JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Kathala Karvama - Episode 27 and Epilogue

JB

Administrator
Staff member
அத்தியாயம் 27

கடைசி விநாடியில் சுதாரித்துக் காரை வேறு பக்கம் திருப்ப ஆனால் லாரி விடாமல் அவன் பக்கம் வருவதைப் போல் தோன்றியது.


சடுதி நேரத்தில் லாரி ஒட்டுபவனின் எண்ணம் புரிந்து கொண்டவன் காரின் வேகத்தை அதிகரிக்க அவன் வேகத்திற்கு இணையாக லாரியும் தன் வேகத்தை அதிகரித்தது.


கொஞ்சம் சுதாரிக்காமல் இருந்து இருந்தால் நிலைமை மிகவும் மோசமாக முடிந்திருக்கும்.


இரவு நேரத்தில் எதிரில் வந்து கொண்டு இருந்த வாகனங்களையும் இடித்து விடாமல் தங்கள் காரின் பின்னால் வெகு அருகில் வந்து கொண்டு இருக்கும் லாரியின் வேகத்திற்கும் ஈடு கொடுத்து புயல் போல் காரை செலுத்திக் கொண்டு இருந்தவனின் எண்ணமெல்லாம் அருகில் அதிர்ந்து அரண்டு போய்த் தன்னை நெருங்கி அமர்ந்து இருக்கும் தன் மனைவியைக் காப்பாற்றுவதிலே இருந்தது.


தன் உயிருக்கு என்ன ஆனாலும் சரி, ஆனால் அவளுக்கு ஒரு அடி பட்டாலும் அவனால் தாங்கிக் கொள்ள இயலாது.

இத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக அவனை நெருங்கி இருக்கிறாள்.... அத்தனை மகிழ்ச்சியையும் வடிக்கச் செய்வது போல் இருந்தது இந்தக் கொலை முயற்சி.


தங்களைக் கொல்லும் அளவிற்கு யாருக்கு வன்மம் இருக்கும் என்று காரை அதி வேகமாகச் செலுத்திக் கொண்டே குழம்பியவனுக்குப் பொறித் தட்டியது போல் வந்து போனது ரியா தங்கள் இருவரையும் பொறாமை வழியும் கண்களுடன் பார்த்து இருந்தது.


அப்படி என்றால் இது நிச்சயம் ரியாவின் வேலையாகத் தான் இருக்கும்.


தன்னை ஒரு நிலைக்குக் கொண்டு வந்தவன் காரை ஒரு குறுகிய தெருவிற்குள் ஒடித்துத் திருப்ப லாரியால் அந்தத் தெருவில் நுழைய முடியவில்லை.


தான் மட்டும் கொஞ்சம் கவனித்து இருக்காவிட்டால்....?

நடக்க இருந்ததை எண்ணி மனதிற்குள் அதிர்ந்தவன் திரும்பி பார்க்க அங்குத் திகிலில் உறைந்தவளாய் நடுநடுங்கிக் கொண்டிருந்தாள் கனிகா.


அவளை எலும்பு முறியும் அளவிற்கு இறுக அணைத்துக் கொண்டவன் தலையைத் தடவிக் கொடுத்து,

"கனி... ஆர் யூ ஓகே?" என்றான் பதற்றம் நிறைந்த குரலில்.


அவளிடம் இருந்து எந்தப் பதிலும் வராமல் போகவே அவளின் நிலை உணர்ந்தவன் அவள் முகத்தைத் தன்னை நோக்கி உயர்த்தி,

"ஒண்ணும் இல்லைடா.... அதான் நான் இருக்கேன் இல்லை... இனி பயம் இல்லை...." என்றான்.


"எ.. என்... என்னங்க, எனக்கு என்னமோ அந்த லாரிக்காரன் வேணும்னே தான் நம் மேலே மோத வந்திருப்பானோன்னு தோணுது.... நீங்க வேகமாகப் போக ஆரம்பிச்சதும் அவனும் உங்க பின்னாடியே வண்டியை திருப்பிக்கிட்டு வந்தான்.... எனக்கு ரொம்பப் பயமா இருக்குங்க.... உங்களுக்கு ஏதாவது ஆகியிருந்தால்... ஐயோ! நினைச்சாலே பதறுது.... ஏதாவது ஆகியிருந்தால் நான் நிச்சயம் செத்துப் போயிருப்பேங்க..." என்று கதறியவளைப் பார்த்தவனுக்கு அந்த அசாதரணச் சந்தர்ப்பத்திலும் மனைவியின் பாசத்தை நினைத்து காதல் பொங்கி வழிந்தது.


தானும் தன் கணவனுடன் அதே காரில் தான் இருக்கிறோம்... விபத்து நேர்ந்திருந்தால் அது தன் உயிரையும் தான் காவு வாங்கி இருக்கும் என்று தெரிந்து இருந்தும் அவனுக்கு ஏதாவது ஆகியிருந்தால் நான் செத்துவிடுவேன் என்று உள்ளம் பதைக்கும் மனைவியைக் கண்டவன் அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டவன்.


"காரை இடிச்சிருந்தால் எனக்கு மட்டும் இல்லை, உனக்கும் தான்டி ஏதாவது ஆகியிருக்கும்... என்னைப் பத்தி மட்டும் யோசிக்கிற.... உனக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தால் நான் மட்டும் இந்த உலகத்தில் இருந்து என்ன பண்ணப் போறேன்?" என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் ஆறாகப் பெருக்கெடுத்த கண்ணீரோடு அவன் மார்பில் அழுந்த முகம் புதைத்துக் கொண்டாள்.


சற்று நேரம் அந்த இடத்திலேயே இருந்தவர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு காரை கிளப்ப வீடு வரும் வரை அவளை அவன் தன்னை விட்டு நகர விடவில்லை.


வீடு நெருங்கியதும், "கனி, மாம் டாட் கிட்ட இதைப் பத்தி எதுவும் சொல்லாத..." என்றவன்,

"நீ போ, நான் கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன்..." என்றான்.


அவன் தோள் வளைவுக்குள் பதறும் உடலுடன் அடங்கி இருந்தவள் அவனை விட்டு நகராமல் "இல்லை, நீங்க எங்கேயும் போக வேண்டாம்... உங்களை விட்டு நான் போக மாட்டேன்.... வீட்டுக்குள்ள வாங்க..." என்க.


"கனி, எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு.... நான் போயே ஆகணும்... நீ உள்ள போ... நான் இன்னும் ஒரு ஒன் ஹவரில் வந்து விடுகிறேன்.." என்றான்.


அவன் குரலில் வழக்கத்திற்கும் அதிகமான கண்டிப்பான தொனி தெரிய பயந்தவள் இருந்தும் வலிய வரவழைத்துக் கொண்ட தைரியத்தில்.


"எப்படிங்க இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம் உங்களைத் தனியா போக விடச் சொல்றீங்க... அந்த லாரிக்காரன் திரும்பவும் உங்களைக் கண்டு பிடிச்சு துரத்தினா? உங்களுக்கு ஏதாவது ஆனா?.... ஐயோ! வேண்டாங்க... நாம முதல்ல போலீசுக்கு போவோம், அவங்க அது யாருன்னு கண்டுப்பிடிக்கட்டும்... அதுக்கப்புறம் நீங்க வெளியில் போங்க..." என்றாள் நெஞ்சம் பதற.


சிறு பெண் போல் பேசும் மனைவியைக் கண்டவன் அவளின் முகத்தை இரு கைகளாலும் ஏந்தி அவள் கண்களைக் கூர்ந்து பார்த்தவாறே.


"கனி, இத யாரு பண்ணிருப்பான்னு எனக்குத் தெரியும்... இதைப் போலீஸ் மூலமா எல்லாம் ஹாண்டில் பண்றது வேஸ்ட்.... இப்போ நீ வீட்டுக்குள்ள போ, நான் சீக்கிரம் வந்து விடுகிறேன்" என்றவன் அவள் நெற்றியில் முத்தம் இட்டு, அவள் பக்கம் எட்டி கார் கதவை திறந்து விட அவனின் பிடிவாத குணம் தெரிந்ததால் அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் சரி என்று தலை அசைக்க அவள் தலை முடியை கோதியவன்.


"எனக்கு ஒண்ணும் ஆகாது.... நீ தூங்காம இரு.. அது போதும்... நான் சீக்கிரம் வந்துவிடுகிறேன்..." என்று கண் சிமிட்டி கூறியவன் மேலும்,


"கனி, நான் எங்க இருக்கேன்னு கேட்டு ஃபோன் செஞ்சிட்டே இருக்காத... என்ன?... நான் வந்திடுறேன்..." என்று கூற வேறு வழியில்லாமல் இன்னும் அச்சம் விலகாத முகத்துடன் அவனுக்கு விடை தந்தாள்.


அவன் கார் கண்களில் இருந்து மறையும் வரை காத்திருந்தவள் வீட்டிற்குள் நுழைய சங்கீதாவின் விசாரிப்புக்கு மேலோட்டமாகப் பதிலளித்தவள் தன் அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள்.


அச்சத்தில் இன்னும் அவள் உடல் நடுக்கம் அடங்கவில்லை... இதில் அவன் தனியாக வெளியே சென்று இருப்பதை நினைத்துக் கலக்கமாக இருக்க உடை கூட மாற்றாது கட்டிலில் தலை சாய்த்து அமர்ந்தவளுக்கு அது ரியாவின் வேலையாகத் தான் இருக்கும் என்று புரிந்தது.


அப்படி என்ன ஆசை ஒரு ஆண் மகனின் மேல், அதுவும் அவனைக் கொல்லும் அளவிற்கு... ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் திகைத்தவள் அவன் வரும் வரை தூங்காது விழித்திருக்க அங்கு அவளை வீட்டில் விட்டவன் நேராகச் சென்றது ரியாவின் இல்லத்திற்கு.


புயல் போல் ரியாவின் வீட்டின் காம்பவுண்டுக்குள் காரை செலுத்த அவன் காரை வாயிலில் தடுத்து நிறுத்திய காவலாளி அவனின் ஒரே பார்வையில் சகலமும் நடுங்க தானாகவே வழியை விட்டு நகர்ந்தான்.


வீட்டிற்குள் வேட்டை புலி போல் நுழைந்தவன், "ரியாஆஆஆஆ.............." என்று கர்ஜிக்க அந்த நேரத்தில் அவனின் கர்ஜனையைக் கேட்டு அதிர்ந்த ரியாவின் பெற்றோர் முதல் வேலைக்காரர்கள் வரை முன் அறைக்கு ஓடி வந்தார்கள்.


அங்கு ஹர்ஷா விழிகள் சிவந்து, அடங்கா ஆத்திரத்தில் முகம் அனலாகக் கொதிக்க நின்றிருந்த தோரணையில் கிட்டத்தட்ட சகலமும் புரிந்து போனது ரியாவின் தந்தை மார்த்தாண்டத்திற்கு.


கல்லூரியில் கனிகாவை தன் ஆட்கள் மூலம் ரியா கடத்திய அன்றே மார்த்தாண்டத்திடம் அவன் பேசியதில் இருந்து ரியாவை ஹர்ஷாவின் வாழ்கையில் தலையிட வேண்டாம் என்று எச்சரித்து இருந்தார்.


தான் எவ்வளவு பாடுபட்டு இந்த நல்ல நிலைமைக்கு வந்தவர் என்றும், எத்தனை தான் தன் வாழ்க்கையில் பணம், அந்தஸ்து என்று சம்பாதித்து இருந்தாலும் மானமும் மரியாதையும் நல்லொழுக்கமும் தனக்கு எவ்வளவு முக்கியம் என்று அவளுக்குக் கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் எடுத்துரைத்து இருந்தார்.


தந்தையின் கோபமும், பிடிவாதமும் நன்கு தெரிந்தவள் அதற்குப் பின் ஹர்ஷாவின் வாழ்க்கையில் தலை இடாமல் தான் இருந்தாள்.


அல்லது அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துச் சாந்தமாக இருப்பது போல் நடித்திருந்தாளோ.


ஆனால் அவளின் பாசாங்கு எல்லாம் அகிலையும், கனிகாவையும் அன்று ஒரு நாள் ஷாப்பிங் மாலில் பார்க்கும் வரை தான்.


அடி மனதில் எப்பொழுதும் ஆட்கொண்டிருந்த கேவலமான உடல் இச்சையும், கூடப் பிறந்த திமிரும், பொறாமைக் குணமும் தந்தையின் அறிவுரைகளையும், எச்சரிக்கைகளையும் மறக்கடிக்கச் செய்ய அவர்களைப் புகைப்படம் எடுத்தவள் ஹர்ஷாவிற்கும் அனுப்பி வைக்க ஏற்கனவே கனிகாவின் மேல் கோபத்தில் இருந்தவனின் மனதில் அந்தப் புகைப்படங்கள் வெறுப்பைத் தூண்டிவிட்டது.


அவளின் கெட்ட விகாரமான எண்ணத்தினால் இரு இளம் ஜீவன்களின் வாழ்க்கை நரகமாகி போனது.


கனிகாவின் மேல் தீராத கோபம் கொண்டிருந்தவன், அடி மனதில் தன் கனி தவறு செய்திருக்க மாட்டாள் என்று ஆழ்ந்த நம்பிக்கை இருந்தாலும் தன் கண்கள் கண்டதை நம்பி அவளை வெறுத்து ஒதுக்கியவன், ஒரு வேளை கனிகாவை மறப்பதற்கு வேறு ஏதேனும் கெட்ட வழியைத் தேர்ந்தெடுத்து இருந்தாலோ அல்லது வேறு பெண்ணைத் தன் வாழ்க்கையில் நுழைய அனுமதித்து இருந்தாலோ கனிகாவின் நிலைமை என்னவாக ஆகியிருக்கும்!!!!


அதே போல் ஹர்ஷாவை பிரிந்து இருந்த துக்கத்தில் அவனின் சந்தேகம் என்ற பேயால் தன் வாழ்க்கை கடுந்துயரில் தள்ளப்பட்டு, இரண்டு வருடங்கள் உடலால் மட்டும் இந்த உலகத்தில் வாழ்ந்தவள் உள்ளத்தால் என்றோ இறந்துவிட்ட பிணமாக நடமாடி, பின் தற்கொலை வர சென்று, ஒரு வேளை இறந்திருந்தால்!!!!!


சில தீய மனிதர்கள் தங்கள் அற்ப உலக இச்சைகளுக்காகச் சக மனிதர்களின் வாழ்க்கையில் எந்த அளவிற்கு விளையாடுகிறார்கள்.


ஆனால் தீமை எப்பொழுதும் வெற்றி பெறுவது போலவும், நன்மை தோற்று போவது போலவும் இருக்கும்.... இறுதியில் வெற்றி பெறுவது நற்பண்பு, நல்லொழுக்கம், நன்னடத்தை, நல்ல மனம் தான்.


அது ஹர்ஷா, கனிகாவின் வாழ்க்கையிலும் நடந்தது.


அது வரை தன்னவளின் மேல் சந்தேகம் கொண்டு இருந்தவனுக்கு அவள் தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் இருந்த சமயம் அகிலின் விளக்கம் கேட்டவனுக்குக் கேட்ட நொடியே ரியாவின் மேல் தான் சந்தேகம் வந்தது.


பின் இந்த உலகத்தில் வேறு யாருக்கு தன்னையும், கனிகாவையும் பிரிக்கும் எண்ணம் வரும்.


இதற்குப் பதில் ரியாவிடமே கேட்டு விடுவது என்று தான் அன்றும் ரியாவின் வீட்டிற்கே வந்தான்... உள்ளம் ஆத்திரத்திலும் ஆங்காரத்திலும் கொதிக்க ரியாவை சந்திக்க வந்திருந்தவனை இன்று போல் அன்றும் மார்த்தாண்டம் தான் எதிர் கொண்டார்.


ஹர்ஷா..... வாழ்க்கையில் பயம் என்பதே அறியாதவன்... ஒருவருக்கும் பணிந்து போகும் மனிதன் அல்ல அவன்... அவன் தன் எதிரிகளை அடக்கும் விதமே வேறு.


தன் உடல் உயிர் அனைத்திலும் கலந்திருக்கும் தன் மனம் கவர்ந்தவளையே அத்தனை சொந்தங்களுக்கு முன் அவன் அதிரடியாகத் தூக்கி வந்தவன்... அப்படி இருக்க அவனுடைய எதிரிகளை அவன் எதிர் கொள்ளும் விதத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.


அது எப்பொழுதுமே அரக்கதனமாகத் தான் இருக்கும்.... இப்பொழுது அவனின் தொழில் வட்டாரத்திலும் இவனின் அதிரடித்தனங்கள் மிகவும் பிரபலம்... மார்த்தாண்டத்தின் காதுகளுக்கும் இவனைப் பற்றிய விஷயங்கள் போகத் தவறியதில்லை.


ஆனால் அதே சமயம் மார்த்தாண்டத்தின் மேல் அவனுக்குத் தனி மதிப்பு..... தொழில் உலகத்தில் மார்த்தாண்டத்தின் நல்ல குணத்திற்கு அவருக்குப் பல நண்பர்கள், அதில் சிதம்பரமும் ஒருவர்.


தன்னுடை அதிரடியான செயலில் அவருக்கு அவப் பெயர் வந்து விடக் கூடாது என்று அவன் மீண்டும் அவரைச் சந்தித்து ரியாவின் கீழ் தரமான வேலையைப் பற்றிக் கூற அன்று அவர் எடுத்திருந்த ருத்ரதாண்டவத்தில் ரியா சப்த நாடியும் அடங்கி ஒடுங்கி போனாள்.


தான் அத்தனை கூறியும் ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுக்கத் தன் மகள் கங்கணம் கட்டியிருப்பது போல் தெரிய இனி அவளைச் சுதந்திரமாக விடுவது தவறு என்று முடிவெடுத்திருந்தவர் தன் ஒன்று விட்ட அக்காள் மகனுக்கு ரியாவை மணம் முடிக்கப் பேசியிருந்தார்.


ரியாவின் அத்தை மகன் கிராமத்தில் வளர்ந்த எட்டாம் வகுப்பு கூடத் தாண்டாதவன்.... ஏகப்பட்ட நிலபுலங்கள் இருந்ததால் விவசாயத்தை மட்டுமே தொழிலாகவும் தன் உயிராகவும் நேசித்து வாழ்ந்து வருபவன்.... ஆனால் ரியாவை பொறுத்தவரை படிக்காத பட்டிக்காட்டு காட்டான்.


தந்தை அவனுக்குத் தன்னை மணமுடிக்க முடிவெடுத்ததும் கொதித்தவள் தன் அன்னையின் காலடியில் விழ மார்த்தாண்டத்திடம் கெஞ்சி கதறி அவரின் முடிவை ஒத்தி வைக்கச் சொல்லியிருந்தார் ரியாவின் அன்னை.


அவளைக் கடுமையாக எச்சரித்து இருந்தவர் மீண்டும் ஒரு முறை அவள் தன் கட்டுப்பாட்டை மீறி ஏதாவது தவறு செய்தால் மறு முகூர்த்தத்திலேயே அவளுக்கும் தன் அக்காள் மகனிற்கும் திருமணம் என்று உறுதியாகக் கூறியிருக்க இப்பொழுது மீண்டும் ஹர்ஷாவின் வரவும், செவ்வானமாய்க் கோபத்தில் சிவந்திருந்த அவனின் கண்களும் சொல்லாமல் சொல்லியது தன் மகளின் ஆட்டத்தை.


"ரியாஆஆஆஆ..." என்று அவன் கர்ஜனையைக் கேட்டதும் கூடிய வேலையாட்களைக் கண்டவர் கை அசைத்து அவர்களைப் போகச் செய்து ஹர்ஷாவின் அருகில் வந்தவர்.


"வாங்க தம்பி, இப்போ என்ன பண்ணினா என் பொண்ணு?" என்றார் அமைதியாக ஆனால் பல்லை கடித்துக் கொண்டு.


ரியாவின் அன்னைக்குப் பரிபூரணமாகத் தெரிந்து போனது ரியாவின் நாளைய நிலைமை.... கண்களில் அச்சத்துடன் ரியாவை நோக்க அங்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை நடுங்கிக் கொண்டு நின்றிருந்தாள் அவரின் அருமை மகள்.


"அங்கிள், நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்.... உங்க பொண்ணோட கேடு கெட்ட நடத்தையை... இப்போ எனக்கும் கனிக்கும் மேரேஜ் ஆகிடுச்சு.... ஆனால் இன்னமும் உங்க பொண்ணுக்கு என் மேல் உள்ள வெறி தீரலை.... அது என் மேலா அல்லது என் உடம்பு மேலான்னு தெரியலை..."


இதை ஹர்ஷா சொல்லும் பொழுது சாட்டையால் அடித்தது போல் அவமானத்தில் முகம் கன்றி தன் மகளைத் திரும்பி பார்த்தார் மார்த்தாண்டம்.


ஒரு தந்தை தன் மகளைப் பற்றிக் கேட்கக் கூடாத வார்த்தைகள்...


கிட்டத்தட்ட தாசி அளவிற்குப் பெயர் எடுத்துவிட்டாள் அவரின் ஒரே மகள்.


அவரின் கண்களில் அத்தனை வேதனை.


மேற்கொண்டு பேசு என்பது போல் ஹர்ஷாவை திரும்பி பார்க்க... எந்த நிமிடமும் வெடிக்கத் தயாராக இருந்த எரிமலை போல் நின்றிருந்தவன் அடுத்து சொன்ன வார்த்தைகள் அவரின் உடலில் ஒரு அதிர்வை கொண்டு வந்தது.


"இனி நான் அவளுக்குக் கிடைக்க மாட்டேன்னு தெரிஞ்சு இன்னைக்கு எங்களைக் கொலை பண்ணுற அளவிற்கு உங்க பொண்ணு தயாராகிட்டா..."


"இல்லை, டாட்.... நான் அப்படி ஒண்ணும் பண்ணலை..... எனக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை..." என்று வெறிக் கொண்டு கத்தும் மகளைப் பார்த்தவர் ஹர்ஷாவிடம் திரும்பி,


"என்ன நடந்ததுன்னு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க தம்பி.." என்றார் அமைதியாக.


நடந்த அனைத்தையும் சொன்னவன்,

"இன்னைக்குக் காலேஜில் உங்க பொண்ண பார்த்தப்பவே நினைச்சேன்.... இவ நிச்சயம் எதாவது பிரச்சனை பண்ணுவான்னு, ஆனால் கொலைப் பண்ணுற அளவிற்குப் போவான்னு நினைச்சு கூடப் பார்க்கலை....." என்று கர்ஜிக்க, அவனை ஆசுவாசப்படுத்தியவர்,


"ரியா, சத்தியமா சொல்லு.. இது உன் வேலையா?" என்றார்.


"இல்லைப்பா, சத்தியமா இத நான் பண்ணலை... இந்த அளவிற்கு எல்லாம் எனக்குத் தைரியம் இல்லைப்பா..."


மகளின் கூற்றில் சில நொடிகள் அவளை அமைதியாகப் பார்த்தவர் ஒரு பெரு மூச்சு விட்டு ஹர்ஷாவிடம் திரும்பி,


"தம்பி, நீங்க போங்க... இத பத்தி நான் விசாரிக்கிறேன்... இது ஒரு வேளை என் பொண்ணோட வேலையா இருந்தால் அதற்கு என்ன தண்டனைன்னு அவளுக்குத் தெரியும்..."


"அங்கிள், இதை நான் இப்படியே விட முடியாது..... என் வொய்ஃப் தான் என்னோட உயிர்.... அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா நிச்சயம் உங்க பொண்ண நீங்க உயிரோட பார்க்க முடியாது.... இப்படிப் பேசறதுக்கு மன்னிச்சிருங்க... பட் என்னைப் பத்தி நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க... உங்களோட நல்ல குணத்திற்காகத் தான் நான் இத்தனை தடவை பொறுமையா இருக்கேன்..." என்றவன் ரியாவை நோக்கி அடி எடுத்து வைக்க, ஏற்கனவே அவனின் கர்ஜனையில் கதி கலங்கி போயிருந்தவள் அவன் தன்னை நோக்கி நடந்து வரவும் மெல்ல தன் அன்னையிடம் ஒண்டினாள்.


அவளின் வெகு அருகில் நெருங்கி நின்றவன் தன்னைக் கண்டதும் அவள் தலை குனிந்து நிற்க, அவளின் முகத்தின் முன் விரல் சொடுக்க, நிமிர்ந்து பார்த்தவளின் முன் தன் ஆட்காட்டி விரலை நீட்டியவன் ஒவ்வொரு வார்த்தையாக ஆனால் அழுத்தமாக.


"நான் இப்ப நினைச்சாலும் உன்னைக் காணாத பிணமாக ஆக்க எனக்கு இரண்டு நிமிஷம் போதும்..." என்று மட்டும் சொன்னவன் தன் ஆத்திரத்தை அடக்கக் கை முஷ்டியை இறுக்கியவன் அவள் தந்தையை ஒரு பார்வை பார்த்து விட்டுப் பின் மீண்டும் ரியாவை திரும்பி ஒரு தீப்பார்வை பார்த்து விட்டு விருட்டென்று வெளியேறினான்.


அவன் வெளியே சென்றதும் அழுத்தமான காலடிகளுடன் தன் மகள் அருகில் வந்தவர் அவள் தலைமுடியை கோதியவாறே ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தமாக,


"ரியா, அப்பா கேட்கிறதுக்கு ஆமாம் அல்லது இல்லை, இந்த இரண்டில் ஒன்று மட்டும் தான் சொல்ல வேண்டும்.... உண்மையைச் சொல்லு, ஹர்ஷாவையும் அவரோட மனைவியையும் கொல்ல ப்ளான் பண்ணினது நீயா? இல்லையா?" என்றார்.


திருதிருவென்று விழிக்கும் மகளைக் கண்டவர் மேற்கொண்டு,


"ரியா, இத யார் பண்ணினதுன்னு கண்டு பிடிக்கறதுக்கு ஹர்ஷாவிற்கோ அல்ல எனக்கோ ஒரு அரை மணி நேரம் போதும்.... அந்த அளவிற்கு இப்போ தொழில்நுட்பம் வளர்ந்திருக்குன்னு உனக்கும் தெரியும்.... உன்னோட செல் ஃபோன ட்ராக் பண்ணினாலே போதும், நீ யார் யார்கிட்ட எப்பப்போ பேசினன்னு தெரிஞ்சுக்க முடியும்.... அது மட்டும் இல்லாமல் ஒருத்தரை கொலை பண்ணுவதுன்னா நிச்சயம் அந்த அளவிற்கு உனக்கும் அந்தக் கொலைகாரனுக்கும் பணம் பட்டுவாடா நடந்திருக்கணும்.... அதையும் ட்ராக் பண்ணுவது ரொம்பச் சுலபம்.... அதனால் சொல்லு... இத ப்ளான் பண்ணினது நீயா? இல்லையா?"


தன் தந்தை ஒவ்வொரு வார்த்தையாக மெதுவாக ஆனால் அதே சமயம் மிகவும் அழுத்தமாகக் கேட்ட விதத்தில் ஆடிப் போனவள் சகலமும் நடுங்க விழிகள் கலங்க நின்று கொண்டிருந்தவள் இதற்கு மேல் மறைக்க முடியாது சடாரென்று அவர் காலில் விழுந்து,


"ஸாரிப்பா, தெரியாம பண்ணிட்டேன்பா... இனி சத்தியமா இந்த மாதிரி எதுவும் செய்ய மாட்டேன்" என்று கதற, திரும்பித் தன் மனைவியைப் பார்த்தவர் ஒன்றும் பேசாமல் மாடி ஏற ரியாவிற்குப் புரிந்து போனது தன் நிலைமை.


அரண்டு போனவள் அப்படியே மடங்கிச் சாய்ந்து அழுது கரைந்தாள்....... வாழ்க்கையில் தான் எத்தனை தான் உயர்ந்தாலும் இன்றும் ஒழுக்கம் மாறாமல் நேர்மையுடன் வாழும் அற்புதமான மனிதருக்கு இப்படி ஒரு கேவலமான பெண்.


**********************************************


வீட்டிற்குச் செல்லாமல் நேராக அலுவலகம் சென்ற ஹர்ஷா தன் பி.ஏ.-வின் அலைபேசிக்கு அழைத்தவன் நடந்த அனைத்தையும் சொல்லி தன் தந்தையின் காதுகளுக்குப் போகமல் நடந்ததற்குக் காரணம் யாரென்று கண்டுபிடிக்க உத்தரவு இட,


ஹர்ஷாவின் அந்தஸ்தும் பணமும் தன் வேலையை நன்றாகக் காட்ட, அந்த இரவு நேரத்திலும் அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவன் அறைக்குள் நுழைந்த பி.ஏ. இந்தச் சம்பவத்திற்குக் காரணம் தொழிலதிபர் மார்த்தாண்டத்தின் மகள் ரியா என்ற ரிப்போர்ட்டை ஹர்ஷாவின் மேஜையில் வைத்தான்.


ரிப்போர்ட்டைப் படித்தவன் மார்த்தாண்டத்திற்கு அழைத்துத் தன் கணிப்பு சரி என்றும், ரியா இதனுடன் தன் வேலையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை எச்சரித்து அலைபேசியை அனைக்கத் தன் அக்காளை தொடர்பு கொண்டு திருமணம் தேதியைக் குறித்தார் ரியாவின் தந்தை.


நெட்டி முறித்தவன் கடிகாரத்தைப் பார்க்க மணி இரண்டு என்று காட்ட கனிகாவை நினைத்தவன் வீட்டிற்குத் திரும்பினான்.


அவன் சென்றதும் கட்டிலில் சாய்ந்து படுத்து இருந்தவள் அவனுக்காக அடி வயிறு கலங்க திகிலோடு அதிக நேரம் விழித்துக் காத்திருக்க, ஆனால் நடந்து முடிந்து இருந்த சம்பவத்தின் விளைவால் ஏற்பட்ட அசதியில் தன்னையும் அறியாமல் கண் அசந்து இருந்தாள்.


தன் அறைக்குள் நுழைந்தவன் அங்குத் தன் கைகள் இரண்டையும் மார்புக்கு குறுக்கே கொடுத்து குறுகி படுத்திருந்த மனைவியின் அருகில் வந்தவன் சற்று நேரம் அவள் அருகில் அமர்ந்து அவளையே கூர்ந்து நோக்கினான்.


தன் அன்னை இறந்ததால் வாழ்க்கை திசை மாறி கிராமத்தில் இருந்து சென்னைக்குப் படிக்க வந்தவளை தான் காதல் என்று வலையில் சிக்க வைத்து அதனால் அவள் பட்ட, பட்டுக் கொண்டிருக்கும் துன்பங்களையும் இன்னல்களையும் நினைத்து பார்த்தவனுக்கு விழிகள் கலங்கியது.


ஒரு வேளை அன்று தான் அவளிடம் காதலில் விழாது இருந்திருந்தால் இந்நேரம் தன் கல்லூரி படிப்பை சென்னையிலேயே முடித்து, ஏன் அகிலையே கூடத் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்பாளோ.


சந்தேகம் என்ற பேயால் அவள் வாழ்கையை இரண்டு ஆண்டுகள் நரகமாக மாற்றியதும் அல்லாமல் திருமணம் என்ற பெயரில் அவளை வலுக்கட்டாயமாகத் தான் ஆட்கொண்டு இதோ இப்பொழுது தன்னால் இப்படி ஒரு அதிர்ச்சியான நிலைக்குத் தள்ளப்பட்டது என்று வரை அவளின் பரிதாப நிலைமையை நினைத்தவன்,


"ஸாரி கனி, என்னால உனக்கு எத்தனை கஷ்டம்... இன்னைக்கு மட்டும் நான் கொஞ்சம் சுதாரிக்கலைன்னா இந் நேரம் அந்த லாரிக்காரன் நம்ம இரண்டு பேரையும் இருந்தே சுவடே தெரியாமல் அழிச்சிருப்பான்..." என்று வாய்விட்டு கூறியவன் குனிந்து மென்மையாக அவள் நெற்றியில் முத்தமிட்டு குளியல் அறைக்குள் புகுந்தான்.


சிறிது நேரத்தில் வெளியில் வந்தவன் அவள் அருகில் படுத்து அவளை அணைக்க, கணவன் வந்ததே அறியாமல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவள் அவனின் தொடுகையில் என்னவோ ஏதோ என்று பயத்தில் "ஐயோ!" என்று அலறி அடித்து எழுந்தாள்.


ஏற்கனவே அச்சத்தில் உறைந்து இருந்தவள் தன்னைத் தன் கணவன் அணைத்துப் படுத்ததும் இரவு நடக்க இருந்த விபத்து ஞாபகத்தில் வர துடித்து எழுந்திருக்கிறாள் என்று புரிந்து கொண்டவன் அவளை மேலும் இறுக்க அணைத்து,


"கனி, ஒண்ணும் இல்லை... இங்க பாரு... நான் தான்..." என்க,


நடுங்கும் உடலுடன் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் கலங்கிய விழிகளுடன்,


"வந்திட்டீங்களா... எங்க போயிருந்தீங்க இவ்வளவு நேரம்? ஃபோன் வேற செய்யாதன்னு சொல்லிட்டு போயிட்டீங்க.... பயந்துக்கிட்டே இருந்தேங்க... எப்படித் தூங்கினேன்னே தெரியலை..." என்றவள் அவன் மார்பில் முகம் புதைத்து அழுது கரைந்தாள்.


அவள் முதுகை தடவி அமைதிப்படுத்தியவன்,


"சரி, அதான் வந்திட்டேன் இல்ல... இப்படியே என் மேல படுத்து அமைதியா தூங்கு..." என்றவன் அவள் தலை கோத தன் அருகில் கணவன் இருக்கும் திடனில் சிறிது நேரத்தில் அவள் உறங்க, அவள் உறங்கியது தெரிந்தும் தன் அணைப்பை விடாது கண்களை மூடியவனின் நினைவு எல்லாம் இனி தன்னவளை தன் கண்களுக்குள் வைத்து பாதுகாக்க வேண்டும் என்பது தான்.


கணவனின் அணைப்பில் பாதுகாப்பாய் உணர்ந்தவள் ஆழ்ந்து உறங்க, அவளை மேலும் இறுக்கி அணைத்தவன் வெகு நேரம் சென்று தானும் ஒரு வழியாக உறங்க, அதிகாலை சூரியன் வெளியே வரும் வரை அவளும் அவனை விட்டு விலகவில்லை, அவனும் தன் இறுகிய அணைப்பை விடவில்லை.



*******************************************



விடியற்காலையில் முதலில் கண் விழித்தவள் அவன் விழிக்காத வண்ணம் மெல்ல எழ, தன்னைச் சுற்றியிருந்த கணவனின் வலுவான கரங்களை மெதுவாக விடுவிக்க, தூக்கத்தில் புரண்டு படுத்தவனைக் கண்டவள் அவன் விழித்துக் கொண்டானோ என்று அஞ்சி கட்டிலில் இருந்து கீழே இறங்கிப் போனாள்.


முதல் நாள் ரியாவின் ஆட்டம் அவன் மன நிம்மதியை குலைத்திருந்ததாலும், இரவு வெகு நேரம் சென்றே அவன் உறங்கியதாலும் அவளின் அசைவில் அவன் கண் விழிக்கவில்லை.


விழி மூடிப் படுத்திருக்கும் கணவனைக் கண்டவள் மெல்ல அவன் அருகில் நகர்ந்து அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறான் என்பதை உறுதி செய்து கொண்டவள் முதன் முறை இத்தனை அருகில் தன்னவனை ரசிக்க ஆரம்பித்தாள்.


சட்டையைக் கழற்றிவிட்டு படுத்து தூங்கி கொண்டு இருந்தவனை வெட்கச் சிரிப்போடு ரசித்துப் பார்க்க, தினந்தோறும் செய்த உடற்பயிற்சியால் உடல் முறுக்கேறி இருக்க, ஆண்மையுடன் இருந்தாலும் சற்று குழந்தைத் தனமும் கலந்த முகம், அளவாய் நறுக்கப்பட்ட மீசை, வடிவான இதழ்கள், நெற்றியில் முடி கலைந்து காற்றில் சிறிதே அசைய, அதுவும் அவன் அழகுக்கு அழகு சேர்த்தது.


வெளியில் அடங்கா கர்வத்துடன் வளைய வருபவன் தூங்கும் பொழுது ஒன்றும் அறியா குழந்தை போல் தூங்குவதைக் கண்டு கண்களால் பருகி கொண்டு இருந்தவளுக்கு அந்த நிமிடமே அவனை அணைத்துக் கொள்ளத் தூண்டியது தாறுமாறாகத் துடித்துக் கொண்டு இருந்த அவள் இதயம்.


காதலுடனும், முதன் முறை மோகத்துடனும் தன்னவனைப் பார்த்துப் பிரமித்துப் போனவள் தன்னை மறந்தாள்... அவன் தன்னை அழ வைத்ததை மறந்தாள்... அவன் மேல் இருந்த வெறுப்பை மறந்தாள்.


எத்தனை இரவு தன்னைத் திடுக்கிட்டு விழிக்க வைத்திருக்கிறது இந்த முகம்... எத்தனை இரவு தூக்கத்தை இழக்க செய்திருக்கிறது தன்னவனின் வாசம்... எத்தனை இரவு வெட்கம் அறியாமல் இவரைத் தேட வைத்திருக்கிறது இவரின் ஸ்பரிசம்.


தன் மனதில் காதல் தோன்றிய அந்த நிமிடமே தன் காதலை அவளிடம் வெளிப்படுத்த துடித்தவன்.

ஒவ்வொரு முறையும் அவளைச் சந்திக்கும் பொழுது தன்னுடைய உரிமை அவள் என்று வலுக்கட்டாயமாகவோ நிர்பந்தித்தோ தன் காதலை கர்வத்துடன் அவளிடம் நிலை நாட்டியவன்.


ஆனால் இவளோ மென்மையான பூப் போன்ற மனதை உடையவள்... அவன் பார்வையின் வீரியத்தைக் கூடத் தாங்க சக்தியில்லாமல் அவனிடமே தஞ்சம் அடைந்தவள்... அவனின் கர்வத்திற்கு நேர் எதிர் சாந்த குணமுள்ளவள்... இரு துருவம் போல்.


அவள் தன்னுடைய காதலை பகிரங்கமாக என்றுமே அவனிடம் சொன்னதில்லை... ஒரே ஒரு முறை தவிர.... அன்று ஆஷாவிடம் அவள் பேசியதை அலைபேசியின் மூலம் கேட்டதும் அவளின் காதலை தான் இழந்துவிடுவோமோ என்று அஞ்சியவன் "தன்னைப் பிடித்திருக்கிறதா?" என்று வலிய கேட்ட பொழுது அவனை மென்மையாக முத்தமிட்டு தன் காதலை வெளிப்படுத்தியிருந்தாள்.


முதலும் கடைசியுமாக அன்று தான் அவள் தன்னைத் தன்னவனுக்கு உணர்த்தியிருந்தாள்.


அதன் பிறகு அவன் இந்தியா திரும்பி வந்ததில் இருந்து இன்று வரை அவன் தான் அவளை ஒவ்வொரு முறையும் தேடி சென்று இருக்கிறானே தவிர அவளாக அவனைக் காண வந்ததில்லை... தன்னுடைய கர்வத்தை அவளின் காலடியில் போட்டுவிட்டு அவளிடம் பல முறை மன்னிப்புக் கேட்டிருக்கிறான்.


ஆனால் மனம் முழுவதும் அவனின் மேல் காதல் நிரம்பி வழிந்தாலும் அவளால் தன் நிலை விட்டுக் கீழ் இறங்கி வந்து அவனுக்கு மன்னிப்பு வழங்க இயலவில்லை... தன்னை மீண்டும் அவன் தண்டித்து விடுவானோ என்ற அச்சமே அதற்குக் காரணம்.


ஆனால் அவளைத் தன் இல்லத்திற்கு அழைத்து வந்தது முதல் அவனின் சுண்டு விரல் நுனி கூட அவள் மேல் படாமல் சொன்ன சொல் காப்பாற்றி வருகிறான்.


கனிகாவிற்கு நன்கு புரியும்.


தன் கணவனுக்குத் தன் மேல் உள்ள காதலின் ஆழம்... தன் மேல் உள்ள தாபத்தின் அளவு... தன் மேல் உள்ள எல்லையில்லா ஆசையின் வேகம்... இருந்தும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவன் தனக்காகக் காத்திருக்கிறான் என்று.


உணர்ச்சிகளின் சங்கமத்தின் போது வேட்கை கொப்பளித்துக் கொண்டு இருக்கும் பொழுது அதனை அத்துமீறி சஞ்சரிக்க விடாமல் தன்னைச் சுற்றி அவன் கட்டுக்களைக் கட்டி தனக்குள் அவன் குமைந்து கொண்டு இருக்கிறான் என்று.


நேற்று இரவு நடக்கவிருந்த அசம்பாவிதத்தின் போது அவன் காரை செலுத்திக் கொண்டே அவளை மீண்டும் மீண்டும் திரும்பி பார்த்துக் கொண்டே வந்தது.


பின் அவளை இறுக்கி அணைத்த அணைப்பை விடாது வீட்டிற்குக் கொண்டு வந்து சேர்த்தது.... இரவு வீடு திரும்பியதும் அவளை விடிய, விடிய தன் மேல் போட்டுக் கொண்டு அவளைப் பாதுகாப்பாக உணரச் செய்து தூங்க வைத்தது.


இவை அனைத்தும் உணர்த்தியது தன் கணவனின் ஒரே குறிக்கோள் தன்னைக் காப்பது மட்டுமே.... தன் உயிர் இல்லை எனில் அவன் இல்லை என்று.


தன் கணவனை ஆழ்ந்து நோக்கி மெய் மறந்து ரசித்துக் கொண்டு இருந்தவளுக்கு அவன் மீண்டும் தன்னைத் தீண்டும் நாள் எப்பொழுதோ என்று ஏக்கம் உள்ளத்தில் படரவும், அவனை நினைத்துப் பெருமை கலந்த ஆசை இதயத்தில் கிளற செய்யவும், தன்னை அறியாமல் உணர்ச்சி மிகுந்த பெருமூச்சொன்றையும் வெளியிட்டாள்.


அந்தப் பெருமூச்சின் விளைவாக அசந்து உறங்கிக் கொண்டு இருந்தவன் அவளை நோக்கி திரும்பி படுக்க, அவனின் கைகள் அவள் மேனியில் உரசவே செய்தது... என்றாலும் அவன் தூக்கத்தில் அதனை உணர்ந்தாகத் தெரியவில்லை.


ஆனால் மயக்கத்தில் சிக்கியவள் அவள் தான்.


தன் கலக்கத்தையும் நாணத்தையும் சிறிதே தள்ளி வைத்து தன் கணவனின் இதழில் மென்மையாக அவன் விழிக்காத வண்ணம் தன் இதழ் பதித்தாள்.


ஆழ்ந்த தூக்கத்திலும் தன்னவளின் முதல் இதழொற்றலை உணர்ந்தான் போல அவள் இதழ் பட்டதும் அவனின் இதழ்களில் புன் முறுவல் உதயமாயிற்று.


சட்டென்று நிமிர்ந்தவள் சில நொடிகள் அவனை வைத்த கண் வாங்காமல் பார்க்க, உறக்கத்திலும் தன்னை உணர்ந்ததினால் தான் அவன் முறுவலித்திருக்கிறான் என்று கண்டு கொண்டவாள் குழைந்து போனாள்.


தன்னவனை விட்டு விலக மனம் இல்லாமல் மீண்டும் அவன் அருகே படுத்தவள் அவன் கரத்தை எடுத்து தன் மார்புக்கு குறுக்கே வைத்துக் கொண்டு கண் மூட, அது வரை தன் மனையாள் தன்னை அணு அணுவாக ரசித்துக் கொண்டு இருந்ததையும் தன்னை முத்தமிட்டதையும் அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் ஹர்ஷா.


சிறிது நேரத்தில் நன்றாக விடிந்துவிட்டதைக் கண்டவள் ஆடாமல் அசையாமல் எழுந்து அவன் முகத்தை மீண்டும் ஒரு முறை காதலுடன் நோக்கிப் புன்னகைத்து குளியல் அறைக்குள் நுழைந்தாள்.




**************************************


இன்றோடு ஒரு வாரம் ஆகியிருந்தது ஹர்ஷா ரியாவின் தந்தை மார்த்தாண்டத்திடம் பேசி.


அன்று இரவு கனிகாவின் அச்சத்தைக் கண்டு இருந்தவன் அதன் பின் அவளிடம் சகஜமாகப் பேச தொடங்கி இருந்தான்... இருந்தும் அவளை நெருங்க முற்படவில்லை.


முன் அறையில் அமர்ந்து காவலாளி கொடுத்துச் சென்ற கூரியரில் வந்த தபால்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சங்கீதா,


"கனிகா, இங்க வா.... யாரோட மேரேஜ் இன்விட்டேஷனோ வந்திருக்கு.... எனக்கு யாருதுன்னு தெரியலை, ஹர்ஷாவுக்குத் தெரிஞ்சவங்களான்னு பாருடா, இல்லைன்னா மாமாவுக்குத் தெரிஞ்சவங்களா இருப்பாங்களா இருக்கும்" என்றவர் அவளிடம் அந்தத் திருமண அழைப்பிதழை நீட்டினார்.


கனிகா அந்தத் திருமண அழைப்பிதழை பிரித்துப் பார்க்க மணமகள் பெயர் இருக்குமிடத்தில் ரியா என்ற பெயரை கண்டவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.


"அத்தை, ரியான்னு எங்க காலேஜில் ஒருத்தவங்க படிச்சாங்க.... அவங்க பத்திரிக்கையா இருக்கும் போல, எதுக்கும் அவங்க வந்ததும் காட்டுறேன்..."


"சரிடா, ஹர்ஷாவிற்குத் தெரியலைன்னா, மாமாவிற்குத் தெரிஞ்சவங்களா இருக்கும்... ரொம்பத் தெரிஞ்சவங்களா இருந்தா நிச்சயம் நேரில் தான் வந்து கொடுத்திருப்பாங்க... எதுக்கும் யாருன்னு விசாரி... பார்க்கலாம்.."


"சரி" என்றவள் மறக்காமல் ஹர்ஷா அலுவலகத்தில் இருந்து வந்ததும் அழைப்பிதழைக் காட்ட மாப்பிள்ளையின் பெயருக்குக் கீழ் உத்தியோகம் என்ற இடத்தில் விவசாயம் என்று போட்டு இருந்ததைப் பார்த்தவனுக்கு மார்த்தாண்டத்தின் மீது மதிப்புக் கூடியது.


'இந்தக் காலத்தில் விவசாயம் பார்ப்பவர்களை யார் மதிப்பது? ஆனால் அப்படி ஒருவருக்குத் தன் பெண்ணைக் கொடுப்பதும் இல்லாமல் பெருமையாக விவசாயம் என்று திருமணப் பத்திரிக்கையிலேயே போட்டிருக்கார் என்றால் எத்தனை சிறந்த மனிதர்..' என்று மனதிற்குள் அவரை நினைத்து சிலிர்த்தவனுக்கு, இப்படி ஒரு உயர்ந்த மனிதருக்கு இப்படி ஒரு கேவலமான மகள் என்ற பரிதாபமும் வந்தது.


திருமண மண்டபத்தில் மணவறையில் தன் அருகில் நெடுநெடுவென்று உயரமாக வாட்டசாட்டமாக நின்றிருந்த, சற்று நேரத்திற்கு முன் தன் கழுத்தில் தாலி கட்டியிருந்த, தன்னால் காட்டான் என்று அழைக்கப்பட்ட தன் கணவனைப் பார்த்த ரியாவிற்கு வாய் விட்டு கத்த வேண்டும் போல் இருந்தது.


சிறு வயது முதலே இரவு பகல் பாராது விவசாயத்தில் ஈடுபட்டிருந்ததால் முறுக்கேறிய உடலும், மொட்டை வெயிலில் நேரம் காலம் பார்க்காது காய்ந்திருந்ததால் வழக்கமான கருமை நிறத்திற்கு இன்னும் கூட்டுச் சேர்ப்பது போல் அடர் கருமை நிறத்திலும் இருந்த கதிரவன் மார்த்தாண்டத்தின் அக்காள் மகன்.


ஹர்ஷா தன் வீட்டிற்கு வந்து தன் மகளைப் பற்றிய கேவலமான உண்மைகளைச் சொன்ன அன்றே தன் அக்காளிடம் பேசி திருமணத்திற்குத் தேதியைக் குறித்து இருந்தவர் சரியாக ஒரே வாரத்தில் ரியாவின் அத்தனை எதிர்ப்பையும் மீறி இதோ திருமணத்தையும் நடத்தி முடித்திருந்தார்.


மார்த்தாண்டத்தின் சொத்திற்கு ஒரே வாரிசு ரியா.... ஆனால் இந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை என்றால் தன் சொத்து முழுதும் தன் அக்காள் மகன் கதிரவனுக்கு மாற்றி எழுதிவிடுவதாக அவர் எச்சரித்து இருந்ததால் வேறு வழியில்லாமல் சம்மதித்து இருந்தவளுக்கு அவன் இப்படி அய்யனார் போன்று இருப்பான் என்று சுத்தமாகத் தெரியாது போனது.


திருமணத்திற்கு முன் அவனைப் பார்க்க கூட மார்த்தாண்டம் அவளை அனுமதிக்கவில்லை... ஏற்கனவே ரியாவின் அழகு பற்றித் தெரிந்து இருந்ததினால் கதிரவனும் அவளைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியிருந்தான்... கரும்பு தின்ன கூலியா என்று இருந்தது அவனுக்கு.


ஆனால் ரியா அவனைப் பார்த்து கிட்டத்தட்ட ஒரு ஐந்து வருடங்கள் ஆகியிருக்கும்... இந்த ஐந்து வருடங்களில் அவன் கொஞ்சமாவது மாறியிருப்பான் என்று எதிர்பார்த்து இருந்தவள் ஏமாந்தே போனாள்.


திருமணம் எதிர்பார்த்ததைப் போல் நன்றாக நடந்தேற நிம்மதி பெருமூச்சு விட்ட மார்த்தாண்டம் கதிரவனை அழைத்து அன்றே தன் மகளைக் கிராமத்திற்கு அழைத்துப் போகச் சொன்னார்.


கிராமத்தில் தன் கணவன் வீட்டைப் பார்த்த ரியா கிட்டத்தட்ட மயக்க நிலைக்கே சென்றாள்.

என்ன தான் ஏகப்பட்ட நில புலங்கள் என்று வசதியாக இருந்தாலும் இன்றும் கதிரவன் தன் பெற்றோருடன் வசிப்பது பூர்வீக வீட்டில் தான்..... எல்லா வசதிகளும் இருந்தும் அது ஒரு கிராமத்து வீடு தான்.


இரவு ஆனதும் ரியாவை அலங்காரப்படுத்திக் கதிரவனின் அறைக்குள் கொண்டு வந்து விட்ட கதிரவனின் அன்னை "அவன் கொஞ்சம் முரட்டுச் சுபாவம்.... ஆனால் ரொம்ப நல்லவன்... பார்த்து அனுசரணையா நடந்துக்கம்மா" என்றவர் தன் மகனின் முரட்டுத் தனத்தை நினைத்துப் பெருமூச்சை விட்டு வெளியேறினார் அவர்களுக்குத் தனிமை கொடுத்து.


ஆவலுடன் தன் அழகு மனைவியை எதிர்பார்த்திருந்த கதிரவன் தன் அறைக்குள் பதுமையாய் நுழைந்தவளைக் கண்டவனுக்கு வேட்கையும் தாபமும் துள்ளி எழ அழுத்தமான காலடிகளுடன் அவள் அருகில் வந்தவன்,


"ரியா.... நீ நம்ம கிராமத்திற்கு ஒரு அஞ்சு வருஷம் முன்னாடி திருவிழாவிற்கு மார்த்தாண்டம் மாமா கூட வந்திருந்த.... அப்பவே உன்னைப் பார்த்து உன் அழகில் மயங்கிட்டேன்..... ஆனால் சத்தியமா நான் நினைச்சு கூடப் பார்க்கலை... மாமா உன்னை எனக்கே கட்டிக்கொடுப்பாருன்னு.." என்றவன் அவளைக் கட்டி அணைக்க,


அவன் மார்பில் கை வைத்து தன் பலம் கொண்ட மட்டும் அவனைத் தள்ளியவள் மேல் மூச்சுக் கீழ் முச்சு வாங்க அவனையே முறைத்து பார்த்தாவாறு நின்றிருந்தாள்.


"என்ன ரியா.... என்னாச்சு?? இன்னக்கு நமக்கு முதல் ராத்திரி, மறந்திட்டியா?"


அவனை முறைத்தவாறே,


"நீ என்ன எனக்குப் புருஷனா? என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது? எல்லாம் எங்க அப்பாவோடு சொத்துக்குத் தான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.... அவரோட சொத்த எப்படி வாங்குறதுன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்... அதற்கு ஒரு வழி கண்டுபிடிச்சிட்டேன்னு வை அப்புறமும் உன்னை டிவோர்ஸ் பண்ணிட்டு போய்கிட்டே இருப்பேன்...." என்று ஆவேசமாகக் கத்த,


குரலை உயர்த்தாமல் ஆனால் அமர்த்தலான குரலில்,


"என்னது டைவோர்ஸா.... இது ஒண்ணும் உங்க சென்னையில்லைம்மா.... கிராமம்... நீ நினைச்சவுடனே விவாகரத்து கொடுத்துட்டு போறதுக்கு நான் என்ன பொட்டை பயல்னு நினைச்சியா??" என்றான்.


"நீ யாரா வேணா இருந்துட்டு போடா.... என்னால உன்னை எல்லாம் என்னோட ஹஸ்பண்டா ஏத்துக்க முடியாது..." என்று வெறிக் கொண்டு கத்துபவளை உற்று பார்த்தவன்,


"இதுக்கு மேலெ உன்னைப் பேச விட்டா அப்புறம் நான் ஆம்பிளையே கிடையாதுடி.." என்றவன் அவளை இழுத்துப் படுக்கையில் தள்ளி,


"விட்டால் பேசிக்கிட்டே இருப்படி... நீ எப்படி வேணா யோசி, நான் என்னோட வேலையைப் பார்க்கிறேன்..." என்றவன் அவள் இதழை வண்மையாக முற்றுகையிட்டவன் அதற்கு மேல் அவளைப் பேச விடவில்லை.


கிராமத்தில் இருந்து வந்த பட்டிக்காடு என்று கனிகாவை தன் ஆட்களை விட்டு கடத்தியவள்..... அவள் கற்புக்குப் பங்கம் விளைவிக்க முயற்சித்தவள்.


அடங்காத தாபத்தால் ஹர்ஷாவை அடைய நினைத்து, கனிகாவையும் அகிலையும் இணைத்துப் புகைப்படம் எடுத்து அவர்கள் வாழ்க்கையில் விளையாடியவள்.


இறுதியாகத் தனக்குக் கிடைக்காத ஹர்ஷா யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று நினைத்து வெறிக் கொண்டு இருவர் உயிரையும் அழிக்க நினைத்தவள்.


இறுதியில் படிப்பறிவே இல்லாத ஒரு முரட்டு கிராமத்துக்காரனுக்கு வாழ்க்கைப்பட்டு இதோ பலவந்தத்தில் தன்னுடைய கற்பை இழந்துக் கொண்டிருந்தாள்.


கர்மா என்பது பூமராங் போல்.... வீசிய வேகத்தில் நம்மையே திரும்பி வந்து சேரும்.



*********************************************



அன்று வெள்ளிக்கிழமை ஆதலால் கோவிலுக்குச் செல்வது என்று முடிவெடித்து இருந்த சங்கீதா கனிகாவையும் அழைக்க ஆர்வத்துடன் சரி என்றவள் இரவு சமையலை மட்டும் முடித்து விட்டு செல்வது என்று முடிவெடுத்திருந்தாள்.


"கனிகா.... இன்னும் கிச்சனில் என்ன பண்ணிக்கிட்டு இருக்க?? சீக்கிரம்டா, நேரமாச்சு..."

மாமியாரின் குரலில்,


"இதோ சேலை மட்டும் மாத்த வேண்டியது தான் அத்தை.... அஞ்சு நிமிஷத்தில் வந்திடறேன்..." என்றவள் தன் அறைக்குள் வேகமாக நுழைந்தவள் விறுவிறுவென்று புடவை மாற்ற,


அவள் சமையல் அறையில் இரவு உணவு சமைத்துக் கொண்டிருக்கும் பொழுதே அலுவலகத்தில் இருந்து வந்திருந்த ஹர்ஷா பால்கனியில் நின்று அலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான்.


அவன் குரலை உயர்த்தாமல் மெதுவாகப் பேசிக் கொண்டிருக்க அவன் அங்கு இருப்பதை உணராமல் வேகமாகப் புடவையை மாற்ற அந்நேரம் பேசி முடித்திருந்தவன் அறைக்குள் நுழைய அவனும் அவளை அந்தக் கோலத்தில் எதிர்பார்க்கவில்லை.


அவளும் கணவனை அந்த நேரத்தில் அதுவும் பால்கனியில் இருந்து வருவான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.


சடாரென்று கட்டிலில் இருந்த மாற்று புடவையை எடுத்தவள் மார்புக்கு குறுக்கே மறைத்தவாறே,


"நீ... நீ.... நீங்க இங்க இருப்பீங்கன்னு எதிர்பார்க்கலை...." என்றாள்.


ஏற்கனவே உணர்வுகளின் பிடியில் உள்ளம் சிதறி கிடந்தவன் தடுமாறித் தத்தளித்துத் தன் மனையாள் நின்றிருந்த கோலம் அவன் உணர்ச்சிகளை மேலும் பெரிதும் தூண்டியது.


அருகில் வந்தவன் அவள் தன் பெண்மையை மறைக்க மார்புக்கு குறுக்கே இறுக்கப் பற்றியிருந்த புடவையை அவள் கையில் இருந்த எடுக்க, நாணத்தால் விடாமல் இன்னும் இறுக்கப் பற்றியவள் அவனை நிமிர்ந்து பார்க்கத் துணிவில்லாமல் தலை கவிழ்ந்தவாறே இருக்க, ஏற்கனவே இதே போல் ஒரு சம்பவம் நடந்தும் அன்றும் இதே போல் ஒத்துழைக்காமல் தன் மனைவி இருந்ததை நினைவில் கொண்டவன் அன்றைய நாளை போலவே விருட்டென்று வெளியேறினான்.


தன் கணவனின் புறக்கணிப்பை தாங்க முடியாமல் விழிகளில் நீர் வழிய அவன் வெளியேறியும் அறைக் கதவையே பார்த்திருந்தவளுக்குத் தன் கணவன் வெகு அருகிலேயே இருந்தும் அனாதைப் போல் தான் இருப்பதைப் போல் உணர்ந்தாள்.


'அத்தனைக்கும் காரணம் நான் தானே... அவர் எத்தனை முறை தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார்... மனசாட்சியே இல்லாமல் அவரை உதாசீனப்படுத்தி உதறி தள்ளினேன்.... இதோ இப்பொழுது நான் நெருங்கியும் அவரால் என்னை ஏற்றுக் கொள்ள முடியவில்லை..' என்று மிகவும் சரியாக அவனைத் தவறாகக் கணித்தாள் அவன் மனையாள்.


ரியாவால் அவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடக்க இருந்த அன்று அவன் எவ்வாறு அவளைக் கட்டியணைத்து தனக்கு எதாவது ஆனால் தானும் இவ்வுலகத்தில் இருக்க மாட்டேன் என்று கதறினான்.


ஒவ்வொரு முறை அவனைப் புறந்தள்ளியும் உன் அருகாமை எனக்குத் தேவை என்று தன்னைக் கட்டுபடுத்தத் தெரியாமல் தடுமாறி மனம் தவித்து எத்தனை முறை தன்னிடமே தஞ்சம் புகுந்தான்.


அவனின் புறக்கணிப்பு அவளுக்கு உணர்த்தியது இத்தனை நாள் வெளி உலகுக்குக் கம்பீரமாகத் தோன்றினாலும் உள்ளுக்குள் தன் கணவன் சுமந்திருந்த வலியை.


நான் அவரை ஒதுக்கிய போதேல்லாம், அவரை விட்டு விலக முயற்சித்த போதெல்லாம் எப்படித் துடித்திருப்பார் என்று கலங்கியவளை துக்கம் தழுவ ஒன்றும் செய்வதறியாது விழித்து நின்றாள்.


கனிகாவை எதிர்பார்த்துக் காத்திருந்த சங்கீதா மீண்டும் அழைக்க அவரின் அழைப்பால் இந்த உலகிற்கு வந்தவள் விரைவாகப் புடவை மாற்றி அவருடன் கோவிலுக்குச் செல்ல, அங்கு வீட்டில் இருந்து வெளியேறிய ஹர்ஷாவிற்கு இன்னமும் தன்னை விலக்கும் மனைவியின் நிலை புரிபடவில்லை.


தன் வீட்டிற்கு அவளை அழைத்து வந்த சில நாட்களிலேயே அவளின் கடினப்பட்டு இருந்த மனம் சிறிது சிறிதாக மாறி வருவதை அவன் உணர்ந்து இருந்தான்... அவன் தன்னைப் பார்க்காத பொழுதெல்லாம் காதல் வழியும் பார்வையுடனும், கரைந்து உருகும் மனதுடனும் அவள் தன்னை ரசித்துப் பார்ப்பதை அறிந்து இருந்தான்.


அவளின் பார்வையை உணர்ந்து அவன், அவள் புறம் நோக்கும் பொழுதெல்லாம் வெட்கமுற தலை கவிழ்ந்திருந்தவள் முல்லை பூவாய் சிரிப்பதை ரசித்து இருந்தான்.


ஆனால் இன்றும் இன்னமும் அவனை ஒட்டாமல் தவிர்ப்பவளை புரிந்து கொள்ள முடியாமல் தவித்துப் போனான்.


தன்னவளின் மனம் முழுவதும் தன் மீது காதல் தளும்பிக் கொண்டு இருக்க, கண்கள் காதல் மொழி பேசியிருக்க அவளின் கரங்களோ அவனை விலக்குவதிலேயே குறியாக இருக்கிறது.


விபத்து நடக்கவிருந்த அன்று மாலை கூடக் கிட்டத்தட்ட அவள் அவனை நெருங்கியே விட்டாள்... ஒரு வேளை அப்படி ஒரு அசம்பாவிதம் நடக்காமல் இருந்திருந்தால் அன்று இரவு நிச்சயம் அவள் தன்னை வெளிப்படுத்தி இருப்பாள்... தன்னைத் தேடி வந்திருப்பாள்... தன்னை அவனிடம் ஒப்புவித்து இருப்பாள்.


ஆனால் இதோ இத்தனை நாட்களுக்குப் பிறகு தன் கட்டுக்களை, தான் செய்திருந்த சத்தியத்தை மீறி தானாக அவளைத் தேடி சென்ற பொழுதும் தன்னைத் தவிர்க்க முயலுகிறாள்.


மாறுபட்ட அவளின் இரு வேறு குணங்களைக் கண்டவனுக்குக் குழப்பம் தான் மிச்சமானது.


அங்குக் கோவிலுக்குச் சென்றவளுக்கோ மனதில் தெளிவில்லை... அவன் தன்னை விட்டு தள்ளி இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவளின் இதயத்தை வாள் கொண்டு அறுப்பது போல் தோன்ற அந்த உணர்வே அவளை உயிரோடு கொல்வது போல் இருந்தது.


கண்களை இறுக மூடியிருந்தவளின் விழிகளில் இருந்து நெஞ்சுக்குள் இருக்கும் இறுக்கம் தாளாமல் நீர் வடிய, எங்கே தன் மாமியார் தன்னைப் பார்த்துவிடப் போகிறாரோ என்று உணர்ந்தவள் சட்டென்று குனிந்து கண்களைத் துடைத்துக் கொண்டாள்.


இரவு வெகு நேரம் சென்று வீட்டிற்குத் திரும்பிய ஹர்ஷா தன் அறைக்குத் திரும்ப, கோவிலில் இருந்து வந்தும் உடுத்தியிருந்த பட்டு புடவையைக் கூட மாற்றாமல் அவன் வரவிற்காகப் படுக்கையில் படுத்தவாறே அழுது கரைந்து காத்திருந்தவள் தன் கணவனைக் கண்டதும் உடைந்து கதறினாள்.


தான் அறைக்குள் நுழைந்ததும் தன்னைக் கண்டு கதறியவளை அதிர்ந்து பார்த்தவன் அவள் அருகில் வேகமாக வந்து இறுக அணைத்துக் கொண்டான்.


"கனி, என்னாச்சு?"


அவனின் கேள்வியில் தன் காதலை, அன்பை சந்தேகத்திற்கு இடம் இன்றி அவனுக்குப் புரிய வைத்து விடும் விதத்தில்.


"எனக்குப் புரியலைங்க..... எனக்கு உங்க மேல கோபம் இருந்தது உன்மை தான்.... ஆனால் என்னை எப்போ இங்க, உங்க வீட்டிற்குக் கூட்டிட்டு வந்தீங்களோ, எப்போ உங்க கூடவே இருக்க ஆரம்பிச்சேனோ அப்பவே என்னால உங்க மேல் உள்ள கோபத்தைத் தொடர முடியலை.... உங்களைப் பார்க்கும் போதெல்லாம் நாம காலேஜ் படிக்கும் போது இருந்த நாட்கள் தான் ஞாபகத்தில் வந்தது... என்னோட கோபமும் சுத்தமா என்னை விட்டு போயிடுச்சு..... அது உங்களுக்கும் நல்லா தெரியும்.... ஆனால் இன்னும் ஏன் என்னை விட்டு விலகியிருக்கீங்க?" என்று உடைந்து கதறினாள்.


"கனி... இப்போ எதுக்கு இப்படி அழற.... ஒண்ணும் இல்லை... ப்ளீஸ் ஸ்டாப்..."


"இல்லைங்க.... இனியும் என்னால முடியலை... உங்களைப் பார்க்கும் போதெல்லாம் உங்ககிட்ட ஓடி வந்து உங்களைக் கட்டி பிடிச்சிக்கணும்ன்னு தோணுது... உங்க கிட்ட மனம் விட்டு பேசணும்ன்னு தோணுது... ஆனால் நீங்க என்னை விட்டுத் தூரம் தள்ளி போற மாதிரியே இருக்கு... என்னால தாங்க முடியலைங்க... உங்களை விட்டு என்னால தள்ளி இருக்க முடியலை...."


அவளின் கதறலில் மனம் உருகியவன் இன்று எப்படியும் தங்கள் பிரிவுக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணி தன் மனதில் இருந்த அத்தனையையும் அருவி போல் கொட்ட ஆரம்பித்தான் தன்னைத் தெளிவு படுத்திவிடும் நோக்கத்தில்.


"கனி, நீயா என்னைத் தேடி வரணும்னு தான் இத்தனை நாள் காத்திருந்தேன்.... ஆனால் அதுக்கு முன்னால சில விஷயங்களை உன்கிட்ட பேசிடணும்னு தோணுது..... ஏன்னா என் மனசில இன்னும் அந்தக் குற்ற உணர்வு இருக்கு.." என்றவன் மேற்கொண்டு தொடர்ந்தான்.


"நீ நினைச்சுருப்ப.... எப்படி ஒரு போட்டோவை பார்த்ததும் நான் உன்னைச் சந்தேகப்பட்டேன்னு... உண்மையில் உன் மேல் சந்தேகப்பட வச்சது அந்தப் போட்டோஸ் மட்டும் இல்லை.... கனி, உனக்கு ஒண்ணு தெரியுமா.... அகிலும் உன்னை லவ் பண்ணினான்...."


அகிலின் காதலை அவளுக்கு வெளிப்படுத்துவது அவனின் நோக்கம் அல்ல.


தன்னவளின் கோபத்திற்கு வெறுப்பிற்குத் தான் ஆளான போதும் அகிலுக்காக, அவனுக்குக் கொடுத்த வாக்கிற்காக அவன் அகிலின் காதலை பற்றி அவளிடம் சொன்னதில்லை.


ஆனால் தன்னை வேண்டி, தன் அண்மையை வேண்டி கதறித் துடிக்கும் தன் மனைவியை விட்டு இனியும் பிரிந்து இருக்கும் சக்தி அவனுக்கில்லை.


அவளிடம் தன்னை மீண்டும் ஒப்படைக்கும் முன் தன்னை முழுவதுமாகத் தெளிவு படுத்திவிடுவது என்பதே அவனது நோக்கம்.


ஹர்ஷாவின் கூற்றில் அதிர்ந்தவள் அத்தனை அதிர்ச்சியையும் தன் கண்களில் தேக்கி வைத்து அவனையே உற்று பார்க்க,


"உன்னை எப்பவும் நான் சந்தேகப்பட்டது கிடையாது.... ஆனால் எப்பவும் என் ஆழ் மனசில அகில் உன்னை என்கிட்ட இருந்து பிரிச்சுருவானோன்னு ஒரு பயம் இருந்துக்கிட்டே இருக்கும்... நான் உன்னோடு கொஞ்ச நாள் பேசாமல் இருந்ததும் அகில் தன் காதலை சொல்லி உன் மனச மாத்திட்டானோன்னு பயந்துட்டேன்... அதனால் தான் அன்று அப்படிப் பேசினேன்..."


"உன்னைப் பேசின ஒவ்வொரு வார்த்தையும் என்னைத் தான் சுட்டது... என்னோட கோபம் எல்லாம் அகில் மேல் தான்.... ஒரு வேளை நீ அந்த ஃபோட்டோஸ் எல்லாம் பார்த்திருந்தீன்னா என்னோட கோபம் உனக்கும் புரிஞ்சிருக்கும்... உன்னைப் பிரிஞ்சிருந்தாலும் நீ எனக்கு மட்டும் தான் என்கிற கர்வத்தோட இருந்திருந்த எனக்கு அது பெரிய அடி... அது மட்டும் இல்லை... உன்னைப் பிரிஞ்சு ஊருக்குப் போன பின் உனக்கே தெரியாமல் உன்னைப் பத்தி விசாரிச்சுட்டு தான் இருந்தேன்.... நீ உங்க ஊருக்கே திரும்பி போய்ட்டதாகச் சொல்லவும் எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு தெரியுமா?...... அகில் கிட்ட மட்டும் இருந்து இல்லை, ரியாவை விட்டும் நீ தள்ளி இருக்கறது நல்லதுன்னு நினைச்சிருந்தேன்..."


"நிச்சயம் அந்த ரியா உன் வாழ்க்கையில் விளையாடமாட்டான்னு நினைச்சேன்.... ஆனா என் தலையில் இடி விழுந்த மாதிரி அந்த ஃபோட்டோஸ் வந்தது... நீ கிராமத்தில் தான் இருப்பேன் நினைச்சு அகிலுக்கு ஃபோன் பண்ணினால் நீ அந்த ராத்திரியில் அவனுடன் தனியா இருக்க... அது என்னோட ஆத்திரத்தை மேலும் கிளறிவிட்டுருச்சு... அதனால தான் என்னையும் அறியாமல் அப்படிப் பேசிட்டேன்...." என்று சில நொடிகள் தயங்கிவன் அவள் விழிகளைக் கூர்ந்து நோக்கி,


"என்ன தான் உன்னை மறக்க நினச்சாலும் உன்னை மறக்கவும் முடியாமல் அதே சமயம் உன்னை ஏத்துக்கவும் முடியாமல் இரண்டு வருஷம் நான் தவிச்ச தவிப்பு எனக்கு மட்டும்தாண்டி தெரியும்.... உன் மேல் உள்ள கோபத்தில் பேசாம வேற பொண்ணை லவ் பண்ணிடலாமான்னு கூட நினைச்சிருக்கேன்.... தெரியுமா?... ஆனால் நிச்சயம் உன்னைத் தவிர வேற பொண்ணை என்னால மனசால கூடத் தொட முடியாதுன்னு புரிஞ்சது.... நெருப்புல இருக்கிற மாதிரி நான் இருக்கும் போது தான் அகில் எனக்கு ஃபோன் பண்ணினான்.... நீ தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்ணினதை சொல்ல.... அதைக் கேட்டதும் எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? ஒரு வேளை உனக்கு ஏதாவது ஆகியிருந்தால் நிச்சயம் உனக்கும் முன்னாடி நான் செத்து போயிருப்பேண்டி..." என்று அவன் கூறும் பொழுது பதறியவள் அவன் வாயை தன் கையால் மூட.


மென்மையாக அவள் கரத்தை விலக்கியவன்,


"நீ இல்லாமல் இந்த உலகத்தில் நான் மட்டுமா? ஆனால் இங்க வந்ததுக்கு அப்புறம், அகில் என்கிட்ட பேசினதுக்கு அப்புறம் தான் என்னோட தப்பு எனக்குப் புரிஞ்சுது..... அப்பொழுது ன் அவன் கிட்ட அந்தப் போட்டோஸ் எல்லாத்தையும் காட்டினேன்.... ஆனால் தன் மனதில் இருந்த காதல் உனக்குத் தெரியவே வேண்டாம் என்று சொல்லிவிட்டான்..." என்றான்.


அகில் அத்தானுக்கு என் மேல் காதலா??? என்று அதிர்ந்தவள்.


"இத ஏன் என்கிட்ட நீங்க முன்னாடியே சொல்லலை? அகில் அத்தான் என்னைய விரும்பலாம்... ஆனால் நான் விரும்பினது உங்களைத் தானே.... யார் என்ன சொன்னாலும் நீங்க என்னைய சந்தேகப்படலாமா?" வார்த்தைகளில் அத்தனை வலிகளைத் தாங்கியவள் பரிதாபத்தோடு கேட்க, அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன்,


"ஐ ஆம் ஸோ சாரிடி.... இனி ப்ராமிஸா உன்னைய கஷ்டப்படுத்த மாட்டேன்...." என்றவனின் அணைப்பு இறுகியது.


அவள் இத்தனை வருடங்கள் காத்திருந்தது தன்னவனின் இந்தக் கர்வம் இல்லாத தூய காதலுக்காகத் தான்.


காதலையே கர்வமாக எண்ணி அவன் தன்னவளை வதைத்து இருந்தாலும், எத்தனை முறை அவள் அவனை விலக்கி ஒதுக்கி இருந்தாலும்.


எந்த நிலையிலும் இருவரும் தங்கள் காதலை இழக்கவில்லை.


எந்தக் கட்டத்திலும் தங்கள் ஆழ் மனதில் புதைந்து இருந்த காதலை தூக்கி எறியவில்லை.


கர்வம் உயர்ந்து எழும் பொழுதெல்லாம் காதல் அதனைத் தன்னுள் அடக்கியது... காதல் தன்னை விட்டு விலகிய பொழுதெல்லாம் கர்வம் அதனைத் துரத்தியது.


கிட்டதட்ட நான்கு வருடங்கள் நீண்ட போராட்டங்கள்!


எத்தனையோ நிகழ்வுகள் இவர்களுக்குள் பிரிவுகளை ஏற்படுத்த முயற்சித்தது... இவர்களின் காதலை ஆழப்புதைக்க நினைத்தது... ஆனால் இரு உள்ளங்களில், உயிரில் கலந்து விட்ட அந்தத் தூய உன்னதமான அழகான காதல் இதோ இருவரையும் இணைத்து விட்டது.


அவன் மார்பில் புதைந்தவாறே சிறிது நேரம் அப்படியே நின்றிருக்க அவனின் இறுகிய அணைப்பும் ஸ்பரிசமும் தந்த பதற்றத்தை தணிக்க அவன் மார்பில் மேலும் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டவள் அவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.


பயம், அழுகை, அதிர்ச்சி, கோபம், ஆற்றாமை என்று எந்த வித எதிர்மறை உணர்வுகளும் இல்லாமல் தன்னவனை அவன் மனையாள் அணைத்த முதல் அணைப்பு.


அவளின் மூச்சு காற்று அவன் மார்பில் பட, உடல் நடுங்க தன்னவனை அணைத்திருந்தவளின் செயல் வேட்கையைத் தூண்ட, மனம் கிறங்கியவன் அவள் வெற்று முதுகில் விரல்களை அழுந்த பதித்து வருடியவாறே தயக்கத்துடனே,


"கனி, எனக்கு நீ வேணும், அதுவும் உன் முழு விருப்பத்தோட... உன்னை எனக்குக் கொடுப்பியா?...." என்றான் மிகுந்த தயக்கத்துடன்.


அவனது இறுக்கிய அணைப்பில் துவண்டிருந்த உடல், அவனது வருடலில் அலை பாய்ந்த மனம், தன்னை யாசிக்கும் அவனின் வார்த்தைகளில் தன்னைத் தொலைத்தது.


இதயம் படபடவென வேகமாய்த் துடிக்க, இனியும் தாமதிக்க முடியாது தன்னை அவனுக்கு முழுவதுமாக உணர்த்திவிட நினைத்தவள் அவனை நிமிர்ந்து பார்த்து அவன் உயரத்திற்கு எம்பி அவன் கன்னத்தில் இதழ் பதித்துத் தன் காதலையும் சம்மதத்தையும் வெளிப்படுத்தினாள்.


அவன் அறிந்து இரண்டாவது முறையாக.


தான் இத்தனை பேசித் தன் காதலை அவளுக்குப் புரிய வைக்க முயல அவள் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் ஒரு இதழ் முத்தத்தில் தன் மன விருப்பத்தை உணர்த்தியதைக் கண்டு உடலும், உள்ளமும் சிலிர்க்க அவள் முகம் நோக்கிக் குனிந்தவன் ஒரு நொடி அவள் கண்களை உற்று நோக்க, கண்களை மூடி அவள் நின்றிருந்த விதத்திலேயே தெரிந்தது அவள் இருக்கும் நிலைமை.


அதற்கு மேலும் நேரம் கடத்தாமல் தன்னை இறுக்கி அணைத்திருந்தவளை அவனது கைகள் ஆரவாரத்துடன் அள்ளிக் கொண்டது.


அவளைக் கட்டிலில் கிடத்தி அவள் மேல் சரிந்து இதழில் இதழ் பதிக்க, இது நாள் வரை காதலில், கூடலில் வண்மையை மட்டுமே அவளிடம் காட்டியிருந்தவன் முதன் முறை மென்மையைக் காட்டினான்.


கர்வம் தன் காதலியின் காதலிடத்தில் அடி பணிந்து காணாமல் போனது... காதலில் கர்வமும் அழகு தான்! கர்வத்தின் காதலும் அழகு தான்! ஆனால் ஒன்றோடு ஒன்றாக இணைந்து இருக்கும் பொழுது மட்டுமே.


இத்தனை நாட்கள் கணவனின் விலகல் தந்த ஏக்கம் தன் தாபத்தைக் கூட்ட, அவளின் ஒவ்வொரு அணுவும் அவன் வேண்டும் என்று மத்தளமாகச் சத்தமிட்டு ஆர்ப்பரிக்க, அவனை இறுக்கி பிடித்தவளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டவனின் கைகள் தாபத்துடன் அவளின் மேனியில் கண்டபடி தடம் பதிக்க, அவனை விட்டு சிறிதே விலகியவள் அவன் முகம் பார்க்க,


"இன்னும் என்னடி?" என்றான்.


லைட்டை நோக்கி கை நீட்டியவள், "லைட் ஆஃ பண்ணுங்க.." என்று கிசுகிசுக்க.


"ஏன்டி? இங்க என்ன ட்யூப் லைட்டா எரியுது? இது நைட் லேம்ப்... சரியான இம்சைடி நீ...." என்றவன் இதற்கு மேல் பொறுமை இல்லை என்பது போல் தன் வேட்டையைத் தீவிரமாக்க, தனக்குள் மூழ்கியவனிடம் தன்னைத் தொலைத்தாள் அவன் மனம் கவர்ந்த அவனின் மனையாள்.


போர்க்களத்தில் கர்வத்திற்கும் காதலிற்கும் இடையே நடந்து வந்த போரில் கர்வத்தின் ஆக்ரோஷமான போர்த் தாக்குதல்களைத் தன்னுடைய அழகான அமைதியான காதலினால் வென்று விட்டாள் இவள்.


கர்வத்தினுள் இத்தனை வருடங்கள் அடங்கிருந்த காதல் ஆர்ப்பாட்டமாக வெளி வந்தது...


கர்வத்தின் காதல் தன்னவளின் காதலுடன் மீண்டும் ஈருடல் ஓருயிராகக் கலந்தது.


நான்கு வருட காதல் அங்குச் சுகமாய் அரங்கேறியது.

தொடரும்.
 

JB

Administrator
Staff member
EPILOGUE

காதலா? கர்வமா?
காதலில் கர்வமும் அழகு!
கர்வத்துடன் காதலிப்பதும் அழகு!

---ஜேபி

***************************************


இன்றோடு ஹர்ஷா கனிகாவை தன் இல்லத்திற்கு அழைத்து (தூக்கி) வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது.


இருவரின் வாழ்க்கையிலும் திருமணத்திற்கு முன் வந்த ஒரு இரண்டு வருடங்கள் நரகமாகக் கழிந்தது என்றால் திருமணத்திற்குப் பின் வந்த இந்த இரண்டு வருடங்கள் சொர்க்கமாகக் கழிந்தது.


இந்த இரண்டு வருடங்களில் ஹர்ஷா தொழிலில் அதிக நேரம் செலவிட வேண்டி இருந்தாலும் தன் மனையாளின் ஆசைகளையும், விருப்பங்களையும் பூர்த்திச் செய்ய அவன் மறந்தது இல்லை.


அவனுக்கு அவள்.... அவளுக்கு அவன்.... என்றே ஒன்றிழைந்திருந்தார்கள்.


சிறியவர்களின் பிணைப்பு பெரியவர்களுக்குப் பூரிப்பாக இருந்தது.


கனிகா தங்கள் இல்லம் வந்து சேர்ந்து மாதங்கள் உருண்டோடியிருக்க மகனுக்கும் மருமகளுக்கும் இடையே இருந்த வேற்றுமை விலகி பிணைப்பு அதிகமானதை உணர்ந்த சங்கீதாவிற்குக் குட்டி வாரிசு வர வேண்டும் என்ற கணவு நாளுக்கு நாள் அதிகரித்தது.


அவருக்கு ஆழ் மனதில் ஒரு சின்னக் கவலை.


தங்களுக்கு ஹர்ஷா பிறப்பதற்கு ஐந்து வருடங்கள் பிடித்தது, அதே போல் கனிகாவும் அவள் பெற்றோருக்கு பல வருடங்கள் கழித்தே பிறந்தாள் என்பதால் இவர்களுக்கு வாரிசு வரும் நாளை சிறிது கலக்கத்தோடே எதிர்பார்த்திருந்தார் என்றே சொல்லலாம்.


ஆனால் அவர் ஒன்று மறந்து போனார்... அது ஹர்ஷா...


என்று தன் உள்ளம் திறந்து ஆழ் மனதில் புதைந்து இருந்த காதலை அவன் தன்னவளிடம் வெளிபடுத்தி இருந்தானோ அன்றில் இருந்து அவன் அவளை விடவில்லை.


சில நாட்களில் அவன் விட்டாலும் அவள் அவனை விட்டதில்லை... பூவுக்குள் ஒரு பூகம்பம் போல் ஹர்ஷாவையே காதல் வேகத்திலும், தாப மயக்கத்திலும் ஆழ்த்தியிருந்தாள் அவனின் மனையாள்.


முரட்டுத்தனமும், மென்மையும் இயற்கையில் அவர்களின் தாம்பத்தியத்தில் கலந்தே நின்றன... மென்மைக்கு முரட்டுத்தனமும், முரட்டுத்தனத்திற்கு மென்மையும் இன்பம் ஊட்டும் சக்திகளாக வாய்த்தன.


ஹர்ஷாவின் வேகத்திற்கு இயற்கையே ஈடுகொடுக்க முடியாமல் கனிகாவின் பொன்வயிற்றில் ஒரே சமயத்தில் இரு பூக்களைத் தரிக்க வைத்தது... தன் கணவனைப் போல் இரு சிங்கக் குட்டிகளைப் பெற்றெடுத்தாள் அவனின் கனி.


இரு நிமிடங்கள் இடைவெளியில் பிறந்த இரட்டை செல்வங்களுக்கு ஆதித்யா வர்தன் மற்றும் அபிஷேக் வர்தன் என்று பெயரிட்டு மகழ்ந்தார்கள் நம் மனம் கவர்ந்த தம்பதியர்.


கனிகா கர்ப்பம் தரித்ததையொட்டி தாய் ஸ்தானத்தில் இருந்த மாலதிக்கு அவளைக் கர்ப்ப காலத்தில் தன்னுடன் வைத்துக் கொள்ளஆசையாக இருக்க, ஆனால் அதற்கு உடனே உடன்பட்டால் அவன் ஹர்ஷா இல்லையே.


அவன் கண்கள் தேடும் நேரம் அவன் மனைவி அவன் அருகில் இருக்க வேண்டும்.


அவளின் பாதம் தரையில் படாமல் பார்த்துக் கொண்டவன் மாலதியின் வற்புறுத்தலின் படியும் கனிகாவின் விருப்பத்திற்காகவும் ஒன்பதாவது மாதத்தில் வளைக்காப்பு போட்டு அவள் மாமன் வீடு கொண்டு வந்து சேர்த்தான்.


அகிலின் வீட்டில் அவள் மகிழ்ச்சியாக இருந்ததை விட மனம் முழுவதும் கவலையுடனும் பாரத்துடனும் இருந்த நாட்கள் தான்அதிகம்.


அதற்கு ஈடுகட்டும் வகையில் தான் அவள் மாலதியின் விருப்பத்திற்குத் தன் கணவனை அங்கீகரிக்க வைத்தாள்.


பிரசவ நேரத்தில் தன் மனைவியே கதி என்று இருந்த ஹர்ஷாவிற்கு அவளுக்குச் சுகப்பிரசவம் ஆனதும் தான் போன உயிர் மீண்டு வந்தது போல் இருந்தது.


ஒரு தந்தையாக இரு குழந்தைகளையும் பஞ்சு பொதி போல் கரங்களில் ஏந்தியவனுக்கு மீண்டும் கர்வம் துளிர்த்தது.


சில நேரங்களில் கர்வமும் அழகு தான்!!!!!


**********************************************************



அன்று நிகிலாவின் குழந்தை ஆரவிற்கு ஒரு வயது பூர்த்தியாகி இருந்தது.


அகிலின் இல்லத்திலேயே சின்ன விழாவாக ஏற்பாடு செய்யப் பட்டு இதோ விழா இனிதே முடிந்து இளையவர்கள் அனைவரும் போர்டிக்கோவில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்.


ஹர்ஷாவும், நிகிலாவின் கணவன் விஷ்ணுவும், அகிலும் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க ஹர்ஷாவின் கரத்தில் ஆதியும், அகிலின் கரத்தில் அபியும் சுகமாய் அடங்கியிருக்க, கனிகாவும், நிகிலாவும், சௌமியாவும் ஒன்றாக அமர்ந்து கதை பேசிக் கொண்டு இருந்தார்கள்.


இந்த இரண்டு வருடத்திற்குள் அகில் சௌமியாவின் திருமணமும் அமர்க்களமாக நடந்தேறியிருந்தது.


நிகிலாவின் அருகில் அமர்ந்து இருந்த கனிகா மெல்ல அவளின் கரத்தை பற்றியவள் அவள் காதை நோக்கி குனிந்து,


"நிகி, ஒரு டவுட் டி... சிரிக்காம பதில் சொல்லணும்... சரியா?" என்க,


அவளைத் திரும்பி பார்த்த நிகிலா "என்னடி?" என்றாள்.


மேலும் நிகிலாவை நோக்கி குனிந்தவள்,


"நிகி குழந்தை பிறந்து இதோடு இரண்டு மாசம் ஆகிடுச்சு... நான் அவர் கூடத் தனியா பேசியே ரொம்ப நாளான மாதிரி இருக்குடி...."


என்றவாறே தயங்க நிகிலாவிற்குப் புரிந்து போனது கனிகாவின் கேள்வியின் அர்த்தம்.


அடக்க முடியாமல் சட்டென்று சிரித்தவளை பார்த்த கனிகாவிற்கு ஏன்டா இவளிடம் இதைப் போய்க் கேட்டோம் என்று இருந்தது.


"அடியே... ஏன்டி இப்படிச் சிரிச்சு மானத்தை வாங்குற.... சும்மா அவர் கூடப் பேசணும் தான கேட்டேன்... இதுக்குப் போய் ஏன் இப்படிப் பைத்தியம் மாதிரி சிரிக்கிற?"


"ஹா ஹா... ஏன்டி சும்மா பேசிக்கிட்டு இருக்கணும்னா ஏன்டி குழந்தை பிறந்து இரண்டு மாசம் தான் ஆவுதுன்னு இண்ட்ரொடக்க்ஷன்எல்லாம் குடுத்த... சும்மா பேசணும்னா நீயே பேச வேண்டியது தான... ஹி ஹி.." என்று இளிக்கக் கனிகாவிற்கு வெட்கம் பிடுங்கி தின்றது.


அது வரை அகிலுடனும் விஷ்ணுவுடனும் பேசிக் கொண்டு இருந்தாலும் ஹர்ஷாவின் பார்வை என்னமோ தன் மனைவியிடமேபடர்ந்து இருந்தது.


பிரசவ நேரம் நெருங்க நெருங்க இரு கருக்களை ஒன்றாகச் சுமந்திருந்ததால் சங்கீதா கனிகாவை தன் கண்களுக்குள் வைத்துப் பார்த்துக்கொண்டார்.


இதனால் ஹர்ஷாவிற்குத் தன் மனைவியுடனான தனிமை கிடைக்காமல் போய் இருந்தது.


அவளின் அருகாமைக்கு ஸ்பரிசத்திற்குக் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக அவன் ஏக்கத்துடன் காத்திருக்க இன்று தன்னருகில் அமர்ந்திருந்த மனைவியின் அழகை அவள் அறியா வண்ணம் இரசிக்க ஆரம்பித்தான்.


இருள் மெல்ல மெல்ல சூழத் தொடங்கிவிட்டதாலும் மாலை மங்கிய நேரமாதலாலும் மெல்லிய விளக்கொளியில் அவளின் அழகு எங்கும் பரவி பரிமளித்துக் கிடந்தது.


மெல்லிய அடர் பச்சை நிற ஜார்ஜட் புடவையில் இவ்வளவு சொற்பமான அலங்காரத்தோடு கூட அவளின் இயற்கையான களையான முகமும், குழந்தை பிறந்தும் செதுக்கப்பட்ட சிலை போல் காட்சியளித்த மனையாளின் மேனியும் அவன் திண்டாட்டத்தை அதிகரிக்கச் செய்தன.


அரட்டையும் சிரிப்பும் கும்மாளமுமாக நேரம் போவதே தெரியாமல் அனைவரும் பேசிக் கொண்டு இருக்க, ஹர்ஷாவின் வலப்பக்கம் அமர்ந்திருந்த கனிகாவின் தேகம் பேச்சு வாக்கில் மெல்ல பக்கவாட்டில் சாய்ந்து அவனை உரச, உணர்ச்சிகளின் ஊசி முனையில் இருந்தவன் சுய உணர்வை அறவே இழக்க ஆரம்பித்திருந்தான்.


அவன் வேதனையை அதிகமாக்குவது போல் சாய்ந்த உடலை அகற்றாமலே சௌமியாவுடனும் நிகிலாவுடனும் பேசிக் கொண்டு இருந்தவளை அணு அணுவாக இரசிக்க ஆரம்பித்தான்.


அவள் கன்னம், இதழ், இதழில் இழைந்த புன்சிரிப்பு, பொன்னிற தாலிக்கு போட்டி போட்ட அவளின் சங்கு கழுத்து என்று கண்களை ஓட விட்டிருந்த ஹர்ஷா கண்களோடு இதயத்தையும் உணர்ச்சிகளையும் ஓடவிட்டிருந்தபடியால் அவர்கள் யாவரும் பேசிக் கொண்டு இருந்தது அவன் கருத்தில் பதியவில்லை.


நிலையற்ற வண்டுகளைப் போல் அவன் விழிகள் அவள் உடலின் பலவிடங்களில் தாவித்தாவி செல்லத் தொடங்கி இறுதியாக அழகான பட்டுக் கன்னத்தில் சஞ்சரிக்கத் தொடங்கின.


கலகலப்பாகச் சிரித்துக் கொண்டு இருந்தவளை நிகிலா விரல் பிடித்து இழுத்தவள் குனிந்து காதில் ஏதோ கிசுகிசுக்கச் சரேலெனக் கணவனைத் திரும்பி பார்த்தவளுக்கு அவனின் பார்வையின் அர்த்தம் புரிய சொல்லவொண்ணாத நாணம் பரவியதால் தேகத்தில் ரத்தம் குபீரென்று பாய்ந்து முகத்திலும் கன்னங்களிலும் சிவப்பு ஏறியது.


மனையாளின் வெட்கமும், வெட்கத்தில் சிவந்த முகமும் அந்த இரவு வெளிச்சத்தில் அதிக மயக்கத்தைத் தரும்படியாக இருந்ததைக் கவனித்த ஹர்ஷாவின் இதழ்களில் மந்தகாசப் புன்னகை படர, அவளின் விகசித்த மலர்முகம் மலர்ந்த படியே இருக்க, அவனின் ஆழ்ந்த பார்வையிலும் வீழ்த்தும் புன்னகையிலும் அவள் முகம் தானாகத் தரையை நோக்கிக் கவிழ்ந்தது.


இவர்களின் கூத்தை கவனித்துக் கொண்டு இருந்த நிகிலா கனிகாவின் தொடையில் மெல்ல கிள்ளி,


"கனிகா... நீ கேட்டது ஹர்ஷா அண்ணா காதில் விழுந்திடுச்சு போலடி? அவர் பார்வை உன்னை விட்டு ஒரு இன்ச் கூட நகரலை.." என்று களுக்கென்று சிரித்தவாறே கேட்க, அவள் என்னவோ மெதுவாகத் தான் கேட்டாள்.


ஆனால் அவர்களையே பார்த்திருந்த ஹர்ஷாவிற்கு அவர்களின் பேச்சு புரிந்து போனது.


அவள் முகம் நோக்கியவன் என்ன என்பது போல் புருவத்தை உயர்த்த, கணவனின் சைகையில் அவன் அழகில் மயங்கியவள் தன்னையும் அறியாமல் அவனை நெருங்கி அமர்ந்து "இன்னைக்கு என் கூடவே இங்கேயே தங்குறீங்களா" என்று கேட்டே விட்டாள்.


ஏனெனில் தங்கள் வீட்டிற்குப் போனாலும் தாங்கள் எதிர்பார்க்கும் தனிமையைத் தன் மாமியார் நிச்சயம் தரப் போவதில்லை.


கனிகாவின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு இன்னும் சில வாரங்களுக்கு அவர்கள் இருவரும் தள்ளி இருக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்.


மனைவியின் கூற்றில் கேள்வியில் அவளைச் சட்டென்று ஏறெடுத்து பார்த்த ஹர்ஷாவின் இதழில் அடக்க முடியாமல் சிரிப்பு விரிய,


'சீ... இத்தனை பேர் இருக்கும் பொழுது வெட்கத்தை விட்டு இதென்ன இத்தனை அந்தரங்கமாகவா கேட்டேன்?' என்று மானசீகமாகத் தன் தலையிலேயே அடித்துக் கொண்டவளுக்கு அவன் சிரிப்பு வேறு கூச்சத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.


கனிகா குனிந்து ஹர்ஷாவிடம் பேசியதும், அதற்கு அவன் சரேலென்று அவளைப் பார்த்துப் பின் அடக்க மாட்டாமல் சிரிக்கவும் நிகிலாவிற்குப் புரிந்து சத்தமாகச் சிரிக்க, கனிகாவிற்கு அங்கு இருக்கவே முடியாமல் போனது.


நிகிலாவை அடிக்கக் கை ஓங்க, அவளின் கைகளுக்கு எட்டாமல் நிகிலா எழுந்து ஓட, "இங்கு என்ன நடக்குது... எனக்குத் தெரியாம.." என்று சௌமியாவும் அவர்களுக்குப் பின் ஓட,

அங்கு இருந்த ஆண்களுக்கு அங்கு நடப்பது புரியாவிட்டாலும் இவர்களின் மகிழ்ச்சியும், சிரிப்பும் அவர்களையும் தொற்றிக் கொண்டது.


மனைவியின் விளையாட்டுத்தனத்தையும், குழந்தை போல் சிரிப்பதையும் ரசித்துப் பார்த்திருந்த ஹர்ஷாவின் மனம் விவரிக்க இயலாத நிம்மதியில் நிறைந்து இருந்தது.


இவர்களின் அரட்டையில் நேரம் ஓடியிருக்க, மணி கிட்டத்தட்ட ஒன்பதாகியிருக்கக் கனிகாவை அழைத்த ஹர்ஷா, "கனி, நான் கிளம்புறேன்..." என்றான்.


அது வரை சிரித்த முகத்துடன் கலகலப்பாக இருந்த கனிகாவிற்குத் தான் ஆசையாகக் கேட்டும் தன் கணவன் கிளம்புவதை நினைத்து மனதிற்குள் பிசைய, அதை முகத்திலும் காட்டியவள் மெல்ல, "ஏன், நானே வலிய கேட்டதால் கிளம்புறீங்களா?" என்றாள்.

அவளின் வார்த்தைகளில் அத்தனை கோபம் கொப்பளித்தது.


மனதிற்குள் அடக்கமாட்டாமல் சிரித்துக் கொண்டவன் மிகவும் சிரமப்பட்டு முகபாவத்தை மாற்றி,


"இல்லைடா, ஃபாரின் க்ளையண்ட்ஸ் மீட்டிங் இருக்கு.... பத்து மணிக்கு மேல் தான் மீட் பண்ண முடியும்னு சொல்லியிருந்தாங்க.... உன்கிட்ட ஏற்கனவே சொல்ல நினைச்சேன், மறந்துட்டேன்.." என்றவன் தொடர்ந்து.


"இன்னைக்கு நைட் நீ இங்கேயே இரு... நான் நாளைக்குக் காலையில் வந்து கூட்டி போகிறேன்..." என்றான்.


அதற்குள் அவர்களின் அருகில் வந்த சௌமியாவும்,
"கனிகா... இன்னைக்கு நைட் இங்கே ஸ்டே பண்ணுப்பா... ஜாலியா இருக்கும்..." என்க, வேறு வழியில்லாமல் சரி என்றாள்.


ஆனால் இன்னமும் கணவன் மீது கோபமும் ஆற்றாமையும் தீரவில்லை.


ஹர்ஷா கிளம்பியதும் சிறிது நேரம் அனைவரும் கீழே அமர்ந்து பெரியவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தவர்கள் தங்கள் அறைக்குச் செல்ல கனிகாவை அழைத்தார் மாலதி.


"கனி... குழந்தைகளை நான் இன்னைக்குப் பார்த்திக்கிறேண்டா... பாலுக்கு அழுதா வந்து கூப்புடுறேன்... நீ ஃப்ரீயா தூங்கு.."


"இல்ல அத்த, பரவாயில்லை... தனியா தான தூங்கப் போறேன்... நானே பார்த்துக்கிறேன்... நீங்க தூங்குங்க.."


அவள் குழந்தைகள் பிறந்ததில் இருந்து அவர்களைப் பிரிந்து இருந்ததில்லை ஆதலால் தயங்க, மீண்டும் வற்புறுத்திய மாலதியிடம்அவளுக்கு அதற்கு மேல் எதிர்த்து பேச விருப்பம் இல்லை.


நிகிலா திருமணம் ஆனதும் அவளுக்கென்று ஒரு அறையை ஒதுக்கி கொடுத்து இருந்ததால் கனிகா கல்லூரியில் படிக்கும் காலத்தில் தங்கி இருந்த அதே அறையிலே இன்னமும் அகிலின் வீட்டிற்கு வந்தால் தங்குவாள்.


ஒவ்வொரு நாளும் அந்த அறையில் தனியாகப் படுத்திருக்கும் பொழுதும் ஹர்ஷாவோடு கல்லூரியில் கழித்த காலமும், நாட்களும் மனதில் அலை அலையாக வந்து போகும்... ஏனோ அவனுடன் சந்தோஷமாக இருந்த நாட்களை விட அவனால் தான் அழுது கரைந்த நாட்களே அதிகம் மனதில் தோன்றும்.


முயன்று அந்த நினைவுகளை அகற்ற நினைப்பாள்... சில சமயங்களில் அது முடியாமல் போகும்.


அப்பொழுதெல்லாம் ஹர்ஷாவை அழைத்து மணிக் கணக்கில் பேசி நேரத்தை போக்குவாள்.


ஆனால் சென்னையிலேயே இருந்தாலும் ஹர்ஷா இது வரை அகிலின் வீட்டில் தங்கியதில்லை.


மனி பதினொன்றாகியிருக்கத் தன் அறைக்கு வந்த கனிகாவிற்குக் குழந்தைகள் வேறு இல்லாததால் ஹர்ஷாவின் ஞாபகம் மனம் முழுவதும் நிரம்பி வழிந்தது.


திருமணம் முடிந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும் அவளுக்குத் தன் கணவன் மேல் உள்ள காதல் அதிகமானதே தவிர இம்மி அளவு கூடக் குறையவில்லை.


அவனையே நினைத்து படுத்திருந்தவளை திடீரென்று அடித்த அழைப்பு மணி சுய நினைவுக்குக் கொண்டு வந்தது.


இந்நேரத்தில் யாரென்று யோசித்துக் கொண்டு இருந்தவள் மற்றவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் தானே விரைவாகக் கீழே இறங்கி வந்தவள் கதவை திறக்க அங்குக் குறும்புச் சிரிப்புடன் நின்றிருந்தான் அவள் கணவன்.


மீட்டிங்கென்று போனவன் திரும்பி வந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டு அவனையே பார்த்திருக்க,


"இப்படியே சைட் அடிச்சுக்கிட்டே இருக்கப் போறியா? அல்ல வீட்டிற்கு உள்ள கூப்புடப் போறியா?" என்றான் நக்கல் சிரிப்புடன்.


அது வரை மறைந்திருந்த கோபம் அவனின் கிண்டலில் மீண்டும் துளிர்தெழுந்தது.


"வாங்க" என்றவள் அவன் பதிலுக்குக் காத்திராமல் மாடி ஏற அவளின் கோபமும் அவனுக்குக் கனத்த சிரிப்பையே வர வழைத்தது.


அவளைப் பின் தொடர்ந்தவன் அறைக்குள் நுழைய கதவை சாத்தியவள் நகரப் போகச் சட்டென்று அவளை அள்ளினான் இரு கைகளால்.


"விடுங்க.... அதான் மீட்டிங் இருக்குன்னு போனிங்கல்ல... அப்புறம் அப்படியே உங்க வீட்டிற்குப் போக வேண்டியது தானே.." என்றுஅவள் முறுக்கிக் கொள்ள,


முகம் முழுவதும் புன்னகையுடன் அவளைத் தூக்கி இருந்தவாறே இறுக்கி அணைத்தவன் படுக்கையில் சாய்க்க, கட்டிலில் கிடத்திய அந்த நொடியே துள்ளி எழுந்தவள் அவனை விட்டு விலகப் போக, அவளை இழுத்து அவள் மேல் படர்ந்தவன் அவள் இதழை தன் இதழ்களுக்குள் அழுந்தபுதைத்துக் கொண்டான்.


மூச்சிறைக்க அவனை விட்டு விலகியவளின் மலர்ந்த முகத்தைப் பார்த்தவனுக்கு முதுகுக் காட்டி திரும்பி படுத்தாள் அவன் மனைவி.


அவளின் முதுகு பிரதேசமும், ஒருக்களித்துப் படுத்து இருந்ததால் நெகிழ்ந்து கிடந்த புடவையும், பளிங்கு இடையும் அதன் வளைவும் ஹர்ஷாவின் சுய உணர்வை அறவே இழக்க செய்தது.


இத்தனை நாட்கள் கணவனைப் பிரிந்திருந்தவளுக்கு அவனின் இப்போதைய சமீபம் எத்தனை எத்தனையோ உணர்ச்சிகளை உடலில் உருவிபோட்டாலும் அவன் தன்னைச் சீண்டி இருந்ததால் இன்னும் ஆற்றாமை தீராமல் அவனுக்கு முதுகு காட்டி படுத்திருந்த மனைவியின் திண்டாட்டத்தைப் புரிந்து சிரித்தவன் மெல்ல அவளின் பின் கழுத்தில் முகம் புதைத்தான்.


எத்தனை இரவுகள் இதே அறையில் அவனை நினைத்து அழுது கரைந்திருக்கிறாள்.


அவனைச் சந்தித்த ஆரம்ப நாட்கள் அச்சத்திலும் கலக்கத்திலும் கழிந்தன.... பழக ஆரம்பித்த நாட்கள் மகிழ்ச்சியிலும் கனவிலும் கழிந்தன... பின் வந்த நாட்கள் அனைத்துமே ஆழ்ந்த துயரத்திலும் ஊற்றாகப் பெருக்கெடுத்த கண்ணீரில் கழிந்தன.


முதன் முறை அதே அறையில் அந்த அழகிய இரவு தன் கணவனுடன் மனம் கவர்ந்த காதலனுடன் ஆத்மார்த்தமான தாம்பத்தியத்தில் முடிய, மீண்டும் மீண்டும் அவளை நாடியவனின் தேடலை நிறைவாக அள்ளிக் கொடுத்திருந்தவள் அவனின் தோள் வளைவுக்குள் இருந்தவாறே அவனை ஏறிட்டு,


"வேணும்னே தான் மீட்டிங் இருக்குன்னு பொய் சொன்னீங்களா?" என்றவளுக்குச் சட்டென்று ஏதோ தோன்ற,


"ஏங்க... இதுக்குத் தான் அத்தை குழந்தைகளை அவங்க பார்த்துக்கிறதா சொன்னாங்களா?" என்றாள் திகைப்புடன்.


மீண்டும் சிரித்தவன் 'ஆம்' என்பது போல் தலை அசைக்க,


"அப்போ நான் கேட்டது இந்த வீட்டில் எல்லாருக்கும் தெரியுமா.... ஏன்டா இப்படி என் மானத்தை வாங்குற? பொறுக்கி!" என்று அவனைமெல்ல அடிக்க, அவள் கரத்தை இறுக்கப் பற்றியவன் மீண்டும் அவளுக்குள் புதைந்தான்.


அந்த அறை முழுவதும் ஒரு காலத்தில் அழு குரலிலும் மௌனமான கண்ணீரிலும் நிறைந்து இருந்தது என்றால் இன்று சிரிப்பொலியிலும் செல்ல சிணுங்கல்களிலும் நிறைந்து இருந்தது.


ஹர்ஷா - கனிகா, நிகிலா - விஷ்ணு, அகில் - சௌமியா.


தம்பதியர் அனைவரும் எல்லா வரமும் பெற்று மகிழ்ச்சியான நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்று வாழ்த்தி விடை பெறுவோம்.

Let me not to the marriage of true minds
Admit impediments.
நேர்மை நோக்கம் கொண்ட இரு மனங்கள் இணையக்கூடாது என்பதற்கான காரணங்களை என்னால் அறிவிக்க இயலாது.

Love is not love
Which alters when it alteration finds,
Or bends with the remover to remove:
ஏனெனில் சூழ்நிலைகளுக்கேற்ப மாறும் காதலும்,
வாய்மை வழுவிய காதலரையும் கண்டு உறுதியை இழக்கின்ற காதலும்,
காதலே அல்ல!

O no! it is an ever-fixed mark
That looks on tempests and is never shaken;
புயலை எதிர்நோக்கினும் அசைக்கபடாத கலங்கரை விளக்கம் காதல்;

It is the star to every wandering bark,
Whose worth’s unknown, although his height be taken.
வழி தவறிய கப்பலிற்கு வழிகாட்டும் நட்சத்திரம் காதல்..
அதன் வலிமையைக் கணக்கிட இயலும், ஆனால் மதிப்பை கணக்கிட இயலாது..

Love’s not Time’s fool, though rosy lips and cheeks
Within his bending sickle’s compass come:
காலத்தின் மாறுதல்களாக ஏற்படும் புற அழகின் மாற்றங்கள் காதலை அழிக்காது.

Love alters not with his brief hours and weeks,
But bears it out even to the edge of doom.
குறிகிய காலத்தில் மாறும் காதல், காதல் அல்ல..
வாழ்நாளின் இறுதி வரை நீடிக்கும் காதலே தூய்மையான காதல்.

If this be error and upon me proved,
I never writ, nor no man ever loved.
காதலைக் குறித்த எனது எண்ணங்கள் தவறென நிரூபிக்கப்பட்டால், நான் தீட்டிய அனைத்தையும் திரும்ப பெறுகின்றேன்..
ஏனெனில் எந்த மனிதனும் இந்நாள்வரை உண்மையாக எவரையும் நேசிக்கவில்லை.




*************மீண்டும் சந்திப்போம் குருக்ஷேத்திரத்தில் *******************
 
Last edited:

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top