JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Kathala Karvama - Episode -2

JLine

Moderator
Staff member
அத்தியாயம் - 2

வீட்டிற்கு வந்தவளுக்கு 'எப்படி இவ்வளவு பெரிய கல்லூரியில் படிக்கப் போகிறோம்? அதுவும் அங்கு இருந்தவர்களைப் பார்த்தால் எல்லோரும் மிகவும் வசதி படைத்தவர்கள் போல் தோன்றுகிறதே, வாயை திறந்தாலே ஆங்கிலம் தான் போலும், ஐயோ! எதற்கு இந்த மாமா இப்படி ஒரு பெரிய கல்லூரியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்? சாதாரணக் கல்லூரிகள் எதுவுமே சென்னையில் இல்லையா என்ன?' என்று தோன்றியதில் தனக்குத் தானே புலம்ப, அருகில் வந்த நிகிலா அவள் முகத்தில் தெரிந்த கலவரத்தைப் பார்த்தவள்,

"என்ன கனிகா, என்னாச்சு?” என்று வினவினாள்.

"இல்லை நிகி, எனக்கு என்னமோ ரொம்பப் பயமா இருக்கு, ரொம்பப் பெரிய இடத்து பசங்க படிக்கிற காலேஜ் மாதிரி இருக்கு, எப்படிச் சமாளிக்கப் போகிறோமோ தெரியலை..."

"கனிகா, போன உடனேயே ஒன்று இரண்டு ஃப்ரெண்ட்ஸை பிடிச்சுக்கோ, தனியா இருந்தா அப்புறம் கம்ஃபர்டபில்லாகவே இருக்காது. அப்புறம் உன்னோட பயத்தை இப்படி வெளிய காண்பிச்சின்னா, சென்னையில் அவ்வளவு தான், பசங்க கிண்டல் பண்ணியே சாகடிச்சுடுவாங்க.." என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அங்கு வந்தான் அகில்.

"ஏன்டி, அவளே பயந்துப் போய் இருக்காள், அவள் கிட்ட போய்க் கிண்டலு அது இதுன்னு பேசிக்கிட்டு.." என்றவன், கனிகாவின் அருகில் வந்து, "அவள் சொல்ற மாதிரி எல்லாம் இல்லை கனிகா, பட், நீ ரொம்பப் பயப்படறதையும் நிறுத்து. உன்னிடம் செல்ஃபோன் இருக்கு தான... எந்தப் பிரச்சனை என்றாலும் எனக்கு ஃபோன் பண்ணு, இல்லை என்றால், நாம் இன்று பார்த்தோமே, அஸிஸ்டெண்ட் பிரின்ஸிபல், அவரிடம் சொல்லு.." என்றான்.

சரி என்று பரிதாபமாகத் தலை அசைத்தவளுக்கு ஏனோ இன்னும் பயம் அதிகமானதே தவிரக் குறையவில்லை.... இன்னும் மூன்று நாட்களில் கல்லூரிக்குச் செல்ல வேண்டும், அதற்கு வேண்டிய ஆடைகளை எடுத்து வைக்க வேண்டும் என்று நினைத்தவள் கல்லூரிக்கு போவதற்கான ஏற்பாட்டைச் செய்ய ஆரம்பித்தாள்.

******************

ஹர்ஷாவிற்கு ஞாயிறு பொழுது எப்பொழுதுமே தாமதமாகத் தான் விடியும்....

ஆனால் எழுந்தவுடன் காலில் பம்பரம் கட்டியது போல் நண்பர்கள், பார்ட்டி, பப் என்று இரவு வெகு நேரம் சென்றே வீட்டிற்குத் திரும்பி வருவான்... ஆனால் அதற்காகத் தவறான வழியில் செல்பவன் அல்ல, எதையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கத் தெரிந்தவன்...

அதனாலேயே சிதம்பரமும், சங்கீதாவும் அவனைக் கண்டிப்பதில்லை..ஆனால் சங்கீதாவிற்கு மட்டும் ஞாயிறன்று மட்டுமாவது தன் மகன் தங்களுடன் நேரம் செலவழிக்க மாட்டானா என்ற வருத்தம் இருந்து கொண்டே இருந்தது...

அன்றும் அப்படியே தாமதமாக எழுந்தவனுக்கு வீட்டின் கீழ் தளத்தில் இறைச்சலாக இருக்க, என்னவென்று பார்க்க வெளியே வந்தவனுக்குக் கீழே கூடியிருந்த தன் அன்னையின் உறவுக்காரர்களைப் பார்க்க வியப்பாக இருந்தது....

எதுவும் விசேஷமா? அதுவும் எனக்குத் தெரியாமல் என்று குழம்பியவன் திரும்பி தன் அறைக்குள் சென்று குளித்து முடித்துக் கீழே இறங்கி வர, "ஹாய் ஹர்ஷா” என்று ஒரு சேர குரல் கேட்க, மகிழ்ச்சியுடன் படிகளில் வேகமாகக் கீழே இறங்கியவன் தன் அத்தை, மாமா, சித்தி என்று அனைவரையும் கட்டி அணைத்து வரவேற்றவனை "ஹர்ஷா......" என்ற சின்னவர்களின் குரல் சந்தோஷத்தில் ஆழ்த்தியது...

அவன் அன்னை, பெற்றோருக்கு ஒரே பெண்ணாக இருந்தாலும் அவருக்கு ஒன்று விட்ட அண்ணன், தங்கை என்று ஒரு சிறு பட்டாளமே இருந்தது.... தன் சிறு வயது பருவத்தை அவர்களின் பிள்ளைகளுடன் கழித்த ஹர்ஷா பள்ளி இறுதி ஆண்டு வரை அவர்களுடனே படித்திருந்தான்...

அவர்களையும் அங்குப் பார்க்க, ஆச்சரியத்துடன், "மாம், எதுவும் விசேஷமா?" என்று வினவ,

அவன் சித்தி,

"ஹர்ஷா, ரித்திகாவிற்குத் திருமணம் பேசி முடித்திருக்கிறோம். அதற்கு இன்விடேஷன் வைக்கச் சென்னை வர வேண்டியதாக இருந்தது... கூட இந்த வாண்டுகளும் உங்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்று ஒரே அலம்பல்... அதான், கிளம்பி வந்துவிட்டோம். இன்று இரவே ரிட்டர்ன் ஃப்ளைட் புக் பண்ணியிருக்கிறோம். ஜஸ்ட் ஒரு நாள் விசிட்.." என்றார்.

"வாட், ரித்தி இஸ் கெட்டிங் மேரீட்?? அவ வந்திருக்காளா?" என்றவன் கண்கள் தன் சித்தி மகள் ரித்திகாவைத் தேட,

"இல்லை ஹர்ஷா அவள் வரவில்லை.." என்றார் சித்தி.

அவர்களிடம் மகிழ்ச்சியுடன் உறவாடிக் கொண்டிருந்தவனை ஏக்கத்துடன் மொய்த்துக் கொண்டிருந்தது இரு ஜோடி கண்கள்... அவர்கள் சங்கீதாவின் ஒன்று விட்ட அண்ணன்களின் மகள்கள், ரேஷ்மா மற்றும் கரிஷ்மா...

மும்பையில் பிறந்து வளர்ந்தவர்கள், ஹர்ஷாவோடு பள்ளியில் படித்திருந்தவர்கள். இருவருக்குள்ளும் ஒரு போட்டி, யார் ஹர்ஷாவை திருமணம் செய்து கொள்வது என்று?

சிறுவர்கள் இருவரின் விருப்பமும் பெற்றோர்களுக்கும் தெரிந்து இருந்தாலும் ஹர்ஷாவிற்கு யாரைப் பிடிக்கிறதோ அவர்களுக்குத் தான் திருமணம் முடிப்பது என்றும், இந்தப் பயணத்தில் சங்கீதாவிடம் அதைப் பற்றிப் பேசி ஒரு முடிவெடுப்பது என்றும் நினைத்திருந்தார்கள் பெரியவர்கள்...

ஆதலால் எப்படியும் ஹர்ஷாவிடம் தங்கள் மனதில் உள்ளவற்றை எடுத்து சொல்லி அவனுக்கு யாரைப் பிடித்திருக்கிறது என்று தெரிந்துக் கொள்வதென்று ஒரு முடிவோடு வந்திருந்தார்கள் இளையவர்களும்... கிட்ட தட்ட இந்தப் பயணமே அந்த இளம் பெண்களின் திட்டமே...

ரித்திகாவின் திருமணத்திற்கு அழைக்க அத்தையும் மாமாவும் சென்னை செல்வதை அறிந்தவர்கள் எப்படியும் ஹர்ஷாவைப் பார்த்து விடவேண்டும் என்ற உறுதியுடன் மற்ற அனைவரையும் சரி செய்து இங்கு வந்திருந்தார்கள்... ஹர்ஷாவின் மீது அவர்கள் இருவருக்கும் அத்தனை காதல்...

ஹர்ஷா எல்லோரிடமும் அன்புடன் பழகினாலும் அவனுக்கு எந்த அத்தை மகள்கள் மீதோ, இல்லை மாமன் மகள்கள் மீதோ காதலோ அல்லது எந்த ஒரு ஈர்ப்போ இருந்ததில்லை.....

ஒரு வழியாக அவனை எல்லோரும் விட்டபின், இருவரும் அவனருகே சென்றவர்கள் "என்ன, ஹர்ஷா எல்லோரையும் பார்த்து பேசினீங்க, எங்களை மறந்துவிட்டீர்கள்.." என்றனர்...

"ஸாரி, திடீரென்று எல்லோரையும் ஒரே இடத்தில் பார்க்கவும் யாரிடம் பேசுவது என்று தெரியவில்லை" என்றவன் அவர்களிடம் சிறிது நெரம் பேசிவிட்டு வழக்கம் போல் தன் நண்பர்களைப் பார்க்க கிளம்ப,

"என்ன ஹர்ஷா, எல்லோரும் நம்மைப் பார்க்கத் தான் வந்திருக்கிறார்கள்... இன்று ஒரு நாள் இவர்களுடன் ஸ்பெண்ட் பண்ணு" என்று சங்கீதா கூற, வேறு வழியில்லாமல் வீட்டில் இருக்க வேண்டியதானது ஹர்ஷாவிற்கு... மதியம் எல்லோரும் ஒன்றாக உணவு அருந்த அமர்ந்த பொழுது சங்கீதாவின் பெரிய அண்ணன் மெல்ல பேச்சை ஆரம்பித்தார்....

"ஹர்ஷா, காலேஜ் முடிந்தவுடன் என்ன ப்ளான்? அப்பாவோடு பிஸினஸ்ல இறங்கப் போகிறாயா? இல்லை வேறு ஐடியாஸ் எதுவும் இருக்கிறதா?"

"நான் யூ எஸ் போகலாம் என்று இருக்கிறேன் அங்கிள், அங்க பிஸ்னஸ் மேனேஜ்மெண்ட் பற்றிப் படிக்கலாம்னு இருக்கேன்" என்க, ரேஷ்மாவிற்கும் கரிஷ்மாவிற்கும் முகம் சட்டென்று வாடிப் போனது...

தொடர்ந்த ஹர்ஷாவின் மாமா,

'ஹர்ஷா.. உனக்கு நம்ம பேமிலியில் உள்ள கேர்ள்ஸ் மத்தியில் க்ரேஸ் ரொம்ப ஜாஸ்தியாயிருக்கு.. சீக்கிரம் யாரையாவது நீ சூஸ் பண்ணனும்" என்க, ஒன்றும் புரியாமல் அவரைக் கூர்ந்து பார்த்தவன் தன் அன்னையைப் பார்க்க, அவருக்கும் தன் அண்ணனின் பேச்சு வியப்பாக இருக்க, நான் பார்த்துக் கொள்கிறேன் என்பது போல் கண்களால் சைகை செய்தவர்,

"அண்ணா, ஹர்ஷாவிற்கு இருபத்தி நாலு வயதுதான் ஆகிறது, இந்த வயதில் எப்படி அவனுக்குத் திருமணம் செய்வது? இன்னும் ஒரு மூன்று நான்கு வருடங்கள் போகட்டும் அப்புறம் அது பற்றிப் பேசிக்கொள்ளலாம்.." என்றார்.

ஆனால் ஹர்ஷாவிற்கு இந்தப் பேச்சிற்கு இப்பொழுதே ஒரு முற்றுப்புள்ளி வைப்பது நல்லது என்று தோன்ற,

"அங்கிள்.... நான் மாம் சொன்ன மாதிரி இன்னும் ஃப்யூ இயர்ஸ்க்கு மேரேஜ் பற்றி நினைக்க முடியாது.. அது மட்டும் இல்லாமல் எனக்கு நம்ம ஃபேமிலியில் இருந்து யாரையும் மேரேஜ் பண்ணிக்கிற ஐடியாவும் இல்லை" என்று பட்டென்று சொல்ல அங்கிருந்த அனைவருக்கும் முகத்தில் அடித்தது போன்று ஆனது...

தன் மகள் ரேஷ்மாவை திரும்பி பார்த்த ஹர்ஷாவின் மாமா, அவள் கண்கள் கலங்கியிருப்பதைப் பார்த்தவர் சூழ்நிலையைச் சமாளிக்க,

"ஹர்ஷா? ஏன் நம்ம குடும்பத்தில் யாரும் அழகாயில்லையா? உனக்கு யாரையும் பிடிக்கவில்லையா?” என்க, சங்கீதாவிற்குத் தன் மகன் எவர் மனதையும் நோகடிக்காமல் பேச வேண்டுமே என்று அச்சமாக இருந்தது...

"எதுக்கு அண்ணா இப்பொழுது ஹர்ஷா கல்யாணத்தைப் பற்றிய பேச்சு? அதற்கு இன்னும் காலம் இருக்கிறது..."

"சங்கீ, நம்ம ரேஷ்மாவிற்கு ஹர்ஷாவைப் பிடித்திருக்கிறதா சொல்கிறாள்" என்று சொல்லி முடிப்பதற்குள் சங்கீதாவின் மற்ற அண்ணன் வாய்ப்பை நழுவ விடாமல்...

"கரிஷ்மாவிற்கும் ஹர்ஷாவைப் பிடித்திருக்கிறது சங்கீதா, அதனால் ஹர்ஷாவிற்கு யாரைப் பிடிக்கிறதோ அவர்களோட நாம் ஒரு நிச்சயம் போல் செய்து கொள்வோம், பின் ஹர்ஷா எப்பொழுது விருப்படுகிறானோ அப்பொழுது திருமணத்தை வைத்துக்கொள்வோம்" என்று முடிக்க, சங்கீதாவிற்கு ஆயாசமாக இருந்தது..

அருகில் அமர்ந்திருந்த தன் கணவனைப் பார்க்க, அவர் வாய் திறப்பதற்குள்,

"அங்கிள், எனக்கு ரேஷ்மாவையும் கரிஷ்மாவையும் என் கஸின்ஸ் என்பதினால் பிடிக்கும், ஆனால் மேரேஜ் என்பது டிஃபரெண்ட்... அது என்னோட பெர்ஸ்னல் விஷயம்...உங்க பொண்ணுங்க என்னை விரும்பறதால நான் அவங்களில் ஒருத்தரை தான் சூஸ் பண்ணணும் என்று சொல்ற ரைட்ஸ யார் உங்களுக்குக் கொடுத்தது?? இட் இஸ் மை லைஃப் டிஸிஷன்....ஸோ ஐ ஹோப் யூ ஆல் டோண்ட் டாக் அபௌட் திஸ் எனி மோர் [It is my life decision...so I hope you all don't talk about this any more]" என்றவன் விருட்டென்று எழுந்தவன் "ஓகே மாம், ஐ ஹாவ் டு கோ [ok mom, i have to go] " என்று வெளியேறினான்.

அவன் பதிலால் திடுக்கிட்ட உறவினர்கள் அதிர்ச்சியுடன் அவன் சென்ற பாதையைப் பார்த்து இருக்கச் சிதம்பரம்..

"ஹர்ஷாவைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். எப்பொழுதும் இப்படித் தான் மனசில் இருப்பதைப் பட்டென்று வெளியில் சொல்லிவிடுவான்....அவனைத் தப்பாக நினைக்காதீங்க...அது மட்டும் இல்லாமல் அவன் விருப்பம் தான் எங்களது விருப்பம், ப்ளீஸ் அவன் சொன்னது போல் யாரும் இனி அவன் மேரேஜைப் பற்றிப் பேச வேண்டாமே..." என்று முற்று புள்ளி வைக்க, ஒரு வழியாக அந்தப் பேச்சை அதோடு முடித்தார்கள்..

ஆனால் சங்கீதாவின் அண்ணன்கள் இருவரும் எப்படியாவது ஹர்ஷாவை மாற்றித் தங்கள் பெண்ணைக் கட்டி வைத்து விட வேண்டும் என்று உறுதியுடன் இருந்தனர்....

ஏனெனில் சங்கீதாவின் பெற்றோர் வழியில் அவர் ஒருவரே வாரிசு... அவர்களுக்கு ஏகப்பட்ட தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள், அசையா சொத்துகள் உள்ளன...அதே போல் சிதம்பரத்தின் வழியிலும் அவர் ஒருவரே வாரிசு.. ஆக இருவகையிலும் வரும் அசையும் அசையா சொத்துக்களுக்கும், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் என்று எல்லாவற்றுக்கும் ஒரே வாரிசு ஹர்ஷா...இத்தகைய கோடீஸ்வரனை அழகில் பேரழகனை விட்டு விட யாருக்கு மனசு வரும்...

*****************

வீட்டை விட்டு வெளியில் வந்தவன் "ஊஃப்..." என்றவாறே "யார் இவர்கள் என் திருமணத்தைப் பற்றிப் பேசுவது??? அதைப் பற்றிப் பேச வேண்டாம் என்று மாம் சொல்லியும் அது என்னது மறுபடியும் அதைப் பற்றியே டிஸ்கஷன்" என்று எரிச்சல் அடைந்தவன் தலையை அழுந்த கோதி விட்டுக் கொண்டு, விட்டால் போதும் என்று வேகமாகக் காரை செலுத்தினான் தன் நண்பர்களைச் சந்திப்பதற்கு...

அன்று அவர்கள் அனைவரும் ஒரு ரெஸ்டாரண்டில் சந்திப்பதாக முடிவு செய்திருந்தார்கள்... ஒரு வித யோசனையுடன் வந்த ஹர்ஷாவைப் பார்த்த நண்பர்கள்..

"என்ன ஆச்சு ஹர்ஷா? ஏன் டல்லாக இருக்க??"

"ஒன்னும் இல்லை... என்னோட மாம்மோட ரிலேட்டிவ்ஸ் மும்பையில் இருந்து வந்திருக்காங்க... அவர்கள் பெண்களில் யாரையாவது ஒருத்தியை நான் சூஸ் பண்ணி மேரேஜ் செய்யணுமாம்...இரிட்டேட்டிங்.." என்று சலித்துக்கொள்ள,

"யூ ஆர் ஸோ லக்கி ஹர்ஷா, நீ எங்க போனாலும் பொண்ணுங்க உன்னைய விடாம துரத்துகிறார்கள்"..

எரிச்சலுடன். "ம்ப்ச், பட் நான் விரும்பும் பெண்ணை இன்னும் பார்க்கவில்லையே" என்றவனுக்குத் தெரியாது மறுநாளே தன்னவளைப் பார்க்க போகிறோம் என்று...

தொடரும்..
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top