JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Kathala Karvama - Episodes 14 & 15

JB

Administrator
Staff member
அத்தியாயம் 14


கல்வி ஆண்டு இறுதியை நெருங்க, இறுதி ஆண்டு மாணவர்களுக்கு நடக்கும் ஃபேர்வெல் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட அந்த நாளும் வந்தது.

அனைத்து மாணவிகளுக்கும் பிரசிடெண்ட் ஹர்ஷாவை பிரிவது அத்தனை சோகமாக இருந்தது... இறுதி ஆண்டு மாணவர்கள் யாவரும் ஃபேர்வெல் பார்ட்டியை சிறப்பாகக் கொண்டாட, அங்கு ஹர்ஷாவை பிரிய போவதை நினைத்துக் கரித்துக் கொண்டு வந்தது கனிகாவிற்கு..

ஏற்கனவே ஓரிரு தடவைகள் தான் வெளிநாடு செல்ல இருப்பதை அவன் கூறியிருந்தாலும் அவள் முகம் சுருங்குவதைப் பார்த்திருந்தவன் அவளிடம் மேற்கொண்டு அதைப் பற்றிப் பேசியிருக்கவில்லை.... ஆனால் இப்பொழுது அந்த நாளும் நெருங்கிவிட்டது.

அன்று மாலை அவளைச் சந்தித்தவன் அவள் முகம் சரியில்லாததைப் பார்த்து விசாரிக்க,

"நீங்க கண்டிப்பா வெளி நாடு போய்த் தான் ஆகணுமா?" என்றாள்...

அவள் தவிப்பு புரிந்தவன்,

"கனி... எனக்கு மட்டும் உன்னை விட்டு போகணும் என்று ஆசையா என்ன? இது எங்க டாட் உடைய விருப்பம்... அவருக்கு நான் பிஸ்னஸ்ல இறங்கனும் என்று விஷ்... பட் நான் கம்ப்யூட்டர் பற்றிப் படிக்கணும் என்று சொல்லிவிட்டேன்... அதற்கு அவர் மறுப்பு ஒன்றும் சொல்லவில்லை... பட் ஒரே ஒரு டீல், நான் MCA முடிந்தவுடன் அவர் விருப்பப்படி பிஸ்னஸ் மேனெஜ்மண்ட் படிக்கணும்... அதுவும் அப்ராட்ல... ஸோ ஐ ஹாவ் டு கீப் அப் மை வெர்ட் [So i have to keep up my word].. டு இயர்ஸ் தான்... அப்புறம் உன்னைத் தேடி ஓடி வந்து விடுவேன்..." என்றான்..

அவன் சொன்ன எந்த விளக்கமும் அவளுக்கு ஆறுதல் அளிக்கவில்லை...

மாறாக அவன் வருவதற்கு இரண்டு வருடங்கள் ஆகும் என்று சொன்னது மனதிற்குப் பாரமாக இருக்க, கண்கள் கலங்க அவனையே பார்த்திருந்தாள்..

"கனி ப்ளீஸ், நான் ஊருக்குப் போவதற்கு இன்னும் த்ரீ வீக்ஸ் இருக்கு... அதற்குள் ஏன் இத்தனை கவலை? லெட்ஸ் எஞ்சாய் எவ்ரி மொமண்ட் [Let's enjoy every moment]..." என்றவன் அதைப் பற்றி மேற்கொண்டு பேசாமல் வேறு விஷயங்களைப் பற்றிப் பேசி அவள் மனதை மாற்ற முயற்சித்தான்.

ஆனால் அவள் மனமோ அவன் இன்னும் மூன்று வாரங்கள் தான் தன்னுடன் இருப்பான் என்பதிலேயே உழன்று கொண்டு இருந்தது..

தேர்வுகள் ஒரு வழியாக முடிய இன்னும் இரண்டு நாட்களில் தான் வெளிநாடு செல்லவிருப்பதால் கனிகாவை தினமும் தனிமையில் சந்தித்தான் ஹர்ஷா...

ஆனால் தான் வாக்குக் கொடுத்தது போல் தன் விரல் நுனி கூட அவள் மேல் படாமல் ஜாக்கிரதையாகவே இருந்தான்..

அன்று காலை வெளிநாடு பயணத்திற்கும், அவன் செல்லவிருந்த இடம் குளிர் பிரதேசமாக இருந்ததினால் அதற்கு ஏற்ற உடைகளை எடுப்பதற்கும் ஷாப்பிங் மாலிற்குச் செல்ல, எதிர்பாராதவிதமாக அதே மாலிற்கு அகிலுடன் வந்திருந்தாள் கனிகா.

அகில்,

"நீ எப்பவும் சேலை அல்லது பாவாடை தாவணி தானே கட்டிக் கொள்கிறாய், இன்று ஒரு ஜீன்ஸ், டாப்ஸ் அல்லது ஒரு சுடிதாராவது எடு, உனக்கு ரொம்ப எடுப்பாக இருக்கும்.." என்று சொன்னதை எவ்வளவோ மறுத்தும் அவளை வற்புறுத்தி அழைத்து வந்திருந்தான்..

அகிலுடன் ஷாப்பிங் மாலிற்கு வந்த கனிகாவிற்கு அங்கு வந்த பின் தான் தெரிந்தது அங்கு இருக்கும் எந்த ஒரு பொருளையும் அவளால் வாங்க முடியாது என்று... ஏனெனில் அத்தனையும் அவ்வளவு விலை.

ஆனால் அவன் வற்புறுத்தியதற்காகத் தனக்கு ஒரு சுடிதார் மட்டும் எடுக்க ஒரு கடையில் நுழைந்தவள் எத்தனை தேடியும் தான் எதிர்பார்த்த குறைந்த விலையில் ஒரு சுடிதார் கூடக் கிடைக்காததால் வெளியே வர, அவள் பின்னாடியே வந்த அகில்.

"கனிகா...எங்க போற?" என்று வினவ,

"அத்தான்... எனக்கு ஒண்ணும் வேண்டாம் அத்தான்... ரொம்ப விலையா இருக்கு...." என்றாள்.

"என்ன, கனிகா...நான் தான் சொன்னேன்ல... விலை எதுவா இருந்தாலும் உனக்குப் பிடித்ததா அட் லீஸ்ட் ஒரு சுடியாவது எடுன்னு..." என்றவன் அவள் பின்புறம் வந்து அவளின் இரண்டு தோள்களின் மீதும் கை வைத்து கடையின் உள்ளே வலுகட்டாயாமாக அழைத்துச் சென்றான்.

அங்கு அதற்குள் தனக்கு வேண்டியவைகளை வாங்கிய ஹர்ஷா வீட்டிற்குக் கிளம்ப எத்தனிக்க ஒரு கடையின் வாயிலில் கனிகாவின் குரல் கேட்டதும் திரும்பி பார்க்க,

அங்கு அவன் கண்ட காட்சி அவன் பிபியை எகிற வைத்தது....

பயண நாள் நெருங்க நெருங்க ஏற்கனவே கனிகாவை தனியாக இரண்டு வருடங்கள் அகிலுடன் விட்டு செல்வதை நினைத்து பயந்து இருக்க, இப்பொழுது கண் எதிரே அவன் அவளிடம் இத்தனை நெருக்கமாக இருப்பதைப் பார்த்ததும் விதிர்த்து போனவன் வேகமாக அவர்கள் நுழைந்த கடைக்குள் தானும் நுழைந்தான்..

அகில் கனிகாவின் வெகு அருகில் நின்று ஒவ்வொரு சுடிதாராகக் காண்பிக்க அதன் விலையைப் பார்த்தவளின் தலையைத் தட்டியவன்,

"கனிகா, நீ இப்போ அட் லீஸ்ட் ஒரு சுடியாவது எடுக்கப் போறியா? இல்லையா?" என்று கூற,

"அவளுக்குத் தான் சுடிதார் பிடிக்காதே.... தென் வொய் ஆர் யூ ஃபோர்ஸிங் ஹெர்? [Then why are you forcing her]... " என்ற ஆளை அசத்தும் அமர்த்தலான குரலில் சட்டென்று திரும்பினார்கள் இருவரும்.

அங்கு அடக்கப்பட்ட கோபத்துடன் ஹர்ஷா நின்று கொண்டு இருக்க எதிர்பாராதவிதமாக ஹர்ஷாவை அங்குக் காணவும் அதிர்ச்சியில் உறைந்தாள் கனிகா.

அகில் அத்தானுடன் தான் வெளியில் வந்தது நிச்சயம் அவனுக்குப் பிடிக்காது என்று தெரியும்.... அதுவும் இப்பொழுது, தான் அகில் அத்தானுடன் இத்தனை நெருக்கத்தில் நின்றிருப்பதை வேறு பார்த்துவிட்டார் என்று நினைத்தவள் சட்டென்று ஒரு அடி அகிலை விட்டு நகர்ந்து நின்றவள் அச்சத்தில் ஹர்ஷாவையே பார்த்திருக்க,

"கனி, எப்பவுமே நீ ஸாரி ஆர் ஹாஃப் ஸாரி தான் கட்டுற, வேறு ஏதாவது ட்ரெஸ் போடக்கூடாதா?" என்று ஹர்ஷா எத்தனை முறையோ கேட்டிருக்கிறான்.

"அதெல்லாம் எனக்குப் பிடிக்காது..." என்று ஒரேடியாக அவள் மறுத்து இருக்கிறாள்.

"அட் லீஸ்ட் சுடியாவது வாங்கித் தருகிறேன்...போட்டுக்கோ....உன் ஸ்ட்ரக்ச்சருக்கு ரொம்ப அழகா இருக்கும்" என்று சொல்ல, அப்பொழுதும்,

"இல்லைங்க, எனக்கு என்னமோ அது எல்லாம் போட பிடிக்காதுங்க...." என்று மறுத்துவிட அதற்கு மேல் அவனும் அவளை வற்புறுத்தினதில்லை.... ஏனெனில் புடவையிலும் தாவணியிலும் அவள் அத்தனை பாந்தமாகச் சிற்பம் போல இருப்பாள்..

ஆனால் தான் அத்தனை சொல்லியும் சுடிதார் வாங்காதவள் இன்று அகில் சொன்னதும் அவனுடன் சேர்ந்து கடைக்கு வந்திருப்பதைப் பார்த்தவனுக்கு ஆத்திரமும் எரிச்சலும் போட்டிக் போட்டுக் கொண்டு வர, அதற்குள் அகில் ஹர்ஷாவின் கேள்விக்குப் பதில் அளித்தான்.

"அவளுக்குப் பழக்கம் இல்லாததால் போட மாட்டேன் என்று சொல்கிறாள்... நான் எடுத்துக் கொடுத்தால் ஏன் வேண்டாம் என்று சொல்லப் போகிறாள்?"

அகிலின் பதிலில் திடுக்கிட்டவள் அகிலை திரும்பி பார்த்தவளுக்கு இன்று செம்மையாக மாட்டினோம் என்று இருந்தது... ஹர்ஷாவின் முகத்தில் தெரிந்த கோபத்தைப் பார்த்தவள், "அத்..." என்று ஆரம்பித்தவளுக்கு ஹர்ஷா ஏற்கனவே அத்தான் பொத்தான் என்று அவனை அழைக்கக்கூடாது என்று சொன்னது ஞாபகம் வர,

"எனக்குச் சுடிதார் வேண்டாம்...போகலாம் வாங்க..." என்றவள் வார்த்தைகள் அகிலை நோக்கி இருந்தாலும் பார்வை எல்லாம் ஹர்ஷாவிடமே இருந்தது.

அவள் கரத்தை பற்றி இழுத்த ஹர்ஷா அகிலை முறைத்தவாறே அவளை வெளியே இழுத்துச் செல்ல, அவன் சட்டென்று அவ்வாறு இழுக்கவும் நிலை குலைந்தவள் ஹர்ஷாவின் தோளில் மோத, அவளின் தோள் மீது கை வைத்து இறுக பற்றியவன் நேரே தன் காருக்கு அழைத்துச் சென்றான்...

ஹர்ஷாவின் செயலில் அதிர்ந்த அகில் கடைகளில் இருப்பவர்கள் அனைவரும் தங்களையே பார்த்திருக்க வேறு வழியில்லாமல் தானும் வெளியே வந்தவன் அங்குக் கார் பார்க்கிங்கில் ஹர்ஷா கனிகாவை ஏற்றிவிட்டு தானும் அமர்ந்து காரை சீறிக் கிளப்ப, ஹர்ஷாவை நினைத்து பயந்தவன் அதே சமயம் அவன் கனிகா மேல் காட்டிய உரிமையையும் நினைத்து வியந்தான்.

காரில் ஏறியதுமே கனிகா ஹர்ஷாவை திரும்பி பார்க்க, அவள் தன்னையே பார்ப்பதை அறிந்தவன் இருந்தும் அவள் பக்கம் திரும்பவில்லை.

காரை கடற்கரையை நோக்கி செலுத்தியவன் கடற்கரையை அடைந்ததும் எதுவும் பேசாமல் தான் மட்டும் இறங்கி கடலை நோக்கி நடக்க, அவன் பின்னால் ஓடியவள் அவன் அருகில் சென்றதும் அவன் இடது கரத்தினுள் தன் இரு கைகளையும் நுழைத்து, "என்னங்க...கோபமா?" என்றாள்.

சிறிது தூரம் சென்றவன் தன் இரு கைகளையும் ஜீன்ஸ் பேண்டின் பாக்கட்டில் விட்டு நிமிர்ந்து கடலையே வெறித்துப் பார்க்க, "

அகில் அத்தான் தான் நான் எவ்வளவு சொல்லியும் வற்புறுத்தி கூட்டி வந்தாங்க.." என்றாள்..

அவள் அத்தான் என்றதுமே அவளைத் திரும்பி பார்த்தவன் அவள் விழிகளை ஊடுருவதைப் போல் பார்த்தவாறே,

"அப்போ அவன் வற்புறுத்தி சொன்னால் எதுவேனா செய்துவிடுவியா?" என்றான்..

அவன் அமைதியாகத் தான் அந்தக் கேள்வியைக் கேட்டான்.

ஆனால் அதில் உள்ள அர்த்தம் அவள் உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை அதிர செய்தது
.
இரு கண்களிலும் கண்ணீர் துளிகள் ஊற்றெடுக்க அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவளை பார்த்தவன் மறுபடியும் கடலின் புறம் திரும்ப, அவனைப் பிடித்திருந்த கைகளைத் தளர்த்தியவள் அமைதியாகத் தலை கவிழ்ந்து நிற்க, அவள் புறம் திரும்பியவன், "ஏன் கைய எடுத்துட்ட?" என்றான்..

நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில் தெரிந்த கலக்கத்தையும் அதிர்வையும் உணர்ந்தவன்,

"கனி, நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்... எனக்கு அந்த அகிலை பிடிக்கலைன்னு... ஏன்னு கேட்காத.... எனக்கு அவனைப் பிடிக்கலை... அவ்வளவு தான்... இதில் இன்னும் டு டேஸ்ல நான் அப்ராட் போறேன்...இப்போ உங்க இரண்டு பேரையும் இப்படிப் பார்த்தால் எப்படி என்னால நிம்மதியா இருக்க முடியும்?" என்றான்.

அவனின் அத்தனை செயல்களும் எங்கே அவள் தன்னை விட்டு சென்று விடுவாளோ என்ற பயத்தில் தான் என்று அவளுக்கும் தெரியும், ஆனால் அவனது அதிரடியான செயல்கள் தான் அவளை அச்சுறுத்துகிறது... கலங்கடிக்கிறது..

அவன் கரத்திற்குள் தன் கரங்களை மீண்டும் நுழைத்தவள் தோளில் சாய்ந்தவாறு,

"நீங்க எப்போ வந்தாலும் நான் உங்களுக்காகக் காத்திட்டு இருப்பேன்... நான் உங்களுக்கு மட்டும் தான்... இனி அவருடன் எங்கும் போக மாட்டேன்..." என்றாள்..

தன் வார்த்தையை அவள் காப்பாற்றியிருந்தால் பின்னாளில் நடக்கவிருக்கும் விதியின் விளையாட்டுக்களைத் தடுத்திருக்கலாமோ!

அவளைத் தன் தோள் வளைவுக்குள் வைத்துக் கொண்டவன் மனம் முழுவதும் 'அகிலிடம் இருந்து இவளை எப்படிக் காப்பாற்றுவது? அவனை நம்புவது முட்டாள் தனம்... இதற்கு நாளையே ஒரு வழி செய்ய வேண்டும்..' என்று தோன்றியது.

அவளை வழக்கமாக இறக்கும் பேருந்து நிலையத்தில் இறக்கியவனின் முகம் இன்னும் தெளிவில்லாமல் இருப்பதைப் பார்த்தவளுக்குப் புரிந்து போனது அவனின் கோபம் இன்னமும் தணியவில்லை என்று..... ஆனால் இதற்கு மேல் எதுவும் கேட்டால் மறுபடியும் ஏதாவது ஏடாகூடமாகச் செய்துவிடுவான் என்று அஞ்சி அமைதியானாள்..

வீட்டிற்கு வந்தவனின் மனக்கண்ணிற்கு முன் ஏனோ அகில், கனிகாவின் தோளைப் பற்றியிருந்த காட்சியே வந்து போனது....

இரவு முழுவதும் தன் அறைக்குள் அங்கும் இங்கும் நடந்தவனின் கோபம் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்ததே தவிரக் குறைந்தபாடில்லை..

'எத்தனை முறை நான் சொல்லியும் மறுத்தவள் அவன் ஒரே ஒரு முறை சொன்னதும் கடைக்கு வந்து விட்டாள்.... அப்படி என்றால் என்னை விட அவனால் அவளிடம் எதையும் சாதித்துக் கொள்ள முடியும் என்று தானே அர்த்தம்.... தான் அவள் விருப்பப்படி அவள் மீது விரல் கூடப் படாமல் இருக்க அவன் எவ்வாறு இப்படிப் பப்ளிக்கில் அவளின் தோளைப் பற்றிக் கூட்டி செல்ல முடியும்... அவளும் ஒன்றும் சொல்லவில்லேயே...'

'அப்படி என்றால் நான் இரண்டு வருடம் வெளி நாட்டில் இருக்கும் நேரம் இங்கு எதுவும் நடக்க வாய்ப்பிருக்கிறது.... கனி நிச்சயம் தவறு செய்ய மாட்டாள்.... ஆனால் அந்த ராஸ்கல் எப்ப நான் அவளை விட்டு தூர செல்வேன் என்றே இருப்பான் போல் இருக்கிறது... அவன் நிச்சயம் கனியை அடைய எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருப்பான் போல் இருக்கிறது..' என்று நினைத்தவன் விடிய விடிய குழம்பி விடியும் போது ஒரு விபரீத முடிவை எடுத்திருந்தான்..

அதனால் ஏற்படப் போகும் விளைவுகளைப் பற்றிச் சிந்தியாமல்!!!!!


*******************************************


கல்லூரி முடிந்து விடுமுறை விட்டுவிட்டதால் வழக்கத்தை விடச் சற்று நேரம் கழித்தே எழுந்தவள் குளியல் அறைக்குள் செல்ல சரியாக அவளின் அலைபேசி அழைத்தது... வேகமாக ஓடி வந்தவள் அழைப்பை எடுக்க,

"கனி, நான் நாளைக்கு ஊருக்கு போறதுக்குள்ள உன்னைப் பார்க்கணும்....உன் கூடக் கொஞ்சம் பேசணும்... இன்னைக்கு ஈவ்னிங் நான் சொல்ற இடத்திற்கு வா..." என்றான்..

நாளை காலை அவர் கிளம்புகிறார்... அதற்குப் பிறகு இரண்டு வருடங்கள் அவரைக் காண முடியாது... இடையில் வர வாய்ப்பில்லை என்று வேறு சொல்லியிருக்கிறார் என்ற நினைப்பே அழுகையைக் கொண்டு வர, தொண்டை அடைக்க "சரிங்க" என்றாள்.

இடத்தைக் குறுந்தகவல் மூலம் அனுப்பியவன் தான் அவளை ஆறு மணி போல் பிக்கப் செய்வதாகச் சொன்னான்.

"அவ்வளவு லேட்டாகவா?"

"ஆமா கனி, எனக்கு இன்னைக்கு நிறைய வேலைகள் இருக்கு... அது மட்டும் இல்லாமல் இன்னைக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் என்னோட மாம் கூட நான் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்... ஐ வில் பிக் யூ அப் அட் ஸிக்ஸ்..." என்றான்.

மாலை சீக்கிரமாகக் கிளம்பியவள் எப்பொழுதும் அலங்காரம் செய்து கொள்ள விரும்பாவிட்டாலும் இன்று அவனுக்காக அலங்கரித்துக் கொண்டு அத்தையிடம் தன் தோழிகளுடன் கோவிலுக்குப் போவதாகச் சொல்ல, அவரும் சரி என்று சொல்லிவிட்டார்..

ஆறு மணிக்கு முன்பே அவன் சொன்ன இடத்திற்கு வந்தவளை சரியாக ஆறு மணிக்கு வந்தவன் காரில் ஏற்றி செல்ல, "எங்க போறோம்?" என்றாள்..

"ஏன் சொன்ன தான் என் கூட வருவியா?"

"இல்லை, கோவிலுக்குப் போறதா அத்தைக் கிட்ட சொல்லிட்டு வந்திருக்கேன்... ஏற்கனவே கொஞ்சம் இருட்டிடுச்சு... சீக்கிரம் வீட்டிற்குப் போக வேண்டும்.... இல்லைன்னா அத்தை சந்தேகப்படுவாங்க..."

"சீக்கிரம் பத்திரமா உன்னைக் கொண்டு போய் விட்டுறேன்...பயப்படாம வா..."

கிட்டதட்ட ஒரு அரை மணி நேர பயணத்திற்குப் பிறகு கார் ஒரு பங்களாவின் முன்னால் நிற்க, எங்கு வந்திருக்கிறோம் என்று புரியாமல் அவனையே பார்த்திருக்க "இறங்கு" என்றான்.

"இது யாரோட வீடுங்க? இவ்வளவு பெரிசா இருக்கு.... நாம் ஏன் இங்கு வந்திருக்கோம்?"

அடுக்காகக் கேள்விகள் கேட்க ஒன்றும் பேசாமல் காரை விட்டு இறங்கியவன் அவள் புறம் வந்து அவள் கரத்தைப் பற்றி அழைத்துச் சென்றான்.

அத்தனை பெரிய பங்களாவை இது வரை அவள் நேரில் பார்த்தது இல்லை... ஒரு வேளை இவரோட வீடோ என்று எண்ணியவள், 'ஐயோ! அப்போ அவரோட அம்மா அப்பா எல்லாரும் இருப்பாங்களே..' என்று திகைத்து அவன் கரத்தை இறுக பற்றிக் கொள்ள, அவன் தன்னுடன் கொண்டு வந்திருந்த சாவியைக் கொண்டு கதவை திறக்க 'வீட்டில் யாரும் இல்லையோ, அப்போ இங்க எதுக்கு வந்திருக்கிறோம்?' என்று குழம்பினாள்.

அவளை உள்ளே அழைத்துச் சென்றவன் கதவை மூட, வீட்டில் யாரும் இருப்பது போல் தெரியவில்லை...

வீட்டின் அலங்காரத்தையும் பகட்டையும் பார்த்தவள், "இது யாரோடு வீடுங்க?" என்று மறுபடியும் கேட்க,

"திஸ் இஸ் ஒன் ஆஃப் அவர் கெஸ்ட் ஹவுஸ் [This is one of our guest house]... வீக் என்ட்ஸ்ல ஃப்ரெண்ட்ஸ் கூட அடிக்கடி வருவேன்..." என்றவன் அவளை அழைத்துக் கொண்டு சென்றது ஒரு படுக்கை அறை.

அது வரை எங்கு வந்திருக்கிறோம் என்று மட்டும் குழம்பிக் கொண்டிருந்தவளுக்கு அவன் படுக்கை அறைக்குள் அழைத்துச் செல்லவும் முகத்தில் பளாரென்று அறைந்தது போல் உண்மை புரிய, படபடப்புடன் அதிர்ந்து அவனை நோக்க, அவளின் அதிர்ந்த முகத்தைப் பார்த்தவாறே தன் காலால் அவன் படுக்கை அறை கதவையும் மூடினான்..

தொடரும்
 

JB

Administrator
Staff member
அத்தியாயம் 15


பூட்டிய வீட்டிற்குள் அதுவும் படுக்கை அறைக்குள், அவனுடன் தனிமையில் இருப்பதை எண்ணி அத்தனை நேரம் இல்லாத பயம் வந்து பிடித்துக்கொள்ள அவளது தேகம் நடுங்க ஆரம்பித்தது..

அவளை நோக்கி முன்னேறியவன் மூச்சு காற்றுப் படும் அளவிற்கு அவளை ஒட்டி நிற்க, சகலமும் அடங்கிப் போனது.

தடுமாறியவாறே பின்னால் அடி எடுத்து வைத்தவள்,

"எ....என்னங்க....எனக்கு பயமா இருக்குங்க....வெளியில் போகலாம்... ப்ளீஸ் வாங்க..." என்றாள்..

அவளை ஊடுருவுவது போல் பார்த்தவனின் விழிகளில் தெரிந்த உணர்வுகளைக் கண்டு இதயம் தடதடக்க, அவனைச் சட்டென்று தள்ளிவிட்டு வெளியே செல்ல முயற்சிக்க, அவளால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத அளவு இறுக பற்றியிருந்தான் அவள் இடையை..

"இது சரியில்லைங்க... நீங்க எனக்குச் சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கீங்க... நம்ம கல்யாணம் ஆகும் வரை என்னைத் தொடறது இல்லைன்னு.... அப்புறம் ஏன் இப்படி நடந்துக்கிறீங்க?" என்றவளின் கண்களில் சரசரவென்று கண்ணீர் கொட்ட,

"கனி.... உன்னை என்னுடையவளா தக்க வச்சுக்கிறதுக்கு இதை விட எனக்கு வேறு வழி தெரியலை.." என்றான்.

தன் காதுகளையே நம்ப முடியாமல் அதிர்ச்சியில் கண்களை அகல விரித்துக் கலக்கத்தோடு அவனைப் பார்த்தவள், "வேண்டாங்க... இது தப்புங்க... ப்ளீஸ் விட்டுடுங்க..." என்று கெஞ்ச,
ஆனால் அவன் மனம் முழுவதும் அவளை எப்படியும் தன்னவள் ஆக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற வெறி மட்டும் இருக்க, அவளின் கதறலை பொருட்படுத்தாதவன் போல் தன் செயலில் குறியாக இருந்தவன் அவள் பூவிதழ்களைத் தன் கடினமான இதழ்களுக்குள் சிறை செய்தான்.

அவளது இடையில் ஒரு கரமும் கழுத்தில் ஒரு கரமும் அழுந்த பற்றியிருக்க அவனது வலிமையான பலத்திற்கு முன் மெல்லிய தேகம் கொண்டவளால் எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை.

அவள் மூச்சிற்காகத் திணறும் வரை விடாமல் அவளின் இதழில் மூழ்கியிருந்தவன் கீழிறங்கி அவள் கழுத்தில் அழுத்தமாக முகம் புதைக்கச் சுய நினைவிற்கு வந்தவள் தன் பலம் கொண்ட மட்டும் போராடி அவனைத் தள்ளினாள்.

அவள் தள்ளிய வேகத்தில் ஆத்திரம் தலைக்கு ஏற, "கனி...... எனக்கு நீ வேணும்.... இப்பவே வேணும்... என்னால நம் மேரேஜ் வரை வெயிட் பண்ணமுடியாது...அதற்குள் அந்த அகில் உன்னைத் தூக்கிட்டு போய் விடுவான்.." என்று கர்ஜிக்க,

எங்கிருந்து இவருக்கு அகில் அத்தான் மீது இத்தனை சந்தேகம் வந்தது என்று திகைத்தவள் தலையில் கை வைத்து அப்படியே தரையில் அமர்ந்தாள்.

"ஐயோ! ஏங்க இப்படி எல்லாம் பேசறீங்க? என்னைய பற்றி இவ்வளவு தெரிஞ்சும் எப்படி இப்படி எல்லாம் நினைக்க மனசு வந்தது..." என்று கதற,

நிமிர்ந்து நின்றவன்,

"ஏன்னா எனக்கு உன் மாமா மகன் மேலும் நம்பிக்கை இல்லை, உன் அப்பன் மேலும் நம்பிக்கை இல்லை.... உன்னைக் கொஞ்சம் கண்டிச்சு சொன்னா நீ உடனே என்னைய விட்டுட்டு வேற யாராவது கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு என்ன நிச்சயம். அதனால தான், நான் ஊருக்கு போறதுக்கு முன்னாடி உன்னை எனக்குச் சொந்தமானவளா ஆக்கிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்.....இதுக்கு நீ சம்மதிக்கலைன்னா, அப்புறம் என்னைய மறந்துட வேண்டியது தான்..." என்றான்.

அவனின் ஒவ்வொரு செயலும் உடலில் உள்ள ஒவ்வொரு நரம்பிலும் அதிர்வை கொடுத்தது என்றால், அவனுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் உள்ளத்தில் எரிமலையாக வெடித்தது..

"முடியாது... என்னால இதுக்கு ஒத்துக்க முடியாது.." என்று மெல்ல கூற,

அவளைக் கூர்ந்து பார்த்தவன் அவள் முன் குனிந்து,

"உன் மேல் எனக்கு நம்பிக்கை இல்லையான்னு கேட்கிறியே, என் கூடப் படுக்கறதுக்கு உனக்கு ஏன்டி இவ்வளவு தயக்கம்?? ஏன் நான் உன்னை ஏமாத்திட்டு போய்டுவேன்னு பயமா? அப்படின்னா உனக்குத் தான் என் மேல் நம்பிக்கை இல்லைன்னு அர்த்தம்.." என்றான் விழிகளில் கோபம் தெறிக்க,

"இல்லங்க, அப்படி எல்லாம் இல்லை. நீங்க என் உயிர், உங்களுக்காக எது வேணும்னாலும் செய்வேன், ஆனா அதுக்காக, இது வேண்டாம்ங்க. தப்புங்க... ஒரு வேளை உங்களைத் தவிர வேறு யாராவது என் மேல் கை வச்சா நிச்சயம் நான் தீக்குளிக்கவும் தயங்க மாட்டேன்..." என்று கதறினாள்.

ஆனால் மூளை, இதயம், உணர்ச்சி அனைத்திலும் அவளை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே உணர்வு ஆட்கொண்டிருக்க, அவனால் அவளது நியாத்தையோ, கதறலையோ, கண்ணீரையோ பொருட்படுத்த முடியாமல் போனது..

செவிடன் காதில் ஊதிய சங்கு போல!!!!!

அவளின் தோள் மீது அழுந்த கை வைத்தவன் சடுதியில் அவளைச் சாய்த்து அவள் மீது முழுவதுமாகப் படர்ந்தான்.

சிங்கத்தின் வலுவிற்கும் திடத்திற்கும் முன் புள்ளிமானின் வேகம் ஒன்றும் இல்லாமல் போவது போல் கொஞ்சம் கொஞ்சமாக அவனிடம் தன்னைத் தோற்றுக் கொண்டு இருந்தவளின் நினைவில் வந்தது ஒரே முகம்... அவள் அன்னையின் முகம்.

அது வரை அழுது கரைந்தவள் தன் பலம் முழுவதும் திரட்டி அவனைத் தன் மீது இருந்து கீழே புரட்டி வேகமாக எழுந்தவள் சத்தமாக.

"நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கலைன்னாலும் பரவாயில்லை, இல்லை காதலிக்கவே இல்லன்னாலும் பரவாயில்லை.... ஆனால் நிச்சயம் இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்... நீங்க ஊருக்கு போங்க... நீங்க என்னை மறந்தாலும் நான் உங்களை மறக்கமாட்டேன்.... என் கழுத்தில் தாலின்னு ஒண்ணு ஏறின்னா அது நிச்சயம் உங்களுடையதாகத் தான் இருக்கும்.... இல்லைன்னா என்னை எப்படிக் காப்பதிக்கணும்னு எனக்குத் தெரியும்..." என்று கதறியவள் பங்களாவை விட்டு வெளியே வந்தவள் அதன் வாசலிலேயே அமர்ந்து அழுது தீர்த்தாள்.

மின்னல் வேகத்தில் அத்தனையும் நடந்துவிட, கொழுந்துவிட்டு எரிமலையாய் எரிந்து கொண்டு இருந்த ஆழ்மனதில் மேலும் எண்ணெய் ஊற்றியதைப் போல் மீண்டும் அவள் புறக்கணிப்பு இருக்க, சீற்றத்துடன் எழுந்தவன் தலையை அழுந்து கோதி கட்டிலில் அமர்ந்தான்..

சிறிது நேரத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு வெளியில் வந்தவன் வாசலில் அமர்ந்து தனது முழங்காலில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தவளின் அருகில் நின்று,

"என்னைய நம்பாதவளா இனி நான் நம்பறதா இல்லை. இனி நீ யாரோ, நான் யாரோ, இத்தோட நம்ம உறவு முறிஞ்சது, இனி நீ யாரா வேண்டுமானாலும் கல்யாணம் பண்ணிக்கோ..." என்றவன் அவளின் பதிலை எதிர்பாராமல் தன் காருக்கு சென்றவன் புயல் போல் காரை கிளப்பிச் சென்றான்.

அவன் கார் கிளம்பும் சத்தத்தில் தலை நிமிர்ந்தவளால் அவன் தன்னந்தனியாகத் தன்னை அங்கு அனாதையாக விட்டுச் சென்றுவிட்டான் என்பதை நம்ப முடியவில்லை.

இரண்டாக இதயம் பிளப்பது போல் வலிக்க அவள் வாய் தானாக முனகியது...

"எப்படிங்க, என்னை இப்படித் தனியே விட்டுவிட்டு போக மனசு வந்தது... உங்களை நம்பித்தானே உங்க கூட வந்தேன்... உங்களை நம்பாமல் இருந்திருந்தால் இத்தனை நாள் உங்களோட பழகியிருப்பேனா?"

அவன் சென்றுவிட்டதை நம்ப முடியாமல் அவளின் மனம் தன் உறுதியை இழந்து தளர ஆரம்பிக்க, வாய்விட்டுப் புலம்பியவளின் உடலும் அதற்கேற்ப தள்ளாட ஆரம்பித்தது.

சுற்றிலும் மயான அமைதி, நன்றாக இருட்டி வேறு இருந்தது...

தன் சக்தி எல்லாம் திரட்டி எழுந்தவள் பங்களாவிற்குள் சென்று தன் கைப் பையைத் தேடி அகிலின் அலைபேசிக்கு அழைத்தாள்.

தான் இருக்கும் இடத்தைச் சரியாகச் சொல்லத் தெரியாமல் ஒரு வழியாகத் தாங்கள் வந்த சாலைகளின் பெயர்களைத் தனக்குத் தெரிந்தவரை சொல்ல, அகிலால் கனிக்க முடிந்தது அந்தப் பங்களா இருந்த இடத்தை.

ஏதோ பெரிதாக நடந்திருக்கிறது என்று அவளின் குரலிலேயே கண்டு பிடித்தவன் அவளிடம் அதற்கு மேல் கேள்விகள் எதுவும் கேட்காமல் வேகமாக விரைந்தான் அவளை அழைத்து வர.

அவனிடம் பேசிவிட்டு திரும்பி படுக்கை அறையைப் பார்த்தவள், விருப்பப்பாடாமல் தான் என்றாலும் சிறிது நேரமாவது தன்னவன் தன் மேல் படர்ந்திருந்த நிலையை எண்ணி ஏக்கத்துடன்,

"என்னைப் பற்றி நல்ல தெரிஞ்சிருந்தும் என்னைப் புரிஞ்சுக்காம போய்ட்டீங்களே.." என்றவள் மன பாரத்துடன் வெளியே வந்து அகிலிற்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள்..

தன்னந்தனியாக யாரு மற்ற அந்தப் பங்களா வாசலில் நின்று கொண்டிருந்த கனிகாவைப் பார்த்ததும் அகிலிற்குப் பகீரென்று இருந்தது.

'நிச்சயம் இது ஹர்ஷாவின் வேலையாகத் தான் இருக்கும்.... ஆனால் அவன் எங்கே?' என்று மண்டை குடைய, அவள் அருகில் வந்து தன் பைக்கை நிறுத்தியவனுக்கு அவளின் கலைந்த உடலும், கலங்கிய முகமும் சொல்லாமல் சொல்லியது அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை.

"கனிகா, என்னாச்சு? இங்க எப்படி? யார் கூட வந்த?" என்று அலற, ஒன்றும் பேசாமல் அவன் அருகில் வந்தவள்,

"எனக்கு இங்கு இருக்கவே பயமா இருக்கு அத்தான்... போகலாமா?" என்றாள்.

சரி என்றவன் பைக்கை கிளப்பிச் சிறிது தூரம் சென்றதும் ஒரு ஓரமாக நிறுத்தி நடந்ததைப் பற்றி விசாரிக்க, என்ன தான் அகில் ஒரு தோழன் போல் பழகினாலும் ஹர்ஷாவிற்கும் தனக்கும் இடையில் நடந்ததைப் பூர்ணமாகச் சொல்ல அவளுக்கு மனமில்லை.

"அத்தான், எனக்கும் அவருக்கும் கொஞ்சம் பிரச்சனையாயிடுச்சு.... என்ன ஏதுன்னு மட்டும் கேட்காதீங்க... ப்ளீஸ்.."

"என்ன கனிகா பேசுற? நீ பேசுறது உனக்கே முட்டாள் தனமா தெரியலை.... எப்படி இருக்கப் பாரு....ஏதோ நடந்திருக்கு... ஆனா மறைக்குற... அந்த ஹர்ஷா உன் கிட்ட தப்பா நடந்துக்கிட்டானா?" என்று பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க,

"இல்லை அத்தான், நீங்க நினைக்கிற மாதிரி தப்பா எதுவும் நடக்கலை.." என்றாள் தலை குனிந்தவாறே..

பெரு மூச்சு விட்டவன்,

"நான் சொன்னேன் இல்லை... அவனை நம்பாதன்னு.... நீ கேட்கலை.. நாளைக்கு ஊருக்கு வேற போறான்..." என்றவன், "சரி, ஏறு, கிளம்பலாம்" என்றான்.

ஏதோ நடந்திருக்கு, ஆனால் சொல்ல தயங்குகிறாள்... ஆண்டவா அந்தப் பாவி இவளை எதுவும் செஞ்சிருக்கக் கூடாது... என்று மனதிற்குள் கடவுளை வேண்டிக்கொண்டவன் வீட்டிற்குச் சென்று மற்றதை பேசிக்கொள்வோம் என்று விட்டுவிட்டான்...


***************************************


வீட்டிற்கு வந்த ஹர்ஷாவிற்கு இன்னமும் நம்ப முடியவில்லை... கனிகா பேசிய கடைசிப் பேச்சுக்கள்... "நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கலைன்னாலும் பரவாயில்லை, இல்லை காதலிக்கவே இல்லன்னாலும் பரவாயில்லை..." என்ற வார்த்தைகளே திரும்பத் திரும்ப அவன் காதுகளில் ஒலித்தது.

ஆனால் அவள், "என் கழுத்தில் தாலின்னு ஒண்ணு ஏறின்னா அது நிச்சயம் உங்களுடையதாகத் தான் இருக்கும்..." என்று சொன்னது ஞாபகத்தில் இல்லை.

மனித மூளையின் சிறப்பம்சமே அது தானே...

சூழ்நிலைக்கு ஏற்ப தனக்கு வேண்டியதை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டு வேண்டாததை ஒதுக்கி தள்ளி விடுவது...

"நான் இல்லாமல் நீ இருந்து விடுவியாடி... என் மேல உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் ஏன் இத்தனை நாள் என் கூடப் பழகின? காதலில் நம்பிக்கை தானடி முக்கியம்.... அதுவே இல்லைங்கிற போது எதுக்குக் கல்யாணம்..." என்று தனக்குத் தானே பேசியவன் இன்னமும் ஆத்திரம் அடங்காமல் தன் அறையில் இருந்த மேஜையைத் தன் இரு கரங்களால் தள்ளி விட்டான்..

நல்ல வேளை சங்கீதாவும் சிதம்பரமும் வீட்டில் இல்லை... தங்களின் மகனின் பிரயாணத்திற்கு வேண்டிய பொருட்களை வாங்குவதற்காக வெளியில் சென்றிருந்தனர்.

தலையைப் பிடித்துக் கொண்டு அப்படியே கட்டிலில் அமர்ந்தவன் எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தானோ தெரியவில்லை.

அலைபேசியில் குறுந்தகவல் வந்ததை அறிவித்த ஒலி அவனைச் சுய நினைவிற்குக் கொண்டு வர, இன்னும் சிறிது நேரத்தில் தன் அன்னையும் தந்தையும் வந்துவிடுவார்கள் என்று யோசித்தவன் தன் அறையைச் சுத்தம் செய்தான்.

********************************

வீட்டிற்கு வந்தடைந்த கனிகா அகிலிடம் எதுவும் பேசாமல் விருவிருவென்று மாடிக்கு சென்றவள் தன் அறைக்குச் சென்று கதவை சாத்த, அவளைத் தொடர்ந்து வந்தவன் கதவை தள்ளி உள்ளே நுழைந்தான்.

"சரி...இப்போ சொல்லு....என்ன நடந்தது?"

"அதான் சொல்லிட்டேனே அத்தான்... எங்களுக்கு இடையில் ஒரு சின்னப் பிரச்சனை... வேற ஒண்ணும் இல்லை.."

"கனிகா...நான் ஒண்ணும் சின்னக் குழந்தை இல்லை....உன் தோற்றத்தை பார்க்கும் போதே தெரியுது ஏதோ தப்பா நடந்திருக்குன்னு.. .நல்ல வேளையா அம்மா அப்பா யாரும் கீழே இல்லை... இப்பொ சொல்லு...என்ன ஆச்சு?...."

அவன் கேட்கும் தொனியிலேயே தெரிந்தது அவன் நிச்சயம் ஹர்ஷாவை சும்மா விடமாட்டான் என்று.

மேற்கொண்டு பிரச்சனையை வளர்க்காமல் இருக்க நடந்ததை எந்த அளவிற்குச் சூசகமாகச் சொல்ல முடியுமோ அந்த அளவிற்குச் சொன்னாள்.

"நீங்க நினைக்கிற மாதிரி எங்களுக்குள்ள தப்பா எதுவும் நடக்கலை அத்தான்.... அவங்களுக்கு என்னமோ உங்களைப் பிடிக்கலை.... நேற்று உங்களையும் என்னையும் சேர்த்து பார்த்ததில் இருந்து அவங்க சரியில்லை.... ஊருக்கு போய்ட்டா அதற்கு அப்புறம் என்னை உங்களுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்களோன்னு முட்டாள்தனாமா பயப்படுறாங்க.... உங்களுக்கு அந்த மாதிரி எண்ணம் இல்லைன்னு எத்தனையோ தடவை சொல்லிட்டேன்... ஆனால் நம்ப மறுக்கிறாங்க.... அதனால வந்த வினை தான் இது... ஊருக்கு போறதுக்குள்ள அவங்க மனைவியா நான் ஆகிடணும்னு நினைக்கிறாங்க..." என்று சொல்லும் பொழுது அவள் குரல் கமற,

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்தவன், அவள் அருகில் வந்து,


"கனிகா... எனக்கு ஹர்ஷாவோட ஃபீலிங் புரியுது... பட் பிறந்ததில் இருந்தே ரொம்ப வசதியாக இருந்து இருக்காரு.... விரும்பினத வாங்கி, நினைச்சத அடைஞ்சு பழக்கப்பட்டவர் போல்.... அதனால உன்னையும் தன்னவளா ஆக்க முடிவு செய்திருக்காரு... இப்போ அவருக்குப் பயம் வந்திருச்சு... எங்க இந்த இரண்டு வருஷத்தில் ஏதாவது நடந்து உன்னையும் அவரையும் பிரிச்சிருவாங்களோன்னு... அதனால் தான் இப்படி யோசிக்காம முட்டாள் தனமா நடந்துக்கிட்டார்... சீக்கிரம் அவர் மனசு மாறி உன் கிட்ட பழைய மாதிரி பேசுவார்... நீ எதையும் மனசுல போட்டு குழப்பிக்காம தூங்கு.." என்றவன் அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு தன் மனக்குழப்பம் தெளியாமல் தன் அறைக்குத் திரும்பினான்.

படுக்கையில் விழுந்தவள் ஹர்ஷாவிற்கு அழைக்க அவன் அழைப்பை எடுத்தால் தானே?

"என்னை மன்னிச்சிடுங்க.." என்று குறுந்தகவல் அனுப்ப, படித்தவன் தன் அலைபேசியை அணைத்துப் படுக்கையில் தூக்கி எறிந்தான்.

மறு நாள் காலையில் தன் அலைபேசியை உயிர்ப்பிக்க அடுத்த விநாடி கனிகாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

எரிச்சலுடன் ஒரு சில விநாடிகள் அலைபேசியைப் பார்த்து இருந்தவன் மறுபடியும் கட்டிலில் தூக்கி எறிந்துவிட்டு தன் பெட்டிகளை அடுக்க ஆரம்பித்தான்.

விடாது அலைபேசி அழைக்கவும் அதனை ஸைலன்ட் மோடில் போட்டு விட்டு தன் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பிக்க, அவன் ஒரு முறையாவது தன் அழைப்பை ஏற்க மாட்டானா, ஒரு முறையாவது அவன் குரலை கேட்கமாட்டோமா என்று தவிப்புடன் விடாது அழைத்துக் கொண்டிருந்த கனிகாவிற்கு அவனின் புறக்கணிப்புச் சொல்லொணா துயரத்தை அளித்தது.

இதுவரை ஒரு ஐம்பது முறையாவது அழைத்திருப்பாள்... ஒரு நூறு முறையாவது மன்னிக்கவும் என்று குறுந்தகவல் அனுப்பி இருப்பாள்... ஆனால் பதில் சொல்லும் நிலையில் அவன் இல்லை என்பதை அவள் உணரவில்லை.

விமான நிலையத்தில் நுழையும் முன் தன் அன்னையை இறுக்கக் கட்டி அணைத்தவன் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் காட்டாது தந்தைக்கும் பை சொன்னவன் திரும்பி பார்க்காமல் வேகமாக நடந்தான்.

நேற்று இரவில் இருந்து அவனுடைய மாற்றத்தை கவனித்த சங்கீதாவும், சிதம்பரமும் அவன் தங்களைப் பிரிந்து செல்வதில் வருத்தமாக இருக்கிறான்... அதனால் தான் தங்களுடன் சரியாகப் பேசாமல் இருக்கிறான் என்று தவறாக நினைத்து கொண்டனர்.


ஆனால் காலையில் விழித்ததில் இருந்தும் அவன் முகம் சரியில்லை... யாரிடமும் முகம் கொடுத்து பேசவில்லை.... கேட்டதற்கு, "நத்திங் டாட்" என்று முடித்துவிட்டான்.

ஹர்ஷா எப்பொழுதுமே அப்படித் தான்.... அவனாக விரும்பினால் தான் எதுவும் செய்வான், பேசுவதும் அப்படித் தான்... அவனை வலிய பேச யாராலும் வைக்க முடியாது...பெற்றோரால் கூட.


விமானத்தில் ஏறி அமர்ந்தவனின் மனம் கனிகாவின் நினைவால் அனலாய் கொதிக்க, தன்னைத் திடப்படுத்த முயற்சி செய்தவன் அலைபேசியை எடுத்து பார்க்க ஏகப்பட்ட மிஸ்ட் கால்கள், குறுந்தகவல்கள் அவளிடம் இருந்து வந்திருந்தது.

அவளின் அழுத விழிகளும் கலங்கிய தோற்றமும் மீண்டும் மீண்டும் தன் கண் முன் தோன்றினாலும், உளியால் எத்தனை முறை அடித்தாலும் சிதறாத இரும்பு போல் இறுகி இருந்த அவன் மனது கரையவில்லை.

குறுந்தகவல் ஒன்றையும் படிக்காமல் எல்லாவற்றையும் அழித்தவன் கண்கள் மூடி மனதை ஒரு நிலைப் படுத்த முயற்சி செய்து தோற்றுக் கொண்டிருந்தான்.

இரவில் இருந்து அவனை விடாமல் அழைத்தும் அவன் அழைப்பை எடுக்காததால் தவித்துப் போனவள் மீண்டும் அழைக்க அதற்குள் அவனது விமானம் வானை நோக்கி பறந்திருந்தது.

அது வரை ஒவ்வொரு முறையும் அவனை அழைக்கும் போதும் அவன் எடுக்காவிட்டாலும் அழைப்பு மனி போய்க் கொண்டிருந்தது... ஆனால் விமானம் பறக்க துவங்கியதும், "நாட் ரீச்சபில்" என்று வர, பகீரென்று இருந்தது கனிகாவிற்கு... ஆக அவர் கிளம்பிவிட்டார்.

என்னிடம் ஒரு முறை கூடப் பேசாமல் கிளம்பிவிட்டார் என்ற உண்மை புரிய, தன்னுடைய பாதங்களுக்குக் கீழ் மட்டும் பூமி பிளந்து தன்னை அதல பாதாளத்திற்கு இழுத்து செல்வதைப் போல் உணர்ந்தாள்.

அகிலின் அறைக்குள் சென்றவள் அவனிடம் கதறி அழ,

"கனிகா... கொஞ்சம் டைம் கொடு ஹர்ஷாவிற்கு... ஹி வில் பி ஆல் ரைட் சூன் [He will be alright soon] " என்று முடித்துக் கொண்டான்.

ஏனெனில் அவனுக்கும் தெரியும் ஹர்ஷாவின் மனதை அவ்வளவு சீக்கிரத்தில் மாற்ற முடியாது என்று.


*************************************


அமெரிக்காவில் வந்து இறங்கி இதோடு ஒரு மாதம் ஆகிறது.

அவனைப் பார்க்காது கனிகாவிற்கு ஒவ்வொரு நொடியும் நரகமாகி போனது.

பரிதவித்தவள் அவனுடைய குரலை ஒரு தடவையாவது கேட்க மாட்டோமா என்று இருக்க, அகிலை தேடி அவன் அறைக்கு வந்தவள்,

"அத்தான், அவரோட ஃபோனுக்கு எத்தனையோ தடவையோ கூப்பிட்டுட்டேன்.... போகவே மாட்டேங்குது.... எனக்கு வெளிநாட்டிற்கு எப்படிக் கூப்பிடணும்னு தெரியலை... எனக்கு அவங்க கூடப் பேசணும்... எப்படியாவது எனக்கு உதவி பண்றீங்களா?" என்று பரிதாபமாகக் கேட்க,

அவளின் கலங்கிய முகத்தைப் பார்த்தவன், 'இந்த வயதில் இது உனக்குத் தேவையா?' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு,

"சரி, இன்னைக்கு ஈவ்னிங்குள்ள எப்படியும் அவர் நம்பர் வாங்க ட்ரை பண்றேன்.." என்றான்.

ஆனால் அகிலிற்கும் ஹர்ஷாவை பற்றி அவ்வளவாகத் தெரியவில்லை... அவன் நண்பர்கள் யாரையும் தெரிந்து வைத்து இருந்தாலாவது அவர்களிடம் விசாரிக்கலாம்... அவர்களையும் கல்லூரி விடுமுறை ஆதலால் கண்டுபிடிக்க முடியவில்லை.

கனிகாவிற்குத் தான் ஒவ்வொரு நாட்கள் நகருவதும் ஒவ்வொரு யுகமாகத் தெரிந்தது.


*********************************************


நாட்கள் அதன் போக்கில் நகர மாடியில் தன் அறையிலேயே அடைந்து கிடந்த கனிகாவின் போக்குப் பெருத்த சந்தேகத்தைத் தந்திருந்தது மாலதிக்கும் கணேசனுக்கும்.

கனிகாவிற்காகவாவது எப்படியாவது ஹர்ஷாவின் நம்பரை கண்டு பிடித்துவிட வேண்டும் என்று போராடி ஒரு வழியாக ஹர்ஷாவின் நண்பன் ராஜேஷை தேடி பிடித்துவிட்டான் அகில்.

அவன் மூலம் ஹர்ஷாவின் அலைபேசி எண்ணை கனிகாவிடம் சொன்னவன் தன் அலைபேசியில் இருந்தே ஹர்ஷாவை அழைக்க, ஒரு மனிதன் தன் விருப்பமானவர்களை எப்படி மனதில் நிறுத்தி வைத்திருப்பானோ அதே போல் தனக்குப் பிடிக்காதவர்களையும் ஞாபகத்தில் வைத்திருப்பான் என்ற உண்மைக்கு ஏற்ப அகிலின் அலைபேசியின் எண்ணை தன்னை அறியாமல் மனதில் பதித்து வைத்து இருந்த ஹர்ஷா தன்னை அழைப்பது அகில் தான் என்று அலைபேசியில் ஒளிர்ந்த எண் மூலம் தெரிந்து அழைப்பை நிராகரித்தான்.

அவன் அழைப்பை துண்டிக்கவும் புரிந்து போனது அகிலிற்கு.

அவன் வேண்டும் என்றே தான் தன் அழைப்பை துண்டிக்கிறான் என்று... கனிகாவின் அலைபேசியை வாங்கியவன் அதில் இருந்து அழைக்க, அதையும் நிராகரித்தான் ஹர்ஷா.... ஆக அவன் கோபம் ஒரு மாதம் ஆகியும் இன்னும் தணியவில்லை.

கனிகாவிற்கு என்ன ஆறுதல் கூறுவதென்றே தெரியவில்லை அகிலுக்கு... அழுது அழுது கரைந்தவளை இனியும் சென்னையில் வைத்து இருப்பது உசிதமாகப் படவில்லை..

இன்னும் சில வாரங்களில் கல்லூரி திறந்துவிடும்... ஏற்கனவே ஹர்ஷாவின் நினைப்பில் உள்ளுக்குள் புழுங்கி செத்துக் கொண்டிருப்பவள் கல்லூரிக்கு சென்றால், அங்கு இருக்கும் ஒவ்வொரு இடமும் அவளுக்கு ஹர்ஷாவின் நினைப்பை கொண்டு வந்து அவளைக் கொல்லாமல் கொல்லும்.

இதற்காகவா அவளைத் தன் தந்தை சென்னைக்கு அழைத்து வந்தார்?


நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவன் தன் தந்தையை அழைத்துக் கனிகாவை மறுபடியும் கிராமத்திற்கே கொண்டு போய் விட்டுவிடலாம் என்று கூற கணேசனுக்கு ஒன்றும் புரியவில்லை.

ஹர்ஷாவைப் பற்றித் தன் பெற்றோருக்குத் தெரிவிப்பதில் அகிலுக்கு விருப்பம் இல்லாததால் கனிகாவிற்குக் கல்லூரி ஒத்துக்கொள்ளவில்லை என்று சமாதானப்படுத்த முயற்சி செய்ய, அவர்களை அவ்வளவு எளிதில் அவனால் சமாளிக்க முடியவில்லை.

நம்ப முடியாமல் அவர்கள் மறுக்க, ஆனால் கனிகாவின் போக்கு கடந்த சில மாதங்காளாகச் சரியாக இல்லாதது அவர்களுக்கு எதுவோ சரியில்லை என்பதனையும் உணர்த்த, அகிலின் சொல்படி அவனையே கனிகாவை கொண்டு போய்க் கிராமத்தில் விடச் சொன்னார்கள்.

கனிகாவை அழைத்து அவளைச் சமாதானப் படுத்தியவன் அவள் கிராமத்தில் ஏற்கனவே பயின்ற கல்லூரியில் படிப்பை தொடர்வதே சிறந்த வழி என்று அறிவுரை கூற, அவளுக்கும் இனி சென்னையில் இருப்பது நரகத்தில் இருப்பது போல் தோன்ற, "சரி" என்றாள்.

அகிலுடன் கிராமத்திற்கு வந்தவள் தன் வீட்டை அடைந்ததும் ஒன்றும் பேசாமல் கதவை திறந்தவளின் முகத்தில் அடித்தார் போன்று இருந்தது மாலையிட்டு இருந்த அவள் அன்னையின் புகைப்படம்.

எத்தனை தடவை எடுத்து சொல்லியும் நீயாக நெருப்பில் விழுந்துவிட்டாயே என்று தன்னைப் பார்த்து தன் அன்னை சொல்வது போல் இருந்தது.

வெறுப்புடன் புன்னகைத்தவள் வீட்டை சுத்தம் செய்து அகிலிற்கு உணவு தயாரிக்க அவளின் நிலைமையைப் பார்த்தவனின் மனம் பாரமாகி போய் இருந்தது.

வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பதே அறியாதவள்.

முதல் முறையாகக் கிராமத்தை விட்டு வெளியில் வந்து ஒரு நல்ல கல்லூரியில் சேர்ந்து ஹர்ஷாவை மட்டும் சந்திக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் எவ்வளவு சந்தோஷமாக இருந்திருப்பாள் என்று எண்ணியவன் சமையல் முடிந்தது உணவு அருந்திவிட்டு சுந்தரத்திடமும் சொல்லிவிட்டுச் சென்னை திரும்பினான்.

கிளம்பு முன் கனிகாவை தனியே சந்தித்து,

"கனிகா...உன் நிலைமை மத்தவங்களுக்குப் புரியாது.... ஆனால் எனக்கு நல்லா தெரியும்... அதனால் சொல்கிறேன்..... மனம் உடைந்து போய் விடாதே.... நிச்சயம் ஹர்ஷாவின் கோபம் கூடிய சீக்கிரம் தீரும்.... அவர் கண்டிப்பாக உனக்கு ஃபோன் பண்ணுவார்....அவர் தான் உன்னைக் கல்யாணம் செய்துப்பார்.... அதனால் மனசை குழப்பிக்காமல் இரு.... நான் இன்னும் கொஞ்ச நாள்ல திரும்பி வந்து உன் பழைய காலேஜில் சேர்த்துவிடுறேன்..." என்றவன் கிளம்பி போனான்.

ஆனால் அவன் சொன்னது போல் ஹர்ஷாவின் மனசு மாறியதாகவே தெரியவில்லை....


தொடரும்
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top