, மற்றும் ஊதா ஆகிய நிறங்களில் மலரும், ஆயினும் அவை முற்றிலும் கொடி விஷத்தன்மைக் கொண்டன.

இத்தாவரத்தின் ஊசிமுனை விதைக் கூட்டங்களைப் போலல்லாது, சாத்தானின் ஸ்வாசம் என்ற மருந்து தயாரிக்கப்படும் இத்தாவரத்தின் மற்ற பாகங்களும் அதன் தோற்றமும் இத்தாவரத்தின் விஷத்தன்மையை அறிகுறிகளாகக் காட்டுகிறது..

இந்த மலர்கள் யூகிக்க முடியாத அளவிற்கான விஷத்தை மேலாடையாக தன் மேல் பூசியுள்ளன..

வியக்கத்தக்க வகையிலான பின்புலத்தைக் கொண்ட இந்த தாவரமே, "உண்மையை வரவழைக்கும் வடிநீராக" முதன் முதலில் உபயோகப்படுத்தப்பட்டது.

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், "சாத்தானின் ஸ்வாசம்" ஒரு வலி நிவாரண மருந்தாக சில மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்டது.

பெண்களுக்கு பிரசவ நேரத்தில் வலியை மறப்பதற்கு இந்த மருந்து வழங்கப்பட்ட நேரத்தில் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அப்பெண்கள் நேர்மையாக பதிலளித்ததைக் கண்ட மகப்பேறு மருத்துவரே, குற்றம் சாட்டப்பட்ட நபர்களைக் கேள்வி கேட்கும் போது இதைப் பயன்படுத்தினால் அதன் விளைவு என்ன ஆகும் என்ற பெரும் ஆச்சரியத்தில் வீழ்ந்துப் போனார். அவரது ஆலோசனையை அடிப்படையாகக் கொண்டு இந்த மருந்து சில குற்றங்களில் குற்றவாளிகளை விசாரிக்க பயன்படுத்தப்பட்டது.

முழு கிரகத்தின் பரப்பளவில் முக்கியமாக வடக்கு மற்றும் தென் அமெரிக்காவிலேயே கொடிய விஷத்தன்மையுள்ள இந்த பூக்கள் செழித்து வளர்கின்றன... இவை தீய பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்தும் நோக்குள்ள வஞ்சனையான கண்களைத் தவிர மற்றவர்களுக்கு சாதாரண மலர்கள்..

கொலம்பியாவில் கெடுநோக்குடைய சில மனிதர்கள், இந்த மலர்களையும் விதையையும் நிறமற்ற சுவையற்ற வெள்ளை துகள்களைப் போல் பொடி செய்து தங்களின் தீய நோக்கங்களிற்கு பயன்படுத்துகின்றனர்.

கொலம்பியாவில் காலனி ஆட்சிக்கு முன், பதவியில் இருந்து இறக்கப்பட்ட தலைவர்களின் மனைவிகளையும், காமக்கிழத்திகளையும் ஸ்கொபோலமைனைப் பயன்படுத்தி அவர்களை கல்லறைத் திடலுக்கு வரவழைத்து உயிருடன் புதைத்துவிட்டதாக சிலர் கூறுகின்றனர்..

பண்டைய கிரேக்கர்கள் இந்த மலர்களை ஒரு பொழுதுபோக்கு போதை மருந்தாகவும், அதே சமயம் மருத்துவத்தில் மயக்க மருந்தாகவும் பயன்படுத்தியுள்ளனர்.

இத்தாவரத்தில் உள்ள ஒரே ஒரு நற்குணம், இந்த மருந்து 'அல்சைமர்' என்று அழைக்கட்டும் முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு நோய்க்கான மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படுகின்றது.
 

JLine

Moderator
Staff member
21

Poison-hemlock:Conium maculatum flowers: Britain's Most Common "Witchy" Plant.

Native to Europe, western Asia, and North America, poison hemlock (Conium maculatum) is now naturalized in almost every state in the United States. It was introduced in the 1800's as a garden plant, marketed as being a “winter fern”. It is very toxic and sheep, cattle, swine, horses, and other domestic animals are poisoned by eating small amounts of green or dried plant.

It is also extremely poisonous to humans.

Poison-hemlock is sometimes confused with western water hemlock, a more deadly species, because the names are similar. Poison-hemlock is commonly called deadly hemlock, poison parsley, spotted hemlock, European hemlock, and California or Nebraska fern.

Poison hemlock is a highly toxic biennial with the musty, unpleasant odor associated with alkaloids. It grows two to ten feet tall.

Poison-hemlock has flowers that grow in small erect clusters. The small, white or yellowish flowers have five petals that bloom above the ovary.

Interesting Fact about Hemlock flowers:

Conium maculatum is the plant that killed Theramenes( an Athenian statesman, prominent in the final decade of the Peloponnesian War), Socrates (a classical Greek philosopher) and Phocion (successful politician of Athens).

In ancient Greece, hemlock was used to poison condemned prisoners. Socrates, the most famous victim of hemlock poisoning, was accused of impiety and corrupting the young men of Athens in 399 BC, and his trial resulted in a death sentence. Although Socrates could have avoided death, he decided to take a potent infusion of the hemlock plant.

Plato described Socrates' death in the Phaedo:

"The man ... laid his hands on him and after a while examined his feet and legs, then pinched his foot hard and asked if he felt it. He said "No"; then after that, his thighs; and passing upwards in this way he showed us that he was growing cold and rigid. And then again he touched him and said that when it reached his heart, he would be gone. The chill had now reached the region about the groin, and uncovering his face, which had been covered, he said – and these were his last words – "Crito, we owe a cock to Asclepius. Pay it and do not neglect it." "That," said Crito, "shall be done; but see if you have anything else to say." To this question he made no reply, but after a little while he moved; the attendant uncovered him; his eyes were fixed. And Crito when he saw it, closed his mouth and eyes.

Socrates showed no fear drinking the poison given to him in a cup. He died after drinking it.

ஐரோப்பா, மேற்கு ஆசிய மற்றும் வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட, "பாய்சன் ஹெம்லாக்"/ "கொனியம் மாகுலாட்டம்" என்ற மலர்கள் இப்போது அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் இயல்பாக விளைகின்றன..

இது 1800 களில் "குளிர்காலத்தின் சிற்றிலைப் படர்செடி" என்று அறிமுகப்படுத்தப்பட்டுச் சந்தைப்படுத்தப்பட்ட ஒரு தோட்ட வகையான தாவரம்.

செம்மறி, கால்நடை, பன்றி, குதிரைகள், மற்றும் பிற உள்நாட்டு விலங்குகள் இதன் சிறிய அளவிலான பச்சை அல்லது உலர்ந்த செடியை உண்டாலே இறந்துவிடும் அளவிற்கான மிகவும் நச்சுத்தன்மையைக் கொண்டது இந்தத் தாவரம்.

மனிதர்களுக்கு மிகவும் விஷம் வாய்ந்த தாவரம் இது.

இரு தாவரங்களுக்கும் இடையில் உள்ள பெயர் ஒற்றுமையால் இந்தத் தாவரத்தை மிகவும் கொடிய இனமான "மேற்கத்திய நீர் ஹெம்லா" தாவரத்தோடு இதனைக் குழப்பிக் கொள்வர் மக்கள்.

இதன் பொதுவான ஆங்கிலப் பெயர்கள் "கொடிய ஹெம்லாக்", "விஷம் கொண்ட வேர்க்கோசு", "ஐரோப்பிய ஹெம்லாக்", மற்றும் "கலிபோர்னியா அல்லது நெப்ராஸ்கா சிற்றிலைப் படர்செடி" என்பனவாகும்.

பாய்ஸன் ஹெம்லாக் என்பது ஆல்கலாய்டுகளுடன் தொடர்புடைய விரும்பத்தகாத வாசனையுடன் இரண்டு முதல் பத்து அடி உயரம் வரை வளரும் தாவரம்.

கொத்துக்கொத்தாகப் பூக்கும் சின்னஞ்சிறிய மலர்களைக் கொண்ட செடி இது.. மலர்களின் சூலக அடிப்பகுதிக் கூற்றுக்கு மேல் ஐந்து இதழ்களைக் கொண்ட இந்த மலர்கள் வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் பூக்கும்.



ஹெம்லாக் மலரைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மை:

பண்டைய கிரேக்கத்தில், கண்டனம் செய்யப்பட்ட கைதிகளுக்கு மரண தண்டனை கொடுக்கும்விதமாக ஹெம்லாக் மலரில் இருந்து எடுக்கப்பட்ட விஷம் பயன்படுத்தப்பட்டது.

கிமு 339 ல் கிரேக்க நாட்டின் தலைநகரமான ஏதென்ஸ் நகரத்தின் இளைஞர்களுக்குள் சீர்கேட்டினை உருவாக்கியதாகவும், அவர்களுக்குள் பக்தியின்மையை வளரச் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டதினால், அதன் விசாரணையின் விளைவாக க்ரேக்க தத்துவஞானியான சாக்ரட்டீஸுக்கு மரணத் தண்டனை விளைவித்தது கிரேக்க அரசு..

சாக்ரடீஸினால் தன் மரணத்தைத் தவிர்த்திருக்க முடியும் என்றாலும், அவர் ஹெம்லாக் மலரின் சக்திவாய்ந்த விஷத்தை அருந்தி தன் மரணத்தை ஏற்றுக்கொண்டார்.

சாக்ரட்டீஸ் மட்டுமல்லாது, பெலோபொனேசிய போரின் இறுதி தசாப்தத்தில் முக்கியமான இடத்தை வகித்த ஏதெனிய அரசியல்வாதியான திரமின்ஸுக்கும், ஏதென்ஸின் வெற்றிகரமான அரசியல்வாதியான ஃபோஷியனுக்கும் இதே ஹெம்லாக்கின் விஷத்தைக் கொடுத்து, அவர்களுக்கும் மரணத் தண்டவனை விதித்தது அந்த அரசு.

சாக்ரட்டீஸின் மரணத்தைப் பற்றிய அவரது மாணவரான, அரிஸ்டாட்டலின் ஆசிரியரான, பண்டைய கிரேக்க மற்றும் மேற்கத்திய தத்துவ வரலாற்றில் முக்கிய நபராகப் பரவலாகக் கருதப்பட்ட பிளாட்டோவின் வார்த்தைகள், அவரது "ஃபேடோ" என்ற புத்தகத்தில் ..


"ஒருவன் சாக்ரட்டீஸின் கால்களையும் பாதங்களையும் தொட்டு பரிசோதித்துப் பார்த்தவன், அவரது காலை கடினமாகக் கிள்ளியவாறே, நான் உன்னைக் கிள்ளுவதை உன்னால் உணர முடிகிறதா என்று கேட்டான்.. அதற்கு அவர் இல்லை என்று பதிலளித்தார். அதன் பின் அவரது தொடைகள் என்று உடலின் மேல் பாகங்களும் குளிர்ச்சியாகவும் கடினமாகவும் மாறுவதைத் தெரியப்படுத்தினார். மீண்டும் அவன் அவரைத் தொட்டவன், அந்தக் குளிர்ச்சி அவரது இதயத்தை அடையும் பொழுது அவர் மரணித்துவிடுவார் என்று கூறினான். அந்தக் குளிர்ச்சி இப்போது அவரது இடுப்பு பகுதியை அடைந்தது.. அதுவரை மூடியிருந்த அவரது முகத்தின் மீதிருந்த துணியை அகற்றியவனிடம், சாக்ரட்டீஸ் கூறிய அவரது கடைசி வார்த்தைகள்.."

"கிரிட்டோ, நாங்கள் அஸ்கெல்பியஸுக்கு ஒரு சேவலை கடன்பட்டிருக்கிறோம். அதைச் செலுத்திவிடு, புறக்கணித்துவிடாதே..."

"அது நிறைவேற்றப்படும்" என்று கூறிய கிரிட்டோ, "வேறு எதனையும் கூற விரும்புகிறீர்களா?" என்று வினவினான்..

இந்த வினாவிற்குச் சாக்ரட்டீஸ் பதில் எதுவும் கூறவில்லை.. ஆனால் சிறிது நேரத்திற்குப் பின் அந்த இடத்தில் இருந்து கிரிட்டோ நகரந்த பிறகு, அவனது உதவியாளன் ஒருவன் அவரது மேல் போர்த்தியிருந்த துணியை அகற்ற, அவரது விழிகள் நிலைகுத்தி நின்றிருந்தன.. அவரை அந்த நிலையில் பார்த்த கிரிட்டோ சாக்ரட்டீஸின் வாயையும் கண்களையும் மூடினான்.

தனக்கு ஒரு கோப்பையில் கொடுக்கப்பட்ட "ஹெம்லாக்" விஷத்தை அருந்துவதற்குச் சாக்ரடீஸ் சிறிதளவும் அஞ்சவில்லை.. அதனை அருந்தியதாலேயே அவர் இறந்தும் போனார்.
 

JLine

Moderator
Staff member
22

The Flame of the Forest : Butea monosperma

Butea monosperma is a species of Butea native to tropical and sub-tropical parts of the Indian Subcontinent and Southeast Asia, ranging across India, Bangladesh, Nepal, Sri Lanka, Myanmar, Thailand, Cambodia, Vietnam, Malaysia, and western Indonesia.

Common names in English include "Flame-of-the-forest" and "Bastard teak".

Characterized by its crooked trunk and twisted and irregular branches, it is not the most endearing of sights. And it is usually between twenty to forty feet in height.

The Butea monosperma is famously known as the flame of the forest and the reason behind the tree getting accorded this name is that it bears very bright flowers which are either orange or scarlet in color. When the tree is in full bloom, the flowers grow in a number of clusters and the appearance of the tree is then such that it looks as if it has been set aflame, hence, the name.

These flowers, which are scentless, are massed along the ends of the stalks--dark velvety green like the cup-shaped chalices and the brilliance of the stiff, bright flowers is shown off to perfection by this deep, contrasting color. Each flower consists of five petals comprising one standard, two smaller wings and a very curved beak-shaped keel, makes the flower to look like a bird.

Closely associated with Hinduism, its tri-foliate leaves are said to represent the Hindu Holy Trinity of Brahma, Vishnu and Shiva

The wood of the tree is considered sacrificial and its dry twigs are used in the sacred fire or Homa.

Flame of the forest flowers were used to make natural color during the festival of Holi.

In West Bengal, it is associated with spring, especially through the poems and songs of Nobel Laureate Rabindranath Tagore, who likened its bright orange flame-like flower to fire.

In Hindu mythology, when it is said that the God of Fire disturbed Goddess Parvati and Lord Shiva's privacy, as a punishment he came to earth in the form of "flame of forest/form of Agni".

In the real world, the tree is considered a medicinal plant as it balances Vata and Pitta. It is used extensively in Ayurveda, Unani and Homeopathy.

In Indian poetry these red flowers are compared to the new nail marks on the body of the beloved while Amir Khusru, the Sufi Saint, compares the flowers of the tree to a lion’s claw stained with blood.



கல்யாண முருங்கை/ பலாசம்/ முள்ளு முருங்கை:-

வெப்ப மண்டலப்பகுதியைச் சார்ந்த இந்திய துணைக்கண்டத்திலும் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளான வங்காளதேசம், நேபால், இலங்கை, மியான்மார், தாய்லாந்து, கம்போடிய, வியட்நாம், மலேசியா மற்றும் மேற்கு இந்தனோஷிய ஆகிய இடங்களில் காணப்படும் தாவர வகை இந்தப் புயுட்டி மானொஸ்பெர்மா.

இது ஆங்கிலத்தில் "காடுகளின் தீச்சுடர்" அல்லது "பாஸ்டர்ட்(வேசிமகனின்??) தேக்கு" என்ற பொதுவான பெயர்களில் அழைக்கப்படுகின்றது.

இருபது முதல் நாற்பது அடிகள் உயரத்தில் வளரும் இந்த மரத்தின் வளைந்து முறுக்கப்பட்ட தண்டுகளும், ஒழுங்கற்ற கிளைகளும் பார்ப்பதற்குக் கவர்ச்சிகரமாக இருப்பதில்லை.

மிகவும் பிரகாசமான ஆரஞ்சு நிறத்திலும் அல்லது சிவப்பு வண்ணத்திலுமாக இந்த மரத்தின் பூக்கள் மலர்வதாலேயே இந்த மரம் காட்டின் தீச்சுடர் என்றழைக்கப்படுகின்றது...

இம்மரம் முழுவதிலும் பூக்களால் நிரம்பியிருக்கும் வேளையில் கொத்துக் கொத்தாக மலர்ந்திருக்கும் சிகப்பு ஆரஞ்சு நிற பூக்களின் தோற்றம், அம்மரம் முழுவதுமே நெருப்பு பற்றி எரிவது போல் இருப்பதாலேயே அந்தப் பெயரில் வழங்கப்படுகின்றது..

மரத்தின் கிளைகளின் முனைகளில் மிருதுவான பச்சைநிற பட்டுத்துணியால் செய்யப்பட்ட கிண்ணத்தின் நடுவில் வாசனையற்ற இந்தப் பிரகாசமான வண்ண மலர்கள் பூத்திருப்பது, அதன் மாறுபட்ட வண்ணங்களைப் பூரணத்துவத்துடன் எடுத்துக்காட்டிகின்றது..

ஒவ்வொரு பூவின் ஐந்து இதழ்களும் ஒன்றாக இணைந்து, இரண்டு சிறிய இறக்கைகளும், மிகுந்த வளைந்த அலகு வடிவத்திலான தோற்றமும், இந்த மலரை ஒரு பறவையின் தோற்றத்தில் உருவாக்குயிருக்கிறது..

இந்து மதத்துடன் நெருக்கமாகத் தொடர்புடைய இந்த மரத்தின் மூன்று அடுக்குகளான இலைகள் மும்மூர்த்திகளான பிரம்மனையும் விஷ்ணுவையும் சிவாவையும் குறிப்பதாகக் கூறப்படுகின்றது..

திருப்படையலிற்குரியதாக இந்த மரத்தின் கட்டைகள் கருதப்படுவதால், இதன் காய்ந்த சுள்ளிகள் ஹோமங்களைச் செய்வதற்கும், ஓமாக்கினியை வளர்ப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றது..

ஹோலி பண்டிகையின் போது வர்ணப் பொடிகள் தயாரிப்பதற்கு இந்த "காட்டின் தீச்சுடர்" மலர்கள் பயன்படுத்தப்பட்டன..

இந்த மரத்தின் ஆரஞ்சு நிற நெருப்பைப் போன்ற மலர்களை மிகவும் விரும்பியதால் மேற்கு வங்காளத்தின் இளவேனிற்காலத்தை தனது பாடல்களிலும் கவிதைகளிலும் குறிப்பதற்கு இந்த மலர்களையே பயன்படுத்தியிருக்கிறார், நோபல் பரிசினை பெற்றிருந்த ரபிந்திரநாத் தாகூர்.

மும்மூர்த்திகளில் ஒருவரான, முழுமுதற்கடவுளாக வணங்கப்படும் சிவனும் பார்வதி தேவியும் தனித்திருக்கும் பொழுது அவர்களின் தனிமைக்குப் பங்கம் விளைவித்ததால் பார்வதியின் கோபத்திற்கு ஆளான நெருப்பின் கடவுளை அவர் தண்டிக்க, அக்னியின் தேவன் பூலோகத்தில் இந்த மரமாகத் தோன்றினார் என்பது இந்து புராணங்களில் உள்ள ஒரு கதையாகும்.

வாதத்தையும் பித்தத்தையும் சமநிலையில் வைப்பதற்கு இம்மரம் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றது.. முக்கியமாக ஆயுர்வேதத்திலும் யுனானி மற்றும் சித்தமருத்துவத்திலும் இவை பயன்படுத்தப்படுகின்றன..

இந்திய கவிதைகளில் காதலியின் உடலில் தென்படும் நகங்களின் குறிகளாக இந்தச் சிவந்த மலர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன என்றால், இஸ்லாமிய மறைமெய்ஞ்ஞானியான அமிர் குஸ்ரு இம்மலர்களை இரத்தம் தோய்ந்திருக்கும் சிங்கத்தின் (அர்ஜுன்!) கூர் நகங்களுடன் ஒப்பிடுகின்றார்..
 

JLine

Moderator
Staff member
23


Rhizanthella gardneri is a cute, quirky and critically endangered orchid that lives all its life underground. It even blooms underground, making it virtually unique amongst plants.

Discovered near Corrigin in May 1928, the underground orchid is the only flora of its kind in Western Australia and only one of three species found in Australia.

The underground orchid is known from about 80 plants in six different locations, it's very rare and very hard to find.

"It grows entirely underground underneath broom bush thickets, the original discovery was when they were clearing land for farming and they ploughed it up and thought 'hmmm what's that funny looking thing?'."

After its discovery the flower was found six more times up until 1959 and then wasn't seen again until 1979 near Munglinup, 300km south of previous known locations.

"It's very sensitive to getting trampled over so that's why the known populations that we've got are highly secretive.

Unlike other flowers, the underground orchid doesn't get its energy from the sun through photosynthesis. The plant feeds on fungi that forms between the broom bush thickets and the flower.

It is believed that small burrowing animals spread the orchid's seeds by eating the flower.

"Because this plant has around 84 individuals, that automatically puts it in the critically endangered category.."

ரிசான்தெல்லா கார்டனேரி, அழகான, வித்தியாசமான, பூமியில் தன் அழிவினை நோக்கி செல்லும் ஒருவித ஆர்கிட் மலர். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்தத் தாவரம் பூமிக்கடியிலே தன் வாழ்நாளை கழித்து அங்கேயே பூத்து குலுங்கும்..

இத்தாவரமானது மே மாதம் 1928 ஆம் ஆண்டுக் காரிகின் என்ற இடத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது.நிலத்தடியில் வளரும் இந்த ஆர்கிட் மலர் மட்டும் தான் மேற்கு ஆஸ்திரேலியாவில் வளரும் தாவரமாகும், மற்றும் இது தான் ஆஸ்திரேலியாவில் வளரும் மூன்றில் ஒன்றான தாவர வகையாகும்.

இந்த நிலத்தடி ஆர்கிட்டானது ஆறு வெவ்வேறு இடங்களிலுள்ள, 80வகைத் தாவரங்களிலிருந்து அறிய பட்டதாகும். இத்தகைய ஆர்கிட் மலரானது காண்பதற்கு வெகு அறிது மற்றும் கண்டறிய கடினமானதாகும், என‌ கூறுகின்றனர்.

"இந்தத் தாவரமானது முழுவதுமாக நிலத்தடியிலேயே தன்னைப் புதர்களுக்குள் மறைத்து வளரும் தன்மை கொண்டது. முதன்முதலாக வேளாண்மைக்காக இடத்தைச் சுத்தப்படுத்தும் போது இதனைக் கண்டு பிடித்தனர், இதை முதலில் காணும்‌போது இதனை ஒரு வேடிக்கையான பொருளென்றே கருதினர்?

முதலில் கண்டறியப்பட்டப் பிறகு 1959 ஆம் ஆண்டு வரை ஆறு முறை வெவ்வேறு இடங்களில் கண்டுப் பிடிக்கப்பட்டது.. பிறகு 1979ம் ஆண்டு இம்மலரினை கண்ட இடத்திலிருந்து 300கிமீ அடுத்த முன்கிலினப் அருகில் தான் இந்த ஆர்கிட்டை காண முடிந்தது.

இந்த மலர் எளிதில் காலில் மிதிபடும் வாய்ப்புள்ளதால், நாமறிந்த எண்ணிக்கையிலுள்ள இந்த அறிய மலரினை பற்றிய தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது.

மற்ற‌ தாவரங்களைப் போலல்லாது , இந்த நிலத்தடி ஆர்கிட் தன் உணவினை ஒளிச்சேர்க்கை முறையில் உண்டு பண்ணும் இயல்புடையதில்லை. இது தன்னை அரண் எனக் காக்கும் அடர்த்தியான புதர்களிலும், அதிலுள்ள பூக்களிலும் வளரும் பூஞ்சைகளையே உணவாக உண்ணும்.

சிறிய பொந்துகளிலுள்ள சிறிய விலங்குகள் இந்த ஆர்கிட் மலரின் விதைகளை, அதனின் பூக்களை உண்டு மற்ற இடங்களுக்கு எடுத்து செல்வது மூலம் இத்தாவர வகையை பரப்புகின்றன என்று கருதப்படுகிறது.

வெறும் 84 எண்ணிக்கையிலேயே இந்த மலர்கள் இன்னும் இருப்பதால் , இதனைக் கடுமையான ஆபத்தான ஆழிவிலுள்ள தாவர வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
 

JLine

Moderator
Staff member
24

Gladiolus/Sword flower:

Symbolizing strength, sincerity and moral integrity, gladioli also represent infatuation, with a bouquet (spire) conveying to a recipient that they pierce the giver's heart with love and passion.

This bold beauty captures the heart and soul like no others with its impressive spire of flowers.

The ancient name for gladiolus was xiphium from the Greek word xiphos, meaning sword. Its name was later changed to gladiolus, which comes from the Latin word gladius, which also means sword.

Since they have long been associated with swords Gladioli were considered the flower of the gladiators

The genus gladiolus includes 260 species with 10,000 registered cultivars that come in the colors of the rainbow. Individual blooms may be a solid color or bi-colors and run the gamut of shades of pink, red, purple, yellow, orange, white and even green.

Gladiolus: வாள் போன்ற மலர்

வலிமைக்கும் நேர்மையுணர்ச்சிக்கும் ஒழுக்கநெறிக்கும் அடையாளமாகப் பயன்படுத்தப்படும் இந்த க்லேடியோலி மலர்கள், ஒருவரின் மீது கொண்டிருக்கும் மையலையும் மோகத்தையும் வெளிப்படுத்தும் மலராகவும் கருதப்பட, கொடுப்பவர்களின் இதயத்தில் உள்ள காதலையும் ஆர்வத்தையும் பெறுபவருக்கு உணர்த்தும் விதமாகவும் இந்த (கூரான) மலர்களின் செண்டு வழங்குப்படுகின்றது..

தன்னுடைய வாளைப் போன்ற கூரான மலர்களால் ஒருவரின் இதயத்தையும் ஆன்மாவையும் ஈர்க்கவல்ல வித்தை இந்தப் பேரழகிய மலர்களுக்கு மட்டுமே உரியது எனலாம்..

க்லேடியொலஸ் மலர்களின் பண்டையப் பெயரான க்ஸிபியம் என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையான க்ஸிபொஸ் என்ற சொல்லில் இருந்து எடுக்கப்பட்டது, அதற்கு வாள் என்று பொருள்.

அதனது நீண்ட வாளைப் போன்ற தோற்றத்தினால் இந்த க்லேடியோலி மலர்கள் வாட்போர் வீரர்களின் பூக்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்தக் கிளாசிக்கில் மலர்கள் 260 இனங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த மலர் ஒரு திட வண்ணத்திலோ அல்லது இரு நிறங்களிலோ மற்றும் இளஞ்சிவப்பு, சிவப்பு, ஊதா, மஞ்சள், ஆரஞ்சு, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களிலோ மலரும்.
 

JLine

Moderator
Staff member
26

Blooming of daffodils, also known as jonquils are considered as they are announcing the beginning of the spring and waking of nature.

According to legends, if you see the first daffodil, your next 12 months will be filled with wealth.

Bestowing someone with a bouquet of daffodils is thought to bring happiness into the home. In Wales, you'll be even happier if you spot the first of these cheerful blooms.

It is the national flower of Wales.

Scientists have identified a natural compound called narciclasine in daffodil bulbs. This name doesn't just sound fancy, it turns out it does fancy things, like being beneficial in treating brain cancer, for instance.

In the Victorian era, daffodils represented chivalry making them a perfect bouquet for a gentleman to offer a lady.

Today, however, they represent Un reciprocated love and hope. (Please love me)

****************
டேஃபடில் அல்லது ஜான்க்கில் என்று அழைக்கப்படும் இந்த மலர்கள் வசந்தகாலத்தின் தொடக்கத்தை அறிவிக்கவும், இயற்கையை விழித்தெழச் செய்யவுமே மலர்வதாகக் கருத்தப்படுகின்றது.

வருடத்தில் முதன் முறையாகப் பூக்கும் ஒரு டாஃபடில் மலரைப் பார்ப்பவர்களுக்குத் தொடர்ந்து வரும் பன்னிரண்டு மாதங்களும் செல்வத்தால் நிரப்பப்படும் என்று புராணங்களில் கூறப்பட்டிருக்கின்றது..

டாஃபடில் மலர் செண்டுகளை ஒருவருக்குக் கொடுப்பதன் மூலம் அவர்களுடைய இல்லத்திற்கு மகிழ்ச்சியைக் கொண்டு வருவதாகக் கருதப்படுகிறது..

வேல்ஸ் நாட்டின் தேசிய மலர் இது..

டாஃபடில் மலர்களின் மொட்டுக்களில் நார்சிக்ளாஸின் என்ற இயற்கை சேர்மம் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவை மூளை புற்றுநோய்க்கு மருந்தாகவும் பயன்படுகின்றது..

விக்டோரியன் காலத்தில் டாஃபடில் மலர்செண்டு ஆண்களின் தீரத்தையும் வீரமரபையும் குறிப்பதாகவும், பெண்களுக்கு வழங்குவதற்கு உகந்த மலர்களாகவும் கருதப்பட்டது..

ஆயினும் இன்று இந்த மலர்கள் ஒருதலைக் காதலை வெளிப்படுத்துவதற்கும் நம்பிக்கைக்கும் (தயவுசெய்து என்னைக் காதலி) அடையாளமாகப் பயன்படுத்தப்படுகின்றன..
 

JLine

Moderator
Staff member
28

Bird of Paradise/Strelitzia: சொர்க்கத்தின் பறவை...

The bird of paradise gets its name from the fact that its flower is made of three bright orange petals and three blue petals which are fused together into a single bud. As the flower blooms, each petal makes its debut and the resulting shape mirrors that of a tropical bird in flight.

The bird of paradise is the official flower for a ninth wedding anniversary.

Birds of paradise also represent having a good perspective on life.

In Hawaii, the bird of paradise grows wild and is a significant part of the culture. In Hawaiian, the name means “Little Globe” and represents magnificence.

The giant bird of paradise, Strelitzia nicolai, is one of the largest species and can grow up to 30 feet in height.

In the wild, birds of paradise flowers are pollinated by sunbirds, regularly feed on its sweet nectar. When the bird lands on its petals, the pollen is transferred to the bird’s chest, which gets transferred to the next flower the bird lands on.

Although birds of paradise are best known for their bright orange and blue colors, their flowers can also be white.

The bird of paradise is known as the ultimate symbol of joy and paradise.

மூன்று பிரகாசமான ஆரஞ்சு நிற இதழ்களையும், நீல நிற பூமடல்களையும் கொண்டு ஒரே மொட்டாக ஒன்றுக்குள் ஒன்றாக இணைந்து, காண்பதற்குப் பறவை போன்று இருப்பதனாலேயே இந்த மலர் "பேர்ட் ஆஃப் பேரடைஸ் /சொர்க்கத்தின் பறவை" என்று அழைக்கப்படுகின்றது..

பூக்கும் பொழுது ஒவ்வொரு இதழும் தனித்தனியாக விரிய, இறுதியில் ஒரு பறவை ஆகாயத்தில் பறப்பது போன்றே தோற்றம் கொண்டிருக்கும் இந்த "பேர்ட் ஆஃப் பேரடைஸ்" மலர்..

ஒன்பதாவது திருமண ஆண்டின் நிறைவை முன்னிட்டுப் பகிரப்படும் மலராக இது அதிகாரப் பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது..

இந்த மலர் வாழ்க்கையின் நல்ல முன்னோக்கை குறிப்பதற்கும் அடையாளமாகக் கொடுக்கப்படுகின்றது..

ஹவாய் தீவுகளின் காடுகளில் எங்கும் மலர்ந்திருக்கும் இம்மலர்கள் அத்தீவின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படுகின்றன. அங்கு "சிறிய கோளம்" என்று பொருள்படும் இந்த மலர்கள் பிரமாண்டத்தைப் பிரதிபலிக்கின்றன..

இவை முப்பது அடிகள் உயரத்திலும் வளரக்கூடிய தாவர இனத்தைச் சார்ந்தது.

காடுகளில் "பேர்ட் ஆஃப் பேரடைஸ்" மலர்களின் மகரந்தச் சேர்க்கை பறவைகளின் மூலமாகவே செய்யப்படுகின்றன.. பறவைகள் இந்த மலர்களின் இதழ்களில் அமரும் பொழுது மகரந்தம் பறவைகளின் நெஞ்சிற்கு இடமாறி பின் அவை வேறு மலர்களின் மீது அமரும் போழுது இவற்றின் வழியாக மகரந்தச் சேர்க்கை நடைப்பெறுகின்றன..

இந்த மலர்கள் அதன் பிரகாசமான ஆரஞ்சு மற்றும் நீல நிறங்களாலேயே அறியப்பட்டிருந்தாலும், அவற்றில் வெண்ணிற மலர்களும் உண்டு..

இவை ஆனந்தத்திற்கும் சொர்க்கத்திற்கும் உச்சபட்ச சின்னமாகவும் கருதப்படுகின்றன..
 

JLine

Moderator
Staff member
48

Bane: மரணம் உண்டாக்கும் நஞ்சு

Aconitum/Wolf's bane/ Devil's helmet: "The queen of poisons"

Aconitum commonly known as aconite, wolf's bane, leopard's bane, devil's helmet considered as a 'Queen of Poisons'. It is a perennial herb often grown as an ornamental plant due to its attractive blue to dark purple flowers.

Aconitum with its brilliant blue blossoms would be a lovely addition to any garden, adding color, height and beauty. Even when the plant is not in bloom, the foliage looks attractive.

That being said, as beautiful as the flowers are, all parts of the plants are poisonous, especially the roots. In fact, it is one of the deadliest plants in existence.

It is most noted as a heart poison but is also called as a 'Deadly Blue Beauty'.
It has been used since ancient times as a poison used on spears and arrows for hunting and battle. As wolf's bane, it was believed to repel werewolves (and real wolves!).

Ancient Romans used it as a method of execution.In some countries, it is considered illegal to cultivate this plant without a permit.


Aconitum/ ஓநாயின் நஞ்சு /பிசாசின் தலைக்கவசம்/ நச்சுக்களின் ராணி

பொதுவாக 'அக்கனைட்' என்றழைக்கப்பட்டாலும் பிசாசின் தலைக்கவசம், ஓநாயின் விஷம், சிறுத்தையின் நஞ்சு என்று பல பெயர்கள் கொண்ட இந்த நீல நிறத்து மலர்களே, 'நச்சுகளின் ராணி' என்று கருத்தப்படுகின்றது.

ஆண்டுக்கணக்கில் வாழும் தவரவகையான அக்கனிட்டத்தின் மலர்கள் கவர்ச்சியான நீலம் மற்றும் அடர்ந்த ஊதா நிறத்தில் மலர்வதால், அவை பெரும்பாலும் அலங்கார தாவரமாகவே பயன்படுத்தப்படுகின்றன..
அதன் அட்டகாசமான நீல நிற மலர்கள் எந்த ஒரு தோட்டத்திற்கும் தன் நிறத்தினாலும் உயரத்தினாலும் அழகினாலும் எழில் சேர்க்கக் கூடியது.

இத்தாவரங்களில் மலர்கள் பூக்காத நேரத்தில் அதன் இலைகளும் கூடக் கவர்ச்சிகரமாகத் தோற்றமளிக்கும்.
இவ்வாறு புகழப்படும் இம்மலர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அழகாக இருக்கின்றதோ, அதே அளவிற்கு நச்சுத்தன்மையும் கொண்டது, முக்கியமாக அதன் வேர் முழுவதும் விஷத்தைக் கொண்டிருக்கும்.

இன்னும் சொல்லப் போனால் இவ்வுலகில் ஜீவிக்கும் தாவரங்களிலேயே மிகவும் விஷத்தன்மை வாய்ந்த தாவரங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

இதயத்திற்கான விஷம் என்று இம்மலர்கள் குறிப்பிடப்பட்டாலும், இவை 'கொடிய நீல அழகி' என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றன.

பழங்காலத்தில் இருந்து, வேட்டையாடும் பொழுதும் போர் காலங்களிலும் ஈட்டிகள், அம்புகள் ஆகியவற்றில் நஞ்சாக இவை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒநாயின் விஷம் என்றழைக்கப்படும் இம்மலர்கள் ஓநாய்களை வேட்டையாடுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

பண்டைய ரோமானியர்கள் மரணத் தண்டனைக்கான ஒரு வழிமுறையாகவும் இத்தாவரத்தை பயன்படுத்தியுள்ளனர்.

சில நாடுகளில் அனுமதி பெறாமல் இந்தச் செடியை விவசாயம் செய்வது சட்டவிரோதமானது என்று கருதப்படுகிறது.
 

JLine

Moderator
Staff member
49

“Jasmine is sweet, and has many loves.” - Thomas Hood

Anything that is synonymous with love, romance, passion, temptation, seduction, beauty, and used in medicine, history, culture, politics and even religion? Yes, jasmine is that, and so aptly described as the “King and Queen of flowers.”
History is replete with references to this magnificent flower. The seductive Queen Cleopatra went to meet Marc Antony in a ship with jasmine-scented sails!
Jasmine is referred to as “moonlight in the grove” in India because it blooms in the night.
In Hindu mythology, the God of Love, Kama Deva, shot arrows of jasmine flowers.
In Arabic, the word 'Yasameen' means white flowers and symbolizes feminine beauty and temptation and jasmine fits in with that wonderfully.
Grasse, the town is considered the world's capital of perfume, has the most expensive kind of jasmine called jasmine de Grasse.
It is said that 10,600 flowers were required to produce 1 ounce of Jean Patou’s 'Joy' perfume by perfumer Henri Alméras when introduced in the 1930s, making it the ‘costliest perfume in the world’.

As the saying goes, as a tribute to this wonderful gift of nature, “Jasmine is sweet, and has many loves.” (Quote by – Thomas Hood)

காதல், ஆர்வம், ஆசை, வசீகரிப்பு, எழில் என்ற அனைத்து வார்த்தைகளுக்கும் பொருத்தமான ஒரு பெயர் உண்டு என்றால், அது மல்லிகை தான்..
'மலர்களின் அரசன் மற்றும் ராணி' என்று வர்ணிக்கப்பட்டும் மல்லிகை மலர் இடம்பெறாத வரலாறு, நாகரிகம், கலாச்சாரம், மதம் எதுவுமே இல்லை..
இந்த அற்புதமான மலர் பற்றிய குறிப்புகள் வரலாறு முழுவதிலும் நிறைந்திருக்கிறது. கவர்ச்சிமிக்க ராணி என்றழைக்கப்படும் கிளியோபாட்ரா, மார்க் ஆண்டனியை சந்திக்கக் கடற்பயணம் மேற்கொண்ட பொழுது அவரின் கப்பல் முழுவதிலும் மல்லிகையின் நறுமணம் நிறைந்த தைலமே தெளிக்கப்பட்டிருந்தது என்று வரலாறு கூறுகின்றது.
இப்பூக்கள் இரவில் மலர்வதால், "சோலைகளின் நிலவொளி' என்று இந்தியாவில் அழைக்கப்படுகின்றன..
காதலின் கடவுளான காம தேவன், தனது அம்புகளில் மல்லிகை மலர்களையே சுற்றியிருந்தார் என்று இந்து இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
அரேபிய மொழியில் "யாஸமின்" என்ற சொல்லிற்கு வெண்ணிற மலர்கள் என்று அர்த்தம்.. இம்மலர்கள் அங்குப் பெண்களின் அழகிற்கும் சலனத்திற்கும் அடையாளமாகப் பயன்படுத்துப்படுகின்றது.
வாசனைத் திரவியங்களின் தலைநகரமாகக் கருத்தப்படும் கிராஸ்ஸே நகரத்தில், மிக விலை உயரந்த நறுமணத் தைலனமான "ஜாஸ்மின் டி கிராஸே", மல்லிகை மலர்களினாலேயே தயாரிக்கப்படுகின்றது.
1930 ல் ஜீன் பேட்டௌவின் ஒரு அவுன்ஸ் அளவிலான "ஜாய்" நறுமணத் தைலத்தைத் தயாரிப்பதற்கு 10,600 மல்லிகை மலர்களை ஹென்றி அல்மேராஸ் பயன்படுத்தியதால், அந்தத் திரவம் 'உலகின் விலையுயர்ந்த வாசனைத் தைலம்' என்று கருதப்பட்டிருக்கின்றது.

இந்த அற்புதமான மலரைப் பாராட்டும் வகையில், "மல்லிகை இனிமையானது, பல நேசங்களைக் கொண்டுள்ளது" என்று தாமஸ் ஹூட் என்ற கவிஞர் தன் கவிதையில் குறிப்பிட்டிருக்கின்றார்.
 

JLine

Moderator
Staff member
50

குறிஞ்சி நாள் மலர் புரையும் மேனி (நற்.301)

குறிஞ்சி மலர் பூத்த பின்னர் அவ்வாறே பல நாட்கள் வாடாதிருக்கும் இயல்பைப் பெற்றது எனினும் அன்றலர்ந்த குறிஞ்சி மலரை ஒத்த மேனியள் (மலரினும் மெல்லியவள்!!) என்று நற்றிணைப் பாடலொன்று, அன்றலர்ந்த குறிஞ்சிப்பூவை தலைவியின் மேனியுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றது..

குறிஞ்சி புணர்ச்சிப்பொருள் கொண்ட பூ. கூடிப்புணர்வோர் புணரும் இடத்தில் மற்றவருக்கு இடம் தருவாரா என்ன? அதே போன்றே இச்செடி பூக்கும் போது வேறெந்தச் செடி வகையும் இவ்விடத்தில் முளை காட்ட முடியாது.. மலைச்சாரலில் குறிஞ்சிச் செடிகளைத்தவிரப் பிற செடிகளைக் காண முடியாது என்று தாவரவியலார் கூறுவர்..

-------------------------
குறிஞ்சி அல்லது நீல குறிஞ்சி என்பது , மேற்கு தொடர்ச்சி மலைகளிலுள்ள, சோழ காடுகளில் வளரும் புதர் வகையைச் சார்ந்த தாவரம் . நீல மலைகள் என்ற நீலகிரி மலையின் பெயருக்குக் காரணியாக அமைந்ததே பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும், இவ் கருநீலகுருஞ்சிகளினாலே..

இப்பூக்கள் 1838,1850,1862,1874,1898,1910,1922,1934,1946,1958,1970,1982,1994,2006,2018 ஆகிய ஆண்டுகளில் பூத்தாக ஆய்வறிக்கை கூறுகிறது.

ஏன் 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கிறது..?

[This is one of the survival mechanisms evolved to escape complete destruction of the population by seed/flower predators and is termed `predator satiation’]

பொதுவாக மலர்கள் மலர்கிறதென்றால் அதற்கு முதலில் தேவையானது மகரந்த சேர்க்கை. உயிர் தப்பிப் பிழைப்பதற்கான ஒரு வழியாகவே இவை நீண்ட காலம் கழித்துப் பூப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும், சில தாவர உண்ணிகள் இவற்றைச் சாப்பிட்டுவிடுவதால் இவை பல காலம் கழித்துப் பூக்கின்றன. இது போன்ற காலச் சூழ்நிலையில் இந்தப் பூக்கள், தன் மலர்ச்சியைப் பெறாது. அதனாலேயே குறிஞ்சி பூ, மலர 10 முதல் 12 வருட கால அளவு தேவைப்படுகிறது.

குறிஞ்சி தேன்..! இந்த மலரில் எடுக்கப் படும் தேனானது மிகவும் சுவை கொண்டதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பறவைகள் முதல் அனைத்து விலங்கினங்கள் வரை இவற்றை அதிகம் தேடி வருமாம். அதனாலேயே இவற்றிடம் இருந்து தப்பிக்க இந்தத் தகவமைப்பைக் குறிஞ்சி கொண்டிருக்கின்றன. மேலும், ஒரே தாவரத்தில் சராசரியாக 1,768 பூக்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

குறிஞ்சிப்பூ என்பது காதல், களிப்பின் மேல் கொண்ட ஆசையின் சின்னமாக, கவிஞர்கள் மற்றும் பழங்குடிகளால் கருதப்படுகிறது. சுய விழிப்புணர்வடைந்த பெண்ணின்‌ சின்னமாகக் குறிஞ்சிப் பூ திகழ்கிறது.


 

JLine

Moderator
Staff member
51


Tulips:
There are over 150 species of tulips with over 3,000 different varieties
Their flower buds are known for being almost perfectly symmetrical.
Most tulips sprout a single flower bud, but a few varieties have up to four on a single stem.
Tulips are part of the lily family.
Tulips are also said to signal the arrival of spring.
Tulips' shapes are what originally gave them their name. The name originated from the Persian word "delband," meaning turban.
Different colored tulips have different meanings. Red tulips represent true love (no wonder tulips are the second most popular Valentine’s Day flower). Made a mistake? White tulips mean "I'm sorry.", they are a symbol of apology and forgiveness. Purple tulips are a symbol of royalty.
Tulips Have an Expensive History (Tulip mania)
Tulips caused quite the pandemonium in the 1600s. During this time in the Netherlands, tulips were highly valuable and are considered by some historians to be the cause of the economic crash of 1637. During this time, tulips were as expensive as homes.
( For more information: https://www.investopedia.com/features/crashes/crashes2.asp)
Tulips are known for their bright and sunny colors, and they have actually been cultivated in every color except for classic blue (blue tulips exist, but they have a purplish tint). One of the most interesting colors of a tulip variety is the deep purple called, "Queen of the Night", is quickly gaining popularity for its unique hue.

டூலிப்ஸ்: 150 வகைகளிலும் மலரும் டுலிப் மலர்களுக்குள் 3,000 க்கும் மேற்பட்ட ரகங்கள் உள்ளன.
கச்சிதமான சமச்சீரான அளவில் மொட்டுக்களைக் கொண்ட இம்மலர்கள் பெரும்பாலும் ஒரு தண்டில் ஒரு மலராகவே பூக்கும் தன்மையுடையது, ஆயினும் நான்கு மலர்கள் வரை ஒரு தண்டில் பூக்கும் அறிய வகை டுலிப் மலர்களும் உண்டு..
டுலிப், அல்லி மலர்களின் குடும்பத்தைச் சார்ந்தது..
வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் அறிகுறியாக இம்மலர்கள் மலரும்..
தலைப்பாகை என்ற பொருள் தரும் டெல்பாண்ட்/டர்பன் (delband/Turban) என்ற பெர்சிய மொழிச் சொல்லின் துருக்கி உச்சரிப்பான (tulbent) டுல்பென்ட் என்ற சொல்லில் இருந்து உருவான பெயர் 'டுலிப்'.
முழுமையாக மலராத நிலையில் இந்த மலர் பார்ப்பதற்குத் தலைப்பாகையைப் போல் தோற்றம்
அளிப்பதால், (அல்லது தங்களின் தலைப்பாகை மீது துருக்கியர்கள் பாரம்பரியமாக இம்மலரை அணிவதாலோ இதற்கு அந்தப் பெயர் வந்திருக்கும் என்று சொல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
வெவ்வேறு வண்ணங்களில் பூக்கும் இம்மலர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு..
சிகப்பு நிறத்தில் பூக்கும் டுலிப் மலர்கள் உண்மையான காதலை குறிக்கிறது (காதலர் தின மலர்களின் வரிசையில் இரண்டாம் இடத்தில் டுலிப் இருப்பதில் அதிசயமில்லை).
தவறு செய்தவன் மன்னிப்பு யாசிப்பதற்கு வெள்ளை நிற மலர்களை அடையாளமாக அனுப்பலாம், ஏனெனில் மன்னிப்பு மற்றும் மன்னிப்பின் சின்னமாக வெண்ணிற டுலிப் மலர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அடர் ஊதா நிற டுலிப் மலர்கள் அதிகாரத்திற்கான சின்னமாகக் கருதப்படுகின்றது.
1600 களில் டுலிப் மலர்கள் ஒரு பெருங்குழப்பதை உண்டு பண்ணியது.. அந்நாட்களில் டுலிப் மலர்கள் நெதர்லாந்தில் மிகவும் மதிப்புமிக்கதாக இருந்தன. 1637 ஏற்பட்ட பொருளாதார முறிவுக்கு டுலிப் மலர்களே காரணம் என்று சில வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். அக்காலக்கட்டத்தில் வீடுகளை விட டுலிப் மலர்கள் விலை உயர்ந்தவனாக இருந்தன.
(மேலும் தகவல்களுக்கு: https://www.investopedia.com/features/crashes/crashes2.asp)
நீல நிறத்தை தவிர இம்மலர்கள் மற்ற அனைத்து நிறங்களிலும் பூக்கின்றன, அவற்றில் சுவாரஸ்யமான வண்ணமான அடர் வயலட்டில் மலரும் இம்மலர், அதன் தனித்துவமான நிறத்திற்காகவே, 'இரவின் ராணி' என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது..

 

JLine

Moderator
Staff member
52


The lily is a beautiful flower ranked as the 4th most popular flower across the globe!
The lily has a diversity of symbolism throughout the world. In fact, different colored lilies represent different things altogether. With its green, shiny leaves, creamy white spadix and pointed spathe, the white Lily,a real beauty represents virginity and purity, the tiger lily represents pride or confidence.
All species of lilies belong to the genus Lilium, an umbrella category that houses more than 100 species of flower. That said, lilies grow in nearly every shape and color!
Among all species of lily, the tiger lily with huge, wide and vibrant look, is considered as the most exotic flower. Only white and tiger lilies are known by their beautiful smell. Other species of lily are odorless.
Water lily isn't really a lily.

லில்லி/அல்லி:

உலகம் முழுவதிலும் உள்ள மலர் வகைகளில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கும் மிகப் பிரபலமான மலர் லில்லி (அல்லி).
உலகெங்கிலும் இம்மலர்களுக்குப் பலவிதமான குறியீடுகள் உள்ளன. அதன் வெவ்வேறு வண்ணங்களைப் பொறுத்து, அம்மலர்கள் வேறுபட்ட விஷயங்களைப் பிரதிபலிக்கிறன.. பளபளப்பான பச்சை இலைகளுடன், வெள்ளை மடல்களுக்குள் அமைந்திருக்கும் கூர்மையான பாளையுடன் பூக்கும் வெள்ளை நிற லில்லி மலர், கன்னித்தன்மையையும் தூய்மையையும் பிரதிபலிக்கையில், டைகர் லில்லி வகை மலர்கள் கர்வத்திற்கும் நம்பிக்கைக்கும் அடையாளமாகக் கருதப்படுகின்றது.
நூற்றுக்கும் மேற்பட்ட இனங்களைக் கொண்ட குடைவகையைச் சார்ந்த இம்மலர்கள் ஏறக்குறைய அனைத்து வடிவங்களிலும் நிறங்களிலும் பூக்கின்றன.
அளவில் பெரியதாகவும் காண்போரை மென்மையாக அதிரச்செய்யும் டைகர் லில்லி மலர்களே, லில்லி இனங்களிலுள் மிகவும் கவர்ச்சிகரமான மலராகக் கருத்தப்படுகின்றது. லில்லி வகையில் வெள்ளை மற்றும் டைகர் லில்லி மலர்களுக்கு மட்டுமே நறுமணம் உண்டு, மற்ற வகையான லில்லி மலர்கள் வாசனையற்றன.

நீர் லில்லி ஆகியவை உண்மையில் லில்லி மலர் வகையைச் சார்ந்தது அல்ல.
 

JLine

Moderator
Staff member
53

Nerium oleander: The sweetly scented killer..

Nerium oleander is one of the most interesting organisms on the face of the planet! It can be found throughout the world in many warm habitats. This plant is often used as an ornamental plant in many gardens and road medians, because it is very resistant to many different plant killers such as predators, drought, and poor soil.

You wouldn't know it just by looking at it, the elegant Nerium oleander, the blossoms of which are crimson, magenta or creamy white, is one of the most toxic plants in the world. Every part of the plant, from its stem to its sap, is incredibly poisonous if ingested. Even inhaling the smoke from a burning oleander is a health threat.

The blossom is so dangerous that even the honey made by bees that used the oleander plant for nectar is poisonous.

The flower's toxins cause an irregular heart rate, which at first races and then drops to a rate far below normal, until the heart stops beating altogether.

Yet, the government of South Africa is currently endorsing the use of oleander extract as a treatment for HIV. Similarly, many universities and institutions in the country are following suit, using the extract for the support of cancer patients.

Oleander is official flower of Hiroshima. It was the first plant that managed to blossom after devastating effects produced by atomic bomb in the 1945.

அரளி: இனிமையான வாசனையுள்ள காலன்.

இவ்வுலகின் வியக்கத்தக்க உயிரினங்களுள் ஒன்று அரளிச்செடி. உலகின் பல்வேறு வெட்ப நிலங்களில் இதன் வளர்ச்சியைக் காணலாம். இச்செடியை தோட்டங்களிலும், சாலை தடுப்புகளிலும் அலங்கார தாவரமாக காணலாம், காரணம் பண்படாத நிலத்திலும் வறட்சியான இடங்களிலும் இவை வளர்வது மட்டுமன்றி பூச்சிகளும் இச்செடியை நெருங்க இயலாது.

சிவப்பு, மெஜந்தா மற்றும் வெள்ளை நிறங்களில் மலரும் இவ்வரளிச்செடி உலகிலுள்ள விஷத்தன்மை வாய்ந்த தாவரங்களுள் ஒன்றென்று, பார்ப்பவர்களால் அறியமுடியாது. தண்டு முதல் தளை வரை கடுமையான விஷத்தினைக் கொண்டிருக்கும் இச்செடியின் புகையை ஸ்வாசித்தலே உடலுக்குக் கேடாய் முடியும்.

அரளிச் செடியில் மலரும் பூக்களுமே அபாயகரமானவை.. தேனீக்களால் அப்பூக்களிலிருந்து எடுக்கப்படும் தேன் கூட விஷம் தோய்ந்ததாக இருக்கும்...

ஆயினும், தென் ஆப்பிரிக்காவின் அரசாங்கம் தற்போது உயிர்கொல்லி நோயான ஹெச்.ஐ.விக்கு ஒரு சிகிச்சையாக அரளியில் இருந்து பிரித்தெடுக்கப்படும் சாறினை பயன்படுத்துகின்றது. இதேபோல், நாட்டில் பல பல்கலைக் கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் புற்றுநோய் நிவாரணியாகவும் அரளிச்சாறை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கின்றன..

ஹிரோஷிமாவின் அதிகார பூர்வமான மலர் அரளி. 1954 இல் நடந்த அணுகுண்டு தாக்குதலுக்குப் பின்னர், அவ்விடத்தில் முளைத்த முதல் செடி இவ்வரளிச்செடியே.




 

JLine

Moderator
Staff member
Cyclamen… a hardy but beautiful plant.

The cyclamen was, with the columbine, one of the flowers of choice for 'Leonardo Da Vinci' at the 16th century, and he decorated the margins of his manuscripts with it.

In antiquity, the cyclamen was recognized for its therapeutic virtues, due to the presence of cyclamine, a bitter substance with purgative powers. It is a basic remedy in homeopathy for depression, hidden sorrows, or when one is turned in on oneself.

Cyclamen are a good flower to send someone if you’ve just broken up. However, if you’re still together it’s recommended that you avoid this pretty flower which symbolizes separation.


54

Cyclamens can be found in woody or rocky areas, and are generally hardy plants, but some of them go dormant in summer and appear to be dead, however, they will generally re-sprout leaves in autumn.

சிக்லமென்... ஒரு கடினமான தாவரத்தில் மலரும் அழகிய மலர்.

16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த லியோனார்டோ டா வின்சியின் கையெழுத்துப் பிரதிகளின் விளிம்புகளைச் சிக்லமென் மலர்களுடன் கொலும்பைன் மலர்களையும் இணைத்த வரைபடம் அலங்கரித்தது.

சிக்லமின் எனும் சுத்திகரிக்கும் சக்தியை உடைய கசப்பான உட்பொருளைக் கொண்ட சிக்லமென் மலர்கள், நோய் தீர்ப்பதற்கான மலர்களாகப் பழங்காலத்திலேயே அங்கீகாரம் பெற்றிருந்தன.

மனச்சோர்விற்கும், மறைக்கப்பட்ட துயரங்களினால் ஏற்படும் நோய்களுக்கும், தன்னைத்தானே நோகச் செய்து கொள்ளும் ஒருவனின் மனதையும் குணப்படுத்தும் மருத்துவக் குணங்களைக் கொண்ட இந்தச் சிக்லமென் மலர்கள், ஹோமியோபதி வைத்திய முறையில் பயன்படுத்தப் படுகின்றன.

மலர்களின் மொழி: உறவுகளுக்குள் ஏற்படும் பிரிவிற்கு அடையாளமாகப் பயன்படுத்தப்படும் மலர்கள் என்றும் இவை பெயர் பெற்றிருக்கின்றன..

சதுப்பு நிலங்களிலோ அல்லது பாறைகளிலோ காணப்படும் இவை பொதுவாகக் கடினமாக இருந்தாலும், இவற்றில் சில வகைகள் கோடைகாலத்தில் மடிந்துவிட்டது போல் தோன்றி, பின் இலையுதிர்காலத்தில் மீண்டும் வளரும் தன்மை கொண்டன.



 

JLine

Moderator
Staff member
55




Gloriosa/Flame lily: Flame lily, the flower which resembles the Flaming fire, first blooms in green, turns into a reddish yellow, and it continuous to change the colors from dark red to reddish orange. In general, all the bloomed flowers defoliate after certain period of time, however, flame lily does not fall apart. All parts of this plant are extremely poisonous due to the presence of toxic alkaloids including colchicine and can be fatal if eaten. Even to touch the plant can result in skin irritation.
A national treasure… As the national flower of Zimbabwe, the flame lily is a protected plant within the country. Queen Elizabeth II was presented with a flame lily diamond brooch as a gift from Zimbabwe (Southern Rhodesia as it was then) when she visited as crown princess in 1947.It is also the state flower of Tamil Nadu.




தீ கொழுந்துவிட்டு எரிவதுபோலக் காணப்படும் 'அக்னிசலம்' எனப்படும் செங்காந்தள் மலர்கள், முதலில் பச்சை நிறத்தில் அரும்பி பின் வெண்மை கலந்த மஞ்சள் நிறத்திற்கு மாறி, அதன் பின் செம்மஞ்சள், சிவப்பு, அடர் சிவப்பு ஆரஞ்சுமாக நிறம் மாறிக் கொண்டே போகும்.. பொதுவாக, மலர்கள் அனைத்துமே பூத்து உதிரக்கூடியவை. ஆனால், செங்காந்தள் மலர் மட்டும் வாடினாலும் உதிர்வதில்லை. தீண்டினாலே தோல் எரிச்சல் உண்டாக்கும் செங்காந்தள் மலர்கள் பூக்கும் தாவரத்தின் அனைத்து பகுதிகளிலும் கொலுச்சிசீன் எனப்படும் நச்சு காரப்போலியை கொண்டிருப்பதால், இதனை உண்பது உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும்.. ராணி எலிசபெத் II, 1947-ல் பட்டத்து இளவரசியாக இருந்த சமயத்தில் ஜிம்பாவே நாட்டை விஜயம் செய்தெ வேளையில், அந்நாட்டின் தேசிய மலரான செங்காந்தள் மலரின் வடிவமைப்பில் மாராப்பில் அணியப்படும் அணிகலனான ப்ரூச் அவருக்குப் பரிசாக வழங்கப்பட்டது. இந்தச் செங்காந்தள் மலர் தமிழ்நாட்டின் மாநில மலராகும்.



“தீயின் அன்ன ஒண் செங்காந்தள்
தூவல் கலித்த புது முகை ஊன் செத்து
அறியாது எடுத்த புன்புறச் சேவல்
ஊஉன் அன்மையின் உண்ணாது உகுத்தென
நெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய்
வெறிக்களம் கடுக்கும் வியல் அறை தோறும்”

நெருப்பைப் போன்ற பிரகாசமான மலர்கள் உடைய செங்காந்தள், மழையின் தூறல்களால் மகிழ்ந்து வளர்ந்திருக்கும். அதன் புதிய மொட்டை கறித் துண்டுகள் என நினைத்து, பொலிவிழந்த முதுகை உடைய ஆண் பருந்து அதை தான் உண்பதற்காக எடுத்துக் கொள்ளும். பின்பு அவை தான் நினைத்த கறித் துண்டுகள் இல்லை என அறிந்த பின்பு அவற்றை உண்ணாமல் உதிர்த்து விடும். இப்படி உதிர்த்த பல சிவப்பு நிற செங்காந்தள் மலரின் இதழ்கள் அகன்ற பாறை எங்கும் பரவி, பார்ப்பதற்கு வெறியாடுகின்ற களம் போலக் காட்சி தரும்.

 

JLine

Moderator
Staff member
56


Butterfly weed is native to the prairies of the Midwestern United States. It has flat clusters of bright orange blossoms and blooms from early summer to first frost in most areas.

These flowers attract butterflies, bees, and other pollinators. In fact it is the only host plant for monarch butterflies.Its tough root was chewed by the Indians as a cure for pleurisy and other pulmonary ailments, Butterfly Weed was given its other common name, Pleurisy Root. These take up to 3 years to really get growing.

Butterfly Weed: Let me go.. If you care about your relationship, under no circumstances should you send the butterfly weed? It literally means ‘Leave me’. You have been warned!

மேற்கத்திய அமெரிக்காவில் பரந்த புல்வெளியில் முளைத்திருக்கும் இச்செடிகளில், கோடைக்காலத்தின் துவக்கத்திலிருந்து முதல் உறை பணிக்காலம் வரை பிரகாசமான ஆரஞ்சு நிறங்களில் பூக்கும் இந்த மலர்கள், வண்ணத்துப் பூச்சிகள், தேனீக்கள், மற்றும் பிற அந்துப் பூச்சிகளை ஈர்க்கின்றன. முக்கியமாக, செவ்வரசு வண்ணத்துப் பூச்சிகளின் இருப்பிடம் இந்த மலர்கள் என்றே கூறலாம். இதன் கடுமையான ஆணிவேரை நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு இந்தியர்கள் (செவ்விந்தியர்கள்) மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். இந்தச் செடி வகைகள் முழுமையாக வளர்வதற்குக் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆகும்.

நீங்கள் உங்கள் உறவை பற்றி அக்கறை கொண்டிருந்தால், எந்தச் சூழ்நிலையிலும் இந்த மலர்களை அனுப்பக்கூடாது? ஏனெனில் 'என்னை விட்டுவிடு' என்று அடையாளத்துடன் இம்மலர்கள் அனுப்பப்படுகின்றன..



 

JLine

Moderator
Staff member
57

Peonies: Considered as one among the auspicious flowers, peonies are best known by its numerous petals and the flowers can reach up to 10 inches in diameter. The most popular varieties of peony are burgundy, pink, white and yellow colored. Peony signifies romance, elegance, honor, great esteem, wealth and abundance in the language of flowers. Peony is one of the most popular flowers used for the preparation of wedding bouquets.The Chinese name for the peony is "sho yu" and this means "most beautiful".

In Greek mythology, the peony is tied to a nymph named Paeonia. Paeonia is beautiful and attracts the attention of Apollo, the Greek God of light, was viewed as a handsome man, who begins to flirt with her. When Paeonia realizes that Aphrodite, the Greek goddess of love and beauty, is watching them, she becomes bashful and turns bright red. In anger, Aphrodite transforms the nymph into a red peony. This is how the peony came to symbolize bashfulness.

பியோனி: மங்களகரமான நாட்களுக்கு உகந்ததாகக் கருதப்படும் மலர்களில் ஒரு வகையான இந்தப் பியோனி மலர்கள், அடுக்கடுக்கான இதழ்களுடன் 10 அங்குலம் விட்டம் வரை கூட மலரக்கூடும். பர்கண்டி, இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் பூக்கும் இம்மலர்கள், காதலுக்கும், நேர்த்தியான அழகிற்கும், கௌரவத்திற்கும், மரியாதைக்கும், செல்வத்திற்கும், அபரிமிதமான வளத்திற்கும் அடையாளமாக அறியப்படுகின்றன. திருமணப் பூங்கொத்துக்களில் பயன்படுத்தப்படும் பிரபலமான மலர்களில் பியோனி வகையும் ஒன்று.. "மிகவும் அழகான" என்ற பொருளைக் கொண்ட "ஷியோ யு" என்ற பெயரில் சீனாவில் இம்மலர்கள் அழைக்கப்படுகின்றன.

கிரேக்க புராணத்தில், பியோனி மலர்கள் பயோனியா என்ற நீர்நங்கையின் கதையோடு இணைக்கப்பட்டிருக்கின்றது.

கிரேக்க கடவுளாகக் கருத்தப்படும் ஆணழகனான, ஒளியின் கடவுளான அபாலோ, பயோனியா என்ற நீர்நங்கையின் அழகால் கவர்ந்திழுக்கப்பட்டு அவளுடன் சரசமாட துவங்குகின்றான். ஆனால் காதலுக்கும் அழகுக்குமான கிரேக்க பெண் தேவதையான அப்ரோடைட் அவர்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்த பயோனியா, வெட்கமடைந்ததில் பிரகாசமான சிவப்பு நிறத்திற்கு மாறிவிடுகிறாள். அதனில் கோபமடைந்த அப்ரோடைட் அந்நீர்மங்கையைச் சிகப்பு பியோனி மலர்களாக மாற்றிவிட்டதில், இம்மலர்கள் நாணத்திற்கு அடையாளமாகக் கருத்தப்படுகின்றது.

 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top