JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Malarinum Melliyaval - Episodes 29, 30, 31 & 32

JB

Administrator
Staff member
அத்தியாயம் - 29

கீழே விருந்தினர் அறையில் இருந்து சிவந்த முகத்துடன் மஹா வெளியே வருவதையும், சிரித்துக் கொண்டே வினோத் அவளின் பின் வருவதையும் கண்ட அர்ஜூனிற்கு எதுவோ சரியில்லை என்று உணர்த்த, படிகளில் இறங்கிய படியே ஒன்றும் பேசாமல் தங்களைக் கூர்ந்துப் பார்த்தபடியே வரும் அண்ணனை பார்த்த மஹாவிற்கு நெஞ்சுக் கூட்டில் குளிரெடுத்தது....

வேகமாக அறையை விட்டு ஓடிய மஹா சட்டென்று நின்றதும், அவளின் பார்வை போன இடத்தைப் பார்த்த வினோத்திற்குச் சப்த நாடியும் ஒடுங்கிப் போனது தங்களையே ஆழ்ந்தப் பார்வைப் பார்த்துக் கொண்டு படிகளில் இறங்கிக் கொண்டிருந்த அர்ஜூனைக் கண்டதும்...

தன்னையும் அறியாமல் மஹாவைத் திரும்பிப் பார்த்தவன் அவள் விழிகளில் தெரிந்த அச்சத்தையும் கலக்கத்தையும் கண்டவனுக்குத் தன்னவளின் உள்ளத்தில் ஏற்பட்டிருந்த திகிலிற்கு நாம் தானே காரணம் என்று குற்ற உணர்வு வர, திரும்பி அர்ஜூனின் பார்வையை எதிர் கொண்டவன் மஹாவிற்கு அருகில் சென்று நிற்க, அவர்களைப் பார்த்தவாறே ஒன்றும் பேசாமல் தன் மனைவியைத் தேடித் தோட்டத்திற்குச் சென்றான் அர்ஜூன் ..

தோட்டத்தில் அமர்ந்திருந்த கலா திவ்யாவின் கரத்தைப் பற்றித் தன் மடி மீது வைத்துக் கொண்டவர் ஸ்ரீயிடம்...

ஸ்ரீ, எனக்குத் திவ்யாவ ஒரு வாரம் எங்க வீட்டுல வச்சுக்கனும்னு ஆசையாக இருக்குடி... நீ மாப்பிள்ளையிடம் பேசிட்டு சொல்றியா? நானே வந்து அவளை அழைச்சுட்டு போறேன்" எனவும்...

தன் தோழியின் ஏக்கம் புரிந்தாலும் அர்ஜூன் திவ்யாவை எங்கும் வெளியில் விடாது தன் பாதுகாப்பிற்குள்ளேயே வைத்திருப்பதை அறிந்திருந்ததால்...

"கலா, அர்ஜூன் இப்போ திவ்யாவை வெளியே கோவிலுக்குக் கூட விட ரொம்ப யோசிக்கிறான்... அவ எங்க வெளியே போகனும்னாலும் அவன் தான் கூட்டிட்டுப் போறான்... இப்போ அவனிடம் திவ்யாவை ஒரு வாரத்திற்கு அனுப்ப சொன்னா நிச்சயம் அனுப்ப மாட்டான்... அதனால் கொஞ்சம் நாளாகட்டும்... அதற்கப்புறம் பேசுறேனே?" என்றார்.

தங்கள் மகளைத் தங்களுடன் சில நாட்களாவது வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைபட்டவருக்குத் தங்கள் மருமகனின் மனசும் புரிந்து தான் இருந்தது.... நேற்றில் இருந்து அவரும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாரே அவன் தன் மனைவியைத் தலையில் வைத்து தாங்குவதை....

சரி என்றவர் மேலும் சில விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க, வீட்டில் இருந்து மஹா வினோத்தைப் பற்றிய யோசனையுடன் தோட்டத்திற்கு வந்த அர்ஜூன் திவ்யாவைப் பார்த்தவன்...

"திவி.... நான் கிளம்பறேன்... வெளியில் எங்கேயும் போகனும்னா சொல்லு, நான் வந்து கூட்டிட்டு போறேன்" என்றான்...

கலாவை திரும்பி பார்த்த ஸ்ரீ சொன்னேன் அல்லவா என்பது போல் பார்க்க, அவரும் புரிந்தது என்பது போல் புன்னகைத்தார்...

"சரிங்க" என்ற திவ்யா அர்ஜூனைப் பின் தொடர...

"நீ பேசிட்டு இரு, நான் கிளம்பறேன்" என்றான்...

"இல்லை பரவாயில்லை" என்றவள் அவனுடன் சேர்ந்து நடக்க, உள்ளே வந்த அர்ஜூன் இன்னும் வினோத்தும் மஹாவும் ஒன்றாக நிற்பதை பார்க்கவும் ஒன்றும் பேசாமல் மௌனமாக வீட்டின் வாயிலை நோக்கி நடக்க, அர்ஜூனின் அருகில் வந்த மஹா தயங்கிவாறே..

"அண்ணா, உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்" என்றாள்..

அதற்கும் பதில் பேசாது புருவங்களைச் சுருக்கி பார்த்தவனின் அனல் கக்கும் பார்வையில் அவனின் உள்ளத்தில் இருந்த கட்டுக் கடங்காத கோபம் தெரிய, எரி நெருப்பில் விழுந்த விட்டில் பூச்சி போல் மனதிற்குள் துடிதுடித்துப் போனவளுக்குப் புரிந்து போனது இனி அடுத்து நடக்கவிருப்பது....

"கடவுளே! இது எங்க போய் முடியும்னு தெரியலையே..." என்று உச்சி முதல் உள்ளங்கால் வரை வெளிப்படையாக நடுங்க, உள்ளங்கைகள் இரண்டும் வியர்த்து விறுவிறுக்க, கைகளைப் பிசைந்தவாறே அர்ஜூனின் கனல் பார்வையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தலைக் குனிந்தவளைக் கண்டவன் அதற்கு மேலும் அங்கு நிற்கப் பிடிக்காதவன் போல் விருட்டென்று வெளியே செல்ல,

கணவனுடன் வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே தன் அண்ணனும் மஹாவும் நெருங்கி நிற்பது கண்களில் பட்டவுடன் "ஏன் இவங்க ரெண்டு பேரும் இவ்வளவு நெருங்கி நிற்கிறாங்க?" என்று யோசித்துக் கொண்டிருந்த திவ்யாவிற்கு இப்பொழுது மஹாவின் பேச்சும், அதற்குத் தன் கணவனின் கோபப் பார்வையும் எதுவோ சரியில்லை என்பதை உணர்த்தியது....

ஆனால் தன் கணவனிடம் அதனைப் பற்றிக் கேட்கும் தைரியம் மட்டும் அவளுக்கு வரவில்லை…

வெளியே வந்தவள் யோசனையுடன் அர்ஜூனைப் பின் தொடர்ந்து நடக்க, அவள் அமைதியாக வருவதை உணர்ந்தவன் சட்டென்று நிற்கவும் அவனுக்கு மிக அருகில் வந்து கொண்டிருந்தவள் அவன் நின்றதை உணராமல் அவன் மீது மோதி தடுமாறி கீழே விழப் போனாள்...

அவள் கீழே விழாதவாறு அவளின் இடையைத் தாங்கி பிடித்தவன்....

"என்ன திவி இது? எந்த உலகத்தில இருக்க? இந்நேரம் கீழ விழுந்திருந்தின்னா என்ன ஆவது? என்று வெடித்தான்...

அர்ஜூனிற்கே வினோத் மஹாவின் செயல் அதிர்ச்சியாகத் தான் இருந்தது என்றால் திவ்யாவிற்குச் சொல்லவா வேண்டும்...

அவள் ஏற்கனவே தானே இந்த வீட்டிற்கு மருமகளாகவும், அர்ஜூனிற்கு மனைவியாகவும் வர தகுதி இல்லாதவளோ என்று இன்னமும் அவ்வப்பொழுது நினைத்துக் கொண்டிருக்கிறாள் (அர்ஜூனின் மனதில் அப்படி ஒரு எண்ணம் சிறிதளவும் இல்லை என்றாலும் இவள் எப்பொழுதாவது சில சமயங்களில் தனக்குள் நினைத்துக் கொள்வது உண்டு)...

அப்படி இருக்க மஹா இந்த வீட்டின் செல்லம்... தன் அண்ணனிற்கும் அவளுக்கும் உள்ளது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என்பதிலே அவளின் எண்ணங்கள் சுழன்றுக் கொண்டிருந்ததால் தான் அர்ஜூன் சட்டென்று நின்றதும் அவனைக் கவனிக்காமல் அவன் மீது மோதிக் கீழே விழப் பார்த்தது...

கணவனின் கோபப் பேச்சில் திக்கென்று இருக்க, அவனையே கண் இமைகளைக் கூடச் சிமிட்டாமல் பார்த்தவளைக் கண்டவனுக்கு அவளின் யோசனை இப்பொழுது எங்கு இருக்கிறது என்பதும் புரிய தனது சத்தத்தால் அவளின் முகத்தில் தெரிந்த அச்சத்தில் கனிவடைந்தவன் அவளின் இடையைப் பிடித்திருந்த கரத்தில் அழுத்தத்தைக் கூட்டி இன்னும் தன்னருகில் அவளை இழுத்து...

"திவி, இங்க இந்த வீட்டில் உன்னோட வேலை உன் உடம்பப் பாத்துக்கிறதும், உன் ஹஸ்பண்டைப் பார்த்துகிறதும், உன் வயித்துல இருக்கிற நம்ம குழந்தையைப் பாத்துக்கிறதும் மட்டும் தான்... யோசனை எல்லாம் என் மீதும், நம் குழந்தையின் மீதும் மட்டுமே தான் இருக்கனும்.. வேற எதைப் பத்தியும் நீ கவலைப்படுறது எனக்குப் பிடிக்காது.... புரியுதா?" என்று அவளின் கன்னத்தைத் தட்ட...

"சரி" என்பது போல் தலை அசைத்தவளைக் கண்டவனுக்கு அவள் இன்னமும் யோசனையில் இருந்த விடுபடவில்லை என்பது புரிபடவும், மேலும் அவளைத் தன்னை நோக்கி இழுத்தவன்...

"ஹே... திவி.... என்ன நான் சொல்றது புரியுதா? என்று கேட்க...

ஏதோ கனவுலகத்தில் இருந்து திரும்பி வந்தவள் போல் புன்னகைத்தவள்...

"புரியுது" என்றாள்....

சுற்றும் முற்றும் பார்த்தவன் குனிந்த தன்னவளின் பட்டுக் கன்னத்தில் மென்மையாக முத்தம் இட்டவன் போய் வருகிறேன் என்பது போல் தலை அசைத்து தன் காரில் ஏற, தன் கணவன் தன் கண்களில் இருந்து மறையும் வரை அந்த இடத்திலேயே நின்றவள் வீட்டிற்குள் நுழைந்ததும் தன் அண்ணனைத் தேட, அதற்குள் தோட்டத்தில் இருந்த அனைவரும் வீட்டிற்குள் நுழையவும் இப்பொழுது அண்ணனிடம் பேசுவது முறையல்ல என்று எண்ணியவள் அமைதியாக இருந்துவிட்டாள்....

ஆனால் அர்ஜூன் தன்னையும், மஹாவையும் சுட்டுப் பொசுக்குவது போல் பார்த்த பார்வையைக் கண்ட வினோத்திற்கு மனம் அடங்கவில்லை...

தங்கள் இருவரையும் அந்த நிலைமையில் எதிர்பாராமல் பார்த்தது நிச்சயம் அத்தானிற்குக் கோபத்தைக் கிளறியிருக்கும்... இருந்தும் அவர் ஒன்றும் சொல்லாமல் செல்வதைப் பார்த்தால் நிச்சயம் ஏதாவது பிரச்சனை வெடிக்கும் போல் தெரிகிறது... இதனால் மஹாவிற்கு மட்டும் அல்ல, திவ்யாவிற்கும் அத்தானிற்கும் இடையிலும் பிரச்சனை வர வாய்பிருக்கிறது... அதற்குள் தான் இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்தவன் தன் அன்னையிடம் சென்று...

"அம்மா, எனக்கு வெளியில ஒரு முக்கிய வேலை ஒன்னு இருக்கு..... ரயில்வே ஸ்டேஷனுக்கு நீங்க கிளம்புறதுக்கு முன் நான் வந்திடுறேன்" என்றான்.

சென்னையில் அவனுக்கு என்ன வேலை என்று யோசித்தவர் அவனிடமே கேட்க,

"என் வேலை விஷயமாம்மா... சீக்கிரம் வந்திடுறேன்" என்றவன் கிளம்பிப் செல்கையில் மஹாவைப் திரும்பி பார்த்தவன் தலையை மட்டும் ஆட்டிவிட்டு செல்ல, அவன் எங்குப் போகிறான் என்று ஏற்கனவே தெரிந்திருந்ததால்...

"இன்னைக்கு ஒரு பூகம்பம் வெடிக்கப் போவுது... அர்ஜூன் அண்ணா ஏற்கனவே எரிமலை மாதிரி கோபத்தில் இருக்காரு... இதில் இவருக்குக் கொஞ்சம் கூடப் பயம் என்பதே இல்லை... இரண்டு பேரும் சேர்ந்து என்ன பண்ணி கலங்கடிக்கப் போறாங்களோ தெரியலையே" என்று நினைத்த மஹாவிற்கு வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்து இருந்தது.

அவள் எதிர்பார்த்தது போலவே வீட்டை விட்டு வெளியே வந்த வினோத் சென்றது நேரே சென்னையின் நடுநாயகமாக அமைந்திருந்த அந்தப் பதினொரு அடுக்கு மாடிக் கட்டிடத்திற்கு...

அது எ.கே க்ரூப் ஆஃப் கம்பெனிஸின் தலைமை அலுவலகம்...

அந்த மிகப் பெரிய அடுக்கு மாடிக் கட்டிடத்தைப் பார்த்தவனுக்கு உண்மையில் மஹா அவ்வளவு உயரத்திலும் தான் தரையிலும் இருப்பது போல் தோன்ற, இருந்தும் தேவதையைப் போன்று தன் இதயத்தில் ஆழ புகுந்திருக்கும், தன் உயிரின் வேர் வரை சென்று தன் உணர்ச்சிகளில் கலந்து இருக்கும் தன்னவளை எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது என்ற பிடிவாதத்தினால் அர்ஜூனைப் பார்க்க கட்டிடத்திற்குள் நுழைந்தவன் நுழைந்த விநாடி அப்படியே பிரமித்துப் போய் நின்றான் அலுவலகத்தின் உட்புற பிரமாண்ட அமைப்பில்...

சென்னையில் இத்தனை உயரத்திற்கு, அதுவும் இவ்வளவு பெரிய கட்டிடம்..... அதிலும் கட்டிடத்தின் உட்புறம் (இண்டீரியர்) மிகவும் அழகாகவும் பிரமாண்டமாகவும் அலங்கரிக்கப் பட்டிருந்தது.

கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பணம் விளையாடி இருக்க அர்ஜூனின் வீடே அத்தனை அழகு என்றால் அவனின் அலுவலகம் அதை விடக் கொள்ளை அழகு.

சில நிமிடங்கள் பிரமிப்பில் ஆழ்ந்து சிலைப் போல் நின்றவன் தன்னைச் சுதாரித்துக் கொண்டு ரிஷப்ஷனில் தான் அர்ஜூனைப் பார்ப்பதற்காக வந்திருப்பதாகச் சொல்ல,

"டு யூ ஹேவ் என் அப்பாயிண்ட்மெண்ட் வித் அவர் எம் டி சார்? [Do you have an appointment with our M D sir?" என்றாள் ரிஷப்ஷனிஸ்ட்டில் ஒருத்தி..

"இல்லை, ஆனால் வினோத் வந்திருப்பதாகச் சொல்லுங்கள்" [Please let him know this is Vinoth] " என்று அவன் ஆங்கலத்தில் பகரவும் சரி என்றவள் யோசனையுடன் அவனின் முகத்தைப் பார்த்தவாறே கதிரை அழைத்தாள்..

ஏனெனில் வினோத்திற்கும் அர்ஜூனுடனான தன் உறவு முறையைச் சொல்லி அவனைச் சந்திப்பதில் விருப்பம் இல்லை...

அதனைப் போல் தங்கள் MD-க்கும் முன்னறிவுப்பு இல்லாமல் ஒருவரும் தன்னைச் சந்திப்பது பிடிக்காது...

ரிஷப்ஷனிஸ்ட் கதிருக்கு அழைக்க ஆனால் அவனுக்கும் வினோத் யாரென்று தெரியவில்லையாதாலால் அவனே அர்ஜுனை அழைத்து வினோத் என்பவர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார் என்று கூற, ஒரு விநாடி யோசித்த அர்ஜூன்...

"ஒகே, லெட் ஹிம் கம் [Let him come]" என்றான்...

தன்னை என்ன ஏது என்று கூடக் கேட்காமல் கதிர் அழைத்துச் செல்லவும் அவனுடன் சேர்ந்து நடந்த வினோத்திற்கு ஒரு பக்கம் அர்ஜூனின் கோபத்தை நினைத்துக் கலக்கமாகவும் மறுபக்கம் திவ்யாவை நினைத்து தயக்கமாகவும் இருந்தது....

ஆனால் அதே சமயம் அவனால் எந்தக் காரணத்திற்காகவும் மஹாவை விட்டுக் கொடுக்க முடியாது.

கதிருடன் நடந்தவன் Managing Director Arjun Krishna என்று பொறிக்கப்பட்ட அறைக்கு வெளியே நின்ற கதிர் கதவைத் தட்டவும்...

"யெஸ் கமின்" என்ற அர்ஜூனின் கம்பீரக்குரலில் தன் உடம்பில் ஒட்டியிருந்த தைரியத்தில் பாதி வெளியே ஓடிச் சென்றது என்றால் அவன் பணித்ததற்குப் பிறகு அறையில் நுழைந்தவனுக்கு அர்ஜூன் அமர்ந்திருந்த தோரணையும், அவன் தன்னை நிமிர்ந்தும் பார்க்காமல் கணினியில் முகம் புதைந்திருந்ததில் தெரிந்த அவனின் ஆணவமும் மீதி தைரியத்தை வெகு தூரத்திற்குப் பறக்கச் செய்திருந்தது...

தன்னை அடியோடு வசீகரிக்கும் தன்னவளின் எழில் முகமும், தான் வீட்டை விட்டு கிளம்பும் பொழுது தன்னைப் பார்த்திருந்த அவளின் அழகிய கண்களில் தெரிந்த சஞ்சலமும், அதே சமயம் இங்குச் சிம்ம சொப்பனம் போல் கம்பீரமாக அதிகாரத்துடன் அமர்ந்திருக்கும் அர்ஜூனின் அந்தஸ்தும் வினோத்தின் மூளையை வேலை செய்ய விடாமல் மரத்துப் போகச் செய்ய, உள்ளே நுழைந்ததில் இருந்து அசையாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் தன் மச்சினனின் தடுமாற்றத்தை அவனை நிமிர்ந்துப் பார்க்காமலே மனதில் குறித்துக் கொண்ட அர்ஜூன்...

"கம் இன் வினோத்" என்று கூற,

அவர்களைத் தனிமையில் விட்டு வெளியே சென்ற கதிருக்கு, தன் M D முன்னறிவிப்பில்லாமல் வந்த வினோத்தை சந்திப்பது அதிசயமாக இருந்தது என்றால் அதிலும் தன் அறைக்கே உடனடியாக அழைத்து வரச் சொன்னது வியப்பில் ஆழ்த்தியது.

"ஹேவ் எ ஸீட் வினோத் [Have a seat Vinoth] " என்று அர்ஜூன் கூறவும்,

அமர்ந்த வினோத் எதுவும் பேசாமல் தலை குனிந்தவாறே அமர்ந்து இருப்பதைக் கண்டு இன்னமும் கணினியில் இருந்து தன் தலையை நிமிர்த்தாமலே,

"பேசறதுக்குன்னு வந்துட்டு இப்போ பேசலைன்னா எப்படி? என்றான் தன் கம்பீர குரலில்...

அவன் அவ்வாறு சொன்னதும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவனுக்கு இன்னும் தன்னால் அர்ஜுனைக் கண்ட பிரம்மையில் இருந்து வெளி வர முடியாது போக...

இருந்தும் சில விநாடிகளில் தன்னைத் திடப்படுத்திக் கொண்டவன் தன் தொண்டையைச் செறுமிக் கொண்டு,

"உங்கள பிஸியான நேரத்தில் டிஸ்டர்ப் பண்ணிட்டேன் நினைக்கிறேன்" என்று தயங்கவும் அவனை நிமிர்ந்துப் பார்த்த அர்ஜூன்...

"இட்ஸ் ஓகே... சொல்லுங்க" என்று அவனை ஆழ்ந்துப் பார்த்தவாறே கூற மெல்ல பேச துவங்கினான் வினோத்...

"என் மேலே நிச்சயம் உங்களுக்குக் கோபம் இருக்கும் அத்தான்... உங்க கோபமும் நியாயமானது தான்... உங்க வசதியும் அந்தஸ்தும் எனக்குத் தெரியும்... அதே மாதிரி என்னோட தகுதி என்னன்னும் எனக்குத் தெரியும்...." என்றவன் சிறிது தயங்கி...

"திவ்யாவோட அண்ணனா நான் இப்போ உங்களோட பேச வரலை.... அந்த உரிமையோட நான் நிச்சயம் மஹாவ எனக்குக் கேட்க மாட்டேன்" என்றான் அழுத்தமாக....

வினோத் பேசத் துவங்கியதும் சேரில் ஊன்றியிருந்த தன் வலக் கையை முகவாயில் கொடுத்து கூர்மையான கண்களோட அவனையே அர்ஜூன் பார்த்திருக்க, அவனின் கழுகுப் பார்வையில் உள்ளுக்குள் சகலமும் நடுங்கிப் போயிருந்த வினோத்திற்குத் தான் பேச வந்ததை முழுவதுமாகப் பேசி விடுவோமா?? என்ற சந்தேகம் தான் தோன்றியது...

தன்னை சில விநாடிகள் பார்த்திருந்த வினோத் மேலே பேசுவதற்குத் தயங்குவது போல் அர்ஜூனிற்குத் தெரிய,

"ம்ம்ம், சொல்ல வந்தத முழுசா சொல்லுங்க" என்று கூறவும், தன் தயக்கத்தைச் சடுதியில் உதறிய வினோத் சடசடவென்று பேசி முடித்தான்...

"இந்த வருஷம் என்னோட காலேஜ் முடியுது அத்தான்... காலேஜ்ல நான் டிஸ்டிங்ஷன்னு உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன்... காலேஜ் கேம்பஸ் இண்டெர்வியூவில ஏற்கனவே செல்க்ட் ஆகிட்டேன்... எந்த இடத்தில் ட்ரெய்னிங், எத்தனை மாசம் என்று எல்லா டீட்டெய்ல்ஸும் கூடிய சீக்கிரம் சொல்லிடுவாங்க... ட்ரெய்னிங் முடிஞ்சதும் ஒரு மூனு வருஷமாவது வேலைப் பார்க்கனும், எங்க அம்மா அப்பாவோட கடன அடைக்கனும்... அப்புறம் தான் என்னோட மேரேஜ்ன்னு ப்ளான் பண்ணியிருந்தேன்... ஆனால் நிச்சயம் மஹா மாதிரி ஒரு பெண்ணைப் பார்ப்பேன், அவள விரும்புவேன்னு நான் கனவிலயும் நினைச்சுப் பார்த்ததில்லை... எங்க வீட்டுக் கஷ்டம் உணர்ந்து காதல் மட்டும் இல்லை, வேற எந்தத் தேவையில்லாத பழக்கமும் நான் வச்சிக்கல... படிப்பில் மட்டும் தான் என்னுடைய முழுக் கவனமும் இருக்கனும் அப்படிங்கறதல ரொம்பத் தீவிரமா இருந்தேன்.... " என்றவன் சில விநாடிகள் தயங்கி...

"ஆனால் மஹாவப் பார்த்ததும் நான் எனக்குள்ள போட்டுக்கிட்ட கட்டுப்பாடு என்னை அறியாம உடைஞ்சிடுச்சு... இதுக்கு நிச்சயம் உங்க வசதியோ, திவ்யா என்னோட தங்கைங்கிற உரிமையோ இல்ல, சத்தியமா இல்லை... எனக்கு நல்லாவே தெரியும்... நீங்க மஹாவிற்கு எந்த மாதிரி மாப்பிள்ளை பார்ப்பீங்கன்னு... அந்த மாப்பிள்ளைங்க பக்கத்தில நிக்கிற தகுதிக் கூட எனக்கில்லைன்னு தெரியும்... ஆனால் இரண்டு விஷயத்தில் நான் உங்களுக்கு உறுதி கொடுக்க முடியும்... ஒன்னு நீங்க எல்லாரும் சம்மதிச்சா மட்டும் தான் நான் அவள என்னவளா எடுத்துப்பேன்.... இரண்டாவது உங்க அளவுக்கு இல்லைன்னாலும் என்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு சந்தோஷமா நான் மஹாவை வச்சிப்பேன்" என்று அழுத்தமாகக் கூறி முடித்தான்...

அவன் பேசி முடித்தும் ஒன்றும் சொல்லாமல் மௌனமாகத் தன் விழிகளை நேருக்கு நேர் பார்த்திருந்த அர்ஜூனைக் கண்ட வினோத்திற்கு இதற்கு மேல் என்ன சொல்வதென்றெ தெரியவில்லை.

ஆனால் அவனின் அடி மனதில் எங்கே அர்ஜூன் தனக்கு மஹாவைத் தர இயலாது என்று கூறிடுவானோ என்று பயம் கவ்வியிருக்கத் தன்னிலைக்கு விளக்கம் கொடுப்பதற்காக மேலும் தொடர்ந்தவன்...

"இத வச்சு மஹாவை எனக்குக் கொடுங்கன்னு கேட்கிறது எந்த விதத்திலேயும் நியாயம் இல்லை தான்... ஆனால் நான் வாழ்க்கையில் ரொம்ப நல்லா வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு... கடினமா உழைச்சு எங்க அம்மா அப்பா மட்டும் இல்ல எனக்கு மனைவியா வரப் போறவளையும் நல்லா காப்பாத்தனும் அப்படிங்கிற வெறியில் தான் நான் நல்லா படிச்சுக்கிட்டு இருக்கேன்... என் மேல் நம்பிக்கை இருந்தா நீங்க எனக்கு மஹாவ கொடுங்க" என்றவனின் குரலில் அழுத்தமும், தன்னம்பிக்கையும் அதிகமாக இருந்ததே ஒழிய, எந்தப் பிசிறோ தடுமாற்றமோ கடுகளவும் இல்லை...

தன் எதிரில் அமர்ந்ததும் வினோத்தின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தையும், அவனின் கண்களில் தெரிந்த ஒரு வித பிரமிப்பையும் கண்டிருந்த அர்ஜூனிற்கு அவன் மஹாவைப் பற்றிப் பேசத் துவங்கியதும் அவனின் விழிகளில் தெரிந்த உறுதியும், குரலில் தெரிந்த தெளிவும் அவன் மேல் ஒரு நல்ல மதிப்பையே உருவாக்கியிருந்தது.... இவன் திவ்யாவைப் போன்று பயந்தவனில்லை என்றாலும், அவளைப் போன்ற நல்ல மனம் உள்ளவனாகவே தெரிந்தான்...

இருந்தும் இன்று காலையில் மஹாவுடன் ஒரே அறையில் இருந்து அவன் வெளி வந்ததை ஏனோ அர்ஜூனால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை...

தான் பேச வந்த அனைத்தையும் பேசி முடித்தும் பதில் எதுவும் பேசாத அர்ஜூனைப் பார்த்தவனுக்கு அதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று தோன்ற,

அவனின் மன நிலையைப் புரிந்து கொண்ட அர்ஜூன் நிமிர்ந்து உட்கார்ந்தவன் தன் முகத்திலோ வார்த்தைகளிலோ எந்த உணர்ச்சியையும் காட்டாமல் தனக்கு முன் இருந்த சதுரங்க பலகையில் காய்களை நகர்த்தியவாறே..

"நீங்க எப்போ மஹாவை லவ் பண்ண ஆரம்பிச்சீங்க?" என்றான் நிதானமாக...

போச்சுடா... உள்ளுக்குள்ள இருக்கிற அடங்காத கோபம் தறிகெட்டு வெளியே வராமல் தன்னைக் கட்டுப்படுத்த தான் அவன் சதுரங்கமே விளையாடுவான்.... அப்பொழுது அவனின் கண்காணாத, அவன் பார்வையில் பட முடியாத தொலைவான இடத்தில் இருக்கும் எதிராளியின் நிலைமையே அந்தோ பரிதாபமாக இருக்கும் பொழுது இப்பொழுது அவனுக்கு எதிரிலே நேரெதிராக அமர்ந்திருக்கும் வினோத்தின் நிலைமை?????

தான் தனது காதலிற்கு இவ்வளவு விளக்கம் கொடுத்தும் தனது முடிவைச் சொல்லாது, அவனின் கண்களுக்கு எதிரிலேயே தான் இவ்வளவு நெருக்கமாக அமர்ந்திருந்தும் தன் முகம் நோக்காமல் சதுரங்க பலகையில் காய்களை நகர்த்தியவாறே தன்னிடம் தங்களின் காதல் தோன்றிய விதத்தைப் பற்றிக் கேள்விக் கேட்கும் அர்ஜுனைப் புரிந்து கொள்ள முடியாது, அவனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தயங்கிய வினோத்திற்கு நன்றாகத் தெரிந்து போனது...

இப்பொழுது அர்ஜூனின் கேள்விக்குத் தான் கூறும் எந்தப் பதிலாலும் மஹாவுடனான தன் காதல் அவளின் வசதியையோ அந்தஸ்தையோ பார்த்து வரவில்லை என்பதை நிருபிக்க முடியாது என்று...

அதனைப் போன்று அவன் தன்னைத் தானே எதிர்த்து அமைதியாகவும், நிதானமாகவும் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருக்கும் விதத்தில், அழகில் மதி மயங்கியவனிற்குத் தெரியும் இவ்வாறு விளையாடுபவர்களின் குணாதிசியங்கள்...

அவர்கள் தங்களைத் தானே எதிர்ப்பதன் மூலம் எதிராளிகளின் பலவீனத்தை அறிந்து அவர்களை எப்படி எந்தக் கோணத்தில் இருந்து தாக்குவது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று..... மற்றும் இரு பக்கங்களின் இருந்தும் அவர்களே விளையாடுவதால் வாழ்க்கையில் அவர்களை எதிர்க்கும் எதிராளிகளே இருக்கக் கூடாது என்பதும் அவர்களின் குறிக்கோள் என்று....

தன்னைக் கேள்விக் கேட்டும் தான் இன்னும் பதில் சொல்லாவிட்டாலும் தன்னை நிமிர்ந்தும் பார்க்காமல் ஒவ்வொரு காயாக நகர்த்தும் தன் தங்கையின் கணவனைப் பார்க்கவும் உள்ளுக்குள் பதட்டமாக, இதயம் வேறு தாறுமாறாகத் துடிக்க, இருந்தும் தன் மனதில் உள்ள உண்மையை மட்டுமே கூறுவது என்று முடிவெடுத்தவன்....

"உங்க வீட்டிற்கு முதன் முதலா வந்திருந்தப்போ தான் அத்தான்" என்றவன் சட்டென்று தன்னையும் அறியாமல் குரலில் பதற்றத்தை வெளிப்படுத்தி....

"அத்தான், திவ்யாவிற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" என்றான்...

அவனுக்கு எங்கே தன்னால் தன் தங்கையின் வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்று பயம்...

அவனின் பதற்றத்தைக் கவனித்த அர்ஜூன் தன் சதுரங்க விளையாட்டை நிறுத்தி வினோத்தை நிமிர்ந்துப் பார்த்தவன்....

"வினோத், என் வைஃபை பத்தி எனக்குத் தெரியும்... நீங்க இவ்வளவு பதற வேண்டியது இல்லை" என்றவன் மேலும் தன் சேரில் சாய்ந்து அமர்ந்தவனாக...

"ஆக முதல்ல மேரேஜ் ஆன எங்களுக்குள்ள லவ் வருவதற்கு முன்னாடியே உங்களுக்கு வந்திடுச்சு??" என்றான்......

வினோத்தால் அர்ஜூனின் முகப் பாவத்தில் இருந்து "என் தங்கையை உனக்குக் கொடுப்பதா என்ற கோபத்தில் பேசுகிறாரா? அல்லது போயும் போயும் உன்னைப் போல ஒருத்தனை என் தங்கை விரும்புகிறாளே என்ற எரிச்சலில் பேசுகிறாரா? அல்லது திவ்யாவிற்காக இவ்வளவு பொறுமையைக் கடைப் பிடிக்க வேண்டியுள்ளதே என்ற சலிப்பில் பேசுகிறாரா?" என்று சுத்தமாகக் கணிக்க முடியவில்லை...

இதற்கு மேல் அர்ஜூனின் விருப்பம் என்னவோ அதுவே தான் நடக்கும் என்று மனதிற்குள் குமுறியவன் கலக்கத்துடன் தவித்து அமர்ந்திருக்க...

அவனது தவிப்பையும், தன் பதிலை ஏக்கத்துடன் எதிர்பார்த்து தன் முகத்தையே பார்த்திருப்பதையும் கண்ட அர்ஜூன் ஒரு அண்ணனாகப் பேச துவங்கினான்.....

"வினோத்.... ஒரு வேளை திவ்யாவை பத்தி நான் முழுசும் புரிஞ்சிக்கிறதுக்கு முன் உங்க காதல் பத்தி தெரிந்திருந்ததுன்னா, நான் நிச்சயம் இதுக்குப் பெரிய எதிர்ப்ப தெரிவிச்சு இருப்பேன்..... ஆனால் இப்போ திவ்யா எனக்கு எவ்வளவு முக்கியம்னு உங்களுக்குத் தெரியும்... காலையில் உங்க இரண்டு பேரையும் பார்த்தப்பவே அவ முகத்தில உள்ள பயத்த நான் பார்த்தேன்...... எங்கே உங்களிடம் நான் பிரச்சனை பண்ணிடுவேனோன்னு பயந்து கலங்கிப் போய் இருந்தாள்... நிச்சயம் அவ மனசு கஷ்டப்படுற மாதிரி நான் எதுவும் செய்ய மாட்டேன்...." என்றவன் வினோத்தை ஆழந்து பார்த்தவாறே..

"ஆனால் அதுக்காக என் தங்கையோட வாழ்க்கையும் எனக்கு ரொம்ப முக்கியம்" என்று ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தம் திருத்தமாகச் சொன்னவன், சில விநாடிகளுக்குப் பிறகு தன் சேரில் இருந்த எழுந்திருக்க,

அவன் எழவும் வினோத்தும் அவனுடன் சேர்ந்து எழுந்திருக்க, "உட்காருங்க" என்பது போல் சைகை செய்தவன்...

"வினோத்... எனக்கு நீங்க சில கியாரண்டீஸ் (உத்தரவாதங்கள்) கொடுக்கனும்" என்றான்...

அவன் கேட்ட தோரணையே ஏதோ பெரிதாகக் கேட்கப் போகிறான் என்று தெரிந்தது... ஆனால் இவர் இந்த அளவிற்குப் பொறுமையாகப் பேசியதே பெரிது என்று நினைத்த வினோத் வேறு வழியின்றிச் சரி என்று தலை அசைக்க....

"நீங்க சொன்ன மாதிரி காலேஜ் முடிஞ்சு த்ரீ இயர்ஸுக்குள்ல நல்ல வேலையில் செட்டில் ஆகிடுங்க... நான் நிச்சயம் நீங்க எங்க லெவலுக்கு இருக்கனும்னு எதிர் பார்க்கமாட்டேன்... ஆனால் அதே சமயம் எனக்குத் திருப்தி படுகிற மாதிரி இருக்கனும் உங்க வளர்ச்சி... இரெண்டாவது, அது வரைக்கும் நீங்க மஹாவ பார்க்கவோ அவளிடம் பழகவோ கூடாது" என்றான் நிதானமாக ஆனால் அழுத்தமான, கம்பீரமான குரலில்......

தன்னுடைய முதல் நிபந்தனையைச் சொன்ன பொழுது வினோத்தின் முகத்தில் தெரிந்த பெருமையையும், இரண்டாவது நிபந்தனையைச் சொன்ன பொழுது அவன் முகத்தில் தெரிந்த கலவரத்தையும் கண்ட அர்ஜூனிற்கு வினோத்தின் காதல் கொண்ட மனம் புரிந்தது...

தன் மனமுழுவதும் உறைந்திருந்த, தன் இதயத்தில் ஆழப் புதைந்திருந்த, புதிதாக அரும்பியிருந்த தன் மனைவியின் மீதான காதலைத் தான் அவளிடம் மனம் திறந்து சொல்வதற்கு முன் அவளிடம் கட்டுக்கடங்காத தன் கோபத்தைக் காட்ட, அதனால் துடிதுடித்துப் போனவள் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு போன அந்த இரு இரவுகளும் தான் எவ்வளவு மனம் தவித்துப் போனோம் என்று அர்ஜூனிற்குத் தெரியும்...

அதற்கு முன் திருமணம் ஆன நாளில் இருந்து ஒரு நாள் கூடத் தான் மனம் விட்டு அவளிடம் காதலை வெளிப்படுத்தி இருந்ததில்லை... தன் மனையாளின் மீது இருந்த ஆசையை வார்த்தைகளால் அவளுடன் பகிர்ந்து கொண்டு இருக்கவில்லை... அப்படி இருக்க அவள் பிரிந்து சென்ற இரண்டு நாட்களும் ஏனோ பல நாள் தன்னுடன் ஒன்றி வாழ்ந்தவளைப் பிரிந்தது போலத் தானே மனம் வலித்தது...

அவள் இல்லாது அதற்கு மேலும் ஒரு நாள் கூட இருக்க முடியாமல் முக்கிய வேலைகளை எல்லாம் கூட ஒதுக்கி வைத்து விட்டு அவளைக் காண, தானே அவள் ஊருக்குச் சென்றது நியாபத்திற்கு வந்தது....

அப்படி இருக்க, காலையில் இவர்கள் இருவரும் ஒரே அறையில் இருந்து வந்ததைப் பார்த்தால், அதுவும் மஹாவின் முகத்தில் தெரிந்த வெட்கமும் சிரிப்பும் சொன்னதே இவர்களின் காதலை...

ஆகையால் இவர்களிடம் ஒருவொருக்கொருவர் பார்க்கவும் கூடாது, பேசவும் கூடாது, அதுவும் மூன்று வருடங்களுக்கு என்று சொல்வது திரைப்படத்திற்கு வேண்டுமானால் பொருந்தலாம்... நிஜ வாழ்க்கையில் அது சரிப்பட்டு வராது என்பது அர்ஜூனிற்குத் தெரியும்...

ஆனால் அதே சமயம் அவனுக்கு வினோத்தை பற்றி ஒரு நம்பிக்கை வர வேண்டும்..

அவன் திவ்யாவின் அண்ணன் தான், திவ்யாவைப் போல் நல்லவன் தான்..... இருந்தும் தன் தங்கையின் வாழ்க்கையில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்கக் கூடாது என்று தான் அவன் இந்த நிபந்தனைகளைப் போட்டது.

வினோத் தன் காதலைப் பற்றிச் சொல்லும் பொழுது அர்ஜூனின் மனதில் இத்தனை எண்ணங்கள் ஓடியிருந்ததென்றால் இப்பொழுது அவனது நிபந்தனைகளைக் கேட்ட வினோத்திற்கோ...

"இவர் என் வளர்ச்சியைப் பற்றி எதிர்ப்பார்ப்பது சரியே என்றாலும், மஹாவைப் பார்க்காமல் அவளுடன் பேசாமல் மூன்று வருடங்களா?" என்று குழம்பியவனின் மனம் இருதலை கொள்ளி எறும்பாகத் தவித்தது....

அவனுக்கு மஹாவை தன் மனைவியாக ஏற்றுக் கொள்ள அர்ஜூனின் சம்மதமும் வேண்டும் அதே சமயம் தன்னவளைப் பாராமல் அவளுடன் பேசாமல் மூன்று நீண்ட வருடங்கள் எப்படி இருப்பது என்பதை அர்ஜூனிடம் கேட்கும் தைரியமும் இல்லை...

காதலை சுமந்திருந்த இதயத்தில் இருந்து, அழகிய கவிதைப் போல் தன் கருத்தில் குடிக் கொண்டிருந்தவளை, மலர் கொடி போல் தன் மீது இன்று காலை முழுவதுமாகப் படர்ந்திருந்தவளை அர்ஜூன் தன்னிடம் இருந்து வலியப் பிடுங்கியது போல் வலித்தது வினோத்திற்கு...

ஆனால் அதே சமயம் அர்ஜூனை எதிர்க்கவோ அவருடைய நிபந்தனைகளை மறுப்பதற்க்கோ தன்னிடம் என்ன சக்தி இருக்கிறது என்று உணர்ந்தவன், "சரி அத்தான்" என்றான் சன்னமான குரலில்....

"சரி வினோத், நீங்க கிளம்புங்க... நான் மாம் அண்ட டாட் கிட்ட பேசுறேன்" என்று சொன்ன அர்ஜூனைப் பார்த்து ஒரு சிறு புன்னகையையே சிந்தியவன் மனம் முழுவதும் குழப்பத்துடன் வெளியேற...

"உங்க மேல எனக்கு இருக்கிற நம்பிக்கையால தான் வினோத் நான் இந்தக் கண்டிஷன்களையே போட்டேன்... ஐ ஹோப் யூ கீப் அப் யுவர் வேர்ட்ஸ் [I hope you keep up your words]... நீங்க உங்க வார்த்தைகளைக் காப்பாத்துவதில் தான் இருக்கு நான் மஹாவை உங்களுக்குக் கொடுப்பதும் கொடுக்காமல் போவதும்" என்று என்ன தான் வினோத் தன் மனைவியின் அண்ணனாக இருந்தாலும், மஹாவின் அண்ணனாக அவள் வாழ்க்கையின் நலன்கள் கருதியே அர்ஜூன் இந்த முடிவை எடுத்திருந்தான்....

அர்ஜூனின் அறையை விட்டு வெளியில் வந்த வினோத்திற்குக் கிட்டதட்ட மூச்சே அடைத்துவிடும் போல் இருந்தது....

"அப்பா, ஒரு அரை மணி நேரம் இவர் கூட இருப்பதற்கே எனக்கு இப்படி மூச்சு முட்டுதே... எப்படித் தான் திவ்யா இவரைச் சமாளிக்கிறாளோ?" என்று எண்ணியவனுக்கு எங்குத் தெரியப் போகிறது??

வெளி உலகத்திற்கும் தன் குடும்பத்தில் திவ்யாவைத் தவிர மற்றவர்களுக்கு மட்டும் தான் அவன் சிம்ம சொப்பனம்...

அவன் மனையாளைப் பொறுத்தவரை அவளின் முகத்தில் ஒரு சிறு கலக்கமோ, அவளின் விழிகளில் ஏதேனும் சிறு ஏக்கமோ தெரிந்தாலும் கூட அவளின் மேல் அடங்காத காதல் கொண்டுள்ள அவன் இதயம் பதறி துடித்துவிடும் என்பது....

அர்ஜூனின் தலைமை அலுவலகத்தை விட்டு வெளியில் வந்த வினோத்தின் மனதில்....

"அத்தானின் கண்டிஷன்களை மஹா எப்படி எடுத்துக் கொள்வாளோ தெரியவில்லையே.... என்னை மூனு வருஷம் பார்க்கக் கூடாது, என்னிடம் பேச கூடக் கூடாதுன்னு சொன்னா என்ன சொல்வாளோ" என்று யோசித்தவனுக்கு "அத்தான் இந்த அளவிற்கு இறங்கி பேசுவார்னு நினைச்சுக் கூடப் பார்க்கவில்லை... அது வரைக்கும் நல்லது" என்ற நிம்மதியும் படர்ந்தது...


நேரே வீட்டிற்கு வந்தவன் தன் அன்னையும் தந்தையும் பிரயாணத்திற்குத் தயாராக இருக்க, தான் வீட்டிற்குள் நுழைந்ததும் கலக்கமும் ஆர்வமுமாகத் தன் முகத்தையே பார்த்திருந்த மஹாவை திரும்பியும் பார்க்காமல் பயணத்திற்குத் தானும் தயாராக,

அவன் வந்ததில் இருந்து அவனையே பாத்திருந்த மஹாவிற்குத் தன்னவனின் பாரா முகத்தைக் கண்டு அச்சத்திலும் வேதனையிலும் கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது.

சிறிது நேரத்திலேயே அவர்கள் அனைவரும் ஊருக்குக் கிளம்பத் திவ்யாவின் கரங்களைத் தன் கரங்களுக்குள் வைத்துக் கொண்ட கலா....

"திவ்யா, உடம்பப் பார்த்துக்கமா.... ஸ்ரீயும், மாப்பிள்ளையும் சொல்ற மாதிரி நடந்துக்க என்ன?" என்றவர் விழிகளில் நீர் ததும்பி நிற்க கிளம்பினார்.

அன்னையும் தந்தையும் முதலில் வெளியே செல்ல, வீட்டிற்குத் திரும்பி வந்ததில் இருந்து வினோத்தின் முகம் வேறு சரியில்லாததைக் கவனித்து வந்த திவ்யாவிற்கு ஏதோ நடந்து இருக்கிறது என்று புரிய, அவனிடம் நெருங்கி நின்றவள் வாய் வரை வந்த வார்த்தைகளை உதிர்க்காமலே விட்டாள்...

அவளின் தவிப்பு புரிந்த வினோத் நிச்சயம் அத்தான் இவளிடம் எல்லாவற்றையும் விளக்கிச் சொல்லுவார் என்று நம்பிக்கையில் அவளின் தலையைக் கோதியவன்...

"சரி திவ்யா... உடம்பப் பாத்துக்க... அடிக்கடி ஃபோன் பண்ணு, என்ன?" என்றவன் வீட்டை விட்டு வெளியில் செல்லும் வரை மஹாவை திரும்பியும் பார்த்தான் இல்லை...

அவர்கள் அனைவரும் கிளம்பவும், காலையில் நடந்த சம்பவம் மீண்டும் திவ்யாவின் நியாபகத்திற்கு வந்து அவளைக் கலக்கத்தில் வதைத்தது என்றால் காலையில் தன்னைச் சுட்டெரிக்கும் சூரியனைப் போன்று பார்வைப் பார்த்துவிட்டு சென்ற தன் அண்ணனை திகிலுடன் எதிர்பார்த்திருந்த மஹாவிற்கோ அவன் வருவதற்குத் தாமதம் ஆக ஆக இதயம் துடிப்பதை பல மடங்கு அதிகரித்துக் கொண்டே போனது..

இரவு வெகு நேரம் சென்று வீடு திரும்பிய அர்ஜூன் தன் அறைக்குச் சென்று குளித்து முடித்து இரவு உணவிற்காகக் கீழ் இறங்கி வந்தவன் டைனிங் டேபிளில் அமர, அவன் வந்ததில் இருந்து ஒரு வார்த்தைக் கூட அவனிடம் பேசாமல் உணவு பரிமாறிய தன் மனைவியை நிமிர்ந்து பார்த்தவனிற்கு அவளின் முகத்தில் இருந்த கலக்கத்தின் காரணம் புரிந்தது...

கடலூருக்கு அவளை அழைக்கப் போகும் பொழுது திவ்யாவின் மேல் வினோத்திற்கு இருந்த பாசத்தைத் தான் கண்கூடாகப் பார்த்திருந்தானே...

அவனும் அவளைக் கண்டு கொள்ளாதது போல உணவு அருந்த, தன் அண்ணனின் அருகில் அமர்ந்து உணவு அருந்திக் கொண்டிருந்த மஹா அவனை நிமிர்ந்துப் பார்த்தால் தானே....

ஒரு வழியாக உண்டு முடித்து எழுந்தவன் தன் தலை தட்டில் புதைந்தது போல் குனிந்து உண்டு கொண்டிருந்த மஹாவைப் பார்த்து....

"மஹா உன் கூடக் கொஞ்சம் பேசனும்.... என் ரூமிற்கு வா..." என்றவன் அவளின் பதிலை கூட எதிர்பார்க்காமல் சென்றுவிட்டான்.

அர்ஜூன் தனியாகத் தன்னை அழைத்ததும் உலகத்தில் உள்ள அத்தனை கடவுள்களிடமும் வேண்டிக் கொண்டவள் அச்சத்துடனும் கலக்கத்துடனும் அவன் பின் செல்ல, அவள் அறைக்குள் நுழைந்தவுடன்....

"கதவை சாத்து" என்றான்.

தன் கட்டிலுக்கு அருகில் சேரை இழுத்துப் போட்டவன் அவளை அமர செய்து அவள் கண்களைக் கூர்ந்து பார்த்தவாறே..

"ஏன் வினோத்தை சூஸ் பண்ணின மஹா? என்றான் அதிரடியாக...

கண்கள் கலங்க அவனைப் பார்த்தவள், சன்னமான குரலில்....

"திவ்யா அண்ணி மாதிரி அவரும் ரொம்ப நல்லவர்ண்ணா" என்றாள்.

தலை குனிந்து தன் இடது கை விரல்களால் தன் நெற்றியை அழுந்தித் தேய்த்துக் கொண்டவாறே சத்தம் வராமல் மெல்லியதாகப் புன்னகைத்து கொண்டவன், நிமிர்ந்து....

"அது எனக்குத் தெரியும்... ஆனால் அது மட்டும் போதுமா மஹா லைஃபில? சரி நீயும் வினோத்தும் என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?" என்றான்.

அவன் கேட்கும் கேள்வி புரியாமல் அவனையே பார்க்க,

"மார்னிங் வினோத் என்னைய பார்க்க வந்தது தெரியும் இல்லையா?" என்றான்.

ஆமாம் என்று தலையாட்டிவள் மீண்டும் அமைதியாக இருக்க,

"வினோத் எதுவும் உன் கிட்ட சொல்லவில்லையா?" என்று மேலும் கேட்க,

அவள் இல்லை என்பது போல் தலை அசைக்கவும், எப்படி வாயடிப்பவள் இப்படி அமைதியாக இருப்பதைப் பார்த்து காதல் என்ற உணர்வு இதயத்தில் ஊடுருவிவிட்டால் எவரையும் எப்படியும் மாற்றும் சக்தியாக அது மேலெழுந்து புத்தியையும் சித்தத்தையும் கலங்கடித்து ஒரு மனதினை அடியோடு மாற்றிவிடுகிறது என்று நினைத்தவனின் விழிகளின் முன் திவ்யாவின் அழகு முகம் படர, புன்னகைத்துக் கொண்டவன் காலையில் அவனுக்கும் வினோத்திற்கும் இடையில் நடந்ததை முழுவதுமாக எடுத்துரைத்தான்....

"மஹா.... உனக்கு இதற்குச் சம்மதமா?

"எப்படி அண்ணா அவர பார்க்காம பேசாம அவ்வளவு நாள் இருக்கிறது?"

"மஹா எனக்கு இது வெறும் இன்பாக்ஷுவேஷன் இல்லைன்னு தெரியனும்... அத நீங்க தான் ப்ரூவ் பண்ணனும்... அதுக்காகத் தான் இந்தக் கண்டிஷன்ஸே"

"சரின்னா... நிச்சயம் நாங்க ப்ரூவ் பண்ணுவோம்.... ஆனால் ப்ளீஸ்ண்ணா, எங்கள சேர்த்து மட்டும் வச்சிடுங்க" என்று விழிகளில் நீர் தளும்பி நிற்க கலங்கியவளின் முன் குனிந்தவன் வாழ்க்கையில் முதல் முறை தன் தங்கையின் தலை முடியை ஆறுதலாகத் தடவிக் கொடுத்து,

"நான் என்னைக்காவது சொன்ன சொல் தவறி இருக்கேனா மஹா?" என்று கேட்க,

இல்லை என்பது போல் தலையை அசைத்தவளைக் கண்டவன்...

"அப்புறம் ஏன் இந்தக் கலக்கம்? நான் சொன்னதை நீங்க செஞ்சா நானும் என் வார்த்தையைக் காப்பாத்துவேன்... சரி நீ போய்த் திவ்யாவை அனுப்பு" என்றவன் மடி கணினியை எடுத்து வைத்துக் கொண்டு தன் வேலையைத் தொடர, இன்னும் குழப்பம் விலகாத முகத்துடன் கீழ் இறங்கி சென்றவளை நிமிர்ந்துப் பார்த்தவன் அடுத்து தன் மனைவியை என்ன சொல்லி சமாதானப் படுத்துவது என்று யோசனையில் ஆழ்ந்தவாறே அவளின் வரவிற்காகக் காத்திருந்தான்...

தன் கணவன் மஹாவைத் தனியாகப் பேச அழைத்ததிலேயே கலங்கி போய் இருந்த திவ்யா, சிறிது நேரத்தில் குழம்பிய முகத்துடன் தங்கள் அறையில் இருந்து வெளியே வந்தவளைப் பார்த்தவள் வேகமாக அவளின் அருகில் செல்ல....

"அண்ணி, அண்ணா உங்களை வரச் சொல்றாங்க" என்று விட்டு சட்டென்று தன் அறைக்குள் மஹா மறைய, திவ்யாவின் வயிற்றுக்குள் ஒரு பெரிய உருளை உருள துவங்கியது....

என்ன தான் தன் கணவன் தன்னைத் தங்க தாம்பாளத்தில் வைத்து தாங்கிக் கொண்டிருந்தாலும் அவனின் இயற்கைக் குணங்களான கோபம், பிடிவாதம் ஆணவம், அதிகாரம் அனைத்தும் அவனை விட்டு இன்னும் செல்லவில்லையே....

கூடப் பிறந்த தங்கையான மஹாவிற்கே இந்த நிலைமை என்றால் வினோத்தின் நிலைமையை எண்ணி அடி வயிறு கலங்க மெல்ல தங்கள் அறைக்குள் வந்தவள் அவன் கட்டிலில் அமர்ந்து தான் வருவதும் தெரிந்தும் தன்னை நிமிர்ந்தும் பார்க்காமல் கணினியிலேயே கண்களைப் பதித்திருப்பதைக் கண்டவளுக்கு இன்று ஒரு பூகம்பம் வெடிக்கப் போகிறது என்றே தோன்றியது...

மெல்ல கட்டிலில் ஏறி அவன் அருகில் படுத்தவள் ஒன்றும் பேசாமல் அமைதியாக அவனையே பார்த்திருக்க, அவளின் மௌனத்தின் காரணம் புரிந்திருந்ததால் மனதிற்குள் சிரித்துக் கொண்டவன் கணினியில் பதித்திருந்த விழிகளை எடுக்காமல் சில நிமிடங்கள் பேசாதிருக்க....

அவனின் மேல் நிலைத்திருந்த பார்வையை வேறு எந்தப் பக்கமும் திருப்பாமல் அவனையே கண் கொண்டு பார்த்திருக்க, இதற்கு மேலும் தன்னவளின் பொறுமையைச் சோதிக்காமல்...

"இன்னைக்குக் காலையில வினோத் என் ஆஃபீஸிக்கு வந்தார்" என்றான் அதிரடியாக.....

அவன் திடீரென்று அவ்வாறு சொன்னதும் திக்கென்று இருக்க அரண்டவள் வெடுக்கென்று எழ..

அவள் அப்படி அலறி துடித்து எழுந்ததும் பதறியவன்...

"என்ன திவி? இது மாதிரி அவசரப்பட்டு எழுந்திருக்கக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்றது" என்று சலிப்புடன் கூறியவன் அவளின் குணம் தெரிந்தும் தான் இவ்வாறு அவளைச் சோதிப்பது போல் அமைதியாக இருந்துவிட்டு இப்பொழுது திடுதிப்பென்று பேசியது தன் தவறே என்று வருந்தியவன் மடி கணினியை அருகில் இருந்த மேஜையில் வைத்துவிட்டு அவளின் அருகில் நகர்ந்து அமர...

"அண்ணா எதுக்கு வந்தாங்க?" என்றாள் கண்களில் அச்சத்தைத் தேக்கி வைத்து......

அவளின் பயத்தைப் பார்த்தவனுக்குத் தன் மனையாளின் மேல் மேலும் கனிவு வர அவளைத் தன் மேல் சரித்துக் கொண்டவன்...

"ம்ப்ச்.... இப்போ எதுக்கு இவ்வளவு பயம்?" என்றான்...

"என்னங்க, அண்ணன்ட்ட நீங்க கோபம் எதுவும் படலையே?"...

"எதுக்கு?"

"எதுக்குன்னு உங்களுக்கே தெரியும்... என் அண்ணா ரொம்ப நல்லவருங்க... ஆனால் அவர் இப்படிப் பண்ணுவார்ன்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை?" என்றவளின் விழிநீர் அவனின் சட்டைக்கு இடையில் தெரிந்த வெற்று மார்பில் பட,

அவளின் முகத்தைத் தன்னை நோக்கி நிமிர்த்தியவன்....

"நான் காலையில என்ன சொன்னேன்.... உன் கவலை எல்லாம் உன் உடம்பை பத்தியும், என்ன பத்தியும், நம்ம குழந்தையைப் பத்தியும் மட்டும் தான் இருக்கனும்னு... திரும்பவும் ஏன் இவ்வளவு கவலைப்படுற?" என்று கேட்டான் கரிசனத்துடன்....

இருந்தும் அவளின் முகத்தில் தெளிவில்லாததைப் பார்த்தவன், காலையில் தனக்கும் வினோத்திற்கும் இடையில் நடந்த உரையாடல்களைச் சொல்ல, அவனை நம்பாமல் வழக்கம் போல் கண்களை அகல விரித்து மருண்டப் பார்வைப் பார்க்கவும்,

கருத்தரித்த விஷயத்தைக் கேள்விப்பட்ட நாளில் இருந்து அவளின் மனதில் பூத்திருந்த பூரிப்பின் சாயல் அவள் முகத்திலும் படிந்திருந்ததால், அவளின் அழகு எங்கும் பல மடங்கு பரிமளித்துத் தேவதையைப் போல் காட்சியளித்தவளை கண்டவனின் பார்வையில் இருந்து இதுவரை தெரிந்த கனிவும் இரக்கமும் மாயமாய்ப் பறந்து அந்த இடத்தைத் தாபமும் விரசமும் ஆட்கொண்டது...

முகத்தை மட்டும் தன்னை நோக்கி அண்ணாந்துப் பார்த்தவாறு தனது நெஞ்சில் படுத்திருக்க அவளின் செவ்விதழ்கள் வேறு அவனின் முகத்திற்கு வெகு அருகில் இருக்க, மார்பகத்தை மறைத்தோடியிருந்த சேலையும் சிறிதே விலகியிருந்ததில் கண்ணைக் கவரும் சித்திரம் போல் தன் மேல் படர்ந்திருந்தவளைக் கண்டவனுக்கு, மருத்துவர் தாம்பத்தியத்திற்குக் கருத்தரிப்பு தடையில்லை என்று சொல்லியிருந்தாலும் தன் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு தன்னவளிடம் தன் மென்மையான பக்கத்தையே கடந்த சில நாட்களாகக் காட்டியிருந்தவனிற்குள் அடங்கியிருந்த தாபம் உத்தஸ்தாயிக்கு சென்று அவனின் உறுதியை உடைத்தெறிந்தது...

தன்னவளின் முகத்தை இன்னும் தன்னை நோக்கி நிமிர்த்தியவன் அவளின் முகத்தில் சிதறியிருந்த ஓரிரு முடிகளை விரல்களால் ஒதுக்கியவாறே...

"இப்படி பார்க்க பார்க்க தான் எனக்கு என்னென்னமோ பண்ணனும் தோனுதுடி" என்றவன் அவளின் இதழ் நோக்கி குனிய,

அவனை விட்டு சட்டென்று விலகியவள்..

"என்னங்க.... எவ்வளவு முக்கியமான விஷயம் பத்தி பேசிட்டு இருக்கோம், இப்ப போய்..." என்று இழுக்கக் கடுப்பானவன்...

"சரி... அதுக்காக இப்படித் தள்ளிப் படுத்தே பேச சொல்றியா? என்றான் தாபம் சட்டென்று அறுப்பட்ட கோபத்தில்....

அவனின் கோபத்தைக் கண்டு புன்னகைத்தவள் மீண்டும் அவன் நெஞ்சில் படுத்தவாறே

"இல்லை.... இப்படிப் படுத்தும் பேசலாம்... ஆனால் நீங்க பேசனும்... வேற எதுவும் செய்யக் கூடாது... " என்றவள் அவனின் விழிகளில் தன் விழிகளைப் படரவிட்டு ஆச்சரியத்துடன்...

"நிஜமாவே மஹா அண்ணிய எங்க அண்ணனுக்குக் கொடுப்பீங்களா?" என்றாள்......

உடலில் உள்ள ஒவ்வொரு நரம்பும் மனைவியுடனான தாம்பாத்தியத்தை யாசித்துக் கொண்டிருக்கும் அந்த வேளையில் கூடத் தன்னிலையில் இருந்து இறங்காதவன் விடாப்பிடியாக....

"நான் சொன்ன கண்டிஷன்களை அவங்க இரண்டு பேரும் மீறாமல் இருந்தால்!!" என்றான் அழுத்தமாக...

காதலிக்கறவங்க ஒருத்தருக்கொருத்தர் எப்படிப் பார்க்காமல் இருக்க முடியும் என்று அவள் மீண்டும் தன் யோசனை உலகத்திற்குச் செல்ல, அவளை இறுக்கி அணைத்தவன்.....

"திவி, அவங்க பிரச்சனையை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.... முதல்ல என்ன கவனிடி" என்று கூறியவன் அவளுள் மூழ்க துவங்க...

அவனின் அத்து மீறல்களில் கூடக் கவனம் செலுத்தாமல்...

"என்னங்க, நீங்க சொல்ற மாதிரி நிச்சயம் இரண்டு பேரும் இருப்பாங்க.... எனக்கு இரண்டு பேரையும் பத்தி நல்லா தெரியும்.. அது மட்டும் இல்ல, எங்க அண்ணன் நிச்சயம் மஹா அண்ணிய தங்க தட்டுல வச்சு தாங்குவாங்க பாருங்களேன்" என்று அவள் விடாமல் அதேயே பேச,

அவளின் இதழ்களை விரலால் வருடிவிட்டபடியே....

"திவி, நீ எப்போ என் லைஃபில் வந்தியோ அப்பவே, உன் வீட்டில் இருக்கிறவங்களும் என் லைப்பில் ஒருத்தராகிட்டாங்க... நான் இந்தக் கண்டிஷன்ஸ போட்டதே அவங்க அவங்களோட லவ்வை, லைஃப்பை சீரியஸாக எடுத்துக்கனும்னு தான்... வினோத் நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கெயின் பண்ணட்டும், அவருக்கு நம்ம ஐ டி கம்பெனியில் மேனேஜ்மெண்ட் போஸ்ட் தந்துவிடுகிறேன்" என்றவன்,

"அது சரி... அதென்ன உங்க அண்ணா மட்டும் தான் அவர் வைஃப்ப தங்க தட்டுல வச்சு தாங்குவாரா? ஏன் நாங்கெல்லாம் தாங்கலையா?" என்று கேட்டவனின் பார்வை கூர்மையாக அவளின் இதழ்களில் படிய, அவனின் எண்ணம் புரிந்தவள் நாணத்தில் முகம் விகசிக்கத் தன் உதடு மடித்துத் தலைக் கவிழப் போனவளின் மென் இதழ்களைச் சரேலென வெளிவந்த தாபத்தின் பிரவாகத்தினால் சட்டென்று முரட்டுத்தனமாக முற்றுகையிட,

தனது கணவனின் வன்மையான தாம்பத்திய சாகஸங்களுக்கு அவளின் தளிர் மேனி தானாக இளக தன்னவனுக்குள் புதையத் துவங்கியவள் விடியும் வரை வெளி வரவில்லை....

ஆத்மார்த்தமான காதலுடன் கூடிய காமம் அர்ஜூன் திவ்யா தம்பதியரின் இரவை இனிமையான நீண்ட உறங்கா இரவாக மாற்றியது என்றால், காதலில் முதல் அடி எடுத்து வைத்து அதற்குள் வேலிகளையும் கடுமையான சோதனைகளையும் சந்தித்திருந்த இளம் உள்ளங்கள் வினோத் மஹாவிற்கு அந்த இரவு கலக்கத்தையும், அச்சத்தையும், தவிப்பையும் சுமந்த உறங்கா இரவாக மாறிப்போனது....

ஆனால் இது விடியாத இரவு அல்லவே.... அவர்களின் காதல் பயணத்தில் ஏற்றங்களையும், இறக்கங்களையும், சோதனைகளையும், வெற்றிகளையும் மாற்றி மாற்றிச் சுமந்து வரப் போகும் அழகான விடியலை தாங்கி வந்த இரவே அது...

அது காதலில் தத்தளித்துக் கொண்டிருக்கும், மனம் பாரத்துடன் தவித்து இருக்கும் இந்த இளம் காதலர்களுக்குப் புரியுமா?

தொடரும்..
 

JB

Administrator
Staff member
அத்தியாயம் - 30

வினோத்திடம் தான் கலந்துரையாடி இருந்த விஷயங்களையும், நிபந்தனைகளையும் அவன் நிச்சயம் மஹாவிடம் கூறியிருப்பான் என்று நினைத்திருந்த அர்ஜூனிற்கு அவன் தங்களுக்குள் நடந்ததை மஹாவிடம் மட்டும் அல்ல, திவ்யாவிடம் கூடக் கூறாமல் சென்றுவிட்டிருந்தது வினோத்தின் மீது அர்ஜூனிற்கு ஒரு நல்ல மதிப்பையே கொடுத்தது...

கட்டளை இட்ட முதல் நாளே அவன் அதனைக் கடைப்பிடிக்கத் துவங்கியிருந்தை நினைத்து முறுவலித்தவனுக்கு ஏனோ வினோத் இறுதிவரை தன்னுடைய நிபந்தனைகளைக் கடைப்பிடிப்பான் என்று தோன்ற மறு நாள் தன் பெற்றோரிடமும், அருணிடமும் இதனைப் பற்றிப் பேசி அவர்களின் சம்மதமும் பெற்றவன் தன் அன்னையை விட்டு தன் மாமனார் மாமியாரிடமும் பேச சொன்னான்...

திவ்யாவிற்கு ஒரு பக்கம் தன் அண்ணனுக்கு மஹாவை திருமணம் செய்யத் தன் கணவன் சம்மதித்தது, மறு பக்கம் அவனின் எதிர்காலத்திற்கு வழி செய்வதாகச் சொன்னது என்று சந்தோஷம் தாங்கவில்லை...

தன் மனைவியின் மகிழ்ச்சியான முகத்தைப் பார்த்தவனுக்கு "உனக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வேண்டி" என்றே தோன்றியது...

நாட்கள் அதன் போக்கில் நகரத் திவ்யாவின் உடலிலும் மாற்றம் வர, நிறமும் களையும் கூடி, மேலெழும்பியிருந்த வயிற்றுடன் கர்ப்பிணிப் பெண்களுக்கே உரிய பூரிப்புடன் இருந்த மனைவியைப் பார்ப்பதற்கு அத்தனை உவகையாக இருந்தது அர்ஜூனிற்கு...

திவ்யாவிற்கு ஏழாம் மாதத்தில் வளைகாப்புச் செய்வது என்றும், அதுவும் அர்ஜூனின் வீட்டிலேயே வளைகாப்பு என்றும், அன்றே பிரசவம் எங்கு வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானிப்பது என்றும் முடிவாகி இருக்க அந்த அழகிய இனிமையான நாளும் வந்தது...

வளைகாப்பு அன்று திருமணப் பட்டுப்புடவை அணிவதே ஸ்ரீயின் குடும்பத்தினரின் வழக்கம் என்றாலும் திவ்யாவிற்குத் தான் முதன் முதலில் எடுத்துக் கொடுத்த மெஜந்தா நிறப் பட்டுப் புடவையையே அவள் அன்று அணிய வேண்டும் என்று அர்ஜூன் சொல்லியிருந்ததால், புடவையை அணிவதற்காக அதனைப் பீரோவில் இருந்து வெளியில் எடுத்தவளுக்கு அந்தப் புடவையை வாங்கிய நாளும், அன்று மழையில் நனைந்திருந்த தன்னைக் கணவன் பார்த்திருந்த விதமும் நியாபகத்தில் தோன்ற தன்னையும் அறியாமல் களுக்கென்று சிரித்து வைத்தாள்...

வளைக்காப்பிற்காக தயாராகி பால்கனியில் நின்று அலை பேசியில் பேசிக் கொண்டிருந்தவனுக்குத் திவ்யாவின் சிரிப்புச் சத்தம் கேட்க, அழைப்பைத் துண்டித்துவிட்டு உள்ளே வரவும், அங்கு ஏழாம் மாதக் கர்ப்பத்திற்குரிய மேடிட்ட வயிறுடன் இணையற்ற எழிலையும் கர்ப்பத்தின் களையையும் முகத்தில் சுமந்து, தன் கையில் புடவையை வைத்துக் கொண்டு எதனையோ யோசித்தபடியே தடவி கொண்டு இருந்த தன் மனையாளைக் கண்டவனுக்குக் கணவனாய், பிறக்கப் போகும் தன் வாரிசின் தகப்பனாய் கர்வம் தோன்ற, அவளின் அருகே முதுகு புறமாக நெருங்கி நின்றவன் பின் கழுத்தில் ஆழ முகம் புதைக்க,

கணவனின் இந்த எதிர்பாராத செயலில் சட்டென்று திரும்பியவள் பிரமித்துப் போனாள்...

எப்பொழுதுமே ஃபார்மல் உடையிலேயோ அல்லது டி ஷர்ட் ஜீன்ஸிலேயோ பார்த்திருந்த தன் கணவனை முதன் முதலாகப் பட்டு வேஷ்டி, சட்டையில் பார்க்கவும்,

தன் கணவனின் நெடிய ஆறடி மூன்று அங்குல உயரத்தில் அழகிய வலிமையான உருவமும், ஆண்களுக்கே இலக்கணமான கம்பீரத்துடன் கவர்ச்சியையும், ஆளுமையையும் கலந்து ஆணழகனாகவும், முழங்கை வரை சட்டையை மடித்திருந்ததால் கரங்களில் நரம்புகள் புடைத்திருக்க, அவன் வாளிப்பான நெடுநெடு திடகாத்திரமான உடலுக்கு இன்று அணிந்திருந்த பட்டு வேஷ்டி சாட்டை மேலும் கவர்ச்சியோடு கூடிய பேரழகைச் சேர்க்க, தன்னுடன் அவன் சங்கமித்த முதல் நாளில் அவன் விழிகளில் வழிந்த ஆசையைவிட இன்று அதிகமாகக் காதலை கலக்கவிட்டு இருந்தவனின் புன்னகைப் பூத்த முகமும் திவ்யாவின் மனதிற்குள் சில்லென்ற காற்றைப் போல் ஊடுருவிச் செல்ல, தன்னைக் கண்டதும் கண் சிமிட்ட மறந்து சிலை என நின்ற தன் மனையாளைக் கண்டு பெருமை பொங்க பார்த்தவன்,

"என்னடி அப்படிப் பார்க்கிற?" என்றான் இள முறுவலுடன்...

அவனின் கேள்வியில் சட்டென்று சுய நினைவிற்கு வந்தவள்...

"வேஷ்டி சட்டையில் ரொம்ம்ம்ம்ம்ம்ப அழகா இருக்கீங்க... அதுவும் பட்டு வேஷ்டியும், மெரூன் கலரில் சட்டையும், செம்ம சூப்பர் போங்க…" என்றாள் தன் கணவன் இவன் என்ற கர்வம் முகத்தில் வழிய....

தன்னவள் தன்னை ரசிப்பதில் கிறங்கியவன் அவளின் இடைப் பிடித்துத் தன்னை நோக்கி இழுத்தவனிற்கு அவளின் வயிறு இடிக்க, மீண்டும் அவளின் முதுகுப் புறம் வந்தவன் கழுத்தில் முகம் புதைத்து தன் மனைவியின் பிரத்தியேக வாசனையை முகர்ந்தவாறே...

"நீ என்னைய முழுங்கி விடற மாதிரி பார்த்த பார்வையிலேயே தெரிஞ்சுதே நான் சூப்பரா இருக்கேன்னு" என்று சிரிக்க...

முரட்டு இதழ்கள் கழுத்தில் ஆழப் புதைந்திருந்ததில் அவன் பேசவும், உதடுகள் விரிந்து சுருங்கியதில் கழுத்தில் கூச, உடல் நெளிந்தவள்...

"ம்ப்ச்... விடுங்க.... நான் ட்ரெஸ் பண்ணனும்…." என்றாள்....

"சரி, நீ இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சிரிச்சியே... எதுக்குச் சிரிச்ச?" என்று அவளின் சிரிப்பின் அர்த்தம் புரிந்திருந்தும் புரியாதது போல் கேட்க,

பதில் சொல்ல முடியாமல் வெட்கப்பட்டவள் அவனை விட்டு விலக முயற்சிக்கவும், அவளின் உடலை சுற்றியிருந்த தன் கரங்களில் அழுத்தத்தைக் கூட்டியவன் கழுத்தில் புதைத்திருந்த முகத்தை விலக்காமலே...

"திவி... ஏன் சிரிச்ச? இந்தப் புடவை எடுத்தது பத்தி நினைச்சியா?" என்றான் விடாமல்....

புடவை எடுத்த அன்று, மழையில் முழுவதுமாக தான் நனைந்து இருந்ததையும், தன்னைக் கண்டதும் தன் கணவனின் விழிகளில் வழிந்த ஆர்வத்தையும், தாபத்தையும் நினைவில் கொண்டு வந்தவள்,

பின் இருவரும் வீட்டிற்குத் திரும்பி வந்ததும் தான் அறைக் கதவை தாழிடாமல் புடவை மாற்றத் துவங்க, அவன் திடீரென்று கதவைத் திறக்கவும் பதற்றத்தில் தன்னை மறைக்கக் கட்டிலில் இருந்த புடவையை எட்டி எடுக்க, அது நேரம் காலம் தெரியாமல் கீழே விழுந்து விட, பதறிப் போய் மீண்டும் அவன் முன் குனிந்து புடவையை எடுத்து தன் மார்பை மறைப்பதற்குள் தவியாய் தவித்துப் போனதை நினைத்தவளுக்கு இன்று தன் கணவனின் வாரிசை தன் வயிற்றில் சுமந்திருந்தாலும், பெண்களுக்கு இயற்கையின் பரிசான வெட்கமும் கூச்சமும் இன்றும் தோன்ற, முகம் சிவந்தவள் தலைக் கவிழ்ந்து நின்றாள்...

அவளின் மனதில் ஓடிய எண்ணங்களை அன்னியோன்யமான கணவனாகத் தானும் உணர்ந்தவனுக்குத் தன் மனையாளைத் தான் முதன் முதலில் புடவை இல்லாமல் பார்த்தது இன்றும் அவனின் ஆண்மையைத் தட்டி எழுப்ப, கழுத்தில் புதைத்திருந்த முகத்தில் இன்னும் அழுத்தத்தைக் கூட்டியவன் பின் இதழ்களை மெதுவாக அவளின் காதுகளுக்கு இடம் பெயர்ந்து ஏதோ ரகசியம் பேச...

"ஐயோ! என்னங்க இது காலங் காத்தாலேயே? எல்லோரும் நமக்காகக் கீழ காத்துட்டு இருக்காங்க.... கொஞ்சம் நீங்க வெளியே போறீங்களா? நான் ட்ரெஸ் பண்ணனும்" என்று பதறினாள் அவனின் செல்ல மனையாள்....

அவளின் பதற்றத்தையும் ரசித்தவன் ஏற்கனவே தன் மீது முழுவதுமாகச் சாய்ந்திருந்தவளை மேலும் இறுக்கியவாறே...

"ஏண்டி... இப்போ நான் காதுல என்ன சொன்னேன்? நீ என்ன பண்ண சொல்ற?" என்று கிறக்கமான குரலில் கிசுகிசுக்க...

தன் கணவனுக்குத் தன்னை விடும் எண்ணமே இல்லை என்று உணர்ந்தவள்...

"என்னங்க... வேண்டாங்க... ப்ளீஸ்... நேரம் ஆனால் அத்த திட்டுவாங்க... அப்புறம் நல்ல நேரம் தாண்டிடும்…" என்று கெஞ்ச...

அவளின் தவிப்பைக் கண்டு சிரித்தவன் இருந்தும் தன் விருப்பத்தை அவள் பூர்த்திச் செய்யாமல் தான் விடப் போவதில்லை என்பது போல் தன் தேவையை அவளுக்கு உணர்த்தும் உறுதியோடு...

"சரி, நான் ஒன்னும் பண்ணலை... ஆனால் நீ, நான் சொன்ன மாதிரி செய்... நான் பேசாம பார்த்திட்டே இருக்கேன்…" என்றான்...

காலங்கார்த்தால அதுவும் இத்தனை பேர் கீழே விஷேஷத்திற்கு வந்து நமக்காகக் காத்திருக்கும் பொழுதும் இது என்ன பேச்சு என்று வெட்கத்தின் உச்சிக்கே சென்றவள் அவன் பக்கம் திரும்பி அவனின் மார்பில் கை வைத்து தள்ள முயல,

பிஞ்சுக் கரங்களால் ஆண்மையின் சுயரூபமாக நின்றவனை ஒரு இஞ்ச் கூடத் தள்ள இயலாதவளாய் பரிதாபமாக அவன் முகத்தை நோக்கிப் பார்க்க, அவளின் தவிப்பை கண்டு வாய்விட்டு சிரித்தவன் அவளின் முகத்தை இறுக்கப் பற்றி மெல்லிய இதழ்களைச் சிறை செய்ய முயற்சிக்க,

இது தான் சமயம் என்பது போல் அவன் நெஞ்சில் இருந்த கரங்களில் அழுத்தத்தைக் கூட்டி அவனைத் தள்ளிவிட்டு குளியல் அறை நோக்கி ஓடினாள் சிணுங்கி சிரித்தவாறே அவனின் ஆசை மனைவி...

அவளின் வேகத்தைக் கண்டவன் பதறிப் போய்...

"ஏய் மெதுவாடி... வழுக்கி விழுந்திரப் போகிற" என்று கத்த, கண்டு கொள்ளாது குளியல் அறைக்குள் நுழைந்தவளைக் கண்டவன்....

"திவி, பாத்ரூம் ஃப்ளோர் ஈரமாயிருக்கு... நான் வேனா பால்கனிக்கு போறேன்... இங்க வந்து ட்ரெஸ் பண்ணு" என்றவன் சொன்னது போல் வெளியே சென்றான்...

சில நிமிடங்கள் அறையில் எந்த அரவமும் இல்லாது இருக்க, மெதுவாகத் தலையை நீட்டி வெளியே எட்டிப் பார்த்தவள் தன் கணவன் அறையில் இல்லை என்பதனை உறுதி செய்து புடவையை உடுத்தியவள் தலை சீவி சடைப் பின்னி அடுக்கி தொடுத்திருந்த மல்லிகைச் சரத்தை சூடி என்ன நகை அணியலாம் என்று சந்தேகம் வரவும் அர்ஜூனை உள்ளே அழைக்க...

அறைக்குள் நுழைந்தவனுக்கு அடர்ந்த மெஜந்தா நிறத்தில் தங்க ஜரிகை கரைப் போட்ட பட்டு புடவையில் நகைகள் ஒன்றும் அணியாமலே எளிதான அலங்காரத்தில் கழுத்தின் இருபுறமும் மார்பு வரை நீண்ட மல்லிகைச் சரங்கள் தொங்க சிற்பம் போல் நின்றிருந்த தன் மனையாளைப் பார்த்தவனுக்குச் சிறிது நேரத்திற்கு முன் அடக்கிய மோகம் சீறிக் கொண்டு வெளிவர, அடுத்தக் கணம் கணவனின் இறுக்கிய அணைப்பில் இருந்தாள் திவ்யா...

அது வரை தனது உணர்ச்சிகளை அடக்கி வைத்திருந்தவளுக்குக் கணவனின் அணைப்பு ஆவலைத் தூண்ட, அவன் முதுகில் வைத்து இருந்த கரங்களில் மேலும் அழுத்தத்தைக் கூட்டியவள் அவனின் உடலை தன் உடலோடு அழுந்திக் கொள்ள, மனையாளின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டவனாய் அவள் இதழ்கள் நோக்கி குனிந்தவன் வன்மையாகச் சிறை செய்ய...

நீண்ட நேரம் நீடித்த முத்தத்தைக் கர்ப்பிணி பெண்ணால் தாங்க இயலவில்லை....

மனையாளின் மூச்சுப் போராட்டம் புரியாதவனாய் தாபத்தோடு அவளுக்குள் மேலும் மூழ்க துவங்க, அதற்கு மேலும் தாங்க மாட்டாதவளாய் கணவனிடம் இருந்து தன்னை வலுக்கட்டாயமாகப் பிரித்துக் கொண்டவள் மூச்சு வாங்க அவனை நிமிர்ந்துப் பார்க்க...

அப்பொழுது தான் அவளின் திணறலைக் கவனித்தவன் பதறிப் போனான்...

"ஏண்டி, திணறுதுன்னு சொல்லலாம் இல்லை?"

"ம்ம்ம்... எங்க? சொல்லவிட்டால் தானே?" என்றாள் மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க...

சிரித்துக் கொண்டவன் "சரி வா" என்று அவளின் தோளை பிடித்துத் தன்னோடு அணைத்தவாறே நடக்க..

"என்னங்க? எனக்கு என்ன நகைப் போடுறதுன்னு தெரியலை" எனவும் அவர்களின் அறைக் கதவு தட்டப்படவும் நேரம் சரியாக இருந்தது...

அறைக்கு வெளியே நின்றிருந்த ஸ்ரீ, திவ்யா கதவைத் திறக்கவும், அவளிடம் தங்களின் பரம்பரை நகையான "ஆண்டிக் ஜ்வெல்லரி" போல் இருக்கும் நகைகளைத் தந்தவர்..

"திவ்யா, இது எங்க பாட்டியுடையது.... எங்க அம்மா எனக்குக் கொடுத்தது... தங்கமும், நவரத்தின கற்களும் பதித்த செட்... இந்தக் குடும்பத்து முதல் வாரிச நீ சுமந்திட்டு இருக்க... அதான் உனக்குக் கொடுக்கலாம்னு கொண்டு வந்தேன்" என்றார்....

தன் மாமியாரின் கரிசனத்தையும் பாசத்தையும் லட்சமாவது தடவையாகப் பார்த்திருந்தவளுக்கு மீண்டும் உள்ளம் குளிர...

"அத்த, பாட்டி உங்க அம்மாவிற்குக் கொடுத்ததுன்னா கண்டிப்பாக நீங்க இத மஹா அண்ணிக்கு தான் கொடுக்கனும்…" என்று சொல்ல, தன் மருமகளின் பெருந்தன்மையைப் பார்த்தவருக்கு மனம் பெருமையால் நிறைந்தது...

"திவ்யா... மஹாவிற்கும், அருணுக்கு மனைவியா வரப் போறவளுக்கும் வேற செட்ஸ் வச்சிருக்கேன்... மஹா இன்னைக்கு அதத் தான் போட்டுக்கப் போறா... ஆனால் இது எனக்கு ரொம்ப ஸ்பெஷலானது... அர்ஜூனிற்கு வைஃப்பா வரப் போறவளுக்கு மட்டும் தான் இதக் கொடுக்கனும்னு நான் ஏற்கனவே முடிவு பண்ணியிருந்தேன்... இத இப்ப உனக்குக் கொடுக்கறதுல எனக்கு ரொம்பச் சந்தோஷம்" என்றவர் அவளின் கரம் பற்றி நகைகளைக் கொடுக்க...

யோசனையுடன் அர்ஜூனை நோக்கி பார்த்தவளைக் கண்டவன் வாங்கிக் கொள் என்பது போல் தலை அசைத்தான்...

கண்களில் நீர் தளும்ப அதை வாங்கியவள் ஸ்ரீயிடம்...

"நீங்களே போட்டு விடுங்க அத்த.." என்று கூற,

அவள் கைகளில் இருந்து நகைகளை வாங்கிய அர்ஜூன் அருகில் இருந்த மேஜையில் அதை வைத்து அதில் இருந்த நெக்லஸை தானே எடுத்து அவளின் கழுத்தில் போட துவங்க, ஸ்ரீ புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்தார்...

"என்னங்க, அத்த முன்னாடி என்ன இது?" என்று வெட்கப்பட்ட மனையாளைக் கண்டவன் புன்முறுவலுடன்,

"ஏன்? நான் என் வைஃபுக்கு போடுறேன்... இதில் என்னடி இருக்கு?" என்று கூறியவன் நகைகளைப் போட்டவுடன் அவளைத் தன்னை நோக்கித் திருப்ப, நகைகள் அற்ற எளிமையான அலங்காரத்திலேயே தன்னை மயக்கியவள் இப்பொழுது தங்கமும் நவரத்தினங்களும் கலந்து இழைந்தோடிய நகைகளில் மேலும் அழகுற ஜொலித்தவள் எழிலின் விளிம்பைத் தொட்டிருக்க, அவளின் முகம் நோக்கி குனிந்தவன் பட்டுக் கன்னத்தில் தன் உதடுகளைப் புதைத்த வண்ணம்....

"நான் கேட்டதை நீ கொடுக்காத வரை இன்னைக்கு உன்னை நான் தூங்க விடமாட்டேன்... மறந்திடாத" என்றான் காதல் வழியும் குரலில்...

அவனின் மென் முத்தத்தில் சிலிர்த்தவள் அவன் கரத்தைப் பற்றி இழுத்து அறைக்கு வெளியே கூட்டிச் செல்ல, மாடியில் இருந்து கணவன் மனைவி இருவரும் ஒன்றாகக் கீழிறங்கி வரவும் திவ்யாவின் கொலுசு சத்தத்தில் அவர்களை நிமிர்ந்து பார்த்த விருந்தினர்களும் பெற்றோர்களும் அசந்து போனார்கள்...

கொள்ளை அழகுடனும் தாய்மையின் பூரிப்புடனும் பட்டுப் புடவையில் திவ்யா தேவதைப் போல் இறங்கி வர, அவளைத் தன்னுடன் அணைத்தவாறே அவளின் தோள் பிடித்து அர்ஜூன் அழைத்து வர, பார்ப்பவர்கள் அனைவரின் கண்களும் கொள்ளைப் போனது...

பட்டுப் புடவையிலும் நவரத்தின மாலையிலும் திவ்யா பேரழகியாகத் தெரிந்தாள் என்றால், முதன் முறையாகப் பட்டு வேஷ்டி சட்டையில் அசத்தலான கம்பீரத்துடனும் கவர்ச்சியான ஆளுமையுடன் இருந்தான் அர்ஜூன்...

அனைவரையும் பார்த்து சிரித்த வண்ணம் இளையவர்கள் படிகளில் இறங்கி வர, இவர்கள் இருவரும் ஒன்று சேர்வார்களா என்று கதி கலங்கிக் கொண்டிருந்த பெரியவர்களுக்குச் சின்னவர்களின் ஒற்றுமையும், அதுவும் அர்ஜூன் தன் மனையாளை அணைத்தவாறே அவளின் வேகத்திற்கு ஏற்றவாறு பொறுமையாக அவளுடன் இணைந்து படிகளில் இறங்கிவரும் அழகும் அத்தனை பூரிப்பை கொண்டு வந்திருந்தது...

கூடி இருந்த அனைவரின் மனமும் மகிழ்ச்சியில் குதூகலித்துக் கொண்டிருக்க, இரண்டு உள்ளங்கள் மட்டும் இத்தனை கூட்டத்திலும் தனித்து விடப்பட்டது போல் கலங்கித் தவித்து இருந்தது...

தங்கையின் வளைக்காப்பிற்குத் தன் பெற்றோருடன் சேர்ந்து அன்று காலையில் தான் சென்னை வந்திருந்த வினோத் வீட்டில் நுழைந்ததில் இருந்து மறந்தும் மஹாவை நிமிர்ந்து பார்க்கவில்லை...

அடர்ந்த வயலட் நிறத்தில் சன்னமான தங்க சரிகை கரைப் போட்டு நெய்திருந்த பட்டுப் புடவையில், தன் அன்னைக் கொடுத்திருந்த நகைகளை அணிந்து முடியை தளரப் பின்னி திவ்யாவைப் போன்று கழுத்தின் இருபக்கமும் மார்பு வரை தொங்கும் மல்லிகைச் சரங்களைச் சூடியிருந்தவள் தன்னவனை ஏக்கத்துடன் பார்த்தவாறே இருக்க,

பார்ப்பவர்களைக் கண்ட விநாடியே அடியோட அசத்தி வீழ்த்தும் பளிங்கு நிற மேனியவளைப் பார்த்தும் அவன் பார்க்காதது போல் இருக்க, அவனின் புறக்கணிப்பின் காரணம் முழுமையாகப் புரிந்திருந்தாலும், காதல் கொண்ட பூ மனம் ஏற்றுக் கொள்ள மறுத்து வேதனையில் வெடித்து மௌனமாய்க் கதறியது...

ஹாலின் மற்ற விருந்தினர்களுடன் சேர்ந்து அமர்ந்துப் பேசிக் கொண்டிருந்த வினோத், மஹா தன் அறையில் இருந்து வெளி வந்த நிமிடம் தன்னையும் அறியாமல் நிமிர்ந்துப் பார்க்க, அழகான சிற்பம் போல் தன்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும் தன் தேவதையின் அழகு கூட அவன் கண்களை இழுக்காமல் அவளைப் பார்த்த அந்த விநாடியே தன் பார்வையைத் திருப்பிக் கொண்டான்....

அவனின் எண்ணம் முழுவதும் எப்பாடுப் பட்டாவது அவளைத் தன் மனைவியாக அடைய வேண்டும்...

அதற்கு இது போல் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் தன்னால் தாங்கிக் கொள்ள இயலும் என்று தன் மனதினைச் சுற்றிக் கற்பாறையினால் கட்டப்பட்ட கோட்டைச் சுவற்றை எழுப்பிக் கொள்ள, இவர்களின் ஏக்கமும் போராட்டமும் அர்ஜூனின் கண்களில் இருந்தும் தப்பவில்லை...

திவ்யாவுடன் வீட்டின் ஹாலிற்கு வந்த அர்ஜூன் அனைவரையும் வரவேற்றுவிட்டு வினோத்தின் அருகே சென்று அமர, ஏற்கனவே தன் மீது தப்பித் தவறி கூடப் பார்வையைச் செலுத்தாத வினோத்தைக் கண்டவளுக்கு தன் அண்ணன் அவன் பக்கத்தில் அமர்ந்ததும் "கிழிஞ்சது போ" என்பது போல் இருந்தது...

ஹாலில் நடுவில் போடப்பட்டிருந்த நாற்காலிக்கு முன், ஒரு கலசத்தில் தண்ணீரும், மாமர இலைகளும், புற்களும் தேங்காயும் வைக்கப்பட்டிருக்க, ஹாலிற்கு வந்த திவ்யா கூடியிருந்த அனைவரையும் இரு கரங்கள் கூப்பி வரவேற்க, அவளை நாற்காலியில் அமரச் செய்தவர்கள் அழகாக இறுக்கித் தொடுத்திருந்த ரோஜா மலர் மாலையை அவள் கழுத்தில் அணிவித்து நலுங்கைத் துவங்கவும்,

திவ்யாவின் அருகில் நின்றிருந்த மஹாவின் கரங்களில் ஏந்தியிருந்த தட்டில் மஞ்சளும், குங்குமம், வெத்தலையும், பாக்கும் வகையாகப் பிரித்து வைக்கப் பட்டிருக்க, அதன் நடுவில் அழகாகச் சிகப்பு நிறத்திலும், பச்சை நிறத்திலும் கலந்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த வளையல்களைப் பெண்கள் ஒவ்வொருவராக வந்து திவ்யாவிற்கு அணிவிக்கத் துவங்க, வளையல் போடும் முன் அவளின் கைகளிலும் கன்னத்திலும் சந்தனம் பூசத் துவங்கினர்...,

வீடே மங்களகரமான வாசனையிலும், கலகலப்பான சிரிப்பிலும், உள்ளங்கள் அனைத்தும் மகிழ்ச்சியிலும் மூழ்கியிருந்தது என்றால், தன் மனையாளை நாற்காலில் அமர வைத்து நலுங்கு செய்யத் துவங்கிய நிமிடத்தில் இருந்து விழுங்கிவிடுவது போல் பார்த்திருந்த அர்ஜூனின் இதயத்தை அவளின் கொள்ளை அழகு எப்பொழுதோ கொள்ளை அடித்துவிட்டு சென்று இருந்தது...

தன்னவளின் அழகில் மதி மயங்கி இருந்தவன், அவள் நாற்காலியில் அமர முடியாமல் மேடிட்ட வயிற்றுடன் அமர்ந்திருக்க, கணவனாகக் கர்வம் கொண்டவனின் முகத்தில் பெருமையின் சாயல் அப்பட்டமாகத் தெரிய,

அவளை அங்கு அமர வைத்ததில் இருந்தே கண்கள் வழியாகவே விழுங்கிவிடுவது போல் பார்த்திருந்தவனுக்கு, ஒவ்வொருவரும் வளையல் அணிவிக்கும் பொழுது அவர்களைப் பார்த்து முகம் செம்மையுற பூரிப்புடன் மென்மையாகச் சிரித்துக் கொண்டிருந்தவளை கண்டிருந்தவனுக்கு, அப்படியே அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டும் போல் இருக்க,

அவள் தன்னை நிமிர்ந்து பார்த்ததும் கண் சிமிட்டியவனைக் கண்டவளுக்கு வெட்கத்தில் முகம் அந்திவானமாய்ச் சிவந்து போனது...

வந்திருந்த பெண்கள் ஒருவர் பின் ஒருவராக வளையல்களை அணிந்து முடிக்கவும், இறுதியில் அர்ஜூனை வரச் சொல்ல, அவன் எழுந்ததும் திவ்யாவிற்குச் சட்டென்று அவன் தாலிப் பெருக்கென்று செய்த குறும்பு நியாபகத்தில் வர, ஏற்கனவே செவ்வானமாய்ச் சிவந்திருந்தது முகம், இதில் நாணத்தில் விளிம்பைத் தொட்டதால் உடல் சிலிர்க்கவும்,

அவனையே நிமிர்ந்துப் பார்த்திருந்தவளின் அருகில் வந்தவன் அவள் பட்டுக் கன்னத்தில் மென்மையாகச் சந்தனத்தை எடுத்து பூசியவாறே காதிற்கருகில் குனிந்து...

"ரொம்ப அழகா இருக்கத் திவி.... இப்பவே அப்படியே தூக்கிட்டு போயிடனும் போல இருக்குடி" என்று கிசுகிசுத்தான்...

அவனின் கிசுகிசுப்பான குரலில் மனம் கிறங்கியவள், இருந்தும் இத்தனை பேர் சுற்றி இருக்கும் பொழுது இது என்ன என்று வெட்கத்தில் தலை கவிழ, இக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீக்கும் கலாவிற்கும் இந்த நாளுக்காகத் தான் இத்தனை வருடங்கள் தோழிகள் இருவரும் பிரிந்திருந்தோமோ என்றே தோன்றியது...

மனையாளின் மென் கன்னத்தில் அதைவிட மென்மையாகச் சந்தனத்தைப் பூசி முடித்தவன் மஹாவை திரும்பி பார்த்து தலை அசைக்க, சரி என்றவள் தன் அருகில் வைத்திருந்த அந்த நகைப் பெட்டியை அவனிடம் தந்தாள்...

திரும்பி தன் அன்னையைப் பார்த்து "இதனையும் போடவா?" என்றவனின் கைகளில் பார்ப்பவர்களின் கண்களைப் பறிப்பது போல் அத்தனை அழகுடன் இரு ஜோடி வைர வளையல்கள் இருந்தது...

கணவனையே பார்த்துக் கொண்டிருந்த திவ்யாவிற்கு இப்போ எதுக்கு இவ்வளவு விலை உயர்ந்த வளையல்கள் என்று தோன்ற, அவனின் முகத்தையே கண்கள் இமைக்காமல் பார்த்திருந்தவளைக் கண்டவனுக்கு அவள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்பது புரிய, புன்னகைத்தவாறே தன் அன்னையை மீண்டும் திரும்பிப் பார்க்க...

திவ்யாவின் கைகளில் இருந்த வளையல்களைக் கணக்கு பார்த்தவர் அவன் இரு ஜோடி வைத்திருப்பதை சரிப் பார்த்து ....

"கண்ணாடி வளையல்கள் ஒரு ஜோடியும் போடுப்பா.... அப்போ தான் கணக்கு சரியா வரும்" என்றார்...

தன்னவளின் மலர் கரங்களுக்கு வலிக்குமோ என்பது போல் மெல்ல பற்றியவன் கண்ணாடி வளையல்களை அணிவித்துவிட்டு வைர வளையல்களை அணிவிக்க, அவன் முகத்தில் இருந்து தன் பார்வையை எடுக்காதவாறே தயக்கத்துடன் மெல்லிய அவனுக்கு மட்டுமே கேட்குமான குரலில்....

"இது எதுக்குங்க?" என்றாள்...

ஆனால் என்று அர்ஜூன் சுற்றி இருப்பவர்களைப் பார்த்து தன் இயல்பை மாற்றியிருக்கிறான்...

அவள் மெதுவாகக் கேட்டாலும் அவன் சிறிது சத்தமாகவே...

"இது எனக்காக, என்னைய மட்டுமே நினைச்சுக்கிட்டு இருக்கிற என் வைஃப்புக்கு" என்று கூற,

அங்கிருந்தவர்கள் அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி பொங்க, திவ்யாவிற்குத் தன் கணவனின் கூற்றில் அவனுடன் சேர்ந்து ஒன்றிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது...

வளைக்காப்பு முடிந்து அனைவரும் விருந்து உண்ண செல்லவும், வினோத்திடம் தனிமையில் பேச ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா என்று தவித்த மஹாவிற்கு அவனின் போக்கும் பார்வையும் நிச்சயம் தன்னிடம் பேச மாட்டான் என்பதனை உணர்த்த என்ன நடந்தாலும் சரி என்று முடிவெடுத்தவள் ஹாலில் அமர்ந்து திவ்யாவுடன் பேசிக் கொண்டிருந்த அர்ஜூனின் அருகில் சென்றவள் மௌனமாக நிற்க,

அவளை நிமிர்ந்து பார்த்தவன் அவளின் முகத்தில் தெரிந்த கலக்கத்தைக் கண்டதும்....

"யெஸ் மஹா?" என்றான்....

மஹாவிற்கு அவன் கேட்ட தோரணையிலேயே தெரிந்து போனது தன் அண்ணனின் பதில் என்னவாக இருக்கும் என்று.... அர்ஜூனிற்கும் தெரியும் தன் தங்கை என்ன பேசப் போகிறாள் என்று...

தயங்கியவாறே மெல்லிய குரலில்...

"அண்ணா எனக்கு வினோத்திடம் கொஞ்சம் பேசனும்... நீங்க சொன்னதினால் அவர் என் முகத்தைக் கூடப் பார்க்க மாட்டேங்கிறாரு... ப்ளீஸ் அண்ணா... இந்த ஒரு தடவை அண்ணா.... அப்புறம் ப்ராமிஸா நீங்க சொல்ற வரைக்கும் நான் அவர்கிட்ட பேசவே மாட்டேன்" என்று அழுதுவிடுபவள் போல் கெஞ்ச,

அர்ஜூனின் அருகில் இருந்த திவ்யாவிற்கு மஹாவின் நிலைமையைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது...

ஏதோ சொல்ல வந்த தன் கணவனின் கையைப் பிடித்தவள் அவனைக் கலக்கத்தோடு பார்த்திருக்க, மனையாளைத் திரும்பி பார்த்தவன், மீண்டும் மஹாவைத் திரும்பி பார்த்து அருகில் இருந்த சேரைக் காட்டி உட்கார் என்றான்...

அர்ஜூனின் இறுகிய முகமும், தன்னைப் பார்த்திருந்த கூர்மையான பார்வையுமே மஹாவிற்கு வெளிப்படுத்தியிருந்தது நிச்சயம் தன் அண்ணன் தன் விருப்பத்திற்குச் சம்மதிக்க மாட்டார் என்று....

மனைவிக்கு வளைக்காப்பு... இவர்கள் இருவரின் மனம் முழுவதும் இன்னும் இரு மாதங்களில் பிறக்கப் போகும் தங்களின் வாரிசை நினைத்து மகிழ்சியில் திளைத்திருக்கிறது......

இது ஒரு ஆண்மகனிற்கு அவன் வாழ்நாளில் எத்தனை மகிழ்ச்சியான தருணம்.... ஆனால் இன்று கூட எப்பொழுதும் இருப்பது போல் அதே கடினம், அழுத்தம் என்று நினைத்தவள் அமைதியாக அமர்ந்தாள்...

அவளை ஆழ்ந்துப் பார்த்தவாறே அவள் முன் குனிந்து அவளின் கரம் பற்றி, தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டவன்,

'மஹா.... நான் சொன்ன வார்த்தைகளை வினோத் காப்பாத்தறாரு.... காலையில் இருந்து நானும் வாட்ச் பண்ணிட்டு இருக்கேன்.... அவர் மனசில உன் மேல் எத்தனை ஆசையிருக்குன்னு நான் உனக்குச் சொல்ல வேண்டியதில்லை.... இருந்தும் அவர் தன்னக் கட்டுப்படுத்திக்கிட்டு உன்னைப் பார்க்காம கூட இருக்காருன்னா அவரோட லவ்வ நீ புரிஞ்சுக்கனும்... உன்னைய விட்டுக் கொடுத்திடக் கூடாதுன்னு தான் தன்னைத் தானே கஷ்ட்ப்படுத்திக்கிட்டு இருக்காரு.... ஆனால் நீ என் தங்கை... நீயே நான் போட்ட கண்டிஷன்ஸை காப்பத்தலைன்னா அவர் என்ன நினைப்பார்? ஏதோ பெரிய இது மாதிரி கண்டிஷன் எல்லாம் போட்டான், ஆனால் அவன் தங்கையாலேயே அத காப்பாத்த முடியலைன்னு நினைக்கமாட்டாரா?" என்றான் நிதானமாக ஆனால் அழுத்தமான குரலில்...

அர்ஜூனின் கூற்றில் தலை கவிழ்ந்தவாறே மஹா அமர்ந்திருக்கவும், அவளின் உள்ள உணர்வுகளை ஒரு பெண்ணாக உணர்ந்து கொண்ட திவ்யாவிற்கு மனம் வலித்தது...

வினோத் எதுவும் நினைக்கமாட்டாரா என்ற தன் கணவனின் கேள்விக்குத் தன் அண்ணனின் குணத்தை எடுத்துக் கூறும் வகையில்...

"இல்ல... எங்க அண்ணன் அப்படி எல்லாம் நினைக்க மாட்டார்" என்று மெதுவாகக் கூற,

அவளைச் சட்டென்று திரும்பி பார்த்த அர்ஜூனின் கூரிய ஆழமான பார்வையில் நெஞ்சு கூடு பயத்தில் நடுங்க, சப்த நாடியும் அடங்கி ஒடுங்கியதில் தலைக் கவிழ்ந்தவள் அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் அமைதியாகிப் போனாள்...

மீண்டும் மஹாவைத் திரும்பி பார்த்தவன்...

"உங்க ஃபீலிங்ஸ் எனக்குப் புரியுது மஹா... ஆனால் நீங்க இரண்டு பேருமே இன்னும் காலேஜ் கூட முடிக்கலை... இப்போ உங்க இரண்டு பேரோட கவனமும் படிப்புல மட்டும் தான் இருக்கனும்... அதுவும் வினோத்தோட நிலைமையைப் பாரு... இப்போ லவ் அப்படி இப்படின்னு அலைஞ்சா நிச்சயம் அவர் மனம் தடுமாறும்... அப்புறம் உங்க இரண்டு பேராலயும் ஒரு நல்ல லைஃப் அமைச்சுக்க முடியாது... என்னால எல்லா உதவியும் செய்ய முடியும், ஆனால் என்ன விட உனக்கு வினோத்தைப் பத்தி நல்லா தெரியும்... நிச்சயம் அவர் தன் காலில் தான் நிற்கனும்னு நினைப்பாரு... அஸ் அ லவ்வர் அண்ட் அ ஃபியான்ஸே [As a lover and a Fiancé] நீ தான் அவருக்கு உறுதுணையாக இருக்கனும்... அவரோட வளர்ச்சிக்கும் நீ தடையா இருக்கக் கூடாது…." என்றான் திருத்தமாக, ஆனால் தன்னுடைய முடிவே இறுதியான முடிவென்பதுப் போல் அழுத்தமாக...

தன் அண்ணனின் அறிவுரையில் உள்ள உண்மை புரிந்ததினால் மட்டும் அல்ல...

ஏற்கனவே இரண்டு முறைகள் வினோத் தன் கட்டுப்பாட்டை இழந்து தன்னிடம் நடந்து கொண்ட முறையையும் யோசித்தவள் அவன் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறவனாக இருக்கிறான்... இந்த நேரத்தில் அவன் மனம் தடுமாற நாமே காரணம் ஆகக்கூடாது என்று முடிவெடுத்தாள்...

"சரிண்ணா" என்றவள் புன்னகையுடன் கிளம்பினாலும் அவள் எவ்வளவு வருத்தத்தில் இருக்கிறாள் என்று திவ்யாவிற்குப் புரிந்தது,
புரிந்து என்ன பயன்? எப்பொழுது யாருக்கு அவள் கணவனை எதிர்த்து பேச தைரியம் இருந்திருக்கிறது!!!


வளைக்காப்பு முடிந்து விருந்தினர் அனைவரும் கிளம்ப, ஹாலில் குடும்பத்தினர் மட்டுமே அமர்ந்திருந்தனர்...

திவ்யாவை தன் தோள் வளைவுக்குள் வைத்திருந்த படியே அர்ஜூன் அமர்ந்திருக்க, ஏதேதோ விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர்களைக் குறுக்கிட்ட கலா தயங்கிவாறே மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார்...

"மாப்பிள்ளை.. வழக்கமாக முதல் பிரசவம் தாய் வீட்டில் தான் பார்க்க வேண்டும்ன்னு உங்களுக்குத் தெரியும்... ஆனால் நிச்சயம் நீங்க திவ்யாவ எங்க வீட்டிற்கு விடப் போவது இல்லைன்னும் தெரியும்... ஆனால பெத்தவளா எனக்கும் ரொம்ப ஆசையா இருக்கு மாப்பிள்ளை... நான் திவ்யாவ கூட்டிட்டு போகவா?... ரொம்ப நாள் இல்லை.. சும்மா ஒரு இரண்டு வாரமாவது அவளை என் கூட வச்சு பார்க்கனும்னு ஆசையா இருக்கு" என்றார்...

அர்ஜூன் நிச்சயமாக இதற்குச் சம்மதிக்க மாட்டான் என்று தெரியும்... திவ்யா தாய்மை அடைந்திருந்த விஷயம் கேள்விப்பட்டதை அறிந்த நாளில் இருந்தே அவள் எங்குச் செல்ல வேண்டும் என்றாலும் தான் எத்தனை முக்கிய வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் அவனே வந்து கூட்டி செல்வதை வழக்கமாக வைத்து இருந்தான்...

ஒரு வேளை தன்னால் வர இயலவில்லை என்றால் திவ்யாவை அவன் எங்கும் வெளியில் செல்ல அனுமதித்ததில்லை....

இருந்தும் முதன் முறைக் கருத்தரித்திருக்கும் தங்களின் ஒரே செல்ல மகள் தங்களோடு சில நாட்களாவது இருக்க வேண்டும் என்றும் அவளின் அன்னை ஆசைப்படுவதிலும் தவறில்லையே...

அது வரை வேறு ஏதோ பேசிக் கொண்டிருந்தவன், அவரின் கேள்வியில் விருட்டென்று அவரைத் திரும்பி பார்க்க, அந்தக் கூர்மையான, ஆழமான, புருவங்களைச் சுருக்கிய ஒற்றைப் பார்வையிலே தெரிந்து போனது தன் மாமியாரின் கேள்விக்கு அவன் சொல்லப் போகும் பதில் என்னெவென்று...

ஆனால் கலாவின் ஆசையும் நியாயமானது தானே? ஸ்ரீக்கு அர்ஜூன் சொல்ல வருவது என்னவென்று தெரிந்திருந்தாலும் அதனை எப்படிச் சொல்லப் போகிறானோ? யார் மனதையும் புண்படுத்தாமல் சொல்ல வேண்டுமே என்று கலக்கமாக இருக்க,

சிறிதும் தயக்கம் இல்லாமல் கம்பீரமான அழுத்தமான குரலில்....

"எனக்குப் புரியுது உங்க ஆசை... அதே சமயம் நீங்களும் ஒன்னு புரிஞ்சுக்கனும்.. இன்னும் டூ மன்த்ஸ் தான் இருக்கு இவளோடு டெலிவரிக்கு... ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல், நான் இவள அவ்வளவு தூரம் ட்ரேவல் பண்ண விட முடியாது... இவள் இங்க எங்கேயாவது போறதுன்னாக் கூட முடிந்த வரை நான் தான் கூட்டிட்டு போறேன்... இதுல அவ்வளவு தூரம், நோ சேன்ஸ்... அப்புறம் இங்க இருக்கிற வசதி நிச்சயம் அங்க கிடையாது... நான் உங்க வீட்டப் பத்தியோ வேற எதைப் பத்தியோ பேசலை... இவ பிறந்து வளர்ந்த வீடு அது...அதனால் அங்க இருப்பது நிச்சயம் இவளுக்குக் கஷ்டமா இருக்காது... ஆனால் அங்க ஹாஸ்பிட்டல் வசதி அவ்வளவா இல்லை... ஏதாவது எமெர்ஜென்ஸின்னா என்னா பண்ணுவீங்க? இவள அங்க விட்டுட்டு இங்க என்னால ஒவ்வொரு நிமிஷமும் பயந்துக்கிட்டு இருக்க முடியாது... " என்றவன்...

கலாவின் முகத்தில் தெரிந்த கலக்கத்தையும் ஏமாற்றத்தையும் கண்டவன் தன் மனையாளை திரும்பி பார்த்துப் பின் தன் மாமியாரை நோக்கியவன்...

"அதுக்குப் பதில் நீங்க இங்க இவ கூடத் தங்கிடுங்களேன்... திவிக்கும் சந்தோஷமா இருக்கும்" என்றவனின் தோரணை இதனுடன் இந்தப் பேச்சை முடித்துக் கொண்டால் நல்லது என்பது போல் இருந்தது...

தன் செல்ல மனைவி கர்ப்பம் தரித்ததில் இருந்து, தன் முதல் வாரிசைச் சுமந்திருப்பதை அறிந்ததில் இருந்து அவளைத் தனித்து விடாமல் தன் அன்னையோ அல்லது வேறு ஒருவரோ எப்பொழுதும் அவளுடன் துணையாக இருக்குமாறுப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு,

தன் மனைவியின் அம்மா வீட்டிற்கு அனுப்பினால் தினந்தோறும், ஒவ்வொரு நிமிடமும் அவள் எப்படி இருக்கின்றாள்? அவளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ? என்று அஞ்சி அவளை அவள் பெற்றோர் வீட்டிற்குக் கூட அனுப்பாமல் அவளைத் தன் கண்களில் சுமந்து பார்த்துக் கொண்டவனுக்கு எங்குத் தெரியப் போகிறது? அவனின் மனையாள் பிரசவ வலி எடுக்கும் பொழுதும், அவள் வலியால் துடித்துக் கதறி தன் அருகாமையைத் தேடும் பொழுதும், தான் அவள் அருகில் இருக்கப் போவதில்லை என்று!!

தரையில் அவளின் பட்டுக் கால்கள் படாமல் அவளைத் தாங்கிக் கொண்டிருந்தவனுக்கு, மனைவியின் முகம் சுணங்காமல் விழிகளில் சிறிதேனும் அச்சத்தையும், சஞ்சலத்தையும், கலக்கத்தையும் அவள் சுமந்திருந்தாலும் தன் இதயத்தில் வலி ஏற்படுவது போல் உணர்ந்து அவளைத் தன் நெஞ்சிலேயே சுமந்திருந்தவனுக்கு, அவளின் வயிற்றுப் பாரத்தைத் தவிர அவள் மனதிலோ உடலிலோ வேறு ஏதும் பாரங்கள் சுமக்காமல் அவளைத் தன் தலையில் வைத்து தாங்கிக் கொண்டிருந்தவனுக்கு,

எங்குத் தெரியப் போகிறது அவள் தன் வயிற்றின் பாரத்தை இந்தப் பூமியில் இறக்கி வைக்கும் நேரம் நெருங்கும் பொழுது தானில்லாத இடத்தில் தனித்துக் கட்டாந்தரையில் அலறித் துடித்துத் தனிமையில் அழுது கதறப் போகிறாள் என்று?

விதியின் விளையாட்டு ஒவ்வொருவர் வாழ்க்கையில் பெரும் பங்கு ஆகிற்றே??

இது தெரியாமல் இதோ தன் மாமியார் தன் மனைவியைத் தங்களுடன் அழைத்துச் செல்லவா என்ற கேள்வியே பிடிக்காதது போல் தன்னவளைத் தன் தோள் வளைவுக்குள் வைத்திருந்தவன் அவளைத் தன்னை நோக்கி இன்னும் இழுத்து கோழி தன் குஞ்சைக் காப்பது போல் தன் சிறகுகளுக்குள் வைத்துக் கொண்டான் அந்தக் காதல் கணவன்!!!!!

தொடரும்
 

JB

Administrator
Staff member
அத்தியாயம் - 31

அர்ஜூன் தன் மாமியாரிடம் தன் மனைவியை எங்கும் விடமாட்டேன் என்று உறுதியாகப் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே தனது அரவணைப்பிற்குள் அவளை மேலும் இழுத்து, அவளின் தோளில் போட்டிருந்த கையில் கொடுத்த அழுத்தத்தை வைத்தே திவ்யாவால் தன் கணவனின் உள்ள உணர்வுகளை உணர முடிந்தது.....

நிச்சயம் இவர் என்னை எக்காரணத்தைக் கொண்டும் என் அம்மா வீட்டிற்கு அனுப்ப போவதில்லை என்று...

அதே போல் கலாவிற்கும் திவ்யாவுடன் சென்னையிலேயே தங்கி அவளைப் பார்த்துக் கொள்ளக் கொள்ளை ஆசைதான்.... ஆனால் அவரின் இப்பொழுதைய குடும்பச் சூழ்நிலைப்படி அவர் வேலைக்குப் போயே ஆக வேண்டும்...

அதே போல் வினோத்திற்கும், தன் கணவருக்கும் தன்னுடைய தேவை இருப்பதால் அவரால் அதற்கு மேலும் வேறு எதுவும் பேச முடியவில்லை...

அப்படியே பேசினாலும் அவர் மருமகன் கேட்டுவிட்டாலும்....

ஸ்ரீயின் அண்ணன் மகன் சுந்தரேசன் தன்னைக் காதலிப்பதாகத் தெரிந்ததும் அவர் தந்தை ருத்ரமூர்த்தி ஆடிய ருத்ரதாண்டவத்தில் அப்பாவியான கலா அந்த ஊரைவிட்டே சென்றது இப்பொழுது அவரின் ஞயாபகத்திற்கு வர, இன்று அவரையே உரித்து வைத்தது போல் பிறந்திருக்கும் அவரின் பேரன் அர்ஜூன் தன்னைச் சில நிமிடங்களுக்கு முன் சடாரென்று திரும்பிப் பார்த்த ஒற்றைக் கூரியப் பார்வையில் ருத்ரமூர்த்தியே மீண்டும் மண்ணில் உதித்துவிட்டாரோ என்று தோன்றியதில் கலங்கிப் போனவருக்கு இனி தன் மருமகனை எதிர்த்துக் கேள்விக் கேட்கும் தைரியம் வருமா???

ஆனால் இத்தனையிலும் அர்ஜூன் திவ்யாவை தன் உயிராக நேசித்து, காதலுடன் அவளைத் தன் கரங்களில் தாங்கிக் கொண்டு இருப்பதைக் கண்டு கொண்டு இருக்கிறாரே....

அவன் பார்வை எந்த நிமிடமும் தன் மனையாளை விட்டு அகலாமல் அவளையே பின் தொடர்ந்து சென்று கொண்டிருப்பதைக் கண்டவருக்குத் தன்னை விடத் தன் மருமகன் அவர் மனைவியை நன்றாகக் கவனித்துக் கொள்வார் என்றும் நிம்மதி படர அன்று இரவே கலாவும் வீட்டாரும் கிளம்பினர்….

திவ்யாவின் அருகில் வந்த கலா அவளை இறுக்க அணைத்து விடைப் பெற, காலையில் வந்ததில் இருந்து ஒரு முறையேனும் தன்னைப் பார்க்க மாட்டானா, ஒவ்வொரு முறை அவனைக் கடந்து செல்லும் பொழுதும், அருகில் நின்று அவனுக்கு உரிமையுடன் உணவு பறிமாறும் பொழுதும் ஒரே ஒரு முறை தன்னைக் கண்டு புன்னகைக்க மாட்டானா என்று வினோத்தையே வைத்த கண் வாங்காமல் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மஹாவிற்கு அவனின் பாரா முகம் இதயத்தில் அத்தனை வலியை கொண்டு வந்தது...

நிபந்தனைகளை விதித்தது என்னவோ அவள் அண்ணன்... ஆனால் கோபம் எல்லாம் தன்னவனிடமே...

வினோத்தின் பிடிவாதத்தைக் கண்டு அதிர்ந்தாலும் அவனின் உறுதியைக் கண்டு வியந்தவளுக்கு அவன் கிளம்பும் போதும் கூடத் தன்னைக் காணாதது கண்டு அவளின் பூ மனம் வேதனையில் சுழல, மனம் கனக்க கண்ணீரோடு தன்னவனையே பார்த்திருந்தவளின் இதயம் குளிரும் வகையில் காரில் ஏறும் பொழுது ஒரு முறை திரும்பிப் பார்த்தவன் கண்களாலேயே விடைப் பெற்றுச் சென்றான்...

சொந்த பந்தங்கள் அனைவரும் விடைப் பெற்று செல்ல, தனித்து விடப்பட்ட குடும்பத்தினர் மட்டும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, முன்னரே அர்ஜூன் தன் அறைக்குச் சென்றிருந்ததால் திவ்யாவைப் பார்த்த ஸ்ரீ...

"திவ்யா... நீ ரொம்ப டயர்டா தெரியரடா.... போ... போய்ப் படு" எனவும்,

அன்று முழுவதும் கிட்டதட்ட ஒரே இடத்தில் அமர்ந்திருந்ததினாலும், பின் விருந்தினர் அனைவரும் சென்றதும் அல்லி தெய்வானையுடன் சேர்ந்து தன் மாமியார் எவ்வளவு சொல்லியும் கேளாமல் சமையல் அறையைச் சுத்த படுத்தியதாலும் இடுப்பெல்லாம் ஒரே வலியாகவும் உடல் முழுவதும் அடித்துப் போட்டது போல் அசதியாகவும் இருக்க, இரவு தங்கள் அறைக்கு மெல்ல அசைந்து அசைந்து நடந்து வந்த மனைவியைப் பார்த்த அர்ஜூனின் கண்கள் அவளை விட்டு அகலவில்லை...

அறைக்குள் வந்தவள் கணவன் கட்டிலில் படுத்திருப்பதைக் கண்டு, இரவு உடையை எடுத்துக் கொண்டு குளியல் அறையை நோக்கி நடக்க,

"திவி, நான் வேணா பார்க்கலை... நீ இங்கேயே ஸாரிய [ saree] மாத்து... பாத்ரூமில் தான் மாத்தனும்னு அவசியமில்லை" என்று குறும்பாகச் சிரித்தவனைத் திரும்பிப் பார்த்தவள் அவனின் விழிகளில் வழியும் கல்மிஷத்தையும் உதட்டில் நெளியும் விஷமப் புன்னகையையும் கண்டு அவனின் எண்ணம் புரிந்தவளாய் மீண்டும் குளியல் அறைக்குள் நுழைய முற்பட,

"ம்ப்ச்" என்று சலித்துக் கொண்டவன் "திவி, நான் தான் சொல்றேன்லடி.... அப்புறம் என்னை மீறிப் போனா என்ன அர்த்தம்?" என்று சலிப்புடன் செல்ல,

அவளுக்கு இருந்த அசதியிலும் களைப்பிலும் அவனுடன் விதண்டாவாதம் செய்ய விரும்பாமல், அப்படியே செய்தாலும் அவன் ஏற்கனவே காலையில் தன் காதில் கிசுகிசுத்தது நினைவில் வர, தான் எதிர்பார்த்ததை இன்று தன்னிடம் இருந்து பெறாமல் அவன் விடப் போவதில்லை என்பதை அவளை அவன் பார்த்திருந்த விதத்திலேயே தெரிந்திருந்ததால்,

அவனுக்கு முதுகு காட்டி, கட்டியிருந்த புடவையை அகற்றி இரவு உடையை அணிய, ஏழு மாத வயிற்றுடன் களைத்த முகமாக இருந்தாலும் கர்ப்பத்தின் அழகோடு மூச்சு வாங்க கீழே கிடந்த புடவையை எடுத்து மடித்துக் கொண்டிருந்தவளை தன் வலது கரத்தை தலைக்கு முட்டுக் கொடுத்து ஒருக்களித்துப் படுத்தவாறே பார்த்துக் கொண்டிருந்தவனின் கழுகு பார்வையை நன்கு அறிந்தவள் அவனைத் திரும்பியும் பாராது ஆனால் புன்னகையுடன்...

"யாரோ நான் பார்க்கமாட்டேன்... நீ இங்கேயே புடவை மாத்துன்னு சொன்னாங்களே.... அவங்க எங்க?" என்றாள்.....

அது வரை அவள் சொன்னது போல் கண்களை இமைக்காமல் அவளையே விழுங்கிவிடுவது போல் பார்த்திருந்தவன் வாய் விட்டு சிரிக்க....

கட்டிலில் மெல்ல ஏறி அவன் அருகில் படுத்தவள் அவனை முகத்தை நோக்கவும்...

"நான் என் வைஃப பார்க்குறேன்... உனக்கு என்னடி வந்துச்சு?" என்றான்...

அவனின் கூற்றில் தன் இதழ்களைப் பிரித்துச் சிரித்தவள் அவனை மேலும் நெருங்கி படுக்க, அவளை இறுக்கி அணைக்க முற்பட்டவனை மேடிட்ட வயிறு தடுக்க, வழக்கம் போல் சிரித்தவாறே திரும்பி படுத்தவளை முதுகு புறமாக அணைத்தவன் தன் மனையாளின் மேல் இன்னமும் சந்தன வாசமும், காலையில் இருந்து அவள் அணிந்திருந்த மாலையில் தொடுத்திருந்த பன்னீர் ரோஜாவின் மணமும் கலந்து நறுமணம் வீசியதில் சொக்கிப் போனவன், மேலும் நெருங்கி அவளின் பொன் கழுத்தில் ஆழ முகம் புதைத்தான்...

அன்று காலையில் இருந்து அவ்வளவு பெரிய வீட்டில் இங்கும் அங்கும் நடந்ததினாலும், வேலைகளைத் தேவை இல்லாமல் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்திருந்ததாலும் உடல் முழுவதும் ஒவ்வொரு பாகமும் அசந்து, களைத்துப் போய்த் துவண்டிருந்தது...

இருந்தாலும் கணவனின் இறுக்கிய அரவணைப்பு அவளின் களைப்புக்கு மருந்து போல் இருக்கத் தன் உடலை சிறிதே பின்னுக்குத் தள்ளியவள் அவன் மார்புடன் தன் முதுகை அழுத்தி அவனுடன் ஒன்றிப் படுக்க, அவளின் கழுத்தில் புதைத்திருந்த தன் முரட்டு இதழ்களை எடுக்காமலே...

"திவி... ஐ நோ யூ ஆர் வெரி டயர்ட் [ I know you are very tired ] பட் ஐ கேண்ட் ரெஸிஸ்ட் டி... [ But i cant resist di... ] எனக்கு இன்னைக்கு நீ வேணும்... ப்ளீஸ்டி " என்று கிசுகிசுத்தான்....

அவன் பேச்சிற்கு மறு பேச்சுப் பேசாமல் மௌனமாகப் படுத்திருந்தவளைக் கண்டவனுக்குத் தான் அவளைத் தொந்தரவு செய்கிறோமோ என்று தோன்ற, அவளின் சோர்வு புரிந்து...

"சாரிடி... ஓகே நீ தூங்கு" என்றவாறே தள்ளிப் படுக்க முயல...

"எனக்கும் நீங்க வேணும்" என்றாள் மெல்லிய குரலில் அர்ஜூனின் மனம் கவர்ந்த அவனின் செல்ல மனையாள்...

அவளின் பதிலில் சிலிர்த்தவன் மீண்டும் நெருங்கிப் படுத்து...

"உனக்கு ஓகேவா... நீ ரொம்ப டயர்டா தெரியற" என்று தயங்க, அவனுக்கு வலது புறமாகப் படுத்திருந்தவள் அவனின் இடது கரத்தை எடுத்து தன் மார்பை சுற்றிப் போட்டுக் கொள்ள, கிளர்ந்தெழுந்தவன் முதுகில் துவங்கிய தன் முத்த ஊர்வலத்தை மேலும் முன்னேற்ற,

தன் கணவனின் இறுகிய அணைப்பில், மென்மையான இதழொற்றல்களில் தளிர் மேனியும் உள்ளமும் சிலிர்த்தெழுந்ததினால் தன் பூ உடலை கணவனின் தொடுகைகளுக்கும், செய்கைகளுக்கும் ஏற்றவாறு நெகிழ்த்தியவள் அவனுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்தவாறே மதி மயங்கியிருந்தவளின் மனதில் ஏனோ திடிரென்று மஹாவின் முகம் காட்சி போல் விரிய...

தன்னைக் கட்டுப்படுத்த இயலாமல் மெல்லிய குரலில்...

"ஆனாலும் நீங்க இவ்வளவு கெடு பிடியா இருக்கக் கூடாதுங்க" என்றாள்...

தாபத்திலும் மோகத்திலும் மூழ்கி உணர்ச்சிகள் பிரவாகித்ததில் அடிமையாகி இந்த உலகத்தை மறக்க துவங்கியிருந்தவன் அவளின் பேச்சில் உணர்வுகள் அறுபட, அவளின் கழுத்தில் இருந்து தன் முகத்தை எடுத்தவன்...

"எதைச் சொல்ற?" என்றான்...

ஏனெனில் தன் மாமியார் திவ்யாவை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கேட்ட பொழுது அவன் திவ்யாவின் விருப்பத்தைக் கேட்கவில்லை... அவளைத் தனித்து எங்கும் விட முடியாது என்று தானாகவே முடிவெடுத்திருந்தான்...

இதில் நிச்சயம் அவளுக்கு வருத்தம் இருக்கும் என்று அவனின் உள்மனது உறுத்திக் கொண்டே இருக்க இப்பொழுது அவளைத் தான் இவ்வளவு இறுக்கி அணைத்தும் தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு அவளும் நெகிழ்ந்தவள் தனக்கு உடன்பட்டுக் கொண்டிருக்கும் பொழுதே திடீரென்று இவ்வாறு கேட்கவும் அவளை விட்டு நகர்ந்து யோசனையுடன் அவள் முகம் பார்த்திருக்க...

மெல்ல உடலைப் புரட்டி மல்லாந்துப் படுத்தவள் முகத்தை மட்டும் அவனை நோக்கி திருப்பி,

"ஒரு தடவையாவது மஹா அண்ணியையும், அண்ணனையும் பேச விட்டுருக்கலாம்" என்றாள் குழந்தைத் தனத்துடனும் கவலை தோய்ந்த முகத்துடனும்...

அவளை அவள் தாய் வீட்டிற்கு அனுப்பாததை நினைத்து தன் மேல் அவளுக்கு நிச்சயம் வருத்தமும் கோபமும் இருக்கும் என்று அவன் எதிர்பார்த்திருக்க, அவள் மஹாவையும் வினோத்தையும் பற்றிப் பேச, மனம் நிம்மதியில் ஆழ்ந்து பெருமூச்சுவிட்டவன் விட்ட இடத்தில் இருந்து தன் வேலையைத் தொடர்வதற்கு அவளை மேலும் நெருங்கி அவளின் இதழ்களைச் சிறை செய்ய முனைய,

"இருந்தாலும் நீங்க...." என்று மீண்டும் அதே பேச்சை துவங்கியவளின் முகத்தைப் பார்த்தவன்...

"திவி... அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்... என்னை முதல்ல கவனிடி..." என்றவன் அவளின் செவ்விதழ்களைச் சிறை செய்யக் கணவனின் ஆழ்ந்த முத்தத்தில் பேசும் சக்தியை இழந்தவள் அவனின் உணர்ச்சிகளுக்குத் தன் உணர்ச்சிகளை வடிகாலாக இழைந்துக் கொடுக்க, தன்னவளுக்குள் மூழ்க துவங்கியவனின் மனம் ஏனோ ஒன்றாமல் மெல்ல எழுந்து அவளின் முகம் நோக்கி...

"திவி" என்றான்...

இப்பொழுது தடைப் பட்டது அவளின் உணர்வுகள்... கண்களை மூடி படுத்திருந்தவள் கணவனின் விலகலினாலும், அவனின் அழைப்பினாலும் தன்னிலைக்கு வந்தவள் என்ன என்பது போல் பார்க்க,

"திவி... உங்க வீட்டிற்கு உன்ன நான் விடலைன்னு உனக்குக் கோபம் இல்லையா?" என்றான்...

அவனின் குரலில் இருந்த ஏக்கமும், அவன் கேட்ட தோரணையுமே சொல்லாமல் சொல்லியது தன் கணவனின் மனதில் இருக்கும் எண்ணங்களை...

அவன் கரங்களை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டவள் அவனின் உள்ளங்கையில் மென்மையாக முத்தமிட்டு,

"நிச்சயம் இல்லைங்க... எனக்கும் எங்க அம்மா கூட இருக்கனும் ஆசையா தான் இருக்கு... ஆனால் அதுக்காக நீங்க என் பக்கத்தில் இல்லாம நிச்சயம் என்னால ஒரு நாள் கூட இருக்க முடியாது" என்ற மனைவியைக் கண்டவனின் இதயத்தில் அவள் மீது இருந்த காதல் பல மடங்கு பெருகி வழிய,

அவளின் கர்ப்பத்தைக் கூட மறந்தவனாய் தன் மகிழ்ச்சியைக் காட்டும் பொருட்டு அவளைத் தன்னுடன் இறுக்கி அணைக்க, அவனின் கையணைவில் இருந்த அழுத்தத்தில் உள்ளே இருந்த குட்டி அர்ஜூன் கடுப்பானதைப் போல் ஒரு உதை விட்டான்...

குழந்தை உதைத்ததை அவளின் மீது இருந்த தன் கரத்தில் தெரிந்த அதிர்வில் உணர்ந்த அர்ஜூன் ஒரு தந்தையாக மனம் சிலிர்க்க, ஒரு அன்னையாகப் பூரித்துப் போனவள்...

"பாருங்க உங்க பையன் உங்களுக்கு மேல் இருப்பான் போலிருக்குது... நீங்க இறுக்கி பிடிச்சதுக் கூடப் பிடிக்கலை போல... உங்கள பார்த்து பயப்படாத ஆளு இவன் ஒருத்தனாத் தான் இருக்கும்" என்றாள் முகம் கொள்ளப் புன்னகையுடன்...

எழுந்தவன் கட்டிலில் தலையணையைச் சாய்வாக வைத்து அதனில் தலைசாய்த்துப் படுத்தவன் அவளை மெல்ல எழுப்பித் தன் மார்பில் போட்டுக் கொண்டு அவளின் தலையில் மென்மையாகத் தன் தலையைப் பதித்து...

"அதெல்லாம் சும்மா, ஏற்கனவே ஒருத்தருக்கு என் மேலே பயம் போயிடுச்சு" என்றான்...

யாருக்கு என்பது போல் அவன் மார்பில் இருந்த தன் தலையை உயர்த்தி அவனை நோக்கி அண்ணாந்துப் பார்க்க,

"கல்யாணம் ஆன புதுசுல ஒருத்தருக்கு என்ன பார்த்தா அவ்வளவு பயம்... என் முகத்தை நிமிர்ந்துக் கூடப் பார்க்க மாட்டாங்க.... ஆனால் அவங்களுக்கு இப்போ அந்தப் பயம் இருக்கிற மாதிரியே தெரியலையே" என்றான் குறும்பு சிரிப்புடன்....

அவளுக்கு இப்பொழுது புரிந்தது தன் கணவன் யாரைக் குறிப்பிடுகிறான் என்று...

அவன் மார்பில் மீண்டும் தலை சாய்த்துப் படுத்தவள் அவனின் மார்பு ரோமங்களைத் தன் விரலால் பிடித்துத் தன் விரலைச் சுற்றி சுழற்றியவாறே...

"அப்படி எல்லாம் இல்லை... இன்னமும் எனக்கு உங்களைப் பார்த்தா பயம் தான்... ஏன்? இன்னைக்குக் கூட மஹா அண்ணிக்கிட்ட நீங்க பேசிட்டு இருக்கும் போது நான் எங்க அண்ணன் அந்த மாதிரி இல்லைன்னு சொன்னப்போ திரும்பி ஒரு பார்வைப் பார்த்தீங்களே... அப்பா!! என்னா பார்வை?? அப்படியே என்னைச் சுட்டெரிச்சிடற மாதிரி.... அப்போ எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? அப்படியே நடுங்கி போய்ட்டேன்... அப்புறம் எங்க அம்மா என்னைய அவங்க கூடக் கூட்டிட்டு போகட்டுமான்னு கேட்டப்போ அவங்கள டக்குன்னு திரும்பி பார்த்தீங்களே.... அப்போ எங்க அம்மாவ எதுவும் சொல்லிடுவீங்களோன்னு எப்படிப் பயந்திட்டு இருந்தேன் தெரியுமா"" எனவும்...

ஆழ்ந்த பெருமூச்சு விட்டவன்...

"திவி... சின்ன வயசில் இருந்தே நான் இப்படித் தான்... நான் என் தாத்தா ருத்ரமூர்த்தி மாதிரி எப்பவும் ருத்ரத்தோடேயே இருக்கிறதா மாம் சொல்லுவாங்க... அது என்னோட இயற்கையான குணம்... அது மட்டும் இல்லை... எப்போ எங்க குடும்ப பிஸ்னஸ்கள் எல்லாத்தையும் என் கையில் எடுத்தேனோ அப்பவே இன்னும் ரொம்ப ஹார்டா (Hard) மாறிட்டேன்... ஆனால் உண்மைய சொல்லனும்னா நான் இந்த அளவிற்கு இறங்கி வரதே உன் கிட்ட மட்டும் தான்"

அவன் கூற்றும் உண்மை தானே...

தொழில் வட்டாரத்திலும், வெளி உலகிலும், ஏன் தன் குடும்பத்தாருக்கும் கூட அவன் ஒரு சிம்ம சொப்பனம்...

தொழிற் சம்பந்தமான கூட்டங்களுக்கோ அல்லது வேறு ஏதாவது மீட்டிங்களுக்கோ அவன் சென்றால் அனைவரையும் அலட்சியமாகப் பார்த்துவிட்டு அவன் முன் சென்று கம்பீரமாக அமரும் பொழுது சிங்கத்தின் குகைக்குள் மாட்டிக் கொண்டவர்களைப் போல் அங்குக் கூடியிருக்கும் அனைவருக்குமே கதி கலங்கும்...

அவன் வருவதற்கு முன் வரை, மூடாமல் பேசிக் கொண்டிருந்த அவர்களின் வாய் அர்ஜூன் அந்த அறையில் இருந்து அகலும் வரை திறந்ததில்லை...

அப்படிப்பட்ட, ஒருவராலும் எளிதாக அண்ட முடியாத, வெளி உலகத்தில் தன் சாணக்கியத் தந்திரத்தாலும். எதிராளிகளைத் தன் அரக்கத் தனமான அடக்குதல்களாலேயும், தொழில் வட்டாரத்தில் அனைவரும் எட்டமுடியாத உயரத்தில் அசைக்க முடியாத பிம்பமாக இருக்கும் அவன் தன் மனைவியிடம் மட்டும் அடங்கிப் போவதைப் பார்க்கும் யாவருமே ஆச்சரியத்தில் மூக்கில் விரல் வைப்பார்கள்...

அவனைப் பற்றி அவன் கூறுவது உண்மை தான் என்றாலும் இருந்தும் கலக்கத்துடன்...

"எனக்கென்னமோ எப்பவும் நீங்க சிங்கம் புலி மாதிரி இருக்கறது போலத் தான் தெரியுது" என்று கூற,

சத்தமாகச் சிரித்தவன்...

"அப்போ புலி எப்படி வேட்டையாடும்னு காட்டட்டா?" என்று அவளைத் தன் மேல் இருந்து புரட்டி கீழே சாய்த்து அவளின் கழுத்தில் தன் உதடுகளை அழுத்தமாகப் பதிக்க,

"ஐயோ! வேண்டாம்... உங்க வேகத்தை என்னால தாங்கிக்க முடியும்... ஆனால் இந்தக் குட்டி புலி தாங்காது" என்று அவள் கத்த,

அழுத்தமாகத் தன் இதழ்களைப் பதித்திருந்தவன் அதனை அப்படியே ஒத்தடமாக மாற்ற, ஒத்தடங்கள் கழுத்தோடு நிற்கவில்லை...

அவள் கைகளில் அணிந்திருந்த கண்ணாடி வளையல்கள் வெகு நேரம் சிணுங்கி கொண்டே இருந்ததில் அந்த அறையே மெல்லிய கீர்த்தனைகளால் மூழ்கித் திளைத்தது....



அர்ஜூன் அவன் இதயத்தை மூழ்கடித்திருந்த காதலால் தன் மனைவியைத் திக்குமுக்காடச் செய்ய, மாமனாரும், மாமியாரும் பெற்ற மகளைப் போல் அக்கறையுடனும், அனுசரணையுடனும் அவளைக் கவனித்துக் கொள்ள, திவ்யாவின் கர்ப்பக் காலம் முழுவதும் சொர்க்கமாகவே இருந்தது என்றே சொல்லலாம்...

அவளின் பாதம் தரையில் படாமல் புகுந்த வீட்டினர் அனைவரும் அவளைக் கண்ணின் மணி போல் பார்த்துக் கொள்ள, அவ்வப்பொழுது காண வந்து சென்ற அவளின் பிறந்த வீட்டாரும் அவளைத் தாங்கு தாங்கென்று தாங்க, உள்ளம் முழுவதும் மகிழ்ச்சியில் திளைத்துப் பூரித்துப் போயிருந்தாலும்,

பிரசவத்திற்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்க, வழக்கமாக எல்லாப் பெண்களுக்கும் பேறு காலத்தின் போது பிரசவத்தின் முடிவைப் பற்றிய அச்சமும், அதனால் ஏற்படப் போகிற வலியை நினைத்து திகிலும், ஒரு வேளை தனக்கு ஏதாவது ஆகிவிட்டால் தன் கணவர் நானில்லாமல் என்ன செய்வார் என்ற அதீத கவலையும் தோன்றியதில் மனமுழுவதும் கலங்கிப் போயிருந்தவளுக்கு ஏனோ அன்று கோவிலுக்குச் செல்ல வேண்டும் போல் இருந்தது...

தன் அறையில் இருந்த ஸ்ரீயிடம் வந்தவள்......

"அத்தை... எனக்குக் கோவிலுக்குப் போகனும் போல் இருக்கு அத்த... இன்னும் இரண்டு வாரத்துல பிரசவம் ஆயிடுச்சுன்னா அப்புறம் எப்போ கோவிலுக்குப் போக முடியும்னு தெரியலை... அதனால ஒரு ஆறு மணி போல் போயிட்டு வரட்டுமா?" என்று தயங்கியவாறே கேட்க...

பிரசவத்திற்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருந்தாலும் முதல் நாள் காலையில் மருத்துவரிடம் பரிசோதனை செய்யச் சென்றிருந்தவர்களிடம் குழந்தை இருக்கும் நிலையைப் பார்த்தால் எந்த நேரமும் பிரசவம் ஆக வாய்ப்பிருக்கிறது என்று அறிவுறுத்தி இருந்ததால் அவளை வீட்டை விட்டு எங்கும் செல்லக் கூடாது என்று அர்ஜூன் கட்டளையிட்டு இருந்தான்...

ஆனால் அதே சமயம் அவள் கேட்கும் விதத்திலேயே தெரிந்தது அவள் பிரசவத்தை நினைத்து எவ்வளவு பயந்துப் போயிருக்கிறாள் என்று...

ஆதலால் அவளின் ஆசையை மறுக்க முடியாமல்...

"சரிடா... நீ அர்ஜூன் கிட்ட ஃபோன் போட்டு எப்போ வர முடியும்னு கேளு... கூட மஹாவையும் கூட்டிட்டுப் போ... இப்பத் தான் உங்க மாமா ஃபோன் பண்ணி தலை வலிக்குது, அதனால சீக்கிரம் வரேன்னு சொல்லிருக்கிறார்... இல்லைன்னா நானே உன் கூட வந்துடுவேன்" என்றார்...

சரி என்றவள் அர்ஜூனின் அலை பேசிக்கு அழைக்க, அவள் கோவிலுக்குப் போக வேண்டும் என்று சொன்னதைக் கேட்டதுமே எதிர்முனையில் காட்டுக் கத்தல் கத்தினான் அவள் கணவன்...

"என்ன திவி? டெலிவரி டைம் நெருங்கிக்கிட்டு இருக்கு... நேத்து தான டாக்டர் எப்ப வேணாலும் குழந்தைப் பிறக்கும்னு சொன்னாங்க... இப்ப அவசியம் கோவிலுக்குப் போகனுமா? ஏன், வீட்டில் இருந்தே சாமி கும்பிடக் கூடாதா?"

கணவனின் காட்டுக் கூச்சலில் அடங்கிப் போனவள்...

"அதான, யார்கிட்ட போய்க் கேட்கிறேன் பாரு? இவருக்கும் கடவுளுக்கும் ஏற்கனவே காத தூரம்... இதுல இப்ப நான் இருக்கிற நிலையில நிச்சயம் வேண்டாம் தான சொல்லுவாங்க" என்று நினைத்தவள் ஏண்டா கேட்டோம் என்பது போல் அமைதியாக இருக்க, அவளின் அமைதி அவன் மனதை குடைந்ததில்,

"சரி... எனக்கு இன்னைக்கு ஆஃப்டெர்நூன் சில முக்கிய மீட்டிங்க்ஸ் இருக்கு... அது முடிஞ்சவுடனே கூட்டிட்டு போறேன்" என்றான்...

பாலா தலை வலிக் காரணமாக வீட்டிற்கு வரவும், ஸ்ரீ அவருடனே இருக்க வேண்டி மஹாவைத் திவ்யாவுடன் போகச் சொல்ல, இருவரும் கிளம்பி அர்ஜூனிற்காகக் காத்திருக்க, ஆனால் மணி ஆறாகியும் அவன் வருவது போல் தெரியவில்லை....

பார்த்த விழிகள் பூத்திருக்க, கணவனை அழைத்தவளிடம்...

"ஸாரி திவி.... சுத்தமா மறந்துட்டேன்... இப்போ என்னால வர முடியாது... நாளைக்கு வேண்டுமானால் போகலாமா?" என்றான்...

ஆனால் திவ்யாவிற்கு என்னவோ கோவிலுக்குக் கிளம்பிவிட்டுப் போகாமல் இருப்பது சரியில்லை என்று மனதிற்குள் படவும், தான் கேட்கப் போகும் கேள்வியில் நிச்சயம் தன் கணவன் தாம் தூமென்று குதிப்பான் என்று தெரிந்தும் வேறு வழியில்லாமல் தயங்கியவாறே...

"ஏங்க, இங்க இருக்கிற கோயில் தானே... நானும் மஹா அண்ணியும் போய்ட்டு வந்திடறோமே... ஏற்கனவே கிளம்பிட்டோம்" எனவும்...

அவள் எதிர்பார்த்தது போலவே அவனின் கோபம் அதிகரித்ததில் அவனின் சத்தமும் அதிகரிக்க, அவளுக்குத் தான் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது...

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் எல்லாம் வெளியே போவதே இல்லையா என்று மனதிற்குள்ளே உழன்றுக் கொண்டிருந்தவள் அவன் அலை பேசி அணைப்பைத் துண்டிக்கவும், புடவையைக் கூட மாற்ற மனமில்லாமல் சோர்வாக ஹாலில் அமர்ந்திருக்க,

விதி தன் கரங்களை மீண்டும் அர்ஜூன் திவ்யாவின் வாழ்க்கையில் விளையாட நீட்டியது போல் மனைவியின் வருத்தத்தைப் புரிந்து அவளை மீண்டும் அழைத்துக் கோவிலுக்குச் செல்ல அரை மனதோடு அனுமதி வழங்கினான் அர்ஜூன்...

என்ன தான் அவளின் நிலைப் புரிந்து கர்ப்பமாக இருக்கும் தன் மனைவி மனம் கலங்கக் கூடாதென்று அவளைச் செல்ல அனுமதித்து இருந்தாலும் ஏனோ அர்ஜூனின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது...

தனக்குப் பிடித்த ஏதோ ஒன்று தன்னை விட்டு வெகு தூரம் போவது போல் ஒரு உணர்வு தோன்ற, பற்பல எண்ணங்களினால் ஏற்பட்ட அலைகளினால் இதயத்தின் துடிப்பு கூட அதிகரித்தது போல் இருக்கக் கதிரை அழைத்தவன் மீதம் இருக்கும் அலுவல்களை உடனே தன் மேஜைக்குக் கொண்டு வரப் பணித்தவன் விரைவாக முடித்துத் தானும் கோவிலுக்குச் சென்று திவ்யாவை சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்தான்...

ஆனால் நமது எண்ணங்களின் வேகத்தை விட விதியின் கோரத்தின் வேகம் அதிகமானது என்பது புரிய அர்ஜூனிற்குச் சில மணி நேரங்கள் ஆனது...

புரிந்தபொழுது அவனின் பாதங்களுக்குக் கீழ் பூமி பிளந்து அவனை அதளப் பாதாளத்திற்கு இழுத்துச் சென்றது!!!!!

சிறிது நேரத்திற்கு முன் கோவிலுக்குப் போகவே கூடாது என்று கத்திய கணவன் ஏனோ திடீரென்று மனம் மாறி அவள் போவதற்கு அனுமதி வழங்கவும், அவன் சரி என்றதே பெரிது என்று நினைத்து விரைவாகக் கிளம்பிய மஹாவும் திவ்யாவும் கோவிலுக்குச் செல்ல, அவர்களின் காரைப் பின் தொடர்ந்த வந்த மூவரில் ஒருவன் யாரோ ஒருவனுக்கு அலை பேசியில் அழைத்தான்...

கோவிலுக்குள் நுழைந்தவர்கள் அம்பாளின் சந்நிதானதிற்குச் சென்று அர்ஜூனின் பேரில் அர்ச்சனை செய்ய, தன் கணவனிற்க்காகவும், பிறக்கப் போகும் தங்களின் வாரிசிற்காகவும் மனம் உருக திவ்யா பிராத்தனை செய்தாள் என்றால், தன் மனம் கவர்ந்தவனின் முகத்தைக் கண் முன் கொண்டு வந்து விழிகளில் நீர் தளும்பத் தங்கள் காதலின் பாதையை நினைத்து கலங்கிப் போய் மஹா வேண்டிக் கொண்டாள்...

அர்ச்சனை முடிந்ததும் அர்ச்சகரிடம் திருநீறும் குங்குமும் பெற்றுக் கொண்டு வெளிப் பிரகாரத்திற்கு வந்தவர்கள் அருகில் ஒரு இடம் பார்த்து அமரவும் திவ்யாவின் இடுப்பில் சுளீர் என்று வலிக்கவும் நேரம் சரியாக இருந்தது..

இடுப்பைப் பிடித்துக் கொண்டே மெல்ல அமர்ந்தவளின் முகத்தில் தெரிந்த மாற்றத்தை கவனித்து அதிர்ந்த மஹா...

"அண்ணி என்னாச்சு? வலிக்குதா?" என்று பதற,

"ஆமாம் அண்ணி" என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு...

திவ்யாவின் கரம் பற்றி மெல்ல எழுப்பியவள் அவளைத் தன் கரங்களுக்குள் வைத்துக் கொண்டு கோவிலின் வாயிலை நோக்கி நடக்க, சரியாக மஹாவின் அலை பேசிக்கு கலா அழைக்கவும் அலை பேசியில் ஒளிர்ந்த அவரின் எண்ணைப் பார்த்துத் திவ்யாவிடம் கொடுக்க..

"திவ்யா, இப்ப தான் ஸ்ரீயிடம் பேசினேன்... நீ உன் ஃபோன வீட்டில் வச்சிட்டு வந்ததா சொன்னா... ஆனால் ஏம்மா இந்த நேரத்தில் இப்படி வெளியில வர்ற?"

"இல்லம்மா... எனக்கு என்னமோ கோவிலுக்கு வரனும்னு தோனுச்சு... அவங்களும் கூட வரதா தான் சொன்னாங்க... அப்புறம் அவங்களுக்கு முடியலை... அதனால நானும் மஹா அண்ணியும் கோவிலுக்கு வந்தோம்..." என்றவளுக்கு மீண்டும் இடுப்பில் சுளீர் என்று வலியெடுக்கத் தன்னையும் அறியாமல் "ஷ்" என்றவளின் குரலை எதிர்முனையில் கேட்ட கலாவிற்குப் பகீரென்றது...

"திவ்யா... என்னம்மா... வலிக்குதா?" என்ற அவரின் பதற்றத்தைக் கண்டவளுக்கு அவரின் கலக்கம் புரிய, தன் அன்னையைச் சமாதனப் படுத்தும் விதமாக....

"ஆமாம்மா, ஆனா ரொம்ப இல்ல... லேசாத்தான் வலிக்குது" என்று பொய்யுரைத்தவள்...

"அம்மா... நாங்க இரண்டு பேரும் இதோ வீட்டுக்கு கிளம்பிட்டோம்" எனவும்...

"பிரசவத்திற்கு இன்னும் ரெண்டு வாரம் இருக்கு திவ்யா... பொய் வலியா கூட இருக்கும்... ஆனால் இதுக்குத் தான் சொல்றது... இந்த மாதிரி நேரத்தில் இப்படி வெளியில் வரக் கூடாதுன்னு.. முதல்ல உடனே வீட்டிற்குப் போங்க... ரொம்ப வலிச்சா ஸ்ரீக்கிட்ட சொல்லும்மா.. என்னையும் கூப்பிடு... என்ன?" என்றார்...

திவ்யாவிற்கு மீண்டும் வலி எடுத்ததில் அதிர்ந்து கலங்கித் தவித்துப் போயிருந்த மஹா அவள் அலை பேசியில் பேசுவதைக் கவனித்துக் கொண்டே வர, இரண்டு முறை சுளீரென்று வலியெடுத்ததில் துடித்துக் கொண்டிருந்த திவ்யாவும் மெல்ல நடந்து கோவிலை விட்டு வெளியே வர, இருவரும் தங்களின் காரை நோக்கி நடக்கவும்,

அவர்கள் கோவிலில் இருந்து வெளியே வந்த அந்த நிமிடத்தில் இருந்து மறைந்திருந்தவாறே அவர்களைப் பின் தொடர்ந்து வந்த அந்த மூவரையும் இருவருமே கவனிக்கத் தவறினார்கள்....

இதற்கு மேலும் தன் அன்னையைக் கலங்கடிக்க மனமில்லாமல் அலை பேசி அணைப்பைத் துண்டிப்பதற்காகத் திவ்யா...

"சரிம்மா, நான் அப்புறமா............" என்று கூறி முடிக்கும் முன்னரே,

அந்த மூவரில் ஒருவன் அவளின் வாய் பொத்தி தங்களுடைய வேனில் ஏற்றினான், கூடவே மஹாவையும்...

திடீரென்று இருவரின் வாய்களும் ஒரே நொடியில் சேர்ந்தது போல் மூடப் படவும், அதே நேரத்தில் இருவரையும் மல்லுக் கட்டி அந்த மூவரும் அவர்களை வேனில் ஏற்றவும், ஏற்கனவே பிரசவ வலியின் துவக்கத்தில் இருந்த திவ்யா தடுமாறியதில் தனது கையில் இருந்த அலை பேசியையும் தவற விட, இருவரும் என்ன நடந்தது என்று சுதாரிக்கும் முன் அவர்களை ஏற்றி இருந்த வேன் காற்றை விட அதிக வேகமெடுத்துப் பறந்தது...

திவ்யாவுடன் பேசிக் கொண்டிருந்த கலாவிற்குத் திடீரென்று அவள் பேச்சு தடைப்பட்டதும், பின் ஏதேதோ சத்தங்கள் கேட்கவும் பெற்ற வயிறு கலங்க "திவ்யா… திவ்யா" என்று கத்தினாலும் அவள் பதில் பேசாததில் இருந்து அங்கு ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்று உணர்ந்தவரின் மனதிற்குள் திகில் சூழ்ந்ததினால் மயக்கமே வரும் போல் இருக்க, தடுமாறியவர் சட்டென்று சுதாரித்து ஸ்ரீக்கு அழைத்தவர் விஷயத்தைச் சொல்லவும்,

"ஐயோ! ஒரு வேளை வலி வந்துவிட்டதோ... இந்தப் பொண்ணு சொல்ற பேச்சைக் கேட்டால் தானே... " என்று நினைத்தவர் பதற்றத்துடன் மஹாவின் அலை பேசிக்கு மீண்டும் மீண்டும் அழைக்க, கோவிலின் வாயிலில் அனாதையாகக் கிடந்த அலை பேசியால் பயனில்லாமல் போனது....

திவ்யாவும் மஹாவும் கோவில் வாசலுக்கு வந்த பொழுதே அவர்களைக் கவனித்து விட்ட ட்ரைவர் முருகன் அவர்களுக்காகக் காரின் கதவை திறந்து வைத்து நின்றவர் திடீரென்று மூவர் அவர்களின் வாயை மூடி வேனிற்குள் தூக்கிப் போட்டு செல்வதைப் பார்த்தவர் அரண்டு அடித்து ஓடி வர, அதற்குள் வேன் மின்னல் வேகத்தில் அவரின் கண்களில் இருந்து மறைந்து இருந்தது...

அனைத்தும் சடுதியில் கிட்டத்தட்ட இரு நிமிடங்களுக்குள் நடந்து முடிந்தது என்றே சொல்லலாம்....

ஒரு நிமிடம் அதிர்ந்து, திகைத்து, நிலைக்குலைந்து ஒன்றும் செய்யத் தெரியாது உடல் நடுங்க நின்றிருந்தவர் பின் தன்னைச் சுதாரித்து வெளிப்படையாக நடுங்கும் விரல்களுடன் அர்ஜூனின் அலை பேசிக்கு அழைக்க,

திவ்யாவை அவள் கர்ப்பம் தரித்த விஷயம் அறிந்த நாளன்று கோவிலில் சந்தித்தை நினைத்து, அப்பொழுது அவள் அதிசயித்துக் கண்களை அகல விரித்துப் பூரித்துப் போய்த் தன்னைப் பார்த்திருந்ததை நினைத்த அர்ஜூன் இன்றும் அதனைப் போலவே அவளுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுக்கும் ஆர்வத்துடன் கோவிலுக்குக் கிளம்ப நினைத்த அதே நேரத்தில் ட்ரைவர் முருகன் அர்ஜூனின் அலை பேசியில் அழைக்க...

வழக்கமாக அர்ஜூனின் வீட்டில் வேலைப் பார்க்கும் எவரும் ஸ்ரீயிடம் தான் தங்களின் தேவைகளைச் சொல்லுவார்கள்... அப்படியே அதில் அர்ஜூன் சம்பந்தப்பட வேண்டும் என்றால் அது ஸ்ரீயின் முலமாகத் தான் அவன் காதுகளுக்கே சென்றடையும்.

அவனிடம் நேருக்கு நேருக்கு நின்று பேசுவதற்கோ அல்லது இவ்வாறு அலை பேசியில் அழைப்பதற்கோ ஒருவருக்கும் அங்குத் தைரியம் இருந்ததில்லை... தன் உடன் பிறந்தவர்களே அவ்வாறு அஞ்சியிருக்கும் பொழுது வேலையாட்களைப் பற்றியும் சொல்லவும் வேண்டுமா என்ன?

அப்படி இருக்க இன்று தன் அலை பேசியில் ட்ரைவர் முருகனின் எண் ஒளிரவும் திவ்யா அவரோடு தான் காரில் கோவிலுக்குப் போயிருக்கிறாள் என்று ஏற்கனவே அர்ஜூனிற்குத் தெரியும்.... இதில் அவன் உள் மனம் வேறு காலையில் இருந்தே எதுவோ சரியில்லை என்று உணர்த்திக் கொண்டே இருந்ததால் அவரின் எண்ணை பார்த்ததும் சில நொடிகளுக்குள் இவை அணைத்தையும் தன் புருவங்களைச் சுருக்கி யோசித்தவனின் மனம் சடுதியில் அங்கும் இங்கும் அலைபாய, அழைப்பை எடுத்தவன் ஹலோ என்று சொல்லும் முன்பே...

"ஸா.... ஸார்... நம்ம திவ்யா அம்மாவையும், மஹா அம்மாவையும் மூனு பேரு ஒரு வேன்ல தூ... தூ... தூக்கிட்டு போயிட்டாங்க ஸார்...." என்று முருகன் பட்டென்று விஷயத்தைப் போட்டு உடைத்துச் சத்தமாக அலறினார்...

தான் திவ்யாவை காண்பதற்கு விரைவில் கிளம்ப வேண்டியிருந்ததால் கதிரிடம் அன்றைய மீதி அலுவல்களை ஒப்படைப்பதற்குக் கலந்து ஆலோசித்துக் கொண்டிருக்க, அலை பேசியில் ஒளிர்ந்த எண்ணை பார்த்ததும் தன் MD சில விநாடிகள் புருவங்களைச் சுருக்கி யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஏதோ விவகாரமான அழைப்பாக இருக்குமோ என்று கதிர் சிந்தித்துக் கொண்டிருக்க, ட்ரைவர் முருகன் சொன்ன விஷயத்தைக் கேள்விப்பட்ட அந்த விநாடி அர்ஜூன்....

"வாஆஆஆட் {WHAT} " என்று கத்தி எழுந்த வேகத்தில் அவன் அமர்ந்திருந்த நாற்காலி வெகு தூரம் போய்த் தெறித்து விழ, தன் MD யின் குரலின் கர்ஜனையில், அவனின் முகத்தில் தெரிந்த அதிர்வில், அவன் கண்களில் தெரிந்த ரௌத்திரத்தில் கதி கலங்கி போய் நின்றான் கதிர்..

தொடரும்..
 

JB

Administrator
Staff member
அத்தியாயம் - 32

அர்ஜூனின் கர்ஜனை ஒலி அவன் ஏஸி அறையையும் தாண்டி, மாலையானதும் அலுவலக வேலை முடிந்து வீட்டிற்குச் சென்றிருந்தவர்கள் போக மீதம் இருந்த ஊழியர்களின் செவிகளிலும் கேட்டது…

கேட்ட அந்த விநாடியே தாங்கள் அமர்ந்திர்ந்த நாற்காலிகளை விட்டு அவர்கள் அதிர்ந்து விருட்டென்று எழ, ஆனால் தங்கள் MD யின் அறைக்குள் அவன் அனுமதி இல்லாமல் செல்ல ஒருவருக்கும் துணிவில்லாததால் ஒருவர் முகத்தை ஒருவர் கலக்கத்தோடும் அச்சத்தோடும் பார்த்திருக்க, அறைக்கு வெளியே இருந்தவர்களின் நிலைமையே இதுவென்றால் அர்ஜூனின் அறைக்குள்ளே அவன் அருகில் நின்றிருந்த கதிரின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது....

"முருகன்.... நீங்க என்ன சொல்றீங்க?" என்று மீண்டும் தன்னைத் தெளிவுப்படுத்திக் கொள்ளவும், தான் தன் காதுகளில் கேட்டது உண்மையாக இருக்கக் கூடாது என்று மனம் தவித்துத் துடித்ததினாலேயும் அர்ஜூன் கேட்க,

"ஸார்... திவ்யா அம்மாவும் மஹா அம்மாவும் கோவில்ல இருந்து வெளிய வந்ததப் பார்த்ததும் நான் அவங்களுக்காக நம்ம கார் கதவைத் திறந்துவச்சிட்டுக் காத்திட்டிருந்தேன்.... ஆனால் அதற்குள்ள இப்படி நடந்திடுச்சு ஸார்" என்று பதறி துடிக்கவும்...

நடந்திருக்கும் அசம்பாவிதத்தின் நிலைமையின் வீரியமும் அதன் விபரீதமும் புரிந்து போனது அர்ஜூனிற்கு...

சட்டென்று கதிரைத் திரும்பி பார்க்க, அர்ஜூனின் கூரிய பார்வையும், செக்கச்செவேலென்று சிவந்திருந்த அவனின் அனல் கக்கும் முகமும் கதிருக்கு கிலி உண்டாக்கியதில் அவன் இதயத்தைத் தாறுமாறாகத் துடிக்க வைக்க, கதிரின் மேல் நிலைத்திருந்த தன் பார்வையை மாற்றாமல்...

"முருகன்.. நீங்க அங்கேயே இருங்க.... நான் வந்துட்டேன்" என்ற அர்ஜூனின் முகத்தில் சில நிமிடங்களுக்குள் தெரிந்த பல் வேறு உணர்வுகளைக் கண்டவனுக்கு, எந்த உணர்வுகளையும் வெளிப்படையாகக் காட்டாத தன் MD யின் முகத்தில் முதன் முறையாகத் தெரிந்த கோப அக்கினி ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிட்டது என்று உரைக்க, அவனிடம் கேள்வி எதுவும் கேட்கும் தைரியம் இல்லாமல் அவனையே பார்த்திருக்க...

"கதிர்.... கால் தி கமிஷனர் நௌ (CALL THE COMMISSIONER NOW) " என்று கர்ஜித்த அர்ஜூன் தன் அலை பேசியில் அருணுக்கு அழைத்து விஷயத்தைச் சொன்ன அந்த நொடி அங்கு அருண் அலறி அடித்து எழுந்ததில் அருணிற்கு அருகில் அவனோடு அமர்ந்திருந்த அவனுடைய நண்பர்கள் அரண்டுப் போனார்கள்...

அருணிடம் தன் வீட்டுப் பெண்கள் இருவரும் கடத்தப்பட்ட விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஸ்ரீயும் அழைக்க, அவரிடம் என்ன சொல்வது என்று குழம்பிய அர்ஜூன் அழைப்பை எடுக்க, அவன் அழைப்பை எடுத்ததும் என்றும் இல்லாமல் இன்று அர்ஜூனின் குரலில் தெரிந்த பதட்டத்தை உணர்ந்தவர் அவனை விடாப் பிடியாகக் கேட்கவும், உண்மையைச் சொன்னவன்,

"மாம்... டோண்ட் வொர்ரி.... தே வில் பி ஹியர் சூன்.... ( Mom, Don't worry.... They will be here soon)" என்றவன் அலை பேசியை துண்டிக்க முற்பட,

அடுத்து அவன் அன்னை சொன்ன....

"அர்ஜூன்... கோவில்ல இருக்கும் போது திவ்யா கலாவிடம் பேசிருக்கா... பேசிட்டு இருக்கும் போதே வலி வந்துச்சுன்னு சொன்னாளாம்பா... எனக்கு ரொம்பப் பயமா இருக்கு அர்ஜூன்" என்ற வார்த்தைகளில் பல ஆயிரம் மடங்கு தெறிக்கும் இடியை தன் தலையில் தூக்கி போட்டது போன்று உணர்ந்து துடித்த அர்ஜூன்....

"கதிர்.... கமிஷனரைப் பிடிச்சீங்களா?" என்று கத்தியதில் சகலமும் நடுங்கி ஒடுங்க....

"சார்... கமிஷனர் லைனில் இருக்கார்" என்று தன் அலை பேசியை அவனிடம் கொடுத்தான் கதிர்...

அர்ஜூனின் வீட்டை கடந்த சில நாட்களாகக் கண்காணித்துக் கொண்டிருந்தவர்கள் திவ்யாவும், மஹாவும் தனித்துக் காரில் வெளியே கிளம்பியதும் யாருக்கோ துப்புக் கொடுக்க, இதற்காகவே காத்துக் கொண்டிருந்ததுப் போல் சடுதியில் புயல் வேகத்தில் வந்த மூவர் அடங்கிய ஒரு வேன் அவர்களைப் பின் தொடரவும், திவ்யாவும் மஹாவும் கோவிலுக்குள் நுழைந்தவுடன் யாரோ ஒருவனுக்கு அழைத்து விவரத்தைச் சொன்னவர்கள் அவர்கள் இருவரையும் தூக்க தயாராக கோவிலில் வாயிலிலேயே கண்கொத்திப் பாம்பாகக் காத்திருந்தனர்....

திவ்யாவும், மஹாவும் கோவிலை விட்டு வெளியில் வந்த நிமிடமே அவர்களைத் தொடர்ந்து வந்த அந்த மூவரும் சகலத்தையும் இரண்டே நிமிடங்களில் முடித்துவிட்டிருந்ததாலும், அவர்கள் கடத்தப்படும் பொழுது இருட்டாக இருந்ததாலும், அன்று விஷேச நாளோ அல்லது வெள்ளிக்கிழமையோ எதுவும் இல்லாததால் கோவிலில் கூட்டமும் அவ்வளவாக இல்லாததாலும், ஒருவருக்கும் கடத்தலைப் பற்றிய விஷயம் தெரிந்திருக்கவில்லை....

இதில் திவ்யா மஹாவின் வாயைப் பொத்தி வேனில் ஏற்றுவதைக் கண்டு ஓடி வருவதற்குள் அவர்களின் வேன் பறந்துவிட்டிருந்ததால் பதற்றத்தில் ட்ரைவர் முருகனோ வேனின் அடையாளங்களைக் கூடச் சரியாகக் கவனிக்கவில்லை என்றால், வேனின் எண் தகட்டை [ Number plate ] அவரால் அவ்வளவு தூரத்தில் இருந்து எப்படிப் பார்த்திருக்க முடியும்?

கமிஷனிரிடம் விஷயத்தைச் சொன்ன அர்ஜூன் மின்னல் வேகத்தில் தன் அறையை விட்டு வெளியேற, அவனின் வேகமும், அவன் முகத்தில் தெரிந்த ரௌத்திரமும் அவன் அறையின் அருகில் கூடியிருந்த அனைத்து ஊழியர்களையும் தன்னிச்சையாக அவன் பாதையை விட்டு விருட்டென்று விலகச் செய்ய, அவன் ஓடிய வேகத்தில் ரிஷப்ஷனிஸ்டுகள் முதல் வரவேற்பறையில் அமர்ந்திருந்த அனைவரும் அலறி அடித்து என்னவென்று பார்க்க, அதற்குள் அவன் கார் அசுர வேகத்தில் கோவிலை நோக்கி பறந்திருந்தது....

காரை செலுத்திக் கொண்டிருந்தவன் தன் தலையை அழுந்த கோதிக் கொண்டே "ஷிட்... ஷிட்.... ஷிட்...." என்று கத்திக் கொண்டு ஸ்டியரிங்கில் அடித்தவாறே காரை செலுத்திக் கொண்டு வர, அவனின் வேகத்திற்குச் சென்னையின் சாலைகளில் ஊர்ந்து கொண்டிருந்த வாகனங்கள் கூட அரண்டடித்து வழி விட,

சில நிமிடங்களிலேயே கோவிலை அடைந்தவன், காரை செலுத்திக் கொண்டு வந்த அதே வேகத்திலேயே கோவிலுக்குப் பக்கத்தில் கிரீச்சென்று ப்ரேக்கை அழுத்தி காரை நிறுத்தியதை பார்த்த ட்ரைவர் முருகனுக்குப் புரிந்து போனது தனது பரிதாப நிலைமை...

காரை நிறுத்திய வேகத்தில் புயல் போல் முருகனின் அருகில் வந்தவன் அவரின் சட்டையின் காலரை இரு கரங்களாலும் இறுக்கிக் கோர்த்துப் பிடித்து...

"அவங்கள கடத்துற வரைக்கும் நீங்க வேடிக்கை பார்த்துட்டு இருந்தீங்களா?" என்று தன் ஒட்டு மொத்த கோபத்தையும் அவர் மீது காட்டி காட்டுக் கத்தல் கத்த, அர்ஜூன் வருவதற்குள் கோவிலை வந்தடைந்திருந்த கமிஷனர் அவனின் வெடிக்கும் ஆத்திரத்தை, ஆங்காரத்தைக் கண்டு சட்டென்று அவர்கள் அருகில் வந்தவர் அர்ஜூனின் தோள் பற்றி.....

"அர்ஜூன்.. இவரை ப்ளேம் பண்ணி பிரயோஜனமில்லை.... இங்க ஒருத்தரும் அவங்களைக் கடத்துனதைப் பார்க்கலை...." எனவும்...

அவரைச் விருட்டென்று திரும்பி தீப் பார்வைப் பார்த்தவன்...

"எப்படி ஸார்? ஹவ் இஸ் தெட் பாஸிபிள்? [ How is that possible?] ... பப்ளிக்ல அதுவும் இவ்வளவு பிஸியாக இருக்கிற இடத்தில் இருந்து இரெண்டு பொண்ணுங்க, அதுவும் ஒருத்தி ப்ரெக்னென்ட்...." இதனைச் சொல்லும் பொழுது வாழ்நாளின் முதல் முறை அர்ஜூனின் குரல் கூடத் தடுமாறியதோ என்றே நினைக்கத் தோன்றியது ட்ரைவர் முருகனிற்கு...

தன்னைச் சடுதியில் சமன் படுத்தியவன்...

"ஒருத்தி ப்ரெக்னென்ட் வேறு... எப்படி யாரு கண்ணிலேயும் படாமல் இவங்களைக் கடத்தி இருக்க முடியும்?"

அர்ஜூனின் கேள்வியில் இருக்கும் நியாயம் கமிஷனருக்கும் புரிந்து தான் இருந்தது... ஆனால் இது தான் நம் நாட்டின் நிலைமையே... வீதியில் நடக்கும் குற்றங்களில் தாங்களோ தங்கள் குடும்பத்தாரோ அல்லது வேண்டப்பட்டவர்களோ சம்பந்தப்பட்டிருந்தால் மட்டுமே அடித்துப் பிடித்து முன் வருவார்கள் நம் மக்கள்... இல்லை என்றால் வேடிக்கைப் பார்ப்பதற்குக் கூடும் கூட்டத்தில் ஒரு கால் சதவிகிதம் கூட நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்கவோ அல்லது காவல் துறையினருக்கு உதவி புரியவோ முன் வருவதில்லை...

ஆனால் அதே சமயம் ஒட்டு மொத்த பழியையும் பொது மக்களின் மீது போடுவதும் அபத்தம் தான்... உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் உயிர், அவன் உயிரின் பாதுகாப்பு முக்கியமில்லையா?????

"அர்ஜுன்... யாரும் பார்க்காமல் இருந்திருக்க முடியாது... பட் ஒருவரும் முன் வர மாட்டேங்கறாங்க" என்றவருக்கு அர்ஜூனின் நிலைமையும் நன்றாகப் புரிய, அவனின் தோளைத் தொட்டு அழுத்தியவர் அவன் முகத்தைக் கூர்ந்துப் பார்த்தவாறே...

"உங்களுக்கு யார் மேலேயும் சந்தேகம் இருக்கா அர்ஜூன்???... பெர்ஸ்னலா அல்லது பிஸினஸில்?" என்றார்...

அவன் யாரென்று சொல்வான்... தொழில் என்று வந்தாலே போட்டியாளர்களும், எதிரிகளும் இருக்கத் தானே செய்வார்கள்....

அதிலும் தன் அன்னையின் வயிற்றில் கருவாக உருவாகி இருந்த முதல் நாளில் இருந்தே "பயம்" என்ற ஒரு வார்த்தையையே தன் அகராதியில் இருந்து அகற்றியிருந்த, தொழில் வட்டாரத்தில் எதற்கும் யாருக்கும் அஞ்சாத நெஞ்சம் படைத்தவன் என்று பெயரெடுத்திருந்த,

இந்த இளம் வயதிலேயே தன்னுடைய அதிரடி ஆட்டங்களாலேயும், தொழிலில் நேர்மையாகத் தன்னை எதிர்க்காமல் முதுகில் குத்த முயற்சி செய்பவர்களையும், தன்னுடைய ஈவு இரக்கமற்ற, அச்சமென்பதே துளி அளவும் இல்லாத அசுரத்தனமான நடவடிக்கைகளால் அவர்களைத் துவம்சம் செய்யும் அரக்கன் என்று பெயரெடுத்திருந்தவனிற்கா எதிரிகள் இருக்க மாட்டார்கள்?

ஆனால் அதே சமயம் அவனின் ஆக்ரோஷமும், கோபமும், அதிகாரமும் தெரிந்தவர்கள் ஒருவரும் அவன் தங்கையையும், மனைவியையுமே கடத்தும் அளவிற்கு நிச்சயம் துணிய மாட்டார்கள்...

அப்படித் துணிந்திருந்தால் அவர்களின் வாழ்வை மட்டும் அல்ல, அவர்களின் அடிக் கிளைவரை ஒருவரையும் விடாது அவன் வெட்டி வீழ்த்திவிடுவான் என்று அவனைப் பற்றித் தெரிந்த யாவருக்கும் தெரியுமே...

கமிஷனரின் கேள்விக்கு யோசிக்கத் துவங்கியவனின் மூளை சூடாகி ஏற்கனவே அக்கினி மலைப் போல் கொதித்துக் கொண்டிருந்த உள்ளம் மேலும் வெடித்துச் சிதறும் நிலைக்கு வர, அவனை அமைதிப்படுத்திய கமிஷனர் தன்னுடன் இருந்த காவலர்கள் அனைவரையும் அழைத்தவர் கோவிலைச் சுற்றியும், அதன் சுற்றுவட்டாரத்திலேயும் ட்ரைவர் முருகன் சொன்ன அடையாளங்களுடன் ஏதாவது வேன் சென்றிருந்ததா, அல்லது யாராவது ஒருவர் கண்ணிலாவது வேனில் இருந்தவர்களில் ஒருவராவது பட்டிருந்தார்களா என்று விசாரிக்கச் சொன்னவர் அர்ஜூனை அழைத்துக் கொண்டு அவன் அலுவலகத்திற்குக் கிளம்ப....

அதற்குள் திவ்யாவின் நிலைமை பற்றி விசாரிக்க மீண்டும் ஸ்ரீயை அழைத்த கலாவிடம் மறைக்க முடியாமல் ஸ்ரீ நடந்த அனைத்தையும் சொல்ல அரண்டு அடித்துக் கொண்டு வாடகை டேக்ஸி பிடித்துச் சென்னை கிளம்பினார் கலா... தன் கணவனுடனும், வினோத்துடனும்...

ஒரே குடும்பத்தில் இரண்டு பெண்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள்.... அதிலும் ஒருத்தி நிறைமாத கர்ப்பிணி...

அந்தக் குடும்பத்தினரின் பதட்டமும், கலக்கமும், அச்சமும் சொல்வதற்கு வார்த்தையில்லை... ஒரு தடயமும், துப்பும் கிடைக்காமல் காவல் துறையும் முடியைப் பிய்த்துக் கொள்ள நேரம் ஆகிக் கொண்டே இருந்தது...

அர்ஜூனின் கார் அவனுடைய அலுவலகத்தை நோக்கி பறக்க, அவனைத் தொடர்ந்து கமிஷனரின் காரும் விரையவும், அவர்கள் அலுவலகத்தை அடையும் முன் அருணும் வந்து சேர்ந்திருக்க, அர்ஜூன் காரில் இருந்து இறங்கியதும் அவனை நோக்கி ஓடிய அருணையும், கதிரையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு சீறும் சிங்கம் போல் அதி வேக நடை வைத்து தன் அறைக்கு வந்தவனைக் கண்ட, அங்குமிங்கும் கூட்டம் கூட்டமாக நின்று கிசுகிசுத்த ஊழியர்கள் சிதறி ஓடி தங்களின் இருக்கைகளில் அமர,

தன் அறைக்குள் நுழைந்தவன் அருணையும், கதிரையும் தன்னருகில் அழைத்தவன் தனது ஆட்களில் பெரிய தலைகள் அத்தனை பேருக்கும் இந்த விஷயத்தைச் சொல்லி சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்திலும் ஒரு மூலை இண்டு இடுக்கு விடாமல் அலச சொன்னவன், வேறு சில கட்டளைகளையும் பிறப்பித்தான்..

அவன் பேச்சைக் குறுக்கிட பயந்த கதிர் இருந்தும் தன்னைத் தைரியப்படுத்திக் கொண்டு...

"சார்... அந்த ராம் இண்டஸ்ட்ரீஸ்" என்று கூட முடிக்கவில்லை...

கதிரை சட்டென்று திரும்பிப் பார்த்த அர்ஜூன்...

"கதிர்... ராம் இண்டஸ்ட்ரீஸுக்கு அப்புறம் நாம் எத்தனையோ எதிரிகளைச் சந்திச்சிட்டோம்.. ராமச்சந்திரன விட அவனுங்க எல்லாம் பெரிய கேடிங்க... நீங்க அந்த ஆங்கில்ல இருந்து திங்க் பண்ணுங்க..." என்றவன் அருணிடம் திரும்பி...

"அருண்... நாம ராம் இண்டஸ்ட்ரீஸை அழிச்சதற்குப் பிறகு சம்பத் இந்த நாட்டை விட்டே போயிட்டதாகக் கேள்வி... அவனுக்கு என்னை எதிர்க்க இனி தைரியம் இருக்காது... பட் அட் தி சேம் டைம் [But at the same time ] அவன் வேற எங்கிருந்தாவது இத ஆப்பரேட் பண்ணியிருக்கானான்னும் தெரியனும்... அத நீ என்கொயர் பண்ணு" என்றவன் தன் தலையை அழுந்த பிடித்துக் கொண்டு தொப்பென்று நாற்காலியின் சாய்ந்தான்...




அங்குத் திவ்யாவையும் மஹாவையும் வாய் பொத்தி தங்களின் வேனில் ஏற்றியவர்கள் அதி வேகமாகச் செலுத்திக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஆள் அரவமற்ற ஒரு பெரிய பங்களாவின் போர்டிக்கோவில் வேனை நிறுத்தினர்...

ஒரு மயான அமைதியோடு இருந்த அந்த இடத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில வீடுகளே இருந்தாலும் அனைத்துமே பங்களாக்கள்...

அந்த இடத்தையும், பங்களாக்களையும், இருளடைந்து அமைதி படர்ந்த வீதியையும் பார்த்தாலே எத்தகைய துணிவுள்ள மனிதனுக்கும் அடி மனதில் சிறு கிலியாவது தோன்றும்...

வேனில் வரும் பொழுது திவ்யாவும் மஹாவும் சப்தம் போடாமல் இருக்க அவர்கள் இருவரின் வாயும் கட்டப்பட்டிருக்க, கோவிலில் துவங்கியிருந்த பிரசவ வலி விட்டு விட்டு சுளீர் சுளீரென்று இன்னும் வலித்துக் கொண்டிருந்ததில் அது திவ்யாவை கிட்டதட்ட மயக்க நிலைக்கே கொண்டு சென்று இருந்தது…

அவர்கள் இருவரையும் கீழே இறக்கிய அந்த மூவரும் திமிறிக் கொண்டிருந்த மஹாவின் கரத்தையும், வலியால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் தடுமாறி தவித்துக் கொண்டிருந்த திவ்யாவின் தோள் பற்றியும் வீட்டிற்குள் தள்ளி செல்ல, உள்ளே இழுத்து வரபட்டவர்களை வரவேற்றது கணீரென்ற அந்த ஆர்ப்பாட்டமான குரல்...

"வெல்கம் டு மை பேலஸ் டியர்.... [ Welcome to my palace dear]"

குரல் கேட்டு மஹாவும், திவ்யாவும் திடுக்கிட்டு அதிர்ச்சியுடன் சத்தம் வந்த திசையை நோக்கி திரும்ப, அங்குச் சோஃபாவில் கால் மேல் கால் போட்டு ஒய்யாரமாகவும், அலட்சியமாகவும் அமர்ந்திருந்தான் கோகுல்...

மஹா அன்று ஹோட்டலில் நிருபமாவுடன் சேர்ந்து அவனை அறைந்த பிறகு மறு நாளில் இருந்து ஒவ்வொரு நிமிடமும் அவன் தன்னைப் பழிவாங்க எந்த எல்லைக்கும் போகத் தயங்க மாட்டான் என்று அஞ்சி நடுநடுங்கி, தன்னுடையை இக்கட்டான சூழ்நிலையை வீட்டினருக்கும் தெரியப்படுத்த முடியாமல், ஒவ்வொரு நாளும் அருணோடு காரில் கல்லூரிக்கு போகும் பொழுதும், வீட்டிற்குத் திரும்பி வரும் பொழுதும் நடந்த அனைத்தையும் அவனிடம் சொல்லிவிடலாமா என்று மனமும் நாவும் துடிக்கும் பொழுதெல்லாம், தன் மனதில் தைரியம் எழாமல் மறைத்து அரண்டுப் போயிருந்தவளுக்கு அதற்குப் பின் கோகுல் தன் கண்களிலே படவேயில்லை என்பது விசித்திரமாகவும், அதே சமயம் கலக்கமாகவும் இருந்து வந்தது...

அவனைப் பற்றித் தன் தோழிகளிடமும், சில கல்லூரி மாணவர்களிடமும் மஹா ரகசியமாக விசாரிக்க, அவன் வழக்கம் போல் கல்லூரிக்கு வருவதும் போவதுமாகத் தான் இருக்கிறான் என்று கேள்விப் பட்டு "ஏன் இத்தனை நடந்தும் அவன் ஒன்றும் நடவாதது போல் அமைதியாக இருக்கிறான்??" என்று குழம்பியவள், நாள் ஆக ஆக அவன் அவளுக்கு எந்தத் தொந்தரவும் செய்வது போல் தெரியவில்லையாதலால்,

"ஒரு வேளை அன்று நடந்தது அர்ஜூன் அண்ணாவிற்குத் தெரிந்தால் என்ன ஆவது என்று நான் பயந்தது போல் இவனின் அட்டூழியம் இவன் வீட்டிற்குத் தெரிந்து அதனால் கண்டிக்கப்பட்டு அமைதியாக இருக்கிறானோ" என்று நினைத்து நிம்மதி பெருமூச்சுவிட்ட தன் முட்டாள் தனத்தை நினைத்து இன்று கதி கலங்கி நின்றாள் மஹா...

ஆனால் அவளின் வழிக்கு வராமல், அவளுக்கு எந்தத் தொல்லையும் கொடுக்காமல், அவளின் பாதையில் குறுக்கிடாமல், ஏன் அவளின் கண்ணில் கூடப் படாமல் அவன் காத்திருந்தது இதனைப் போன்ற பழிவாங்கும் நாளுக்குத் தான் என்று அவளுக்குத் தெரியாமல் போனது அவளது விதி மட்டும் அல்ல...

அதில் ஒன்றுமே தெரியாத, தனது வயிற்றில் தங்களின் முதல் வாரிசை, தனது கணவனின் உயிரை தாங்கியிருக்கும், இதோ எந்த நிமிடமும் பிரசவம் நடந்துவிடும் சூழ்நிலையில் பிரசவ வலியில் துடிதுடித்து நிற்கும் அப்பாவியான திவ்யாவையும் அல்லவா விதி தன் கோரக்கரங்களை நீட்டி வளைத்திருக்கிறது...

தனக்குத் தெரியாமல் தன்னை வேட்டை ஆடுவதற்குக் காத்திருக்கிறது இந்த ஓநாய் என்று தெரியாமல் தானே அவன் வலையில் சிக்கியதும் அல்லாமல் இப்பொழுது தனது அண்ணனின் ஊண், உயிர், உடல் அனைத்துமான அவனது மனைவியையும், பிறக்கப் போகும் அவனது மகவையும் அல்லவா சிக்க வைத்திருக்கிறாள் தன்னுடைய அறியாமையால்...

திவ்யாவையும், மஹாவையும் கடத்திய அந்த மூவரையும் பார்த்து...

"அவங்க வாய் கட்டை ரிமூவ் பண்ணுங்க" என்று கோகுல் தன்னுடைய அழுத்தமான குரலில் கூற...

அவனைப் பார்த்தவுடன் உச்சக்கட்ட அதிர்ச்சி அடைந்திருந்த மஹா "கோகுல்" எனத் தன்னையும் அறியாமல் மெதுவாகக் கூறவும்...

"ஆமாண்டி.... கோகுலே தான்.. இப்ப தான் இந்தக் கோகுல் உன் கண்ணுக்குத் தெரியறான் இல்லை"... என்றான் ஒவ்வொரு வார்த்தையாக ஆனால் கண்களிலும் அவன் வார்த்தைகளும் கோபமும் வெறியும் தொனிக்க...

சட்டென்று தன்னையும் அறியாமல் திவ்யாவைப் பார்த்த மஹா திவ்யாவின் முகத்தில் அதிர்ச்சியையும் மீறி வலியின் வேதனை தெரிய, நிற்க கூட முடியாமல் துவண்டு இடுப்பைப் பிடித்தவாறே கண்களில் நீர் ஆறாகப் பெருக்கெடுக்க நின்று இருந்தவளைப் பார்த்தவள் கண்களாலேயே என்னை மன்னிச்சுடுங்க அண்ணி என்பது போல் இறைஞ்சியவள் வேறு வழியின்றிக் கோகுலின் பக்கம் திரும்பி திவ்யாவிற்காக...

"ப்ளீஸ் கோகுல், அன்னைக்கு நடந்ததுக்கு நான் உன் கால்ல வேணா விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கிறேன்... ஆனால் தயவு செஞ்சு எங்கள விட்டுடு... அண்ணிக்கு லேபர் பெயின் வந்திருச்சு... ப்ளீஸ் கோகுல்... அவங்க ரொம்ப நேரமா வலியில் துடிச்சிட்டு இருக்காங்க.... எங்களைப் போக விடு..." என்று உயிரைப் பிடித்துக் கொண்டு அந்த கல் நெஞ்சக்காரனிடம் கதறினாள்....

அவளின் கதறலைக் கண்டு உள்ளம் மகிழ்ந்து இதழ் பிரித்துச் சிரித்தவன் மானை வேட்டையாடும் வேடனின் முகத்தோடும், வெற்றிப் புன்னகையோடும் அவள் அருகில் வந்தவன்,

"எனக்கு நீதாண்டி வேணும்... உன் அண்ணி இல்ல... ஆனால் இந்த இடியட்ஸ் அவளையும் சேர்த்து தூக்கிட்டு வந்திட்டாங்க... பட்... சும்மா சொல்லக் கூடாது... ப்ரெக்னன்ட்டா இருந்தாலும் உன் அண்ணியும் செம்ம கட்டை தான்.." என்றவன் திவ்யாவை நிதானமாக உச்சி முதல் உள்ளங்கால் வரை விரசத்தனமான ஒரு பார்வை பார்க்க,

அவனின் பார்வையில் அதிர்ந்த மஹா திவ்யாவைப் பார்க்கவும், கோகுலின் அசிங்கமான வார்த்தைகளாலும், அருவருக்கத்தக்க காமம் வழியும் பார்வையாலும், அவன் இதழ்கள் பிரித்துச் சிரித்திருந்தாலும், அதில் தெரிந்த நரித்தனமான விஷத்தைப் போன்ற புன்னகையிலும் அவனின் கேடுகெட்டத்தனம் தெரிய, மஹாவைத் திரும்பி பார்த்த திவ்யாவின் கண்களில் தெரிந்த பயத்தைப் பார்த்த மஹாவின் உள்ளம் குற்ற உணர்வில் சுருண்டது...

இவர்களின் பார்வை பரிமாற்றத்தை ரசித்துக் கொண்டே மஹாவின் அருகில் வந்த கோகுல் அவள் உடலின் ஒவ்வொரு பாகத்தையும், அணு அணுவாகத் தன் வேட்கை வழியும் கண்களால் ரசிக்கவும், அவன் தன் பார்வையாலேயே தன்னை நிர்வாணமாக்கியது போல் உணர்ந்த மஹா கூனிக்குறுகிப் போய்ச் சகலமும் நடுங்கிப் போய் நிற்க,

கோகுல் அடுத்து சொன்ன வார்த்தைகளில் மஹாவின் நெஞ்சுக் கூட்டில் எடுத்த குளிரில் அவளின் உடல் முழுவதும் வெளிப்படையாக உதறெலுடுத்து நடுங்கியது...

தனது மூச்சுக் காற்று மஹாவின் முகத்தில் படும் அளவிற்கு அவளை நெருங்கி நின்றவன் அவள் முகம் நோக்கி குனிந்து...

"மஹா... எனக்குத் தேவை நீ தான்... உன் அண்ணி இல்ல... நீ எனக்குக் கொஞ்சம் கோப்ரேட் பண்ணு... என் வேலை முடிஞ்சதும் சீக்கிரம் உன் அண்ணிய விட்டுடுறேன்... என்ன டீல்?" என்றான்...

உடலில் உள்ள ஒவ்வொரு நரம்பிலும் பயம் என்ற உணர்வு மின்சாரத்தின் வேகத்தில் பாய்ந்தது போல் பரவி இருக்க, தனக்கு வெகு அருகில் தனது முகத்தை நோக்கி அவன் குனிந்து நிற்கவும், அவன் மேல் இருந்து வந்த மதுவின் வாடை வேறு மஹாவிற்குக் கிலியை ஏற்படுத்த,

ஆனாலும் தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுத் தன் தைரியம் அனைத்தையும் திரட்டி...

"நோ கோகுல்... யூ ஆர் மேகிங் எ ஹூயூஜ் மிஸ்டேக் [ No Gokul... You are making a huge mistake ] என் அண்ணாவப் பத்தி உனக்கு நல்லா தெரியும்... அதனால தான் நீ இத்தனை நாளா அடக்கி வாசிச்சுக்கிட்டு இருந்தன்னும் எனக்குத் தெரியும்... என்னைத் தொட்டாலே அண்ணா உன்ன உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க... இப்போ அவங்க வைஃப்ப வேற கடத்தியிருக்க... அவங்க எங்க அண்ணாவோட உயிர்... அதுவும் ஷி இஸ் இன் பெயின் நௌ... [ She is in pain now] அவங்களுக்கோ இல்லை குழந்தைக்கோ எதுவும் ஆச்சு அப்புறம் நீ காணாம போய்டுவ" என்றாள்...

அவளின் மிரட்டலில் வாய் விட்டுச் சத்தமாகச் சிரித்தவன்...

"என்னடி? மிரட்டுறியா?.... நீயா எனக்குக் கோப்ரேட் பண்ணுவன்னு பார்த்தேன்... ஆனால் அது நடக்கலை... சரி... உன் வழிக்கு நான் வரேன்... படுத்துட்டு போர்த்தினா என்ன? போர்த்திட்டு படுத்தா என்ன?" என்றவனை என்ன சொல்ல வருகிறான் என்று புரியாமல் குழப்பத்தோடு அவனேயே அண்ணாந்து பார்த்திருக்க....

அவளின் கண்களை ஆழ்ந்துப் பார்த்தவாறே தன் சட்டை பாக்கெட்டில் கை விட்டவன் உதட்டில் நெளிந்த ஏளனப் புன்னகையுடன் அதில் இருந்து தாலி கயிறை எடுக்க, திவ்யாவிற்குச் சடுதியில் எல்லாம் புரிந்து போனது...

அவன் மஹா அண்ணியைக் கல்யாணம் பண்ண ஆசைப் பட்டிருக்கான்... ஆனால் இவர் ஒத்துக்கலை... அதுக்குத் தான் இந்தக் கடத்தல் வேலை.. யாருக்கும் தெரியாமல் கடத்தி வந்து மஹா அண்ணி கழுத்தில் தாலி கட்டிவிட்டால் அவங்களைத் தன் மனைவியாக ஆக்கிக் கொள்ளலாம் என்று குரூர நினைப்பு...

"சே... இப்படியும் ஒருத்தன் இருப்பானா??" என்று மனதிற்குள் நினைத்தவள் உடலின் ஒவ்வொரு நரம்பிலும் உணர்ந்து கொண்டிருந்த வலியை உதடு கடித்து அடக்கிக் கொண்டு மெல்ல மூச்சு வாங்க...

"அவங்களுக்குத் தான் உங்கள பிடிக்கலை இல்லையா... அப்புறம் ஏன் இப்படிப் பண்றீங்க?" என்று பரிதாபமாகக் கேட்க,

அவளை ஒரு முறை திரும்பி பார்த்தவன்,

"ஹ... இங்க பாருடா..." என்றவன் திவ்யாவைப் பார்த்துக் கண் சிமிட்டி...

"நீ ப்ரெக்னன்டா இருக்கிறதனால தப்பிச்ச... இல்லை இவள ****** கையோட உன்னையும் ******* " என்று அருவருக்கத் தகுந்த வார்தைகளைக் கூற...

இவ்வளவு குரூரமானவனா இவன் என்று நினைத்து கதிகலங்கிய திவ்யா அதிர்ந்து மஹாவைப் பார்க்க, கோகுலின் அசிங்கமான பேச்சைக் கேட்ட மஹாவிற்கு இவன் நம்மை நிச்சயம் விட மாட்டான் என்பது போல் திக்கென்று இருந்தது...

மீண்டும் மஹாவைத் திரும்பிப் பார்த்தவன் மஹாவின் கழுத்திற்கு அருகில் தாலிக் கயிறைக் கொண்டு செல்ல, நிச்சயம் திமிறவும் அந்த மூவரையும் பார்த்து...

"நீங்க என்ன இங்க ..... வந்திருக்கீங்களா" என்று தகாத வார்த்தைகளால் கத்தி திட்டியவன் மஹாவை இறுக்கப் பிடித்துக் கொள்ளச் சொல்ல,

திமிறத் திமிற அந்த மூவரும் மஹாவைக் கொஞ்சம் கூட அசைய முடியாத அளவிற்கு இறுக்கப் பற்ற, அடுத்து நடக்கவிருப்பது புரிந்து...

உயிர் போகும் வலியை தாங்கிக் கொண்டு நிற்க முடியாமல் நின்று இருந்த திவ்யா தன் மனதினை திடப்படுத்தி, தன் திடத்தையும், சக்தியையும் கால்களுக்குக் கொடுத்து கோகுலின் அருகில் வந்தவள் தன் பலம் கொண்ட மட்டும் அவனைப் பிடித்துத் தள்ள முயற்சிக்க,

நிறை மாதக் கர்ப்பிணி என்று கூடப் பார்க்காமல் அவளை முரட்டுத்தனமாக இறுக்கிப் பிடித்துத் தரையில் தள்ளிவிட்டான், கொஞ்சம் கூட ஈவு இரக்கமற்ற அந்த அரக்கன்... கொடூரன்.... காமுகன்....

அவன் தள்ளிய வேகத்தில் ஏற்கனவே வலியால் துவண்டுப் போய் இருந்த திவ்யா நிலை தடுமாறி கீழே விழுந்தவள் "அம்மா" என்று வீலென்று அலற, மஹாவிற்குச் சப்த நாடியும் அடங்கி ஒடுங்கிப் போனது.....

ஒரு கர்ப்பிணி பெண்ணிடமே இந்த அளவிற்கு மனிதாபிமானம் இல்லாமல் மிருகத்தனமாக நடந்து கொள்கிறான் என்றால், எப்பேற்பட்ட கொடியவனாக இவன் இருக்கக் கூடும்... ஐயோ! இவனைப் போய்ச் சர்வ சாதாரணமாக எடைப் போட்டு விட்டேனே என்று உள்ளுக்குள் கதறி துடித்தவளுக்கு இனி இவனிடம் சண்டையிட்டு பயனில்லை என்றே தோன்ற...

இதில் வலியால் கதறிக் கொண்டு கீழே தரையில் துடித்துக் கொண்டிருக்கும் திவ்யாவின் நிலை வேறு அவளின் இதயத்துடிப்பை பல மடங்கு அதிகரிக்க, திவ்யா அண்ணி இருக்கும் இந்தச் சூழ்நிலையில் இப்படிப்பட்ட மிருகத்திடம் எதிர்த்து போராடுவதை விடப் பணிந்து போவதே மேல் என்று நினைத்தவள் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு...

"ஓகே கோகுல்.... உனக்கு நான் தான வேண்டும்... சரி தாலிய கட்டு.... பட் அதற்கப்புறம் இமீடியெட்டா என் அண்ணிய பக்கத்தில் இருக்கிற ஏதாவது ஒரு ஹாஸ்பிட்டல்ல சேர்க்க சொல்லு" என்றாள் கலங்கிய விழிகள் திவ்யாவையே நோக்கியிருந்தவாறே...

ஏற்கனவே ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பிரசவ வலி திவ்யாவை உயிரோடு கொன்று கொண்டிருந்தது... இதில் சடாரென்று தள்ளப்பட்டதால் கீழே தரையில் மல்லாக்க விழுந்ததில் புட்டத்திலும், முதுகிலும் பட்ட அடி பிரசவ வலியை உச்சஸ்தாயிக்குக் கொண்டு செல்ல உயிரைக் கொல்லும் வலியுடன்...

"வேண்டாம் அண்ணி, இதுக்கச் சம்மதிக்காதீங்க" என்று முனகினாள் அந்தச் சின்னப் பெண்...

அர்ஜூனின் இதயத்தில், ஆத்மாவில், உயிரில், ஈருடல் ஓருயிராகக் கலந்திருந்த அவனின் மனம் கவர்ந்த மனையாள்...

திவ்யாவின் முனகலில், அவளின் கூற்றில் அவளைப் பரிதாபமாகத் திரும்பி பார்த்த மஹாவிற்கு அவளின் நிலை எண்ணி கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது..

"எப்படி அண்ணா இவங்களைப் பார்த்துக்கிட்டாங்க? இவங்க பாதம் தரையில் படறதுக்குக் கூட அவங்க விடலை... ஆனால் இப்ப இப்படித் தரையில், அதுவும் பிரசவ வலியோடு கதறி துடித்துக் கொண்டு இருக்கிறத அவர் பார்த்தால் என்ன ஆகும்??" என்று யோசித்தவள் இவை அனைத்துக்குமே காரணம் தானும், தன்னுடைய முட்டாள்தனமும் தான்... தன்னால் இதற்கு மேலும் திவ்யா அண்ணி கஷ்டப்படக்கூடாது... அவங்களும், அவங்க குழந்தையோட உயிரும் மட்டும் தான் இப்போ முக்கியம் என்று முடிவெடுத்தவள் தன் கண்களில் ஊற்றாக வழிந்து கொண்டிருந்த விழி நீரை அழுந்த துடைத்துக் கொண்டு நிமிர்ந்து நின்றவள்...

"சரி கோகுல்... கட்டு தாலிய" என்றாள்...

மஹாவின் பேச்சில் அதிர்ச்சியின் எல்லைக்கே சென்ற திவ்யா தன்னுடைய உயிர் போகும் வலி கிட்டத்தட்ட உச்சக்கட்டத்தை அடைந்து இருந்தாலும் மனித ரூபத்தில் இருக்கும் இந்தக் கொடிய மிருகம் தன் நாத்தனாரின் கழுத்தில் தாலிக் கட்டி அவர் வாழ்க்கையை நாசம் பண்ண விடக்கூடாது என்று நினைத்தவள் முடிந்த மட்டும் வேகமாக எழுந்து மஹாவை நெருங்கியிருந்த கோகுலை மீண்டும் தள்ள முயற்சிக்க, மறுபடியும் சுளீர் என்று வலி ஒன்று அவளின் உயிரின் வேர் வரை சென்று அவளைச் சாய்க்க...

தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் "அம்மா" என்று அலறியபடியே மெதுவாகத் தரையில் படுக்க, கோகுலுக்கு அருகில் இருந்த அவனின் கல்லூரி நண்பன், அந்த மூவரில் ஒருவன் அதிர்ந்தவன்..

"கோகுல் நாம பெரிய தப்பு பண்றோம்... ஜஸ்ட் திங், ஒரு வேளை இவங்களுக்கோ இல்லை இவங்க குழந்தைக்கோ எதுவோ ஆகிட்டா அந்த அர்ஜூன் நம்மள கொன்னு புதைக்காம விடமாட்டான்... மஹா கழுத்துல தாலிய கட்டிட்டு அவள கெடுத்துட்டா அவனால ஒன்னும் செய்ய முடியாதுன்னு தான் நீ இந்த ப்ளானே போட்ட.... பட், இத நாம எதிர் பார்க்கல... இப்ப நீ இவ கழுத்துல தாலிய கட்டினாலும், அவன் வைஃப்பிற்கு ஏதாவது ஆச்சு.... நிச்சயம் நம்ம உயிர் நமக்கு இல்லை... அது மட்டும் இல்லை... உனக்கு என்ன, இவள விட்டா வேற பொண்ணே கிடைக்காதா?? கமான் லெட்ஸ் கோ [Come on let's go ]... இதுக்கு மேல இங்கிருக்கிறது ஆபத்து" என்றான் கலக்கத்துடன்...

என்ன தான் ரௌடியாக இருந்தாலும், கடத்தல் தொழில் செய்பவனாக இருந்தாலும் திவ்யா தரையில் கிடந்து பிரசவ வலியில் துடிப்பதை பார்த்த அந்த மூவரில் மற்றொருவனுக்கும் மனம் இறங்க...

"ச... சார்... உங்க ஃப்ரெண்ட் சொல்றது சரி தான் சார்... எங்க இந்தப் பொண்ண மட்டும் தூக்கினா எங்களை அடையாளம் தெரிஞ்ச இவங்க எங்களைக் காட்டிக் கொடுத்துடுவாங்களோன்னு பயந்து தான் சார் இவங்களையும் சேர்த்துக் தூக்கினோம்... ஆனால் இப்ப இவங்க இருக்கிற நிலையைப் பார்த்தா இவங்களுக்கு எப்போ வேணுமானாலும் குழந்தை பிறக்கும் போல இருக்கு சார்... இங்க இருந்தோம் நிச்சயம் இது பெரிய பிரச்சனையில் போய் முடியும்... வா... வாங்க சார் போகலாம்"... என்றான் கண்களில் அச்சத்தையும் கலக்கத்தையும் ஒருங்கே சுமந்து குரலில் தடுமாறியவாறே....

அவர்கள் இருவரையும் விருட்டென்று திரும்பி பார்த்த கோகுல் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற ஏமாற்றத்தில் விளைந்த கோபத்தில் வெடிக்கும் நிலையில் இருந்தவன் தன் ஒட்டு மொத்த கோபத்தையும் அவர்களிடம் காட்டி...

"இடியட்ஸ்.... நான் சொன்ன படி இவள மட்டும் தூக்கியிருந்தா நான் நினைச்சது இந்நேரம் நடந்து முடிஞ்சிருக்கும்.... போயும் போயும் உங்களைப் போய் அனுப்பினேன் பாருங்க... என்னைத் தான் செருப்பால அடிச்சுக்கனும்" என்றவன் அதற்கு மேல் எதுவும் யோசிக்க முடியாமல், மஹா மட்டும் கோவிலுக்கு வரவில்லை, அவளுடன் அவள் அண்ணியும் வந்திருக்கிறாள் என்று தன் ஆள் துப்புக் கொடுத்தும், மஹாவைக் கடத்தச் சொன்ன தானும் ஒரு மிகப் பெரிய முட்டாள் தான் என்பதை நிருபிக்கும் வகையில் அங்கிருந்து விருட்டென்று கிளம்பினான்...

ஒரு வேளை திவ்யாவை அவர்கள் கடத்தாமல் மஹாவை மட்டும் கடத்தி அவள் கழுத்தில் தாலி கட்டியிருந்தாலோ, அல்லது அவள் கற்பிற்கு ஏதாவது பங்கம் விளைவித்து இருந்தாலோ, அப்பொழுதும் அர்ஜூன் அவர்களைச் சும்மா விட்டுவிடுவானா?

அவர்கள் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் கண்டுப்பிடித்து அவர்களைச் சிதைத்து உருக்குலைத்து காணாத பிணமாக ஆக்கியிருப்பான் என்பது அந்த முட்டாளுக்குத் தெரியவில்லையா என்ன???.

மஹாவைப் பின் தொடர துவங்கிய காலத்திலேயே அவனுக்கு அர்ஜூனைப் பற்றியும் அவனின் செல்வாக்கைப் பற்றியும் தெரிந்திருந்ததினால் தான், மஹா சொன்னது போல் அவன் கொஞ்சம் அடக்கி வாசித்தது... ஆனால் அன்றொரு நாள் என்றும் இல்லாத திருநாளாக மஹா புடவை அணிந்து கல்லூரிக்கு செல்ல, அவளின் உடல் அழகில் மதி மயங்கியவன் அவளைத் தன் நண்பனை விட்டு கீழே விழச் செய்ய, கீழே விழுந்தவளை தூக்கும் சாக்கில் அவளின் இடைப் பிடிக்க அவளின் ஸ்பரிஸமும், வெகு அருகில் அவளின் முகத்தைப் பார்த்ததினால் எழுந்த தாபமும் அது வரை அடங்கியிருந்த மஹாவின் மீதான அவன் மோகத்தைக் கொளுந்துவிட்டு எரிய செய்ததில், அன்றிலிருந்து காம இச்சை அவன் மூளையை மழுங்கடிக்கச் செய்திருந்தது...

மஹாவை என்ன விலைக் கொடுத்தாவது அடைய வேண்டும் என்று எண்ணிய அந்த முட்டாளுக்கு மஹாவிற்கு ஒன்று என்றால் அவளின் அரண் போன்ற அண்ணன்களான அர்ஜூனும், அருணும் அவன் உயிரைத் தான் விலையாகக் கேட்பார்கள் என்று தெரியாமல், மஹாவை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று தான் இத்தகைய மதிகெட்ட செயலை அவன் செய்தான்...

ஆனால் அவனின் கெட்ட நேரத்திலும் கெட்ட நேரம் மஹாவைக் கடத்தியது மட்டும் இல்லாமல் அர்ஜூனின் உயிர் மூச்சான அவன் மனைவிக்கும், அவள் வயிற்றில் சுமந்திருக்கும் அர்ஜூனின் உயிருக்கும் இன்று இப்படி ஒரு ஆபத்தை விளைவித்துவிட்டான்...

பெண் மோகம் யாரை விட்டது!! பலசாலியை கோழையாகவும், அதிபுத்திசாலியை முட்டாளாகவும், கோடீஸ்வரனை பரம ஏழையாகவும் மாற்றிவிடும் அபார சக்தி அதற்கு உண்டு!!!!

எத்தனை அரசர்கள் பெண் மோகத்தினால் இருந்த சுவடே தெரியாமல் அழிந்திருக்கிறார்கள்!! எத்தனை அரசுகள், அரசாங்கங்கள் பெண்களின் மேல் உள்ள இச்சையினால் வீழ்ந்திருக்கிறது!!

கோகுலும் அவன் ஆட்களும், தரையில் வீழ்ந்து கதறிக் கொண்டு துடிதுடித்துக் கொண்டிருந்த திவ்யாவை கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி அனாதையாக விட்டு செல்ல, திவ்யாவின் அருகில் அலறி அடித்துக் கொண்டு மஹா வர, அத்தனை வலியிலும் பல்லை இறுக்கக் கடித்துக் கொண்டு....

"அண்ணி.... போய் முதல்ல கதவச் சாத்துங்க... அவனுங்க திரும்பவும் வந்துடப் போறாங்க" எனவும்...

வேகமாக ஓடிச் சென்று கதவை சாத்திய மஹா அந்தப் பங்களாவில் தொலை பேசி எதுவும் இருக்கிறதா என்று ஒவ்வொரு அறையாகத் தேடிப் பார்க்கச் செல்ல,

யாருமற்ற அனாதைப் போலக் கட்டாந்தரையில், உயிர் போகும் வலியோடு, தன்னந்தனியாகக் கதறித் துடித்துக் கொண்டிருக்கும் தன் மனைவியை இந்த நிமிடம் அர்ஜூன் பார்த்திருந்தால், அவனின் காதல் கொண்ட இதயம் பல ஆயிரம் துகள்களாகச் சுக்குசுக்காக வெடித்துச் சிதறியிருக்கும் என்பதில் ஐயமே இல்லை...

வீடு முழுவதும் ஒரு அறை விடாமல் தொலை பேசியை மஹா தேடிப் பார்க்க, அவர்களின் கெட்ட நேரம் அந்த வீட்டில் தொலை பேசி எதுவும் அவர்களின் கண்ணுக்கு தென்படவில்லை... அலை பேசி வந்ததற்குப் பிறகு வீடுகளில் தொலைப் பேசிக்கு வேலையில்லையே...

நிமிடத்திற்கு நிமிடம் திவ்யாவின் வலி அதிகமாக அவளின் கதறலில் மனம் துடித்துப் பதறிய மஹா வேகமாக ஓடி வந்தவள் அவளின் அருகில் மண்டியிட்டு திவ்யாவின் கரம் பற்றி....

"அண்ணி, கொஞ்சம் பொறுத்துக்கங்க அண்ணி... நான் மெதுவா வெளியில போய் யாரையாவது ஹெல்ப்புக்கு கூப்புட முடியுமான்னு பார்க்கறேன்..." என்று எழுந்திருக்க எத்தனிக்க....

சட்டென்று மஹாவின் கரத்தைப் பற்றி இழுத்த திவ்யா...

"ஐயோ! என்ன அண்ணி? வெளியில் போனவன் திரும்பவும் வர மாட்டான்னு என்ன நிச்சயம்? உங்க அண்ணன் எப்படியும் நாம இருக்கிற இடத்த கண்டு பிடிச்சிடுவாங்க... எனக்கு அவங்க முகத்தைப் பார்க்குற வரைக்கும் எதுவும் ஆகாது.... தயவு செய்து நீங்க வெளியில் மட்டும் போகாதீங்க" என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூற, நேரம் ஆகிக் கொண்டே இருந்ததே ஒழிய அர்ஜுனோ அல்லது வேறு யாருமோ வரும் வழியை மட்டும் காணோம்...

அங்கு அலுவலகத்தில் அர்ஜூனை சுற்றி மகளையும், மருமகளையும் நினைத்து பதட்டத்துடன் கலங்கியவராக பாலா நிற்க, அவருக்கு அருகில் அரண்டுப் போய் அருண் நிற்க, கூடவே கதிரும், காவல் துறை உயர் அதிகாரிகளும் நின்று இருக்க, முதல் முறை வாழ்க்கையில் தன்னால் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் தான் இருப்பதைப் போன்று உணர்ந்துக் கதி கலங்கி இருந்தவன் தனது சேரில் அமர்ந்து தலையை இரு கரங்களாலும் இறுக்கி பிடித்திருக்க, அவனுக்கு இப்பொழுது நடந்து கொண்டிருப்பது கனவா அல்லது நினைவா என்றே இருந்தது....

ஒரு வேனில் மூன்று பேர் சேர்ந்து இரு பெண்களைக் கடத்துவது என்பது எளிதான காரியம் அல்ல... அதுவும் அவ்வளவு பொது மக்கள் கூடியிருக்கும் ஒரு கோவிலின் வாயிலில்..

ஆனால் உண்மையில் திவ்யாவின் நேரமோ மஹாவின் நேரமோ அங்கு வீதியிலோ அல்லது கோவிலை சுற்றி இருந்த கடைகளிலோ இருந்த எந்த ஒரு சி.சி.டி.வி கேமராக்களும் கோவிலின் வாயிலை நேர் பார்த்து அமைத்திருக்கப் படவில்லை...

திடீரென்று இருவரும் மேகக் கூட்டங்களிடையே மறைந்ததுப் போலவே இருந்தது அர்ஜூனிற்கு... தொழில் சாம்ராஜ்யத்தில் அவன் முடி சூடா மன்னனாக இருந்தாலும், அவனுக்குக் கீழ் பல அடியாட்கள் அவன் இடும் கட்டளையை நிறைவேற்ற காத்துக் கிடந்தாலும் அவனே அதிர்ந்து வியக்கும் அளவிற்குக் கடத்தியது யார் என்று ஒரு மெல்லிய நூல் அளவிற்குக் கூடத் தடயம் கிடைக்கவில்லை...

இது கடத்தியவர்களின் சாமர்த்தியமோ அல்லது கடத்த சொன்ன அந்த முட்டாள் கோகுலின் சாமர்த்தியமோ அல்ல... உண்மையில் திவ்யாவின் கெட்ட நேரமோ அல்லது மஹாவின் கெட்ட நேரமோ தான் ஒருவருக்கும் ஒரு தடயமோ அல்லது துப்போ கிடைக்காமல் தடுத்திருந்தது....

தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தவனின் முகத்தைக் கூடப் பார்க்க அங்குக் கூடியிருந்த அனைவருக்கும் துணிவில்லாமல் அவர்களும் கைகளைப் பிசைந்து கொண்டிருக்க, கதிரும் காவல் துறை அதிகாரிகளும் அலை பேசியும் கையுமாக யாரிடமாவது பேசிக் கொண்டே இருக்க, சட்டென்று அர்ஜூனிற்கு நேற்று இரவு அவனுக்கும் திவ்யாவிற்கும் இடையில் நடந்த நிகழ்ச்சி மனக்கண்களின் முன் வந்தது....

நேற்றைய இரவு படுக்கையில் படுத்திருந்த அர்ஜூன் வழக்கம் போல் தன் மடி கணினியில் அலுவலக வேலையாக மூழ்கி இருக்க, நிறை மாத வயிற்றுடன் ஒவ்வொரு படிகளாக நின்று நிதானித்து மூச்சு வாங்க படியேறி வந்த திவ்யா அறைக்குள் நுழைந்ததும்,

அவள் படிகளில் அசைந்து அசைந்து மெல்ல ஏறி வரும் பொழுதே அவள் நடந்த விதத்தில், அவளின் அழகிய கொலுசுகளின் ஒலியில் அவள் வரவை எதிர்பார்த்து அறை வாயிலைப் பார்த்திருந்தவன், அவள் உள்ளே வந்ததும் கணினியை மூடி வைத்தவன் அவள் கட்டிலில் ஏறுவதற்கு உதவி செய்ய, கணவனின் முகம் பார்த்து புன்னகைத்தவள் அவனை நெருங்கி அவன் மார்பில் தலை சாய்க்க....

கணவன் மனைவி இருவரின் மனதிலும் என்னென்னவோ எண்ண ஓட்டங்களும், நினைவுகளும், சிந்தனைகளும் அலைமோதியவாறு இருந்தது...

பிரசவத்திற்கு இன்னும் இரு வாரங்கள் இருந்தாலும் இன்று காலை கணவனுடன் சேர்ந்து மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றவளிடம் குழந்தை இருக்கும் நிலையில் [Position] எந்த நேரத்திலும் குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கிறது என்று மருத்துவர் தெரிவித்து இருக்க, வழக்கமாகப் பெண்களுக்கு வரும் பிரசவத்தைப் பற்றிய அச்சத்தில் மனம் வேறு உறைந்திருந்ததால் தனக்கு அசம்பாவிதமாக எதுவும் நேர்ந்துவிடுமோ? தன் கணவனைத் தனித்து இந்த உலகத்தில் விட்டு சென்று விடுவோமோ? என்ற கேள்விகளால் எழுந்த கவலைகள் அவள் மனதையும் அரித்துக் கொண்டு இருக்க, மெல்ல நிமிர்ந்து அர்ஜூனின் முகத்தைப் பார்த்தவள் சன்னமான குரலில்...

"என்னங்க... உங்கக்கிட்ட ஒன்னு கேட்கட்டுமா?" என்றாள்..

அறைக்கு வந்ததில் இருந்து மௌனமாக அவள் தன் நெஞ்சில் சாய்ந்துப் படுத்ததில் இருந்தே அவளின் கலக்கத்தை உணர்ந்து இருந்தவன், இப்பொழுது அவனை அண்ணாந்து பார்த்திருந்த விதத்தில் அவளின் கண்களில் தெரிந்த சஞ்சலத்தைக் கண்டு அவளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தன்னவளின் நெற்றியில் தன் கன்னத்தைத் தேய்த்தவாறே அவளின் கேள்விக்கு....

"ம்ம்ம்" என்று பதில் அளிக்க...

அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் தயங்கியவாறே...

"தப்பா நெனைக்கக் கூடாது.... கோபப்படவும் கூடாது" என்ற மனைவியின் கண்களை ஆழ்ந்துப் பார்த்தவன்...

"கேளு" என்று மட்டும் கூற...

ஆனால் அவள் மீண்டும் தன் நெஞ்சில் சாய்ந்து ஒன்றும் பேசாமல் அமைதியாகி விட அவள் தலையில் தன் தாடையை அழுந்த பதித்தவன்...

"திவி... என்ன கேட்கனுமோ கேளு" என்றான்...

"இல்ல... ஒரு வேளை" என்று தயங்கியவள் ஒரு பெருமூச்சுவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்...

"ஒரு வேளை, எனக்குப் பிரசவத்தில் ஏதாவது ஆச்சுனா...." என்று கூட முடிக்கவில்லை அவளின் தாடையை மென்மையாகப் பற்றியவன் தன்னை நோக்கி அவள் முகத்தை உயர்த்தி...

"திவி... உனக்கு ஒன்னும் ஆகாது... ப்ளீஸ் இது மாதிரி எல்லாம் திங் பண்ணாம ரிலேக்ஸா [Relax] இருக்கப் பாரு... உன் டெலிவரி டைம்ல நான் உன் கூடத் தான் இருப்பேன்.... குழந்தைப் பிறக்குற வரைக்கும் நான் உன்னை விட்டு ஒரு நிமிஷம் கூட நகர மாட்டேன்" என்றவன் அவளின் நெற்றியில் மென்மையாக முத்தம் பதித்தான்...

எதற்குமே கலங்காத, எந்தச் சூழ்நிலைக்கும் அஞ்சாத, எவரையும் அச்சமென்பதே சிறிதும் இல்லாது எதிர்த்து நிற்கும் அர்ஜூனே அந்த நிமிடம் தன் மனையாளை நினைத்து, அவளின் பிரசவத்தை நினைத்து, உள்ளுக்குள் கலங்கி போய்த் தான் இருந்தான்... ஆனால் அவன் தன் கலக்கத்தைக் கொஞ்சமும் வெளிக்காட்டவில்லை...

தன் கணவனை இறுக்கி அணைத்துக் கொண்டவள் மேலும் அவனின் மார்பில் ஆழப் புதைந்து...

"ஒரு பொண்ணுக்குப் பிரசவம்கிறது மறுபிறப்புன்னு சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன்... அதான் கேட்டேன்" என்று மீண்டும் அதனைப் பற்றியே பேச.

"ம்ப்ச்... திவி... நீ போறது ஒன் ஆஃப் தி பெஸ்ட் ஹாஸ்பிட்டல்ஸ் இன் இண்டியா [One of the best hospitals in India] உனக்கு டெலிவரிப் பார்க்கப் போறது வெரி எக்ஸ்பீரியன்ஸ்ட் டாக்டர் [Very experienced doctor]... அப்புறம் ஏன் இந்தப் பயம்? அது மட்டும் இல்லாமல் இன்னைக்குப் பார்த்த செக்கப்பில் கூடப் பேபியோட ஹார்ட் பீட்ஸ், மூவ்மெண்ட்ஸ் எல்லாம் நல்லா இருக்கு... தென் எதுக்குப் பயம்?" என்று மேலும் ஆறுதல் படுத்த,

சில நிமிடங்கள் வரை பேசாமல் இருந்தவள் மீண்டும்....

"என்னங்க, இன்னொன்னு கேட்கட்டுமா?" எனவும்....

சலித்துக் கொண்டவன்....

"அடியே... கேட்கறதுன்னா கேளு... ஆனால் அது மாதிரி அபத்தமா கேட்காம வேற ஏதாவது நல்லதா கேளு" என்று சிரிக்க....

"சரி... இப்ப நான் கேட்கப் போறது உங்களுக்கு எப்பவும் ரொம்பப் பிடிச்ச விஷயம் தான்.... ஆனால் இப்போ உங்களுக்குப் பிடிக்காத விஷயம்" என்று இழுத்தாள்...

அவள் முகத்தைத் தன்னை நோக்கி நிமிர்த்தியவன் அவளின் விழிகளை ஆழ்ந்துப் பார்த்தவாறே என்ன என்பதுப் போல் புருவங்களை ஏற்றி இறக்க,

மெல்ல எம்பி அவன் காதுகளில் ஏதோ கிசுகிசுத்தவளைக் கண்டு இதழ் பிரித்துச் சிரித்தவன்....

"திவி... இன்னும் டு வீக்ஸ்ல குழந்தை பிறக்க போகுது..... இன்ஃபாக்ட் டாக்டர் ஆன்டி எப்ப வேணாலும் குழந்தை பிறக்கும்னு சொல்லியிருக்காங்க இல்ல... ப்ளீஸ்டி... கொஞ்சம் தூங்கு" என்று அவள் தலையில் மீண்டும் தன் கன்னம் பதித்தான்...

திவ்யாவிற்கோ மனதிற்குள் இருந்த அலைபுறுதல் இன்னும் தீர்ந்த பாடில்லை.... மனம் முழுவதும் ஏதோ படபடப்பாக இருக்க, இதயத்தில் யாரோ பல மடங்கு அதிகமான கனமான பாறாங்கல்லை தூக்கி வைத்தது போல் தாங்க முடியாத பாரமாக இருக்க, வெகு சீக்கிரம் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவது என்று உள்ளுணர்வு உணர்த்தியதால் உள்ளம் துடித்திருக்க,

ஒரு வேளை ஏதாவது நடக்கக்கூடாதது நடந்துவிட்டால் என்று அஞ்சி கலங்கித்தான் அவள் தனது உடலையும், தான் இருக்கும் இந்த நிலையையும் கூட யோசிக்காமல் கணவனை, கணவனின் நெருக்கத்தை, அவனின் தாம்பத்யத்தை வேண்டியது...

கணவனின் தவிர்ப்பில் மனம் தவித்ததில் சிறிதே கோபம் வரவும், அவன் நெஞ்சில் மேலும் ஆழ முகம் புதைத்தவள் அவனின் வெற்று மார்பில் அழுத்தி முத்தமிட, தன் மனையாளின் செய்கைகளில் அவளின் மனதில் இருந்த ஏக்கமும், எதிர்பார்ப்பும் ஒரு கணவனாகப் புரிந்தாலும் அவளின் தற்போதையை உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவன் அமைதியாகப் படுத்திருக்க,

கணவனின் மௌனத்தில், அவனின் ஒதுக்கத்தில் அவளின் மலர் மனம் அடிபட்டுப் போனது...

விழிகளில் நீர் ஊற்றெடுக்க, குரல் நடுங்க அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள்...

"உங்களுக்கு வேணும் போதெல்லாம் நான் வந்தேன்ல? உங்கள சந்தோஷப்படுத்தினேன்ல? இப்ப எனக்கு என்னவோ மனசு சரியில்லைன்னு தானே கேக்குறேன்... அது கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா?" என்று உதடுகள் துடிக்க அவள் கேட்கவும்....

தன் கணவன் தனக்கு வேண்டும், அதுவும் இப்பொழுதே என்று சின்னப் பெண் போல் அடம் பிடிக்கும் மனையாளின் பிடிவாதத்தில் அவன் மனது இளகினாலும், தன்னிலையை இழுத்துப் பிடித்து வைத்தவன் அவளை இறுக்க அணைத்துக் கொண்டு தூங்க வைக்க முயற்சி செய்ய,

சீற்றத்துடன் அவன் நெஞ்சில் இருந்து எழுந்தவள் தள்ளி நகர்ந்து அமர்ந்து அழுது கலங்கிய விழிகளுடன் தொண்டை அடைக்க...

"எனக்கு நீங்க வேணும்னு நான் கேட்கும் போது நீங்க வரமாட்டேங்கிறீங்கல்ல.... பாருங்க... உங்களுக்கு நான் வேணும் போது அப்ப நான் உங்க கூட இருக்கமாட்டேன்" என்று வார்த்தைகளை அள்ளி தெளித்து விட்டாள் அர்ஜூனின் காதல் மனையாள்....

அவளின் பேச்சில் தேள் கொட்டியது போல் வெடுக்கென்று உணர்ந்த அர்ஜூன் அவளைத் தன்னை நோக்கி இழுத்து அணைத்துக் கொண்டு தன் கலங்கிய மனதை சரி படுத்த போராட.....

தன் கணவனுக்குத் தன் உள்ளத்தின் சஞ்சலம் புரியவில்லையே என்ற கவலையில் அவளும் அழுது கொண்டே இருக்க, அவளை ஆறுதல் படுத்தும் வழி தெரியாமல்...

"திவி... ப்ளீஸ்டி.. தூங்குடி" எனவும்,

இதற்கு மேல் தன் கணவனிடம் எவ்வாறு தன் மனதை விளக்குவது என்று புரியாமல் கண்களில் வழியும் நீருடனே அவளும் தூங்கிப் போனாள்..

திவ்யாவின் வார்த்தைகள் அவளின் கலக்கத்தின் வெளிப்பாடே... உணர்ச்சிகளின் உந்துதல்களாலேயே அவள் அவ்வாறு பேசியிருக்க, ஆனால் அந்த உணர்ச்சிக்கோ, அதன் வேகத்திற்கோ காரணம் அவளுக்குத் தெரியவில்லை....

ஆனால் அது தன் மனையாளின் வார்த்தைகள் அல்ல... விதி உகுத்த சொற்கள் என்பதனை இன்று நடந்தேறிய சம்பவம் அர்ஜூனிற்குத் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தியது...

இரு கரங்களையும் தலைக்குக் கொடுத்து தலை குனிந்து அமர்ந்திருந்தவனின் காதுகளில் மீண்டும் மீண்டும் "உங்களுக்கு நான் வேணும் போது அப்ப நான் உங்க கூட இருக்கமாட்டேன்" என்ற வார்த்தைகள் எதிரொலித்துக் கொண்டே இருக்க...

"அவள் கேட்டும் நான் அவளின் ஆசையை நிறைவேற்றவில்லை... ஒரு வேளை அவளுக்கு எதுவும் ஆகிவிட்டால்... அவள் சொன்னது போல் அவள் இனி என் பக்கத்தில் இல்லை என்றால்" என்று மனதில் அலைஅலையாகக் கசப்பான சிந்தனைகள் தோன்ற,

திடீரென்று அமர்ந்திருந்த சேரில் இருந்து வேகமாக எழுந்தவன் ஆங்காரமாகத் தான் அமர்ந்திருந்த சேரை தூக்கி வீச, அது அர்ஜூனின் அறையின் ஒரு பக்க கண்ணாடி சுவற்றில் போய் விழுந்ததில், கண்ணாடி சுவர் முழுவதுமாக உடைந்து சில்லு சில்லாக அறை முழுவதும் தெறித்துச் சிதறியது....

அலை பேசியில் பேசிக் கொண்டிருந்த கதிரும், கமிஷனரும், காவல் துறை அதிகாரிகளும், அருணும், பாலாவும், அதே நேரத்தில் அர்ஜூனின் அறைக்குள் நுழைந்த சிவ சுப்ரமணியமும், வினோத்தும் அதிர்ச்சியில் உறைந்துப் போக, அர்ஜூனின் செக்கச்சிவந்த சீற்றத்தில் கன்னிப் போயிருந்த முகத்தைக் கண்ட ஒருவருக்கும் அவனை நெருங்கும் துணிவு கடுகளவுக் கூட இல்லை....

தன் தலையை அழுந்த கோதிக் கொண்டவன் மேஜையை ஓங்கிக் குத்தி இன்னமும் தணியாத தன் கோபத்தைத் தணிக்க முயல, அர்ஜூனின் நிலைக் கண்ட கதிருக்கு ஒருவருமே அண்ட முடியாத பிம்பமாக இருக்கும் இவரிடம் கூட வாலாட்ட துணிந்தவன் யாராக இருக்கும்... இந்த நிமிடம் மட்டும் அவன் இவர் கையில் கிடைத்தான் இவர் அவனைச் சிதைக்கும் விதத்தில் அவனுக்கு ஏற்படும் அந்தச் சித்திரவதையின், படுவேதனையின் வலியை அவன் இந்த ஜென்மம் மட்டும் அல்ல, இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாது என்றே தோன்றியது...

அத்தனை ஆங்காரமும், ஆத்திரமும், ஆவேசமும் ஒருங்கிணைந்த ருத்ரமூர்த்தியாகவே உருமாறியிருந்தான் அர்ஜூன்...

அவனை அமைதிப்படுத்தும் திடம் ஒருவருக்கும் இல்லாததால் அனைவரும் அவனை விட்டு சற்று இடைவெளிவிட்டு தள்ளியே நின்றிருக்க, அவன் அருகில் நெருங்கி வந்த பாலா அவன் தோளைத் தொட்டுச் சன்னமான குரலில்...

"அர்ஜூன்... எப்படியும் அவங்களைக் கண்டுப்பிடிச்சிடலாம்... ப்ளீஸ்.. கண்ட்ரோல் யுவர் செல்ஃப்.." எனவும்,

ஒரு வலி மிகுந்த பார்வையை அவர் மீது செலுத்தியவன் முதல் முறை தன் வாழ்க்கையில் மனதால் கூட நினைத்திராத அந்த வார்த்தைகளை உகுத்தான்...

"டாட்.. ஐ ஆம் ஸ்கேர்ட் டாட் [Dad.. I am scared dad]"

தன் மகனின் வார்த்தைகளில் உடைந்த பாலா அவன் தோளில் பற்றியிருந்த தன் கரத்தில் அழுத்தத்தைக் கொடுக்க,

"டாட்... சின்னப் பொண்ணு டாட் மஹா.. இவ்வளவு நேரமா எங்க இருக்காளோ? எப்படி இருக்காளோ? திவ்யா... அவளால இரண்டு அடி கூட எடுத்து வைக்க முடியலை டாட்... அவளைப் போய்க் கடத்தி??" என்றவன் தன் அறைக்குள் நுழைந்திருந்த வினோத்தையும் தன் மாமனாரையும் பார்த்து...

"அவங்க அம்மாக்கிட்ட வலி வேற வந்திருச்சுன்னு சொன்னாளாம்... வலியில எங்க துடிச்சுக்கிட்டு இருக்காளோ? ஒரு வேளை அவனுங்க அவகிட்ட முரட்டுத்தனமா நடந்துக்கிட்டா" என்று சொல்லும் பொழுதே அவனின் ஆக்ரோஷம் எல்லையைக் கடக்க, அடி பட்ட சிங்கம் போல் நிமிர்ந்துக் காவல் துறை அதிகாரிகளையும் கதிரையும் பார்த்தவன் ஏதோ சொல்ல வாயை திறக்க..

சரியாகக் கமிஷனருக்கு ஒரு அழைப்பு வந்தது...

எதிர் முனையில் "சார், வேன் நம்பர் நோட் பண்ணிங்கங்க... சீக்கிரம் ட்ரேஸ் பண்ண சொல்லுங்க" என்று வேனின் எண் கூறப்பட,

உடனே அதனைக் குறித்துக் கொண்டவர் அதனை ட்ரேஸ் பண்ண சொல்லிவிட்டு அலை பேசியின் ஒலிப்பெருக்கியை [Speaker] உயிர்ப்பித்தார்...

"எப்படிக் கண்டுப்பிடுச்சீங்க?"...

"சார், அந்த வேன் கோவில் வாசலில் தான் நின்னுட்டு இருந்திருக்கு.... இங்க பூ விக்கிற அம்மாவோட பையன் பார்த்திருக்கான்... சாரோடு வைப்பையும், ஸிஸ்டரையும் கடத்துனத அவன் பாத்துட்டு அவங்க அம்மாகிட்ட சொல்ல, அவங்க பயந்துக்கிட்டு அவன வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிட்டாங்க... ஆனால் இப்போ மனசு கேட்காம அவங்களே அவங்க பையனக் கூட்டிட்டு இங்க வந்திருக்காங்க... அந்தப் பையன் சொன்ன வேனோட நம்பரையும், வேனோட பாணட்டில் ஏதோ ஆக்ஸிடண்ட் ஆனதினால் பட்டிருந்த அடையாளத்தை வச்சும் அக்கம் பக்கத்தில விசாரிச்சோம்.... கோவிலுக்கு வரதுக்கு முன்னாடி இங்க இருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கிற ஒரு காம்பெளக்ஸில் அவனுங்க ஏதோ வாங்கியிருக்காங்க.... ஸி ஸி டி வி கேமரால பதிவாகி இருந்த வீடியோவில் தெரிஞ்ச முகத்தைப் பார்த்தப்போ அதிலே இருந்த இரண்டு பேர் ஏற்கனவே பெட்டி கேஸஸ்ஸில அரெஸ்ட் ஆகியிருக்காங்க... அதனால அவனுங்கள அடையாளம் தெரிஞ்சுக்க முடிந்தது சார்" என்று முடித்தார்...

அவரின் ஒவ்வொரு வார்தையையும் கூர்ந்துக் கேட்டுக் கொண்டிருந்த அர்ஜூனிற்கு ஒவ்வொரு நிமிடமும் பொங்கிக் கக்கும் எரிமலையின் உச்சியில், நெருப்பின் உலையின் மீது நிற்பது போல் உடல் முழுவதும் தகித்து இருந்தது...

ஒரு பக்கம் தங்கை, மறு பக்கம் நிறைமாத கர்ப்பிணி ஆன தன் மனைவி... எப்பொழுது தன் காதலை அவன் தன்னவளுக்கு உணர்த்தியிருந்தானோ அந்த நிமிடத்தில் இருந்து அவனது கனவு, உயிர், மூச்சு என்று அனைத்துமாக மாறியிருந்தாள் அவன் மனையாள்...

எந்நேரமும் புன்னகையுடன் இருக்கும் அவள் முகமும், கண்களை அகல விரித்து அச்சத்துடன் அவனைப் பார்க்கும் அவளின் மருண்ட விழிகளும், தனித்து இருக்கும் பொழுதெல்லாம் மெதுவாக நகர்ந்து வந்து அவனின் மார்பில் படுத்துக் கொள்ளும் அவளின் தோற்றமும் அர்ஜூனின் கண் முன் வந்து இம்சித்தது...

மனதில் தன் தொழில் எதிரிகளின் பட்டியலை கணக்கிட்டவாறே "யாராக இருக்கும்?... எப்படி? எங்கே சறுக்கினோம்??? அதுவும் கடத்தல் வரை செல்வதற்கு??" என்று குழம்ப, திவ்யாவும் மஹாவும் கடத்தப்பட்டுக் கிட்டதட்ட நான்கு மணி நேரங்கள் ஆகியிருந்தது...

கமிஷனர் சொன்ன ஒரு சில நிமிடங்களிலேயே வேனை அடையாளம் கண்டு பிடித்து ட்ரேஸ் செய்யத் துவங்க...

"சார்... வேன் இருக்கும் இடத்தைக் கண்டுப்பிடிச்சாச்சு சார்" என்று கத்தினார் ஒரு காவலர்...

அவரின் கூற்றில் சடாரென்று நிமிர்ந்த அர்ஜூன் தன் அறையை விட்டு மின்னல் வேகத்தில் வெளியில் சென்றவன் வினோத்தையும் அருணையும் தங்களுடன் வரச் சொல்லி, தன் தந்தையையும், மாமனாரையும் தன் அலுவலகத்திலேயே தாங்கள் திரும்பி வரும் வரை காத்திருக்கச் சொன்னவன் அசுர வேகத்தில் காரை செலுத்த, அவனுக்கு முன்னால் அர்ஜூனின் வேகத்திற்கு இணையாகக் கமிஷனரின் காரும் பறந்தது...

காவலர் கொடுத்த விலாசத்தைக் கமிஷனர் காரும், அர்ஜூனின் காரும் அடைவதற்குக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகியிருக்க, கோகுலின் கெஸ்ட் ஹவுஸ் இருந்த வீதியை அவர்கள் அடையும் பொழுது கிட்டத்தட்ட மணி விடியற்காலை ஒன்றாகியிருக்க அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில பங்களாக்களே இருந்த அந்த வீதி முழுவதும் மயான அமைதி சூழ்ந்திருந்தது…

காரை நிறுத்திய அர்ஜூன் அதே வேகத்தில் காரை விட்டு இறங்கி வீட்டை நோக்கி ஓடவும், அவனின் தவிப்பும், கலக்கமும், அச்சமும் நன்கு புரிந்து இருந்தாலும் வீட்டிற்குள் யார் யார் இருக்கிறார்கள், எத்தனை பேர், எந்த நிலைமையில் இருக்கிறார்கள் என்று அவர்கள் ஒருவருக்கும் தெரியாததால் அர்ஜூனைத் தடுத்த கமிஷனர்...

"அர்ஜூன்... வெயிட் பண்ணுங்க... வேன் எதுவும் வெளியில் பார்க் செய்யப்படலை... ஆனால் அதுக்காக உள்ளே ஆள் யாரும் இல்லைன்னு அர்த்தம் இல்லை... ஃபர்ஸ்ட் வீட்டுக்குள்ளே என்ன ஸ்டேட்டஸ்ன்னு தெரியனும்" என்றவர் அவர்களுடன் வந்திருந்த காவலர்கள் ஒருவரிடம் வீட்டின் உள்ளே பார்ப்பதற்கு வழி இருக்கிறதா என்று தேடச் சொன்னார்...

இனி ஒரு நொடி கூடத் தன்னால் தாமதிக்க முடியாது என்று அர்ஜூனிற்குத் தோன்றினாலும் கமிஷனர் சொல்வதும் சரி என்பதால் தன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அவன் வீட்டின் வாயிலையே பார்த்திருக்க, கமிஷனர் சொன்னது போல் வீட்டைச் சுற்றி பார்த்த காவலர்களில் ஒருவர்...

"சார்... ஜன்னல் திறந்து இருக்கு சார்... பொண்ணுங்க இரண்டு பேரும் மட்டும் தான் இருக்கிற மாதிரி தெரியுது....." என்றவர் அர்ஜூனின் முகத்தைப் பார்த்தவாறே அதிர்ச்சியுடனும், அச்சத்துடனும்...

"சார்.... ப்ளீஸ் சீக்கிரம் கதவை திறங்க.... சாரோட வைஃப்பு பிரசவ வலில கீழ கிடந்து துடிச்சிட்டு இருக்காங்க" என்று ஏற்கனவே பலமடங்கு அதிகமாகப் படபடத்துத் துடித்துக் கொண்டிருந்த அர்ஜூனின் இதயத் துடிப்பை அவர் ஆயிரம் மடங்கு அதிகமாகத் துடிக்கச் செய்தார்..

தொடரும்..
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top