JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம் -6

saaral

Well-known member
அத்தியாயம் -6

சத்யாவின் கன்ஸ்டருக்ஷன் கம்பெனியில் இருந்து ஒவ்வொரு ப்ரொஜெக்ட்டாக அந்த நிறுவனத்தை விட்டுச்சென்றது . காரணமாக தரம் குறைவு அல்லது திருப்தியின்மை என்ற பதிலே வந்தது .

சொல்லி வைத்தார் போல் அனைத்து ப்ரொஜெக்ட்டும் ஜெர்மனியில் வேர் கொண்ட ஒரு இந்தியரின் , இந்திய நிறுவனத்துக்கே சென்றது . அந்த நபர் ஜெர்மனில் இருந்துக் கொண்டே இங்கு ஒரு சிறு நிறுவனத்துடன் கை கோர்த்து மிகப் பெரும் வளர்ச்சியை பதிவு செய்து வருகிறார் .

சத்யா தனது அறையில் அமர்ந்து எவருடனோ காரமாக பேசிக்கொண்டிருந்தார் .

"வாட் இந்த ப்ரொஜெக்ட்டும் போய்டுச்சுன்னு சொல்றதுக்கா உங்களுக்கு சம்பளம் கொடுத்து வேலைக்கு வச்சிருக்கேன் "

"....."

அந்தப்பக்கம் என்ன சொல்லப்பட்டதோ "அந்த சுபத்ரா குரூப்ஸ் சேர்மான் கிட்ட பேச சொன்னேன் இல்லையா ?"

"........."

"யூஸ்லெஸ் , பூல்ஸ் " மேலும் சில கடினமான வார்த்தைகளுடன் கத்திவிட்டு இணைப்பை துண்டித்தார் .

சுபத்ரா குரூப்ஸ் தான் இவரின் போட்டி நிறுவனமாக வளர்ந்து வரும் அந்த சிறு நிறுவனம் . அவர்களுக்கு அந்த ஜெர்மனில் இருக்கும் நபரை எவ்வாறு தெரியும் ? , யார் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ? ....எவ்ளோ முயன்றும் இதற்கான பதில்களை சத்யாவால் தெரிந்துகொள்ள முடியவில்லை .

ஆனந்தும் கடந்த இருமாதங்களாக அறைக்குள்ளே பயந்து முடங்கினான் . பேயை கண்டவன் போல் அரண்டு போய் இருந்தான் .

ஆரம்பத்தில் நிழல் உருவமாக வந்த அந்த பெண் ஒரு நாள் இரவில் கண்களெல்லாம் சிவப்பேற , உடம்பிலும் ,தலையிலும் காயங்களுடன் அவன் அறையின் சாளரத்தின் வழியாக இவனை முறைத்து பார்ப்பதை கண்டு மிரண்டுப் போனான் .

ஆனந்த் எங்கு சென்றாலும் அந்த உருவமும் , குரலும் அவனைத் தொடர்ந்து வந்து இம்சை செய்தது . கடந்த இருமாதங்களில் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானான் . அதன் முடிவு எதைக் கண்டாலும் பயம் , எதைக் கேட்டாலும் பயம் .

அன்றைய இரவு நடந்த சோதனைக்கு பின் இவர்கள் விடுதிகளை திறக்க இயலவில்லை அனைத்தும் அந்த பினாமியின் பெயரில் தான் நடதப்பட்டது . அரசாங்கம் அனைத்தையும் இழுத்து மூடி சீல் வைத்தது .

மறுபுறம் கட்டுமானதொழிலிலும் பெரும் சறுக்கல் . சத்யா பெரும் பண நெருக்கடியில் இருந்தார் . பெரும்பாலான சொத்துக்கள் கடனுக்கு ஈடாக வங்கிகளால் பறிமுதல் செய்யப்பட்டது .

மகனின் நிலைமை , தொழில் சறுக்கல் , பண நெருக்கடி ...அனைத்து வகையிலும் சத்யா முடங்கினார் . இப்பொழுது அவரிடம் மிஞ்சி இருப்பது நம்பிக்கை மட்டுமே அதுவும் தானே ஆட்டம்காண செய்யப்போகிறோம் என்று அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான் .

தலையில் கைவைத்து அமர்ந்து இருந்த சத்யா "சடார் " என்று மகனின் அறையில் கேட்ட சத்தத்தில் வேகமாக எழுந்துச் சென்று பார்த்தார் .

அங்குச் சென்று பார்த்தால் ஆனந்த் கட்டிலின் மூலையில் கால்களை கட்டிக்கொண்டு நடுங்கிப் போய் அமர்ந்து இருந்தான் . எதிரில் அவனின் புகைப்படம் சிதறி விழுந்திருந்தது .

"ஆனந்த் என்ன ஆச்சு ? எதுக்கு போட்டோவை ஒடச்ச "

"ப்பா அந்த பொண்ணு அந்த பொண்ணு " நடுங்கினான் . ஒரு நொடி அந்த தந்தையின் கண்ணில் அவனின் கம்பீரமான தோற்றம் வந்துச் சென்றது .

"ப்ச் ஆனந்த் சொன்னாப் புரிஞ்சுக்கோ நாம விசாரிச்சோமே , அந்த அப்பாவும் பொண்ணும் இறந்துட்டாங்க , அந்த பொண்ணோட அம்மாவும் மனநிலை சரி இல்லாம போய்ட்டாங்க யாரும் இல்லைனு ...திரும்பவும் ஏன் ஆனந்த் ?" சலிப்பாக கேட்டார் .

"அப்பா நிஜமா அந்தப் பொண்ணு இங்கயே தான் சுத்துறா அப்பா ...நான் பார்த்தேன் " கண்களில் சிறு பிள்ளை போல் நீர் கோர்க்க சொன்னான் . இரு மாதங்களில் உருக்குலைந்து கண்களின் கீழ் கருவலயத்துடன் , ஒல்லியாக , மளிக்கப்படாத தாடியும் , முடியுமாக என்னவோப் போல் இருந்தான் அவன் .

"ஆனந்த் இங்க பார் உதவி செய்யலைனாலும் உபத்திரவம் செய்யாதே ....ச்ச அம்மா இல்லாம வளர்ந்த பிள்ளைன்னு உனக்கு செல்லம் கொடுத்து வளர்த்த என்னைச் சொல்லனும் ....ஒரு வேலை உருப்படியா பார்த்தியா .." கடுப்புடன் பேசினார் .

"ப்பா " பாவமாக அழைத்தான் மகன் .

"பேசாத அந்த ஹோட்டல் பொன் முட்டையிடற வாத்து அதை ஒரே நாளில் அறுத்து பார்க்க ஆசைப்பட்ட அந்த பத்திரிகைக் காரன் வந்தான் , அதுக்கப்புறம் சில கொலைகள் பண்ணி சமாளிச்சோம் ....அப்பறம் நல்லா போச்சுன்னு பார்த்தா போலீஸ் வர வரைக்கும் விட்ருக்க , ஹோட்டல் போச்சு , அரசியல் வாழ்கை போச்சு , பணம் பலம் பதவி , தொழில் எல்லாம் போச்சு ....ஒன்னையும் உருப்படியா பார்க்கத் தெர்ல மேலும் இம்சயை வேற அதிகப்படுத்தற ....யு யூஸ்லேஸ் ...**** , *** " மேலும் சில வசைமாறிகள் பொழிந்துவிட்டு நகர்ந்தார் .

சத்யாவிற்கு கையறு நிலை ,எங்குச் சென்று ஆதங்கத்தை கொட்டுவது என்றுத் தெரியாமல் மகனிடம் கொட்டிச்சென்றார் .

ஆனந்தும் இதுவரை ஒரு முறை கூட கடிந்து பேசாத தந்தையின் சொற்களில் உறைந்தான் .

சற்று நேரத்தில் பெருமூச்சுடன் தனது அலைபேசியை எடுத்து யாருக்கோ வீடியோ கால் செய்தான் .

.............................

"ஏன் சஹானா ரெண்டு மாசமா ஆபர் லெட்டர் கொடுத்தும் சேராம இருக்க? " பிரவீன் அலைபேசியின் வாயிலாக கேட்டுக்கொண்டிருந்தான் .

"இல்லை சார் நான் ... கொஞ்சம் பர்சனல் ஒர்க் ...அதான் " தட்டுத் தடுமாறி பதில் கூறினாள் .

"சஹானா இது உன்னோட திறமைக்கு கிடைச்ச வேலை யாருக்கும் அப்படியே தூக்கி வேலை கொடுக்கிற ஆள் நான் இல்லை ...நீ ****** அங்கேயும் இன்டெர்வியூக்கு போய்ட்டு வந்தன்னு மிருது சொன்னா ...ஏன் இங்க ஜோயின் பண்ண இஷ்டம் இல்லையா "

"இல்லை சார் அம்மா டிரீட்மென்ட் விஷயமா கொஞ்சம் போக வேண்டிய சூழ்நிலை ...அண்ட் அந்த கான்செர்ன் கேம்பஸ் இன்டெர்வியூக்கு வந்தவங்க , நெக்ஸ்ட் லெவல் செலெக்ஷன்க்கு வர சொன்னதால போனேன் ..." சஹானாவும் பொறுமையாக பதில் கூறினாள் .

"ஓஹ் ...அம்மா எப்படி இருக்காங்க ?" ஸ்ருதி இறங்கிக் கேட்டான் பிரவீன் . இதற்குமேல் கெஞ்ச அவன் மனம் இடம் கொடுக்கவில்லை . ஒருத்தரை வேலைக்கு வா என்று சொல்லி கேட்பது இதுவே முதல் முறை , தன்னவள் என்ற ஒரே காரணத்திற்காக பொறுமையாக போனான் .

"ஹான் ஷி இஸ் பைன் சார் தேங்க்யு ..." என்று கூறி அழைப்பை துண்டித்தவள் ஆழ்ந்த சிந்தனைக்குள் போனாள் .

அங்கு பிரவீனும் அவளின் தாமரை இலை தண்ணீர் நிலை கண்டு வருந்தினான் . எவ்வாறு அவளை அணுகுவது என்று குழம்பிப்போனான் .

........................

"............" காதில் அலைப்பேசியை வைத்திருந்த சதீஷ் அதில் வந்த செய்தியை கேட்டு உறைந்துப் போனான் .

"வாட் நிஜமாவா , கிராஸ் செக் பன்னீங்களா " அதிர்ச்சி அவனின் குரலில் .

"....."

"ஓகே நான் கிளம்பி இந்தியா வரேன் " அழைப்பை துண்டித்து உறைந்து போய் நின்றிருந்தான் .

அவன் மனதில் நேற்றைய இரவு ஆனந்த் அழைத்துப் பேசியதே ஓடியது .

அந்த இரவு நேரத்தில் ஆனந்தின் அழைப்பை ஏற்காமல் அமர்ந்திருந்தவன் ,சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தான் .

மீண்டும் அழைப்பு வந்தவுடன் அதை ஏற்றான் . வீடியோ காலில் ஆனந்தை பார்த்தவன் பதறினான் . என்ன இருந்தாலும் நண்பனாகிற்றே ...

"டேய் ஆனந்த் என்னடா என்னமோ மாதிரி இருக்க என்னாச்சு உனக்கு ?"

"சதீஷ் நாம பெரிய தப்பு பண்ணிட்டோமா ?" குழந்தை போல் கேட்டான் .

"ப்ச் ஆனந்த் என்னாச்சுன்னு சொல்லு "

"சதீஷ் அந்த பொண்ணு அம்மு திரும்ப வந்துட்டா ...நம்மளை சும்மா விடமாட்டேனு சொன்னா " பயத்துடன் நடுங்கிக்கொண்டே சொன்னான் ஆனந்த் .

"....." கனத்த மௌனம் சதீஷிடம் .

"என்ன சதீஷ் எதுவுமே சொல்ல மாட்டிங்கிற "

"சொல்ல தெரிலை ஆனந்த் எனக்கும் அம்மு இங்க நம்ம பக்கத்துல இருக்க மாதிரியே இருக்கு "

"நீ பார்த்தியா சதீஷ் ....?" பரபரப்பாக கேட்டான் ஆனந்த் .

"தெரிலை ஆனந்த் பட் சம்திங் பிஷி ...யாரோ நம்மளை ட்ராப் பன்றாங்க ....நல்லா தெரிஞ்சவங்க ஏதோ விளையாடறாங்க "

"இல்லை சதீஷ் அது அவளே தான் ஒரு நாள் வந்து அவ்ளோ கோபமா கழுத்தை பிடிச்சாத் தெரியுமா ..."நடுக்கத்துடன் கூறினான் ஆனந்த் .

"ப்ச் ரொம்ப யோசிக்காத ஆனந்த் ...நான் இன்னும் மூணு மாசத்துல இந்தியா வந்துருவேன் நாம என்னனு பார்க்கலாம் " யோசனையுடன் கூறினான் .

"எனக்குப் பயமா இருக்கே "

"என்ன ஆனந்த் இது சிறு பிள்ளை மாதிரி ....இதெல்லாம் பொய் ...யாரோ விளையாடறாங்க இதுக்கு பயப்படுவியா ? ...."

"சதீஷ் நாளைக்கு என்ன நடக்கும்னு கூட சொல்லத் தெரிலை எனக்கு ....அப்பாவும் என்னை அசிங்கமா பேசிட்டார் ..." மனதொடிந்து பேசினான் சதீஷ் .

"ப்ச் நான் சொன்னப்ப கேட்காம , காசை பத்தி மட்டுமே பேசின ஆனந்த் ...அந்த பொண்ணையும் விட்ரலாம் சொன்னேன் நீ கேட்கலை ...ப்ச் பாரு இப்ப யாரோ நம்ல ட்ராப் பன்றாங்க " சதீஷ் வருத்தத்துடன் சொன்னான் .

"தப்பு தான் சதீஷ் ...தப்பு தான் ஐ ரிக்ரேட் நொவ் " என்று அழைப்பை துண்டித்தான் ஆனந்த் .

சதீஷ் இணைப்பு துண்டிக்கப்பட்டவுடன் தனது கண்ணின் முன் தெரியும் அம்முவின் உருவத்திடம் வாதாடினான் "அம்மு , உன் உயிர் போகும்னு நான் நினைக்கலை ....அதுக்கு நானும் ஒரு காரணம் எத்தனை பெரிய பாவம் " .


சதீஷின் முன் தெரியும் உருவம் 'அம்மு ' அதில் அவனுக்கு சந்தேகம் இல்லை . ஆனால் யாரோ தங்களை பற்றி தெரிந்து விளையாடுகிறார்கள் என்று மட்டும் உணர்ந்தான் . கடந்த சில நாட்களில் அம்முவின் உருவம் அடிக்கடி அவன் கண்ணிற்கு புலப்பட்டது .

அது ஆரிய ரணங்களைக் கீறியது .

..................

"நிஜமா நீ அங்க வேலைக்கு போகப்போறியா சஹானா ?"

"ஆமாம் ப்பா ...போறேன் பாத்துக்கலாம் ....இந்த பேச்சை விடுங்க ...அம்மா எப்படி இருகாங்க ?"அழுத்தமாக கூறினாள் .

"நல்லா இருக்கா ...அப்பறம் சஹானா நீ சொன்ன மாதிரி எல்லாம் ஏற்பாடா இருக்கு அடுத்து என்ன பண்றது?"

"ஓகே அப்பா நான் அடுத்து என்னனு சொல்றேன் ...அண்ட் விஷயம் கேள்வி பட்டிருப்பீங்கனு நினைக்கிறேன் "

"ஹ்ம்ம் தெரியும் ...இனி தான் நீ கவனமா இருக்கனும் "

"ஹ்ம்ம் சரி ப்பா ...ப்பா மிருது வரா நான் அப்பறம் பேசறேன் " அழைப்பை துண்டித்து அந்த இருக்கையில் நேராக அமர்ந்து மிருதுவை பார்த்து கை அசைத்தாள் .

அந்த காபி ஷாபின் உள் நுழைந்த மிருது சஹானாவை கண்டுகொண்டு அவளின் அருகில் வேகமாக வந்து முதுகில் பட்டென்று ஓங்கி ஒரு அடி வைத்தாள் .

"அட பக்கி எதுக்கு இப்படி அடிக்கிற " சஹானா புன்னகையுடன் கேட்டாள் .

"பேசாத நீ கொன்றுவேன் உன்னை ...உனக்காக என் ரெண்டு அண்ணாகிட்டயும் பேசி வேலைக்கு சொன்னா என்னை அசிங்க படுத்துற ." கோபமாக பேசினாள் மிருதுளா .

"நானா உன்னை பேசச் சொன்னேன் ...எனக்கு இந்த சிவாரிசு வேண்டாம் ....நீங்கல்லாம் பெரிய இடம் " புருவத்தை தூக்கி அதே புன்னகை மாறாமல் சொன்னாள் சஹானா .

"அடிச்சேன்னு வை ...பிரவீன் அண்ணாவும் ஸ்ட்ரிக்ட் ஆபீசர் ...சரியா தகுதி இல்லைனா எனக்கே வேலை இல்லைனு அனுப்பிச்சிடுவார் ....எண்ணலாம் பேசுற நீ ?"

"பின்ன நீ ஒருதடவையாச்சும் என் வீட்டுக்கு வந்திருப்பியா நாம பிரின்சாகி நாலு வருஷம் ஓடிடுச்சு "

"ப்ச் என் அம்மா பத்தி தெரியுமே சஹா " சலிப்பாக கூறினாள் மிருதுளா .

"ஹே சில் சும்மா லுலலைக்கு சொன்னேன் ....என் பிரிண்ட் மானத்தை காப்பாத்த நான் பீஎஸ்எம் இன்போடெக்ல ஜோயின் பண்ணலாம்னு யோசிக்கிறேன் " சஹானா விரிந்த புன்னகையுடன் கூறினாள் .

"ஹேய் நிஜமாவா சூப்பர்! " சந்தோஷத்தில் குதித்தாள் மிருது .

"மிருது ஒன்னு கேட்டா உண்மையான பதில் சொல்லுவியா " முகத்தை மிகவும் சாதாரணமாக வைத்து கேட்டாள் சஹானா .

"கேளு சஹானா "

"ஏன் மிருது எனக்காக இவ்ளோ யோசிக்கிற , உன் அண்ணா சொன்னாங்க ரொம்ப நாளைக்கு முன்னாடியே எனக்காக பேசினியாமே ?" மிருதிவின் கண்களைப் பார்த்து கேட்டாள் .

"ஹ்ம்ம் சஹா எனக்கு போர்டிங் ஸ்கூல்ல ஒரு பிரின்ட் இருந்தா அவ கிட்டத்தட்ட உன்ன மாதிரியே இருப்பா ...அவள் செயல் , பழக்கம் எல்லாம் அப்படியே உன்னை மாதிரி ஆனால் இப்ப அவ உயிரோட இல்லை "

"ஏன் என்ன ஆச்சு ?"

"அது ஒரு ஆக்சிடென்ட் அப்படித்தான் சொன்னாங்க ...என் அம்மா பணக்காரங்களோட தான் பழக விடுவாங்க பட் உண்மையான நட்பை உங்க ரெண்டு பேர்கிட்ட தான் பாத்தேன் ...அவள் தான் இல்லை ...நீயாவது பக்கத்துல இருக்கணும்னு ஆசை பட்டுத்தான் உன் வேலைக்கு அண்ணா கிட்ட பேசினேன் "

"ஹ்ம்ம் புரியுது ..." என்றாள் சாஹானா .

"ஆமா ஏதோ என் அண்ணா சொன்னதா சொன்னியே யாரு சதீஷ் அண்ணாவா ? அவனை எப்ப பார்த்த " பிரவீன் மிகவும் கடுமையானவன் அவன் யாரோடும் தேவை இல்லாமல் பேசமாட்டான் ,ஆகையால் சதீஷை சஹானா பார்த்திருப்பாளோ என்றெண்ணி மிருது கேட்டாள் .

"உங்க சதீஷ் அண்ணாவை நான் பார்த்ததே இல்லை ...நான் தான் அப்ப அம்மா டிரீட்மெண்ட்ன்னு ஊருக்கு போய்ட்டேனே ...உங்க பிரவீன் அண்ணாவை அடிக்கடி பார்ப்பேன் அவர் தான் சொன்னார் " அலுங்காமல் குலுங்காமல் பத்தவைத்துவிட்டாள் சஹானா .

"வாட் , பிரவீன் அண்ணாவா ?" மிருது கண்ணை விரித்தாள் .

"ஒய் அதுக்கு ஏன் இப்படி கண்ணை விரிக்கிற ? உன் பிரவீன் அண்ணா தான் "

"அண்ணா யார் கூடையும் பேச மாட்டான் ...பொண்ணுங்க அப்படினா ஐயாவுக்கு அல்ர்ஜி " ஆச்சர்யத்தை வெளிக்காட்டினாள் மிருதுளா .

"அப்ப நீ யாரு ?" விஷமப் புன்னகையுடன் கேட்டாள் சஹானா .

"என்ன ?"

"உன் அண்ணாக்கு பொண்ணுங்கனா அலர்ஜி சொன்ன அப்ப நீ பொண்ணு இல்லையா அதான் உன்கிட்ட பேசறாங்களா ....ச்ச எனக்கு எப்பயோ டவுட் வந்துச்சு மிருது நீ பசங்களை திரும்பி கூட பார்க்க மாட்டியா ...இப்ப முடிவு பண்ணிட்டேன் " குறும்பாக சிரித்தாள் சஹானா .

"அடிங்கு " என்று கையோங்கிய மிருதுவை தடுத்த சஹானா "ஹே பிசாசே அடிக்கிறதுக்கான உன் கோட்டா இன்னைக்கு ஓவர் ஓடிப்போய்டு " என்றாள் .

"ச்ச டைவேர்ட் பண்ணாத ....எப்படி அண்ணா உன்கிட்ட பேசினான் ...எப்ப பார்த்தீங்க , எப்ப பேசினீங்க ?" கேள்விகளை அடுக்கினாள் மிருதுளா .

"பார்த்தது ஒரு ரெண்டு தடவை ..ஒன்ஸ் வண்டி பாதில நின்னப்ப ட்ரோப் பண்ணாங்க , அண்ட் செகண்ட் டைம் ஒரு காலைல எங்க வீட்டுக்குக்கிட்ட இருந்த பார்க் போனேன் அந்த வழிய தாண்டுறப்ப உங்க அண்ணா என்னை பார்த்து பேசி வீட்டுக்கெல்லாம் வந்து காபி குடிச்சாங்க ...போன் எப்பயாச்சும் பண்ணுவாங்க " அசராமல் சொன்னாள் .

"வாட் ?"

"ஷாக்க கொர, ஷாக்க கொர " சஹானாவின் மனமோ 'பத்தவச்சுட்டயே பரட்டை ' என்று கூப்பாடு போட்டது .

மிருதுளா யோசனையாக சஹானாவை பார்த்தாள் . "ரொம்ப யோசிக்காத காபி குடிச்சுட்டேனா வா கிளம்பலாம் " அதற்கு மேல் கேள்வி கேக்க விடாமல் கிளம்பினாள் சஹானா .

..........................

சதீஷ் திடீர் என்று வந்தவுடன் சாரதாவும் , விஸ்வமும் குழம்பிப் போய் நின்றனர் . மேல் இருந்து கீழ் தளத்திற்கு வந்த பிரவீன் யோசனையாக சதீஷை பார்த்தான் .

"அப்பா சத்யா அங்கிள் வீட்டுக்கு போகணும் " சதீஷ் பிரவீனை பார்த்துக்கொண்டே கூறினான் .

பிரவீன் கடுப்பானான் "எதுக்கு திரும்ப ஆரம்பிக்கற , பட்டதெல்லாம் போதாதா ....அங்கெல்லாம் இங்க இருந்து யாரும் போகக் கூடாது " கடுமையாகச் சொன்னான் .

"ஆரம்பிக்கிறதுக்கு போகலை , முடிஞ்சதை பார்க்க போகனும் " சதீஷ் பிரவீனை நேராக பார்த்துச் சொன்னான் .

"வாட் டூ யு மீன் ?" பிரவீன் புருவத்தின் இடையே விழுந்த முடிச்சுடன் கேட்டான் .

"ஐ மீன் ஆனந்த் இஸ் நோ மோர் , அவன் இறந்துட்டான் "

மூவரும் அதிர்ந்தனர் "என்ன , எப்படி ?" என்ற கேள்விகளுடன் .

"அவன் பிசினஸ் எல்லாம் போச்சு , மெண்டல் பிரஷர் ...பில்ஸ் ஏதோ கணக்கில்லாம எடுத்துட்டான் ....அவன் ஹெல்த்துக்கு டோஸேஜ் அதிகமாகி நேத்து ..." வார்த்தைகளை விழுங்கினான் சதீஷ் .

சதீஷ் எதையோ தன்னிடமிருந்து மறைக்கிறான் என்று தோன்றியது பிரவீனிற்கு . யோசனையுடன் விஸ்வத்தின் பக்கம் திரும்பியவன் "அப்பா போனோமா வந்தோமான்னு இருக்கனும் ....அந்த ஆள் கூட எல்லாம் அதிகமா பேச்சு தேவை இல்லை ....திரும்ப எதையாச்சும் இழுத்துட்டு வந்தீங்க நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது " வேக எட்டுக்களுடன் வீட்டை விட்டு வெளியேறினான் .

......................

"மே ஐ கம் இன் சார் "தனது அறைக் கதவை தட்டியவர்க்கு "யா கம் இன் " கம்பீரமாகப் பதில் தந்தான் பிரவீன் .

தனக்கு முன் நிற்கும் பெண்ணை யோசனையுடன் பார்த்தான் பிரவீன் 'என்ன ' என்று அவன் பார்வை கேட்ட கேள்விக்கு அந்த பெண் ஒரு கவரை அவன் முன் நீட்டினாள் .

"சார் இந்த பொண்ணு செலக்ட் ஆகி டூ மந்த்ஸ் ஆச்சு ...நீங்க தான் இந்த ஆபரை ஹோல்டு பண்ண சொன்னீங்க "

"யா ...எனக்கு தெரியும் அவங்களை உள்ள அனுப்புங்க " தோரணையாக கூறி அந்தப் பெண்ணை அனுப்பிவைத்த பிரவீன் அந்த பேப்பரை மீண்டும் படித்தான் .

முகத்தில் புன்னகை 'என்கிட்ட வந்துட்டயா சஹானா , நிஜமாவா என்னால நம்பவே முடியலை ' மனதில் பேசினான் .

சற்று நேரத்தில் உள்ளே நுழைந்த சஹானாவை "வெல்கம் சஹானா " விரிந்த புன்னகையுடன் வரவேற்றான் .

"சாரி சார் நீங்க கொடுத்த வாய்ப்பை உடனே அக்ஸப்ட் பண்ண முடியலை , பர்சனல் ரீசன்ஸ் " சஹானா அவனின் கண்களை நேராக பார்த்துப் பேசினாள் .

"ஹ்ம்ம் அம்மா ஹெல்த் வேற டாக்டரை கன்சல்ட் பண்ண பெங்களூர் போயிருந்த ஆம் ஐ ரைட் ?" இதமான முறுவல் அவனிடம் .

"உங்களுக்கு எப்படி தெரியும் ?" யோசனையாக கேட்டாள் சஹானா .

"உன்னை பார்க்க வீட்டுக்கு வந்தேன் , அங்க பக்கத்து வீட்டு ஆண்ட்டி சொன்னாங்க " என்றான் .

"ஒஹ் " என்று முடித்துக்கொண்டாள் சஹானா .

"அண்ட் சஹானா உன்னை வெயிட் பண்ணி இங்க வேலைக்கு எடுக்கிறதுக்கான காரணம் நீ ப்ராஜெக்ட் பண்ற டயம்ல டெவெலப் பண்ணின ப்ராஜெக்ட் ஒரு கிளைண்ட்க்கு ரொம்ப திருப்தியா இருந்துச்சு சோ யு டீசெர்வ் இட் ...." இப்பொழுது ஒரு நிறுவனத்தின் முதலாளியாக பேசினான் அவன் .

"தேங்க்யூ சார் " என்று பதில் தந்தாள் சஹானா .
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top