JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Malarinum Melliyaval - Episodes 23 & 24

JB

Administrator
Staff member
அத்தியாயம் - 23

வார்த்தைகளில் தன் காதலை சொல்லாவிட்டாலும் உன் மேல் மனதில் எந்த அளவிற்கு ஆசை வைச்சிருக்கிறேன் பாருடி என்று காட்டுவது போல் இருந்தது அர்ஜூனின் ஆழ்ந்த முத்தம்...

அந்தக் கணம் அவன் தன் அந்தஸ்தை பற்றி யோசிக்கவில்லை... தன் வசதி பற்றி நினைக்கவில்லை... அவளின் படிப்போ, ஏழ்மை நிலையோ அவன் முன் தோன்றவில்லை....

அவனின் நினைவில் இருந்ததெல்லாம் அவள், அவள், அவள் மட்டுமே.

பத்தொன்பது வயதே ஆன அந்தச் சின்னஞ்சிறு சிட்டு அவனின் விவாகரத்து விஷயத்தில் அதிர்ச்சி அடைந்திருந்தாலும், அவனின் மென்மையான இதழ் முற்றுகையில் உடல் துவள, அவளின் தளிர் மேனியில் அவனின் ஸ்பரிசத்தால் எழுந்த சிலிர்ப்பை உணர்ந்தவன் இத்தனை நாளாய் தான் இழந்தது என்ன என்பதை உணர்ந்தான்...

நீண்ட நேரம் நீடித்த அந்த முதல் இதழ் முத்தத்தில் அவளுக்கு மூச்சிரைக்க, அவளின் திண்டாட்டத்தை உணர்ந்தவன் அவளது இதழ்களைத் தனது இதழ்களிடம் இருந்து விடுவித்தவன் அவளது கழுத்திற்கு இறங்கவும், அவனின் கைகள் அவளின் இடையை அழுத்தமாகப் பிடித்துத் தன்னுடன் இறுக்கி அணைத்ததில் அவளின் மார்பு அவன் நெஞ்சில் அழுத்தவும் தனது சுயநிலையை அடியோடு இழந்தான் அர்ஜூன்....

தீனமான குரலில் "வேண்டாம்" என்று அவள் கெஞ்சினாலும் திமிறாமல் தனக்குள் அடங்கியிருந்த தன் மனையாளுக்குத் தன் காதலையும் அதன் வேகத்தையும் இன்றே உணர்த்திவிடும் எண்ணத்தில் அர்ஜூனின் கரங்கள் அத்துமீற துவங்க, அவள் கழுத்திற்குள் ஆழ புதைந்திருந்த அவனின் இதழ்கள் கீழிறங்குவதை மேலும் தொடர, அவனின் தொடுகையும், அவனின் முரட்டு இதழ்களின் ஸ்பரிசமும் அவளைத் திக்குமுக்காட வைத்த அதே நேரத்தில் வீட்டின் முன் பக்க கதவு தட்டப்பட்டது....

ஒற்றை இதழொற்றலிலும், சில நிமிடங்கள் ஸ்பரிசத்திலும் அடங்கி விடக் கூடியதா அவனின் தாபமும் மோகமும்????

மேலும் மேலும் அவளில் மூழ்க துடிக்க இத்தனை நாள் இளம் மனைவி அருகில் இருந்தும் அவளை அடையாத ஏக்கம் அவனில் வெறியைக் கூட்ட, கதவு தட்டப்படும் ஓசைக் கூட அவனின் செவிகளில் இறங்கவில்லை...

ஆனால் அவளோ அவனின் உடல் வலிமையில் புள்ளி மான் வேட்டைக்காரனிடம் அடங்கியிருப்பது போல் அடங்கி அவனைத் தள்ள இயலாதவளாக நிற்க, மேலும் கதவு தட்டப்படத் தவித்தவள் தடுமாறியவாறே மெல்லிய குரலில்...

"எ... என்னங்க, அம்மா வந்துட்டாங்க போல... ப்ளீஸ் விடுங்க... கதவை திறக்கனும்" என்றாள்...

அவளின் வார்த்தைகள் காதலிலும் மோகத்திலும் கட்டுண்டு இருந்த அவனின் செவிகளுக்கு எட்டினால் தானே...

கணவனின் கரங்கள் மேலும் மேலும் இறுக்கியதில் தன்னை விடுவிக்கும் எண்ணமே அவனுக்கு இல்லை என்பதை உணர்ந்தவள் மீண்டும் தைரியத்தை வர வழைத்துக் கொண்டு...

"ஏங்க, ப்ளீஸ்ங்க... விடுங்க" என்று கூறி அவள் விலக முயற்சிக்க,

இதுவரை தன்னுடயை வலுவான அணைப்பிற்கு அடங்கித் திமிராமல் இருந்தவள் இப்பொழுது அவனை விட்டு விலகுவதை அறிந்து பல நாட்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு பொருள் கிட்டத்தட்ட கைகூடும் நேரத்தில் நம்மிடம் இருந்து பிடுங்கப்படும் பொழுது வருமே ஒரு கோபம்...

அதே போன்றதொரு கோபமும்....

தாபம் வழிந்தோடும் உடலின் உணர்வுகள் சட்டென்று தடைப்பட்டு அறுந்ததில் ஆண் மகன்களுக்கே ஆன தன் உரிமை பறிக்கப்பட்டதும் வரும் எரிச்சலும் தோன்ற...

வேட்கை வழியும் பார்வையில் தன்னவளின் அழகின் பரிணாமங்களை உணர்ந்திட துடித்த தன்னுடைய தவிப்பையும் மனையாளுக்கு உணர்த்தும் வகையில் அவளை ஏறிட்டு பார்த்தவன் என்ன நினைத்தானோ சட்டென்று விலகினான்...

என்னதான் முதலில் தான் அவனை விட்டு விலக முயற்சித்து இருந்தாலும் அவளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டு அவன் விருட்டென்று விலகியதில் அவளின் அலங்கோல நிலை அப்பட்டமாக வெட்ட வெளிச்சமாகத் தென்பட,

தன் மனையாளை அந்தத் தோற்றத்தில் கண்டவன் உணர்ச்சிகளுக்கு மீண்டும் அடிமையாக, தத்தளித்துத் தவித்த தன் மனதை இறுக்கி பிடித்துக் கட்டுப்படுத்த முயற்சி செய்தவன் அவளை விட்டு இரண்டு அடிகள் தள்ளி நிற்க,

அவனின் விழிகள் தன் பூவுடலில் படிந்திருக்கும் இடத்தினைக் கண்டவள் சட்டென்று தன் புடவையை இழுத்து தன் மார்பை மூட, அவளின் அவசரத்தில் புன் முறுவலை தவழவிட்டவன்...

"முடியையும் அட்ஜஸ்ட் பண்ணு" என்றானே பார்க்கலாம்...

முகம் முழுவதும் பூரிப்புடன் அவன் சொன்னதும், சட்டென்று தலை முடியையும் சரி செய்தவளின் கண்கள் வெட்கத்துடன் அவன் கண்களைச் சந்திக்க, தன் விரல்களால் அவளின் பட்டுக் கன்னங்களைத் தடவியவன்...

"போ.. போய்க் கதவத் திற" எனவும்...

அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வெட்கம் பிடுங்கி திங்க,

வேகமாகத் தன் அறைக் கதவை திறந்தவள் வெளியே செல்லவும் தன் தலையை அழுந்த கோதி தன்னிலையை அடக்கியவன் அவளைப் பின் தொடர்ந்தான்.

கதவை தட்டி இவ்வளவு நேரம் மகள் கதவை திறக்காததில் இருந்தே ஊகித்து இருந்த கலா "சே சிவ பூஜையில் கரடி மாதிரி வந்திட்டோம் போல" என்று கணவரின் காதுகளில் சொல்ல, திவ்யா கதவைத் திறந்தாள்...

கணவனுடனான மனத்தாங்கலினால் வீட்டை விட்டு வந்திருந்த இந்த இரண்டு நாட்களும் அழுது கரைந்திருந்த மகளின் முகத்தில் இப்பொழுது தோன்றும் இந்த வெட்கமும், நாணத்தால் செந்நிறமாய்ச் சிவந்திருந்த அவளின் முகமும் கணவன் மனைவிக்குள் நடந்தேறிய சல்லாப விளையாட்டுக்களைப் பெற்றவர்களுக்கு உணர்த்த,

தங்களின் வரவால் தம்பதியினரின் பொன்னான நேரங்கள் தடைப்பட்டதை உணர்ந்தவர்கள் குற்ற உணர்வுடன் அவளைப் பார்த்தவாறே வீட்டிற்குள் நுழைந்து...

"திவ்யா... மாப்பிள்ளைக்குச் சாப்பிட எதுனா கொடுத்தியா?" என்று அர்ஜூனைப் பார்த்துக் கொண்டே கேட்க,

தன் மனையாளைப் பார்த்தவாறே....

"இல்லை ஆண்டி... நாங்க சீக்கிரம் கிளம்பனும்" என்றான்...

அவன் கஷ்டம் அவனுக்கு...

இத்தனை நாட்கள் தன்னை ஏக்கத்துடன் காத்திருக்க வைத்த தன் மனைவி, தான் இவ்வளவு கடுஞ்சொற்கள் பேசி அவளைத் தூற்றி அவமானப்படுத்தியும் தன்னை ஒரு சொல் கூடக் கேட்காது தன்னை எதிர்க்கவும் செய்யாது தனக்குள் அடங்கியிருந்தவளைக் கண்டவன்....

தான் அவளைத் தன் மனையாளாக எடுத்துக் கொள்ளும் நேரத்தை எதிர்பார்த்துத் தங்கள் வீட்டிற்கு எப்பொழுது செல்வோம் என்று காத்திருக்க, இதில் உணவு முக்கியமா? என்ன?...

அவன் கூறியதும் சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்குச் சற்று நேரத்திற்கு முன் அவன் தன்னிடம் வாங்கியிருந்த கையெழுத்து நியாபகம் வர, அது மட்டும் அல்லாமல் அவளைத் தன்னுடன் அழைத்துப் போக அவன் கூறிய காரணமும் புத்தியில் அடித்தது போல் கண்முன் தோன்ற,

மீண்டும் தன்னையும் அறியாமல் அச்சம் தொற்றிக் கொள்ளச் சிலைப் போல் தயங்கி நின்றவளின் அருகில் வந்த வினோத்...

"ஏன் திவ்யா, அதான் அத்தானே நேர உன்ன கூட்டிட்டு போக வந்திருக்கும் போது ஏன் இப்படித் தயங்குற??" என்றான்...

திரும்பி தன் அண்ணனைப் பார்த்தவள் ஒன்றும் பேசாமல் நிற்க, அவள் அருகே வந்த சிவ சுப்ரமணியம்...

"திவ்யா, எந்தப் பிரச்சனையா இருந்தாலும் அத உங்களுக்குள்ளே தீர்த்துக்கனும்டா..... இப்படி வெளியே வரக் கூடாது, போ.... போய்க் கிளம்பு" என்றார்...

அவளின் உணர்வுகள் அர்ஜூனிற்கு நன்றாகப் புரிந்தது...

காதல் கொண்ட தன்னவளின் மனதிற்கு அணைப்பும் வேண்டும் அதே சமயம் காயம் கண்ட அவளது மனதிற்கு ஆறுதலும் வேண்டும்...

இரண்டுக்குமே மருந்து தான் தான் என்று அவனுக்குத் தெரியாதா என்ன?

அவளின் அச்சத்தையும், கலக்கத்தையும், தவிப்பையும் போக்கும் பொருட்டு அவளின் வெகு அருகே நெருங்கி வந்தவன் காதிற்கருகில் குனிந்து,

"இப்போ மட்டும் நீ என் கூட வரலை, உன்னைத் தூக்கி கார்ல போட்டுட்டு போய்ட்டே இருப்பேன்" என்றான்...

நிமிர்ந்துப் பார்த்தவளின் மனதில் சற்று முன் நடந்தது நினைவு வர, அவளின் முகத்தில் தெரிந்த மாற்றத்தைப் பார்த்தவன் மற்றவர்கள் அவளையே பார்ப்பதையும், ஒருவரும் தன்னைப் பார்க்காததையும் உறுதி செய்து கொண்டவன் அவளைப் பார்த்துக் கண் சிமிட்ட,

அதில் அவன் முகம் காண முடியாமல் அவள் சட்டென்று தலை குனிந்து நின்ற தோற்றம் அவனுக்குச் சிரிப்பை வரவழைக்க,

"சரி அன்கில், அப்ப நாங்க கிளம்புகிறோம்" என்றான் இளம் முறுவலுடன்...

அவள் தன்னறைக்குத் தன் பெட்டியை எடுக்கச் சென்றதும் அர்ஜூனின் அருகில் வந்த சிவ சுப்ரமணியம்....

"மாப்பிள்ளை, திவ்யா சின்னப் பொண்ணு... வெளி உலகம் தெரியாதவள்.... பயந்த சுபாவம்.... ஆனால் ரொம்பப் பொறுமைசாலி.... இதை நான் அவ என் பொண்ணுங்கறதுக்காகச் சொல்லலை... அவள் அவங்க அம்மா மாதிரி.... என்ன சொன்னாலும் கேட்டுப்பா.... அவ ஏதாவது தப்பு பண்ணியிருந்தா நான் உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்" என்று சொல்ல,

"ஆமாம், மாப்பிள்ளை.... அவள் வந்தவுடன் நான் ஸ்ரீயிடம் பேசுறேன்னு தான் சொன்னேன்.... அவ தான் விடாப்படியா கூடாதுன்னு சொல்லிட்டா.... ஸ்ரீயிடமும் நாங்க மன்னிப்புக் கேட்டதா சொல்லுங்க" எனவும்...

அப்பொழுது தான் அர்ஜூனிற்குப் புரிந்தது தன் அன்னை மருத்துவமனையில் இருப்பது இவர்கள் யாருக்கும் தெரியாது என்று...

அதனால் தான் திவ்யா தன்னிடம் தன் அன்னையைப் பற்றியும் விசாரிக்கவில்லையோ என்று தோன்ற இவர்களிடம் சொல்லலாமா என்று யோசித்தவன்...

"இப்பொழுது சொன்னால் திவ்யாவும் பயந்து விடுவாள்... அதனால் நாளைக்கு மாமை விட்டே இவங்கக் கிட்ட பேச சொல்லனும்" என்று நினைத்துக் கொண்டான்..

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே திவ்யா வர, பெற்றோரிடமும், தமையனிடமும் சொல்லிவிட்டு அவர்கள் காரை நோக்கி செல்ல, தன் அண்ணனை திரும்பி பார்க்கவும் அவளின் அருகில் வந்த வினோத் கண்கள் கலங்க...

"எனக்கு ஃபோன் பண்ணுடா" என்றான்...

அவர்களின் அன்பை பார்த்த அர்ஜூனிற்குத் தான் எப்பொழுதும் மஹாவிடம் தன்னுடைய பாசத்தை வெளிக்காட்டியதே இல்லையே என்று நினைக்க,

தன் வாழ்க்கைக்குள் வந்த இந்தச் சின்னப் பெண் எத்தனை மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறாள் என்று அவனால் உருகாமலும் இருக்க முடியவில்லை..

அவர்களின் கார் கண்களில் இருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் உள்ளே வந்ததும் சிவ சுப்ரமணியம்....

"மாப்பிள்ளை நல்ல வசதின்னு தெரியும்... ஆனால் இவ்வளவு பெரிய கோடீஸ்வரரா இருப்பார்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கவில்லை கலா.... எனக்கு என்னமோ இன்னும் அதிகமா பயம் வந்திருக்கு.... திவ்யா எந்தக் குறையும் இல்லாமல் இருக்கனும்"

"ஏங்க, மாப்பிள்ளை நம்ம ஸ்ரீக்கும் பாலா அண்ணனுக்கும் பிறந்தவர்.... நிச்சயம் நம்ம பொண்ண நல்லா வச்சுப்பாரு... இல்லைன்னா அவ இப்படிக் கிளம்பி வந்தாலும் அவரா வந்து கூட்டிக்கொண்டு போவாரா? என்றார்..

வினோத்திற்கோ...

"மஹாவை எப்படி நமக்குத் திருமணம் செய்து கொடுப்பாங்க? நமக்கும் அவங்களுக்கும் மடுவுக்கும் மலைக்கும் உள்ள உயரம் ஆச்சே" என்று கலங்கிப் போய் இருந்தான்.

அவன் கவலை அவனுக்கு!!!!

தொழில் வட்டாரத்தில், வெளி உலகத்தில் எத்தனை எத்தனையோ போட்டிகளையும், இன்னல்களையும், வலிகளையும் சந்தித்திருந்த அர்ஜூனிற்கு, அவற்றில் எண்ணிலடங்கா ஏற்றங்களையும் வெற்றிகளையும் கண்டவனுக்கு அப்பொழுதெல்லாம் வராத அக்களிப்பு மீண்டும் பல நாட்களுக்குப் பிறகு தன்னருகில் அமர்ந்திருக்கும் தன்னவளின் எழில் முகத்தைத் திரும்பி பார்த்ததும் வந்தது...

சாதிக்க முடியாத, முடியாது என்று நினைத்து மருங்கி ஒடுங்கி இருந்த ஒரு காரியத்தில் ஒருவரும் எதிர்பாராது திடீரென்று வெற்றி ஏற்படும் பொழுது வருமே ஒரு இறுமாப்பு... மகிழ்ச்சி... பூரிப்பு...

அதைப் போன்ற உணர்வுகளில் சிக்கி இருந்தான் அர்ஜூன்...

மதியம் அலுவலகத்தில் இருந்து கடலூருக்கு அவன் கிளம்பும் பொழுது கூட அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.... தன் மனைவி எந்தவித மறுப்பும் சொல்லாமல் தன்னை எதிர்க்காமல் இப்படித் தன்னுடன் திரும்பி வருவாள் என்று...

அவள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவளைத் தூக்கிக் கொண்டாவது வருவேன் என்று தன் மனதிற்குள் சூளுரைத்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் எதிர்ப்பைக் காட்டாது இவ்வாறு அமைதியாக வருவது மனதிற்கு அத்தனை இதமாக இருந்தது...

சில நேரங்களில் கிடைப்பதற்கரிய வைரங்கள் நமக்கு எந்தப் போராட்டமும் இல்லாமல் கிடைக்கும் பொழுது அதன் அருமை தெரியாமல் அதனைத் தூர எறிந்துவிடுவோம்....

அருமை தெரியவரும் பொழுது அது நம்மை விட்டு எட்ட முடியாத தூரம் போயிருக்கும்... அதைப் போன்ற சூழ்நிலைகளில் ஒரு வேளை நாமே எதிர்பார்க்காமல் அந்த வைரங்கள் நம்மிடம் திரும்பி வந்து சேர்ந்தால்?????

பாதியில் நின்றிருந்த தன் மனையாளுடனான காதல் களியாட்டத்தைத் தொடர அதிவேகமாகக் காரை செலுத்திக் கொண்டிருந்த அர்ஜூனின் மனதில் ஊர்ந்து கொண்டிருந்த குதூகலத்தைத் தடுப்பது போல் அலறியது அவனது அலை பேசி...

அழைத்தது கதிர் தான்...

அலுவல் விஷயமாகப் பேசிக் கொண்டே, வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு வரும் மனைவியையும் ரசித்துக் கொண்டே வந்தவன் எதிர்பாராமல் பேச்சு பல நிமிடங்கள் தொடர திரும்பிப் பார்த்த பொழுது அவனது அழகிய மனையாள் சிறு பிள்ளைப் போல் காரின் கண்ணாடி ஜன்னலில் தலை சாய்த்து தேவதை போல் உறங்கிக் கொண்டிருந்தாள்...

பேச வேண்டிய விஷயங்களைப் பேசி முடித்த பின்...

"ஓகே கதிர், ஐ வில் ஸீ யூ டுமாரோ [I will see you tomorrow]"

என்று அழைப்பை துண்டித்தவனுக்குத் தன்னவளுடன் தனித்து, அதுவும் தூங்கும் அவளை இடையறாது ரசிக்க ஏதுவாக இருந்த இந்த நீண்ட முதல் பயணம் முத்தான பயணமாக அமைவது போல் இருந்தது காரினுள் வழிந்த அந்த இனிமையான இசையில், மறைந்த திரு. நா முத்துகுமார் அவர்கள் எழுதிய பாடல் ஒலித்த பொழுது....

அர்ஜூனின் மனதிற்கும் ஏக்கத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற மாதிரி இருந்த அந்தப் பாடல்.....

முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டில் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதைக் கொடுத்தாள் உடனே எடுத்து சென்று விட்டாள்


கால்தடமே பதியாத கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்தும் மௌனத்தில் நின்றேன்
ஒரு கரையாக அவள் இருக்க மறு கரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளும்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்கக் கைகள் நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவில் வேடிக்கை பார்க்கிறதே


அமைதியுடன் அவள் வந்தாள்
விரல்களை நான் பிடித்துக் கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலைகோத மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தே அவளும் இல்லை கசந்தது நிமிடம்
அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்
தொலைவில் தெரிந்தாள் மறு நிமிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே திரை ஒன்று தெரிந்தது
எதிரினிலே முகமுடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா



சுனாமி போன்று வாழ்க்கையில் எத்தனை பெரிய சம்பவங்களோ அல்லது சூழ்நிலைகளோ மனதை சுழற்றி அடித்துக் கொண்டிருந்தாலும், அமைதியான சூழலில், அதுவும் தன் மனதிற்கு நெருங்கியவர்கள் அருகில் இருக்க, இது போன்ற மெல்லிசையைக் கேட்பது உள்ளத்திற்கு அமைதியை அளிப்பது மட்டும் இல்லாமல் நம் உயிரின் வேர் வரை சென்று இதயத்தையும் பரவசப்படுத்தும்...

அதைப் போன்ற ஒரு உணர்வில் இருந்தான் அர்ஜூன்....

அருகருகே இருந்த போதும், மனம் கொள்ளா காதல் இருந்த போதும், உள்ளங்கள் இரண்டும் காதலை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை... ஆனால் வார்த்தைகளால் சொன்னால் தான் காதலா????....

கணவனைப் பிரிந்து வந்த இந்த இரண்டு இரவுகள் முழுவதும் அழுகையில் கரைந்ததினால் வராத தூக்கத்தினாலோ, அல்லது தன் கணவனின் அருகாமை அளித்த நிம்மதியினாலோ, அல்லது சில மணித் துளிகளுக்கு முன் அவனின் இறுக்கிய அணைப்பினால் வந்த சுகத்தினாலோ என்னவோ தூக்கம் திவ்யாவை அழுத்த,

தன் தலையைக் கார் இருக்கையில் சாய்த்து தூங்க ஆரம்பித்தவள் சிறிது நேரத்தில் தன்னையும் அறியாமல் தன்னவனின் தோள் சாய்ந்தாள்.

அவள் தலை தன் தோளில் பட்டதும் திரும்பி பார்த்தவன், அந்த இருட்டிலும் வெளியில் இருந்து வந்த சிறு வெளிச்சத்தில் அவளின் முகம் முழுமதி போல் தோன்ற அந்தப் பாடலின் வரிகளில் வருவது போல் முழுமதி அவளது முகமாகும், மல்லிகை அவளின் மணமாகும் என்பது போல் இருக்க மெதுவாக விசில் அடித்துக் கொண்டு காரை செலுத்தியவனுக்கு உலகமே அழகாகத் தெரிந்தது...

காரின் வேகத்தை அவன் மேலும் அதிகரிக்க அவள் தலை கீழே சாய்வது போல் இருக்க, சட்டென்று அவளை நெருங்கி அமர்ந்தவன் இடது கையைக் கியர் பாக்ஸிற்கும் அவளின் தலைக்கும் மாற்றி மாற்றிக் கொடுத்துக் கொண்டு காரை ஓட்டியவனின் மனம் மகிழ்ச்சியில் சிறகு விரித்துப் பறந்து கொண்டிருந்தது...

குடும்பத்தினருக்கும், தொழில் வட்டாரத்திலும், வெளி உலகத்தினருக்கும் தெரிந்த அர்ஜூன் தொழிலில் ஒரு அரக்கன்....

எதிராளியை மட்டும் அல்ல, அவனின் கிளைகளையும் கூட உருத் தெரியாமல் அழித்துவிடுபவன் என்று பேரெடுத்து இருப்பவன்

எந்த உணர்வுகளுக்கும் ஆட்படாத அந்த அஞ்சா நெஞ்சனின் நெஞ்சில் கூடக் காதலை சுரக்க செய்த தன் மனையாளுடனான இந்தப் பயணம் சுகமாக இருக்க, அவளைத் திரும்பி பார்த்தவன் அவளின் நெற்றியில் சிலும்பிய முடியை ஒதுக்கி மென்மையாக முத்தமிட்டான்...

மனம் இலகுவாகக் காரை வேறு விரைவாகச் செலுத்திக் கொண்டு வந்ததால் மருத்துவமனையைச் சீக்கிரம் அடைய, காரை நிறுத்தியவன் தன் தோளில் அழுந்த முகம் வைத்து உறங்கிக் கொண்டிருந்தவளை சில நொடிகள் ரசித்துப் பார்த்துப் பின்...

"திவ்யா" என்று அழைக்க,

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள் விழித்தால் தானே...

அவன் அழைக்கவும் அந்தச் சத்தத்தில் தன் முகத்தைத் தன் கணவனின் தோளில் திருப்பி லேசாகத் தேய்த்துக் கொண்டவள் தன்னையும் அறியாமல் தனது இடது கரத்தை அவன் நெஞ்சில் வைத்து அவன் சட்டையை இறுக்கி பற்றித் தன் தூக்கத்தைத் தொடர, மனம் தடுமாறிப் போனான் அர்ஜூன்...

தன்னவளின் அருகாமையில் குழந்தைத்தனமான அவளின் செயலில் கணவனாகக் கர்வம் கொண்டவன் மெல்ல அவளின் இடது கன்னத்தில் தனது வலது கையை வைத்து தன் கட்டை விரலால் அவளின் மலரிதழ்களை மென்மையாகத் தடவ, அவனின் தொடுகையில் உதடுகள் கூச அத்தனை நேரம் அசந்து தூங்கிக் கொண்டு வந்தவள் கண் விழிக்கவும் அப்பொழுது தான் கவனித்தாள் தான் தன் கணவனின் தோளில் சாய்ந்து இருப்பதையும், அவனின் விரல்கள் தன் இதழ்களில் கவி பாடிக் கொண்டிருப்பதையும்....

சட்டென்று நகர்ந்தவளின் முகத்தில் நாணம் படர அந்த இரவு நேரத்தின் இருட்டிலும் அவளின் வெட்கத்தில் சிவந்த முகத்தைப் பார்த்தவன் இதற்கு மேலும் தாமதிக்க முடியாது என்று தன் அன்னையைச் சந்தித்த பிறகு விரைவில் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து...

"இறங்கு" என்றான்...

இறங்கியவள் சுற்றும் முற்றும் பார்க்க சில விநாடிகள் கழித்தே புரிந்தது அவர்கள் இருப்பது மருத்துவமனை என்று...

இங்கு எதற்கு வந்திருக்கிறோம் என்று அவள் அவனைக் கேள்வியாகப் பார்த்தவள் மனம் படப்படக்க,

"யாருக்கு? என்னாச்சுங்க? ஏன் இங்க வந்திருக்கிறோம்? என்று கேட்க,

ஒன்றும் பேசாமல் காரை பூட்டியவன் "வா" என்பது போல் தலையை அசைத்துவிட்டு நடக்கவும் குழப்பத்துடன் தன் கணவனைப் பின் தொடர்ந்தாள்...

வாசலில் இருந்த காவலாளி...

"சார் மணி பதினொன்னாகுது... விசிட்டர்ஸ் டைம் முடிஞ்சிட்டுது.... நீங்க நாளைக்கு வாங்க" என்று சொல்ல,

அது வரை இருந்த ரம்மியமான மனநிலை மாறி அர்ஜூனின் கோபம் மீண்டும் தலை தூக்கியது...

அவரை முறைத்துப் பார்த்துக் கொண்டே மருத்துவமனையின் இயக்குனர் சுந்தருக்கு அழைத்தவன்,

"அன்கில்... கேன் யூ ஆஸ்க் தி செக்யூரிட்டி டு லெட் மி இன்? [Uncle... Can you ask the security to let me in?] " என்றான்...

அவர் மறுமுனையில் என்ன சொன்னாரோ அலை பேசியை காவலாளியிடம் நீட்ட, வாங்கிக் காதில் வைத்த காவலாளி "சரி சார்" என்றவன் அலை பேசியை அர்ஜூனின் கையில் திருப்பிக் கொடுத்து "சாரி சார்" என்று சொல்லிக் கொண்டே கதவை திறந்துவிட்டான்.

"இவர் என்ன செய்தாலும் மாறப் போவதில்லை... செக்யூரிட்டி அவர் வேலை செய்கிறார்... அதுக்கு ஏன் இவ்வளவு கோபம்?" என்று நினைத்துக் கொண்டே அவனைப் பின் தொடர்ந்தவள் அவன் சென்று நின்ற அறையைப் பார்த்ததும் அவனை நிமிர்ந்து பார்க்க...

"உள்ள போ" என்றான்...

என்ன? யாருக்கு? என்ன உடம்புக்கு? என்று பதற்றத்துடன் அவனை நோக்கியவாறே அறைக்குள் சென்றவள் அங்குத் தன் மாமியாரை படுக்கையில் கண்டதும் அதிர்ச்சியில் அவரின் அருகில் ஓடியவள்...

"அத்த, என்னாச்சுத்த? எனவும்...

திவ்யாவை அந்த நேரத்தில் எதிர்பார்க்காத ஸ்ரீக்கு அவளை விட அதிர்ச்சியாக இருந்தது...

"நீ எப்போ திவ்யா வந்த?"

"உங்களுக்கு என்னாச்சு அத்த? அத சொல்லுங்க முதல்ல"

அங்குத் தூங்கிக் கொண்டிருந்த மஹாவும் திவ்யாவின் குரலில் எழுந்து விட, திவ்யாவை பின் தொடர்ந்து வந்த அர்ஜூனைப் பார்த்ததும் ஸ்ரீயின் குழப்பத்திற்கு விடை கிடைத்தது...

அர்ஜூன் தான் திவ்யாவை வர வழைத்து இருக்கிறான் என்று.

ஆனால் அர்ஜூன் நேரே சென்றது அவருக்குத் தெரிய வழியில்லையே...

திவ்யா ஸ்ரீயிடம்...

"அத்த சொல்லுங்கத்த... என்னாச்சு உங்க உடம்புக்கு?" என்று கண்கள் கலங்க கேட்க,

"ஏம்மா வீட்ட விட்டு போன? அதுவும் என் கிட்ட கூடச் சொல்லாம லெட்டர் எழுதி வச்சுட்டு?" என்றார் பரிதவிப்புடன் குரலும் வார்த்தைகளும் நடுங்க...

கம்பீரமாக அத்தனை தொழிற்களையும் ஒற்றையாளாக, வழிகளில் எதிர்பட்ட ஒவ்வொரு எதிராளிகளையும் போட்டியாளர்களையும் எளிதில் வென்று வெற்றிக் கொடிய நாட்டிய தன் அன்னை இன்று தன் மனையாளைப் பார்த்ததும் விழிகள் கலங்க குரலிலும் நடுக்கம் தெரிய கலக்கத்துடன் அவள் கரங்களை இறுக்கப் பற்றிக் கேட்ட பொழுது அர்ஜூனிற்குப் புரிந்து போனது தன்னவளின் மலரினும் மெல்லிய மனதின் பேரழகு...

தன் மாமியார் கலக்கத்துடன் கேட்டதும் தன்னையும் அறியாமல் தன் கணவனைத் திரும்பி பார்த்தவள் அவன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருப்பதைக் கண்டு ஒன்றும் சொல்லாமல் தலை குனிய,

"அண்ணி, நீங்க வீட்டை விட்டுப் போனது தெரிஞ்சதும் அம்மாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்திடுச்சு... நல்ல வேளை உடனே கொண்டு வந்து ஹாஸ்பிட்டலில் சேர்த்துட்டாங்க" என்று மஹா கூறியதும் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் உடலில் பாய்ந்தது போல் உணர்ந்து அதிர்ந்தாள் திவ்யா...

"ஐயோ! என்னாலயா? அத்த என்ன மன்னிச்சுடுங்க அத்த... நான் சத்தியமா இந்த மாதிரி நடக்கும்னு நினைச்சுக் கூடப் பார்க்கலை... தெரிஞ்சிருந்தா நிச்சயம் உங்கள விட்டுட்டு போயே இருக்க மாட்டேன்" என்று கண்களில் நீர் ஆறாகப் பெருக்கெடுக்க வெடித்துக் கதறினாள்...

அவளை இழுத்துத் தன்னருகில் அமர்த்திக் கொண்ட ஸ்ரீ,

"எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் வீட்டை விட்டுப் போகக் கூடாது திவ்யா... அது ரொம்பத் தப்பு.... உன் பக்கமே நியாயம் இருக்கட்டும்... ஆனால் அத பேசித் தான் தீர்த்துக்கனுமே தவிர இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவெடுக்கக் கூடாது.... அதுவும் ஒரு சின்னப் பொண்ணு... ஊர் பேர் தெரியாத ஊர்ல இருந்து தனியா இப்படி வீட்டை விட்டுப் போறதெல்லாம் ரொம்பத் தப்பு... ஏதாவது ஏடா கூடமா ஆனா என்ன பண்ணுவ? எனவும்,

"கடவுளே! இப்பொழுது கூட என்னால் தான் உடம்பு முடியாமல் போனதை நினைக்காமல் என்னைப் பத்தி கவலை படுறாங்க... அவங்களுக்குப் போய் இவ்வளவு கஷ்டம் கொடுத்திட்டேனே" என்று மனமுருக உள்ளுக்குள் கதறியவள்...

"இனி உங்கள விட்டு எங்கேயும் போக மாட்டேன் அத்த" என்றாள்.

"சரி அது இருக்கட்டும்.... நீ எப்படி, எப்போ வந்த?"

அவரின் கேள்வியில் மீண்டும் தலை கவிழ்ந்தவள் மெல்லிய குரலில்....

"அவங்க தான் அத்த வந்து கூப்பிட்டுட்டு வந்தாங்க" என்றதும் ஸ்ரீயின் முகத்திலும் மஹாவின் முகத்திலும் ஆச்சரியம் டன் டன்னாக வழிந்தது...

என்னது? அர்ஜூன் போய்க் கூட்டிட்டு வந்தானா என்று ஸ்ரீ மஹாவைப் பார்க்க, சொன்னேன் இல்லையா அண்ணாவுக்கு அண்ணிய ரொம்பப் பிடிக்கும் என்று, என்று உள்ளர்த்தத்துடன் மஹா ஸ்ரீயை பார்க்க, இவங்க ஆச்சரியப்படுவதைப் பார்த்தால் இப்போதைக்கு எங்களை விட மாட்டாங்க போல இருக்கே, இங்க இருந்து இப்போ இவளை எப்படிக் கூட்டிட்டுப் போறது? என்று அர்ஜூன் யோசனையில் ஆழ்ந்தான்...

ஆனால் அவன் அர்ஜூன் ஆயிற்றே!! இதற்கெல்லாம் கூச்ச படுபவனா என்ன?

"ஓகே மாம், அப் அன்ட் டௌன் ட்ரைவிங் பண்ணியது எக்ஸ்ட்ரீம்லி டைர்டா [ Ok Mom...Up and Down driving extremely tired] இருக்கு, வீ வில் கம் போக் டுமாரோ [We will come back tomorrow]" என்றவன் திவ்யாவைப் பார்த்து வா என்பது போல் தலை அசைக்க,

ஏற்கனவே இன்ப அதிர்ச்சியில் இருந்தவர்களுக்கு மேலும் மேலும் அவன் ஆச்சர்யத்தைக் கொடுக்க,

"போதும்டா அர்ஜூனா... ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்த உடம்பு... இதற்கு மேல் தாங்காது" என்பது போல் அவனைப் பார்த்தவர்...

"சரி நீங்க கிளம்புங்கப்பா... நாளைக்குப் பார்க்கலாம்" என்றார்...

அவன் பாதி ஆங்கிலத்தில் சொன்னது புரியாமல் திவ்யா அமர்ந்திருக்க அவளைத் திரும்பி பார்த்தவன் தான் வா என்று தலை அசைத்தும் திருதிருவென்று முழித்தவளைப் பார்த்து புன்னகைத்தவன்...

"கிளம்பு" என்றான்...

ஆனால் திவ்யாவிற்குத் தான் மனம் வரவில்லை... வீட்டிற்குச் சென்றால் என்ன நடக்கும் என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும்...

இத்தனை தூரம் தன்னை வந்து அழைத்துக் கொண்டு வந்தவர் நிச்சயம் கணவனின் உரிமையைத் தன்னிடம் எதிர்ப்பார்ப்பார்.

இனி அதை மறுக்க முடியாது... மறுத்தாலும் விடமாட்டார்... ஆனால் தன்னால் இப்படி இருதய நோய் வந்து அத்தை இருக்கும் பொழுது தான் மட்டும் சந்தோஷமாக இருப்பது பெரும் பாவம் இல்லையா? என்று யோசித்தவள்...

"நான் இன்னைக்கு நைட் இங்கேயே அத்தைக் கூட இருக்கேன்" என்றாள் தன் கணவன் என்ன சொல்வானோ என்ற பரிதவிப்புடன்...

ஆனால் ஸ்ரீக்கோ மனம் வரவில்லை... இத்தனை தடங்கல்களுக்குப் பிறகு, மனஸ்தாபங்களுக்குப் பிறகு சின்னஞ்சிறுசுகள் ஒன்று சேரப் போகிறார்கள்... இந்த நாளுக்காகத் தானே அவரும் காத்திருந்தது... அவர்களின் பொக்கிஷமான இரவை தன்னால் இழக்கப் போவதை உணர்ந்தவர்...

"இல்ல திவ்யா, அதான் மஹா இருக்கால்ல... நீ போய்ட்டு நாளைக்கு வா" எனவும்...

"எப்படி அத்தை இந்த நிலைமையில் உங்களைப் பார்த்திட்டு விட்டுட்டு போறது?" என்றாள்...

அவளின் இடத்தில் இருந்து பார்த்தால் அவள் சொல்வது சரியே...

மீண்டும் தன் கணவனை நிமிர்ந்து பார்த்தவளின் முக மாற்றங்களை கண்டவன் அவளின் எண்ணங்களையும் புரிந்து கொண்ட ஒரு நல்ல கணவனாக....

"ஓகே மாம், அப்ப நாளைக்கு வரேன்..." என்றான்...

பேசிக் கொள்ளாமலே ஒருவொருக்கொருவரின் எண்ணங்களைப் புரிந்துக் கொண்டவர்களைப் பார்த்த ஸ்ரீக்கு, இவர்களின் நேற்றைய பிரிவு இன்றைய மனம் ஒற்றுதலை கொடுத்திருக்கிறது என்று உணர்ந்தவராக..

"சரிப்பா, அப்போ எதுக்கு இரண்டு பேர் இங்க? நீ மஹாவக் கூட்டிட்டு போப்பா" என்றார்

சரி என்றவன் மஹாவுடன் கிளம்ப, என்ன தான் தான் வரவில்லை என்று கூறி விட்டாலும் அவனைப் பிரிவது மனதில் அழுத்தமான ஒரு வித வலியைக் கொடுக்க, அவனை நிமிர்ந்துப் பார்த்தவளின் கண்களில் தெரிந்த ஏக்கத்தைப் பார்த்தவனுக்கு உள்ளம் பூரித்துத் தான் போனது...

"நாம் ஒன்று சேர்வதற்கு இன்னும் ஒரு நாள் இருக்கு போல டி" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் அவளைப் பார்த்து தலையை மட்டும் அசைத்து விடை பெற்று செல்ல, அவன் சென்ற பிறகும் வாயிலையே பார்த்திருந்த மருமகளைப் பார்த்தவர்...

"நாளை எப்படியும் இவர்களுக்கு நல்ல நாளாகவே விடிய வேண்டும்" என்று மனதிற்குள் பிராத்தனை செய்து கொண்டார்...

அர்ஜூன் திவ்யாவின் சங்கமத்திற்கு இன்னும் ஒரு நாள்... ஒரே ஒரு நாள் காத்திருப்போம்...

தொடரும்..
 

JB

Administrator
Staff member



அத்தியாயம் - 24

அர்ஜூன் சென்றவுடன் திவ்யா வாயிலையே சிறிது நேரம் பார்த்திருக்க, அவளின் கண்களில் தெரிந்த ஏக்கத்தைப் பார்த்த ஸ்ரீ அவளைத் தன் அருகில் அழைத்தவர்...

"திவ்யா... அர்ஜூன் உன்னிடம் ரொம்பக் கோபமா நடந்திக்கிட்டானா? உன்ன வருத்தப்படுத்திற மாதிரி ஏதாவது பேசினானா?" எனவும்...

அவரின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தையும், குரலில் தெரிந்த ஏக்கத்தையும் கண்டவள் அவரின் உடல் நிலையையும் கருத்தில் கொண்டு தன் கணவன் தன்னிடம் விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதைச் சொல்லாமல்...

"இல்லத்த... அவங்க எதுவும் கோபமா பேசலை" என்றாள் கனிவுடன்...

"வேற?" என்று அவர் இழுக்க, அவர் என்ன கேட்கிறார் என்று புரிந்துக் கொண்டவள் அதீத வெட்கத்துடன் தலை கவிழ ஸ்ரீக்கு தன் மகனின் மனமாற்றமும் ஏதோ ஒரு விதத்தில் தன் மனைவியிடம் தன் மனதில் உள்ளதை வெளிப்படுத்தியிருந்ததும் அத்தனை மகிழ்ச்சியைத் தந்தது...

திவ்யாவை அவன் பார்த்திருந்த விதமே பறை சாற்றியதே அவர்களின் ஊடல் முடிந்து கூடலின் நேரம் வந்துவிட்டது என்பதை...

தன் மனைவியின் மனதில் தோன்றி இருந்த குற்ற உணர்வில் உள்ளம் உருகி அவளை மேலும் காயப்படுத்தக் கூடாது என்று தான் அவளை இன்று இங்கு விட்டுச் சென்றிருக்கிறான் என்று...

மனதிற்குள் முடிவு செய்தார்.... நாளை எப்படியும் திவ்யாவை அர்ஜூனோடு வீட்டிற்கு அனுப்பி வைத்து விட வேண்டும் என்று....

அர்ஜூன் கொடுக்கச் சொன்னதாகச் செக்யூரிட்டி திவ்யாவின் பெட்டியைக் கொண்டு வந்து கொடுக்க, தன் கணவனின் கரிசனத்தில் மனம் சிலிர்த்தவள் அவனால் எவ்வாறு இப்படித் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடிகிறது என்று வியந்துப் போனாள்...

தன் வீட்டில் தான் அவனை விட்டு விலக முயற்சிக்கும் பொழுது தன்னை விடாமல் அவன் இறுக்கிப் பிடித்திருந்த விதத்திலேயே அவளுக்குத் தெரிந்ததே அவனின் தாபமும் வெறியும்...

தான் அவனை விட்டு விலகியதும், தன் அலங்கோல நிலையை ரசித்துப் பார்த்தவனின் கண்கள் அப்பட்டமாக எடுத்துக் காட்டியதே தன் கணவனின் ஒட்டுமொத்த தேடலையும் தவிப்பையும்...

அப்படி இருக்க அவனுக்குள்ளே அவன் போட்டுக் கொள்ளும் கட்டுப்பாடும், தன்னைச் சுற்றி அவன் கட்டிக்கொள்ளும் அரணும் அவளை அதிசயிக்க வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்...

ஆனால் அது தானே அர்ஜூன்...

"தன்ணுணர்வுகளை அடக்கத் தெரிந்தவனே இந்த உலகத்தை வெல்பவன்... உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துவதாகும்" என்ற கூற்று அர்ஜூனிற்கு மிகவும் பொருந்தும்.

ஆனால் அப்படி இருந்த அர்ஜூனே தன் உணர்ச்சிகளைக் கட்டுபடுத்த முடியாமல் அள்ள முடியாத வார்த்தைகளைக் கொட்டி அதனால் தன் வாழ்வில் வசந்தமாக வந்து தன் இதயத்திலும் புத்தியிலும் உணர்வுகளிலும் கலந்து நிறைந்து இருக்கும் தன்னவளுக்கும்,

தன் உதிரத்தைக் கொடுத்த, தன்னைப் பெற்று இன்று தொழில் உலகத்தில் தன்னை ஒரு முடி சூடா மன்னனாக வலம் வர பாதை அமைத்த கொடுத்த அன்னைக்கும் எத்தனை பெரிய கேட்டை செய்ய இருந்தான்...

தவறு செய்வது மனிதனின் இயல்பு தான்... அதனைத் திருத்திக் கொள்ளும் போது தான் அவன் தெய்வமாக மாறுகிறான்...

அதனை உணர்ந்ததாலோ என்னவோ உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் தன் மனைவியின் அருகாமையை அவளுடனான தாம்பத்தியத்தை, தன்னவளுடனான சங்கமத்தை கத்தி கூச்சல் போட்டு இறைஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தாலும், அவளின் உணர்வுகளை மதித்து அவளை விட்டுத் தனித்துச் சென்று இருக்கிறான் தன் இரவை கழிக்க...

வீட்டிற்குத் திரும்பி வந்த அர்ஜூனிற்கும், தன் மாமியாரின் படுக்கைக்கு அருகில் போட்டிருந்த கட்டிலில் படுத்த திவ்யாவிற்கும் மீண்டும் அந்த இரவு நீண்ட இரவாகிப் போனது...

ஆனால் மனம் முழுவதும் அக்களிப்பில், தன் துணையை நினைத்துத் தாபத்தில் அழகான விடியலுக்காகக் காத்திருக்கும் இரவாகக் கழிந்த இரவு அது...

மறு நாள் பாலா, மஹாவுடனும் அருணுடனும் மருத்துவமனைக்கு வந்தவர் ஏற்கனவே நடந்ததை மஹாவின் மூலம் தெரிந்துக் கொண்டவர் ஒரு நிம்மதி பெருமூச்சுடன் ஸ்ரீயை காணச் சென்றார்...

மாமனாரிடம் மன்னிப்பு கேட்ட திவ்யா, அருணிடமும் மன்னிப்பு கேட்க, அன்றைய நாள் எல்லோருக்கும் நல்லதாகவே விடிந்தது போல் இருந்தது...

நேற்று திவ்யாவை அழைக்க அவள் ஊருக்கு சென்று விட்டதால் அங்கு அலுவலகத்தில் நேற்று மதியத்திற்கு மேல் தேங்கியிருந்த வேலைகளையும் சந்திப்புகளையும் மீட்டிங்குகளையும் அர்ஜூன் முடிப்பதற்குள் மணி மாலை ஆறாகி இருக்க அது வரை அவனால் தன் அன்னையைக் கூடச் சந்திக்க வர இயலவில்லை....

ஒரு வழியாக நெட்டி முறித்த வேலைகளை முடித்தவன் மருத்துவமனைக்குக் கிளம்பத் திவ்யாவின் முகமும் நேற்று அவளின் வீட்டில் தான் கொடுத்த இதழ் ஒற்றல்களும் அர்ஜூனின் நியாபகத்தில் வந்து இம்சை படுத்தியது....

மருத்துவமனைக்குக் கிளம்பியவன் எத்தனை விரைவாகக் காரை செலுத்தினாலும் சென்னையில் உள்ள வாகன நெரிச்சலில் அவனால் அவ்வளவு சீக்கிரம் மருத்துவமனையை அடைய முடியவில்லை...

"ஷிட்" என்று காரின் ஸ்டியரிங்கில் குத்தியவனின் மனசாட்சி....

"அவ உன்னுடனையே இருக்குறப்போ அவள திட்டி துரத்திவிட்டுட்ட... இப்போ அதை எல்லாம் மறந்து உன்னிடம் வந்து சேர்ந்துட்டா... அப்புறம் என்ன அவசரம்?? ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கவில்லையோ?" என்று நேரம் காலம் தெரியாமல் கேலியாய் சிரிக்க...

"அதெல்லாம் எனக்குத் தெரியாது... ஆனால் அவள் எனக்கு இன்னைக்கு வேணும்... எனக்கு முழுசா வேணும்... என் வைஃப்பா...." என்று வாய்விட்டு கூறியவன் ரேஸ் கார் வேகத்தில் (அந்தச் சென்னை ட்ராஃபிக்கில் ;-)) காரை செலுத்திக் கொண்டு வந்தவன் ஒரு வழியாக மருத்துவமனையை அடைய....

வந்தவனுக்கு அங்குத் தன் குடும்பத்தினர் அனைவரும் இருக்கத் தன் மனைவியை மட்டும் காணாமல் தவித்துப் போனான்...

அவர்களின் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு ஒரு முடிவே இல்லை என்பதைப் போல்...

வந்ததிலிருந்து ஏதோ சிந்தனையில் அமைதியற்றவன் போல் தங்கள் மகன் அமர்ந்திருப்பதைப் பார்த்த ஸ்ரீக்கு அவனின் தேடல் புரிய மெல்லிய புன்னகையுடன்,

"இங்க ஹாஸ்பிட்டலுக்குப் பக்கத்திலேயே ஒரு கோவில் இருக்குதுப்பா, அங்க தான் திவ்யா போயிருக்கா? என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அறைக்குள் நுழைந்தாள் அவன் மனைவி...

அடர்ந்த பர்கண்டி நிறத்தில் ஜார்ஜெட் புடவையில், முகத்தில் சிறிய கோடாகத் திருநீறும், நெற்றி வகிட்டில் குங்குமமும் வைத்துக் கோவிலில் இருந்து அம்பாளே வெளியே வந்துவிட்டாளோ! என்பது போல் இருந்தவளைக் கண்டவனுக்குத் தன்னையும் அறியாமல் உடலில் முதன் முதலில் ஒரு சிறு அதிர்வு தெரிய,

திவ்யா கோவிலுக்குச் சென்றிருக்கிறாள் என்று தன் அன்னை சொன்னது கூடக் காதில் விழாதது போல் தன்னவளைக் கண்டதும் பதில் சொல்லும் நிலையில் இல்லாதவனின் எண்ணங்கள் தன் மனைவியின் அழகில் லயித்து இருந்ததால் விபரீத நிலைக்குச் செல்ல,

முழுமதியையும் தோற்கடித்துவிடும் விதத்தில் இருந்த அவளின் அழகு முகத்தில் பிறை போன்ற நெற்றியில் துவங்கி நாணமும் அச்சமும் கலந்திருந்த கண்கள், பஞ்சுக் கன்னங்கள், கூர்மையான முக்கு, அதில் பளபளத்த மூக்குத்தி, கோவை இதழ்கள் என்று ஒவ்வொன்றிலும் அவன் நேற்று பதித்திருந்த இதழ் முத்திரைகளும் அவன் மனதில் தோன்ற கடுமையான சோதனைக்கு உள்ளானான் அர்ஜூன்...

திவ்யா உள்ளே நுழைந்ததும் பிரம்மை பிடித்தது போல் வியந்து உருகி அமர்ந்திருந்த, சாதாரணமாக எந்த உணர்ச்சியையும் காட்டாத அர்ஜூனின் முகத்தில் இன்று உணர்ச்சிகள் அளவுக்கதிகமாகவே தாண்டவமாட....

"இவ்வளவு காதலை மனசுக்குள்ள வச்சுக்கிட்டு தன்னையும் இத்தனை நாள் வதைச்சுக்கிட்டு இந்தச் சின்னப் பெண்ணையும் வேதனைப் படுத்திக்கிட்டு" என்றே தோன்றியது...

அங்கு இருந்த அனைவருக்கும் மஹா அருண் உட்பட...

ஏனெனில் முதல் முறை தன்னையும் அறியாமல் அர்ஜூன் தன்ணுணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான் மற்றவர்களுக்கு...

சில நேரங்களில் சில மனிதர்கள் தங்களை மற்றவர்களிடம் இருந்து தனிமைப் படுத்தி வைத்துக்கொள்வார்கள்... பெற்றோர்களிடம் கூட இருந்து...

அதற்கு அவர்களால் ஒரு நல்ல விளக்கமோ காரணமோ கொடுக்க முடியாது... அவர்கள் அப்படித்தான்...

அப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கையில் ஒருவரைப் பிடித்துவிட்டால் அதுவும் அவர் தன் வாழ்க்கை துணையாக இருந்தால் அவர்களைத் தங்கள் உள்ளங்கைகளில் ஏந்தி தாங்குவார்கள்...

அர்ஜூனும் அதே போன்று தான்....

தன் கணவனின் வரவை காலையில் இருந்து எதிர்பார்த்திருந்த திவ்யா அறையின் வாயிலில் தன் செருப்பைக் கழட்டி வைக்கும் பொழுதே அவன் ஷூவைப் பார்த்தவள் உள்ளே நுழைந்ததும் அறையில் அமைதியாக வழக்கம் போல் கால் மேல் கால் போட்டு கம்பீரமாகத் தன்னையே உறுத்து பார்த்துக் கொண்டிருந்த கணவனைக் கண்டவளின் மனம் மதி மயங்க, அவனின் முகம் பார்த்தவளால் சில நொடிகள் மட்டுமே அவன் பார்வையோடு தன் பார்வையைக் கலக்க முடிந்தது...

அதற்கு மேல் தன்னால் இயலாததால் தன் மாமியாரைப் பார்த்தவள் மெல்ல அவரிடம் சென்று கையில் இருந்த திருநீறை கொடுத்து, பின் ஸ்ரீயுடன் கட்டிலில் அமர்ந்து இருந்த மஹாவிற்கும் கொடுத்தவள், அருகில் எதையோ கொறித்துக் கொண்டிருந்த அருணிடம் திருநீறை நீட்ட, தன் கையில் உணவாக இருக்கவும்...

"நீங்களே வச்சி விடுங்க அண்ணி" என்றான்....

அவன் நெற்றியில் திருநீறை வைத்தவள் கண்களில் திருநீற் விழுந்துவிடாது இருக்கத் தன் கையை அவனின் புருவங்கள் மீது எதார்த்தமாக வைத்து மீதி திருநீறை ஊதிவிட, அருகில் அமர்ந்திருந்த அர்ஜூனிற்க்கு என்னவோ காதில் புகை வராத குறை தான்....

எப்படியும் அடுத்துத் தன்னிடம் தான் வருவாள் என்று அவன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கத் தன் கணவனுக்கும் கடவுளுக்கும் வெகு தூரம் என்பதனை ஏற்கனவே அறிந்திருந்தவள் அவனைத் தாண்டி தன் மாமானாரிடம் செல்ல....

நேற்று இரவில் இருந்து அவளைப் பிரிந்து இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நெருப்பாய் உணர்ந்திருந்தவன், காலையில் கண் விழித்ததில் இருந்து தன்னவளை பார்க்க விழிகள் ஏங்கி இருந்தவன், ஏக்கத்தோடு அவளுக்காகக் காத்து இருக்க இப்பொழுது இந்த நிமிடம் அவளின் புறக்கணிப்பில் அவனது காதல் கொண்ட மனம் சடாரென்று அடிப்பட்டுப் போனது....

அவனின் இயற்கையான ஆங்காரம் வெகுண்டெழ ஏமாற்றமும் கோபமும் ஒன்று சேர விருட்டென்று எழுந்தவன், அடக்கப்பட்ட கோபத்துடன்....

"ஓகே மாம், அப்போ நாளைக்கு வரேன்" என்று கிளம்பியவன் அறையைவிட்டு வெளியே சென்றான்....

இவர்களின் விளையாட்டுக்களைப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீக்கு "அட ராமா" என்று இருந்தது.

"இதுங்களைச் சேர்த்து வைக்கறதுக்குள்ள எனக்கு ஒரு அட்டாக்கில்ல, இரண்டு மூன்று நான்கு என்று தொடர்ந்து வந்தாலும் வரும்..." என்று நினைத்தவர் சட்டென்று அருணை பிடித்து இழுத்தவர் அவனின் காதில் ரகசியமாக எதுவோ சொல்ல, அவனும் வேகமாகத் தன் அண்ணனை பின் தொடர்ந்தான்...

விரைவாகப் பாலாவையும் மஹாவையும் ஒரு நிமிடம் வெளியே இருக்கச் சொன்ன ஸ்ரீ, திவ்யாவை வேகமாக அருகில் அழைத்தவர் அவளைக் கடிந்து கொண்டார்...

"என்ன திவ்யா, அவனோட குணம் தெரிஞ்சும் இப்படிப் பண்ணிட்டே இருக்க..... இப்பப் பாரு எவ்வளவு கோபத்துடன் போறான்னு?"

தன் கணவன் சேரை விட்டு எழுந்த விதத்திலேயே அவனின் திடீர் கோபம் புரிந்து சகலமும் நடுங்க நின்றவளுக்குத் தன் மாமியாரின் கேள்வியும் கலக்கத்தை உண்டு பண்ண...

விழிகளில் நீர் கொட்டவா வேண்டாமா என்பது போல் திரண்டு இருக்கத் தயங்கிவாறே.....

"இ.... இல்லத்த, அவங்களுக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு தான் கொடுக்கலை" என்றாள்

"என்ன பண்றது திவ்யா? அவனுக்குப் பிடிக்குதோ பிடிக்கலையோ ஆனால் அவனுக்கு வேணுமான்னு கண்டிப்பா கேட்கனும்னு எதிர்பார்ப்பான்... அது தான் உன் புருஷனோட குணம்... சரி, நீ உடனே கீழே போ.... அருண் கிட்ட அர்ஜூனைப் பிடிச்சு வச்சிருக்கச் சொல்லி இருக்கேன், சீக்கிரம் போ" எனவும்....

கலங்கிய முகத்துடன் "சரி அத்த" என்றவளுக்கு அவன் வெளியே சென்ற வேகத்தை நினைக்கவே தண்டுவடம் சில்லிட்டு உள்ளுக்குள் குளிரெடுத்தது....

வேகமாக நடையை வைத்தவள் கீழே கார் நிறுத்தியிருக்கும் இடத்தில் அருணுடன் அர்ஜூன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டவுடன் கிட்டதட்ட ஓடிப் போய் அவனருகில் நிற்க,

"ஓகே அண்ணா... ஐ ஹேவ் சம்திங் டு டூ..... ஐ வில் கம் ஹோம் லேட் டுனைட் [I have something to do... I will come home late tonight] " என்ற அருண் புன்னகையுடன் அவர்களைத் தனியே விட்டு செல்ல...

அவளை திரும்பிப் பார்த்த அர்ஜூன் ஒன்றும் பேசாமல் காரில் ஏறினான்....

தன் கணவன் தன்னைக் கண்டும் ஒன்றும் சொல்லாமல் காரில் ஏறி அமர, சில நொடிகள் தயங்கியவள் அவன் காரைக் கிளப்பினதும் சட்டென்று தானும் காரில் ஏறியவள் அவனைத் திரும்பி பார்த்து குழந்தைத்தனமான முகத்துடனும், கண்களில் கலக்கத்துடனும் தன் கையில் இருந்த திருநீறை நீட்ட, அவளைப் பார்த்தவன் திருநீறை எடுக்காமல் காரை கிளப்பினான்...

என்ன செய்வதென்று புரியாமல் விழித்தவள் திருநீறை காகிதத்தில் மடித்து வைத்து விட்டு வழக்கம் போல் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்க, அவள் தன் பின்னரே ஓட்டமும் நடையுமாக வந்ததை நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டவன் சிறிது தூரத்தில் சாலை போக்குவரத்து நெருக்கடியில் காரை நிறுத்த....

ஜன்னலுக்கு அருகில் வந்த ஒரு குட்டிப் பெண்...

"அண்ணா.... கடைசிப் போணி அண்ணா... பூ வாங்கிக்கங்க அண்ணா" என்றாள்.

திரும்பி திவ்யாவைப் பார்த்தவன் அவள் தலையில் பூ எதுவும் இல்லாததைப் பார்த்து ஜன்னலை திறந்தவன் இள நகையுடன் "எவ்வளவு?" என்றான்...

விலையைச் சொன்ன அந்தப் பெண்ணிடம் இருந்த மல்லிகைச் சரங்களை வாங்கியவன் சில நூறு ரூபாய்களைக் கொடுக்க அதை வாங்கியவள்...

"எதுக்குண்ணா இவ்வளவு பணம்?" எனவும்,

"பரவாயில்லை வச்சுக்க' என்று புன்னகைத்தவனைப் பார்த்தவள் அருகில் இருந்த ஒரு சின்னப் பையனை அழைத்து, அவனிடம் இருந்த மொத்த பூவையும் அர்ஜூனிடம் கொடுக்கச் சொன்னவள்....

"எங்க இரண்டு பேரோட பூவுக்கும் சேர்த்து நீங்க கொடுத்த பணம் அதிகம் அண்ணா.... நாங்க பிரிச்சு எடுத்துக்கறோம்" என்று முகம் கொள்ளா சிரிப்புடன் சென்றாள்.

புன்னகையுடன் அந்தப் பெண்ணையே சில நொடிகள் பார்த்திருந்தவன் திரும்பி திவ்யாவிடம் மல்லிகைச் சரங்களைக் கொடுத்து....

"வச்சுக்கோ" என்றான்...

பூவையும் அவனையும் பார்த்தவள் ஏதோ யோசனையில் ஆழ, அவளைக் கூர்ந்துப் பார்த்தவன் புருவங்களை உயர்த்தி வேண்டுமென்றே...

"பூ வச்சுக்கப் பிடிக்குமில்ல" என்றான்....

ஏனெனில் அவனும் கவனித்திருக்கிறான்... திருமணம் ஆன நாளில் இருந்து திவ்யா எப்பொழுதும் தலையில் பூச்சூடி இருப்பதை... அவளுக்கு மல்லிகைப் பூக்கள் என்றால் மிகவும் பிரியம் என்று அவனுக்கும் புரிந்திருந்தது....

"இல்ல....பூப் பிடிக்கும்" என்று இழுத்தவள் தயங்கியவாறே மெல்லிய குரலில்....

"அத்தை ஆஸ்பத்திரியில் இருக்கும் போது எப்படிப் பூ வச்சுக்கிறது?" என்று கேட்க,

அதே சமயம் போக்குவரத்து நெரிசலும் சரியாகி விட...

"இப்போ நீ இருக்கிறது ஹாஸ்பிட்டல் இல்லை" என்றவன் அவளின் கரத்தைப் பிடித்து இழுத்து பூவை வைத்தவன் சாலையில் கண் பதித்தான்....

பூவைப் பார்த்தவள் "இவ்வளவுமா?" எனவும்...

காரை ஓட்டிபடியே "எவ்வளவு முடியுமோ அவ்வளவு வச்சுக்க" என்றான்....

சிறிதே தலையில் வைத்தவளை திரும்பி பார்த்தவன்...

"ஏன்? அதுக்கு மேல் உன் தலை தாங்காதா?" என்று கேட்க, அவனின் கேள்வியில் அமைதியாக மீதம் இருந்த பூவில் முடிந்த வரை வைத்தவளைப் பார்த்தவனின் இதழில் இள நகை விரிந்தது....

சிறிது தூரம் சென்றவன் மீண்டும் அவளைத் திரும்பி பார்க்கவும் ஏற்கனவே நிலைக்குலைந்திருந்தவனுக்கு அரைகுறையாக வந்த வெளிச்சத்தில் அவளின் அழகிய உடலின் அங்க லாவண்யங்களும் நிழல் போல் புடவைக்கு வெளியே தெரிய, வலதுப் புறம் அமர்ந்திருந்த அவனின் கண்கள் இடது புறமாக அமர்ந்திருந்தவளை நோக்கியவாறே இருந்த அதே நொடிகளில் ஏஸிக் காற்றில் அவளின் புடவை மாராப்பு லேசாக விலகியதால் அவளின் அழகை பூர்ணமாக எடுத்துரைக்க,

இதில் காரில் நிறைந்திருந்த மல்லிகைப் பூவின் வாசமும் அவனின் ஆண்மையை வெறிக்கொள்ளச் செய்ய, விவாரணத்திற்கும் அப்பார்ப்பட்ட உணர்ச்சிகளில் சிக்கியிருந்தவனின் மனதின் வேகத்திற்கேற்ப காரின் வேகமும் அதிகரித்தது....

அதி விரைவாகவே வீட்டை அடைந்ததும் காரில் இருந்து இறங்கிய திவ்யாவின் கால்கள் சட்டென்று தடுமாறி நிற்க, தயங்கியவளை கண்டு திரும்பி பார்த்தவன் என்ன என்பது போல் தலை அசைக்கவும் அன்று நெஞ்சில் திமிறிய துக்கத்துடனும், இதயத்தைக் கீறிப்போட்ட வலியுடனும் இனி இந்த வீட்டிற்குத் திரும்பி வரமாட்டோம் என்று வெம்பி வீட்டை விட்டு வெளியே சென்றது நினைவில் வந்து மனதில் சுருக்கென்று தைத்தது...

இன்றும் அதே வலியை உணர்ந்தவள் போல் முகம் கசங்க, இருந்தும் தன் கணவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்து சட்டென்று தன் முகத்தை மாற்றிக் கொண்டவள் ஒன்றும் பேசாமல் அவனின் பின்னால் செல்ல, உள்ளே நுழைந்த அர்ஜூன் மேலே செல்ல எத்தனிக்கவும் மெல்லிய குரலில்.....

"சாப்பிட்டீங்களா?" என்றாள்....

இல்லை என்று அவன் தலை அசைக்கவும் தன் கணவனின் பசி அறிந்து கலங்கியவள்....

"நான் ஏதாவது டிஃபன் செய்யட்டுமா?" என்றாள்....

திருமணம் நடந்த மறுநாள் உணவு அருந்த வந்தவன் அவளின் காலிற்கருகில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் தட்டை விசிறி அடித்தது நியாபகத்தில் வர, ஆனால் அதற்குப் பின் இத்தனை மாதங்கள் அவள் கையால் பரிமாறி ருசிக் கண்டிருந்தவனுக்கு இந்த மூன்று நாட்களும் அவள் இல்லாமல் சரியாக உணவு கூட அருந்தாமல் இருந்ததை உணர்ந்து முகத்தில் சிறு புன்னகையுடன் சரி என்றான்...

முதல் முறையாக அவனைப் பார்த்து சிறிதே புன்னகைத்தவள் சமையல் அறைக்குள் செல்ல, தன் அறைக்குள் சென்றவன் சிறிது நேரத்திலேயே குளித்து முடித்துக் கீழே இறங்கி வர, அதற்குள் அவசர டிபனாகக் கிச்சடியை செய்து முடித்திருந்தவள் தன் மாமனாருக்கும், அருணிற்கும் ஹாட்பேக்கில் எடுத்து வைத்துவிட்டு தன் கணவனுக்குப் பரிமாற ஆரம்பித்தாள்...

அவள் இல்லாத வீடே ஏதோ வெறிச்சோடியிருக்க, இதில் தன் அன்னையும் இல்லாத வீட்டில் அவன் தங்கியது இரு இரவுகள் தான்... இப்பொழுது திவ்யாவும் வந்துவிட இன்று அவளைத் தன் அருகில் பார்ப்பது மனதிற்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது அவனுக்கு...

தனக்கு வெகு அருகில் நின்று அவள் பரிமாறிக் கொண்டு இருக்க, அவளின் பட்டுக் கரங்களில் அழகாக அடுக்கிவைத்ததுப் போல் பளபளத்த வளையல்கள் சிணுங்கி குலுங்க, அவளின் மலர் கரங்களின் எழிலால் கூட தன் ஆண்மையைத் தூண்ட முடியும் என்று உணர்ந்தவன் இன்னும் சில நிமிடங்கள் தானே இந்த தவிப்பும் ஏக்கமும், அதற்கு பின் பூர்த்தியாகப் போகும் தன் தாகத்தை நினைத்து அவள் கைகளில் முத்தம் பதிக்க திமிறிக் கொண்டு வந்த ஆவலை அடக்கியவன் உணவில் கவனம் செலுத்த முடியாமல் ஏனோ தானோ என்று கொறித்துவிட்டு....

"நீயும் சீக்கிரம் சாப்பிட்டுட்டு வா" எனவும்,

ஒற்றை வரியில் பயத்தையும் நடுக்கத்தையும் ஒருவருக்குக் கொடுக்க முடியும் என்றால் அது தன் கணவனால் மட்டுமே முடியும் என்று நினைத்தவள் திருதிருவென்று முழித்தவாறே நின்றிருக்க, அவளின் அச்சத்தை குறும்பாக ரசித்தவன் மனதிற்குள் பொங்கி எழுந்த சிரிப்பை அடக்கி தன் அறைக்குச் சென்றான்....

விறுவிறுவென்று உண்டு முடித்தவளுக்கு அது வரை இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் தூரப் போயிருக்க, அங்குத் தன் கணவனின் பொறுமை எல்லை கடந்து கொண்டிருப்பதை அறியாமல் முடிந்த அளவு சமையல் அறையில் நேரத்தை கழிக்கவும், அதற்கு மேலும் பொறுக்கமாட்டாது தன் அறையை விட்டு வெளியே வந்தவன்...

"திவ்யா" என்று சத்தமாக அழைக்க...

அவன் குரலில் வீட்டில் இருந்த நிசப்தம் குலைந்து திக்கென்று இருந்தது திவ்யாவிற்கு.

சட்டென்று சமையல் அறையில் இருந்து வெளியே வந்தவளைப் பார்த்தவன்...

"இங்க ஃப்ரிட்ஜில் கோல்ட் (cold) வாட்டர் வரலை... கொஞ்சம் வாட்டர் எடுத்துட்டு வா" என்றவன் தன் அறைக்குள் நுழையும் முன் திரும்பி....

"இன்னும் டு மினிட்ஸ்ல நீ இங்க இருக்கனும்" என்றான்.

அவன் சொன்ன தோரணையே இரண்டு நிமிஷத்தில நீ வரலை தொலைஞ்ச என்பது போல் இருக்க சரி என்று மெதுவே தலை அசைத்தவள் தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு அவனின் அறைக்குச் செல்ல, எத்தனை தான் மெல்ல படி ஏறினாலும் சீக்கிரமாகவே அவன் அறையை அடைந்து விட்டது போலவே இருந்தது...

அறை வாயில் வரை சென்றவளுக்குப் பழைய நினைவுகள் முட்டி மோதி அலைமோத, மனம் கசங்கி உள்ளம் துடித்ததில் தன்னிச்சையாகக் கால்கள் தடுமாற ஆரம்பிக்க....

"போச்சு, அன்னைக்கு போல இன்னைக்கும் அவர் மீது இதோ இந்த ஐஸ் தண்ணீரைக் கொட்ட போறேன்" என்று நினைத்தவள் கதவு திறந்திருப்பதைக் கண்டு அவளுக்காகவே அவன் கதவைத் திறந்து வைத்திருக்கிறான் என்று புரிந்து கொண்டு மெல்ல நுழைந்தாள்....

அங்கு கட்டிலில் தலையணையை நிமிர்த்தி வைத்து அதில் சாய்ந்தவாறே வலது கையைத் தலைக்குப் பின் கொடுத்து இடது கையில் தன் அலை பேசியைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தவன் மெல்லிய கொலுசுகளின் சத்தத்தில் நிமிர்ந்துப் பார்க்க...

நாணமும், அச்சமும், கலக்கமும் என்று உணர்வுகள் போட்டிப் போட்டுக் கொண்டு உள்ளத்தில் பிரவாகித்ததில் முகம் சிவந்து நின்றவள் அவன் அருகே சென்று தலை கவிழ்ந்தவாறே தண்ணீர் பாட்டிலை நீட்டினாள்...

வழக்கமாக முதல் இரவில் பெண்கள் கணவருக்கு பால் கொண்டு வருவார்கள்.... இன்றைய நாகரிக வாழ்க்கையில் அவ்வாறு நடக்கிறதோ இல்லையோ தெரியவில்லை... ஆனால் அவள் பாலைக் காய்ச்சி, பின் அவனிடம் கொடுத்து, மிச்ச பாலை அவள் குடித்து.... இந்த சம்பிரதாயங்களை இன்று கடைப் பிடிப்பதற்கெல்லாம் அர்ஜூனிற்கு பொறுமை இல்லை....

அவள் உள்ளே நுழைந்த நொடியில் இருந்து அவளின் உச்சி முதல் உள்ளங்கால் வரை தாபத்துடனும் வேட்கை வழியும் விழிகளோடும் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் தண்ணீரை நீட்டினாலும் வாங்காமல் அவளை ஆழ்ந்து பார்த்தவாறே எழுந்தவன் அறையின் கதவை தாழிட்டு விட்டு அழுத்தமான காலடிகளுடன் அவளருகில் நெருங்கி வர...

தலை குனிந்தவாறே நின்று இருந்தாலும் அவன் கதவை சாத்திய சத்தமும், அவனின் அழுத்தமான காலடி சத்தமும் கேட்டதில் அது வரை இழுத்து பிடித்து வைத்து இருந்த கொஞ்சநஞ்ச தைரியமும் ஒட்டு மொத்தமாக அவளிடம் இருந்து பறந்து போனது....

இதில் படபடக்கும் இதயத்தின் சத்தம் வேறு அவளின் செவிகளையே மந்தமாக்கும் அளவிற்கு வெளியே கேட்க, அவன் தன்னை நெருங்கி வந்ததும் தன்னிச்சையாக அவனிடம் இருந்து இரு அடிகள் பின் தள்ளி நின்றவள் மீண்டும் அவனிடம் பாட்டிலை நீட்டினாள்....

அவளின் தயக்கமும், தவிப்பும், அச்சமும் ஒரு கணவனாய் கர்வத்துடன் அர்ஜூனின் உணர்வுகளைச் சிலிர்த்து எழ செய்ய, இளம் புன்னகையை உதிர்த்தவன் அவளை உற்று நோக்கி கொண்டே பாட்டிலை வாங்கி நீரைப் பருகியவன், அவளிடம் இருந்த மூடியை வாங்கி அதனை மூடி அருகில் இருந்த மேஜையில் வைத்தான்...

அறைக்குள்ளே நுழைந்ததில் இருந்து தரையில் தலை புதைந்துவிடும் அளவிற்குக் குனிந்திருந்தவள் தன் கணவனின் ஒவ்வொரு செய்கையையும் உணர்ந்து இருந்தாலும், அவனுடன் தனிமையில் இருக்கும் இந்த ஒவ்வொரு விநாடியும் உடலில் நடுக்கம் பரவி உதறலெடுக்க, கைகள் வெளிப்படையாக நடுங்க துவங்க, அவளின் இதயத்துடிப்பை நூறு மடங்கு அதிகரிக்கச் செய்தது தன் மூச்சுக் காற்றுப் படும் அளவிற்கு அவன் அவளை மேலும் நெருங்கி நிற்கவும்....

அதற்கு மேலும் தாங்க மாட்டாதவளாய் அவனை விட்டு நகர எத்தனிக்க, அவளைச் சட்டென்று எட்டிப் பிடித்தவன் தான் தொட்டதும் அவள் பூ மேனி அதிர்ந்து ஒரு வித நடுக்கம் பரவுவதை உணர்ந்தவனின் வலுவான உடலிலும் மின்னல் போன்று உணர்ச்சிகளின் அலைகள் தாக்க,

தன் உடல் முழுவதும் அவள் மீது உரசுமாறு நின்றவன் அவளின் கழுத்தில் கை வைத்து முடிகளுக்குள் இரு கை விரல்களையும் நுழைத்தவன் குனிந்து அவளின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்....

கணவனின் முத்தத்தில் மெய்மறந்து சிலிர்த்தவள் தன்னையும் அறியாமல் அவன் நெஞ்சில் கை வைத்து அவன் சட்டையை இறுக்கி பற்றிக் கொள்ள அதில் அவன் மார்பு ரோமங்களும் இழுக்கப்பட்டதில் உணர்வுகள் சிலிர்த்தெழ, அவளின் செயலில் அவள் முகம் பார்த்தவன் கண்களை இறுக்க மூடிக்கொண்டு முகம் செந்தனலாய் சிவக்க இதழ்கள் அச்சத்தால் துடிக்க நின்றவளைக் கண்டவனின் கட்டவிழ்ந்த காதல் மேலும் செயலில் இறங்க தூண்ட, அடுத்த நொடி அவளின் மெல்லிய இதழ் அவன் வசம் ஆனது....

கணவன் மனைவி இருவர் உள்ளத்திலும் இருந்து வந்த மென்மையான காதலோடு காட்டாற்று வெள்ளமான காமமும் ஒன்றித்துக் கலக்க, உயிர் போன்ற தன் நேசத்தைத் தன் மனைவியிடம் உணர்த்திவிடத் துடித்தவன் மென்மையான இதழொற்றலை வன்மையாக மாற்ற, நீண்ட முத்தத்தில் இருந்து வலுக்கட்டாயமாக தன் முகத்தைத் திருப்பியவள் மூச்சு வாங்க அவனைப் பார்த்திருக்க,

மூச்சிரைத்து நின்றவளின் அழகான தவிப்பையும் தத்தளிப்பையும் ஒரு ஆண்மகனாக உணர்ந்து தன் இதயத்திற்குள் வாங்கிக் கொண்டவனின் கைகள் அவள் இடையைப் பற்றித் தன்னை நோக்கி வேகமாக இழுத்ததில் பூப்பந்து போல் மெத்தென்று அவன் மேல் மோத, தன்னவளின் அழகை கண்களால் மட்டும் ரசித்துக் கொண்டிருந்தவன் இதழாலும் ரசிக்க முனைந்து அவளின் கழுத்தில் ஆழ முகம் புதைத்தான்....

கணவனின் ஸ்பரிசத்தாலும் இதழ் முற்றுகையினாலும் தவித்துக் கொண்டிருந்தவளின் தளிர் மேனி சிலிர்க்க, தன்னவளின் சிலிர்ப்பை உணர்ந்தவன் கழுத்தில் ஆழ புதைந்திருந்த இதழ்களைக் கீழ் இறக்கியவன் அவளின் மார்பில் முகம் புதைக்க, பெண்களுக்கே உரிய அச்சமும் நாணமும் எல்லையைக் கடக்க, கலங்கியவளின் மனதில் படீரென்று அடித்தார் போன்று தோன்றியது விவாகரத்தை பற்றிய எண்ணம்...

தன் அணைப்பில் அடங்கியிருந்தவளின் உடலில் திடீரென்று ஏதோ நடுக்கம் பரவுவதை உணர்ந்தவன் போல் அவளை நிமிர்ந்து பார்க்க, கலக்கத்தைச் சுமந்த முகத்தோடு தனக்கே கேட்காத குரலில் உதடுகள் துடிக்க....

"விவாகரத்து பண்ணப் போறீங்கன்னு சொன்னீங்க" என்றாள்....

அவன் பதிலிற்காகத் தன் உயிரை கையில் பிடித்து வைத்திருந்தவளின் கண்களில் எப்பொழுது வேண்டுமானாலும் கொட்ட தயாராக நீர் கோர்த்துக் கொண்டிருக்க.....

"அது..." என்று உண்மையைக் கூற வாய் திறந்தவன் என்ன நினைத்தானோ சொல்ல வந்த உண்மையைச் சொல்லாமல் அந்நேரத்திலும் அவளைச் சீண்டிப் பார்க்கும் எண்ணம் வர, மனதிற்குள் சிரித்துக் கொண்டவன் சிரமபட்டு முகப்பாவனையை மாற்றிக் கொண்டு....

"விவாகரத்து வரும் போது வரட்டும்.... அதுக்கென்ன இப்போ?" என்றான்...

தன் கணவன் ஒரு வேளை விவாகரத்துச் செய்யப் போவதில்லை என்ற சொல்வான் என்று ஆசையில் ஏக்கத்துடன் அவன் முகத்தை எதிர் நோக்கியிருந்தவளுக்கு அவன் பதில் உடல் முழுவதும் சாட்டையால் அடித்தது போல் இருக்க, தாங்க முடியாத வலியினால் உடலும் மனமும் சோர்வடைந்தது போல் நின்றிருந்தவளைக் கண்டவன் மனம் கசந்து இனியும் தன்னவளை தவிக்க விடக்கூடாது என்ற நோக்கத்தில்....

அவளின் வெற்றிடையில் இருந்த தன் கரத்தில் அழுத்தத்தைக் கூட்டியவன் மென்மையாக...

"நேத்திலிருந்து கிட்டத்தட்ட ஒன்பது முத்தம் கொடுத்துட்டேன்... அதில் இரண்டு நீ மூச்சுக்கூட விடமுடியாத அளவுல உன்..." என்றவன் அவளின் இதழ்களைத் தடவி...

"உன்னை நான் கட்டிப்பிடிச்ச இறுக்கம் கூடச் சொல்லலையா உன்னோட கேள்விக்கு என்னோட உண்மையான பதிலை" என்றவன் அவளின் பதிலை எதிர்பார்த்தவாறே அவளை உற்று நோக்கியிருக்க,

அவனின் கூரிய பார்வையில் தலை குனிய போனவளின் தாடையைப் பற்றியவன் தன் முகத்தை நோக்கி நிறுத்தி...

"நான் உன்னை டிவோர்ஸ் பண்ணினால் நீ என்னை விட்டுட்டு இருந்துடுவியா?" என்று குரலில் தன் ஒட்டு மொத்த ஏக்கத்தையும் சுமந்து கேட்டான்....

அவனை விட்டு தான் வாழ்வதா? நினைக்கும் பொழுதே இதயத்தை யாரோ கூரிய கத்திக் கொண்டு இரண்டாக வெட்டிக் கிழித்ததுப் போல் வலித்தது....

அவனின் விழிகளைப் பார்த்தவாறே அவன் கேட்ட கேள்விக்கு இல்லை என்று தலை அசைக்க...

அவளின் தலை அசைவில் கண்களில் தேங்கியிருந்த விழி நீரில் ஒரு சொட்டு கீழே விழ, அவளது முகத்தைத் தாங்கியிருந்த கையின் கட்டை விரலில் அந்த விழி நீரை கீழே விழாமல் கன்னத்திலேயே தேக்கியவன்,

"அப்ப நீ இல்லாம நான் மட்டும் இருந்துடுவேன்னு நினைக்கிறியா?" என்றவனின் கண்களில் அத்தனை காதல் வழிந்தது.....

அவன் விவாகரத்து பண்ணப் போவதாக அன்று கூறியதில் இருந்து உள்ளம் முழுவதும் திகில் படர்ந்திருக்க, ஒவ்வொரு நாளும் நினைக்கும் பொழுதெல்லாம் தன் உடல், ஆன்மா, இதயம் அனைத்தையும் வாள் கொண்டு அறுத்து கூறுப் போட்டுக் கொண்டிருந்த விவாகரத்துக்குத் தன் மனம் குளிரும் வகையில் முற்றுப் புள்ளி வைத்த கணவனைக் கண்டவளின் முகத்தில் தெரிந்த நிம்மதியைக் கண்டவன்...

"டௌட் எல்லாம் க்ளியர் ஆயாச்சா... இப்போ நான் என் வேலையைக் கண்டினியூ பண்ணலாமா?" என்று விஷமப் புன்னகையுடன் கேட்க,

கணவனின் பேச்சு சில நொடிகள் புரியாவிட்டாலும் புரிந்ததும் நாணம் எல்லையைக் கடக்க, அக்கினிப் பூவாய் முகம் சிவந்தவளை சட்டென்று முரட்டுத்தனமாக இழுத்தவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறியவள் தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொள்ளத் தன்னை இழுத்தவனையே இறுக்கி பிடித்துக் கொண்டாள்.

மீண்டும் மீண்டும் அவளின் இதழின் சுவையில் மூழ்கியிருந்தவனின் முத்த யுத்தத்தில் தளிர் மேனி தளர்ந்து உருகி அவன் மீதே துவண்டு நிற்க, அதற்கு மேலும் தாமதிக்காது அவளை இருகைகளிலும் அள்ளியவன் கட்டிலில் கிடத்தி அவள் யோசிக்கும் முன் அவள் மீது படர்ந்து கிறக்கத்துடன் "திவி" என்று அழைத்தவனின் இதழ்களும் கைகளும் தாபத்துடன் அவளின் மேனியில் அத்து மீற ஆரம்பித்தது....

அவனின் அத்து மீறலில் அவளுக்குள் அடங்கியிருந்த அச்சம் வேகமாக மேலெழும்பி கிளம்ப, "வேண்டாம்" என்று போராடியவளை விட்டு விலகி அவளின் முகம் பார்க்க, அந்த இரவு விளக்கின் வெளிச்சத்தில் பயத்தில் அகல விரிந்திரிந்த கண்களைப் பார்த்தவன் அதற்கு மேல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தன்னவளுக்குள் தொலைந்து தன் தேடலை துவங்கினான்.

தன் உடல் வலிமையால் அவளின் விலக்கல்களையும் போராட்டங்களையும் ஒரு நொடியில் சமாளித்தவன் மேலும் மூழ்க, அவளின் வயதிற்கே உரிய பயம் சில நேரங்களில் தலை தூக்கிய பொழுதெல்லாம் அவளை இறுக்க அணைத்து அச்சத்தைத் தெளிய வைத்து மென்மையாக அவளைக் கையாள, இதழ் ஒற்றல்களும், மெல்லிய முனகல்களுமாக அங்கு ஒரு அழகிய இல்லறம் அரங்கேறியது....

தாலி கட்டிய அன்றே விவாகரத்து வேண்டும் என்றவன்..... அவள் இருக்கும் இடத்தில் தான் இருக்கக் கூடாது என்று தூரம் சென்று விடத் துடித்தவன்.... அவளைத் தன் வாழ்க்கையை விட்டே விரைவில் அகற்ற வேண்டும் என்று நினைத்திருந்தவன்...

இன்று மலரினும் மெல்லிய தன் மனையாளின் மாசற்ற அன்பை உணர்ந்து, அவளின் ஈடு இணையில்லாத அழகான காதலை ருசித்து அவளுள் ஆழ மூழ்கி ஈருடல் ஓருயிராகக் கலக்க மனநிறைவுடன் கூடிய கூடல் இருவரின் உள்ளங்களிலும் பரவசத்தை ஏற்படுத்த, அவளும் அவனோடு ஒன்றியதில் காமத்தின் பிடியிலும் காதலின் வேகத்திலும் திளைத்திருந்தவன் விடியும் வரை தன் தேடலை நிறுத்தவில்லை.

தொடரும்.

( அடுத்த அத்தியாயம் வெள்ளிக்கிழமை)

 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top