JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Malarinum Melliyaval - Episodes 33, 34 and Epilogue

JB

Administrator
Staff member
அத்தியாயம் - 33

ஏற்கனவே அர்ஜூனின் மனம் முழுவதும் திகில் மண்டியிருக்க இதில் காவலர் வேறு பிரசவ வலியில் திவ்யா துடிப்பதைப் பற்றிக் கூறவும் உடல் முழுவதும் மின்னல் போன்று ஒரு அதிர்ச்சி உணர்வு ஒவ்வொரு நரம்பிலும் ஓட, அவர் விஷயத்தைச் சொல்லி முடிப்பதற்குள் வீட்டின் முன் பக்கம் கதவை அடைந்திருந்த அர்ஜூன் கதவை உடைக்க முயற்சிக்க, கதவு பலமாக உடைக்கப் படும் சத்தத்தில் உறைந்து போனாள் மஹா....

கீழே உயிர் போகும் வலியில் தரையில் துடித்துக் கிடந்த திவ்யாவிற்குக் கொஞ்சம் கொஞ்சமாகச் சுரணை தப்பவும், அவளின் கண்கள் சொறுகுவதைக் கண்ட மஹாவிற்கு இனியும் வேறு வழி தோன்றாமல் நடப்பது நடக்கட்டும் என்று மனதிற்குள் தைரியத்தை வர வழைத்துக் கொண்டவள் கதவை திறக்க எழவும், அர்ஜூனின் குரல் கேட்கவும் சரியாக இருக்க, வந்திருப்பது தன் அண்ணன் தான் என்று அறிந்த மகிழ்ச்சியில் அலறி அடித்துக் கொண்டு ஓடியவள் கதவை திறக்க,

கதவை திறந்த தன் தங்கையைக் கண்ட அர்ஜூன் பதற்றத்தோடு அவளை இறுக்கக் கட்டி அணைத்தவனின் கண்கள் மஹாவிற்குப் பின்னால் தரையில் துடித்துக் கொண்டிருந்த தன் மனையாளின் மீது பதிந்தது....

பதிந்த கண்களும், தன் மனைவியின் நிலையை உணர்ந்த மூளையும், அவளின் கதறலைக் கேட்டுக் கொண்டிருந்த இதயமும் ஒரு சில விநாடிகள் இரத்த ஓட்டம் தடைப் பட்டதுப் போல் ஒரே சமயத்தில் உறைய....

மீண்டும் திவ்யாவின் "அம்மா" என்று கதறலில் தன்னிலை இழுத்துப் பிடித்தவன் திவீஈஈஈஈஈ" என்று அலறிக் கொண்டு அவள் அருகில் ஓடியவன் அவளின் அருகில் மண்டியிட்டு அமர்ந்து அவள் தலையைத் தன் கைகளில் ஏந்த, உயிர் போகும் வலியில் இருந்தவளுக்குத் தன் கணவனின் குரல் கேட்கவும் அந்த வலியிலும் நிம்மதி பெரு மூச்சு வந்தது...

தன்னந்தனியாகக் கட்டாந்தரையில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு வலியின் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தவளின் பரிதாப நிலைமை அர்ஜூனின் இதயத்தை வாள் கொண்டு இரண்டாக அறுத்துப் பிளந்தது போல் வலித்தது என்றால்...

"என்னங்க.........." என்று ஏதோ சொல்ல வந்தவளை தன் இரு கைகளாலும் தூக்க முயற்சித்தவனின் உடலும் உள்ளமும் சகலமும் அடங்க விரைத்துப் போனான் அவளின் புடவை முழுவதும் நனைந்து ஈரமாக இருப்பதை உணர்ந்ததும்...

அதற்குள் அருணும், வினோத்தும், மற்ற காவலர்களுடன் கமிஷனரும் வீட்டிற்குள் நுழைந்திருக்க, காவலர்கள் ஒவ்வொரு அறையாக நுழைந்து வேறு எவராவது எங்கேயாவது பதுங்கி இருக்கிறார்களா என்று தேட, அருணை நோக்கிய அர்ஜூனின் மனம் முழுவதும் விவரிக்க இயலாத நிலையில் கலங்கித் தவித்து இருக்க, அவனின் கலக்கத்தையும் தவிப்பையும் அப்பட்டமாக வெளிப்படுத்திய, சொல்ல முடியாத அளவிற்கு வலிகளைச் சுமந்த முகத்தோடும், குரலோடும்...

"அருண்... வாட்டர் ப்ரேக் ஆகிடுச்சு... கால் தி டாக்டர் [Call the doctor]" என்று அலறினான்....

கோகுல் திவ்யாவை கீழே தள்ளியதில் நிலைத் தடுமாறி அவள் தரையில் விழுந்த நிமிடமே அவளுக்குப் பிரசவத்தின் நேரம் துவங்கியிருந்தது... தன் நாத்தனாரைக் காப்பாற்றும் நோக்கில் தான் அவள் தன் வலியைக் கூட மறந்து மீண்டும் அவனிடம் போராடச் சென்றாள்... ஆனால் வலியின் உச்சியைக் கிட்டத்தட்ட அப்பொழுதே அடைந்துவிட்டிருந்தவளால் அதற்கு மேல் ஒரு நொடி கூட நிற்க முடியாமல் தான் மீண்டும் தரையில் சரிந்தது....

பிரசவத்தை, பேறு காலத்தின் வலியை அனுபவித்த பெண்களுக்குத் தான் தெரியும் அந்த இணையில்லாத வலியின் வேதனையும், அதன் கொடுமையும்....

மருத்துவருக்கு அழைத்த அருண் விஷயத்தைச் சொல்ல,

"ஆண்டி, திடீர்னு திவ்யா அண்ணிக்கு லேபர் பெயின் வந்திருச்சு... பட் நாங்க இப்போ வீட்டில் இல்லை... இந்த நிலைமையில இவங்களை உங்க ஹாஸ்பிட்டலுக்குக் கொண்டு வர முடியும்னு தோணலை... வாட்டர் வேறு ப்ரேக் ஆகிடுச்சு" எனவும்...

அவனின் பதட்டத்தில் இருந்து ஏதோ நடக்கக்கூடாத அசம்பாவிதம் நடந்திருப்பதைப் புரிந்துக் கொண்டவர்...

"வாட்டர் ப்ரேக் ஆனாலும் பரவாயில்லை அருண்... நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க ஆம்புலன்ஸை அனுப்பி விடுறேன்...." என்றார்….

தாங்கள் இருக்கும் இடத்தை அருண் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே மீண்டும் திவ்யாவை தன் கரங்களால் தூக்க முயற்சித்த அர்ஜூனின் கரம் பற்றியவள் பல்லைக் கடித்துக் கொண்டு வேண்டாம் என்று தலை அசைக்க, மனைவியின் செய்கையில் குழம்பியவன்...

"திவி... ஆம்புலன்ஸ் வர வரைக்கும் வெய்ட் பண்ண முடியாது... நம்ம காரில் ஹாஸ்பிட்டல் போவோம்... வர வழியில் ஆம்புலன்ஸில் உன்னை ட்ரான்ஸ்ஃபர் பண்ணலாம்" எனவும்,

உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மெல்ல தலை அசைத்து தன் கணவனைத் தன் அருகில் வரச் சொன்னவள் அவனின் காதில் ஏதோ சொல்ல, அவள் சொன்ன செய்தியைக் கேட்டு அதிர்ந்த அர்ஜூனிற்கு இதயம் தன் துடிப்பை சில நொடிகள் நிறுத்தியது போன்று இருந்தது...

அருணையும் கமிஷனரையும் திரும்பி பார்த்தவன்...

"ஐ தின்க் தி பேபி இஸ் ரெடி டு கம் [I think the baby is ready to come] " என்றவன் அதிர்ந்து கலங்கிய முகத்துடன் தன் மனையாளைப் பார்த்தது ஒரு சில விநாடிகள் தான்...

ஆழ்ந்த பெருமூச்சு விட்டவன் தன்னைச் சமன் படுத்திக் கொண்டு அருணிடம் அலை பேசியைக் கேட்டுக் கரத்தை நீட்டவும், அவனிடம் அலைப் பேசியைக் கொடுத்த அருண் நெஞ்சம் முழுவதும் திகில் சூழ்ந்திருக்க மஹாவையும் வினோத்தையும் திரும்பி பார்க்க, அதற்குள் அர்ஜூன் மருத்துவரிடம் பேசத் துவங்கி இருந்தான்....

"ஆண்டி... ஐ டோண்ட் திங் வி ஹாவ் இனாஃப் டைம்... [Aunty, I don't think we have enough time]" என்றவன் திவ்யாவின் மீது தன் அதிர்ந்த விழிகளைப் பதித்தவாறே அவளின் நிலைமையை எடுத்துரைக்க,

"சரி அர்ஜூன்... ஜஸ்ட் டோண்ட் பேனிக் [Just dont panic] நான் சொல்ல சொல்ல செய்... அது போதும்" என்றவர் பேசத் துவங்க...

அங்கு மருத்துவரோ, செவிலியர்களோ, மருத்துவ உபகரணங்களோ, மருத்துவ அனுபவமோ இல்லாத ஒரு பிரசவத்திற்குத் தயாரானான் அர்ஜூன்...

"அர்ஜூன்... வலியில் பாவம் சின்னப் பொண்ணு ரொம்பக் கத்துவா... பட் அவளுக்குப் பிரசவத்தைத் தாங்குற சக்தி வேணும்... இதில டாக்டர்ஸ் யாரும் இல்லாமல் டெலிவரி பார்க்கறதுல நிச்சயம் இன்னும் பயந்துப் போவா... அவளுக்கு முதல்ல ஆறுதல் சொல்லு... ஹான்.. அப்புறம் உன்கூட லேடிஸ் யாராவது இருக்காங்களா?"

"யெஸ் ஆண்டி... மஹா இஸ் ஹியர்..."

"ஓகே அர்ஜூன்... ஃபேஸ் டைம் [Face time] பண்ண சொல்லு... நான் திவ்யாவைப் பார்க்கனும்... இங்க இருந்தே கைட் பண்ணுறேன்..." என்றவர்...

"அர்ஜூன்... சில திங்க்ஸ் வேணும்... உங்களால ரெடி பண்ண முடியுமா?" எனவும்...

"யெஸ் ஆண்டி..." என்றவன் மஹாவிடம் அலைப் பேசியைக் கொடுத்துவிட்டு திரும்பிப் பார்க்க,

தன் தங்கையின் அலறலிலும், அருண் மஹாவின் வெளிறிய முகத்தைப் பார்த்தும் அரண்டு போயிருந்த வினோத்தின் தோற்றத்தில் தெரிந்த கலவரத்தைக் கண்ட அர்ஜூன் தானும் ஒரு அண்ணனாக...

"வினோத்... உங்களுக்குப் பார்க்க கஷ்டமா இருக்கும்... வேணா வெளியில் இருங்க... தேவைப்பட்டா உங்களைக் கூப்புடுறேன்" என்றவனின் முகத்தைக் கண்களில் நீர் தளும்பப் பார்த்திருந்த வினோத்திற்குத் தன் செல்லத் தங்கையின் கதறல் உடல் முழுவதும் துடிக்க வைக்க, இருந்தும் அர்ஜூனின் தைரியத்தில், அவனின் புத்திக் கூர்மையில், எந்தச் சூழ்நிலையிலும் தன் நிதானத்தை சிதறவிடாத அவனின் சாமர்த்தியத்தில் நம்பிக்கை வைத்து திவ்யாவை திரும்பி திரும்பிப் பார்த்தவாறே வெளியில் செல்ல முனைந்தவன் அறையின் வாயிலை அடையும் முன் மீண்டும் திவ்யாவின் "அம்மா" என்ற அலறல் சத்தத்தில் அதிர்ந்து தடுமாறினான்…

பிறந்ததில் இருந்து தன் பெற்றோரிடம் கூடத் தன் மனம் விட்டு பேசாதவள், தன் காலையே சுற்றி சுற்றி வந்த தன் செல்ல தங்கையை இந்த நிலையில் விட்டு செல்ல மனம் இல்லாது திரும்பி வந்தவன்...

"இல்ல அத்தான்... நானும் இங்கேயே இருக்கேன்" என்றான்...

"சரி வினோத்... நீங்க டாக்டர் ஆண்டி சொல்ற திங்க்ஸ் எல்லாம் வீட்டில் எங்கேயாவது, எஸ்பெஷலி கிச்சனில் இருக்கான்னு பாருங்க" என்று தேடச் சொன்னவன் மற்ற காவலர்களை வெளியில் போகச் சொல்ல,

மருத்துவர் கேட்ட பொருட்களைத் தேடிச் சென்ற வினோத்திற்கு நல்ல நேரம், அனைத்தும் அந்தக் கெஸ்ட் ஹவுஸின் சமையல் அறையில் இருந்தது...

வினோத்திடம் இருந்து பொருட்களை வாங்கிய அர்ஜூன் திரும்பி அருணைப் பார்க்கவும், அவனின் அதிர்ந்து கலங்கிய முகத்தை வைத்து அவனின் எண்ண ஓட்டங்களைக் கணித்தவன்...

"அருண்... இவ உனக்கு இப்ப அண்ணி இல்ல... அம்மாவா நெனச்சுக்க... தயங்காம எனக்கு ஹெல்ப் பண்ணு.... பட் உனக்குக் கஷ்டமா இருந்தா நீ வெளியில் வெயிட் பண்ணு... அவசியம்னா கூப்புடுறேன்" என்ற அண்ணனின் கூற்றில் திவ்யாவைத் திரும்பி பார்த்த அருணிற்கு அங்குத் தன் அண்ணியின் முகத்தில் தன் அன்னையே தெரிய, ஒரு மகனாகத் தன் அண்ணிக்குச் செய்ய வேண்டிய கடமைக்குத் தயாரானான் அந்த இளம் கல்லூரி மாணவன்....

மனித நேயம் இன்னும் உயிரோடு தான் இருக்கிறது என்பதனை அந்த இல்லத்தில் இருந்த அனைவரும் வெளிப்படுத்தி இருந்தார்கள் அவர்களின் குணாதிசயங்களில், செய்கைகளில்.....

"அர்ஜூன்... முதல்ல நீ ஸோப் இருந்தால் வெந்நீரில உன் கைகள முழங்கை வரை சுத்தம் பண்ணு... அப்புறம் நிறையச் சுத்தமான துணிகள் வேண்டும்... அதையும் ரெடிப் பண்ணு... " எனவும்...

சரி என்ற அர்ஜூன் சுற்றும் முற்றும் பார்த்தவன் அங்குத் துணி மணிகள் ஒன்றும் இல்லாததைக் கண்டு...

"அருண்... இங்க ஏதாவது ரூமில் கொஞ்சம் துணி இருக்கான்னு பாரு... பட் க்ளீன் க்ளோத்ஸா இருக்கனும்" எனவும்..

ஒவ்வொரு அறையாகச் சென்று தேடியவன் ஒரு வழியாகச் சில துணிகளை எடுத்து வர,

தன் சட்டையைக் கை முட்டி வரை மடித்து மருத்துவர் சொன்னது போல் குளியல் அறையில் வெந்நீரில் தன் கரங்களை முழுவதும் தேய்த்து கழுவிய அர்ஜூன், அருண் கொடுத்த துணிகளைத் திவ்யாவின் கீழ் போட்டவன் தன் மனைவியின் பிரசவத்திற்குத் தயாராக,

தன் அன்னையை அச்சத்தின், அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றிருக்கும், வாழ்நாளில் எதற்கும் கலங்காத கடினமான இதயத்தைக் கொண்டிருக்கும் தன் தந்தையைப் பிறக்கும் பொழுதே கதி கலங்க அடித்திருக்கும், அர்ஜூன் திவ்யாவின் வாரிசு இந்தப் பூமியில் உதிக்கத் தன் முதல் முயற்சியைத் துவங்கினான்....

தங்களின் மகவு இந்தப் பூவுலகத்தில் அவதரிக்க எடுக்கும் முனைப்பில் திவ்யாவின் வலி உச்சக்கட்டத்தை அடைய, தன் மனைவியின் அலறல் சத்தம் அர்ஜூனின் உயிரின் வேர் வரை சென்று அவனை அச்சத்தில் நடுங்க வைக்கப் பிறந்ததில் இருந்து பயம் என்பதனையே அறியாதவன், எளிதில் ஒருவராலும் அசைக்க முடியாதவன், அஞ்சா நெஞ்சன் என்ற பெயர் எடுத்த அர்ஜூன் முதன் முறை பயம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை முழுமையாக உணர்ந்தவன் மனைவியின் கதறலில் முகம் வெளிறிப் போக அவள் கையை இன்னும் இறுக பற்றியவாறே....

"திவி, கொஞ்சம் பொறுத்துக்கோடி" என்றான் தவிப்புடன்...

மருத்துவர் அற்ற, மருத்துவமனையில் அல்லாத அதுவும் முதல் பிரசவம்.... உடலில் உள்ள அத்தனை எலும்புகளையும் ஒரே சமயத்தில் ஒட்டு மொத்தமாக நொறுக்கியது போல் வலி.... இதில் தன் குழந்தை எந்த ஆபத்தும் இல்லாமல் பிறக்க வேண்டுமே என்ற தாய்மையின் கலக்கம்....

வலியில் தன் கணவனின் கரத்தை இறுக பற்றித் தன்னருகில் இழுத்தவள் பற்களைக் கடித்துக் கொண்டு...

"என்னால முடியலைங்க.. செத்து போயிருவேன் போல இருக்கு..... " என்று கதற,

அவளிடம் இருந்து தன் கரத்தை விடுவித்துக் கொள்ள முயற்சித்தவனால் அவளின் இறுக்கத்தைத் தளர்த்த இயலாமல் தன்னருகில் நின்றிருந்த அருணை நிமிர்ந்துப் பார்த்தவன் திவ்யாவின் கரத்தை தன் தம்பியிடம் நீட்ட,

திவ்யாவின் தலைப் பக்கம் சென்ற அருண், தன் அண்ணியின் தலையை ஒரு அன்னையாக மடி ஏந்தியவன் அவளின் கரத்தை இறுக்கப் பற்றிக் கொள்ள,

அந்த நேரத்திலும் மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க, உயிர் போகும் வலியில் துடித்துக் கொண்டிருந்தவள் மெல்ல நிமிர்ந்து தன்னை மடி தாங்கிய கொழுந்தனையும், மனம் முழுவதும் அச்சமும் அதிர்ச்சியும் சூழ்ந்திருந்தாலும் தன் காலடியில் அழுத விழிகளுடனும் தவிக்கும் முகத்துடனும் தன் அண்ணனுக்கும் மருத்துவருக்கும் பாலமாக இருக்கும் நாத்தனாரையும், இந்தப் பூமியில் தான் உதித்த நேரத்தில் தன் பெற்றோரிடம் இருந்து தன்னை வாங்கித் தன் தோளில் சுமந்து தனக்கு அன்னைக்கு அன்னையாகவும், தந்தைக்குத் தந்தையாகவும் இருந்து, இன்று தன் காலுக்கருகில் தன் தங்கையின் மகவையும் கரங்களில் சுமக்க ஏக்கத்தோடும் பரிதவிப்புடன் நிற்கும் தன் தமையனையும்...

விதி வசத்தால் ஒரே இடத்தில் சந்திக்க நேர்ந்திருந்தாலும், திருமணம் என்ற பந்தத்தில் மனம் ஒவ்வாமல் இணைந்திருந்தாலும், தன் இதயத்தைக் காதல் என்ற நுண்ணுணர்வு என்று ஊடுருவி நுழைந்ததோ அன்றில் இருந்து தன் ஆணவம், அகம்பாவம், கர்வம், திமிர் என்ற அனைத்தையும் தன் மனையாளின் பாதத்தில் சமர்ப்பித்துவிட்ட தன் கணவன் இதோ பூமியில் இன்னும் சில நிமிடங்களில் அவதரிக்கப் போகும் தன் வாரிசை தன் கரங்களில் ஏந்த தன் காலடியில் தைரியத்துடனும் அதே சமயம் தவிப்புடனும் முழங்கால் இட்டு மண்டியிட்டு இருப்பதைக் கண்டவளுக்கு...

"என்ன தவம் செய்தேன் இறைவா இவர்கள் என் வாழ்வில் தோன்ற!!!!!" என்றே இருந்தது.....

"அர்ஜூன்... இட்ஸ் டைம் [It's time].... திவ்யாவை புஷ் பண்ணச் சொல்லு... நீயும் ரெடியா இரு... பேபி ஸ்லிப் ஆகாம இருக்கனும்..." என்று மருத்துவர் கூற...

அவர் பேசுவதைக் கேட்ட திவ்யா...

"இல்லங்க... என்னால முடியல" என்று கதற...

"திவி... ஐ கேன் ஸி தி பேபிஸ் ஹெட் [ I can see the baby's head ]... எனக்குக் குழந்தையைப் பார்க்க முடியுது... ப்ளீஸ்... கொஞ்சம் ட்ரைப் பண்ணுடி..." என்று ஆறுதல் படுத்தியவனின் மனம் முழுவதும் திகில் உச்சஸ்தாயியை அடைந்திருந்தாலும், தன்னவளின் கதறல் தன் ஆத்மாவையே துளைத்து ஊடுருவுவதைப் போல் வலியெடுக்கச் செய்திருந்தாலும், தங்கள் காதலின், ஆத்மார்த்தமான தாம்பத்தியத்தின் பரிசாகத் தன்னவளின் வயிற்றில் உதித்திருக்கும் தன் முதல் வாரிசு இந்தப் பிரபஞ்சத்திற்குள் பாதுகாப்பாக அடியெடுத்து வைக்க ஒரு தந்தையாக அவனைக் கரங்களில் ஏந்தத் தயாராகக் காத்திருக்க,

மீண்டும் மீண்டும் மருத்துவரும் தன் கணவனும் கூறுவதைப் போல் முயற்சி செய்தவள், வலி தாங்கும் அடி எல்லையைக் கடந்தவள் கிட்டத்தட்ட மயக்க நிலைக்குச் செல்ல,

"திவி" என்ற தன் கணவனின் குரலில் தன்னிலை இழுத்துப் பிடித்தவள் இறுதியில் தன் உயிரை இறுக பிடித்துக் கொண்டு, அருணின் கரத்தை உடையும் அளவிற்கு பற்றிக் கொண்டு கடைசி முயற்சியாகத் தன் குழந்தையை வெளிக் கொணர முனைந்ததில் தன் அன்னையை உடலாலும், தன் தந்தையை மனதாலும் தன்னால் இயன்ற மட்டும் கலங்கடித்து, ஊருக்கே ராஜாவாக, தன்னை சுற்றியிருக்கும் அனைவரையும் தன் உள்ளங்கைக்குள் வைத்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் தன் தந்தையை விட, எதிர் காலத்தில் எதிராளிகளைக் கதி கலங்கடிக்கப் போகும் வேங்கைப் புலியாக, அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்க போகும் குட்டி அர்ஜூன் அதிரடியாக அவதரித்தான் இந்தப் பூமியில்...

தந்தையின் கரங்களில் விழுந்த அர்ஜூனின் மகவு வெளியே வந்ததும் வீறிட்டு அழ, எங்குக் குழந்தையைக் கீழே போட்டு விடுவோமோ என்று பயந்தவன் குழந்தையை நெஞ்சோடு அணைத்துப் புதிதாகத் துளிர்த்திருக்கும் தளிரின், தன்னவளின் ரத்தத்தில் தோய்ந்திருந்த, கர்ப்ப பையின் கசடுகளைப் பூசியிருந்த தலை உச்சியில் கொஞ்சமும் அருவருக்காமல் தன் முதல் முத்தத்தை மென்மையாகப் பதிக்க, தன் குழந்தையின் அழுகை சத்தமும், அவனின் மென்மையான ஸ்பரிசமும் இந்தப் பூ உலகத்தையே தன் காலடிகளுக்குள் கொண்டு வந்தது போல் இருந்தது அர்ஜூனிற்கு...

திருமணம் ஆன அன்றே தன் வாழ்க்கையில் இருந்து அவளை அகற்ற வேண்டும், தன் வாழ்க்கைப் பாதையில் அவளுடன் ஒருங்கே பயணிக்க முடியாது என்று உறுதியாக அவளை விவாகரத்துச் செய்ய வேண்டும், அவளின் முகம் கூடத் தன் மனதில் பதியக்கூடாது என்று வெறுத்து அவளைத் துடிக்க வைத்துத் தூரம் சென்றவன், தன்னவளின் இதயத்தில் ரண வேதனை உண்டாக்கியவன் இன்று தன் மனையாளுக்குத் தானே பிரசவம் பார்த்து, பூப் பொதியை கைகளில் ஏந்துவது போல் தன் கரங்களில் ஏந்திய தன் குழந்தையின் பிஞ்சு முகத்தைப் பார்த்தவனின் மனதில் சொல்ல முடியாத உணர்வுகளின் தாக்கம் வர, உடல் முழுவதும் சிலிர்த்தவன் முதன் முறை தன்னில் அந்த வித்தியாசத்தை உணர்ந்தான்....

தன் விழிகளில் ஈரம் படர்ந்திருப்பதை....

இதயத்தில், வார்த்தைகளில் சொல்ல முடியாத கிளர்ச்சி படப்படப்புடன் பரவி இருக்க, தன் நாடி நரம்புகளில் எல்லாம் உணர்வலைகள் சில்லிட்டு துடிப்புடன் படர்ந்திருக்க, ரோமங்கள் சிலிர்க்க உணர்ச்சிகளின் பேரொலியில் சிக்கியிருந்த அர்ஜூனின் விழிகளில் நீர் கோத்திருந்ததில் அதிசயம் இல்லையே...

"அர்ஜூன்... கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்க... லெட் தி ப்ளெஸண்டா கம் அவுட் ஃப்புல்லி... அதே போல் அம்பிளிக்கல் கார்ட (umbilical cord / தொப்புள் கொடியை) நீ கட் பண்ணாம இருக்கிறது தான் நல்லது... பட் நீங்க இருக்கிற தூரத்தைப் பார்த்தால் நிச்சயம் நீங்க ஹாஸ்பிட்டல் வருவதற்கோ அல்லது ஆம்புலன்ஸ் உங்க இடத்திற்கு வருவதுக்கோ ரொம்ப நேரம் ஆகும் போல தெரியுது... ஸோ ஒரு டூ டு பைஃவ் மினிட்ஸ் வெயிட் பண்ணிட்டு தென் அம்பிளிக்கல் கார்டின் இரண்டு முனைகளையும் க்ளீன் க்ளோத் இருந்தால் க்ளாம்ப் போடுவது போல இறுக்கி கட்டிட்டு தென் ஸ்டெரிலைஸ் பண்ணின நைஃப் ஆர் சிஸர்ஸ் வைத்து நடுவில் கட் பண்ணு..... உடனே கட் பண்ணிடாத, அதே போல் ரொம்ப நேரமும் விட்டுறாத...." என்ற மருத்துவர் குழந்தையைச் சுத்த படுத்தும் முறைகளையும் சொன்னவர் திவ்யாவை சிறிது நேரம் அசைக்காமல் இருக்கச் சொல்லி, பின் ஆம்புலன்ஸில் அவளை ஏற்றி மருத்துவமனைக்கு வரப் பணித்தார்...

குழந்தையைக் கரங்களில் ஏந்தியவன் அவர் சொன்னது போல் தொப்புள் கொடியையும் வெட்டி விட்டு சுற்றும் முற்றும் பார்க்க, தங்கையின் வீறிடலில் உடல் முழுவதும் நடுங்கித் துடித்து நின்றிருந்தாலும், அவளின் மகவின் அழுகையில் சிலிர்த்துப் போன வினோத் தன் இரு கரங்களையும் நீட்ட, வினோத்தின் அருகிலேயே நின்றிருந்த மஹா தன் சுடிதாரின் துப்பட்டாவை வினோத்தின் கரங்களில் போட, தன் மச்சினனும் தங்கையும் நின்றிருந்த தோற்றத்தில் அவர்களின் செய்கைகளில் மனம் கிளர்ந்த அர்ஜூன் பஞ்சுப் பொதி போல் குழந்தையைக் கொடுக்க,

தங்கையை ஏந்திய கரங்களில் அவளின் வாரிசையும் ஏந்திய வினோத்தின் உடலில் மயிற்கால்கள் கூச்செறிந்தது என்றால்.....

வாழ்க்கையில் முதன் முதலாக, இரும்பு மனம் படைத்தவன், அதிகாரம், ஆணவம், கர்வம் என்று அனைத்தையும் ஒருங்கே கொண்ட தன் அண்ணனின் கண்களில் நீர் தளும்பி இருந்ததைப் பார்த்த மஹாவிற்குத் தாய்மையின் பூரிப்பு குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கு மட்டும் சொந்தமல்ல... அந்தக் குழந்தைக்குத் தன் உயிரைக் கொடுத்து வாழ்நாள் முழுவதும் அதனைத் தன் மனதில் சுமந்து கொண்டிருக்கும் தந்தைக்கும் சொந்தமே என்றே தோன்றியது....

பிரசவத்தில் அதிகமாக இரத்தப் போக்கு ஏற்பட்டதில் அந்த நொடியே திவ்யாவின் கண்களை இருட்டச் செய்ய, ஆனால் அதற்குள் தன் குழந்தையைப் பற்றி அறிந்துவிட வேண்டும் என்ற உந்துதலில் தன் உடம்பில் உள்ள ஒட்டுமொத்த வலுவையும் சேர்த்து தலையை மெல்ல தூக்க முடியாமல் தூக்கியவள் தன் கணவனைப் பார்க்கவும், அவளின் எண்ணங்களையும் எதிர்பார்ப்பையும் புரிந்துக் கொண்டவன்....

"ஆண் குழந்தை திவி.... பேபி இஸ் ஃபைன் [Baby is fine]" என்று இதழ் விரித்துப் புன்னகைத்தவாறே கூற...

கணவனின் கூற்றில், போன உயிர் மீண்டு வந்தது போல் ஆழ பெருமூச்சுவிட்டவள் அதிகப்பட்ச வலியினால் தவித்து இருந்ததினால் உடல் முழுவதும் மரத்துப் போனது போல் இருக்க அதுவரை தன் கணவனிற்காகவும், தான் பெற்றெடுக்க வேண்டிய தங்களின் மகவிற்காகவும் உச்சியில் இருந்து உயிர் நாடி வரை சுண்டி இழுத்துக் கொண்டிருந்த வலியைப் பற்களைக் கடித்துப் பொறுத்துக் கொண்டவள் தன் கடமை முடிந்தது என்பது போல் மீண்டும் தன் கொழுந்தனின் மடியில் தலை சாய்த்தவள் மெல்ல விழிகளை மூட...

மஹாவுடனும், வினோத்துடனும் சேர்ந்து குழந்தையைச் சுத்த படுத்திய அர்ஜூன் மீண்டும் வினோத்திடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு திவ்யாவிற்கு அருகில் அமர, வலியில் கிட்டத்தட்ட தன் சுய நினைவை இழந்துக் கொண்டிருந்தவளைக் கண்டவனிற்குத் தன் மனையாளின் நிலைக் கண்டு பகீரென்று இருந்தது...

அப்பொழுது தான் அதிகமான அவளின் இரத்தப் போக்கு அர்ஜூனின் நினைவிற்கு வர, அது வரை குழந்தையை வெளிக் கொணறுவதில் மட்டுமே மனம் நிலைத்து இருந்ததினால் தன்னவளின் நிலையைப் புரிந்துக்கொள்ளாமல் தடுமாறியிருந்தவன்....

அருணின் மடியில் இருந்த தன்னவளின் தலையைத் தன் மடிக்கு மாற்றித் தன் இரு கரங்களாலும் தாங்கி பிடித்திருந்தவனின் முகம் முழுவதும் திகில் அப்பியிருக்க, குரலும் தன் கரங்களும் வெளிப்படையாக நடுங்க...

"திவி.. கண்ணை முழிச்சிப் பாருடி...ப்ளீஸ்" என்று குரல் நடுங்க, உள்ளம் தடுமாற இறைஞ்சினான்....

இருபது வயதே ஆன சிறு பெண், நிறை மாதக் கர்ப்பிணி என்றும் பாராமல் அவளைக் கடத்தி, ஈவு இரக்கம் அற்ற ஒரு மிருகத்தின் கரங்களில் சிக்கி, கீழே தள்ளப்பட்டுப் பல மணி நேரங்களாகப் பேறு கால வலியில் துடித்து, ஒரு அசந்தர்ப்பமான சூழ்நிலையில் மருத்துவ வசதி எதுவுமே இல்லாமல் தன் கணவனாலேயே பிரசவம் பார்க்கப் பட்டு, இறுதியில் வலியினால் ஏற்பட்ட மயக்கத்தினால் கண்கள் மூட,

என்ன தான் அந்த நிமிடம் வரை அர்ஜூன் தன் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் இழக்காமல் அவளுக்குப் பிரசவம் பார்த்திருந்தாலும் தன் மனைவி தன் கண்களை மூடிய அந்த நிமிடம் அச்சத்தின், அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றவன் பதற்றத்துடன்....

"அருண்... ஆம்புலன்ஸ் எங்க வந்திட்டு இருக்குன்னு செக் பண்ணு.... இல்லைன்னா திவ்யாவை காரில் தூக்கிட்டு போகலாம்..." என்று கலக்கத்துடன் சொல்லவும் ஆம்புலன்ஸ் வரவும் சரியாக இருந்தது…

வினோத் குழந்தையைச் சுமந்திருக்க, தன் இரு கைகளாலும் திவ்யாவை தூக்கிய அர்ஜூன் ஆம்புலன்ஸில் இருந்த ஸ்ட்ரெச்சரில் அவளைப் படுக்க வைத்தவன், மஹாவைத் திவ்யாவின் தலைமாட்டில் அமர செய்து, வினோத்திடம் இருந்த தன் குழந்தையைத் தன் கரங்களில் ஏந்திக் கொள்ள, அருணும் வினோத்தும் அர்ஜூனின் காரில் வர, கமிஷனரின் கார் அவர்களைப் பின் தொடரவும், அசுர வேகத்தில் மருத்துவமனையை நோக்கி பறந்தது ஆம்புலன்ஸ்.....



திவ்யா வழக்கமாகப் பரிசோதனை செய்யும் மருத்துவமனை அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து வெகுத் தொலைவில் இருந்ததால் அவளின் மருத்துவர் சொன்னது போல் அவர்களுக்கு சிறிது தூரத்தில் இருந்த ஒரு மருத்துவமனையை ஆம்புலன்ஸ் அடைந்ததும், வேகமாக இறங்கிய அர்ஜூன் தங்களுக்குப் பின்னால் காரில் இருந்து இறங்கிய வினோத்தையும், அருணையும் பார்த்து....

"அருண், நீ போய் டாக்டர்ஸ கூப்பிடு" என்று தன் ஒட்டு மொத்த சத்தத்தையும் சேர்த்து கத்த.....

சில நிமிடங்களில் மருத்துவக் குழு வரவும் திவ்யாவையும், குழந்தையையும் அவசரப் பிரிவுக்குள் எடுத்துச் சென்றவர்கள் அர்ஜூனை வெளியே நிற்க சொல்ல, தன் உடல், பொருள், ஆவி என்று அனைத்துமாக ஆகிப் போன தன் மனைவியின் கரத்தை இறுக்கப் பற்றியவாறே நின்று இருந்தவனைக் கண்ட அங்கு வந்த முதன்மை நர்ஸ் அவனின் தோளை தொட்டவர்...

"டாக்டர் தேவி எல்லாத்தையும் சொன்னாங்க... நீங்க பயப்படாதீங்க.... எங்க டாக்டர் இப்போ வந்திடுவாங்க... இஃப் யூ வாண்ட், யூ கேன் கம் இன் [If you want, you can come in]" என்றார்...

விழிகளில் நீர் தளும்பி நிற்க, அவருக்கு நன்றி சொன்னவன் திவ்யாவுடன் அறைக்குள் நுழைய, அதே சமயம் மருத்துவரும் வர, திவ்யாவை பரிசோதித்தவர் குழந்தைப் பிறந்த அசதியிலும் அதிகப்படியான ரத்தப் போக்கினாலும் அவள் மயக்கத்தில் இருக்கிறாள் என்றும், பிரசவத்திற்குப் பிறகு மருத்துவர் செய்ய வேண்டிய பணிகளையும் எடுத்துக் கூறியவர் அவனை வெளியே நிற்கச் சொல்லி தன் மருத்துவ குழுவுடன் சேர்ந்து திவ்யாவிற்கான சிகிச்சையைத் துவங்கினார்....

ஐ.சி.யுவிற்கு வெளியே நிற்கும் ஒவ்வொரு நிமிடமும் அர்ஜூனிற்கு நெருப்பில் நிற்பது போல் இருக்க, அவனை சமாதானப்படுத்தும் வழி தெரியாமல் அருணும், மஹாவும், வினோத்தும் மௌனமாக நிற்க, திவ்யாவின் சிகிச்சை முடிந்து ஐ.சி.யுவை விட்டு வெளியே வந்த மருத்துவர்....

"ட்ரீட்மெண்ட் முடிஞ்சுடுச்சு... சூச்சர்ஸ் போட்டுருக்கோம்... ஆண்ட் பல்ஸ் ரேட்டும் நார்மலாகிடுச்சு... இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்க வைஃப் கண்ணு முழுச்சிருவாங்க... " எனவும்...

ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு அர்ஜூன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் பொழுதே குழந்தைகள் மருத்துவர் குழந்தையின் பரிசோதனையும் முடிந்தது எனவும்,

மருத்துவர் சொற்படி அர்ஜூன் குழந்தை பிறந்தவுடனேயே சுத்த படுத்திவிட்டதாலும், குழந்தையும் தன் தந்தையின் அவஸ்தையின் வலியை மேலும் அதிகரிக்காமல் பிறந்தவுடனே அழுததால் சுவாசிப்பதிலும் எந்தப் பிரச்சனையும் இல்லாமலும் ஆரோக்கியமாக இருக்க, இன்னும் சட்டை முழுவதும் தன்னவளின் உதிரத்தை சுமந்து நின்று இருந்தவனை வேறு சட்டை அணியச் சொல்லவும், தன் காரில் எப்பொழுதும் வைத்திருக்கும் மாற்று சட்டையை அருணை விட்டு எடுத்து வரச் சொன்னவன் அணிந்த பிறகு தன் மகவை தன் கரங்களில் மீண்டும் ஏந்தினான்....

மறுபடியும் தன் தந்தையின் கரங்களில் ஏந்தப் பட்டதால் தன் தந்தையின் ஸ்பரிசத்தை உணர்ந்ததாலோ என்னவோ குட்டி அர்ஜூன் தனது சிறிய உடலை சிலிர்த்து முறிக்க, அஞ்சிய அர்ஜூன் தன் மகவை மென்மையாக அணைக்கவும் குழந்தையின் வாசம் அர்ஜூனின் மனதை ஊடுருவி செல்ல, சிலிர்த்தவன் இளம் முறுவலுடன் தன்னைப் போன்றே உரித்து வைத்துப் பிறந்திருந்த தன் குழந்தையின் தலையில் மீண்டும் முத்தத்தைப் பதித்தான்...

வினோத், மஹா, அருண் என்று சிறியவர்கள் அனைவரும் தங்கள் உதவியால் இந்தப் பூமியில் அவதரித்த அந்தச் சின்னத் தளிரை பேருவகையுடனும், பெருத்த நிம்மதியுடனும் பார்த்துக் கொண்டிருக்க, பல மணி நேரங்களாக அடித்துக் கொண்டு இருந்த அலை பேசியை அது வரை இருந்திருந்த மன நிலையில் கவனிக்க இயலாத சின்னவர்கள் அப்பொழுது தான் கவனித்தார்கள்...

அலை பேசியில் ஒளிர்ந்த எண்ணைப் பார்த்த அருண் அழைத்தது தன் தந்தை தான் என்றும், அவர் ஏற்கனவே பல முறை அழைத்தும் திவ்யாவின் பிரசவ பதட்டத்தில் அலை பேசியை கவனிக்கவில்லை என்பது புரிந்ததும், தந்தையின் அழைப்பை எடுத்தவன் நடந்த அனைத்தையும் சொல்லாமல் திவ்யாவிற்கு ஆண் குழந்தைப் பிறந்திருப்பதை மட்டும் சொன்னவன், மஹாவும் திவ்யாவும் பத்திரமாக இருப்பதையும், தாங்கள் அனைவரும் இப்பொழுது இருப்பது மருத்துவமனையில் தான் என்றும், அவருக்கு மருத்துவமனையின் விலாசத்தையும் சொல்ல,

அருண் தங்கள் இருப்பிடத்தைத் தெரியப்படுத்திய அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனையை அடைந்திருந்தார்கள் திவ்யாவின் பெற்றோரும், அர்ஜூனின் பெற்றோரும்...

அர்ஜூனும், அருணும், வினோத்தும் கமிஷனருடன் சென்றதில் இருந்து அவர்களை அழைத்துக் களைத்துப் போன பாலா கமிஷனருக்கு அழைத்திருக்க, திவ்யாவின் பிரசவ அலறல் சத்தம் வீட்டிற்கு வெளியேயும் கேட்டிருந்ததால் அவரும் பாலாவின் அழைப்பை எடுக்காதிருக்க, பதற்றமடைந்திருந்த பாலா மருத்துவமனையை அடைந்தவர் ஓட்டமும் நடையுமாக ஸ்ரீயுடனும், கலா, சிவசுப்ரமணியத்துடனும் அலறி அடித்து வர,

மஹாவின் அருகில் வந்த ஸ்ரீ அவளைக் கட்டி அணைத்துக் கொண்டவர்....

"மஹா... ஆர் யூ ஆல்ரைட்? (Are you alright?) " என்றவரின் கண்கள் ஒரு அன்னையாகக் கடத்தப்பட்டிருந்த தங்களின் மகளை ஆராய்ச்சியுடன் பார்க்கவும் அவரின் மனதில் ஓடிக் கொண்டிருந்த எண்ணங்களைப் புரிந்துக் கொண்டவள்...

"மாம்... எனக்கு ஒன்னும் இல்லை... நீங்க பயப்படாதீங்க... ஆனால் அண்ணி தான் ரொம்பக் கஷ்டப்பட்டுட்டாங்க" எனவும்...

ஐ. சி. யுவின் வாயிலில் தன் குழந்தையை அணைவாகக் கரங்களில் ஏந்தியிருந்த தங்களின் மூத்த மகனின் களைத்த முகத்தையும், கலங்கிய கண்களையும் பார்த்த ஸ்ரீக்கு, திவ்யாவும் மஹாவும் கடத்தப்பட்டதில் இருந்து இந்த நிமிடம் நடந்தது வரை அனைத்தையும் தன் கணவரின் மூலமாகத் தெரிந்துக் கொண்டவருக்கு, மனைவியின் பிரசவத்தின் போது அருகில் இருந்து அவள் மறு ஜென்மம் எடுப்பதைப் பார்ப்பது என்பது எத்தனை துணிவுள்ள ஆண் பிள்ளையானாலும் அவனையும் கலங்கடித்து விடும் என்று உணர்த்த....

கனிவுடன் அவனைப் பார்த்தவருக்குத் தெரியாது அவன் தன் மனைவியின் பிரசவத்தை அருகில் நின்று மட்டும் பார்க்கவில்லை...

எந்த நிமிடம் தன்னவளிடம் " உன் டெலிவரி டைம்ல நான் உன் கூடத் தான் இருப்பேன்.... குழந்தைப் பிறக்குற வரைக்கும் நான் உன்னை விட்டு ஒரு நிமிஷம் கூட நகர மாட்டேன்" என்று சொன்னானோ அவன் வாக்குப் பலிப்பது போல், அவள் அருகில் அவன் இருந்தது மட்டுமல்லவே...

மலரினும் மெல்லிய அவன் மனையாள் ஈன்றெடுத்த அவர்களின் மகவு இந்தப் பிரபஞ்சத்திற்குள் தனது முதல் சுவடை எடுத்து வைக்க விழுந்ததே அவனது கரங்களில் தானே....

அவன் அருகில் வந்தவர் பேரக்குழந்தையின் பிறப்பை அறிந்த பூரிப்பில், உள்ளம் முழுவதும் அக்களிப்பில் துள்ள, தங்களின் அடுத்தத் தலைமுறையின் முதல் வாரிசை, தலைச்சன் பேரனைத் தூக்க ஆசையுடன் கைகளை நீட்ட, தன் குழந்தையின் மீதே பார்வையைப் பதித்த படியே தன் அன்னையிடம் குழந்தையை அணைத்தவாறே மெல்லக் கொடுத்த அர்ஜூன் அவனையும் அறியாமல்..

"மாம், கேர்ஃபுல் (careful) " என்றான்...

மகனின் பதட்டத்தையும், அவன் தன் குழந்தையின் மீது வைத்திருக்கும் விழிகளை வேறு எங்கும் திருப்பாமல் பார்த்திருப்பதையும் கண்டு தானும் ஒரு அன்னையாகத் தன் மகனை ரசித்துப் பார்த்து சிரித்தவர்....

"எனக்கும் குழந்தையைத் தூக்கத் தெரியும் அர்ஜூன்" எனவும்,

"ஸாரி மாம், ஹி இஸ் வெரி டைனி... ஐ ஆம் ஜஸ்ட் ஸ்கேர்ட் [Sorry mom, he is very tiny.. I am just scared]" என்றான் ஒரு தந்தையாக முகம் கொள்ளாத பெருமிதத்துடனும், மனம் முழுவதும் நிறைந்திருந்த பூரிப்புடனும்...

மூன்று கிலோ மலர் பந்தை கரங்களில் சுமந்திருப்பதைப் போன்று உணர்ந்த ஸ்ரீ குழந்தையைப் பார்க்க, குறைந்தது ஆறடிக்கு மேல் வளருவான் என்பது போல் நீளமான குழந்தை...

பிரமிக்க வைக்கும் வகையில் அழகிய, களையான, செக்கச்செவேலென்ற முகம், கருகருவென்று மென்மையான முடி, கூர்மையான மூக்கு, சிவந்த அதரங்கள்.... வழக்கமாகக் கன்னத்தில் குழியோடு பிறக்கும் குழந்தைகளுக்கு முகத்தில் சதைப் பற்று அதிகமாகும் பொழுது தான் குழிகள் தெரிய ஆரம்பிக்கும்... ஆனால் வெகு சில குழந்தைகளுக்கே பிறந்த அன்றே குழிகள் ஆழமாக தென்படும்.... அதில் நம் குட்டி அர்ஜூனும் ஒருவன்...

ஜனித்த அன்றே அழகிய கன்னக் குழிகள் தோன்றியதில் அவன் சிறிதே புன்னகைத்தாலும் யாரையும் வசீகரிக்கும் தன்மை பெறுவான் என்பது ஊர்ஜிதமாவது போல் தன் பாட்டி தூக்கியதும் முறுவலிக்க, குழந்தையின் அழகு பேரழகாகப் பல மடங்கு அதிகரித்து, பார்ப்பவர் எவரின் மனதையும் குடைந்து உள்ளே சென்று வீற்றிருக்கும் வகையில் அத்தனை அழகாயிருந்தான் நமது மனதைக் கவர்ந்துவிட்ட அர்ஜூன் திவ்யா தம்பதியரின் குட்டி வாரிசு....

ஸ்ரீ குழந்தையின் பேரழகை ரசித்துக் கொண்டிருக்கும் பொழுதே கலாவும் அவர்களின் அருகில் வர, அவரிடம் ஸ்ரீ குழந்தையைக் கொடுக்கவும் அர்ஜூன் தன்னிச்சையாக அவர் அருகில் போய் நிற்க மருமகனின் பதற்றத்தை பார்த்த கலா புன்னகைத்தவர்...

"மாப்பிள்ளை... கொஞ்ச நேரம் என் பேரனைக் கொஞ்சிட்டு அப்புறம் உங்கக்கிட்டேயே கொடுத்துடுறேன்" எனவும்...

தன் மாமியாரிடம் முதன் முறையாகத் தன் இதழ்கள் பிரித்துச் சிரித்தவனின் முகத்தில் வெட்கம் படர, இருந்தும் அவன் தன் குழந்தையை விட்டு வேறு பக்கம் நகர்ந்தான் இல்லை....

சிவசுப்ரமணியம், பாலா என்று ஒவ்வொருவராகக் குழந்தையைக் கொஞ்ச, அதற்குள் திவ்யாவின் மகப்பேறு மருத்துவரான தேவியும் வந்து சேர, வேக நடை வைத்து அர்ஜூனின் அருகில் வந்து அவனைக் கட்டி அணைத்தவர், மஹாவையும், அருணையும், வினோத்தையும் அழைத்து அவர்களின் கரங்களையும் பற்றிக் கொண்டவர்...

"ஐ ஆம் ஸோ ப்ரவுட் ஆஃப் யூ ஆல் [I am so proud you all] .... இந்தச் சின்ன வயசில... வாவ்!!! எத்தனை நிதானம், தெளிவு, தைரியம்..." என்றவர் மீண்டும் அர்ஜூனின் கரம் பற்றி...

"அர்ஜூன்... மை ஆல்ஃபா மேல்! [ My Alpha Male] யூ நெவர் ஸீஸ் டு அமேஸ் மி! [You never cease to amaze me! ] " என்று வியந்தவரை திருதிருவென்று விழித்துப் பார்த்திருந்த பெரியவர்களைக் கண்டவருக்குப் புரிந்து போனது அவர்களுக்கு நடந்தவற்றை இளையவர்கள் இன்னும் தெரியப்படுத்தவில்லை என்று...

பின் அனைத்தையும் தெளிவாக அவர்களுக்கு விளக்கியவர், அர்ஜூன் எவ்வாறு துணிவுடனும், தெளிவுடனும், அதே சமயம் அந்தக் கொடிய, இக்கட்டான மனம் பதைபதைத்து, திகைத்து ,தவித்து இருக்கும் சூழ்நிலையில் கூடத் தன் மனைவியைத் தைரியப்படுத்திக் கொண்டு, குழந்தையையும் அவள் வெளிக் கொணற பிரமிக்க வைக்கும் வகையில் வெகு நிதானமாகவும், ஸ்திரமாகவும் போராடியதை விவரித்தவர், வினோத்தும், மஹாவும், அருணும் எவ்வாறு இந்தச் சின்ன உயிரையும் பெரிய உயிரையும் காப்பாற்ற அர்ஜூனிற்கு உறுதுணையாக இருந்து உதவிப் புரிந்தார்கள் என்று விளக்கமாக எடுத்துரைக்க,

கேட்டுக் கொண்டிருந்த பெற்றோர்களின் பார்வை தங்களின் பிள்ளைகள் மேல் நிலைத்தது நிலைத்த படியே இருந்தது...

கலா தன் விழிகளில் வழிந்த நீரைத் துடைக்கக் கூட மறந்து சிலையாக நின்றார் என்றால்,

அர்ஜூனை நிமிர்ந்து பார்த்த ஸ்ரீ சில விநாடிகள் அவனை உற்று நோக்கியவரின் மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் கரை புரண்டோட, அவரின் கண்களில் தெரிந்தது தன் மகனைப் பற்றிய பெருமையா? அல்லது தன் மகனின் ஜனனத்தையும் தனது மனையாளின் மறு ஜனனத்தையும், அவன் கரங்களில் ஏந்தி தாங்கியிருந்ததை நினைத்து பிரமிப்பா? தெரியவில்லை..

"மாப்பிள்ளை... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை... சொல்லப் போனா பேச கூட வாய் வரலை" என்று அர்ஜூனின் கரத்தைப் பற்றிய சிவசுப்ரமணியம் கண்களில் நீர் தளும்ப கூற,

"அன்கில்... திவ்யா என்னோட வைஃப்... இது என்னோட குழந்தை... " என்று மட்டும் சொன்னவன் வழக்கம் போல் தான் செய்ததை இதற்கு மேலும் பெருமை படப் பேச வேண்டாம், இதனோடு இந்தப் பேச்சை முடித்துக் கொள்ளலாம் என்பது போல் மருத்துவரிடம் திரும்பியவன்...

"ஆண்டி... இன்னும் திவ்யா கண்ணு முழிக்கலை..." என்றான் கவலைத் தோய்ந்த குரலில்...

"கமான் அர்ஜூன்... வா திவ்யாவைப் பார்க்கலாம்" என்று அழைத்தவர் முன்னே நடக்க, அவரைத் தொடர்ந்து அவர் பின்னே சென்றவன், அடி எடுத்து வைக்கும் முன் குழந்தையை ஒரு முறை திரும்பி பார்க்க,

சில நிமிடங்களுக்கு முன் அவன் தன் அருகில் நின்று அவன் குழந்தையைப் பார்த்திருக்கும் பொழுது இருந்த ஸ்ரீயின் மனநிலைக்கும், இப்பொழுது அவன் மீண்டும் திரும்பி தன் குழந்தையைப் பார்க்கும் பொழுது அவருக்கு இருந்த மனநிலைக்கும் அநேக வித்தியாசங்கள் இருந்தது...

மருத்துவர் சொன்னது போல் உண்மையில் தங்களின் மகன் ஒரு "ஆல்ஃபா மேல்" [Alpha Male] என்றே தோன்றியதில் பெற்றவர்களின் கண்களில் கர்வமும், பிரமிப்பும் வழிந்தது...

ஐ.சி.யுவிற்குள் மருத்துவருடன் நுழைந்த அர்ஜூன் அங்கு இன்னும் கண் விழிக்காத தொய்ந்துப் போன தோற்றத்துடன் விழிகள் மூடி படுத்திருக்கும் தன் மனைவியைக் கண்டவனின் இதயம் மீண்டும் தளற துவங்க,

"ஆண்டி, இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் திவ்யா முழிப்பதற்கு??" என்றான் தவிப்புடன்....

"அர்ஜூன்.... டெலிவரி ஆனவுடனே சிலருக்கு இந்த மாதிரி மயக்கம் வரது காமன் ... ப்ளஸ் திவ்யா ப்ளட் வேற ரொம்ப லூஸ் பண்ணிருக்கா... அண்ட் ஆஸ் யு நோ ஷி ஹேட் அ டெரிபிள் எக்ஸ்பீரியன்ஸ்... [And as you know she had a terrible experience]... ரொம்ப நேரமா பெயின்ல இருந்திருக்கா... அதனால தான் இந்த மயக்கம்... சீக்கிரம் நார்மலா ஆகிடுவா... அவளுக்கு நாமளும் கொஞ்சம் டைம் கொடுக்கனும்... " என்றவர் அங்கு இருந்த மருத்துவரிடம் திவ்யாவிற்கு அவர்கள் செய்திருந்த சிகிச்சைகளைப் பற்றிக் கேட்க, சிகிச்சைகள் அனைத்தும் முடிந்து இன்னும் சிறிது நேரத்தில் அவளை "ரெகுலர் ரூமிற்கு" மாற்றப் போகிறோம் என்று கூற, அவர்களின் சொற்களிற்குக் கூர்ந்து செவிமடுத்திருந்தாலும்....

"ஓகே ஆண்டி" என்றவனின் விழிகள் மட்டும் யோசனையுடனும் கவலையுடனும் தன் மனைவியையே பார்த்திருந்தது...

சில நிமிடங்களில் திவ்யாவை சாதாரண அறைக்கு மாற்ற, அவளைக் கண்ட கலாவிற்கும், சிவ சுப்ரமணியத்திற்கும் பெற்ற மனம் துடித்தது என்றால், ஸ்ரீக்கும் பாலாவிற்கும் மனம் தவியாய்த் தவித்தது சின்னப் பெண் என்ன பாடுபட்டிருக்கிறாள் என்று...

அவர்கள் அனைவரும் திவ்யாவை சுற்றி நின்றிருக்க, தன் மனையாளின் மீதே கண்களைப் பதித்திருந்தவன்...

"நான் கொஞ்ச நேரம் திவ்யாவோடு தனியா இருக்கனும்... ஐ ஜஸ்ட் வாண்டு பி வித் ஹெர் அலோன் [I just want to be with her alone]... என்றதும் அவனைத் திரும்பி பார்த்த ஸ்ரீ தன் மகனின் கொந்தளித்துக் கொண்டிருந்த உள்ளுணர்வுகளைப் புரிந்துக் கொண்டவராக "சரி அர்ஜூன்" என்றவர் மற்றவர்களைப் பார்த்து தலை அசைக்க, அவர்கள் அனைவரும் வெளியே சென்றதும், ஸ்ரீ தானும் வெளியேறி அவர் கதவை சாத்தியதும்,

தன் மனையாளின் கட்டிலிற்கு அருகில் ஒரு சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு நெருங்கி அமர்ந்து அவளின் வலதுக் கரத்தை, தன் வலது கரத்திற்குள் மென்மையாக பற்றிக் கொண்ட அர்ஜூன் தன் இடது கரத்தால் அவளின் களைத்து, தொய்ந்துப் போன முகத்தில் படர்ந்திருந்த முடிக் கற்றைகளை மெல்ல ஒதுக்கி அவள் முகத்தையே மௌனமாகப் பார்த்திருந்தவனின் மனதில் பல நூறு சிந்தனைகள்....

அவளைத் திருமணம் முடித்த அன்றிலிருந்து சில மணி நேரங்களுக்கு முன் தரையில் தன்னந்தனியாகப் பிரசவ வலியில் கதறித் துடித்துக் கொண்டிருந்தவளைக் கண்ட நிமிடங்கள் வரை சடுதியில் அவன் மனதில் ஓட, அர்ஜூனின் உணர்ச்சிகளின் மையப்புள்ளியாக அவளின் துடிப்பும், கதறலும், அலறொலியும் அவனின் உள்ளத்தை இன்னும் அதிரச் செய்ய, அவன் உடலில் நடுக்கம் ஒன்று ஒரு கணம் ஊடுருவி பாய்ந்தது...

நினைவுகள் நிலைகுலைந்து எங்கெங்கோ ஓடிக் கொண்டிருக்க, நடுக்கத்தைக் கண்மூடிக் கண்திறக்கும் நேரத்தில் உதறிவிட்டவன் அவளின் கரத்தைப் பற்றியிருந்த தன் கரத்தில் தன்னையும் அறியாமல் அழுத்தத்தைக் கூட்டியவனின் சித்தத்தில் மெல்ல சினம் தலைத்தூக்க துவங்க, முகத்தில் கனிவு இருந்த இடத்தில் இப்பொழுது ருத்ரம் ஆக்கிரமித்துக் கொண்டது...

தலையை அழுந்த கோதி தன் முகத்தில் இருந்த உணர்வுகளைத் துடைத்தெறிந்தவன், அறையை விட்டு வெளியே வரவும், உணர்ச்சிகள் சிறிதுமற்ற ஆனால் எதிரில் இருப்பவர்களை வதம் செய்யும், ஊடுருவும் கூர்மையைச் சுமந்திருந்த அவனின் கண்களைப் பார்த்திருந்த அவன் குடும்பத்தினருக்கு அர்ஜூனின் இந்த முகம் சொல்லும் அர்த்தம் புரிந்ததால் தன்னிச்சையாக அவன் பாதையில் இருந்து நகர்ந்தார்கள்...

அவர்களிடம் இருந்த தன் பார்வையைத் திருப்பியவன் வெளியே செல்ல எத்தனிக்க, அவன் கரத்தை சட்டென்று இழுத்த ஸ்ரீ....

"அர்ஜூன்... உன் கோபம் எனக்குப் புரியுது... இத யாரு செஞ்சதுன்னும் நீ கண்டு பிடிச்சிடுச்சிடுவ... பட் பி கேர்ஃபுல் அர்ஜூன்... எதுவும் பெரிசா பண்ணிறாத" என்று அவனின் குணம் தெரிந்த அன்னையாகக் கூற,

வழக்கமாக மனிதர்களுக்கு அதீத கோபத்தில் முகம் சிவக்கும், உதடுகள் கூடத் துடிக்கும்... அவர்களின் ஒவ்வொரு செயலும் அவர்கள் உள்ளத்தில் இருக்கும் சினத்தை வெளிப்படுத்தும்.... அவர்களை எதிர்த்து எதிரில் இருப்பவர்களுக்குத் தங்களின் நிலை புரிந்துவிடும்...

ஆனால் மிருகத்திற்கும் கீழாக நடந்திருந்த, இந்த நிமிடம் யாரென்றே தெரியாத தன் கண்ணெதிரில் இல்லாத கொடியவனை நினைத்து மனம் முழுவதும் அக்னி மலையாக கொதித்திருந்தும், சீற்றம் எல்லையைக் கடந்து தன்னை மீறித் திமிறிக் கொண்டிருந்தும், கோபவெறிக்கு ஆளான அர்ஜூனின் முகத்தில் சினத்திற்குப் பதில் அளப்பரிய அமைதியும், நிதானத்தை இழக்காத தோற்றமும், உதடுகளின் இடது கடை ஓரத்தில் நெளிந்த சிறிய புன்னகையும் ஸ்ரீயின் நெஞ்சத்தைத் திகிலால் அதிரச் செய்ய, அவனின் இந்தப் புதிய முகத்தைப் பார்த்தவர் விருட்டென்று இரண்டு அடிகள் எடுத்து பின்னால் நகர்ந்தார்..

தொடரும்..
 

JB

Administrator
Staff member
அத்தியாயம் - 34

மனிதர்களின் சிரிப்பில் முகத்தின் இடது பக்கம் உதடுகளை லேசாகச் சாய்த்து சிரிக்கும் விதம் அவர்களின் உள்ளத்தில் இருக்கும் தவறான உணர்வுகளையும், மனதில் ஏற்பட்டிருக்கும் மகிழ்ச்சியுடன் கலந்த துன்பத்தின் வலியையும் அதனால் விளைந்த வன்மத்தையும் ஒருங்கே குறிக்கும் வஞ்சத்தின் புன்னகை... (malicious smile)

தனது மகனின் முகத்தில் அப்படிப்பட்ட ஒரு சிரிப்பை இன்று கண்ட ஸ்ரீ தன்னையும் அறியாமல் தன் கணவரைத் திரும்பி பார்க்க, அர்ஜூனின் முகத்தையே பார்த்திருந்த மஹாவிற்கு மரணித்ததைப் போன்று உடல் சில்லிட்டுப் போனது...

ஸ்ரீயின் கேள்விக்குப் பதில் ஒன்றும் சொல்லாமல் அர்ஜூன் மருத்துவமனை வாயிலை நோக்கி நடக்கத் துவங்க, சட்டென்று வினோத்தின் கரத்தைப் பற்றிய மஹா...

"வினோத் என்னோடு கொஞ்சம் வாங்க" என்றவள் அருணையும் திரும்பிப் பார்த்து...

"அண்ணா நீங்களும் வாங்களேன்" என்றவள் இருவரையும் தன்னோடு இழுத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அர்ஜூனைப் பின் தொடர்வதற்குள் அவன் தன் காரை அடைந்திருக்க, "அண்ணா" என்று கத்தியவளின் குரலில் திரும்பியவன் அவர்கள் மூவரும் தன்னை நோக்கி ஓடி வருவதை யோசனையுடன் புருவங்களைச் சுழித்துப் பார்த்திருந்தான்....

மஹாவிற்கு அர்ஜூனை இப்பொழுது நெருங்கி உண்மையைச் சொல்வது என்பது எரியும் நெருப்பில் தானே குதிப்பது போல் என்று தெரியும்... இருந்தும் இனியும் அவனிடம் இருந்து உண்மையை மறைக்க விரும்பாமல் அவனை நெருங்கி நின்றவள்...

"அ.... அண்ணா உங்கக்கிட்ட கொஞ்சம் பேசனும்" என்றாள்..."

இந்த ஒரு வரியைச் சொல்வதற்குள்ளாகவே அவளின் நாக்கு மேலெண்ணத்தில் ஒட்டிக் கொள்ள, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உள்ளங்கை வியர்க்க
விறுவிறுக்க, வெளிப்படையாக நடுங்கும் உடலுடன் அர்ஜூனின் கூரிய கண்களையும், சுழித்த புருவங்களையும் கண்டு திகில் சூழ்ந்த மனதுடன்...

"அண்ணா, எங்கள கடத்துனது என்னோட காலேஜ் ஸீனியர் கோகுல்"... என்று பட்டென்று போட்டு உடைத்தாள்...

அவள் சொன்ன அந்த விநாடி அர்ஜூனின் முகத்தில் மின்னல் கீற்று போல் தெரிந்து விருட்டென்று மறைந்த முகப் பாவத்தையும், அவன் கண்களில் அலைபாயும் கொலை வெறியையும் கண்டவள் தண்டுவடம் சில்லிட, தன்னையும் அறியாமல் அருணிடம் ஒட்டிக் கொண்டு நிற்க...

"வாட்?" என்றான் அர்ஜூன்...

அவன் குரல் என்னவோ சாதாரணமாகத் தான் இருந்தது....

ஆனால் அந்த ஒற்றை வார்த்தையில்... அதனைக் கேட்கும் பொழுது அவனின் கண்கள் கக்கிய கனலை கண்டவளின் உடல் திடுக்கென்று தூக்கி வாரிப்போட, அவளை ஒட்டி நின்ற அருண் கூடச் சட்டென்று அவளை விட்டு இரு அடிகள் தள்ளி நின்றவன் மஹாவை நோக்கி அதிர்ந்த பார்வை வீச, இரு அண்ணன்களின் முகத்தில் தெரிந்த மாற்றமும், அவர்களின் பார்வையும் மஹாவை பெரிதும் அதிர செய்ய, அவளின் இதயம் தாறுமாறாகத் தன் துடிப்பை அதிகரித்து இருந்தது...

கல்லூரியில் கோகுலைப் பார்த்த அன்று நடந்ததில் துவங்கி ஹோட்டலில் அவனை அறைந்தது முதல், அதனால் அவன் வெறிக் கொண்டு "உன்னைய தூக்குறேண்டி" என்று கத்தியது வரை தலை குனிந்தவாறே கண்களில் நீர் ஆறாகப் பெருக்கெடுத்து வழிய, அவ்வப்பொழுது அழும் விழிகளைத் துடைத்துக் கொண்டே கூறி முடித்து நிமிர்ந்துப் பார்த்தவளுக்கு அங்கு நின்று கொண்டிருப்பது தனது அண்ணன் அர்ஜூனாகவே தெரியவில்லை...

தொழிலில் தன்னை ஒழிக்க நினைத்து தன் முதுகில் குத்தும் எதிரிகளை அவன் அரக்கத்தனமாக அழிக்கும் நேரத்தில் அர்ஜூனின் முகத்தில் தோன்றும் ஒரு வித உணர்வே இன்று மஹா நடந்த அனைத்தையும் ஒருவரிடமும் சொல்லாமல் மறைத்து, அது அவளின் கற்பிற்கே பங்கம் வரவழைக்க இருந்தது மட்டும் அல்லாமல் தனது மனைவியின் உயிரோடு சேர்ந்து தன் மகனின் உயிரையும் அழிக்க முனைந்திருந்ததை நினைத்துக் கோபம் தெறிக்க, ஆனால் ஒரு வார்த்தைக் கூட உதிர்க்காமல் மௌனமாக அவன் தன்னையே கூர்ந்து பார்த்திருந்த விதத்தில் கலங்கியவள் அவன் அருகில் வந்து அவன் கரத்தைப் பற்றித் தன் கரத்திற்குள் வைத்து....

"உங்களைப் பத்தி தெரிஞ்சு பயந்துட்டு தான் அவன் பேசாம இருக்கிறதா தான் நினைச்சேன்... ஆனால் அந்த ராஸ்கல் இவ்வளவு தூரம் போவான்னு நான் கொஞ்சம் கூட நினக்கலைண்ணா..." என்று கதற,

மட்டுமடங்கா ஆத்திரத்தில் இருந்தவன் விருட்டென்று அவளின் கரத்தை உதறி ஒரு அடி பின்னால் எடுத்து வைத்து தன் தங்கையை விட்டு நகர்ந்தான்...

அவன் தன்னை விட்டு அகன்றதும் திடுக்கிட்டவள் அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தவளின் கண்களில் அவன் தன் வலது கை முஷ்டியை இறுக்க மடக்கி தனது உள்ளத்திற்குள் வெடித்துச் சிதறும் சீற்றத்தை அடக்குவதைக் கண்டவளிற்குத் தன் நிலைப் புரிந்து போக, அதற்குள் அருண்...

"வாட் இஸ் திஸ் மஹா? [What is this Maha?].... ஹோட்டலுக்கு, அதுவும் பாருக்கும் டான்ஸிற்கும் போற அளவுக்கு உனக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது?? அதுவும் ஒருத்தன் இத்தனை தூரம் கேவலமா நடந்திருக்கான்.... எங்க யாரிடமும் சொல்லனும் உனக்குத் தோனவே இல்லையா?" என்று கோபத்தை அடக்கமாட்டாமல் பற்களைக் கடித்துக் கொண்டு வெடித்துக் கூற....

அர்ஜூனின் அருகில் மீண்டும் நெருங்கி வந்தவள் அவன் கரத்தை பற்ற முயற்சிக்க, அவள் கையை மீண்டும் உதறியவன் கோபம் தெறிக்க அவளையே பார்த்திருக்க, அர்ஜூனின் ஒதுக்கத்தில், அவன் தன் கையைத் தொடக்கூடப் பிடிக்காது உதறியதில் இதயம் சுக்கு நூறாக உடைந்து சிதறிப் போனதைப் போன்று உணர்ந்தவள் மருத்துவமனை என்று கூடப் பார்க்காமல் அவன் கால்களுக்கு அருகில் அமர்ந்து உதடுகள் துடிக்கக் கதறி கரைந்தாள் அழுகையால்....

"ஐ ஆம் ஸோ ஸாரிண்ணா... உங்கக்கிட்ட எப்படியும் சொல்லிடனும்னு ஒவ்வொரு தடவையும் நினைக்கும் போதெல்லாம் எனக்கு ரொம்பப் பயமா இருந்துச்சு... அதனால சொல்லாம மறைச்சுட்டேன்... ஆனால் அது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்ப உணர்ந்திட்டேண்ணா... என்ன மன்னிச்சுடுங்கன்னு கேட்கறதுக்குக் கூட எனக்கு அருகதையில்லைன்னு தெரியும்.... ஏன்னா என்னோட முட்டாள்தனத்தால் அண்ணியோட உயிருக்கே ஆபத்து வரவழைக்க இருந்தேனே..." என்று தேம்பித்தேம்பி அழும் தங்கையைப் பார்த்தவனுக்கு அதிர்ச்சியும் சினமும் அதிகரித்ததே தவிர அவள் மேல் பரிதாபம் வரவில்லை... மாறாக....

"திவ்யாவுக்கு மட்டுமா? அப்ப உனக்கு வர இருந்த ஆபத்து????" என்று மட்டும் சொன்ன அர்ஜூனை அண்ணாந்துப் பார்த்தவள் அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்து அவமானத்தில் தலை குனிய, அவளைக் குனிந்து தூக்கிவிட்ட அருணை அணைத்துக் கொண்டு கதறி அழும் தன் காதலியை பார்த்த வினோத்தின் உள்ளமும் உடைந்து நொறுங்கியது...

ஆனால் அதே சமயம் அவள் செய்ததும் தவறு தானே...

பெண்கள் இரவு நேரங்களில் பழகிய இடங்களிற்க்கு தனியாகச் சென்றாலே இது போன்ற ஆபத்துக்கள் நடக்கக் கூடிய இந்தக் காலத்தில், கல்லூரியில் படிக்கும் பெண்ணிற்குத் தெரிய வேண்டாமா இது போல் ஹோட்டலிற்கும், பார், டான்ஸ் என்று கூத்தடிக்கும் இடங்களுக்கும் செல்வதினால் வரும் பேராபத்துக்களும் அதனால் விளையும் விபரீதங்களும்...

இதில் வெளியில் நடக்கும் விஷயங்களை இளம் பெண்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும், ஆண்களுக்கும் சொல்லாமல் மறைப்பதினால் என்னென்னவோ அபாயங்களும் பிரச்சனைகளும் வர தானே செய்யும்...

தன் தங்கை அவ்வளவு அழுது கதறியும் ஒன்றும் பேசாமல் அவளையே பார்த்திருந்த அர்ஜூன் சட்டென்று காரில் ஏறி மின்னல் வேகத்தில் கிளம்ப,

மஹாவின் அதிர்ந்து, கலங்கிய, பயந்த முகமும், அருணின் அணைப்பில் இன்னமும் உடல் முழுவதும் நடுங்கிக் கொண்டே அவள் நிற்கும் தோற்றமும் வினோத்தின் மனதின் வேதனையை அதிகரிக்க, ஒரு முறையாவது தன்னவளை அணைத்து ஆறுதல் கூற மாட்டோமா என்றே இருந்தது அவனின் காதல் கொண்ட இதயத்திற்கு...

மஹாவின் உடலின் நடுக்கம் இன்னும் குறையாது இருக்க, அவளின் தேம்பலும் நிற்காதிருக்க, வினோத்தின் முகத்தில் தோன்றி இருந்த பதற்றத்தையும், தவிப்பையும், அவன் விழிகளில் தெரிந்திருந்த ஏக்கத்தையும் கண்ட அருண், வினோத்தைப் பார்த்துத் தன்னருகில் வருமாறு தலை அசைத்தவன் தன்னிடம் இருந்து மஹாவைப் பிரித்து அவனிடம் கொடுத்தவன் அவர்களுக்குத் தனிமை கொடுக்க நினைத்து மருத்துவமனைக்குள் செல்ல,

அருண் உள்ளே செல்லும் வரை காத்திருந்த வினோத் அவன் தலை மறைந்ததும், தாங்கள் இருப்பது மருத்துவமனை வளாகம் என்று கூடக் கண்டு கொள்ளாமல் மஹாவை இழுத்து அணைத்துக் கொண்டவன்...

"ம்ப்ச்... மஹா.... அழறத நிறுத்து... அதான் யாருக்கும் ஒன்னும் ஆகலை இல்ல... போதும் அழாத..." என்று என்ன ஆறுதல் கூறியும் அவளின் அழுகை மட்டும் நிற்கவில்லை.....

தன்னவளின் கதறல் அவனின் நேசம் கொண்ட மனதையும் வலிக்கச் செய்யவும் அவனையும் அறியாமல் அவன் கண்களில் நீர் தளும்பி நிற்க, ஆனால் தான் கலங்கியிருப்பதைப் பார்த்தால் மஹா தாங்கமாட்டாள் என்று அவளுக்குத் தெரியாமல் விழி நீரை துடைத்தவன் அவளின் தலையைக் கோதிவிட்டு அவளை மேலும் ஆறுதல் படுத்த முயன்றான்....

"மஹா... ப்ளீஸ்... சொல்றத கேளு.... திவ்யாவும் குழந்தையும் இப்போ நல்லா இருக்காங்க.... அழாத."

"இல்ல வினோத்... உங்களுக்குத் தெரியாது.... அந்தப் பொறுக்கி கிட்டதட்ட என் கழுத்தில் தாலி கட்டவே வந்துட்டான்... திவ்யா அண்ணிக்கு மட்டும் அந்த நேரத்தில் வலி வரலைன்னா, அவன் என்னை என்ன வேண்டுமானாலும் செய்திருப்பான்... ஒரு வேளை அப்படி அவன் மட்டும் என்ன தொட்டிருந்தானா?" என்றவள் இன்னமும் கோகுல் தன் எதிரில் நிற்பது போன்ற ஒரு பிரம்மையில், அதனால் ஏற்பட்ட திகிலில் திடுக்கென்று உடல்முழுவதும் ஒரு நடுக்கம் பரவ, அச்சத்தைத் தேக்கியிருந்த கண்களோடு, தொண்டை அடைக்கத் தழுதழுத்தவள்...

"நிச்சயம்... நிச்சயம் நான் இந்நேரம் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன் வினோத்" எனறு அவன் நெஞ்சில் அழுந்த முகம் புதைத்து மேலும் வெடித்துக் கதற....

அவளின் கதறலில் உடைந்தவன் காற்றுக் கூடப் புக முடியாத அளவிற்கு அவளை இன்னும் இறுக்கக் கட்டிப் பிடித்தவன் அவளின் நெற்றியில் மென்மையாக இதழ் பதித்தான்....

அந்த நேரத்தில் அவனின் மென்மையான முத்தம் அவளுக்குத் தேவையாக இருந்தாலும் தாங்கள் இருப்பது மருத்துவமனை, அதிலும் அருண் அண்ணா எந்நேரம் வேண்டுமானாலும் வெளியில் வரக் கூடும் என்றும் நினைத்தவள் அவனை விட்டு மெதுவாக விலக, அவளைச் சட்டென்று இழுத்தவன்....

"இப்ப எதுக்கு விலகுற? என்றவன் அவளைத் தன் கை அணைவுக்குள்ளே வைத்துக் கொண்டான்...

எத்தனை நேரம் இறுக்க அணைத்த நிலையிலேயே இருந்தார்களோ, மஹா மீண்டும் அவனை விலக, அவளின் உணர்வுகள் புரிந்து அவனும் தன் அணைப்பில் இருந்து அவளை விடுவிக்க,

"வினோத்... அண்ணி இன்னும் கண்ணு முழிக்கலை... அதுக்குள்ள அண்ணா இப்படி வெளிய கிளம்பறாங்கன்னா? எனக்கு என்னமோ ரொம்பப் பயமா இருக்கு... "

"மஹா... உங்க இரண்டு பேரையும் கடத்திட்டாங்கன்னு எங்க அம்மா சொன்னப்போ எனக்கு இந்த உலகமே இருண்ட மாதிரி இருந்துச்சு... அடிச்சிப்பிடிச்சு இங்க வந்தா நாங்க உங்க அண்ணாவோடு ஆஃபீஸுக்குள்ள நுழைஞ்ச நேரம் அவரு இருந்த நிலைமையை நீ பார்த்திருந்தீன்னா இப்படிக் கேட்கமாட்ட... கிட்டத்தட்ட ஒரு ராட்ஷஷனப் பார்க்குற மாதிரியே இருந்துச்சு.... அவ்வளவு ஆவேசம், ஆங்காரம் அவரு முகத்தில... உன்னை நினைச்சும், திவ்யாவை நினைச்சும், அவரோட குழந்தையை நினைச்சும் அவரு எவ்வளவு பதறித்துடிச்சாரு தெரியுமா? எங்களுக்கும் பதட்டம் இருந்துச்சு... ஆனால் எங்க எல்லாருக்கும் அதோட சேர்ந்து பயமும் தான் இருந்துச்சு... ஆனால் அவரு மனசில பதட்டமும், பயமும் மட்டும் இல்ல... ஒரு ஆக்ரோஷம் இருந்துச்சு... ஆனால் இதை எல்லாத்தையும் அவர் தனக்குள்ள கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு திவ்யாவுக்கு டெலிவரியும் பார்த்துட்டு இதோ இவ்வளவு நேரம் பொறுமையாவும் இருந்துட்டு, இப்ப அம்மா, அத்தை எல்லாரும் திவ்யா பக்கத்தில இருக்காங்க அப்படிங்கற தைரியத்தில் தான் அவரு போறாரு... " என்றவன்
அவளைத் தன் தோள் வளைவுக்குள் இழுத்தவாறே மருத்துவமனையை நோக்கி நடக்க,

மனம் முழுவதும் "அண்ணா நிச்சயம் அந்தக் கோகுலை சும்மா விடமாட்டாங்க" என்ற தைரியம் இருந்தாலும், அவனால் அவருக்கும் எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாதே என்று அச்சமும் சூழ்ந்திருக்க, அர்ஜூனின் கார் சென்ற வழியே திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றவளின் குற்ற உணர்வு அவளைக் குடைந்து எடுத்தவாறே இருந்தது....

காரை செலுத்திக் கொண்டு அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்த அர்ஜூனின் மனதிலோ, தன்னால் ஏதும் செய்ய இயலாத நிலைமையை உருவாக்கிய ஒரு கல்லூரி மாணவனின் கொடூரமும், ஒரு வேளை திவ்யாவை சரியான நேரத்தில் மீட்காமல் இருந்திருந்தால் அவளது மற்றும் தங்களின் குழந்தையின் நிலைமையும், இதற்கெல்லாம் காரணம் அவனது தங்கை மறைத்த அந்த ஒற்றை விஷயமே என்ற மிதமிஞ்சிய கடுமையும், அவனது உள்ளத்தைத் தவிடு பொடியாக்க, உணர்ச்சிகள் சீறிக் கொண்டு பாய்ந்துக் கொண்டிருந்ததால்....

"ஒரு பொடிப் பயல் என்ன காரியம் செய்திருக்கிறான்? அதுவும் என் தங்கையையும் மனைவியையுமே கடத்தும் அளவிற்கு?" என்று கொந்தளித்தவன் அந்த நிமிடமே தனது வேட்டையைத் துவங்க, அரசியலிலும், தொழில் வட்டாரத்திலும், தனது ஒரு விரல் அசைவிற்காகக் காத்துக் கொண்டிருக்கும் நிழல் உலகத்திலும் இருக்கும் முக்கியப் புள்ளிகளை அழைக்கத் துவங்கியவன் தனது கட்டளைகளையும், திட்டங்களையும் ஆணையிட துவங்க, இறுதியில் தனது திட்டங்களின் மையப்புள்ளியான கோகுலிற்கு "செக்" [Check] வைக்கக் கதிரை அழைத்தான்...

அதுவரை நடந்திருந்த அனைத்தையும் கமிஷனர் மூலம் தெரிந்து கொண்டிருந்த கதிர் தன் MD யின் துணிச்சலை, தன் மனைவிக்கு அவரே இக்கட்டான சூழ்நிலையில் பிரசவம் பார்த்திருந்ததை அறிந்த அந்த நிமிடத்தில் இருந்து அவன் அவனாக இல்லை...

அர்ஜூனின் மன உரத்தை, தைரியத்தை, சாமார்த்தியத்தை, ஒரு வேங்கைப் போல் தனது எதிராளிகளை அவன் வேட்டையாடுவதையும், தொழிற்களில் தனது போட்டியாளர்களைச் சாணக்கியத்தனமான தந்திரத்தாலேயும், அதி புத்திசாலித் தனத்தாலேயும் பல நேரங்களில், பல சூழ்நிலைகளில் அவன் வெற்றிக் கொள்வதையும் தன் கண்கூடாகவே பார்த்திருக்கிறான்...

ஆனால் இன்று அவர் செய்தது? இந்த உலகத்தில் எத்தனை பேருக்கு இந்தத் தைரியமும் சமயோசித புத்தியும் இருக்கும் என்று யோசித்திருந்தவனிற்கு உடலில் மயிற்கூச்செரிய சிலிர்க்க வைத்ததில் உறைந்து போயிருந்தான்...

மனையாளிற்கு எதிர்பாராதவிதமாக மருத்துவமனை அல்லாத இடங்களில் கணவன்மார்கள் பிரசவம் பார்த்திருப்பது ஒன்றும் புதிதல்ல... ஆனால் அவன் மனைவி கடத்தப்பட்டுப் பல மணி நேரங்களாக எங்கு இருக்கிறாள் என்று கூடத் தெரியாமல், ஒன்றும் செய்ய முடியாமல் அவன் தவித்துக் கலங்கிப் போய், ஆத்திரமும், அச்சமும் கலந்து துடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவன் மனைவி கடத்தப்பட்டிருக்கும் இடம் தெரிந்து, புயல் போல் அவளிடம் சென்று, அங்கு இருந்த சூழ்நிலையில் தன் மனதைக் கட்டுப் படுத்தி, தன்னிலையை ஒருங்கிணைத்து, தனது கலக்கத்தை ஒதுக்கி வைத்து, நிதானமாகத் தன் கரங்களாலேயே தன் மனைவிக்குப் பிரசவம் பார்ப்பது என்பது பல கோடி ஆண்களில் ஒருவரால் தான் முடியும்...

அதுவும் தன் MD யால் மட்டுமே முடியும் என்பதே கதிரின் பிரமிப்பு...

அர்ஜூனின் எண்ணை தன் அலை பேசியில் பார்த்தவன் மறுவிநாடியே அழைப்பை எடுக்க ..

"கதிர்... எங்க இருக்கீங்க?"

"சார்... இன்னும் ஆஃபிஸில் தான் இருக்கேன் சார்"

இப்பொழுது கிட்டத்தட்ட மணி விடியற்காலை ஐந்தை தாண்டியிருந்தாலும், இந்தச் சூழ்நிலையில் தனது MDக்கு எந்த நேரத்திலும் தனது உதவி தேவைப்படும் என்ற எண்ணத்தில் தான் அவன் இன்னும் அலுவலகத்திலேயே தங்கி இருந்தான்...

"ஓகே. கதிர்... ஐ ஆம் ஆன் தி வே [I am on the way]" என்ற அர்ஜூன் சிறிது நேரத்திலேயே அலுவலகத்தை அடைய, அர்ஜூனிற்காக அலுவலக வாயிலிலேயே காத்திருந்த கதிர் அவனைக் கண்டதும் ஓடி வந்தான்...

"சார்... கமிஷனர் ஸார் எல்லாத்தையும் சொன்னார் சார்... " என்றவனிற்கு அதற்கு மேல் பேச நாவெழவில்லை...

ஆனால் அவற்றை எல்லாம் கவனிக்கும் மனப்போக்கில் அர்ஜூன் இருந்தால் தானே???

வழி முழுவதும் சில மணி நேரங்களாகவேனும் தன்னைக் கையாலாகாதவனாக, ஒன்றும் செய்ய இயலாமல் கலங்கடித்து, திணறடித்து, தவிக்கவிட்டிருந்த, தன் உயிரினும் மேலான திவ்யாவை துடிதுடிக்க வைத்திருந்த, தன் பாசத் தங்கையை அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றிருந்த கோகுலை துவம்சம் செய்யும் நேரத்தையும், அவனைச் சித்திரவதை செய்து அழிக்கும் விதத்தைப் பற்றிய எண்ணங்களே அவன் மூளையையும், மனதையும் ஆக்கிரமித்து இருந்ததால், தன்னைச் சுற்றி இருப்பவர்களையோ அல்லது சூழ்நிலைகளையோ ஆராய்ந்துப் பார்ப்பதற்கு அர்ஜூனிற்கு நேரமும் இல்லை... அந்த மனநிலையிலும் அவன் இல்லை...

கதிருடன் தன் அறையை அடைந்தவன் ஒன்றும் பேசாமல் மௌனமாகத் தனது சேரில் அமர்ந்தவன், வலது கையைச் சேரின் கைப்பிடியில் ஊன்றி, தன் நெற்றியை தேய்த்துக் கொண்டிருக்க, அர்ஜூனையே கண்கள் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த கதிருக்கு தெரிந்து போனது....

இத்தனை அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்தும் அர்ஜூனின் இந்தப் பொறுமை, தன்னிடம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி அலை பேசியில் பேசாமல் இந்த நேரத்திலும், அதுவும் அவன் மனைவி மருத்துவமனையில் இருக்கும் நிலையிலும் கூட நேரடியாக அலுவலகத்தில் வந்து, இதோ இன்னும் எந்தக் கட்டளையும் இடாமல் யோசித்துக் கொண்டிருக்கும் அவனின் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் சிந்தனையின் வீரியம் என்னவென்று...

சில நிமிடங்கள் வரை கதிர் தன்னையே பார்த்திருக்கிறான் என்று தெரிந்தும் ஏதுவும் பேச முனையாமல், சுழித்திருந்த புருவங்களையும் விரிக்காமல், மௌனமாகத் தீவிர யோசனையில் இருந்த அர்ஜூன் நிமிர்ந்தவன்....

"கதிர்... திவ்யாவையும் மஹாவையும் கடத்தியது யாராக இருக்கும்னு நினைக்கிறீங்க?

"ஸார்... நைட் கமிஷனரிடம் பேசினப் போது அவரு உங்க வைஃப் டெலிவரி பத்தி மட்டும் தான் சொன்னாரு... யாரு கடத்தினதுன்னு இனி தான் கண்டு பிடிக்கனும் அப்படின்னாரு சார்.... ஆனால்..." என்று கதிர் முடிக்கவில்லை....

அவன் பேச்சில் அவனையே உறுத்துப் பார்த்திருந்த அர்ஜூன் சட்டென்று....

"மஹாவோட காலேஜ் சீனியர்... கோகுல்..." என்றான்...

அதிர்ந்த கதிரால் "சார்" என்று மட்டும் தான் கூற முடிந்தது....

ஏனெனில் கதிரும், அர்ஜூனும், அருணும் கடத்தியது யாராக இருக்கும் என்று நேற்று மாலையில் இருந்து பல கோணங்களில் ஆராய்ந்து இருந்தாலும், தன் தொழில் வட்டாரத்திலேயோ அல்லது அரசியல் வட்டத்திற்குள்ளோதான், தன்னைப் பற்றித் தெரிந்திருந்தும் இந்தக் கொடும் செயலை செய்திருப்பார்கள் என்றே நினைத்திருக்க, ஒரு கல்லூரி மாணவனின் ஆட்டம் தான் இது என்று தெரிந்த நிமிடம் அது கதிரைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது...

ஒரு குட்டி ஆடு, மலை அளவிற்கு உயர்ந்து நிற்கும், அசுரனைப் போன்று கம்பீரமாக எழுந்து தலைத்தூக்கி நிற்கும் வேட்டைப் புலியிடம், தன்னுடைய ஆடு புலி ஆட்டத்தைத் துவங்கி, அந்த அசுரப் புலியையே முற்றுகையிட்டு, அசையவிடாமல் அடைத்து, சிறைப்படுத்தி விழுங்க முயற்சி செய்தது தெரிந்ததும், அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று இருந்த கதிருக்கு,

இத்தனை நடந்தும், இந்தக் கொடூரமான செயலுக்குக் காரணகர்த்தா யாரென்று தெரிந்தும், மனதையும், தன உள்ளத்தில் வெடித்துக் கொண்டிருக்கும் சீற்றத்தையும் கட்டுப்படுத்தி, மிகுந்த நிதானத்தில் இருக்கும் அர்ஜூனின் எண்ணம் புரிந்தது.....

அது புலி தனது வேட்டையைத் துவங்கும் முன் அமைக்கும் வியூகத்தைப் பற்றிய திட்டமிடும் நேரம்...

புலி தனது இறையை வேகமாகப் பிடிக்க முயற்சி செய்யாது... ஏனெனில் அதன் இறை, புலியின் வருகையை மோப்பம் பிடித்து, தன்னைச் சுற்றி இருக்கும் அபாயத்தைக் கண்டு கொண்டு தப்பித்துக் கொள்வதற்கு வழி வகுக்காமல், தன் பசியைப் பொறுத்து, தன் வேட்கையைப் பொறுத்து, தனது தாக்குதலைத் தொடர தந்திரமான நடத்தையைத் தான் பயன்படுத்தும்...

அதுவே தனது MDயின் வழியும் என்பது புரிந்து போனது கதிருக்கு...

சற்று நேரம் அமைதியாக இருந்தவன் தயங்கியவாறே...

"சார்... நான் என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லுங்க சா..."

அவன் சொல்லி முடிக்கவில்லை, விருட்டென்று எழுந்த அர்ஜூனைக் கண்டு கதிருக்கு தூக்கிவாரிப்போட...

"கதிர்... நான் இங்க வரும் போதே அவனப் பத்தி விசாரிச்சிட்டேன்.... அவன் அப்பன் ஏதோ ஒரு இரெண்டு மூனு படங்கள் எடுத்து அது கொஞ்சம் ஹிட் ஆனதுனால வந்தது தான் அவனோடு இந்த வசதியும், திமிரும்... ஏற்கனவே பல பெண்களை அவன் நாசம் பண்ணிருக்கான்... ஆனால் இதுவரை எப்படியோ தப்பிச்சிருக்கான்... பட் அவன் கெட்ட நேரம் துவங்கிடுச்சு... நான் திவ்யாவை தூக்கி வந்ததற்கப்புறமே அந்தக் கெஸ்ட் ஹவுஸை வாட்ச் பண்ண சொல்லியிருந்தேன்... அவனோட ஆளு ஒருத்தன் கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி அங்கு வந்திருக்கான்... அவனும் திவ்யா, மஹாவைக் கடத்துனதுல ஒரு ஆளு... ஏதோ மனசு கேட்காம கோகுலுக்கே தெரியாம திவ்யாவோட நிலைமையைப் பார்க்க வந்திருக்கான்... ரூமில் நெறைய ப்ளட் இருந்ததைப் பார்த்துட்டு பயந்து ஓடியவனைப் பிடிச்சு விசாரிச்சதில் இப்ப கோகுல் எங்க இருக்கான்னு கண்டு பிடிச்சாச்சு..." என்றவன் தொடர்ந்த வார்த்தைகளைக் கூறும் பொழுது அர்ஜூனின் எதிராளியை துளையிடும் பார்வையில் தெரிந்த கோரத்தில் கோகுலின் எமலோகத்திற்கான பாதைத் தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது...

"கதிர்... அவன் எனக்கு உயிரோட வேணும்... என் திவி துடிச்ச துடிப்பவிட அவன் துடிப்பு பல மடங்கு அதிகமாயிருக்கனும்... அத நான் பார்க்கனும்... நீங்க அவனை நம்ம லெதர் ஃபேக்டரி கோடௌனிற்குக் கொண்டு வந்திடுங்க... பட் அண்டில் ஐ ஸே [But until I say] அவன டச் பண்ணாதீங்க" என்றவன் சில நிமிடங்கள் தன் பேச்சை நிறுத்தி யோசனையில் ஆழ்ந்தவன் மீண்டும் தொடர்ந்தான்...

"கதிர்... சாதாரணக் காலேஜ் ஸ்டூடண்ட் தானேன்னு இந்த விஷயத்தை ஈஸியாக எடுத்துடக் கூடாது... அவங்க அப்பனுக்குச் சினி ஃபீல்டுல கொஞ்சம் பேரு இருக்கிறதனால இத வேற வழியில் திருப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை... ஆல்ரெடி நான் அவன் அப்பன் இப்போ ப்ரொடியூஸ் பண்ணிட்டு இருக்கிற படங்களை வெளியில் வராம என்ன பண்ணனுமோ அத பண்ணிட்டேன்... ஸோ நமக்கு அந்தப் பக்கமும் இருந்தும் எதிர்ப்பு வரக்கூடாது... இருந்தாலும் நீங்க கொஞ்சம் கேர்ஃபுல்லா டீல் பண்ணுங்க... ப்ளஸ் காலேஜ் ஸ்டூடண்ட் அப்படிங்கறதால ஸ்டூடண்ட்ஸை வச்சுக் கூட அவங்க நமக்குப் பின்னால தொல்லைக் கொடுக்கலாம்... எல்லா வழியையும் ப்ளாக் [block] பண்ணிடுங்க... அவனுக்கு மருந்துக்குக் கூட எந்த இடத்திலேயும் இருந்து ஒரு உதவி கூடக் கிடைக்கக் கூடாது... அண்ட், இதில் மஹாவின் பேர் எங்கேயும், எந்த நேரத்திலேயும் வெளி வராமல் பாத்துக்கோங்க.. " என்றவனின் ஒவ்வொரு வார்த்தைகளையும் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்த கதிருக்கு இப்பொழுது நன்கு புரிந்து போனது...

இவர் ஏன் எப்பொழுதும் தன்னைத் தானே எதிர்த்து தனியே சதுரங்க விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று...

ஒரு ராஜாவிற்குச் செக் [check] வைக்க, அதனைச் சுற்றியுள்ள காய்களை வெட்டி வீழ்த்துவதற்கே சிறிதும் அஞ்சாதவர், ஒரு பொடிப் பையனையா அழிக்க முடியாது??

இருந்தும் எதிரியைக் குறைத்து மதிப்பிடாதே என்பது போல் தனது பழிவாங்கும் படலத்தைக் கூடச் சாமர்த்தியமான சிற்பி போல் செதுக்கும் தன் MD - யைப் பார்த்த கதிர் பிரமித்துப் போயிருந்தான் என்றால் இன்னும் வேறு சில நடவடிக்கைகளையும் பற்றி அர்ஜூன் கூறும் பொழுது அவனது நிதானமான குரலிற்கு அடியில் மறைந்திருந்த குரோதத்தைக், கொடூரத்தைக் கண்ட கதிருக்கே திகிலில் உடல் முழுவதும் வேர்த்தது...

"ஓகே கதிர்... திவ்யா இன்னும் கண் முழிக்கலை... நான் இப்ப ஹாஸ்பிட்டல் போறேன்... நீங்க அவனைப் பிடிச்ச நிமிஷமே எனக்கு ஃபோன் பண்ணுங்க" என்றவன் தன் அறையை விட்டு வெளியில் செல்ல எத்தனிக்க...

"சார்... அவன என்ன பண்ணப் போறோம்னு சொல்லவே இல்லையே" என்ற கதிரை நோக்கி திரும்பிய அர்ஜூனின் முகத்தில், இதழின் இடது பக்கக் கடையோரம் அதே புன்னகை... வஞ்சத்தின் சிரிப்பு!!

கதிரின் கேள்விக்குப் பதிலொன்றும் கூறாமல் அடி எடுத்து வைத்தவன், அறையின் வாயிலை அடையும் முன், நின்று, திரும்பியவன்...

"கதிர்... ஸ்ட்ரப்படொ மெத்தட் பனிஷ்மென்ட்னா [strappado method punishment] என்னன்னு தெரியுமா?" எனவும்,

கதிர் தெரியாது என்பது போல் தலை அசைக்க...

"தெரிஞ்சுக்கங்க" என்று மட்டும் சொன்னவன் வந்த வேகத்தில் வெளியேறினான்....


சிறிது நேரத்திலேயே மருத்துவமனையை அடைந்த அர்ஜூன் திவ்யாவின் அறைக்குள் நுழைய முற்படும் முன்னர் அவள் அறைக்கு வெளியில் அமர்ந்திருந்த மஹாவின் மீது ஒரு கூர்மையான பார்வையை வீசியவன், தன்னைக் கண்டதும் அவள் தலை கவிழவும், ஒன்றும் பேசாமல் அறைக்குள் நுழைய, தன் மனைவி இன்னும் கண் விழிக்காததைக் கண்டவனின் இதயம் தளர்ந்ததில் மனதில் மீண்டும் பயம் படர, அவள் முகத்தைப் பார்த்தவாறே நின்ற தங்கள் மகனின் தவிப்பைக் கண்ட ஸ்ரீ கரிசனத்துடன்...

"அர்ஜூன், சின்னப் பொண்ணுப்பா.... ரொம்ப நேரம் வேற வலில கஷ்டப்பட்டுட்டா... இன்னும் கொஞ்ச நேரத்தில் கண் திறந்திடுவா... வா... வெளியில் வந்து உட்கார்" என்றார்...

அவருக்கு இன்னும் கோகுலைப் பற்றியோ, அல்லது மஹா தங்களிடம் மறைத்திருந்த விஷயங்களைப் பற்றியோ தெரியாது... அருணும் அவரிடம் அதனைப் பற்றிப் பேசியிருக்கவில்லை...

ஸ்ரீயின் குரலில் அவரைத் திரும்பி பார்த்தவனின் கண்களில் தெரிந்த வலியை கண்டவரின் மனமும் பதைபதைக்க, அவன் கரத்தை பற்றி அறைக்கு வெளியே அழைத்து வந்தவர் அவனை வெளியில் போடப்பட்டிருந்த சேரில் அமரச் செய்ய, திவ்யா கண் விழிப்பதற்காகக் காத்திருந்தவனிற்கு நேரம் செல்ல செல்ல அவள் இன்னும் சுயநினைவிற்கு வராமல் இருப்பதைப் பார்த்தவனுக்கு நெஞ்சம் கலகத்தினால் பிசையத் துவங்கியது..

அவன் மனதிற்குள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் திகிலும், ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் பயங்கற சிந்தனைகளும், அவனின் இதயத்தைச் சுக்கு நூறாக உடைத்தெரிய, மனதிற்குள் அன்று...

"நான் எப்ப்ப்ப்ப்ப்பவும் உங்களோடே இருப்பேன்" என்று திவ்யா சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருக்க,

"ப்ளீஸ் டி... திரும்ப வந்துருடி... எனக்கு நீ வேணும்... ஐ மிஸ் யூ டி திவி.... " என்று உள்ளத்திற்குள் ஆயிரமாவது தடவையாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் தனது உணர்வுகளை வெளிக்காட்டப் பிடிக்காமல், தலையைத் தனது வலது கரத்தால் தாங்கி, விழிகளை மூடி அவன் குனிந்து அமர்ந்திருந்த தோற்றம் அவன் எவ்வளவு மன உளைச்சலிலும் கலக்கத்திலும் இருக்கிறான் என்பதை அங்குக் கூடியிருந்த அனைவருக்கும் உணர வைத்தது...

எப்பொழுதும் கம்பீரமாக, இரும்பு மனதுடனும், அதிகாரத்துடனும் இருக்கும் தங்கள் மருமகனின் இப்பொழுதைய தோற்றத்தில் மனம் கலங்கி வேதனையுற்ற கலா, அவன் அருகில் நெருங்க அஞ்சினாலும், இருந்தும் தன் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் அவனுக்கு ஆறுதல் அளிக்கும் நோக்கத்துடன் சன்னமான குரலில்...

"சீக்கிரத்தில் கண்ணு முழிச்சிடுவா மாப்பிள்ள... நீங்க பயப்படாதீங்க... நிச்சயம் அவளுக்கு எதுவும் ஆகாது... " என்றார்...

அவரின் குரலில் நிமிர்ந்து பார்த்தவன் வலி கலந்த ஒரு சிறு புன்னகையை மட்டும் உதிர்த்து விட்டு மீண்டும் தலையைத் தனது கரத்தால் தாங்கியவறே குனிய, அதற்கு மேல் அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று அவருக்குப் புரியவில்லை...

அதே நேரம் திவ்யாவின் அறையில் இருந்து வெளியே வந்த நர்ஸ்,

"சார்... உங்க வைஃப் கண்ணு முழிச்சிட்டாங்க... நீங்..." என்று சொல்லி முடிப்பதற்குள் வெடுக்கென்று நிமிர்ந்தவன் எழுந்த வேகத்தில் தன் அருகில் நின்று இருந்த தன் மாமியாரைக் கிட்டத்தட்டத் தள்ளி விடுவான் போல் அவருக்குத் தோன்றியதில் சட்டென்று அவனுக்கு வழிவிட்டு நகரவும், மின்னல் வேகத்தில் தன் மனைவியின் அறைக்குள் நுழைந்தவனைப் பார்த்த ஸ்ரீக்கும் கலாவிற்குமே விழிகளில் நீர் கோர்த்தது...

அவன் தன் அலுவலகத்தில் இருந்து வந்ததில் இருந்து தன் குழந்தையைக் கூடப் பார்க்கவில்லை... திவ்யா இன்னும் கண் விழிக்கவில்லை என்பதை அறிந்ததும் இடிந்து போய் அமர்ந்தவன் தான்... அதற்குப் பின் அவனிடம் எந்த ஒரு அசைவும் இல்லை... அதில் இருந்தே அனைவருக்கும் தெரிந்து போனது அவன் தன் மனைவியின் நிலை எண்ணி எவ்வளவு உடைந்திருக்கிறான் என்று...

வேகமாக அறைக்குள் நுழைந்தவன் கட்டிலில் தொய்ந்துப் போய், பிய்த்துப் போட்ட நாறைப் போன்று களைந்துக் கிடந்த மனைவியைப் பார்த்தவனின் உள்ளம், ஆர்ப்பரிக்கும் அருவிப் போன்று பேரிரைச்சலோடு அலறிக் கொண்டு இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவளின் அருகில் சென்று மௌனமாக நிற்க, பிள்ளைப் பேறு அசதியில் உடல் முழுவதும் அடித்துப் போட்டது போன்று ஒவ்வொரு பாகமும் வலித்துக் கொண்டிருக்க, இன்னமும் கண் மூடிப் படுத்திருந்தவள் தன் கணவன் அழைக்காமலே அவன் வந்ததை உணர்ந்து மெல்ல கண் விழித்தாள்...

நேற்று மாலை ஏழு மணி அளவில் நிறைமாதக் கர்ப்பிணியான தன் மனைவி கடத்தப்பட்டதை அறிந்த அந்த நிமிடத்தில் இருந்து, கிட்டத்தட்ட பதினொரு மணி நேரங்கள், ஒரு கணவனாய் தவியாய் தவித்து, நரகத்தில் இருப்பது போல உள்ளம் கலங்கி, இதயமே வெடித்துவிடும் அளவிற்குத் திக்பிரமையின் வசப்பட்டு, துடித்திருந்தவனின் அலைமோதிக் கொண்டு இருக்கும் மனம் இளைப்பாறும் வகையில், விழிகளைத் திறக்க முடியாமல் திறந்து தன்னைப் பார்த்த தன் மனையாளைக் கண்ட அர்ஜூனின் உள்ளத்தில், உணர்வுகளின் பிடியில் சிக்கியிருந்தவனின் இதயத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் உணர்ச்சிகளை வார்தைகளில் வடிக்க இயலாது...

தன் அருகே மௌனமாக, தன் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்கும் கணவனைக் கண்டவள் தன்னருகில் வருமாறு தலை அசைக்க, கட்டிலில் அவளுக்கு அருகில் அமர்ந்தவனின் கண்களில் முதன் முறையாக அந்த வித்தியாசத்தை உணர்ந்தவளின் உடலும் உள்ளமும் அதிர, நீர் திரையிட்டு இருந்த அவன் விழிகளைக் கூர்ந்துப் பார்த்தவள் பதறித் துடித்து...

"ம்ப்ச்... என்னங்க இது??" என்றவாறே விழி நீரைத் துடைத்து விட்டாள்...

தன் கண்களைத் துடைத்த அவளின் பஞ்சுக் கரத்தை தனது கரத்தால் அழுந்த பற்றியவன்....

"என்னைய ரொம்பப் பயமுறுத்திட்டடி... செத்து பிழைச்சுட்டேண்டி" என்று மென்மையாக முத்தமிட்டவாறே கூற...

அவன் கண்ணீரை இன்னமும் தன் கரத்தில் உணர்ந்து பதறியவள் துடிதுடித்துப் போய்...

"ஐயோ! என்னங்க..." என்றவள் மீண்டும் அவன் விழி நீரைத் துடைக்கத் தன் கரத்தை அவன் முகத்தை நோக்கிக் கொண்டு செல்ல,

அவளை மென்மையாக இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.....

கட்டாந்தரையில் தன்னந்தனியாக வலியில் கதறித் துடித்துக் கொண்டு இருந்த அவளைத் தன் கண்களில் கண்ட அந்த விநாடியே செத்துப் பிழைத்தவன்... பிள்ளை பேரின் பொழுது அவள் துடித்துக் கதறிய கதறலில் தானும் அவள் வலியை அனுபவித்துத் தவித்து இருந்தாலும், தன் குழந்தையைத் தன் கரங்களில் ஏந்தும் வரை, தன்னவளுக்காக, தன் அச்சத்தை, தவிப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தனக்குள் அடக்கி வைத்திருந்தவன்..

இப்பொழுது கண் விழித்துத் தன் நெஞ்சம் சாய்ந்திருக்கும் தன் மனையாளை இறுக்கி அணைத்து கொண்டவன் ஆழ்ந்து அனுபவித்தான் அந்த நிம்மதியை...

கணவனின் மார்பில், அவனின் இறுக்கிய அணைப்பில் ஆழ்ந்து அவன் வாசனையைத் தனக்குள் வாங்கிக் கொண்டிருந்தவளின் தாய்மை சட்டென்று விழித்துக்கொள்ள, அவன் முகம் நோக்கி அண்ணாந்துப் பார்த்தவள் "குழந்தை" என்று சொல்ல, மெல்லிய புன்முறுவல் சிந்தியவன், அறைக்கு வெளியில் கணவன் மனைவி இருவருக்கும் தனிமை கொடுத்து நின்று இருந்த ஸ்ரீயிடம் இருந்து தங்களது குழந்தையை வாங்கிச் சென்றவனின் முகத்தில் படர்ந்திருந்த அமைதியில் ஒரு அன்னையாக ஸ்ரீயின் மனமும் சிலிர்த்தது....

ஒரு கையால் தங்களின் குட்டிச் செல்வத்தைப் ஏந்தியவன், மறு கையால் தன் மனைவி மெல்ல எழ உதவி செய்தவன், அவளை நன்கு வசதியாக அமரச் செய்து குழந்தையை அவளிடம் கொடுக்க, எவ்வளவு வலி, எவ்வளவு வேதனை, எத்தனை போராட்டம், எத்தகைய திகில்...

அத்தனையும் சடுதியில் மறைந்து போனது போல் இருந்தது திவ்யாவிற்குத் தங்களது அழகிய மகவை, தங்களின் காதலுக்கு, இனிமையான நேசத்தில் மூழ்கியிருந்த தாம்பத்தியத்திற்குச் சாட்சியாகக் கிடைத்த பொக்கிஷத்தை, தங்களின் வாரிசை தன் கரங்களில் ஏந்திய பொழுது...

விழிகளில் நீர் தளும்பி நிற்க, ஒரு அன்னையாகத் தனது குழந்தையை முதல் முறை ஏந்தும் பொழுது ஏற்படும் கிளர்ச்சியில் தத்தளித்தவளின் உடல் முழுவதும் மகிழ்ச்சியின் சிலிர்ப்பு படர, குழந்தையின் நெற்றி, பட்டுக் கன்னங்கள் என்று மென்மையாக முத்தமிட்டவளைப் பார்த்திருந்தவன், அவளின் தலைக் கோத, கணவனை நிமிர்ந்துப் பார்த்தவளின் பார்வையில் இருந்தது என்ன?

எங்கிருந்தோ வந்து, மனம் முழுவதும் வெறுப்புடன் மாங்கல்யத்தை அணிவித்து, பின் இதயம் முழுவதும் நிறைந்திருந்த தன் காதலால் பெண்ணவளைத் திக்குமுக்காடச் செய்து, காதலை மட்டும் கொடுப்பது திருமணம் அல்ல, காதலோடு சேர்ந்து என் உயிர் இருக்கும் வரை, என் உயிரையும், உணர்வுகளையும் உனக்குக் கொடுப்பேன் என்பது போல் தன் உயிரோடு கலந்து, விதியின் வசத்தால் ஒரு கொடூரமானவனால் தன்னவள் கடத்தப்பட்டிருந்த நேரத்திலும், தன்னை நிலைப்படுத்தி, தன் மனதில் இருந்த கலக்கத்தை ஒதுக்கி வைத்து, தனது உயிரில் உருவான தனது மகவை இந்தப் பூவுலகத்திற்குக் கொண்டு வந்த கணவனை என் சொல்வது?

அவளின் பார்வையில் வழக்கம் போல் மதி மயங்கியவன்...

"என்னடி அப்படிப் பார்க்குற?" எனவும்...

அர்ஜூனின் கேள்விக்கு ஒன்றும் இல்லை என்பது போல் தலை அசைத்தவளை மீண்டும் தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்ள, அது வரை வெளியில் திவ்யாவைப் பார்ப்பதற்குத் தவியாய் தவித்துக் கொண்டிருந்த கலா, மெல்ல அறையின் கதவைத் தட்ட...

"வாங்க" என்று மட்டும் சொன்னவன் அவர்கள் அனைவரும் உள்ளே நுழைந்தும் தன்னவளை விட்டு விலகினான் இல்லை....

உள்ளே வந்த மஹா கலங்கி தவித்துப் போய் விழிகள் கலங்க, உதடுகள் துடிக்க மன்னிப்பு இறைஞ்சுவது போல் அர்ஜூனைப் பார்த்திருக்க...

"வா" என்பது போல் தலை அசைத்தவனைக் கண்டவள் வேகமாக ஓடிப் போய்ச் சிறு பிள்ளைப் போல் அவன் அருகில் ஒண்டி நிற்க, தன் வலது கரத்தால் அவளைத் தன்னருகில் இழுத்துக் கொண்டவனின் செய்கையில் மனதிற்குள் கதறித் துடித்து மன்னிப்பு இறைஞ்சினாள் அந்தச் சின்னப் பெண்....

"திவ்யா... எப்படிடா இருக்க?" என்ற ஸ்ரீயின் கேள்வியில் மாமியாரைத் திரும்பிப் பார்த்த திவ்யா இதழ் பிரித்து மெல்ல சிரிக்க,

அண்ணனின் செய்கையில், தன்னை மன்னித்துவிட்டார் என்ற திருப்தியில், பழைய மஹாவாக மாறியவள்....

"அண்ணி, குழந்தை அப்படியே அண்ணாவ உரிச்சு வச்சிருக்கான்... ஏற்கனவே ஒரு அர்ஜூன் எங்கள எல்லாம் பயமுறுத்துவது பத்தாது... இப்பொ இன்னொரு அர்ஜூன் வேறயா?" என்று கூற, அந்த அறை முழுவதுமே மகிழ்ச்சியில், பூரிப்பில், சந்தோசத்தில் திளைத்து இருந்தது...

ஒவ்வொருவர் உள்ளத்தில் ஒவ்வொரு விதமான உணர்வுகள்...

திவ்யாவிற்கு அந்த அசதியிலும், தன் கணவனின் அணைப்பில் நிம்மதியும், தனது கரங்களில் ஏந்தியிருக்கும் தனது குழந்தையின் ஸ்பரிசத்தில் பூரிப்பும் இருந்ததென்றால், மஹாவிற்குத் தன் அண்ணன் தன்னை ஏற்றுக் கொண்டான் என்ற நிம்மதியும், தன்னவளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியில், நிம்மதியில் வினோத்தின் மனமும் நிறைந்திருக்க, தன் அண்ணனோடு சேர்ந்து போர் களத்தில் போரிட்டு வெற்றி வாகை சூடியிருந்த தம்பியின் மனநிலையில் அருணும், பெரியவர்களின் மனதில் தங்களின் பிள்ளைகள் நால்வரும் சேர்ந்து தாயின் உயிரையும் சேயின் உயிரையும் காத்திருந்ததில் கர்வமும் தோன்ற, அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுதே அலறியது அர்ஜூனின் அலை பேசி...

மனைவியை விடாமல் இறுக்கி அணைத்து தன் கைவளைவிற்குள்ளே வைத்திருந்தவன் அலை பேசியை எடுத்து அதில் ஒளிர்ந்த எண்ணைப் பார்க்க, பார்த்தவனின் முகத்தில் இது வரை இருந்த புன்னகையும், மகிழ்ச்சியும், நிம்மதியும் ஒரே நொடியில் மறைந்து வேறு உணர்வுகள் ஆக்கிரமித்துக் கொள்ளத் துவங்கிய அந்த விநாடியே தன் உணர்ச்சிகளை முகத்தில் இருந்து துடைத்தெறிந்து எழுந்தவன் மெல்ல வெளியே வந்தான்....

"யெஸ் கதிர்"

"சார்... கோகுலை நம்ம கோடௌனிற்கு கொண்டு வந்திட்டோம்.."

தொடரும்.
 

JB

Administrator
Staff member
அத்தியாயம் - 35

கதிரின் கூற்றில் அர்ஜூனின் கண்களில் சரேலெனத் தோன்றி உறைந்த குரோதம், சற்று முன் தன் மனையாள் தங்களது குழந்தையை அவள் கரங்களில் ஏந்தியவாறு தனது அணைப்பில் கட்டுண்டு கிடந்த பொழுது அவனது முகத்தில் படிந்திருந்த மென்மையையும், இதழ்களில் தவழ்ந்திருந்த புன்சிரிப்பையும் சடுதியில் துடைத்தெறிய,

ஆனால் தனது எண்ணங்களில் ஊர்ந்து கொண்டிருந்த கொடூரத்தையும், தனது உணர்ச்சிகளை அள்ளி சிதறடித்துக் கொண்டிருந்த வஞ்சகத்தையும் கவனமாகத் தனது முகத்தில் கொண்டு வராமல் சலனமில்லாத குரலில்...

"ஒகே.... கதிர்... ஆஸ் ஐ செட் [As i said] அவனை யாரும் டச் பண்ணாதீங்க... எனக்கு அவன் முழுசா வேணும்...." என்றவன் மீண்டும் திவ்யாவின் அறைக்குள் நுழைந்தான்...

அங்குப் பிரசவத்தின் வலியால் ஏற்பட்டிருந்த அசதியாலும், இரத்தப் போக்கினாலும் முகம் களைத்து, உதடுகளும் சற்று வெளுத்துப் போய், ஆயாசத்துடன் அமர்ந்திருந்தாலும், தனது அழகிய மகவை கரங்களில் சுமந்திருந்ததால் மகிழ்ச்சியும், மிதமிதஞ்சிய பெருமையும் ததும்பி வழிந்திருந்ததில் தாய்மையின் பூரிப்பு இணையற்றது என்பது போல் தன்னை அயர வைத்த தன் மனையாளை ரசித்துப் பார்த்திருந்தவன்...

"திவி... எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு... நான் சீக்கிரம் வந்திடுறேன்" என்று திடுதிடுப்பென்று சொல்ல...

அவனைச் சட்டென்று நிமிர்ந்துப் பார்த்த திவ்யாவிற்கு அவனின் முகபாவத்தில் இருந்து எதனையும் கண்டு பிடிக்க முடியாவிட்டாலும், மரணத்தின் வாயில் வரை சென்று, விவரிக்க இயலாத துன்பங்களையும், வலியையும் அனுபவித்து இப்பொழுது தான், தான் கண் விழித்தது தெரிந்திருந்தும், இந்த நிமிடம் கணவனுடனான தனிமையை, அவனின் அரவணைப்பை, அவன் ஸ்பரிசத்தின் சுகத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவளின் தவிப்பு புரிந்தும், தன்னருகில் இருக்காமல் தன்னை விட்டு அவசர வேலையாகச் செல்லும் கணவனின் விபரீத சிந்தனைகள் புரிந்திருந்திருந்ததால், விழிகளில் சட்டென்று அவளையும் அறியாமல் நீர் கோர்த்துக் கொண்டது...

தன் மனைவியின் மனதில் ஓடிக் கொண்டிருந்த எண்ணங்களை அவன் உணர்ந்திருந்தாலும், தனது முகத்தில் கனிவை வெளிக்கொணறாமல் அவனின் அடி மனதில் வியாபித்து இருந்த பழிவாங்கும் உணர்ச்சிகளில் கட்டுண்டு வன்மத்தை மட்டுமே இந்த நிமிடம் சிந்தித்துக் கொண்டிருந்தவன், தன்னைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றிக் கவலைக் கொள்ளாமல் அவளின் அருகில் வந்து அவளின் தலையைத் தடவியவன்...

"திவி... ஐ ஹாவ் டு கோ நௌ [I have to go now].... கொஞ்ச நேரத்திலேயே வந்துடுறேன்" என்று மட்டும் சொன்னவன் குனிந்து தனது மகவின் நெற்றியில் முத்தமிட்டு திரும்ப,

தனது அதிகாரம், அந்தஸ்து, ஆளுமை அனைத்தையும் பற்றித் தெரிந்திருந்தும் தன்னை எதிர்த்தவனை, தன்னவளை தன் கண்கள் எதிரிலேயே துடிதுடிக்க வைத்திருந்தவனை, தனது செல்ல தங்கையின் மீதே கை வைக்கத் துணிந்தவனை, தனக்குப் பயம் என்றால் என்ன என்று ஒரு சில மணி நேரங்களாவது காட்டியிருந்திருந்தவனை, சூரசம்ஹாரம் செய்யச் செல்கிறான் என்று புரிந்திருந்த அனைவரும் அவனுக்கு வழி விட்டு விலக,

தனது இரையை வேட்டையாடும் வேகத்துடன் விருட்டென்று வெளியேறினான் அர்ஜூன்.



அடுத்து சில மணித் துளிகளிலேயே தங்களது கோடௌனிற்குச் சென்றவன், தனக்காக அங்குக் கதிர் காத்திருக்கவும், அவனை நோக்கி நடக்க, அர்ஜூனைக் கண்டதும் வேகமாக நடந்து வந்த கதிர்...

"சார்... மேடம் எப்படி இருக்காங்க?" எனவும்...

"ஷி இஸ் ஃபைன் கதிர் [ She is fine Kathir ] " என்று மட்டும் சொன்னவன் தான் வந்த காரியத்தில் மட்டும் தான் தனது குறிக்கோள் என்பது போல் அத்துடன் தனது தனிப்பட்ட விஷயங்களைப் பேச விரும்பாமல்...

"கதிர்.... அவனைப் பிடிக்கிறதுல எந்தப் பிரச்சனையும் இல்லையே?" என்றான்...

"நீங்க சொன்ன மாதிரி எல்லாச் சைடும் ப்ளாக் பண்ணியிருந்ததுனால அவனால எங்கேயும் போக முடியலை சார்" என்ற கதிர், நேற்று இரவு தனது தங்கையும், மனைவியும் கடத்தப்பட்டதில் இருந்து அவர்களைக் காப்பாற்றும் வரை, அச்சம், சீற்றம், தவிப்பு, கொந்தளிப்பு, வேதனை என்று பல வகை உணர்வுகளில் சிக்கியிருந்தாலும் தன் எதிராளியைப் பிடிக்க அந்தச் சொற்ப நேரத்திலும் இவ்வளவு நேர்த்தியாகப் பல முனைகளையும் அலசி ஆராய்ந்துப் பார்த்துத் திட்டம் போட்டிருந்த அர்ஜூனை நினைத்துப் பிரமித்துப் போனான்...

இருவரும் கோடௌனிற்குள் செல்ல முனைய, சட்டென்று அர்ஜூனைத் திரும்பிப் பார்த்த கதிர்...

"சார்... சர்ப்ரைஸிங்க்லி [Surprisingly] அவன் கண்ணுல கொஞ்சம் கூடப் பயம் தெரியலை சார்" எனவும்,

கதிரைப் பார்த்து இளம் முறுவலித்த அர்ஜூன்...

"தெரியவச்சுருவோம்...." என்று மட்டும் சொன்னவன் உள்ளே நுழைய,

அங்குச் சேரில் அமர்த்தப்பட்டுக் கைகள் இரண்டையும் பின்னுக்கு இழுத்துக் கட்டப்பட்டிருந்த நிலையிலும், ஒய்யாரமாகச் சேரில் சாய்ந்தவாறே அமர்ந்திருந்த கோகுலைக் கண்ட அர்ஜூனின் முகத்தில் சடுதியில் தோன்றி மறைந்த உணர்ச்சிகளை மட்டும் பார்த்திருந்தால், கோகுல், தனது தலைவிதி இன்றோடு மாற்றப்படப் போகிறது என்பது அறிந்து நிச்சயம் அந்த நிமிடமே கதிகலங்கிப் போயிருப்பான்...

வழக்கம் போல் தனது முக உணர்வுகளை மறைத்த அர்ஜூன் நிதானமாக நடந்து கோகுலிடம் செல்ல, அவனை முந்திச் சென்ற கதிர், கோகுலிற்கு எதிரில் அர்ஜூன் அமர்வதற்கு ஏதுவாகச் சேரை இழுத்துப் போட, சத்தமில்லாமல், வார்த்தைகள் ஒன்றையும் உதிர்க்காமல் தன் எதிரே வந்து நின்ற அர்ஜூனை நிமிர்ந்துப் பார்த்த கோகுலிற்கு அன்று மஹாவை அர்ஜூன் கல்லூரிக்கு வந்து அழைத்துச் சென்ற நாள் ஞாபகத்தில் வந்தது...

அன்று காரில் அமர்ந்திருந்தவாறே காரின் கதவை மட்டும் திறந்து மஹாவை ஏற்றிக் கொள்ள, அர்ஜூனின் முகத்தை மட்டுமே பார்த்து அசந்திருந்த கோகுல், அதற்குப் பிறகு அர்ஜூனின் செல்வாக்கும், அதிகாரமும், ஆளுமையும் தெரிந்து அவனைப் பற்றி விசாரித்து அவன் புகைப்படங்களையும் பார்த்திருந்தாலும், நேரில் ஆறடி மூன்று அங்குலத்திற்கு நெடு நெடுவென உயரமாக, தினந்தோறும் நாள் தவறாமல் செய்த உடற்பயிற்சியால் தன் உயரத்திற்கு ஏற்ற முறுக்கேறிய உடல்வாகுடன், ஆண்மையின் சுயரூபமாக நின்றிருந்தவனை விழி விரிய, இமைகள் மூடாமல் பார்த்திருக்க,

முகத்தில் சிறு கீற்று போல் ஒரு புன்னகையுடன் கோகுலையும், அவன் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்த விதத்தையும் கண்ட அர்ஜூன்...

"கோகுலுக்குப் பொண்ணுங்கள மட்டும் தான் பிடிக்கும் நினைச்சேன்... பசங்களையும் பிடிக்கும் போல" என்றான் நக்கலாக.

அவனின் கேள்வியின் அர்த்தம் புரிந்த கோகுல், இருந்தும் தன் கிண்டலை விடாமல் உதடுகள் பிரித்துச் சிரித்தவாறே...

"உங்க வீட்டில் பொண்ணுங்க மட்டும் தான் அழகா இருக்காங்கன்னு நினைச்சேன்.... உங்க வைஃப்பையும் சேர்த்து தான் சொல்றேன்... பட் பரவாயில்லை நீங்க கூட அழகாதான் இருக்கீங்க!" எனவும்,

கடத்திவரப்பட்டு, கைகள் கட்டப்பட்டிருக்கும் இந்த நிலையிலும் திவ்யாவைப் பற்றி அவனது நக்கல் பேச்சையும், அதில் தொனித்த இகழ்ச்சியையும் கண்ட அர்ஜூனின் உள்ளூர உணர்வுகள் ஆக்ரோஷமாக மேலெழும்பி வர திமிறினாலும், அந்த நொடியே கோகுலை அணுஅணுவாகச் சிதைத்து உருக்குலைக்கத் துடித்திருந்தாலும், மாறாக அகத்திலிருந்த உணர்ச்சிகளைப் புறத்திற்குக் கொண்டு வராமல், எதிர்மறையான உணர்வுகளை வெளிப்படுத்துபவன் போல் வாய்விட்டு சிரித்தவாறே அவன் எதிரில் போடப்பட்டிருந்த சேரில் தன் கால்களை நீட்டி, கரங்கள் இரண்டையும் தன் தலைக்குப் பின் கோர்த்து, சாவகாசமாக அமர்ந்தான் அர்ஜூன்....

தொழிற்கள் சம்பந்தப்பட்ட மீட்டிங்களுக்கோ, அல்லது அரசியல் சம்பந்தமான கூட்டங்களுக்கோ அல்லது தனிப்பட்ட பார்டிகளுக்கோ சென்றால், கால் மேல் கால் போட்டு அர்ஜூன் அமரும் தோரணையே அத்தனை அம்சமாகவும், கம்பீரமாகவும் இருக்கும்.

அவன் வந்து அமர்ந்ததுமே எதிரில் அமர்ந்திருப்போர் தங்களையும் அறியாமல் தாங்கள் அமர்ந்திருக்கும் விதத்தை மாற்றி, பவ்யமாக, எந்தச் சலனமும் இல்லாமல், அசைவற்று அமர்வார்கள்...

ஆனால் அவன் இவ்வாறு கால்களை நீட்டி, கரங்களைத் தன் தலைக்குப் பின் கோர்த்து, முகத்தில் எந்நேரமும் புன்னகையைத் தவழவிட்டு அமர்ந்தால், அர்ஜூனின் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் சிந்தனைகளும், அவன் மூளையில் அலைப் பாய்ந்து கொண்டிருக்கும் திட்டங்களும், அவன் அதனை வெளிப்படுத்தும் பொழுது விளையும் விபரீதங்களும் கதிருக்கு மட்டுமே தெரியும்....

தன் MD யின் முகப் பாவனை, சிரிப்பு, ஆசுவாசமாகச் சாய்ந்து அமர்ந்திருக்கும் அவன் தோரணை என்று ஒவ்வொன்றையும் ஆழ்ந்து பார்த்திருந்த கதிரை நிமிர்ந்துப் பார்த்த அர்ஜூனிற்குக் கதிரின் மனதில் அலைப்புறும் எண்ணங்கள் புரிய, மேலும் இதழ் விரித்து அழகாகச் சிரித்தவன்...

"கதிர்... ஐ நோ வாட்ஸ் கோயிங் ஆன் இன் யுவர் மைண்ட் [Kathir... I know what's going on your mind]... செஸ்ஸில் [Chess] லாஸ்ட் ரூல் [last rule] என்னன்னு தெரியுமா?" எனவும்,

அர்ஜூனின் புன் சிரிப்போடு தனது முறுவலையும் கலக்கவிட்ட கதிர்...

"எஞ்சாய் யுவர் செல்ஃப்...[Enjoy yourself] " என்றான்....

"யெஸ்... ஐ டு எஞ்சாய் திஸ் மொமெண்ட் [Yes, i do enjoy this moment] " என்றவன் மீண்டும் தன் பார்வையைக் கோகுலை நோக்கித் திருப்ப,

அர்ஜூனும் கதிரும் பேசிக் கொண்டிருப்பதே தன்னைப் பற்றித் தான் என்பது புரியாமல் தனது முகத்தில் தைரியத்தையும், அசிரத்தையும் படரவிட்டு தளர்வாக அமர்ந்திருப்பது போல் இருந்தாலும்...

அர்ஜூன் வந்ததில் இருந்து அவன் முகத்தில் தவழவிட்டிருந்த சிரிப்பு, சாய்வாக, ஆசுவாசமாக, அலட்சியமாக அவன் அமர்ந்திருந்த தோரணை, தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் திடீரென்று சதுரங்க ஆட்டத்தைப் பற்றிய பேச்சு என்று கோகுலையும் அறியாமல் அர்ஜூன் அவனின் ஆழ் மனதில் திகிலை விளைவிக்க,

சட்டென்று அவன் கண்களில் மின்னல் போல் தோன்றி மறைந்த அச்சத்தை, கலக்கத்தை, திகிலை சடுதியில் கண்டு கொண்டான் அர்ஜூன்...

ஒருவனுக்கு அவனின் உடலை நோகச் செய்து அதனால் ஏற்படும் வலியின் அவஸ்தையை விட, அடுத்த நிமிடம் தனக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற திகைப்பில், மனதின் ஏதோ ஒரு மூலையில் தன்னுடைய வலியை, வேதனையை நினைத்து கலங்கி ஸ்தம்பித்து, இறுதியில் விழிகளில் மரணப் பயத்தைக் கொண்டு வந்து தன்னுடைய விடுதலைக்கு யாசித்து, இறைஞ்சி தவித்து நிற்கும் பொழுது,

அவனை உடல் நோக அடித்தாலும் அவன் வலியால் வாய்விட்டு கதறி அழும் அலறொலியை விட, அவன் உள்ளத்தின் கதறலின் சத்தம், அவன் ஆத்மாவின் கூவல் பேரிரைச்சலாகக் கேட்கும்....

தனது காதல் மனைவியை நிறைமாத கர்ப்பிணி என்று கூடப் பார்க்காமல் அவளைக் கடத்தி, பின் கீழே தரையில் தள்ளி அவள் துடிதுடிப்பதை ரசித்து, ஆதரவற்ற அனாதையாகத் தவிக்க விட்டு சென்றவன் முதன் முதலில் அவள் தனது கெஸ்ட் ஹவுஸிற்குள் நுழைந்த அந்த நிமிடத்தில் அவளின் கண்களில் இதே தவிப்பைத் தானே கண்டிருப்பான்??

தனது விருப்பத்திற்கு இணங்கவில்லை என்ற ஒரே காரணத்தால், ஒரு இளம் பெண்ணைக் கடத்தி, அவளின் கற்பை விலைப் பேசி, இறுதியில் அவளின் கழுத்தில் தாலிக்கட்ட முயற்சித்த நிமிடங்களில் தனது தங்கையின் கண்களிலும் இதே வலியைத் தானே கண்டிருப்பான்...

அந்தப் பயத்தை, அதிர்வை, பீதியை கோகுலின் கண்களில், தான் காண வேண்டும் என்று தான் காத்திருந்தான் அர்ஜூன்...

"திஸ் இஸ் வாட் ஐ வாஸ் எக்ஸ்பெக்டிங் ஃப்ரம் யூ கோகுல்... [This is what i was expecting from you Gokul].... இதத் தான் நான் எதிர்பார்த்தேன்... உன் கண்கள் உன்னையும் அறியாம உன் மனசுக்குள்ள இருக்கிற பயத்தைக் காட்டிக் கொடுத்துடுச்சு.... என் திவி கண்ணுலயும், மஹா கண்ணுலயும் இதே பயத்த தான பார்த்திருப்ப..." என்றவன் கதிரை நோக்கி திரும்பி...

"லெட்ஸ் பிகின் [Let's begin]" என்றான்....

அதுவரை அர்ஜூனின் அழகிய தோற்றத்தைக் கண்டு அவனால் தனக்குப் பெரிய ஆபத்து எதுவும் வராது என்றும், அப்படி என்ன நம்மைச் செய்துவிடப் போகிறான், அதுவும் சினிமாவட்டாரத்திலேயே பெரும் புள்ளி என் அப்பா என்றும், ஒரு குருட்டுத் தைரியத்தில் அமர்ந்திருந்த கோகுலிற்குத் தெரியாது அர்ஜூனின் இன்னொரு முகம்...

கதிர் திரும்பி தலை அசைத்து தன் ஆட்களைத் தன்னருகில் அழைத்தவன் ஏற்கனவே அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று விரிவாக எடுத்துரைத்திருந்ததால்,

"வாயை ஃபர்ஸ்ட் கட்டிருங்க' எனவும்,

அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் கடுகளவும் கூடக் கடுமையோ, சினமோ, அல்லது வஞ்சினமோ இல்லாத தன் மென்மையான பார்வையைக் கோகுலின் மீதே வீசியிருந்த அர்ஜூன்....

"நோ... அவன் கதறலை நான் கேட்கனும்..." என்றவன் மேலும் புன்னகை பூக்க,

கதிரையும், அவர்களின் அடியாட்களையும் கண்களில் மரணப் பயத்தைத் தேக்கி கலங்கிப் போய்ப் பார்த்திருந்த கோகுல் அர்ஜூனின் பேச்சில் சட்டென்று அவனைத் திரும்பி பார்க்க,

மென்னகை மாறாமல் அதே தோரணையில் அமர்ந்திருந்த அர்ஜூனைக் கண்டு, கண்களில் சீற்றத்தைக் வெளிப்படுத்தாமல், இதழ்களில் முறுவலைப் படரவிட்டு, புறத்தில் சிரிப்பது போன்று தெரிந்திருந்தாலும், மரணத்திற்கு ஏதுவான தண்டனையைப் பிறப்பிக்கும் கொடூர உள்ளத்தைக் கொண்டிருந்தவனை வாழ்க்கையில் முதல் முறையாகக் கண்டதினால் கோகுலின் அடி வயிறு கலங்கியதில், இதயத்தில் பெரும் பீதி பரவியதில், உடலில் உள்ள ஒவ்வொரு நரம்பிலும் திகில் படரத் துவங்கியது....

அர்ஜூனின் ஆட்கள் கோகுலை நெருங்கவும்...

"அர்ஜூன் வேண்டாம்... எங்க அப்பாவுக்கு மட்டும் இது தெரிஞ்சுச்சுனா அடுத்த நிமிஷத்தில நீ இந்த உலகத்தில இருக்க மாட்ட" என்று மிரட்ட...

அவனின் காட்டுக் கத்தலிற்கு எந்தப் பதிலும் கூறாமல் கதிரைத் திரும்பிப் பார்த்த அர்ஜூன் "துவங்கு" என்பது போல் தலை அசைக்க,

இருபது வயதே ஆன ஒரு சின்னப் பெண், குழந்தையைத் தன் வயிற்றில் சுமந்திருக்கிறாள் என்று கூடப் பாராமல், அவளின் அழகை அருவருக்கத்தக்க வகையில் வர்ணித்து, அவளைப் பிடித்து இரக்கமில்லாத அரக்கன் போல் கொடூரமாகக் கீழே தள்ளி, பிரசவ வேதனையில் யாருமற்ற அனாதையாய் தன்னந்தனியாய் பல மணி நேரங்கள் உயிர் போகும் வலியில் கதறித் துடிதுடிக்க வைத்து, பின் மருத்துவமனை இல்லாத இடத்தில் குழந்தையையும் ஈன்ற வைத்திருந்த கோகுலின் தண்டனை துவங்கியது.....

ஸ்ட்ராப்படொ [Strappado medieval punishment] என்பது தவறு செய்பவர்களுக்கு இடைக்காலத்தில் கொடுக்கப்பட்ட தண்டனைகளில் ஒரு வகை... தவறு செய்தவரின் கைகள் இரண்டும் அவர்களின் பின் கட்டப்பட்டு, பின் தலைக்கு மேலே முதுகு வழியாகவே தூக்கப் பட்டு, அவர்களின் மணிக்கட்டுகளோடு இணைக்கப்பட்ட ஒரு கயிறு மூலம் கட்டி தொங்கவிடப்பட, இதில் அவர்களின் தோள்பட்டை நெகிழ்ந்து இடம் பிரண்டு இதற்கு மரணமே தேவலாம் என்பது போல் உயிரின் வேர் வரை சுண்டி இழுக்கும் அளவிற்கு வலி இருக்குமாம்...

ஏற்கனவே வேதனையில், துன்பத்தில், நோவில் துடிதுடித்துக் கொண்டிருப்பவர்களின் வலியை அசுர வேகத்தில் அதிகரிக்க, கனமான பொருளை (இரும்போ அல்லது கல்லோ) காலில் கட்டினால், அவர்களின் கனத்திற்கு ஏற்ப உடல் கீழ் நோக்கி இழுக்கப் படும் போது உயிர் போகும் வலியில் துடிப்பதற்குப் பதில், அந்த நிமிடமே தன் உயிரை மாய்த்துக்கொள்ள முடியாதா என்பது போன்ற வேதனையும் தோன்றுமாம்....

கோகுலிற்கு இந்தத் தண்டனையைத் தேர்ந்தெடுத்துத் தன்னிடம் அர்ஜூன் தெரியப்படுத்திய அந்த நிமிடமே அதன் ஏற்பாட்டைக் கவனிக்கத் துவங்கியிருந்த கதிர் தனது ஆட்களிடமும் விரிவாக விளக்கியிருக்க, கோகுலின் தண்டனை துவங்க, அப்பொழுதும், அந்த நிமிடமும் தான் அமர்ந்திருந்த சேரில் இருந்து எழுந்தான் இல்லை அர்ஜூன்...

அதே போல் சாவகாசமாகக் கால் நீட்டி அமர்ந்திருந்தவன் கோகுலின் விழிகளில் தெரிந்த மரணப் பயத்தைக் கண்டோ, அல்லது அவனின் அடிவயிற்றில் இருந்து எழுந்த அலறொலியைக் கண்டோ, தனது முகத்தில் எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல், சிரித்திருந்த உதடுகளை இறுக்கமாக வைத்திருந்தவனின் கண்கள் கூட உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்த சினத்தின் சீற்றத்தையோ, பழிவாங்கும் வன்மத்தையோ, உள்ளத்திற்குள் துடித்துக் கொண்டிருந்த குரோதத்தையோ எள்ளளவும் வெளிப்படுத்தவில்லை...

கோகுலின் கதறல் சத்தத்தில் தன் உயிரினும் மேலான தன் மனைவியின் பேறுகால நேர கதறல் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைவது போன்று உணர்ந்தவன், ஒரு வழியாகக் கோகுல் அதிகப்பட்ச வலியால் சுயநினைவு இழந்து மயக்கமுறத் துவங்க, தனது சேரில் இருந்து எழுந்தவன்...

"கதிர்... ரொம்ப நேரம் தொங்கவிடாதீங்க... அவன் சாகக் கூடாது..." என்று அழுத்தமான குரலில் கூறியவன், வாயிலை நோக்கி நடக்கச் சில அடிகள் எடுத்து வைத்தவன் மீண்டும் கதிரை நோக்கி திரும்பி...

"இந்த விஷயத்தில் நம்ம பேர் வராம என்ன பண்ணனும்னு தெரியும்ல?" என்றான்...

கதிர்... "யெஸ் சார்... எல்லாத்தையும் பக்காவா பண்ணியாச்சு" எனவும்..

சரி என்பது போல் தலை ஆட்டிய அர்ஜூன் வாயிலை அடைந்தவன் சற்று நிதானித்து மீண்டும் கதிரை திரும்பிப் பார்க்க...

அர்ஜூன் தன்னை நோக்கி திரும்பியதும் அவனிடம் ஓட்டமும் நடையுமாகச் சென்ற கதிர் என்ன என்பது போல் பார்த்திருக்க,

கோகுலின் தோற்றத்தை, அவன் கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் விதத்தை, வலியால் மயக்கமடையும் நேரத்திலும் கதறிக் கொண்டிருக்கும் உருவத்தைத் தனது விழிகளின் வழியாக உள் வாங்கிக் கொண்ட அர்ஜூன்...

"ஸ்பைன்ல [Spine/Spinal cord - vertebrae ] தட்டிருங்க கதிர்..." என்றவன் விருட்டென்று வெளியேற....

கதிரின் இதழ்களும் புன்னகையில் விரிந்தது...

தன் MDயின் மனைவிக்குக் கோகுல் செய்திருந்த அநியாயத்திற்கு, கருவுற்றிருக்கும் பெண்ணை மரணத்தின் விளிம்பிற்கே கொண்டு சென்ற அரக்கனிற்கு, அவரின் தங்கையையே கடத்திச் சென்று கற்பழிக்கத் துணிந்தவனிற்கு, இந்தத் தண்டனை போதுமா என்று யோசனையில் இருந்த கதிருக்கு, இப்பொழுது அர்ஜூன் கோகுலின் முதுகெலும்பை உடைக்கச் சொன்னதே சரியான தீர்ப்பாகப் பட்டது...

இனி வாழ்நாள் முழுவதும் கோகுல் உயிரோடு இருந்தாலும் ஒரு பிணம் தான் என்பது போல் அவனின் கழுத்திற்குக் கீழ் உடலின் எந்தப் பாகமும் உபயோகப்படாத அளவிற்கு, இயற்கையாக மரணிக்கும் வரையில் தன் ஆயுள் முழுவதும் ஒன்றுக்கும் உதவாமல், படுக்கையிலேயே கழிக்க, இந்த வயதிற்குள்ளேயே பல அப்பாவி பெண்களின் கற்பை அழித்து, அவர்களின் இளம் தளிரைப் போன்ற வாழ்க்கையை நாசம் பண்ணி, அவர்களை அருவருக்கத்தக்க வகையில் புகைப்படங்களும், வீடியோவும் எடுத்து மிரட்டி பல முறைப் பாலியல் வன்கொடுமை செய்து, அவர்களின் கண்ணீரில் குளிர்காய்ந்திருந்த கொடூரனிற்கு அன்று, அந்தக் கோடௌனில் அவனின் தவறுகளுக்கு, தண்டனை நிறைவேற்றப்பட்டது...

நேற்றில் இருந்து எத்தனை போராட்டங்கள்! எவ்வளவு தவிப்பு! எவ்வளவு வலி!

ஒரே நாளில் தன் குடும்பத்தினர் அனைவரையும் அச்சம், சீற்றம், வேதனை, வலி என்று எத்தனை வகை உணர்வுகளில் மூழ்கடித்துக் கலங்கடித்து இருந்தவன், வாழ்நாளில் பயம் என்ற ஒரு உணர்வையே அறிந்திராதவனிற்கே பயத்தைக் காட்டிய அயோக்கியனின் அலறல் சத்தம் செவிகளில் கேட்க கேட்க, மீண்டும் அர்ஜூனின் முகத்தில் ஒரு இளம் முறுவல் படர, காரை சீறிக் கிளப்பியவன் உள்ளத்தில் படிந்திருந்த மரண அவஸ்தையில் இருந்து, இதயம் முழுவதும் கனமான பாரத்தைச் சுமந்திருந்ததைப் போன்ற வேதனையில் இருந்து, ஆழ் மனதில் அலறித் துடித்துக் கொண்டிருந்த ஆங்காரத்தில் இருந்து விடுதலைக் கிடைத்தது போன்று ஒரு மெல்லிய சிலிர்ப்பு தோன்ற, நேரே தன் வீட்டிற்குச் சென்றவன் தன் உடலில், மனதில், புத்தியில் இருந்த சூடு தணியும் வரை குளிர்ந்த நீரில் குளித்தான்...

எவ்வளவு நேரம் ஷவரின் கீழ் நின்றிருந்தானோ, சட்டென்று திவ்யாவின் களைத்த முகமும், பிறந்த அன்றே உலகில் உள்ள அத்தனை எழிலின் உச்சியையும் தொட்டிருந்த தன் குழந்தையின் முகமும் நினைவில் படர, முகத்தில் பூரிப்பினால் முறுவல் தவழ, விரைவாகக் குளித்து முடித்து வெளியில் வந்தவனின் கண்களில் அவன் மனையாளின் அலை பேசிப் பட்டது...

ஈரத் தலையைக் கூடத் துவட்டாமல், அலை பேசியை எடுத்துப் பார்த்தவனிற்கு, தன்னவளுக்கு அந்த அலை பேசியை வாங்கிக் கொடுத்த மழை நாளும், முதன் முறையாகக் கணவன் மனைவி இருவரும் சங்கமித்த நாளிற்கு மறுநாள் தன் அன்னையைச் சந்திக்கச் சென்றவளிடம் அலை பேசியைக் கொடுக்க, அவள் விழி விரித்து வியந்து தன்னையே பார்த்திருந்ததை நினைத்தவனிற்கு, அந்த நிமிடமே தன் அவளைக் காண வேண்டும் என்று உள்ளம் துடிக்க, விறுவிறுவென்று கிளம்பியவன் நேரே மருத்துவமனைக்குத் தன் காரை செலுத்தினான்...

குடும்பத்தினர் அனைவரும் இன்னும் மருத்துவமனையில் திவ்யாவுடனும், குழந்தையுடனுமே இருக்க, மருத்துவமனைக்குள் நுழைந்த அர்ஜூன், திவ்யாவின் அறையை நோக்கி நடக்க, முகத்தில் எந்தச் சலனமும் இல்லாமல், ஒன்றுமே நடவாதது போல் நடந்து வந்து கொண்டிருந்த மகனைக் கண்ட ஸ்ரீயின் கண்களில் தெரிந்த பதற்றத்தைக் கண்டு கொள்ளாமல் தன் மனைவியின் அறைக்குள் நுழைந்தவன் அவளுக்கு அருகில் நின்று தன்னையே பார்த்திருந்த அருணைப் பார்த்துக் கண் சிமிட்டியவன், திவ்யாவின் அருகில் அமர்ந்தான்...

குழந்தையை மடியில் ஏந்தியவாறே உள்ளம் முழுவதும் தனது கணவனைக் கண்டதும் "என்ன செய்துட்டு வந்திருக்காரோ?" என்று நினைத்துத் திகில் சூழ்ந்து கலங்கியிருக்க, தன் கணவனின் முகத்தில் இருந்த புன்னகையும், கண்களில் தெரிந்த மென்மையும், அவனை நல்லவனாகக் காட்டியிருந்தாலும், தன் தம்பியைப் பார்த்து அவன் கண்சிமிட்டியது சொல்லாமல் சொல்லியது அவன் செய்து முடித்திருந்த காரியத்தை...

அவள் அருகில் அமர்ந்ததும் குழந்தையைத் திவ்யாவிடம் இருந்து வாங்கியவன், தனது கரங்களில் ஏந்த, அவர்களுக்குத் தனிமைக் கொடுக்க நினைத்த கலா ஸ்ரீயைப் பார்த்தவர்,

"ஸ்ரீ... அவங்க எல்லாம் வேணா வீட்டுக்கு போய்ட்டு நாளைக்கு வரட்டுமே? நேத்துல இருந்து யாரும் சாப்பாடு வேறு சாப்பிடலை... மஹாவுக்கும் கொஞ்சம் ரெஸ்ட் தேவை... நாம இரண்டு பேரும் வேனா இங்க திவ்யாவோடு இருக்கலாம்.... எதுக்கு இத்தனை பேரு?" என்றார்...

"சரி" என்றவர் மஹாவையும், வினோத்தையும், அருணையும் பார்த்துக் கண்களில் கனிவோடு,

"நீங்கள் வீட்டுக்கு போங்கப்பா... பாவம் நேத்துச் சாய்ந்தரத்தில் இருந்து எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கீங்க... விடிய விடிய தூங்கலை வேற... கிளம்புங்க... நானும் கலாவும் இங்க நைட் தங்கிக்கிறோம்" என்றார்...

நேற்று மாலையில் இருந்து ஒரே பதட்டத்தில் இருந்த அந்தக் குடும்பத்தினர் அனைவருக்குமே ஓய்வு தேவைப்பட்டிருந்ததால் இளையவர்களுடன் பாலாவும், சிவ சுப்ரமணியமும் வீட்டிற்குக் கிளம்ப, அர்ஜூன் திவ்யாவிற்குத் தனிமைக் கொடுத்துத் தோழிகள் இருவரும் வேளியேற, அர்ஜூன் எதிர்பார்த்திருந்த தன் மனையாளுடனான தனிமை ஒரு வழியாகக் கிடைத்தது...

"திவி... சாப்பிட்டியா?"

"ம்ம்.. நீங்க?"

"ம்ப்ச்... எனக்குப் பசிக்கலை"

அவன் பசிக்கவில்லை என்று சொல்லும் பொழுதே தெரிந்தது அவனது பசி அடங்கி வெகு நேரம் ஆகிவிட்டது என்று... ஆனால் அது நிச்சயம் வயிற்றுப் பசி அல்ல... குரோதமும், வஞ்சமும், சினமும் உள்ளத்திலும், புத்தியிலும் சூழ்ந்து மூடியிருந்த பழிவாங்கும் பசி அது என்று...

கணவனையைக் கண் இமைக்காமல் பார்த்திருந்தவளிற்கு அவனிடம் இந்த நேரத்தில் அதைப் பற்றிக் கேள்விக் கேட்கும் தைரியம் வரவில்லை... ஆனால் ஒரு மனைவியாகத் தன் கணவனின் நலனை மட்டுமே கருத்தில் தாங்கியிருந்தவளிற்குக் கேட்காமலும் இருக்க முடியவில்லை...

தனது ஒட்டுமொத்த தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டு தயங்கியவாறே...

"எ... என்னங்க... நீங்க அவசரமா போ....." என்று கூட முடிக்கவில்லை... அவளைத் திரும்பியும் பார்க்காது குழந்தையிடம் இருந்த தனது பார்வையையும் எடுக்காமலே, குழந்தையின் பிஞ்சு விரல்களை மென்மையாகப் பிடித்து முத்தமிட்டவாறே...

"திவி... பதில் இல்லாத கேள்வியக் கேட்காத?" என்றான்....

அவன் சாதாரணமாகத் தான் சொன்னான்... ஆனால் நேற்றில் இருந்து நடந்திருந்த அசம்பாவிதங்களினால் உறைந்திருந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் வெளிவராதவளிற்கு, கணவனின் வார்த்தைகளில் கடுமையும், அழுத்தமும் இருந்ததோ என்று நினைத்தவளிற்கு அவனின் பதிலிலும் அதை சொன்ன தோரணையிலும் திக்கென்று இருந்தது....

சட்டென்று மௌனியான தன் மனையாளைத் திரும்பிப் பார்க்க, தலை குனிந்து அமர்ந்திருந்தவளைக் கண்டவன், வலது கரத்தில் தனது குழந்தையை மாற்றி, இடது கரத்தால் அவளின் தோள் பற்றித் தன்னருகில் இழுத்தவன்...

"திவி... நான் ஏற்கனவே பல தடவை உனக்குச் சொல்லியிருக்கேன்... நீ உன்னைப் பத்தி, என்னைப் பத்தி, நம்ம குழந்தையைப் பத்தி மட்டும் தான் கவலைப் படனும்னு... குழந்தைக்குக் கொஞ்ச நாள் ஆனவுடனே நாம ஏற்கனவே பேசினது போல் காலேஜிற்குப் போ... படி... வேற எதப் பத்தியும் என் வைஃப் கவலைப் படறது எனக்குப் பிடிக்காது" என்றான் ஒவ்வொரு வார்த்தையாக நிதானமாக, ஆனால் இதனைப் பற்றிப் பேசுவது இதுவே கடைசி முறை என்பது போல் கடினமாக....

கணவனின் பார்வையில் தெரிந்த கூர்மையில், அவனின் குரலில் தெரிந்த அழுத்தத்தில் இதற்கு மேல் பேசுவதற்கில்லை என்று புரிந்தாலும், கோகுல் தன்னிடமும், மஹாவிடமும் நடந்து கொண்ட முறையும், தான் அவனால் பட்ட கொடிய வேதனையும், அதனால் தனது குழந்தையின் உயிருக்கும் ஆபத்து நேர இருந்ததை அத்தனை சீக்கிரத்தில் அவளால் மறந்துவிட முடியுமா என்ன?

கோகுலை நினைத்ததுமே உடல் முழுவதும் ஒரு நடுக்கம் படர வெளிப்படையாக நடுங்கிய உடலைக் கட்டுப்படுத்த ஆதரவைத் தேடி தனது கணவனின் தோள் சாய்ந்தவள் ...

"எ... எனக்கு இன்னும் அவன நினைச்சா பயம் போகலைங்க... நினைச்சாலே உடம்பெல்லாம் உதறுது... அதான் அவன் எங்..." என்று முடிப்பதற்குள்...

"திவி... டு யூ பிலீவ் மி? [Do you believe me?] உனக்கு என் மேல் நம்பிக்கை இருக்கா?" என்ற கணவனின் முகத்தை அவன் தோளில் சாய்ந்தவாறே அண்ணாந்துப் பார்த்தவள் சில நொடிகள் அவனையே பார்த்திருந்து, பின்...

"உங்க மேல வச்ச நம்பிக்கையால மட்டும் தான் நேத்து போக இருந்த என் உயிரைக் கையில் பிடிச்சுட்டு இருந்தேன்" என்ற மனையாளின் வார்தைகளில் அர்ஜூனின் காதல் கொண்ட இதயம் உருகி மருக, சில நொடிகள் அவளின் விழிகளை ஆழ்ந்துப் பார்த்தவன்...

"திவி... குழந்தை தூங்கிட்டான்... தொட்டில்ல போடட்டுமா?" என்றான்...

"ம்ம்ம்" என்றவள் கட்டிலில் இருந்து எழப் போக, வேண்டாம் என்றவன் தானே குழந்தையை மெல்ல தொட்டிலில் கிடத்தியவன் தங்களின் அறைக் கதவை சாத்த....

பழைய அர்ஜூன் திரும்பிவிட்டதாகவே தோன்றியதில் அவனின் மனையாளின் உள்ளத்தில் நாணமும், கூச்சமும் போட்டிப் போட்டதில் களை இழந்திருந்த அவளின் முகத்தில் களையும், வெட்கமும் மீண்டும் பூக்க துவங்கியது...

"ஐயோ! இப்ப எதுக்குக் கதவை சாத்துறீங்க... டாக்டர், நர்ஸ் யாராவது வரப் போறாங்க" என்று மெல்லிய குரலிலும் சொன்னாலும் தன்னையும் அறியாமல் தன் கணவனிற்கு இடம் விட்டுக் கட்டிலில் நகர்ந்து அமர்ந்தவளைக் கண்டு வாய் விட்டு சிரித்தவன், அவளை நெருங்கி அமர்ந்த நொடியே அவளைத் தன்னருகில் இழுத்து அவளின் கழுத்தில் ஆழ முகம் புதைக்க,

பிறந்த குழந்தைக்கு ஒரு வாசனை, பருவப் பெண்ணிற்கு ஒரு வாசனை, மணப்பெண்ணிற்கு ஒரு வாசனை என்பது போல் குழந்தையை ஈன்றெடுத்த தாய்க்கும் ஒரு வாசனை!!!

தனது மனைவியின் மீது புதிதாகத் தோன்றியிருக்கும் இந்தத் தாய்மையின் வாசனையை ஆழ்ந்து சுவாசித்தவன், மெல்ல அவளின் இதழோரம் தனது இதழைக் கொண்டு செல்ல, சட்டென்று முகத்தைத் திருப்பினாள்...

அவளின் செய்கையில் புன்னகைத்தவன் அவள் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பி.....

"உண்மையச் சொல்லு... உனக்கு வேண்டாம்?" எனவும்,

நாணத்தின் உச்சிக்கே சென்றவள் தலை கவிழ முயற்சிக்க, மீண்டும் அவளின் முகத்தைத் தன்னை நோக்கி ஏந்தியவன் அவளின் வெட்கம் கலந்த விழிகளோடு தனது விஷமம் கலந்த விழிகளைக் கலக்கவிட்டவன்...

"நீ வேண்டாம்னு சொன்னாலும் உன் கண்ணு காட்டிக் கொடுக்குது" என்றவன் அவளின் நெற்றியில் முத்தம் பதிக்க...

"வேண்டாங்க" என்றாள் தனக்கே கேட்காத மெல்லிய குரலில்...

"என்ன வேண்டாம்?" என்று வார்த்தைகளை மெல்ல உதித்தவன் அவளின் இரு கன்னங்களிலும் அழுத்தமாகத் தனது முத்தங்களைப் பதிக்க,

"அம்மாவும், அத்தையும் வந்துருவாங்க இப்போ" என்றவளை குனிந்து பார்த்தவன்.....

"இத எங்கேயோ எப்பவோ கேட்ட மாதிரி இருக்கே" என்று இதழ் விரித்து வாய் விட்டு சிரித்தவன்..

"திவி... இப்போ நமக்குக் குழந்தைக் கூட இருக்கு... ஞாபகம் இருக்கா?" எனவும்...

"அது வந்து...." என்று இழுத்தவளின் முகத்தைத் தன் மூச்சுக் காத்துப் படும் அளவிற்குத் தன் முகத்தின் அருகில் கொண்டு வந்தவன்...

"திவி கிஸ் பண்றதுனால ஒன்னும் ஆகிடாது" என்றவன் அவள் மறுபேச்சு பேசும் முன் அவளின் பட்டு இதழ்களைச் சிறைப் பிடித்து இருந்தான்...

பிரசவத்தில் மறுபிறப்பு என்பது உடலும் உயிரும் மட்டும் சார்ந்தது அல்ல, உணர்வுகளுக்கும் மறுபிறப்போ என்பது போல் இருந்தது மரணத்தின் வாயில் வரை சென்றுவிட்டுத் தன்னால் மீட்கப்பட்ட தன் மனையாளின் ஸ்பரிசமும், இதழின் சுவையும்....

பல நிமிடங்கள் நீடித்த அந்த முத்தத்தில் மூழ்கியிருந்தவன், தன்னவளை விட்டு சிறிதே விலகி அவளின் முகம் நோக்க, கணவனின் விலகலில் கண் விழித்தவள் அவன் தன்னைப் பார்த்திருப்பதைக் கண்டு வெட்கமடைய,

"திவி... ஐ தாட் ஐ வாஸ் கோயிங் டு லூஸ் யூ [ Dhivi, I thought i was going to lose you ].... உன்னைய இழந்துடுவேனோன்னு ரொம்பப் பயந்துட்டேண்டி... ஐ மிஸ்ட் யூ ஸொ மச் [ I missed you so much ] " என்றவன் அவளின் முகத்தை இழுத்து, அவளது இதழ்களைத் தனது இதழ்களுக்குள் ஆழப் புதைத்துக் கொள்ள, அவனை விட்டு மென்மை தூரம் போய் வன்மை ஆக்கிரமித்துக் கொண்டது...

நீடிய அந்த இதழொற்றலில் காமம் இல்லை, தாபம் இல்லை, விரசம் இல்லை... அதில் கலந்திருந்தது காதல்! காதல்! காதல் மட்டுமே!

கணவன் மனைவி இருவரும் மனமுழுவதும் காதலில் திளைத்து, ஆழ்ந்த முத்தத்தில் மூழ்கியிருக்க, பிறந்த அன்றே தன் தந்தையானாலும் தனக்குப் போட்டி என்று ஒருவர் கூட இவ்வுலகத்தில் இருக்கக் கூடாது என்பது போல் தன் அன்னையை அணைத்திருந்த தன் தந்தையின் எண்ணங்களையும், செய்கைகளையும் திசை திருப்புவது போல் குட்டி அர்ஜூன் செல்லமாய்ச் சிணுங்கினான்....

கணவனின் முத்தத்தில் மெய் சிலிர்த்து அவனுக்குள் அடங்கியிருந்தவளைக் குழந்தையின் குரல் நினைவுலகத்திற்குக் கொண்டு வர, சட்டென்று தன் மனையாளை விடுத்து குழந்தையைத் தூக்க சென்ற தன் கணவனைக் கண்டவளின் மனமுழுவதும் மகிழ்ச்சியும், பூரிப்பும் துலங்க....

"உங்களோடேயே போட்டி போட ஒருத்தன் வந்துட்டான்" என்று சிரித்த தன் மனையாளைத் திரும்பிப் பார்த்தவனின் முகத்தில் ஒரு தந்தையாகப் பெருமையும், கர்வமும் நிறைந்திருந்தது....



மருத்துவமனையில் இருந்து திவ்யாவையும், குழந்தையையும் வீட்டிற்கு அழைத்து வந்து இதனுடன் கிட்டதட்ட ஒரு வாரம் ஆகியிருந்தது...

திவ்யாவின் குழந்தைப்பேறில் இருந்து அலுவலக வேலைகளை அருணும், பாலாவும் கதிரோடு சேர்ந்துப் பார்த்துக் கொண்டாலும், அர்ஜூன் நேரடியாகப் பார்க்க வேண்டிய அலுவல்கள் குவிந்துக் கிடந்ததால் இரவு வெகு நேரம் சென்றே வீட்டிற்குத் திரும்பியவனுக்குத் தன் குழந்தையுடன் கூட அதிக நேரம் செலவழிக்க இயலவில்லை...

அதே போல் இன்றும் தன் கணினியில் மூழ்கியிருந்தவனிடம் அனுமதிக் கேட்டு அறைக்குள் நுழைந்த கதிர் மற்ற அலுவல்களைப் பற்றிப் பேசியவன் இறுதியாக...

"சார்... கோகுல் கோமாவில் இருந்து எழுந்திட்டான்..." எனவும்...

இன்னமும் கணினியில் மூழ்கியிருந்த அர்ஜூன் கதிரை ஏறெடுத்தும் பார்க்காமல், தன் கண்களைக் கணினியின் திரையினிலேயே பதித்தவாறு...

"கதிர்... ஐ வாண்ட் டு ஸீ கோகுல் [ I want to see Gokul ]... எனக்கு அவனைப் பார்க்கனும்... ஜஸ்ட் ஒரு டெண் மினிட்ஸ் [ Just ... ten minutes ]... ஆனால் நான் அவனப் பார்க்க வரும் போது அவனோட பேரண்ட்ஸோ ஆர் ரிலேட்டிவ்ஸோ ஒருவரும் அங்க இருக்கக் கூடாது... ஈவன் டாக்டர்ஸ் ஆர் நர்ஸஸ்... ஏற்பாடு பண்ணிட்டு சொல்லுங்க"

"ஓகே சார்... "

"கதிர்... அவன் அது வரை வாய் திறக்காத மாதிரி பண்ணியிருக்கீங்கள்ள?"

"யெஸ் சார்... நீங்க சொன்ன மாதிரி இப்ப மட்டும் இல்ல... அவன் எப்பவுமே நம்ம பத்தி பேசாத மாதிரி மிரட்டியிருக்கோம்" என்றவன் அறையை விட்டு வெளியே செல்ல எத்தனிக்க..

"கதிர்... இப்ப தான் கோமாவில் இருந்து வந்திருக்கான்... ஸோ ஒரு டு டேய்ஸ் டைம் கொடுங்க.... ஏனா அவன் நம்மைப் பத்தி சொல்லாட்டாலும் அவன் ரூமை வாட்ச் பண்ண அவன் அப்பா ஏற்பாடு பண்ணினாலும் பண்ணிருப்பான்... ஒரு டு டேய்ஸ் கழிச்சே நான் அவனைப் பார்க்கிறேன்... அதுக்கு முன்னாடி அந்த எண்டையர் [Entire] ஹாஸ்பிட்டல் கேமரா ஸிஸ்டத்தையும் கட் பண்ணிடுங்க... நான் அங்க வரதும் தெரியக் கூடாது... போறதும் தெரியக் கூடாது..."

அர்ஜூனின் கூற்றை நன்கு கவனித்துக் குறித்துக் கொண்ட கதிர் தயங்கியவாறே...

"சார்... இவ்வளவு ரிஸ்க் எடுத்து அவனைப் போய்ப் பார்க்கனுமா?" எனவும்..

சட்டென்று நிமிர்ந்து கதிரைப் பார்த்தவன்...

"கதிர்... இந்தப் பிரிகாஷன்ஸெல்லாம் ரிஸ்க் இருக்குங்கறதனால நான் எடுக்கலை... என்ன தான் நமக்குப் பயம் இல்லைன்னாலும், அப்படியே பிரச்சனைகள் வந்தா சமாளிக்க நம்மால முடியும்னாலும், காஷியஸா [ Cautious ] இருக்கிறதுல தப்பே இல்லை" என்றவன் நீங்க போகலாம் என்பது போல் தன் வேலையில் மூழ்க,

அர்ஜூன் கோகுலை சந்திப்பதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கத் துவங்கினான் கதிர்...

அர்ஜூன் கோகுலை சந்திக்க வேண்டும் என்று சொன்ன நாளில் இருந்து சரியாக இரண்டாவது நாள் அர்ஜூனை அழைத்த கதிர்...

"சார்... ஆல் செட்... " எனவும்,

சட்டென்று எழுந்த அர்ஜூனின் முகத்தில் அன்றைப் போல் இன்றும் கனிவு என்பது துளியும் அல்லாது, அந்தக் கொடூரனைப் பார்க்கப் போகும் வஞ்சத்தில் அடி மனதில் இறந்து போனது போல் அடங்கி இருந்த சீற்றம் மீண்டும் தலைத் தூக்க, அதி விரைவாகக் காரை செலுத்தியவன் மருத்துவமனையை அடைந்த பொழுது கோகுலின் அறையிருந்த அந்தத் தளம் முழுவதும் ஊசி விழுந்தால் சத்தம் கேட்கும் அளவிற்கு அத்தனை அமைதியாக இருந்தது...

அர்ஜூனின் ஆட்கள் கோகுலின் முதுகெலும்பை உடைத்த நிமிடமே மயக்கம் அடைந்திருந்தவனை அவன் வீட்டிற்கு அருகிலேயே தூக்கி எறிய, அவனைக் கண்டதும் துடித்துப் போன அவன் பெற்றோர் மருத்துவமனையில் சேர்க்க, அர்ஜூனின் தண்டனையாலும், உடம்பில் பட்டிருந்த அடியாலும், முதுகெலும்பு உடைந்திருந்ததாலும் அவன் அந்நேரமே கோமாவிற்குச் சென்றுவிட்டதாக மருத்துவர்கள் கூற, அன்றில் இருந்து சினிமாவட்டாரத்திலும், தான் எடுத்துக் கொண்டிருந்த படங்கள் அனைத்தும் ஒரே இரவில் முடக்கப்பட்டிருந்ததாலும், கோகுலின் தந்தைக்குத் தெரிந்து போனது...

தங்கள் மகன் ஏதோ ஒரு பெரிய இடத்தில் கை வைத்திருக்கிறான் என்று...

தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப் பட்டிருந்த கோகுல் கிட்டதட்ட ஒரு வாரத்திற்கும் மேலாகக் கோமாவில் கிடந்திருக்க, காவல் துறையினர் எத்தனையோ கேள்விகள் கேட்டும், மகன் செய்த ஏதோ ஒரு பெரிய தவறினால் தான் இத்தகைய கொடியத் தண்டனையை அவனுக்குக் கொடுத்திருக்கிறார்கள்...

எங்குச் சென்றாலும், எந்தக் கதவைத் தட்டினாலும் மருந்துக்குக் கூட உதவி கிடைக்காத அளவில் அத்தனை கதவுகளையும், எப்படி, யாரால் ஒரே இரவில் இவ்வளவு சாமார்த்தியமாக மூட முடியும்?? அதுவும் சினிமாவட்டாரத்தில் தனக்கு இருக்கும் பெயருக்கு, பிரபலத்திற்கு, தன்னையே எதிர்த்தது மட்டும் அல்லாமல், தன் மகனை குற்றுயிரும் குலை உயிருமாக வீதியில் தூக்கியெறிந்துவிட்டு, தன்னுடைய அனைத்து படங்களையும் முடக்கி தன்னைக் கையாலாகாதவன் போல் செய்தவன் யார்?

அவனுக்கு எங்கு இருந்து இவ்வளவு நெஞ்சு உரமும், தைரியமும், சினமும் வந்தது?அந்த அளவிற்கு அந்தஸ்தும், அதிகாரமும், ஆளுமையும் உள்ளவனை எங்குத் தீண்டினான் என் மகன்?

என்று இத்தனை குழப்பத்தில் இருந்திருந்தவருக்கு இதற்கு மேல் அந்தக் கண்ணிற்கு தெரியாத ஆளுமைப் படைத்த எதிரியை சீண்டாமல் இருப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்தவர் மேற்கொண்டு காவல்துறையினரிடம் ஒரு வார்த்தை கூட உதிர்க்கவில்லை...

கோகுலை அனுமதித்திருந்த மருத்துவமனையை அடைந்த அர்ஜூன் கதிருக்கு அழைத்தவன்...

"கதிர்... எந்த ஃப்ளோர்? எனவும்..

"சார்... ஃபோர்த் ப்ளோர்... " என்றவுடன் காரில் இருந்து இறங்கியவன் நேரே கோகுல் இருந்த அறையை நோக்கி சென்றவன் அறைக்குள் நுழைய, அங்கு உடல் முழுவதும் கட்டுப் போட்டு, சுயநினைவை இழந்து உயிரற்ற உடலை மட்டும் கொண்டு படுத்திருந்தது போல் படுத்திருந்த கோகுலைக் கண்டவன், அவன் கட்டிலுக்கு அருகில் சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தான்...

சேர் இழுக்கப் பட்ட சத்தத்தில் மெதுவாகக் கண் விழித்த கோகுல் அங்கு, தன் அறையில், தனிமையில், தனக்கு வெகு அருகில் கால் மேல் கால் போட்டுக் கம்பீரமாக அமர்ந்திருந்த அர்ஜூனைக் கண்டவனிற்கு, மரணப் பயத்தில் உள்ளுக்குள் உதறல் எடுக்க, நடுங்கும் மனதுடனும், அதிர்ந்த கண்களுடனும் உடலை ஒரு இஞ்ச் கூட அசைக்க முடியாததால் கலங்கிப் போய் அர்ஜூனைப் பார்த்தவன் தலையை மட்டும் வேண்டாம் என்பது போல் அசைக்க,

"பரவாயில்லை கோகுல்... என்னைப் பார்த்தவுடன் அடையாளம் தெரியற அளவிற்குத் தெளிவாயிட்ட போலருக்கு..." என்றான் அர்ஜூன்... கண்களுக்கு எட்டாத இளம் புன்முறுவலுடன் ஆனால் உள்ளத்தில் இன்னமும் கொழுந்து விட்டு எரியும் நெருப்புடன்....

"அ... அ... அர்ஜூன்... எ... என்னைய ஒன்னும் பண்ணிடாத... " என்று கண்களில் பீதியுடன் கோகுல் கதற,

"வாவ்... இதுக்கு மேலயும் உனக்கு உயிர் வாழ ஆசையிருக்கா என்ன?" என்று வாய் விட்டு சிரித்த அர்ஜூனின் முகத்தையே திகில் சூழ்ந்து உள்ளத்துடன் பார்த்திருக்க...

"கொட்டும்னு தெரிஞ்சே தேளுடன் விளையாடனும்னு நினைச்ச, அதன் கொடுக்கையே பிடிச்ச உன்னை என்ன செஞ்சாலும் தகும்... ஆனால் இனி உன்னைச் செய்றதுக்கு ஒன்னுமே இல்லன்னு தெரியுது... நீ வாழ்க்கை முழுசும் இனி உன் தலையை மட்டும் தான் அசைக்க முடியும்... வேற எத்த்த்த்தையும் அசைக்க முடியாது" என்று சொன்ன அர்ஜூனின் கூற்றில், அதுவும் "எதையும்" என்ற வார்த்தையில் அவன் கொடுத்த அழுத்தத்தில் இருந்த அர்த்தம் புரிந்ததும் கோகுலிற்கு அந்த நிமிடமே தன் உயிர் போய்விடாதா என்று கூடத் தோன்றியது...

மெல்ல எழுந்த அர்ஜூன் கோகுலின் கட்டிலில் அவனுக்கு இரு பக்கமும் கைகளை ஊன்றி அவன் முகம் நோக்கி குனிந்தவன்...

"உனக்கும் ஒரு தங்கை இருப்பதா கேள்விப்பட்டேன்... ரொம்ப அழகா வேற இருப்பாளாமே???" என்று ஒரு சிறு இள நகையுடன் கூற,

அதிர்ச்சியில் உறைந்த முகத்துடன் கோகுல் அவனைப் பார்த்திருக்க, சட்டென்று தன் முகப் பாவத்தை மாற்றிய அர்ஜூன்...

"நீயாவது மஹா கழுத்தில் தாலி கட்டிட்டு அவளைத் தொடனும்னு நினைச்ச... ஆனால் என்னோட ஆளுங்களுக்கு அந்த அளவுக்கெல்லாம் பொறுமை இல்லை... புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்" என்றவனின் விழிகளில் தெரிந்தது வன்மமா? சினமா? ஆங்காரமா? குரோதமா? அல்ல இவை அனைத்தையும் கலந்திருந்த உணர்வா?

ஆனால் அன்று கோடௌனில் புன்னகை முகத்துடன், இலகுவாக அமர்ந்து தான் பட்டுக் கொண்டிருந்த கொடுமைகளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூன் இவன் இல்லை...

"இவன் சிரிச்சாலே எனக்குக் குலை நடுங்கும்... இப்ப கோபமா வேறப் போறான்... அவன் ஒரு விரல் அசைச்சா இந்த அரசாங்கமே நடுங்குது.... நம்மள ஏதாவது பண்ணிட போறான்..... முதல்ல அவன் வேலைய முடி" என்று அன்று அந்த எம்.எல்.ஏ சங்கரலிங்கம் நடுங்கியது போல் இன்று கோகுலும் நடுநடுங்கிப் போயிருந்தான்...

அர்ஜூனின் முகத்தில் இருந்த ரௌத்திரத்தைக் கண்ட கோகுலிற்குப் புரிந்து போனது... இவனைப் பற்றி நான் ஒரு வார்த்தை சொல்வதற்கு வாய் திறக்கும் முன்பே தன் தங்கையின் கதி அதோகதி தான் என்று...

கண்களில் நீர் பெருக நாக்கு ஒட்டிக் கொள்ளச் சரி என்பது போல் தலை அசைத்த கோகுலைவிட்டு அகன்ற அர்ஜூன் அவன் அறை வாயிலைத் தாண்டும் பொழுது மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்து அன்றைப் போல் அதே இளமுறுவலுடன், கனிவை சுமந்திருந்த கண்களுடன் மென்மையான முகபாவனையுடன்...

"டேக் கேர் கோகுல் [ Take care Gokul ]" என்றவன் சிரித்த முகத்துடன் வெளியேற...

ரௌத்திரத்தில் இருந்து கனிவான முகத்திற்குச் சடுதி நேரத்தில் தனது உணர்வுகளை மாற்றிய அர்ஜூனை இனி வாழ்நாளில் ஒரு முறைக் கூடப் பார்க்கக் கூடாது என்று வாழ்கையில் முதன் முறை கடவுளை வேண்டிய கோகுலிற்கு, அர்ஜூன் தனது தங்கையைத் தூக்குவேன் என்று சொன்னது தன்னை மிரட்டுவதற்காகத் தான் என்று தெரியாமல் அர்ஜூனைப் பற்றியோ, மஹாவைப் பற்றியோ ஒரு வார்த்தைக் கூடக் கூறாமல் மௌனமாக இருந்துவிட, அதற்குப் பிறகு மஹாவிற்கும், தன் மனையாளிற்கும் "கோகுல்" என்றே பெயரே ஞாபகம் வராமல் பார்த்துக் கொண்டான் அர்ஜூன்...

மருத்துவமனையை விட்டு வெளியே வந்தவன் கதிருக்கு அழைத்து எதற்கும் கோகுலின் மேல் ஒரு கண்ணை வைத்திருக்கச் சொன்னவன் நேரே வீட்டிற்குச் செல்ல, வீட்டின் முன் அறையில் ஸ்ரீயின் குடும்பத்தாரும், கலாவின் குடும்பத்தாரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, வீட்டிற்குள் அயர்வுடன் நுழைந்த கணவனைப் பார்த்த திவ்யாவிற்கு மனம் சுணங்கியது...

குழந்தைப் பிறந்ததில் இருந்து பச்சை உடம்புக்காரி என்று திவ்யாவை கீழே உள்ள அறையில் கலாவுடன் படுத்துக் கொள்ளச் சொல்லவும், கணவன் மனைவிக்கான தனிமை கிடைக்காதிருந்ததால் அவளால் தன் கணவனைக் கவனித்துக் கொள்ளவும் முடியாமல், அவனுக்கென்று தனியாக நேரமும் செலவிட முடியாமல், ஏனோ தன் கணவன் தன்னை விட்டுத் தூரம் சென்றுவிட்டது போல் மனமுழுவதும் அழுந்திப் பாரமாக இருந்தது....

இதில் இன்று அவன் என்றும் இல்லாதது போல் களைத்த முகத்துடனும், சோர்வான நடையுடனும் வீட்டிற்குள் நுழைய, கணவனின் களைப்பைக் கண்டவள் கலங்கிப் போய் அவனை நோக்கி ஓட...

"குழந்தை பிறந்து டு வீக்ஸ் கூட ஆகலை... அதுக்குள்ள ஏன் இப்படி ரெஸ்ட் எடுக்காம நடந்துட்டு இருக்க??" என்று கடிந்து கொண்ட கணவனைக் கண்டு முறுவலித்தவள் அவன் அருகாமையை விரும்பியவள் போல் அவனை நெருங்கி நிற்க, அவளின் தேவை புரிந்தவன் அவளின் தோள் மீது கைப் போட்டு அணைத்துப் பின் விடுவித்து...

"திவி... குளிச்சிட்டு வந்துடறேன்" என்றவன் சிறிது நேரத்திலேயே குளித்து முடித்துக் கீழ் இறங்கி வந்தான்...

அவன் வருகையை அறிந்து கலா தன் மடியில் இருந்த குழந்தையைத் திவ்யாவிடம் கொடுக்க, அர்ஜூனிடம் குழந்தையைக் கொடுத்தவள் நகரப் போக, அவளையும் கைப் பிடித்துத் தன் அருகில் அமர சொன்னவன் தன் மனைவியைத் தன் கைவளைவுக்குள்ளேயே வைத்துக் கொள்ள, இரு குடும்பத்தார் முன்னிலும் தன் கணவனின் செயலில் திவ்யாவிற்குத் தான் வெட்கம் பிடுங்கி தின்றது... ஆனால் அதற்கெல்லாம் என்று கவலைப்பட்டிருக்கிறான் அவள் கணவன்....

"அர்ஜூன்... குழந்தைக்குப் புண்ணியதானம் பண்றது பத்திதான்பா பேசிக்கிட்டு இருந்தோம்... கலாவும் சிவா அண்ணனும், வினோத்தும் எல்லாரும் இங்க இருக்கறப்பவே வச்சுடலாம்னு நினைக்கிறேன்... நீ என்னப்பா சொல்ற?"

"ஒகே... மாம்.... " என்றவன் மஹாவை ஒரு நொடித் திரும்பிப் பார்த்தவன்...

"அன்னைக்கே வினோத் மஹா எங்கேஜ்மெண்ட் [engagement] வச்சுக்குவோம்" என்றான்...

அர்ஜூன் திடுதிடுப்பென்று இவ்வாறு கூறவும், தான் நல்ல வேலையில் சேர்ந்து, மூன்று வருடங்களாவது உழைத்து, பின் செட்டிலாகி நல்ல நிலைமைக்கு வரும் வரை நிச்சயம் தங்களது திருமணத்தைப் பற்றி அவன் பேசப் போவதில்லை என்று நினைத்திருந்த வினோத்திற்கு இப்பொழுது அவன் நிச்சயதார்த்தத்தின் தேதியைக் குறிக்கச் சொன்னது ஆச்சரியத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது என்றால், அது மஹாவை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது...

அது வரையிலும் இதனைப் பற்றி நினைத்திராத பெரியவர்களுக்கு அவன் திடீரென்று இவ்வாறு சொன்னது வியப்பாக இருக்க, அனைவரும் அர்ஜூன் முகத்தையே பார்த்திருக்க, மஹாவை திரும்பி பார்த்தவன் இள நகை நகைக்கவும், இன்னும் ஆச்சர்யத்தில் இருந்து வெளி வர முடியாமல் தவித்தவள் சட்டென்று எழுந்து அவன் அருகில் பூனைக் குட்டி போல் ஒட்டி அமர்ந்துக் கொண்டாள்...

அவளின் செய்கையில் சிரித்த அனைவரும், புண்ணியதானத்திற்கும் நிச்சயதார்த்தத்திற்கும் அழைக்க வேண்டிய விருந்தினர் பட்டியல், எடுக்க வேண்டிய துணி மணிகள், என்னென்ன உணவு பதார்த்தங்கள் செய்வது, எங்குச் சமையலிற்கு ஆர்டர் கொடுப்பது என்று தீவிர கலந்தாலோசனையில் இறங்க,

குழந்தைப் பிறந்ததில் இருந்து தன் மனையாளுடனான தனிமை கிடைக்காமல் உள்ளுக்குள் புழுங்கித் தவித்திருந்தவன், அவளின் நெருக்கத்தை, ஸ்பரிசத்தை, அணைப்பை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தவன், அனைவரும் மிகத் தீவிரமாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு, தங்களை ஒருவரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு, அவளின் தோளை அழுத்தி தன்னை நோக்கி இழுத்தவன், யாரும் அறியாத வண்ணம் அவள் காதிற்கருகில் குனிந்து,

"திவி... இன்னைக்குக் கொஞ்ச நேரம் நம் ரூமிற்கு வந்துவிட்டு போ" என்றான்...

தன் தோளைப் பற்றித் தன் கணவன் தன்னை இழுத்ததுமே அவனை நோக்கி திரும்பியிருந்தவள், அவன் தன் காதிற்கருகில் குனிந்து "ரூமிற்கு வா" என்றதும், நாணத்தில் முகம் செந்தனலாய் சிவக்க, தங்களை எவரும் கவனித்துக் கொண்டிருக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தவள் மீண்டும் அண்ணாந்து தன் கணவனைப் பார்க்க..

"ப்ளீஸ்" என்பது போல் கண்களைச் சுருக்கி அவன் கெஞ்சிய விதத்தில் பெண்ணவளின் மனம் மயங்கவும் தன்னையும் அறியாமல் "ம்ம்" என்று நாணத்துடன் தலை அசைத்தாள்...

இரவு உணவு அருந்த அனைவரும் டைனிங் டேபிளில் அமர, தன் கணவனிற்கு அருகில் நின்று திவ்யா பரிமாற, அர்ஜூனிற்கு எதிரில் அமர்ந்திருந்த வினோத்தின் உள்ளம் முழுவதும் தங்களின் நிச்சயதார்த்தத்தைப் பற்றிச் சிந்தித்திருந்தாலும், அதே சமயம் அன்று அவ்வளவு கடுமையாகப் பேசி கட்டளைகளை விதித்த அர்ஜூன் இன்று திடிரென்று சம்மதம் தெரிவித்ததை நினைத்து வியப்பில் ஆழ்ந்திருந்தாலும், அவன் கட்டளைகளை இன்னும் மனதில் நிறுத்தியிருந்தவன் தன் அருகில் வந்த மஹா தனக்குப் பரிமாறத் துவங்கியும் அவளை நிமிர்ந்தும் பார்த்தான் இல்லை...

அதில் உடைந்துப் போன அவளின் காதல் கொண்ட மலர் மனம் தவித்து இருக்க, கண்களில் நீர் கோர்த்திருக்க, விருட்டென்று தன் அறைக்குச் சென்றவளைக் கண்டவன் நிமிர்ந்துப் பார்க்க, இவர்களின் கண்ணாமூச்சி ஆட்டத்தைக் கண்டு தலை கவிழ்ந்து புன்னகைத்துக் கொண்ட அர்ஜூன் பின் நிமிர்ந்துப் பார்க்க, அவன் மனைவியின் பார்வை தன் அண்ணனின் மீது கோபமாகப் படிந்திருந்ததையும், அதிலும் அவளின் குழந்தைத்தனமே தெரிவதைக் கண்டவன் தன்னையும் அறியாமல் வாய்விட்டுச் சிரித்தான்...

அவனின் திடீர் சிரிப்பில் அனைவரும் அவனைத் திரும்பிப் பார்க்க, அவர்களைக் கண்டவன் இன்னும் தனது புன்னகையை மாற்றாமல்...

"சாரி... ஐ குடுண்ட் ரெஸிஸ்ட் [Sorry, I couldn't resist] " என்று மட்டும் சொன்னவன் உணவு அருந்தி முடித்துவிட்டு அவளின் அருகில் குனிந்து...

"சீக்கிரம் வா... வெயிட் பண்ணிட்டு இருப்பேன்" எனவும்,

அர்ஜூனின் சிரிப்பைக் கண்ட ஸ்ரீக்கும் பாலாவிற்கும், அவன் தன் மனைவியிடம் ஏதோ கிசுகிசுவென்று ரகசியம் பேசவும், அதற்கு நாணத்துடன் அவள் தலைக் குனிவதும் கண் கொள்ளாக்காட்சியாக இருக்க, ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்த்துக் கொண்டவர்களின் மனதில் வார்த்தைகளில் வடிக்க இயலாத அமைதியும், அபரிமிதமான நிம்மதியும் தோன்றியதில் உள்ளம் சந்தோஷத்தில் நிறைந்திருந்தது...

ஒரு வழியாக அனைவரும் அவரவர் அறைக்கு உறங்க செல்ல, தன் அன்னையுடன் படுக்கச் சென்ற திவ்யாவின் மனமுழுவதும் தன் கணவன் தனக்காகக் காத்திருப்பானே என்ற சிந்தனையில் இருக்க, ஏற்கனவே அவன் அசந்து சோர்ந்துப் போயிருந்ததைக் கண்டவளின் பூ மனம் பரிதவித்து இருக்க, இதில் தானும் அவனை அதிக நேரம் காக்க வைக்கக்கூடாது என்று நினைத்தவள் மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தாள் தன் அன்னையிடம்....

"மா... அவங்க ஏதோ என்கிட்ட பேசனுமாம்... கொஞ்ச நேரத்தில் வந்துடுவேன்... குழந்தையையும் தூக்கிட்டு போறேன்.... "

திவ்யாவைத் திரும்பிப் பார்த்தவர் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருக்க அவரின் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் எண்ணம் புரிந்து...

"மா... உடனே வந்துடுவேன் மா... " எனவும்...

"திவ்யா, குழந்தை பிறந்த பிறகு கொஞ்ச நாளைக்குப் புருஷன் பொண்டாட்டியைப் பிரிச்சு வைக்கிறது எதுக்குன்னு ஏற்கனவே உனக்குச் சொல்லியிருக்கேன்... அதனால் பார்த்துக்கம்மா, சீக்கிரம் வந்துவிடு"

தலை குனிந்தவாறே சரி என்பது போல் தலை அசைத்தவள் குழந்தையையும் தூக்கிக் கொண்டு தங்களின் அறைக்குச் செல்ல,

அங்குக் கட்டிலில் அமர்ந்தவாக்கில் யாருடனோ அலை பேசியில் பேசிக் கொண்டிருந்தவன் தன் மனைவியின் வரவை எதிர்பார்க்காததால் வியப்பில் புருவத்தை உயர்த்தியவன்....

"அதிசயமா இருக்கு.... கூப்பிட்டவுடனேயே வந்துட்ட" என்றான் இதழ்கள் விரித்துப் புன்னகைத்தவாறே...

கோகுல் தன்னையும் மஹாவையும் கடத்தியதற்கு முதல் நாள் தங்களின் அறையில் தன் கணவனோடு தங்கியிருந்தவள் தான்...

அதற்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வந்த நாள் முதல் அர்ஜூனும் இரவு வெகு நேரம் சென்று வருவதால் அவனுடன் இங்குத் தனிமையில் கழிக்கத் தோதான தருணமோ, சந்தர்ப்பமோ கிடைக்காததால், இன்று பல நாட்களுக்குப் பிறகு அவன் இருக்கும் சமயம் அறைக்குள் நுழைந்தவளிற்கு அவனின் புன்சிரிப்போடு கூடிய குறும்பு வரவேற்பில் கூச்சமும், உவகையும் தோன்ற, அகமகிழ்ந்தவள் குழந்தையை அணைத்தவாறே கட்டிலில் ஏற,

அலை பேசியை அணைத்து தன் அருகில் இருந்த மேஜையில் வைத்தவன் குழந்தையைக் கைகளில் வாங்கவும், அவன் அருகில் நெருங்கி அமர்ந்தவள் அவன் தோளில் தலை சாய்த்தாள்...."

இந்த இரு வாரங்களுக்குள் என்னென்ன நடந்துவிட்டிருந்தது... மேலும் அவனை நெருங்கி அமர்ந்தவள் அவன் நெஞ்சில் தனது முகத்தை ஆழப் பதித்தவாறே குழந்தையின் விரல்களைப் பிடித்து வருடிக் கொண்டு மௌனமாக இருக்க, அவளின் அமைதியின் அர்த்தம் புரிந்தவன்...

"திவி... என்ன ஆச்சு?" என்றான்....

கணவனின் கேள்வியில் அவனை நிமிர்ந்துப் பார்த்தவள் ஒன்றும் இல்லை என்பது போலத் தலை அசைக்க மனைவியின் அடி மனதிற்குள் நிழல் போல் ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்களையும் சிந்தனைகளையும் புரிந்துக் கொண்டவனாகப் பட்டு போன்ற மென்மையான குழந்தையின் பாதத்தைத் தடவிப் பார்த்தவாறே.......

"திவி... எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? இந்த இருபத்தெட்டு வயசுக்குள்ள எத்தனையோ விஷயங்களில் சாதிச்சு இருக்கிறேன்... பிஸ்னஸ்களிலும் சரி, என்னோட பெர்ஸ்னல் லைஃப்பிலையும் சரி எத்தனையோ சக்ஸஸஸ் பார்த்திருக்கேன்... ஆனால் இந்தக் குட்டி பையன பார்க்கும் போது, அதுவும் இவன் பிறந்த விதத்தை நினைக்கும் போது, இந்த உலகத்தில இவன் அடி எடுத்து வச்சதே என்னோட கையில தான் நினைக்கும் போது, அதை எல்லாம் விடப் பெரிசா சாதிச்சுட்ட மாதிரி கர்வமா இருக்கு... " என்றவன் தன்னை அழகாக விழிகள் விரித்து அண்ணாந்து பார்த்திருந்த தன் மனையாளின் நெற்றியில் அழுந்த முத்தம் பதித்து,

"இதுக்கு நான் உனக்குத் தான் தேங்ஸ் சொல்லனும் திவி" என்றான்...

ஒரு தந்தையாக அர்ஜூனின் வார்த்தைகளில் அத்தனை பூரிப்பும், உற்சாகமும் தவழ்ந்தது...

கணவனின் காந்த கண்களில் இன்று தென்பட்டிருந்த கர்வத்தையும், மகிழ்ச்சியையும், பூரிப்பையும் கண்டவள், அவனின் கரத்தை எடுத்து தன் கழுத்தில் போட்டுக் கொண்டு அவன் கை அணைவுக்குள் வந்தவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, அவன் விரும்பிய மனைவியுடனான தனிமை இத்தனை நாட்களுக்குப் பிறகு கிடைக்க, மனைவியின் அருகாமையும், அவளின் இணக்கமான நெருக்கமும் அர்ஜூனிற்குள் அடங்கியிருந்த தாபத்தை, ஆண்மைக்குரிய வேட்கையைத் தூண்ட அவளின் முகம் நோக்கி குனிந்தவன் இதழ் ஒற்றப் போக அவன் கையில் இருந்து அவன் மகவு "என் அம்மா எனக்கு மட்டும் தான்" என்பது போல் அழ ஆரம்பித்தது...

சிரித்தவள், "உங்க பையனுக்கு நீங்க என் கிட்ட வரது கூடப் பிடிக்கலைப் போல இருக்கு... அப்பா மாதிரி பையன்" என்று குழந்தையை வாங்க, குழந்தை பசியில் அழுவதைத் தாயாக உணர்ந்தவள் பசியாற்ற நினைத்து பாலூட்ட தன் கணவனுக்கு முதுகைக் காட்டி திரும்ப, அவளின் செய்கையில் சலித்துக் கொண்டவன்...

"ம்ப்ச்... இப்போ ஏன் திரும்புற? இப்படித் திரும்பு" என்றான்...

என்ன தான் கணவனாக இருந்தாலும் அவனுக்கு முன்பாகவா என்று நாணத்துடனும் கூச்சத்துடனும் தயங்கியவள் தன் உள்ளத்தில் தோன்றியிருந்த உணர்வுகளைத் தன் முகத்திலும் கொண்டு வந்தவள் அவனையே பார்த்திருக்க, குழந்தையின் அழுகை சத்தம் பொறுக்கமாட்டாமல் அவளின் தோள் பற்றித் தன்னை நோக்கித் திருப்பியவன்...

இதழ் பிரித்துச் சிரித்து, கண் சிமிட்டியவாறே...

"குழந்தை அழறான் பாரு..." என்றான்...

கணவனின் சேட்டையில், குறும்புத்தனத்தில், அவனின் விஷமம் வழியும் கண்களைப் பார்த்தவளின் நாணம் எல்லையைக் கடக்க, தலை கவிழ்ந்தவாறே குழந்தைக்குப் பசியாற்றத் துவங்க...

அவள் அருகில் வந்தவன் குனிந்து குழந்தையின் விரல்களைத் தன் கரத்தில் பற்றி மென்மையாக முத்தம் கொடுத்தவனின் கன்னத்தில் தன் மனையாளின் பட்டு கரங்களின் ஸ்பரிசம் பட, மனம் தடுமாறி தவித்துத் தத்தளித்துப் போனான் அர்ஜூன்....

திவ்யாவின் பேறுகாலம் நெருங்க நெருங்க அவளின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, அவளின் கர்ப்பத்தில் இருந்த தங்களின் குழந்தையின் நலத்தை மனதில் நிறுத்தி, அவளிடம் தாம்பத்தியத்தை எதிர்பார்க்காமல் அவளை விட்டு தள்ளி இருந்தவன்...

ஒரே அறையில் இருவரும் தங்கியிருந்தாலும், தன் அருகே தன் அணைப்பில், நெருக்கத்தில் மனையாள் இருந்திருந்தாலும் தன்னைச் சுற்றி கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு, தன் மனதை அடக்கிக் கொண்டு தள்ளி இருந்தவனின் கட்டுப்பாடு இன்று தன்னையும் அறியாமல் தகர்ந்துப் போனது....

கட்டுங்கடங்காத தாபத்துடனும் வேட்கையுடனும் அவள் கழுத்தில் முகம் புதைக்க, கணவனின் ஸ்பரிசத்தில், அவனது முகம் ஆழ்ந்து தனது கழுத்தில் பதித்திருந்ததில் அவளின் பெண்மையும் விழித்தெழ, அவன் தலையின் பின் பகுதியின் முடிகளுக்குள் தன் விரல்களை நுழைத்தவள் தன்னை நோக்கி இழுக்க, திவ்யாவின் பெண்மை உணர்வுடன் போட்டியிட்ட தாய்மை உணர்வு சிலிர்த்து விழித்தெழுந்தது...

உடலும் மனமும் தன் கணவனை விட்டு விலக ஒத்துழைக்காவிட்டாலும், அவனின் முரட்டுத் தனமான இதழொற்றல்களும், அவன் கரங்களின் அத்துமீறல்களும் தன்னவனிற்குள் கொந்தளித்துக் கொண்டிருந்த தாபத்தையும், வேட்கையையும் வெளிப்படுத்த, அவனை விலக்க முயற்சித்தவாறே....

"வேண்டாங்க, அம்மா சீக்கிரமே வரச் சொல்லியிருக்காங்க... நான் போகனும்" என்றாள் மெல்லிய குரலில்...

பல நாட்களாகக் காத்திருந்தவனிற்கு இப்பொழுதைக்கு எட்டாது என்று நினைத்திருந்த தன் மனைவியுடனான தனிமை, அவளின் தீண்டல், சுகம் கிடைக்கவும், அதனை இந்த நிமிடம் இழக்க விரும்பாதவன் அவள் கழுத்தில் பதிந்திருந்த முகத்தை அகற்றாமலே...

"திவி... ஐ நீட் யூ... ஐ நீட் யூ நௌ [Dhivi, I need you...I need you now] நீ இப்பவே எனக்கு வேணும்டி" என்றான் கரகரப்பான மோகம் தொய்ந்திருந்த குரலில்......

தன் கணவன் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டிருக்கிறான் என்பதை அவனின் வேகத்தில் இருந்தே புரிந்து கொண்டவள் அவனுக்கு இருக்கும் தாபத்தில் அவனை இப்பொழுது கட்டுப்படுத்துவது கடினம் என்று மனதிற்கு உரைக்க, இருந்தும் தன் உடல் நிலைக் கருதி....

"ப்ளீஸ்ங்க... குழந்தை பிறந்து இரண்டு வாரம் கூட ஆகலை" என்றாள் தன் கணவன் என்ன சொல்லப் போகிறானோ என்ற அச்சத்துடனும், தயக்கத்துடனும்...

அவளின் அச்சமும், கலக்கமும் அவளின் குரலிலேயே வெளிப்பட, அவளின் விலகலிற்கும் அர்த்தம் புரிந்துக் கொண்டவன், சடுதி நேரத்தில் தன் மனதை, ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த தனது உடல் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன், அவளை விட்டு விலகிக் கட்டிலில் சாய்ந்து அமர,

குழந்தைக்குப் பசியாற்றி முடித்ததும் கீழே போக எத்தனித்தவள் தங்களின் அறை வாயில் வரை சென்று திரும்பி பார்க்க, "போ" என்பது போல் புன்னகையுடன் தலை அசைத்துச் சைகை செய்தான் அந்தக் காதல் கணவன்..

தொடரும்.
 

JB

Administrator
Staff member
Epilogue - 36


புண்ணியதானமும், வினோத் மஹாவின் நிச்சயதார்த்தமும் ஒரே நாளில் நடத்துவது என்று முடிவானதும் விஷேஷங்களின் ஏற்பாட்டைக் கவனிக்கும் பரப்பரப்பில் இருந்த இரு குடும்பங்களின் உறுப்பினர்களும் ஒவ்வொரு வேலையைத் தங்களின் கையில் எடுத்துச் செய்ய, பிள்ளைப்பேறின் வலி எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றிய பெரிய கருத்துக்கள் ஒன்றும் அர்ஜூனிற்கு அதற்கு முன் இருந்ததில்லை என்றாலும், தன் மனையாள் துடிதுடித்ததைப் பார்த்ததில் இருந்து, அவளின் உடல் நலம் முன்னைப் போல் தேறிவரும் வரை திவ்யாவிற்கு மட்டும் இந்த முறை முழு ஓய்வு கொடுக்கச் சொல்லி உத்தரவு இட்டிருந்தான் அவளின் அன்புக் கணவன்...

வினோத் மஹாவின் நிச்சயதார்த்திற்குத் தேதியே குறிக்கப் பட்டிருந்தாலும் அன்று அர்ஜூனின் அலுவலகத்தில் தன்னிடம் அர்ஜூன் பேசிய முறையையும், அவன் இட்டிருந்த நிபந்தனைகளையும் இன்னும் வினோத் மறக்கவில்லை... தன்னைக் காணும் ஒவ்வொரு நிமிடமும் தனது பாராமுகத்தால் தன்னவளின் துடிப்பைக் கண்டு உள்ளம் மருங்கி உருகியிருந்தாலும், அவன் தனது இடத்தையும், நிலையையும் மனதில் கொண்டு, அர்ஜூனின் கட்டளைகளில் இருந்த நியாயத்தையும் உள்ளத்தில் நிறுத்தி தனது மனம் கவர்ந்தவளிடம் இருந்து தள்ளியே இருந்தான்...

ஆக ஒருவருக்கும் அர்ஜூனை எதிர்க்கும் தைரியம் இன்னும் வரவில்லையாதலால் திவ்யா எவ்வளவோ கேட்டும், அவளுக்குத் தன் குழந்தையைப் பார்த்துக்கொள்வதைத் தவிர வேறு வேலைகள் எதுவும் வழங்கப்படவில்லை....

புண்ணியதானத்திற்கு முதல் நாள் இரவு குடும்பத்தினர் அனைவரும் இரண்டு விஷேஷங்களிற்கான ஏற்பாடுகளைப் பற்றி விவாதித்துச் சரி பார்த்துக் கொண்டிருக்க, மாலை வீட்டிற்கு வந்ததில் இருந்து தன் அறையில் அலுவலக வேலைகளில் மூழ்கியிருந்த அர்ஜூன் ஒரு வழியாக அன்று செய்ய வேண்டிய அலுவல்களை முடித்தவன் கீழே இறங்கி வர,

குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு தன் அருகில் அமர்ந்திருந்த மஹாவுடன் நாளைய நிச்சயத்தார்த்தைப் பற்றி, குழந்தைத்தனம் மாறாத முகத்துடனும், கைகள் இரண்டையும் ஆட்டி, முகமெல்லாம் தவழ்ந்திடும் புன்னகையோடும், தாய்மையின் பூரிப்புடனும் அரட்டை அடித்துக் கொண்டிருந்த மனையாளைத் தன் பார்வையாலே விழுங்கிவிடுபவன் போல் கண்களை அவள் மேல் பதித்தவாறே வந்த கணவனின் அழுத்தமான காலடியோசைகளில் திரும்பிப் பார்த்தவளுக்கு அவன் பார்வையின் அர்த்தம் புரிந்ததில் அந்திவானமாய்ச் சிவந்து ஜொலித்தது முகம்....

அன்று தங்களின் அறையை விட்டு கீழே சென்றவள் தான், தனது அன்னையுடனும் அவர்கள் தங்களின் ஊருக்கு சென்ற பின் ஸ்ரீயுடனும் மற்ற இரவுகளைக் கழிக்க, தனது மனைவியின் அருகாமையைத் தேடி மனம் தவித்து இருந்தாலும் அவளின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவளை நெருங்காமல் இருந்தாலும், அவளுடனான தனிமையை, சங்கமத்தை எதிர்பார்த்து காத்துக் கிடந்தது அவனின் ஆண்மை.

ஹாலிற்கு வந்தவன் அவள் தரையில் குழந்தையோடு அமர்ந்திருக்க, அவளின் அருகில் ஷோஃபாவில் அமர்ந்தவன், அமைதியாக மற்றவர்களின் பேச்சைக் கவனித்துக் கொண்டிருக்க, கணவனின் மௌனத்தைக் கண்டவள் தன் முதுகுப் புறம் முழுவதும் அவனது கால்களில் படுமாறு அவனை நெருங்கி அமர்ந்து, அவனை நோக்கி திரும்பி, அண்ணாந்துப் பார்த்து...

"ரொம்ப டையர்டா இருக்கற மாதிரி இருக்கீங்க... சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா... சாப்பிட்டுட்டுச் சீக்கிரம் தூங்குங்க…" என்றாள்...

தனக்கு அருகில் அமருமாறு ஷோஃபாவை தட்டி காட்டியவன் தலை அசைத்து வா என்பது போல் சைகை செய்ய, குழந்தையை அவனிடம் கொடுத்தவள் அவன் அருகில் அமர, குழந்தைக்கு அர்ஜூனும் திவ்யாவும் சேர்ந்து முடிவு செய்திருந்த பெயரைப் பற்றியச் சிறு சலசலப்பு எழுந்தது...

முதன் முறை தன் மருமகனிடம் நேரிடையாகப் பேசத் துவங்கிய சிவசுப்ரமணியம்...

"மாப்பிள்ளை... நீங்க தேர்ந்தெடுத்திருக்கிற பேரு நல்லாதான் இருக்கு... ஆனால்..." என்று தயங்கியவர் திவ்யாவைப் பார்க்க, தன் கணவனின் அருகில் அமர்ந்திருந்தவளுக்குத் தன் தந்தை கேட்கப் போகும் கேள்வி புரிந்ததால்...

"அப்பா... இவங்களுக்கும் எனக்கும் பிடிச்சிருக்குப்பா அந்தப் பேரு... அதனால் அதையே வச்சுடுவோம்பா" எனவும்,

தன் மனையாளின் தோள் மீது இருந்த தன் கரத்தில் அழுத்தம் கொடுத்த அர்ஜூன்..

"அவங்க என்ன கேட்கனுமோ கேட்கட்டும் திவி... இவன் அவங்களுக்கும் பேரன்..." என்றவன் திரும்பி தன் மாமனாரைப் பார்த்தவன்...

"என்ன கேட்கனுமோ தயங்காமல் கேளுங்க" என்றான்...

அவன் என்னவோ சாதாரணமாகத் தான் இருந்தான்... ஆனால் சுற்றியிருந்தவர்களுக்குத் தான் திவ்யாவின் தந்தை கேட்கப் போவது கிட்டத்தட்ட புரிந்திருந்ததனாலேயும், அதே கேள்வி அவர்கள் மனதையும் குடைந்துக் கொண்டிருந்ததனாலேயும், இப்பொழுது அமைதியாக, புன்னகைத் தவழும் முகத்துடன் அமர்ந்திருக்கும் அர்ஜூன் கேள்வியைக் கேட்டப் பின் என்ன அவதாரம் எடுக்கப் போகிறானோ என்று கலக்கமாக இருந்தது...

மீண்டும் சன்னமான குரலில்...

"இல்ல மாப்பிள்ளை... அபிமன்யு பேரு ரொம்ப நல்லா இருக்கு... இல்லைன்னு சொல்லல்லை... ஆனால் அபிமன்யு..." என்று முடிக்கவில்லை...

திவ்யா சட்டென்று... "அப்பா..." எனவும்...

தன் மனையாளை திரும்பிப் பார்த்தவன்...

"திவி..." என்ற ஒற்றை வார்த்தையில் அவளை அடக்கியவன் பேசுங்கள் என்பது போல் தன் மாமனாரிடம் தலை அசைக்க...

ஏதோ தைரியத்தில் பேச்சை துவங்கிவிட்டோம்... பேசி முடித்துவிடுவோம் என்பது போல்...

"அதான் மாப்பிள்ளை... வேற பேரு வைக்கலாமேன்னு தான்..." என்று ஒரு வழியாக, இழுத்து, தயங்கி, தடுமாறி முடித்தார்...

ஆனால் அவர், தான் கேட்க வந்ததைக் கேட்டு முடித்து அடுத்து மூச்சுக் கூட விடவில்லை... சட்டென்று...

"வேற பேரு வச்சா குழந்தைக்கு ஆயுசு எத்தனைன்னு இப்போ உங்களால கரெக்ட்டா சொல்ல முடியுமா?" என்று எதிர் கேள்விக் கேட்ட தன் மருமகனைப் பார்த்தவர் விதிர்த்துப் போய், விட்ட மூச்சை மீண்டும் உள்வாங்கி இழுத்து பிடித்தவருக்கு அவன் கேட்ட கேள்விக்குப் பதில் மட்டும் சொல்லத் தெரியவில்லை....

அமர்ந்திருந்த தோரணையைச் சற்று மாற்றி மேலும் ஷோஃபாவில் சாய்ந்து அமர்ந்த அர்ஜூன்,

"அன்கில்... எனக்கும் மஹாபாரதம் தெரியும்..." என்றவன் புன்னகைத்தவாறே தன் மாமனாரின் விழிகளை ஊடுருவுவது போல் பார்த்தவாறே பேச,

அவனின் பார்வையில் எப்பொழுதுமே ஒரு கூரிய சக்தி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், அதில் தெரிவது உறுதியா? கடினமா? நிதானமா? மென்மையா? என்று எவராலும் புரிந்து கொள்ள முடியாது என்று தெரிந்திருந்தாலும், இன்று நேருக்கு நேர் அவனுக்கு வெகு அருகில் அமர்ந்து கேள்விக் கேட்டுவிட்டு அடி மனதில் ஒரு கலக்கத்தோடு அமர்ந்திருந்தவரைப் பார்த்த கலாவிற்கு இவருக்கு ஏன் இந்த வேலை என்றே தோன்றியது...

வழக்கமாக அவனிடம் கேள்விக் கேட்கும் தைரியம் ஒருவருக்கும் இருந்ததில்லை... அப்படியே கேட்டாலும் ஒற்றை வார்த்தையில் பதிலறுத்துவிட்டு அதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்பது போல் தனது வேலையில் மூழ்கிவிடுவான்...

இது அவனைச் சுற்றியுள்ள அனைவருக்கும் தெரியும்... ஆனால் முதன் முறையாகத் தனது மாமனாரின் கேள்விக்கு விளக்கம் அளிக்க விரும்புவன் போல் தன்னை நெருங்கி அமர்ந்து தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் தன் மனைவியைப் பார்த்தவன் பேசத் துவங்கினான்...

"அபிமன்யு கிருஷ்ணா... " என்று வாய் விட்டு சிரித்தவன் "என்ன ஒரு ஐரனிப் [irony] பார்த்தீங்களா?.... மஹாபாரதத்தில் அந்தக் கிருஷ்ணா அபிமன்யுவைக் காப்பாத்தாம விட்டுட்டுதாலத் தானோ என்னவோ இப்ப இந்த அபிமன்யு பேரில் கூடத் துணையா இருக்க முடிவுப் பண்ணிட்டாருப் போல..." என்று கூறும் அர்ஜூனை அனைவரும் வியந்துப் பார்த்தார்கள் என்றால், ஆச்சரியத்தில் வாயை பிளந்து கொண்டு தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் மனையாளைப் பார்த்தவன்...

"கோவிலுக்கே போகாதவன் கிருஷ்ணர் என் பையனைப் பார்த்துக்குவார்ன்னு சொல்றானேன்னு நினைக்கிறியா... ஸ்டில் ஐ டோண்ட் பிலிவ் இன் காட்... பட் திஸ் இஸ் அன் எபிக் [Still i don't believe in God, but this is an epic ]" என்றவன் அவள் இன்னும் கண் இமைக்காமல் தன்னையே பார்த்திருப்பதைக் கண்டு என்ன என்பது போல் புருவத்தை ஏற்றி இறக்க, தன் கணவனின் பேச்சில் அவள் மதி மயங்கி இருந்தாள் என்றால் அவனின் செய்கையில், அதன் அழகில் சொக்கிப் போனவள் ஒன்றும் இல்லை என்பது போல் தலை அசைத்துப் புன்னகைக்கத் தொடர்ந்தான் அர்ஜூன்....

"அந்த அர்ஜூனோட மகன் சக்ரவியூகத்தை உடைக்கும் சூத்திரத்தை முழுசா கத்துக்காததினால் தன் உயிரை இழந்தான்... ஆனால் இந்த அர்ஜூனோட மகன் நிச்சயம் அப்படி இருக்கமாட்டான்... அப்படி இருக்கவும் விட மாட்டேன்... அவன் அடி எடுத்து வைக்கற வியூகம், அது எந்த வியூகமாக இருந்தாலும் சரி, அது உடைக்காமல் திரும்பி வரமாட்டான்... அது மட்டுமில்ல... எந்தத் துரோனாச்சார்யாவாலேயும் என்னை என் மகன் கிட்ட இருந்து பிரிக்க முடியாது.... எந்த ஜெயத்ரதனாலேயும் என் மகன் காலடி எடுத்து வச்ச பாதையை அடைக்க முடியாது...." என்று அவன் சொல்லும் பொழுது தங்களையும் அறியாமல் அங்கு இருந்த அனைவருக்கும் கோகுலின் நியாபகம் வந்தது....

அவன் என்னென்னவோ கொடூரமான, கொடிய காரியங்களைச் செய்திருந்தாலும், திவ்யாவின் குழந்தைப் பேற்றை அவன் மூலம் விதி மாற்றி எழுத நினைத்திருந்தாலும், இந்த அபிமன்யு உலகத்திற்குள் நுழையும் பாதையை முழுக்க அடைத்திருந்தாலும், இந்த அர்ஜூன் அத்தனை சோதனைகளையும் உடைத்து தனது மகனை பிரபஞ்சத்திற்குள் கொண்டு வரவில்லையா என்ன?

அர்ஜுனின் பேச்சில் மூச்சுக் கூட விட மறந்து அனைவரும் அவனையே பார்த்திருக்க, மேலும் தொடர்ந்தவன்...

"அந்த அர்ஜூனோட மகன் அபிமன்யு, தன்னோட மரணத்தினால கௌரவர்களுக்குப் பெரிய கேட்டை விளைவிச்சான்... ஆனால் என் மகன் யாரையும் அழிக்க மரணிக்க வேண்டிய அவசியம் இல்லை... ஏனா அவனுக்குக் குருவா இருக்கப் போறது இந்த அர்ஜூன்... இந்த அர்ஜூன் இருக்கறவரைக்கும் மட்டுமல்ல, எப்போதுமே என் அபிமன்யு மேல யாராலயும் கை வக்க முடியாது... " என்று முடித்த தன் கணவனைப் பார்த்தவளின் விழிகளில் நீர் தளும்ப,

முதன் முறை தங்களைச் சுற்றிலும் அனைவரும் அமர்ந்திருப்பதைக் கண்டு கொள்ளாமல் தானாகத் தன் கணவனின் தோளில் தலை சாய்ந்தாள்...

மனையாளின் உரிமையான செய்கையில், அவள் தன் தோள் சாய்ந்ததில் சிலிர்த்துப் போனவன் அவளைத் தன்னுடன் இறுக்க அணைத்து தன் மாமனாரை மட்டும் அல்ல, அனைவரையும் பார்த்தவன்...

"ஸோ... நாங்க டிஸைட் பண்ணிட்டோம்... எங்க மகன் பேரு.... அபிமன்யு.... அபிமன்யு கிருஷ்ணா...."

புண்ணியதானம் அன்று அதி காலையிலேயே எழுந்த திவ்யா குளித்து முடித்துப் பட்டு புடவைக் கட்டி கீழே வந்தவள் தன் அன்னையோடு சேர்ந்து மகனையும் குளிக்க வைத்து உடை உடுத்த, அர்ஜூன் அழைக்கும் சத்தம் கேட்டது...

ஸ்ரீயிடம் குழந்தையைக் கொடுத்தவள்...

"அத்தை அவங்க கூப்புடறாங்க... நீங்க கொஞ்சம் குழந்தையைப் பாத்துக்கிறீங்களா? அம்மா குளிச்சுட்டு ரெடியாகனும்னு சொன்னாங்க" என்று கூறி வேகமாக மாடி ஏறுவதற்குள் அர்ஜூன் அவளை மூன்று முறை அழைத்திருந்தான்...

வேகமாக அறைக்குள் நுழைந்தவளின் கொலுசு சத்தம் கேட்டு திரும்பி பார்க்க, வெங்காயச் சருகு நிறத்தில் பட்டு புடவை உடுத்தி அதே நிறத்தில் கற்கள் பதித்த ஆபரணங்கள் அணிந்திருந்தவள், எளிமையான அலங்காரத்தில் வழக்கத்திற்கு மாறாகப் பெரிதாகப் பொட்டு வைத்து, சிகப்புக் கல்லில் மூக்குத்தி அணிந்து, பெண்மையின் அழகோடு தாய்மையின் அழகும் போட்டிப் போட்டதில் தேவதைப் போல் இதயத்தைக் கலங்க வைக்கும் எழிலுடன், மயக்கம் தரும் விழிகளுடன் நின்றவளை, இமைக்க மறந்து ரசித்த அர்ஜூன், இதயத்திற்குள் பிரவாகிக்கும் உணர்வுகளோடு அவளை நோக்கி அடி எடுத்து வைத்தான்....

கணவனின் பார்வையும், அவனின் விஷம விழிகளில் வழியும் தாபமும், தன்னை நோக்கி அவன் நடந்து வரும் வேகமும் அவனின் உணர்வுகளை அப்பட்டமாக வெளிப்படுத்த, அவன் அடுத்துச் செய்யவிருப்பது புரிந்தவள் தன்னையும் அறியாமல் இரு அடிகள் எடுத்துப் பின்னால் நகர, தன்னவளின் அருகாமையைத் தேடி ஏங்கியிருந்த மனதில் படிந்திருந்த வேட்கை சிலிர்த்து எழுந்ததில் எட்டி அவள் இடையைப் பிடித்து இழுத்து அவளின் முகம் நோக்கி குனிந்தான்....

"என்னங்க.... கீழ அவ்வளவு வேலை இருக்கு... அத்தைய வேற குழந்தையைப் பார்த்துக்கச் சொல்லிட்டு வந்திருக்கேன்... நீங்க என்னன்னா நேரம் காலம் தெரியாம?" என்று அவன் மார்பில் கை வைத்து அவள் தள்ள...

இத்தனை நாள் தன்னவளைப் பிரிந்திருந்ததில் தனக்கு இருக்கும் அதே ஏக்கமும், எதிர்ப்பார்ப்பும் அவளுக்கும் இருக்கும் தானே என்று எண்ணி அவளை அணைத்திருந்தவனிற்கு அவளின் புறக்கணிப்பும், அவள் தன்னை ஒதுக்கி தள்ளிவிட்டதும் சுள்ளென்று கோபத்தைக் கிளறிவிட்டது....

அவளைச் சட்டென்று விட்டவன் ஒன்றும் பேசாமல் நகர, வழக்கமாகத் தான், எவ்வளவு வேண்டாம் என்று சொன்னாலும், அவனைத் தள்ளிவிட்டு ஓடினாலும், பிடிவாதமாகத் தன்னைத் துரத்திப் பிடித்து வலுக்கட்டாயமாகத் தன் எண்ணங்களை, எதிர்பார்ப்புகளைத் தீர்த்துக் கொள்ளும் தன் கணவனின் இந்த அமைதி அவளுக்கு அவனின் கோபத்தின் உச்சியை நன்கு உணர்த்த, சடுதியில் மனம் கலங்கியவள் அவன் அருகில் வந்து இறுக்கி அணைத்தவள் நெஞ்சில் சாய்ந்து,

"சாரிங்க... கீழ நிறைய வேலை இருக்கு... குழந்தைய வேற ரெடி பண்ணனும்... அதான் சட்டுன்னு அப்படிச் சொல்லிட்டேன்" என்று உள்ளம் தவித்துப் போய்க் கூறினாள்...

தன்னவளின் கலக்கத்தை உணர்ந்திருந்தும், அவளின் தவிப்புப் புரிந்திருந்தும் தன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளை மெல்ல தன்னை விட்டு தள்ளி நிறுத்தியவன் ஒன்றும் பேசாமல் மௌனமாகத் தன் பீரோவை திறந்து தன் துண்டை எடுக்க, மீண்டும் அவன் அருகில் சென்றவள் அவனின் தோள் தொட்டு....

"கோபமா?" என்றாள் மெல்லிய குரலில் மலரினும் மெல்லிய அர்ஜூனின் மனையாள்...

அவளின் கேள்விக்குத் திரும்பி அவளை ஆழ்ந்து ஒரு நொடியே பார்த்தவன் பதில் ஒன்றும் சொல்லாமல், குளியல் அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொள்ள,

தன் கணவனின் இந்த மௌனமும், தன்னைத் தள்ளி நிறுத்தியதில் தெரிந்த அவனது கோபமும், விவரிக்க இயலாத சஞ்சலத்தில் மனதைப் போட்டு பிசைந்தெடுக்க, வழக்கம் போல் தனக்குத் தானே வாய்விட்டு.....

"சே! என்ன திவ்யா? நல்ல நாளும் அதுவும் இப்படி அவரைக் கோபப்படுத்திட்ட... இப்ப அவர எப்படிச் சமாளிக்கப் போற" என்று கூறிக் கொண்டே கட்டிலில் அமர்ந்தவளிற்குத் தன் கணவனைச் சமாதானப்படுத்தாமல் தங்களின் அறையை விட்டு செல்ல மனம் வரவில்லை...

குளித்து முடித்து வெளியில் வந்தவன் ஏதோ தீவிர யோசனையுடன் தனது கைவிரல்களைக் கோர்த்து அதனையே பார்த்துக் கட்டிலில் அமர்ந்திருந்தவளைக் கணடவனிற்கு அவளின் கலக்கம் புரிய, இருந்தும் மலை ஏறியிருந்த தன் கோபத்தில் இருந்து விடாப்பிடியாகக் கீழே இறங்க மாட்டேன் என்பது போல் முகத்திலும் இன்னும் கடுமையைப் படரவிட்டுக் கொண்டவன்,

"இன்னும் இங்க என்ன பண்ற? குழந்தை அழப் போறான்... கீழே போ" என்றான்...

தன் கணவனின் கோபம் அவளின் பூ மனதை வாள் கொண்டு அறுத்தது போல் வலியில் வாட்டியது.. அவனை நிமிர்ந்துப் பார்த்தவளைக் கண்டு கொள்ளாமல் அவன் விஷேஷங்களிற்குக் கிளம்ப ஆயத்தமாக, விழிகளில் நீர் தளும்ப,

"இல்லை... அத்தையும் அம்மாவும் பாத்துக்குவாங்க... நீங்க எதுக்குக் கூப்பிட்டீங்கன்னு சொல்லவே இல்லையே? " எனவும்....

அவளின் வார்த்தைகளில் தெரிந்த தவிப்பும், மெல்லிய குரலில் தெரிந்த தடுமாற்றமும் புரிந்து அவளைத் திரும்பிப் பார்த்தவன், ஒன்றும் பேசாமல் அமைதியாக மீண்டும் கண்ணாடி முன் நின்று தலை துவட்ட, அவனின் கோபமும், மௌனமும் மனதிற்குள் வலியை ஏற்படுத்த, அவனை நெருங்கி வந்தவள் வெற்று ஈர உடம்புடன் வெறும் துண்டை மட்டும் இடுப்பில் கட்டிக் கொண்டு இருந்தவனின் முதுகுக்குப் பின்னால் இருந்து அவனை இறுக்கக் கட்டி பிடித்து....

"சாரிங்க.... இன்னும் கோபமா?" என்றாள்...

தனது கோபம் தன் மனையாளைப் பாதிப்பதை தெரிந்துக் கொள்வதில் ஆண்களுக்கு எப்பொழுதும் ஒரு கர்வம் தான் போலும்... கண்ணாடி வழியாகவே அவளைப் பார்த்திருந்தவன் இப்பொழுது அவளின் இறுக்கிய அணைப்பில் சிலிர்த்தாலும், மேலும் முறுக்கேற்றிக் கொண்டு அவளின் கேள்விக்குப் பதிலறுகாமல்....

"உடம்பு எல்லாம் ஈரமா இருக்கு... புடவை நனைய போகுது பாரு" என்றான்...

"பரவாயில்லை" என்றவள் தன் தலையை அவன் முதுகில் சாய்க்க, மௌனமாகத் தலை துவட்டியவன் அவள் தன்னை விட்டு நகரப் போவதில்லை என்று தெரிந்து....

"திவி... நான் கிளம்பனும்..... நீ கீழ போ" என்றான்...

தன் கணவனின் குணம் தெரிந்தும் அவனைத் தள்ளியதில் வந்த வினை தான் இது... ஆனால் இப்பொழுது எப்படி அவனைச் சமாதானப் படுத்துவது என்று குழம்பியவள் கண்ணாடிக்கும், அவனிற்கும் இருந்த அந்தச் சின்ன இடைவெளிக்குள் நுழைந்து நின்றவள் விழிகளில் நீர் சொரிய, அவன் கன்னத்தை வருடி....

"நான் வேணும்னு உங்களைத் தள்ளலை... நிறைய வேலை இருக்கு, அதான்..." என்று கெஞ்சியும் அவன் இறங்கி வருவதாய்த் தெரியவில்லையாதலால் என்ன செய்து அவனைத் தணிப்பது என்று ஒரு நொடி யோசித்தவள், மெல்ல அவன் பாதங்களின் மீது தன் இரு பாதங்களையும் வைத்து எம்பி, இன்னும் அவனுடைய உயரத்திற்கு வர முடியாததால் முடிந்த வரை எக்கியவள் அவன் கழுத்தில் கைக் கொடுத்து தலையின் பின் பகுதியில் ஈர முடிகளுக்குள் விரல்கள் நுழைத்து, முகத்தைத் தன் உயரத்திற்குக் கீழ் இழுத்து, முதன் முறை தன் கணவனின் இதழ்களைத் தன் இதழ்களுக்குள் ஆழ புதைத்துக் கொண்டாள்...

அர்ஜூனிற்கும் தன் மனையாளின் கண்ணீர் கசந்தது தான்... அவளின் மெல்லிய குரலின் இறைஞ்சுதல் அவன் உள்ளத்தை வலிக்கச் செய்தது தான்.... ஆனாலும் இளக மனம் வராமல் தனது கோபத்தை இறுக்கிப் பிடித்திருந்தவனிற்கு (காதலில் ஊடலும் ஒரு அழகிய சுகம் தானே!) தன்னவளின் இந்தத் திடீர் முத்தம்.... அதுவும் திருமணம் நடந்து கிட்டத்தட்ட இந்த ஒன்றரை வருடங்களில் இதழ் முத்தமாகட்டும், அணைப்பாகட்டும், இல்லை கூடலாகட்டும், அனைத்துமே அவன் விருப்பப்பட்டுத் தான் நடந்திருக்கிறது...

முதன் முறை தன் மனம் கவர்ந்த மனையாள் அவளாகத் தன் வெட்கத்தை விட்டு தன் இதழில் மென்மையைக் கைவிட்டு வன்மையாக இதழ் பதித்திருக்கிறாள்... அவளின் கூச்சமற்ற கடுமையான இதழொற்றல் மயிற்சிலிர்ப்பில் ஆழ்த்தியதில், மனதிற்குள் மகிழ்ச்சியையும் உடலில் கிளர்ச்சியையும் உண்டு பண்ணியிருந்தாலும் அந்த இன்பத்தை இன்னும் அனுபவிக்க நினைத்தவன் அவளைத் தொடாமல் அவளின் இதழ் ஒற்றலில் சுகமாய் நனைந்திருந்திருக்க....

தான் இத்தனை இறங்கி வந்தும், தனது வெட்கத்தை விட்டு இவ்வளவு ஆழமாக அவன் இதழ்களைத் தனக்குள் சிறை செய்தும், தன் கணவனின் ஒத்துழையாமையை உணர்ந்த அந்தப் பேதை அவன் விரல்கள் கூடத் தன்னைத் தொடாதது கண்டு மனம் சுணங்கியவள், இதற்கு மேல் என்ன செய்வது என்று கலங்கி அவனின் இதழை விடுவித்து, விழிகளில் திரையிட்டிருந்த நீர் பெருக அவன் முகத்தைப் பார்க்காமல் தலை குனிந்து அவன் பாதங்களில் இருந்து இறங்க எத்தனிக்க, சட்டென்று தனது இடது கரத்தால் அவளின் இடைப் பற்றியவன், வலதுக் கரத்தை அவளின் கழுத்தில் கொடுத்துத் தன்னை நோக்கி இழுத்தவன் தன்னவள் துவங்கிய இதழொற்றலை தான் தொடர்ந்தான்...

கணவனின் முத்தத்தில் சிலிர்த்தவள், அவன் கோபம் தணிந்ததில் மனம் உருகியவள், அவனின் இறுக்கிய அணைப்பில் நெகிழ்ந்து அவனின் வன்மையான முத்தத்திற்குத் துணைப் போக எத்தனை நேரம் தான் அவ்வாறு கட்டுண்டு இருந்தார்களோ... தெரியவில்லை....

நெடு நேரம் நடந்த அந்த இதழொற்றலில் கணவன் மனைவி இருவரும் உலகை மறந்திருக்க, முதலில் அவன் தான் தன்னிலை இழுத்துப் பிடித்துத் தன் மனையாளை விடுவிக்க, இன்னும் அவன் பாதங்களில் மீது இருந்த தன் பாதங்களை எடுக்காமல், அவன் பார்வைக்குள் தன் விழிகளைக் கலக்க விட்டவள் தளும்பிய நீர் மேலும் சொரிய...

"ம்ப்ச்... சாரிடி.." என்றவாறே அவளின் விழிகளில் வழியும் நீரைத் தன் விரல்களால் துடைக்கவும்,

"ஏங்க இவ்வளவு கோபம்? சரி... என்கிட்ட கோபப் படுங்க... வேண்டாம்னு சொல்லலை... திட்டுங்க.... என்ன வேணா சொல்லுங்க... ஆனால் ப்ளீஸ்... பேசாம மட்டும் இருக்காதீங்க... என்னால தாங்க முடியலைங்க..." என்றாள்...

அவளின் அழுகையில் கரைந்து மனம் உருகியவன்...

"திவி... உண்மையிலுமே ஐ மிஸ் யூ டி... நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்.. " என்றவன் அவளைப் பிடித்திருந்த கரத்தில் இறுக்கத்தைக் கூட்டி...

"என்ன பத்தி உனக்கு நல்லா தெரியும்.... நான் ரொம்பச் சந்தோஷமா இருக்கிறது இந்த ரூமில் இருக்கிற வரை தான்... அதுவும் நீ என் கூட இருக்கும் போது தான்... நான் இந்த ரூம விட்டு வெளியில் போய்ட்டா என்னையும் அறியாம நான் ரொம்பக் கடுமையா மாறிடுவேன்... பட் தெட்ஸ் மை கேரக்டர் [ But that's my character ]..... பிஸ்னஸ் வேர்ல்டுலயும் அப்படித் தான் இருக்கனும்.... ஆனால் இப்போ எல்லாம் நீயும் நம்ம ரூமிற்கு வருவதே இல்லை... ஐ அண்டர்ஸ்டாண்ட்... நம்ம குழந்தையைப் பார்த்துக்கறதுலேயே உன் நேரம் போயிடுது... பட் அட் தி ஸேம் டைம் ஐ ஃபீல் வெரி லோன்லி திவி [ But at the same time I feel very lonely Dhivi ]... என்னமோ ரொம்பத் தனியா இருக்கிற மாதிரி இருக்கு... நான் உன்னை இந்த ரூமிற்குக் கூப்பிடுவது நிச்சயமா வேற எந்த எண்ணத்திலேயும் இல்லை... எனக்கு உன் கூடவே இருக்கனும்... அது தான், அது மட்டும் தான்.. ஐ மிஸ் யூ ஸோ மச் டி [I miss you so much di]… " என்றான் அத்தனை தவிப்புகளையும் தன் வார்த்தைகளில் தேக்கி வைத்து....

எவன் தன்னுடனான திருமணத்தை ஆழமாக வெறுத்தானோ..... எவன் தன் நிழல் கூடத் தன் மேல் விழக்கூடாது என்று கூறினானோ... எவன் தன்னை விட்டுத் தூரம் போகத் துடித்தானோ... எவன் தன்னை வேலைகாரியாகக் கூட வைத்துக் கொள்ளத் தகுதியற்றவள் என்று கடிந்தானோ.... அவனே தான் இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை என்பதை எவ்வளவு அழகாக, ஆழமாக எடுத்துக் கூறிவிட்டான் என்று நினைத்தவளுக்குத் தன்னவனது தவிப்பு, அவனுக்குத் தன் மேல் உள்ள அடங்காத காதலை மனதில் சாரலாய் வீசி உடலையும் உள்ளத்தையும் சிலிர்க்க வைத்தது...

அவனின் கலக்கம், தவிப்பு, ஏக்கம் என்று அத்தனை உணர்வுகளையும் தன் உணர்வாக உணர்ந்துக் கொண்டவள் அவன் முகத்தைத் தன் இரு கைகளாலும் தாங்கி...

"நான் உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன்... இன்னக்கு நைட்ல இருந்து நான் நம்ம ரூமில் தான் இருப்பேன்... யார் என்ன சொன்னாலும் நான் கேட்கப் போறதில்லை... எனக்கு நீங்களும் நம் குழந்தையும் தான் முக்கியம்" என்றவள் அப்பொழுது தான் உணர்ந்தாள் தான் இன்னும் அவன் பாதங்களின் மீது நிற்பதை...

"அய்யய்யோ! எவ்வளவு நேரமா இப்படியே நிக்கிறேன்... சே... உங்க காலு வலிச்சிருக்கும்... " என்றவள் கீழ் இறங்க...

"யாரு? நீ? நீ நிக்கிறது எனக்கு வலிக்குது? ம்ம்ம்... " என்று புன்னகைத்தவன்.

"ஆமாம்... அதென்ன? சட்டுன்னு அப்படி இழுத்து பிடிச்சு வச்சுக் கிஸ் பண்ணிட்ட.... செம்ம கிஸ்டி.... ஆனால் கோபப்பட்டா தான் இதெல்லாம் கிடைக்கும் போல.... ம்ம்ம்...." என்றவனின் குறும்பு சிரிப்பை வெட்கம் தாளாமல் கண் கொண்டு பார்க்க முடியாமல் சட்டென்று அவனை விட்டு விலகி தங்களின் அறையை விட்டு செல்ல எத்தனித்தவளுக்கு அப்பொழுது தான் ஞாபகத்தில் வந்தது தன் கணவன் தன்னை அழைக்கவும் தான் தங்களின் அறைக்குத் தான் வந்தது என்று... அவனைத் திரும்பிப் பார்த்தவள்...

"இன்னும் நீங்க எதுக்குக் கூப்பிட்டீங்கன்னு சொல்லலையே..."

"பரவாயில்லையே... அது கூட ஞாபகம் இருக்கு போல... நான் கூட உனக்கு ஹஸ்பண்டுன்னு ஒருத்தன் இங்க இருக்கிறது மறந்திருச்சோன்னு நினைச்சேன்" என்றவன்,

"நீ என்ன புடவை கட்டியிருக்கன்னு பார்த்து அதற்கு மேட்சா ஷெர்ட் போடலாம்னு பார்க்க தான் கூப்பிட்டேன்... ஆனால் உன்னைப் பார்த்ததும் என்னால கண்ட்ரோல் பண்ண முடியலை... அதான் ஒரு சின்னக் கிஸ் பண்ணலாம்னா அதுக்குள்ள அம்மணிக்கு அவ்வளவு கோபம் வந்துடுச்சு..." என்றான் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டே...

அவனின் அழகான, ஆண்மைக் கலந்த சிரிப்பை ரசித்துக் கொண்டே தங்களின் பீரோவைத் திறந்தவள் அடர் பச்சை நிறத்தில் இருந்த பட்டு சட்டையை எடுத்தவள்...

"இது நானும் மஹா அண்ணியும் அன்னைக்குக் கடைக்குப் போனப்ப உங்களுக்கு எடுத்தது... உங்கக்கிட்ட சொல்ல மறந்துட்டேன்... என்னுடைய புடவை கிட்டத்தட்ட பிங் கலர்... உங்களுடைய ஷெர்ட் பச்சையா இருந்தால், தாமரைப் பூவும் இலையோட சேர்ந்து இருக்கிற மாதிரி சூப்பரா இருக்கும்" என்று குழந்தைத்தனமான சிரிப்புடன் கூறியவள் அவனிடம் சட்டையை எடுத்துக் கொடுக்க,

"அப்போ! நான் என்ன இலையா?" என்றான்....

"ஐயோ! நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை" என்று கீழுதடு கடித்துக் கெஞ்ச...

அவளின் உதட்டின் மடிப்பில் கன்னத்தில் இருக்கும் குழி ஆழமாகத் தெரிய....

அவளை நெருங்கியவன் கன்னத்துக் குழியை வருடியவன்

"இந்தக் குழியப் பார்த்தாலே திரும்பி கிஸ் பண்ணனும் போல இருக்கே" எனவும்..

முகம் வெட்கத்தில் அந்தி வானமாய்ச் சிவக்க, களுக்கென்று சிரித்துக் கொண்டே அவனை விட்டு விலகி வெளியில் ஓடினாள்...

அர்ஜூனின் ஸ்டையிலிற்குப் பச்சை நிறத்தில் சட்டையெல்லாம் ஒத்து வராத ஒன்று... ஆனால் தன் மனைவி தானாகக் கடைக்குச் சென்று எடுத்துக் கொடுத்திருக்கிறாள்...

அதுவும் இன்று தான் அதனை அணிவதற்கு அவளின் வெகுளித்தனமான விளக்கத்தில் மனம் மயங்கியவன் தன்னவளிற்காக அதனை அணிந்தவன், அதனோடு பட்டு வேஷ்டியும் அணிந்து கீழே வர, அங்குக் குழந்தையை விஷேஷத்திற்குத் தயார் செய்து கொண்டிருந்தவள் கணவனின் படி இறங்கும் சத்தத்தில் திரும்பி பார்க்க, கணவனின் கம்பீர அழகில் வழக்கம் போல் காதல் கொண்ட அவளின் மலர் மனம் உருகி கரைந்ததில் மீண்டும் மீண்டும் அவனின் பேரழகில் மதிமயங்கினாள்...

கையில் குழந்தையை வைத்துக் கொண்டு வைத்த கண் எடுக்காமல் தன்னையே பார்க்கும் மனைவியைப் பார்த்தவன் அவள் அருகில் வந்து...

"ஒரு குழந்தையைப் பெத்து எடுத்த பிறகும் என்னைய சைட் அடிக்கறத நீ விடலைடி..." என்று கிண்டல் செய்ய,

தன் சுய நினைவிற்க்கு வந்தவள் "இந்த ட்ரெஸ் உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்குங்க" என்றாள் முகமெல்லாம் பூரிப்புடனும், உள்ளம் முழுவதும் "இவன் என் கணவன்" என்ற கர்வத்துடனும்...

புரோகிதர் குறித்துக் கொடுத்திருந்த நேரத்தில் குழந்தையைத் தொட்டிலில் போட்டவர்கள் சொந்தங்கள் சுற்றிலும் நிற்க, குழந்தையின் தந்தை வழி அத்தை என்பதால் மஹா குனிந்து குழந்தையின் காதில் "அபிமன்யூ கிருஷ்ணா... அபிமன்யூ கிருஷ்ணா... அபிமன்யூ கிருஷ்ணா..." என்று மூன்று முறைக் கூற,

அர்ஜூனின் புதல்வன் அபிமன்யூ.... ஆளுமையும், கம்பீரமும், அலாதியான புத்திக் கூர்மையும், சாணக்கியத்தனமும், அஞ்சா நெஞ்சமும் கொண்ட தன் தந்தை அர்ஜூனையே குருவாகக் கொண்டு, தான் எடுத்து வைக்கப் போகும் ஒவ்வொரு அடியிலும், தான் இறங்கப் போகும் அத்தனை களத்திலும் அதிரடியான, ஆர்ப்பாட்டமான வெற்றிவாகை சூடப்போகும் அபிமன்யூ மீண்டும் இந்தப் பிரபஞ்சத்தில் அவதரித்திருந்தவன், கன்னக் குழிகள் ஆழமாக விழ, அழகாக முறுவலிக்க, தனது தந்தை தனக்குத் தேர்ந்தெடுத்திருந்த பெயரை தானும் ஏற்றுக் கொள்வது போல் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் அழகாய் புன்னகைத்தான்....

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் குழந்தையின் பெயர் அறிவிக்கப்பட, மற்ற சடங்குகளும் நிறை வேற்றப்பட, கூடியிருந்த சொந்தபந்தங்கள் அனைவரின் ஆசிர்வாதத்துடன் தொட்டிலில் கிடத்தப்பட்டிருந்த அபிமன்யூவைத் தனது கரங்களில் ஏந்திய அர்ஜூன், மனமெல்லாம் பூரிப்புடன், உடல் சிலிர்க்க குழந்தையின் முன்னுச்சியில் முத்தம் பதித்தவன், குழந்தையின் காதில் ஏதோ கிசுகிசுக்க, தன் கணவனையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த திவ்யாவிற்கு, தன் குழந்தைக்குக் குருவான அர்ஜூனின் முதல் பாடம் துவங்கியதாகவே தோன்றியது....

அர்ஜூன் கூறியிருந்தபடியே குழந்தையின் புண்ணியதானம் முடிந்ததும் தங்களின் வீட்டிலேயே எளிமையாக வினோத்திற்கும் மஹாவிற்கும் நிச்சயதார்த்தை செய்வது என்று முடிவெடுத்திருந்தது போல், நிச்சய சடங்கையும் துவங்க பெரியவர்கள் அனைவரும் ஒன்று கூட, நிச்சயதார்த்ததிற்குத் தயாராகத் தன் அறைக்குச் சென்றிருந்த மஹாவை திவ்யா அழைத்து வர....

அடர்ந்த அரக்கு நிறத்தில் தங்க சரிகையால் புடவை முழுவதும் கொடி போல் வடிவமைக்கப்பட்டு நெய்திருந்த பட்டு புடவையும், அதற்கேற்றார் போல் அழகிய ஆபரணங்களும் அணிந்து பேரழகியாகப் படி இறங்கி வந்தவள் வினோத்தின் அருகில் நிற்க, ஆனால் அவள் மறந்தும் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள் இல்லை...

அவளின் பாராமுகத்தில் இருந்தே அவளின் கோபம் புரிய, மனதிற்குள் சிரித்துக் கொண்ட வினோத் கண்களின் வழியாகவே அவளை ஊடுருவி உள்ளிழுத்துக் கொண்டவனிற்கு இந்தப் பூமியில் உள்ள அனைத்து சந்தோஷங்களும் தன் பாதத்தின் கீழ் வந்து சேர்ந்தது போல் இருந்தது.

தன்னவளின் எழிலில், அவளின் சந்தன மேனி அரக்கு நிறப் பட்டுபுடவையில் பளிங்காகப் பளபளக்க, வெண்மதி போன்ற முகத்துடனும், செக்கச்சிவந்திருந்த நிறத்துடனும், ஏற்கனவே சிவந்திருந்த இதழ்களில் இன்று லேசாக உதட்டுச் சாயம் பூசியிருந்ததில் மேலும் சிவந்திருந்த செவ்வரளி இதழ்களுடனும், வசீகரித்தவளைப் பார்த்திருந்தவனின் இதயம் "இத்தனை பேரழகி என் மனைவியாகப் போகிறவளா? இவள் எனக்கு மட்டுமே சொந்தமா?" என்று காதலில் தடுமாறச் சிந்திக்கும் சக்தியை அறவே இழந்தவன் போல் சுற்றி இருக்கும் அனைவரையும் மறந்தவன் பார்வையாலே அவளைக் கபளீகரம் செய்தான்....

தலை குனிந்து நின்றிருந்தாலும் தன்னவனின் பார்வை அம்புகளின் வீரியத்தில், அவனின் விழிகள் தன் மீது தான் நிலைத்திருக்கிறது என்பதை உணர்ந்தவள் போல் மெல்ல தலை நிமிர, வெள்ளையில் கரு நீலக் கோடு போட்ட சட்டையும், அடர்ந்த நீல நிறப் பேண்டும் அணிந்து உயரமாகவும், கம்பீரமாகவும், நல்ல களையான முகத்துடனும், அழகான புன்னகையுடனும் வசீகரித்துக் கொண்டு இருந்தவனைப் பார்த்தவள் கண்ணிமைக்க மறந்தாள்....

நலுங்கு செய்து, நிச்சயதார்த்த பத்திரிக்கையைப் படித்தவர்கள் வினோத்திடம் மோதிரத்தை கொடுக்க, மனமெல்லாம் பூரிப்புமாக, தனது காதலின் வெற்றியை சுமந்து தத்தளித்த இதயத்தின் சிலிர்ப்புமாக, தன்னவளின் மலர் போன்ற பட்டுக் கரத்தை மென்மையாகப் பற்றியவன் மோதிரம் அணிந்ததும், பிடித்திருந்த கரத்தில் இறுக்கத்தைக் கூட்ட, கூடியிருந்தவர்களின் சிரிப்பு அவளின் சிவந்த முகத்தை மேலும் செம்மையாக்க, அவனது விரல்களில் தான் மோதிரத்தை அணிவித்த அந்த நொடி திவ்யாவின் அருகில் ஓடிச் சென்று நின்றுக் கொண்டாள்...

பாலாவின் தங்கை பாக்கியத்தைத் தவிரக் கூடியிருந்த அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி குடியிருக்க, விருந்தினர்களை விருந்து உண்ண அழைக்கவும் ஒரு வழியாக வினோத்திற்குத் தன்னவளுடனான தான் எதிர்பார்த்திருந்த தனிமை கிடைத்தது...

தன்னை ஒருவரும் கவனிக்கவில்லை என்று உறுதி படுத்திக் கொண்டவன் தனியாக நின்று ஏதோ அலை பேசியில் நோண்டிக் கொண்டிருந்தவளின் பின் புறம் வந்தவன் கிசுகிசுப்பான குரலில்...

"என்ன திவ்யாக்கிட்ட போய் நின்னுக்கிட்டா நான் விட்டுவிடுவேன்னு நினைச்சியா?" எனவும்,

அவனின் குரல் தனக்கு வெகு அருகில், காதில் மீசை ரோமங்கள் உரச கிசுகிசுப்பாகக் கேட்டதில் சிலிர்த்து, பின்னர் அரண்டதில்,

'ஐயோ! அண்ணா பார்த்துடப் போறாங்க" என்று நழுவ பார்க்க,

அவள் கையைப் பற்றியவன் தன் அருகில் இழுத்து,

"செம்ம அழகா இருக்கடி.... இதுக்காகவே சீக்கிரம் ஒரு நல்ல வேலையப் பார்த்துச் செட்டில் ஆகிட்டு, அத்தான் முன்னாடி வந்து உங்க தங்கையை எனக்கு இப்பவே கட்டி வைங்கன்னு கேட்கனும்னு தோனுது" என்றான்...

அவனின் பேச்சில் கிளர்ந்தெழுந்த காதலில் திளைத்தவள் சுற்றம் அறிந்து மெல்லிய குரலில்....

"முதல்ல அதைச் செய்யுங்க" என்று சிரித்தவள் அவனைத் தள்ளிவிட்டு செல்ல முயற்சிக்கவும், அவளின் வெற்றிடையில் பதிந்திருந்த கரத்தால் அவளை மேலும் தன்னை நோக்கி வெகு அருகில் இழுத்தவன், அவளின் கழுத்தைப் பற்றி சட்டென்று இழுத்து, மென் கன்னத்தில் முரட்டுத்தனமாக, அழுத்தமாக முத்தம் பதித்தவன்...

"இது நம்ம எங்கேஜ்மெண்ட் கிஃப்ட் உனக்கு" என்று சொல்ல, அவனின் மார்பில் கரம் வைத்துத் தள்ளியவளின் முகமும் அவன் இறுக்கப் பற்றியிருந்த வெற்றிடையும் செக்கச் சிவந்தது...

அவளின் வெட்கத்தையும், தன்னவன் முத்தமிடும் பொழுது யார் கண்ணிலாவது தாங்கள் பட்டுவிட்டால் என்று சுற்றி அச்சத்தில் அலைப் பாய்ந்த அவள் கண்களின் அழகையும் கண்ட வினோத்தின் காதல் கொண்ட மனம் தன்னவளை, முழு உரிமையுடன் முழுமையாகத் தன்னவளாக எடுத்துக் கொள்ளப் போகும் அந்த அழகிய பொன்னாளிற்காகக் காத்திருக்கத் துவங்கியது....

விருந்திற்குப் பிறகு வீட்டில் சொந்தபந்தங்கள் ஒருவர் பின் ஒருவராகக் கலைந்து செல்ல, குடும்பத்தினர் மட்டும் அமர்ந்து கலகலப்பாகப் பேசிக் கொண்டிருக்க அர்ஜூன், திவ்யா, வினோத், அருண் மற்றும் மஹாவை அழைத்த ஸ்ரீ, குழந்தை அபிமன்யுவுடன் அனைவரையும் ஒன்றாக அமரச் சொல்லி திருஷ்டி கழிக்க,

"எனக்கு எதுக்கு மாம் திருஷ்டிக் கழிக்கிறீங்க? இன்னைக்குச் சீஃப் கெஸ்ட் லிஸ்ட்டிலேயே நான் இல்லையே" என்று அருண் சிரிக்க,

"ஆஹா... வந்திருந்த என் ஃப்ரெண்ட்ஸ் கண்ணெல்லாம் உங்கள் மேலதாண்ணா இருந்தது.... அதனால் உங்களுக்குத் தான் முதல்ல திருஷ்டி கழிக்கனும்" என்று மஹா கிண்டல் செய்ய மகிழ்ச்சியும் பூரிப்பும் நிறைந்திருந்த அந்த இல்லமே சிரிப்பில் அலை மோதியது...

அர்ஜூனின் அருகில் அமர்ந்திருந்த வினோத் அர்ஜூனை நோக்கித் திரும்பியவன்...

"ரொம்பத் தேங்ஸ் அத்தான்" என்று கூற...

"ஆமாண்ணா... இவ்வளவு சீக்கிரம் நீங்க எங்கேஜ்மெண்ட் வைப்பீங்கன்னு நாங்க எதிர்பார்க்கலை" என்று மஹாவும் புன்னகைக்க...

வழக்கம் போல் தனது கூரிய பார்வையை அவர்கள் இருவர் மேலும் செலுத்தியவன்....

"நீங்க இரண்டு பேரும் நான் சொன்ன கண்டிஷனை கிட்டத்தட்ட செவன் மன்த்ஸ் கடைப் பிடிச்சிருக்கீங்க... அதாவது, ஒருத்தருக்கொருத்தர் பார்க்காமலும் பேசிக்காமலும் இருந்திருக்கீங்க... அது உங்க மேல் எனக்கு நம்பிக்கையைக் கொண்டு வந்தது... அது மட்டுமல்ல.... " என்று ஏதோ சொல்ல வாயெடுத்தவன் அதனைச் சொல்லாமல் சில நொடிகள் தாமதித்தவன் சொல்ல வந்ததை விட்டு...

"அதுக்காகத் தான் வினோத்திற்கு நீ தான் மனைவின்னு உறுதி படுத்தினேன்... ஆனால் நிச்சயம் ஆகிடுச்சுன்னு நீங்க இரண்டு பேரும் என்னோட இன்னொரு கண்டிஷனை மீறக் கூடாது... ஸ்டில் மை அதர் கண்டிஷன் இஸ் தேர் [ Still my other condition is there]... நீங்க பேசிக்கலாம், பட் வினோத் செட்டில் ஆனதுக்கு அப்புறம் தான் கல்யாணம்... அது வரை நீங்க உங்க லிமிட்ட தாண்டாம இருக்கனும்... ஐ ஹோப் யூ போத் அண்டர்ஸ்டாண்ட வாட் ஐ மீன் [ I hope you understand what i mean ]" என்றான்...

"கண்டிப்பா அத்தான்" என்று வினோத் கூற, "நிச்சயமா அண்ணா" என்று மஹா கூற இளம் முறுவலித்த அர்ஜூன் எழுந்தவன் தன் அறைக்குச் செல்ல,

"அப்பாடி!!! அண்ணாவும் மஹா அண்ணியும் பேசிக்கிறதுக்காகவாவது இவர் சரின்னாரே" என்று இருந்தது திவ்யாவிற்கு....

அன்று இரவே கலா தன் குடும்பத்தாருடன் கடலூருக்கு கிளம்ப, தன் கணவனிடம் சொன்னது போல் குழந்தையைத் தூக்கிக் கொண்டு தங்களின் அறைக்குச் செல்ல, பால்கனியில் நின்று அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவன் குழந்தையின் சிணுங்கலில் அழைப்பைத் துண்டித்துவிட்டு உள்ளே வரவும்,

குழந்தைப் பிறந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு தங்களின் அறைக்குத் திரும்பியிருந்த தன் மனையாளைக் கண்ட அர்ஜூனின் மனம் மலர்ந்தது போல் அவன் முகத்தில் புன்னகையும் மலர்ந்தது...

அவளிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டவன் கட்டிலில் சாய்வாக அமர, அவன் மார்பில் சாய்ந்து அமர்ந்தவள் சில நிமிடங்கள் பேசாமல் இருந்து பின் மெல்ல...

"ஏங்க உங்கள ஒன்னு கேட்கட்டுமா?" என்றாள்...

குழந்தைப் பிறந்த தினத்திற்கு (கடத்தப் பட்ட நாளிற்கு முன்) முன் இரவு இதே போன்ற கேள்வியை அவள் கேட்டதை நினைத்து "போச்சுடா?" என்று அர்ஜூன் சொல்லி சிரிக்க...

"ம்ப்ச்... கேட்கட்டுமா? வேண்டாமா? சொல்லுங்க" என்று அவள் சலித்துக் கொள்ள...

"எது கேட்கறதுன்னாலும் கேளுடி... " என்ற கணவனின் முகம் நோக்கி அண்ணாந்துப் பார்த்தவள்...

"அன்னைக்கே கேட்கனும்னு நினைச்சேன்... எப்படிங்க திடீர்னு அண்ணாவுக்கும் மஹா அண்ணிக்கும் நிச்சயம் பண்ணலாம்னு சம்மதிச்சீங்க? நீங்க அவங்கக்கிட்ட அண்ணாவும் அண்ணியும் ஒருத்தொருக்கொருத்தர் பார்க்காம, பேசிக்காம இருந்ததுனால தான் இந்த நிச்சயதார்த்ததுக்கே சம்மதிச்சீங்கன்னு சொன்னீங்க... ஆனால் இடையில நீங்க ஏதோ சொல்ல வந்து அப்புறம் நிறுத்திட்டீங்க... என்னங்க சொல்ல வந்தீங்க?" என்று கேட்கும் தன் மனையாளை இறுக்கி அணைத்து...

"பரவாயில்லையே... ஒரு வழியா நான் என்ன நினைக்கிறேன்னு புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்ட..." என்று வாய் விட்டுச் சிரித்தான் அவளின் அன்புக் கணவன்...

"ம்ப்ச்... சொல்ல்ல்ல்லுங்க... ஏன் சம்மதிச்சீங்க?"

"திவி.... ஒவ்வொரு மனுஷனோட லைஃப்பிலேயும் எதாவது ஒரு விஷயம், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில நடந்தது அவனைப் பாதிக்கும்.... அவனோட வாழ்க்கையையே அது புரட்டிப் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை... அதே மாதிரி என்னோட லைப்பில் நம்ம மேரேஜ்.... கொஞ்சம் கூட எதிர்பார்க்காம, வாழ்க்கையில் அதற்கு முன் பார்த்தே இல்லாத ஒரு பொண்ணுக் கழுத்தில தாலிக் கட்டுன்னு மாம் சொன்னதும் அவங்க மேல உள்ள மரியாதைன்னால மட்டும் தான், அவங்களை அந்த இடத்தில அதுவும் அவங்களோட வெரி க்ளோஸ் [Very close] ப்ரெண்டுக்கு முன்னாடி அவமானப்படுத்திடக் கூடாதுங்கற ஒரே காரணத்திற்காக மட்டும் தான் உன் கழுத்தில நான் தாலியைக் கட்டினேன்... ஆனால் அதே சமயம் நான் ஒரு பக்கா பிஸ்னஸ்மேன்.... எடுக்கிற எல்லாக் காரியத்தையும் பிஸ்னஸ் மைண்டோடத்தான் டீல் பண்ணுவேன்... மண்டபத்தில மாம்க்காக [mom] உன் கழுத்தில் தாலியைக் கட்டிட்டு, அதற்கு அப்புறம் வெளிய வந்ததும் உன்னை டிவோர்ஸ் பண்ணிடம்னு தான் நினைச்சேன்" என்று சொல்லும் போது தன் மனையாளின் கண்களில் தெரிந்த கலக்கத்தையும், முகத்தில் தெரிந்த சுணக்கத்தையும் கண்டவன்...

"திவி... நான் அப்ப என்ன மனநிலையில் இருந்தேன்னு தான் சொல்றேன்... ஐ ஜஸ்ட் வாண்ட் டு பி ஹானஸ்ட் வித் யூ [I just want to be honest with you] உண்மையச் சொல்றேன்... அவ்வளவு தான்... பட், என்ன தான் நம்ம கல்யாணம் நம்ம இரண்டு பேரோட லைஃப்பையும் டோட்டலா சேஞ்ச் பண்ணியிருந்தாலும் என் மனசை மாத்தினது, என்னையவே மாத்திக்க வச்சது நீ நம்ம வீட்ட விட்டு போகும் போது எழுதிவச்சுட்டுப் போன லெட்டர் தான்... ஏன்னா நான் அதுக்கு முன்னயே உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்... ஆனால் என்னோட லவ்வை ப்ரப்போஸ் பண்ண எனக்குத் தெரியலை... பட் அதுக்குள்ள என்னென்னவோ நடந்து நீயும் வெளியப் போய்ட்ட... நான் உண்மையில கோபத்தில தான் வேலைக்காரி அப்படி இப்படின்னு திட்டினேன்... பட் ப்ராமிஸா, எப்ப நான் உன்னை மனசார லவ் பண்ண ஆரம்பிச்சேனோ அதுக்கு அப்புறம் அப்படி ஒரு எண்ணம் எனக்குக் கொஞ்சம் கூடக் கிடையாது... உன் லெட்டர் படிச்சப்பத் தான் நான் உன்னைய அன்னைக்குச் சொன்ன வார்த்தைகளோட அர்த்தம், அதனால் உனக்கு ஏற்பட்டிருக்கும் வலி எனக்குப் புரிஞ்சுது... உன் லெட்டர படிக்கப் படிக்க என் மனசு துடிச்சது எனக்கு மட்டும் தாண்டித் தெரியும்... அது தான் என்னோட லைஃப்பிலே என்னைய மாத்தின ஃப்ர்ஸ்ட் இன்சிடண்ட் [ First incident ].... தென் உன் டெலிவரி...." என்றவன் அன்றைய நிமிடங்களை, அதன் கொடூரத்தை இன்றும் உணர்ந்தானோ என்னவோ, ஒரு கையால் தனது மனைவியை இறுக்கி அணைத்தவன் மறு கையால் குழந்தையைத் தன் நெஞ்சில் புதைத்துக் கொண்டான்...

சில நொடிகளில் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவன் தன் மனதில் இருந்த அனைத்தையும் தன் மனம் கவர்ந்தவளிடம் மீண்டும் கொட்டத் துவங்கினான்....

"உன் டெலிவரி என்னைய ரொம்பப் பாதிச்சுடுச்சுடி... அப்ப குழந்தையை வெளியில எடுத்தவுடனே யார்கிட்ட குழந்தையைக் கொடுக்கறதுன்னு நினைச்சுட்டு திரும்பறப்ப வினோத் தன்னோட கையை நீட்டவும், அவர் கைல மஹா அவளோட துப்பட்டாவ போட்டதும், அந்தச் செக்கண்ட்ல அவங்க இரண்டு பேரும் நின்னிட்டு இருந்த தோற்றம் என் மனச கரைச்சுடுச்சு... அதுக்கப்புறம் அடிக்கடி உன் டெலிவரி பத்தி நான் நினைக்கிறப்ப எல்லாம் அவங்க நின்ன விதம் எனக்கு ஞாபகம் வரும்... ஸோ, என்னோட குழந்தையை எனக்குப் பிறகு கையில் ஏந்தின இவங்க இரண்டு பேருக்கும் ஏதாவது செய்யனும்னு நினைச்சேன்... அதான் அவங்க சந்தோஷப்படுற மாதிரி அவங்க என்கேஜ்மெண்ட ஃபிக்ஸ் பண்ணினேன்... இத ஏன் நான் கீழ அவங்கக்கிட்ட சொல்லலைன்னு நீ நினைக்கலாம்... பட் என் மனசில இருக்கிறத தெரிஞ்சுக்கிற உரிமை உனக்கு மட்டும் தான் இருக்கு திவி... " என்ற கணவனைக் கண்டவள் உடல் சிலிர்க்க, மயிற்கால்கள் கூச்செறிய எட்டி கன்னத்தில் வெகு அழுத்தமாக முத்தம் பதிக்க...

குழந்தை அபிமன்யூவை நோக்கியவன்....

"ஆஹா... இன்னைக்கு உங்க அம்மா செம மூட்ல இருக்காடா... " என்று சிரித்தவனின் இதயத்தில் பெருத்த அமைதி நிலவ, மனமெல்லாம் உவகையால் பூரித்து இருக்க, காதலும், காலமும் ஒன்று சேர்ந்தால் எத்தகைய கடினமானவனையும் அது இளக வைக்கும் என்பதை உணர்ந்தவன் போல் தன் மனையாளின் தலையில் தன் தலை சாய்த்துக் கொண்டான் அந்த காதல் கணவன்...

"திவி..."

"ம்ம்…"

"குழந்தை தூங்கிட்டான்... தொட்டில்ல போடட்டுமா..."

"ம்ம்…"

"ஒன் மன்த் தான் ஆகுது... ஓகேவா?"

கணவனின் கேள்வியில் சட்டென்று நிமிர்ந்துப் பார்த்தவளைக் குறும்பு நகையுடன் கண்டிருந்தவன் கண் சிமிட்டி, உதடுகள் குவித்து முத்தமிடுவதுப் போல் சைகை செய்ய,,,

"நீ அடங்கமாட்டடா அர்ஜூனா...." என்று சொன்னவளிற்கு, சொன்னவுடன் தான் புரிந்தது... தான் தனது கணவனை முதல் முறை பெயர் சொல்லி அழைத்ததும், அது மட்டுமல்லாமல் ஏதோ ஒரு வேகத்தில் அவனை "டா" என்றதும்....

கீழுதடு கடித்து மன்னிப்பு இறைஞ்சும் முக பாவனையோடு...

"ஐயோ! சாரிங்க... தெரியாம வந்துடுச்சு" என்று கெஞ்சும் குரலில் கூற,

"இது கூட க்யூட்டா தான் இருக்கு [ Cute ]... பட் அது பரவாயில்லை... ஆனால் நான் காலையிலேயே என்ன சொன்னேன்? இப்படி உதட கடிக்காதன்னு... இப்ப சேதாரத்திற்கு நான் பொறுப்பல்ல..." என்று விஷமத்துடன் கூறிச் சிரித்த கணவனைக் கண்டவள் நாணத்துடன் உள்ளம் சிலிர்த்ததில், அவனின் மார்பில் ஆழ முகம் புதைத்துக் கொண்டாள் அர்ஜூனின் மலரினும் மெல்லிய அவன் மனையாள் ...

உன்னைக் கண்ட நாள் முதல்
என் தூக்கம் போனது
தூங்கினாலும் உன் முகம்
என்னென்று சொல்வது

விழுந்தாய் என் விழியில்
கலந்தாய் என் உயிரில்
நொடியில்

எனது தோளில் தலையைச் சாய்த்து
நெருங்கி நீ வாழ வேண்டும்
பிரிந்து நீயும் நடக்கும் போது
என் இதயம் காயம் படும்

விழிகள் பார்த்து விரல்கள் கோர்த்து
மடியில் நான் தூங்க வேண்டும்
உனது அன்பில் கரையும்போது
உதட்டில் பூ பூத்திடும்

உலகமே..மறக்கிறேன்
சிறகில்லை ..பறக்கிறேன்
மழை இல்லை ..நனைகிறேன்
உன்னில் கரைகிறேன்

சிரித்துப் பேசும் உனது வார்த்தை
தினமும் நான் கேட்கவேண்டும்
என் உலகம் நீ ஆகிடும்

இதயம் தன்னில் அறைகள் நான்கில்
எனக்கு நீ மட்டும் வேண்டும்
தரையின் மேலே நிழலை போலே
இணைந்து நாம் வாழனும்

உதடுகள் சிரிக்கிறேன்
உலகினை ரசிக்கிறேன்
உனக்கென்ன இருக்கிறேன்
நெஞ்சில் சுமக்கிறேன்

உன்னைக் கண்ட நாள் முதல்
என் தூக்கம் போனது
தூங்கினாலும் உன் முகம்
என்னென்று சொல்வது

விழுந்தாய் என் விழியில்
கலந்தாய் என் உயிரில்
நொடியில்

*************மீண்டும் சந்திப்போம் குருக்ஷேத்திரத்தில் *******************
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top