பாவாடை உன்பார்வை பாவில் ஈர்ப்பு எனும் நூலிழைத்து இதய தறியில் நெய்த நேசம் பா ஆடை (பாவாடை) நீ விரித்து விட்டதில் சிதறிய பூக்கள் உன் பாவாடையை தாண்டவில்லை விரித்து விட்ட பார்வையில் சிதறிய என் இதயமும் உனை தாண்டாது